அத்தியாயம்: 18, பாடம்: 6, ஹதீஸ் எண்: 2716

‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ حَبِيبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏خَالِدُ بْنُ الْحَارِثِ الْهُجَيْمِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏قُرَّةُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سَيَّارٌ أَبُو الْحَكَمِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏الشَّعْبِيُّ ‏ ‏قَالَ : ‏

‏دَخَلْنَا عَلَى ‏ ‏فَاطِمَةَ بِنْتِ قَيْسٍ ‏ ‏فَأَتْحَفَتْنَا ‏ ‏بِرُطَبِ ابْنِ طَابٍ وَسَقَتْنَا ‏ ‏سَوِيقَ ‏ ‏سُلْتٍ ‏ ‏فَسَأَلْتُهَا عَنْ الْمُطَلَّقَةِ ثَلَاثًا أَيْنَ تَعْتَدُّ قَالَتْ ‏ ‏طَلَّقَنِي بَعْلِي ثَلَاثًا فَأَذِنَ لِي ‏ ‏النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَنْ أَعْتَدَّ فِي أَهْلِي

நாங்கள் ஃபாத்திமா பின்த்து கைஸ் (ரலி) அவர்களிடம் (அவர்களது இல்லத்திற்குச்) சென்றோம். எங்களுக்கு அவர்கள் (மதீனாவின்) ‘ருதப் இப்னு தாப்’ (வகை) பேரீச்சம் பழத்தை விருந்தாகக் கொடுத்தார்கள். தானிய மாவுக் கஞ்சியை எங்களுக்கு அருந்தக் கொடுத்தார்கள். அவர்களிடம் நான் “மூன்று தலாக்(கும்) சொல்லப்பட்டுவிட்ட பெண் எங்கு ‘இத்தா’ இருப்பாள்?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள் “என் கணவர் என்னை மூன்று தலாக்(கும்) சொல்லிவிட்டார். அப்போது நபி (ஸல்), என் குடும்பத்தாரிடமே நான் ‘இத்தா’ இருக்க எனக்கு அனுமதியளித்தார்கள்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : ஃபாத்திமா பின்த்து கைஸ் (ரலி) வழியாக ஷஅபீ (ரஹ்)

அத்தியாயம்: 18, பாடம்: 6, ஹதீஸ் எண்: 2715

‏حَدَّثَنِي ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏هُشَيْمٌ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏سَيَّارٌ ‏ ‏وَحُصَيْنٌ ‏ ‏وَمُغِيرَةُ ‏ ‏وَأَشْعَثُ ‏ ‏وَمُجَالِدٌ ‏ ‏وَإِسْمَعِيلُ بْنُ أَبِي خَالِدٍ ‏ ‏وَدَاوُدُ ‏ ‏كُلُّهُمْ ‏ ‏عَنْ ‏ ‏الشَّعْبِيِّ ‏ ‏قَالَ : ‏

‏دَخَلْتُ عَلَى ‏ ‏فَاطِمَةَ بِنْتِ قَيْسٍ ‏ ‏فَسَأَلْتُهَا عَنْ قَضَاءِ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏عَلَيْهَا فَقَالَتْ طَلَّقَهَا زَوْجُهَا ‏ ‏الْبَتَّةَ ‏ ‏فَقَالَتْ فَخَاصَمْتُهُ إِلَى رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فِي السُّكْنَى وَالنَّفَقَةِ قَالَتْ ‏ ‏فَلَمْ يَجْعَلْ لِي سُكْنَى وَلَا نَفَقَةً وَأَمَرَنِي أَنْ أَعْتَدَّ فِي بَيْتِ ‏ ‏ابْنِ أُمِّ مَكْتُومٍ ‏


و حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏هُشَيْمٌ ‏ ‏عَنْ ‏ ‏حُصَيْنٍ ‏ ‏وَدَاوُدَ ‏ ‏وَمُغِيرَةَ ‏ ‏وَإِسْمَعِيلَ ‏ ‏وَأَشْعَثَ ‏ ‏عَنْ ‏ ‏الشَّعْبِيِّ ‏ ‏أَنَّهُ قَالَ ‏ ‏دَخَلْتُ عَلَى ‏ ‏فَاطِمَةَ بِنْتِ قَيْسٍ ‏ ‏بِمِثْلِ حَدِيثِ ‏ ‏زُهَيْرٍ ‏ ‏عَنْ ‏ ‏هُشَيْمٍ

நான் ஃபாத்திமா பின்த்து கைஸ் (ரலி) அவர்களிடம் சென்று, அவர்களுக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அளித்த தீர்ப்பைக் குறித்துக் கேட்டேன். அதற்கு ஃபாத்திமா பின்த்து கைஸ் (ரலி), “என்னை என் கணவர் ஒட்டுமொத்த தலாக் சொல்லிவிட்டார். (‘இத்தா’க் கால) ஜீவனாம்சம் மற்றும் உறைவிடம் விஷயத்தில் அவர்மீது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் நான் வழக்குத் தொடுத்தேன். ஆனால், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) எனக்கு உறைவிடமோ ஜீவனாம்சமோ கிடைக்கச் செய்யவில்லை. என்னை (என் தந்தையின் சகோதரர் மகன்) இப்னு உம்மி மக்தூம் (ரலி) அவர்களது இல்லத்தில் ‘இத்தா’ மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்கள்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : ஃபாத்திமா பின்த்து கைஸ் (ரலி) வழியாக ஷஅபீ (ரஹ்)

அத்தியாயம்: 18, பாடம்: 6, ஹதீஸ் எண்: 2714

‏حَدَّثَنَا ‏ ‏إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏وَعَبْدُ بْنُ حُمَيْدٍ ‏ ‏وَاللَّفْظُ ‏ ‏لِعَبْدٍ ‏ ‏قَالَا أَخْبَرَنَا ‏ ‏عَبْدُ الرَّزَّاقِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏مَعْمَرٌ ‏ ‏عَنْ ‏ ‏الزُّهْرِيِّ ‏ ‏عَنْ ‏ ‏عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ : ‏

‏أَنَّ ‏ ‏أَبَا عَمْرِو بْنَ حَفْصِ بْنِ الْمُغِيرَةِ ‏ ‏خَرَجَ مَعَ ‏ ‏عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ ‏ ‏إِلَى ‏ ‏الْيَمَنِ ‏ ‏فَأَرْسَلَ إِلَى امْرَأَتِهِ ‏ ‏فَاطِمَةَ بِنْتِ قَيْسٍ ‏ ‏بِتَطْلِيقَةٍ كَانَتْ بَقِيَتْ مِنْ طَلَاقِهَا وَأَمَرَ لَهَا ‏ ‏الْحَارِثَ بْنَ هِشَامٍ ‏ ‏وَعَيَّاشَ بْنَ أَبِي رَبِيعَةَ ‏ ‏بِنَفَقَةٍ فَقَالَا لَهَا وَاللَّهِ مَا لَكِ نَفَقَةٌ إِلَّا أَنْ تَكُونِي حَامِلًا فَأَتَتْ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَذَكَرَتْ لَهُ قَوْلَهُمَا فَقَالَ ‏ ‏لَا نَفَقَةَ لَكِ فَاسْتَأْذَنَتْهُ فِي ‏ ‏الِانْتِقَالِ فَأَذِنَ لَهَا فَقَالَتْ أَيْنَ يَا رَسُولَ اللَّهِ فَقَالَ إِلَى ‏ ‏ابْنِ أُمِّ مَكْتُومٍ ‏ ‏وَكَانَ أَعْمَى تَضَعُ ثِيَابَهَا عِنْدَهُ وَلَا يَرَاهَا فَلَمَّا مَضَتْ عِدَّتُهَا أَنْكَحَهَا النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أُسَامَةَ بْنَ زَيْدٍ ‏


فَأَرْسَلَ إِلَيْهَا ‏ ‏مَرْوَانُ ‏ ‏قَبِيصَةَ بْنَ ذُؤَيْبٍ ‏ ‏يَسْأَلُهَا عَنْ الْحَدِيثِ فَحَدَّثَتْهُ بِهِ فَقَالَ ‏ ‏مَرْوَانُ ‏ ‏لَمْ نَسْمَعْ هَذَا الْحَدِيثَ إِلَّا مِنْ امْرَأَةٍ سَنَأْخُذُ ‏ ‏بِالْعِصْمَةِ ‏ ‏الَّتِي وَجَدْنَا النَّاسَ عَلَيْهَا فَقَالَتْ ‏ ‏فَاطِمَةُ ‏ ‏حِينَ بَلَغَهَا قَوْلُ ‏ ‏مَرْوَانَ ‏ ‏فَبَيْنِي وَبَيْنَكُمْ الْقُرْآنُ قَالَ اللَّهُ عَزَّ وَجَلَّ ‏”‏لَا تُخْرِجُوهُنَّ مِنْ بُيُوتِهِنَّ “  ‏الْآيَةَ

قَالَتْ هَذَا لِمَنْ كَانَتْ لَهُ مُرَاجَعَةٌ فَأَيُّ أَمْرٍ يَحْدُثُ بَعْدَ الثَّلَاثِ فَكَيْفَ تَقُولُونَ لَا نَفَقَةَ لَهَا إِذَا لَمْ تَكُنْ حَامِلًا فَعَلَامَ تَحْبِسُونَهَا

அபூஅம்ரு பின் ஹஃப்ஸு பின் அல் முஃகீரா (ரலி), அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்களுடன் யமன் நாட்டிற்குச் சென்றிருந்தார்கள். அப்போது அபூஅம்ரு பின் ஹஃப்ஸு (ரலி) தம் மனைவியின் தலாக்கில் எஞ்சியிருந்த ஒரு தலாக்கையும் சொல்லியனுப்பினார். தம் மனைவிக்கு ஜீவனாம்சத்தைக் கொடுக்க ஹாரிஸ் பின் ஹிஷாம் (ரலி) அவர்களையும் அய்யாஷ் பின் அபீரபீஆ (ரலி) அவர்களையும் பணித்தார். அவர்கள் இருவரும் அபூஅம்ருடைய மனைவியிடம், “அல்லாஹ்வின் மீதாணையாக! நீ கர்ப்பமுற்றவளாக இருந்தால்தான் உனக்கு ஜீவனாம்சம் கிடைக்கும்” என்று கூறிவிட்டனர்.

உடனே அப்பெண் நபி (ஸல்) அவர்களிடம் சென்று, அவர்கள் இருவரும் கூறியதைத் தெரிவித்தார். அப்போது நபி (ஸல்) “உனக்கு ஜீவனாம்சம் கிடையாது” என்று கூறினார்கள். அப்போது அவர் (தம் கணவரின் இல்லத்திலிருந்து) இடம் மாறிக்கொள்ள அனுமதி கோரினார். நபி (ஸல்) அனுமதியளித்தார்கள். அப்போது அவர், “அல்லாஹ்வின் தூதரே! நான் எங்கே (தங்குவேன்)?” என்று கேட்டார். அதற்கு, “இப்னு உம்மி மக்தூமின் வீட்டிற்குச் செல்” என்றார்கள். அவர் கண் பார்வையற்றவராக இருந்தார். (எனவே) அப்பெண் அவர் அருகில் உடைமாற்றினாலும் அவரால் பார்க்க முடியாத நிலையில் இருந்தார். (இப்னு உம்மி மக்தூமின் வீட்டில்) அப்பெண்ணின் ‘இத்தா’க் காலம் முடிந்ததும் அவரை உஸாமா பின் ஸைத் (ரலி) அவர்களுக்கு நபி (ஸல்) திருமணம் செய்துவைத்தார்கள்.

அறிவிப்பாளர் : ஃபாத்திமா பின்த்து கைஸ் (ரலி) வழியாக உபைதுல்லாஹ் பின் அப்தில்லாஹ் பின் உத்பா (ரஹ்)


குறிப்பு  :

பிற்காலத்தில் (மதீனாவின் ஆட்சியராயிருந்த) மர்வான் அப்பெண்ணிடம் கபீஸா பின் துவைப் (ரஹ்) அவர்களை அனுப்பி அந்த ஹதீஸைக் குறித்துக் கேட்டார். அவர் மர்வானுக்கு அந்த ஹதீஸைத் தெரிவித்தார். அதற்கு மர்வான், “ஒரேயொரு பெண்ணிடமிருந்துதான் நாம் இந்த ஹதீஸைக் கேள்விப்படுகின்றோம். மக்கள் எந்த நடைமுறையை வலுவாகக் கடைப்பிடித்துவருவதை நாம் காண்கிறோமோ அதையே நாம் (தொடர்ந்து) செயல்படுத்துவோம்” என்று கூறினார். “எனக்கும் உங்களுக்குமிடையே குர்ஆன் உள்ளது. (அதில்) அல்லாஹ், “அவர்களை அவர்களின் வீடுகளிலிருந்து வெளியேற்றாதீர்கள் (65:1) என்று கூறியுள்ளான்” என மர்வான் கூறிய தகவல், ஃபாத்திமா பின்த்து கைஸ் (ரலி) அவர்களுக்கு எட்டியபோது, “இது திரும்ப அழைத்துக்கொள்ளும் உரிமையுடைய கணவர்களுக்கு உரியதாகும். மூன்று தலாக்கிற்குப் பிறகு (திரும்ப அழைத்தல் போன்ற) என்ன மாற்றம் ஏற்பட்டுவிடப்போகிறது? அவள் கர்ப்பமுற்றவளாக இல்லாவிடில் அவளுக்கு ஜீவனாம்சம் கிடையாது என நீங்கள் எப்படிக் கூறுகின்றீர்கள்? பிறகு (ஜீவனாம்சம் பெறாத) அந்தப் பெண்ணை எந்த அடிப்படையில் தடுத்து வைத்துக்கொள்வீர்கள்?” என்று கேட்டார்.

அத்தியாயம்: 18, பாடம்: 6, ஹதீஸ் எண்: 2713

‏حَدَّثَنَا ‏ ‏حَسَنُ بْنُ عَلِيٍّ الْحُلْوَانِيُّ ‏ ‏وَعَبْدُ بْنُ حُمَيْدٍ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏يَعْقُوبَ بْنِ إِبْرَاهِيمَ بْنِ سَعْدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏عَنْ ‏ ‏صَالِحٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏أَنَّ ‏ ‏أَبَا سَلَمَةَ بْنَ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ ‏ ‏أَخْبَرَهُ أَنَّ ‏ ‏فَاطِمَةَ بِنْتَ قَيْسٍ ‏ ‏أَخْبَرَتْهُ : ‏

‏أَنَّهَا كَانَتْ تَحْتَ ‏ ‏أَبِي عَمْرِو بْنِ حَفْصِ بْنِ الْمُغِيرَةِ ‏ ‏فَطَلَّقَهَا آخِرَ ثَلَاثِ تَطْلِيقَاتٍ فَزَعَمَتْ أَنَّهَا جَاءَتْ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏تَسْتَفْتِيهِ فِي خُرُوجِهَا مِنْ بَيْتِهَا ‏ ‏فَأَمَرَهَا أَنْ تَنْتَقِلَ إِلَى ‏ ‏ابْنِ أُمِّ مَكْتُومٍ ‏ ‏الْأَعْمَى فَأَبَى ‏ ‏مَرْوَانُ ‏ ‏أَنْ يُصَدِّقَهُ فِي خُرُوجِ الْمُطَلَّقَةِ مِنْ بَيْتِهَا ‏


و قَالَ ‏ ‏عُرْوَةُ ‏ ‏إِنَّ ‏ ‏عَائِشَةَ ‏ ‏أَنْكَرَتْ ذَلِكَ عَلَى ‏ ‏فَاطِمَةَ بِنْتِ قَيْسٍ ‏ ‏و حَدَّثَنِيهِ ‏ ‏مُحَمَّدُ بْنُ رَافِعٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حُجَيْنٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏اللَّيْثُ ‏ ‏عَنْ ‏ ‏عُقَيْلٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏مِثْلَهُ ‏ ‏مَعَ قَوْلِ ‏ ‏عُرْوَةَ ‏ ‏إِنَّ ‏ ‏عَائِشَةَ ‏ ‏أَنْكَرَتْ ذَلِكَ عَلَى ‏ ‏فَاطِمَةَ

நான் அபூஅம்ரு பின் ஹஃப்ஸு பின் அல் முஃகீரா (ரலி) அவர்களிடம் (மனைவியாக) இருந்தேன். அவர் என்னை (இரு தலாக் சொல்லி திரும்ப அழைத்துக்கொண்டு) இறுதி(யாக எஞ்சியிருந்த) மூன்றாவது தலாக்கும் சொல்லிவிட்டார்.

அப்போது நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, என் (கணவரின்) இல்லத்திலிருந்து வெளியேறி (வேறு இடத்தில் ‘இத்தா’ இருந்து)கொள்வது தொடர்பாகத் தீர்ப்புக் கேட்டேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்), கண் தெரியாதவரான இப்னு உம்மி மக்தூம் (ரலி) அவர்களது இல்லத்திற்கு மாறிக்கொள்ள உத்தரவிட்டார்கள்.

அறிவிப்பாளர் : ஃபாத்திமா பின்த்து கைஸ் (ரலி)


குறிப்புகள் :

“(மூன்று) தலாக் சொல்லப்பட்டுவிட்ட ஒரு பெண், தனது இல்லத்திலிருந்து வெளியேறுவது தொடர்பான இந்த ஹதீஸை மர்வான் பின் அல்ஹகம் நம்ப மறுத்தார்” என்று இந்த ஹதீஸை அறிவிப்பவரான அபூஸலமா பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) கூறுகின்றார்.

“ஃபாத்திமா பின்த்து கைஸ் அவ்வாறு (வெளியேறலாம் என்று) கூறிவந்ததை, ஆயிஷா (ரலி) நிராகரித்தார்கள்” என்று உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) கூறினார்.

ஃபாத்திமா பின்த்து கைஸ் அவ்வாறு (வெளியேறலாம் என்று) கூறிவந்ததை, ஆயிஷா (ரலி), நிராகரித்தார்கள் என்கிற உர்வா (ரஹ்) அவர்களின் குறிப்பு, உகைல் (ரஹ்) வழி அறிவிப்பிலும் இடம்பெற்றுள்ளது

அத்தியாயம்: 18, பாடம்: 6, ஹதீஸ் எண்: 2712

‏و حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ رَافِعٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حُسَيْنُ بْنُ مُحَمَّدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شَيْبَانُ ‏ ‏عَنْ ‏ ‏يَحْيَى وَهُوَ ابْنُ أَبِي كَثِيرٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏أَبُو سَلَمَةَ ‏ ‏أَنَّ ‏ ‏فَاطِمَةَ بِنْتَ قَيْسٍ ‏ ‏أُخْتَ ‏ ‏الضَّحَّاكِ بْنِ قَيْسٍ ‏ ‏أَخْبَرَتْهُ : ‏

‏أَنَّ ‏ ‏أَبَا حَفْصِ بْنَ الْمُغِيرَةِ الْمَخْزُومِيَّ ‏ ‏طَلَّقَهَا ثَلَاثًا ثُمَّ انْطَلَقَ إِلَى ‏ ‏الْيَمَنِ ‏ ‏فَقَالَ لَهَا أَهْلُهُ لَيْسَ لَكِ عَلَيْنَا نَفَقَةٌ فَانْطَلَقَ ‏ ‏خَالِدُ بْنُ الْوَلِيدِ ‏ ‏فِي نَفَرٍ فَأَتَوْا رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فِي بَيْتِ ‏ ‏مَيْمُونَةَ ‏ ‏فَقَالُوا إِنَّ ‏ ‏أَبَا حَفْصٍ ‏ ‏طَلَّقَ امْرَأَتَهُ ثَلَاثًا فَهَلْ لَهَا مِنْ نَفَقَةٍ فَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لَيْسَتْ لَهَا نَفَقَةٌ وَعَلَيْهَا الْعِدَّةُ وَأَرْسَلَ إِلَيْهَا أَنْ لَا تَسْبِقِينِي بِنَفْسِكِ وَأَمَرَهَا أَنْ تَنْتَقِلَ إِلَى ‏ ‏أُمِّ شَرِيكٍ ‏ ‏ثُمَّ أَرْسَلَ إِلَيْهَا أَنَّ ‏ ‏أُمَّ شَرِيكٍ ‏ ‏يَأْتِيهَا ‏ ‏الْمُهَاجِرُونَ ‏ ‏الْأَوَّلُونَ فَانْطَلِقِي إِلَى ‏ ‏ابْنِ أُمِّ مَكْتُومٍ ‏ ‏الْأَعْمَى فَإِنَّكِ إِذَا وَضَعْتِ ‏ ‏خِمَارَكِ ‏ ‏لَمْ يَرَكِ فَانْطَلَقَتْ إِلَيْهِ فَلَمَّا مَضَتْ عِدَّتُهَا أَنْكَحَهَا رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أُسَامَةَ بْنَ زَيْدِ بْنِ حَارِثَةَ ‏


حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ أَيُّوبَ ‏ ‏وَقُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏وَابْنُ حُجْرٍ ‏ ‏قَالُوا حَدَّثَنَا ‏ ‏إِسْمَعِيلُ يَعْنُونَ ابْنَ جَعْفَرٍ ‏ ‏عَنْ ‏ ‏مُحَمَّدِ بْنِ عَمْرٍو ‏ ‏عَنْ ‏ ‏أَبِي سَلَمَةَ ‏ ‏عَنْ ‏ ‏فَاطِمَةَ بِنْتِ قَيْسٍ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَاه ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ بِشْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ عَمْرٍو ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو سَلَمَةَ ‏ ‏عَنْ ‏ ‏فَاطِمَةَ بِنْتِ قَيْسٍ ‏ ‏قَالَ ‏ ‏كَتَبْتُ ذَلِكَ مِنْ فِيهَا كِتَابًا قَالَتْ كُنْتُ عِنْدَ رَجُلٍ مِنْ ‏ ‏بَنِي مَخْزُومٍ ‏ ‏فَطَلَّقَنِي ‏ ‏الْبَتَّةَ ‏ ‏فَأَرْسَلْتُ إِلَى أَهْلِهِ ‏ ‏أَبْتَغِي النَّفَقَةَ ‏ ‏وَاقْتَصُّوا الْحَدِيثَ بِمَعْنَى حَدِيثِ ‏ ‏يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي سَلَمَةَ ‏ ‏غَيْرَ أَنَّ فِي حَدِيثِ ‏ ‏مُحَمَّدِ بْنِ عَمْرٍو ‏ ‏لَا تَفُوتِينَا بِنَفْسِكِ

அபூஅம்ரு பின் ஹஃப்ஸு பின் அல்முஃகீரா அல்மக்ஸூமீ என்னை (இறுதியான) மூன்று தலாக் சொல்லிவிட்டு யமன் நாட்டுக்குச் சென்றுவிட்டார். அப்போது என் கணவரின் குடும்பத்தார் என்னிடம், “உனக்கு ஜீவனாம்சம் எதையும் நாங்கள் தர வேண்டியதில்லை” என்று கூறினர். அப்போது (என் கணவருடைய தந்தையின் சகோதரர் மகன்) காலித் பின் அல்வலீத் (ரலி), சிலருடன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றபோது அவர்கள் மைமூனா (ரலி) அவர்களது இல்லத்தில் இருந்தார்கள். “அபூஹஃப்ஸு, தம் மனைவியை (இறுதியான) மூன்று தலாக் சொல்லிவிட்டார். (‘இத்தா’விலிருக்கும்) அப்பெண்ணுக்கு ஜீவனாம்சம் உண்டா?” என்று (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம்) கேட்டனர்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “அவருக்கு ஜீவனாம்சம் கிடையாது; ஆனால் ‘இத்தா’ உண்டு” என்றார்கள். மேலும், எனக்கு ஆளனுப்பி, “உன் விஷயத்தில் என் உத்தரவுக்கு முன் நீயாக முந்தி(க்கொண்டு முடிவெடுத்து)விடாதே” என்று கூறியனுப்பினார்கள். மேலும், என்னை (என் கணவரின் இல்லத்திலிருந்து) இடம் மாறி உம்மு ஷரீக் (ரலி) அவர்களது வீட்டிற்குச் செல்லுமாறு உத்தரவிட்டார்கள். பிறகு,  “உம்மு ஷரீக்கின் வீட்டிற்கு ஆரம்பக் காலத்து முஹாஜிர்கள் (விருந்தாளிகளாக) வருவார்கள். எனவே, நீ (உன் தந்தையின் சகோதரர் மகனான) கண் பார்வையற்ற இப்னு உம்மி மக்தூம் வீட்டிற்குச் செல்! ஏனெனில், நீ உடை மாற்றினாலும் அவர் உன்னைப் பார்க்க முடியாது” என்று கூறியனுப்பினார்கள். ஆகவே, நான் இப்னு உம்மி மக்தூமிடம் சென்றேன். எனது ‘இத்தா’க் காலம் முடிந்ததும் என்னை அல்லாஹ்வின் தூதர் (ஸல்), உஸாமா பின் ஸைத் பின் ஹாரிஸா (ரலி) அவர்களுக்குத் திருமணம் செய்துவைத்தார்கள்.

அறிவிப்பாளர் : ஃபாத்திமா பின்த்து கைஸ் (ரலி) வழியாக அள்ளஹ்ஹாக் பின் கைஸ் (ரலி)


குறிப்புகள்  :

அபூபக்ரு பின் அபீஷைபா (ரஹ்) வழி அறிவிப்பு, “அபூஸலமா பின் அப்திர் ரஹ்மான் பின் அவ்ஃபு (ரஹ்) அவர்கள் ‘இந்த ஹதீஸை நான் ஃபாத்திமா பின்த்து கைஸ் (ரலி) அவர்களது வாயிலிருந்து (நேரடியாக) செவியுற்று எழுதி வைத்துக்கொண்டேன்’ என்று கூறினார்கள் …” என ஆரம்பமாகிறது. மேலும் “ … நான் பனூ மக்ஸூம் குலத்தைச் சேர்ந்த ஒருவரிடம் (மனைவியாக) இருந்தேன். அவர் என்னை ஒட்டுமொத்த (இறுதியான) தலாக் சொல்லி விட்டார். அப்போது நான் என் கணவரின் குடும்பத்தாரிடம் ஆளனுப்பி எனது ஜீவனாம்சத்தைக் கோரினேன் …” என்று ஹதீஸ் தொடருகிறது. மற்ற தகவல்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.

முஹம்மது பின் அம்ரு (ரஹ்) வழி அறிவிப்பில், “உனது (மறுமண) விஷயத்தில் நம்மைவிடுத்து (நீயாக முடிவெடுத்து)விடாதே என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்” என இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 18, பாடம்: 6, ஹதீஸ் எண்: 2711

‏حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏لَيْثٌ ‏ ‏عَنْ ‏ ‏عِمْرَانَ بْنِ أَبِي أَنَسٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي سَلَمَةَ ‏ ‏أَنَّهُ قَالَ سَأَلْتُ ‏ ‏فَاطِمَةَ بِنْتَ قَيْسٍ ‏ ‏فَأَخْبَرَتْنِي : ‏

‏أَنَّ زَوْجَهَا الْمَخْزُومِيَّ طَلَّقَهَا فَأَبَى أَنْ يُنْفِقَ عَلَيْهَا فَجَاءَتْ إِلَى رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَأَخْبَرَتْهُ فَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لَا نَفَقَةَ لَكِ فَانْتَقِلِي فَاذْهَبِي إِلَى ‏ ‏ابْنِ أُمِّ مَكْتُومٍ ‏ ‏فَكُونِي عِنْدَهُ فَإِنَّهُ رَجُلٌ أَعْمَى تَضَعِينَ ثِيَابَكِ عِنْدَهُ

நான் ஃபாத்திமா பின்த்து கைஸ் (ரலி) அவர்களிடம் (அவர் ‘இத்தா’ இருந்தபோது என்ன நடந்தது என்று) கேட்டேன். அதற்கு அவர், “மக்ஸூமி குலத்தைச் சேர்ந்தவரான என் கணவர் என்னைத் தலாக் சொல்லிவிட்டார். எனக்கு (‘இத்தா’க் கால) ஜீவனாம்சம் வழங்க மறுத்தார். எனவே, நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து (அதைப் பற்றி) முறையிட்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “உனக்கு ஜீவனாம்சம் கிடையாது; நீ இடம் மாறி, (உன் தந்தையின் சகோதரர் மகன்) இப்னு உம்மி மக்தூம் அவர்களிடம் சென்று, அவரது இல்லத்தில் (இத்தா முடியும்வரை) இரு! ஏனெனில், அவர் கண் பார்வையற்றவர் ஆவார். அவர் அங்கு இருந்தாலும் நீ உனது உடையை மாற்றிக்கொள்ளலாம்” என்றார்கள்.

அறிவிப்பாளர் : ஃபாத்திமா பின்த்து கைஸ் (ரலி) வழியாக அபூஸலமா பின் அப்திர் ரஹ்மான் பின் அவ்ஃபு (ரஹ்)

அத்தியாயம்: 18, பாடம்: 6, ஹதீஸ் எண்: 2710

‏حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الْعَزِيزِ يَعْنِي ابْنَ أَبِي حَازِمٍ ‏ ‏وَقَالَ ‏ ‏قُتَيْبَةُ ‏ ‏أَيْضًا ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَعْقُوبُ يَعْنِي ابْنَ عَبْدِ الرَّحْمَنِ الْقَارِيَّ ‏ ‏كِلَيْهِمَا ‏ ‏عَنْ ‏ ‏أَبِي حَازِمٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي سَلَمَةَ ‏ ‏عَنْ ‏ ‏فَاطِمَةَ بِنْتِ قَيْسٍ : ‏

‏أَنَّهُ طَلَّقَهَا ‏ ‏زَوْجُهَا ‏ ‏فِي عَهْدِ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَكَانَ أَنْفَقَ عَلَيْهَا نَفَقَةَ ‏ ‏دُونٍ ‏ ‏فَلَمَّا رَأَتْ ذَلِكَ قَالَتْ وَاللَّهِ لَأُعْلِمَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَإِنْ كَانَ لِي نَفَقَةٌ أَخَذْتُ الَّذِي يُصْلِحُنِي وَإِنْ لَمْ تَكُنْ لِي نَفَقَةٌ لَمْ آخُذْ مِنْهُ شَيْئًا قَالَتْ فَذَكَرْتُ ذَلِكَ لِرَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقَالَ ‏ ‏لَا نَفَقَةَ لَكِ وَلَا سُكْنَى

நபி (ஸல்) காலத்தில் என் கணவர் என்னை (இறுதியான) தலாக் சொல்லிவிட்டார். (‘இத்தா’க் காலத்தில்) அவர் எனக்குக் குறைந்த அளவே ஜீவனாம்சம் வழங்கினார். அதை நான் கண்டதும், “அல்லாஹ்வின் மீதாணையாக! (இதைப் பற்றி) நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தெரிவிப்பேன்; எனக்கு ஜீவனாம்சம் இருக்குமாயின், எனக்குத் தகுதியான(ஜீவனாம்சத்)தை நான் பெறுவேன். எனக்கு ஜீவனாம்சம் எதுவும் கிடையாதெனில் அவரிடமிருந்து நான் எதையும் பெற்றுக்கொள்ளமாட்டேன்” என்று கூறிவிட்டு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அது குறித்துத் தெரிவித்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “உனக்கு ஜீவனாம்சம் கிடையாது; உறைவிடமும் கிடையாது” என்றார்கள்.

அறிவிப்பாளர் : ஃபாத்திமா பின்த்து கைஸ் (ரலி)

அத்தியாயம்: 18, பாடம்: 6, ஹதீஸ் எண்: 2709

‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏قَالَ قَرَأْتُ عَلَى ‏ ‏مَالِكٍ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ يَزِيدَ ‏ ‏مَوْلَى ‏ ‏الْأَسْوَدِ بْنِ سُفْيَانَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ ‏ ‏عَنْ ‏ ‏فَاطِمَةَ بِنْتِ قَيْسٍ : ‏

‏أَنَّ ‏ ‏أَبَا عَمْرِو بْنَ حَفْصٍ ‏ ‏طَلَّقَهَا الْبَتَّةَ وَهُوَ غَائِبٌ ‏ ‏فَأَرْسَلَ ‏ ‏إِلَيْهَا وَكِيلُهُ بِشَعِيرٍ فَسَخِطَتْهُ فَقَالَ وَاللَّهِ مَا لَكِ عَلَيْنَا مِنْ شَيْءٍ فَجَاءَتْ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَذَكَرَتْ ذَلِكَ لَهُ فَقَالَ ‏ ‏لَيْسَ لَكِ عَلَيْهِ نَفَقَةٌ فَأَمَرَهَا أَنْ تَعْتَدَّ فِي بَيْتِ ‏ ‏أُمِّ شَرِيكٍ ‏ ‏ثُمَّ قَالَ تِلْكِ امْرَأَةٌ ‏ ‏يَغْشَاهَا ‏ ‏أَصْحَابِي اعْتَدِّي عِنْدَ ‏ ‏ابْنِ أُمِّ مَكْتُومٍ ‏ ‏فَإِنَّهُ رَجُلٌ أَعْمَى تَضَعِينَ ثِيَابَكِ فَإِذَا ‏ ‏حَلَلْتِ ‏ ‏فَآذِنِينِي ‏ ‏قَالَتْ فَلَمَّا ‏ ‏حَلَلْتُ ‏ ‏ذَكَرْتُ لَهُ أَنَّ ‏ ‏مُعَاوِيَةَ بْنَ أَبِي سُفْيَانَ ‏ ‏وَأَبَا جَهْمٍ ‏ ‏خَطَبَانِي فَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَمَّا ‏ ‏أَبُو جَهْمٍ ‏ ‏فَلَا يَضَعُ عَصَاهُ عَنْ عَاتِقِهِ وَأَمَّا ‏ ‏مُعَاوِيَةُ ‏ ‏فَصُعْلُوكٌ ‏ ‏لَا مَالَ لَهُ انْكِحِي ‏ ‏أُسَامَةَ بْنَ زَيْدٍ ‏ ‏فَكَرِهْتُهُ ثُمَّ قَالَ انْكِحِي ‏ ‏أُسَامَةَ ‏ ‏فَنَكَحْتُهُ فَجَعَلَ اللَّهُ فِيهِ خَيْرًا ‏ ‏وَاغْتَبَطْتُ

அபூஅம்ரு பின் ஹஃப்ஸு (ரலி) என்னை (மூன்றாவது) இறுதியான தலாக் சொல்லிவிட்டார். அப்போது அவர் வெளியூரில் இருந்தார். பின்னர் அவருடைய பிரதிநிதி, தொலி நீக்கப்படாத சிறிதளவு கோதுமையை எனக்கு அனுப்பிவைத்தார். அதைக் கண்டு நான் எரிச்சலடைந்தேன். அதற்கு அந்தப் பிரதிநிதி, “அல்லாஹ்வின் மீதாணையாக! நாங்கள் உனக்கு (ஜீவனாம்சம், தங்கும் வசதி) எதையும் தர வேண்டியதில்லை (இது உதவியாகத் தரப்பட்டதுதான்)” என்று கூறினார். எனவே, நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, நடந்ததைத் தெரிவித்தேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும், “அவர் உனக்கு (ஜீவனாம்சம், தங்கும் வசதி) எதையும் தர வேண்டியதில்லை” என்று கூறிவிட்டு, உம்மு ஷரீக் என்ற பெண்ணின் இல்லத்தில் என்னை ‘இத்தா’ இருக்குமாறு பணித்தார்கள். பிறகு (யோசித்துவிட்டு), “அவர் (உம்மு ஷரீக்) என் தோழர்கள் (அடிக்கடி) சந்திக்கும் பெண்மணி ஆவார். நீ (உன் தந்தையின் சகோதரர் மகன்) இப்னு உம்மி மக்தூம் அவர்களிடம் (அவர்களது இல்லத்தில்) ‘இத்தா’ இருந்துகொள். ஏனெனில், அவர் கண் பார்வையற்றவர் ஆவார். (அவர் வீட்டில் இருந்தாலும்) நீ துணி மாற்றிக்கொள்ளலாம். நீ ‘இத்தா’வை முழுமையாக்கியதும் எனக்குத் தெரிவிப்பாயாக!” என்று கூறினார்கள்.

அவ்வாறே நான் ‘இத்தா’வை முழுமையாக்கியதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (வந்து), “முஆவியா பின் அபீஸுஃப்யான் (ரலி) அவர்களும் அபூஜஹ்மு பின் ஹுதைஃபா (ரலி) அவர்களும் என்னைப் பெண் கேட்கின்றனர்” என்று சொன்னேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “அபூஜஹ்மு தமது கைத்தடியைத் தோளிலிருந்து கீழே வைக்கமாட்டார். (கோபக்காரர்; மனைவியரைக் கடுமையாக அடித்துவிடுபவர்). முஆவியாவோ, எந்தச் செல்வமும் இல்லாத ஏழை . நீ உஸாமா பின் ஸைதை மணந்துகொள்” என்று கூறினார்கள். நான் உஸாமாவை விரும்பவில்லை. பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) “நீ உஸாமாவை மணந்துகொள்” என்று (மீண்டும்) கூறினார்கள். ஆகவே, நான் அவரை மணந்துகொண்டேன். அவரிடம் (எனக்கு) அல்லாஹ் நன்மையை வைத்திருந்தான்; நான் மன நிறைவடைந்தேன்!

அறிவிப்பாளர் : ஃபாத்திமா பின்த்து கைஸ் (ரலி)

அத்தியாயம்: 18, பாடம்: 5, ஹதீஸ் எண்: 2708

‏قَالَ ‏ ‏الزُّهْرِيُّ ‏ ‏فَأَخْبَرَنِي ‏ ‏عُرْوَةُ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏قَالَتْ :

‏لَمَّا مَضَى تِسْعٌ وَعِشْرُونَ لَيْلَةً دَخَلَ عَلَيَّ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بَدَأَ بِي فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنَّكَ أَقْسَمْتَ أَنْ لَا تَدْخُلَ عَلَيْنَا شَهْرًا وَإِنَّكَ دَخَلْتَ مِنْ تِسْعٍ وَعِشْرِينَ أَعُدُّهُنَّ فَقَالَ ‏ ‏إِنَّ الشَّهْرَ تِسْعٌ وَعِشْرُونَ ثُمَّ قَالَ يَا ‏ ‏عَائِشَةُ ‏ ‏إِنِّي ذَاكِرٌ لَكِ أَمْرًا فَلَا عَلَيْكِ أَنْ لَا تَعْجَلِي فِيهِ حَتَّى ‏ ‏تَسْتَأْمِرِي ‏ ‏أَبَوَيْكِ ثُمَّ قَرَأَ عَلَيَّ الْآيَةَ  ” ‏يَا أَيُّهَا النَّبِيُّ قُلْ لِأَزْوَاجِكَ ‏ ‏حَتَّى بَلَغَ ‏ ‏أَجْرًا عَظِيمًا “‏

‏قَالَتْ ‏ ‏عَائِشَةُ ‏ ‏قَدْ عَلِمَ وَاللَّهِ أَنَّ أَبَوَيَّ لَمْ يَكُونَا لِيَأْمُرَانِي بِفِرَاقِهِ قَالَتْ فَقُلْتُ ‏ ‏أَوَ فِي هَذَا ‏ ‏أَسْتَأْمِرُ ‏ ‏أَبَوَيَّ فَإِنِّي أُرِيدُ اللَّهَ وَرَسُولَهُ وَالدَّارَ الْآخِرَةَ


قَالَ ‏ ‏مَعْمَرٌ ‏ ‏فَأَخْبَرَنِي ‏ ‏أَيُّوبُ ‏ ‏أَنَّ ‏ ‏عَائِشَةَ ‏ ‏قَالَتْ ‏ ‏لَا تُخْبِرْ نِسَاءَكَ أَنِّي اخْتَرْتُكَ فَقَالَ لَهَا النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِنَّ اللَّهَ أَرْسَلَنِي مُبَلِّغًا وَلَمْ يُرْسِلْنِي ‏ ‏مُتَعَنِّتًا ‏ ‏قَالَ ‏ ‏قَتَادَةُ ‏‏صَغَتْ قُلُوبُكُمَا  – مَالَتْ قُلُوبُكُمَا

இருபத்தொன்பது இரவுகள் கழிந்த பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ஆரம்பமாக என்னிடமே வந்தார்கள். அப்போது நான், “அல்லாஹ்வின் தூதரே! எங்களிடம் ஒரு மாத காலத்திற்கு வரப்போவதில்லை என்று நீங்கள் (ஈலா) சத்தியம் செய்திருந்தீர்களே! நீங்கள் இருபத்தொன்பதாவது நாளே வந்துவிட்டீர்களே! நாட்களை நான் எண்ணிக் கொண்டிருந்தேன்!” என்று கூறினேன். அதற்கு அவர்கள், “இந்த மாதம் இருபத்தொன்பது நாட்கள்தாம்” என்று பதில் கூறினார்கள்.

பிறகு என்னிடம், “ஆயிஷா! உன்னிடம் நான் ஒரு விஷயத்தைச் சொல்கிறேன். அதைப் பற்றி நீ உன் பெற்றோரிடம் ஆலோசனை கேட்காத வரை அவசரப்பட்டு (எந்த முடிவுக்கும் வந்து) விடாதே!” என்று கூறிவிட்டு, “நபியே! உங்கள் மனைவியரிடம் கூறுங்கள் …” என்று தொடங்கி “ … உங்களிலுள்ள நல்லவர்களுக்காக அல்லாஹ் மகத்தான நன்மையை தயார் செய்துள்ளான்” என்று முடியும் (33:28,29) வசனங்களை எனக்கு அவர்கள் ஓதிக் காட்டினார்கள்.

அல்லாஹ்வின் மீதாணையாக! என் பெற்றோர் நிச்சயமாக நபி (ஸல்) அவர்களிடமிருந்து பிரிந்து விடுமாறு எனக்கு ஆலோசனை கூறமாட்டார்கள் என்பதை நபி (ஸல்) அறிந்திருந்தார்கள். எனவே, நான் (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம்), “(உங்கள் உறவை முறித்துக்கொள்ளும்) இந்த விஷயத்திலா நான் என் பெற்றோரிடம் ஆலோசனை கேட்கப்போகிறேன்? நான் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் மறு உலகத்தையுமே விரும்புகிறேன்” என்று சொன்னேன். மேலும், நான் “உங்களையே தேர்ந்து கொண்டேன் என்ற தகவலை, உங்களுடைய மற்ற மனைவியரிடம் தெரிவித்துவிடாதீர்கள்” என்று கூறினேன்.

அறிவிப்பாளர்: அன்னை ஆயிஷா (ரலி)


குறிப்புகள் :

அய்யூப் (ரஹ்) வழி அறிவிப்பில், “அல்லாஹ் என்னை எடுத்துரைப்பவனாகவே அனுப்பியுள்ளான்; அவன் என்னைக் கடினப் போக்கு உள்ளவனாக அனுப்பவில்லை” என்று ஆயிஷா (ரலி) அவர்களிடம் நபி (ஸல்) கூறினார்கள் என்று இடம்பெற்றுள்ளது.

“(66:4ஆவது) வசனத்தின் மூலத்தில் உள்ள “ஃபகத் ஸஃகத் குலூபுகுமா” என்பதற்கு ‘உங்கள் இருவரின் உள்ளங்களும் நேரிய வழியிலிருந்து பிறழ்ந்துவிட்டிக்கின்றன’ என்று பொருளாகும்” என்று கத்தாதா (ரஹ்) கூறுகின்றார்.

அத்தியாயம்: 18, பாடம்: 5, ஹதீஸ் எண்: 2707

‏و حَدَّثَنَا ‏ ‏إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ الْحَنْظَلِيُّ ‏ ‏وَمُحَمَّدُ بْنُ أَبِي عُمَرَ ‏ ‏وَتَقَارَبَا فِي لَفْظِ الْحَدِيثِ ‏ ‏قَالَ ‏ ‏ابْنُ أَبِي عُمَرَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏و قَالَ ‏ ‏إِسْحَقُ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏عَبْدُ الرَّزَّاقِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏مَعْمَرٌ ‏ ‏عَنْ ‏ ‏الزُّهْرِيِّ ‏ ‏عَنْ ‏ ‏عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي ثَوْرٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عَبَّاسٍ ‏ ‏قَالَ : ‏

‏لَمْ أَزَلْ حَرِيصًا أَنْ أَسْأَلَ ‏ ‏عُمَرَ ‏ ‏عَنْ الْمَرْأَتَيْنِ مِنْ أَزْوَاجِ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏اللَّتَيْنِ قَالَ اللَّهُ تَعَالَى” ‏إِنْ تَتُوبَا إِلَى اللَّهِ فَقَدْ ‏ ‏صَغَتْ ‏ ‏قُلُوبُكُمَا “‏ ‏حَتَّى حَجَّ ‏ ‏عُمَرُ ‏ ‏وَحَجَجْتُ مَعَهُ فَلَمَّا كُنَّا بِبَعْضِ الطَّرِيقِ عَدَلَ ‏ ‏عُمَرُ ‏ ‏وَعَدَلْتُ ‏ ‏مَعَهُ ‏ ‏بِالْإِدَاوَةِ ‏ ‏فَتَبَرَّزَ ثُمَّ أَتَانِي فَسَكَبْتُ عَلَى يَدَيْهِ فَتَوَضَّأَ فَقُلْتُ يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ ‏ ‏مَنْ الْمَرْأَتَانِ مِنْ أَزْوَاجِ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏اللَّتَانِ قَالَ اللَّهُ عَزَّ وَجَلَّ لَهُمَا : ‏ ‏إِنْ تَتُوبَا إِلَى اللَّهِ فَقَدْ ‏ ‏صَغَتْ قُلُوبُكُمَا

‏قَالَ ‏ ‏عُمَرُ ‏ ‏وَاعَجَبًا لَكَ يَا ‏ ‏ابْنَ عَبَّاسٍ ‏ ‏قَالَ ‏ ‏الزُّهْرِيُّ ‏ ‏كَرِهَ وَاللَّهِ مَا سَأَلَهُ عَنْهُ وَلَمْ يَكْتُمْهُ قَالَ هِيَ ‏ ‏حَفْصَةُ ‏ ‏وَعَائِشَةُ ‏ ‏ثُمَّ أَخَذَ يَسُوقُ الْحَدِيثَ قَالَ كُنَّا مَعْشَرَ ‏ ‏قُرَيْشٍ ‏ ‏قَوْمًا نَغْلِبُ النِّسَاءَ فَلَمَّا قَدِمْنَا ‏ ‏الْمَدِينَةَ ‏ ‏وَجَدْنَا قَوْمًا تَغْلِبُهُمْ نِسَاؤُهُمْ ‏ ‏فَطَفِقَ ‏ ‏نِسَاؤُنَا يَتَعَلَّمْنَ مِنْ نِسَائِهِمْ قَالَ وَكَانَ مَنْزِلِي فِي ‏ ‏بَنِي أُمَيَّةَ بْنِ زَيْدٍ ‏ ‏بِالْعَوَالِي ‏ ‏فَتَغَضَّبْتُ يَوْمًا عَلَى امْرَأَتِي فَإِذَا هِيَ ‏ ‏تُرَاجِعُنِي ‏ ‏فَأَنْكَرْتُ أَنْ ‏ ‏تُرَاجِعَنِي ‏ ‏فَقَالَتْ مَا تُنْكِرُ أَنْ أُرَاجِعَكَ فَوَاللَّهِ إِنَّ أَزْوَاجَ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لَيُرَاجِعْنَهُ ‏ ‏وَتَهْجُرُهُ إِحْدَاهُنَّ الْيَوْمَ إِلَى اللَّيْلِ فَانْطَلَقْتُ فَدَخَلْتُ عَلَى ‏ ‏حَفْصَةَ ‏ ‏فَقُلْتُ أَتُرَاجِعِينَ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقَالَتْ نَعَمْ فَقُلْتُ أَتَهْجُرُهُ إِحْدَاكُنَّ الْيَوْمَ إِلَى اللَّيْلِ قَالَتْ نَعَمْ قُلْتُ قَدْ خَابَ مَنْ فَعَلَ ذَلِكَ مِنْكُنَّ وَخَسِرَ أَفَتَأْمَنُ إِحْدَاكُنَّ أَنْ يَغْضَبَ اللَّهُ عَلَيْهَا لِغَضَبِ رَسُولِهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَإِذَا هِيَ قَدْ هَلَكَتْ لَا تُرَاجِعِي رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَلَا تَسْأَلِيهِ شَيْئًا وَسَلِينِي مَا بَدَا لَكِ وَلَا يَغُرَّنَّكِ أَنْ كَانَتْ جَارَتُكِ هِيَ أَوْسَمَ وَأَحَبَّ إِلَى رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مِنْكِ يُرِيدُ ‏ ‏عَائِشَةَ ‏ ‏قَالَ وَكَانَ لِي ‏ ‏جَارٌ ‏ ‏مِنْ ‏ ‏الْأَنْصَارِ ‏ ‏فَكُنَّا نَتَنَاوَبُ النُّزُولَ إِلَى رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَيَنْزِلُ يَوْمًا وَأَنْزِلُ يَوْمًا فَيَأْتِينِي بِخَبَرِ الْوَحْيِ وَغَيْرِهِ وَآتِيهِ بِمِثْلِ ذَلِكَ وَكُنَّا نَتَحَدَّثُ أَنَّ ‏ ‏غَسَّانَ ‏ ‏تُنْعِلُ الْخَيْلَ لِتَغْزُوَنَا فَنَزَلَ صَاحِبِي ثُمَّ أَتَانِي عِشَاءً فَضَرَبَ بَابِي ثُمَّ نَادَانِي فَخَرَجْتُ إِلَيْهِ فَقَالَ حَدَثَ أَمْرٌ عَظِيمٌ قُلْتُ مَاذَا أَجَاءَتْ ‏ ‏غَسَّانُ ‏ ‏قَالَ لَا بَلْ أَعْظَمُ مِنْ ذَلِكَ وَأَطْوَلُ طَلَّقَ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏نِسَاءَهُ فَقُلْتُ قَدْ خَابَتْ ‏ ‏حَفْصَةُ ‏ ‏وَخَسِرَتْ قَدْ كُنْتُ أَظُنُّ هَذَا كَائِنًا حَتَّى إِذَا صَلَّيْتُ الصُّبْحَ شَدَدْتُ عَلَيَّ ثِيَابِي ثُمَّ نَزَلْتُ فَدَخَلْتُ عَلَى ‏ ‏حَفْصَةَ ‏ ‏وَهِيَ تَبْكِي فَقُلْتُ أَطَلَّقَكُنَّ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقَالَتْ لَا أَدْرِي هَا هُوَ ذَا مُعْتَزِلٌ فِي هَذِهِ ‏ ‏الْمَشْرُبَةِ ‏ ‏فَأَتَيْتُ غُلَامًا لَهُ أَسْوَدَ فَقُلْتُ اسْتَأْذِنْ ‏ ‏لِعُمَرَ ‏ ‏فَدَخَلَ ثُمَّ خَرَجَ إِلَيَّ فَقَالَ قَدْ ذَكَرْتُكَ لَهُ فَصَمَتَ فَانْطَلَقْتُ حَتَّى انْتَهَيْتُ إِلَى الْمِنْبَرِ فَجَلَسْتُ فَإِذَا عِنْدَهُ ‏ ‏رَهْطٌ ‏ ‏جُلُوسٌ يَبْكِي بَعْضُهُمْ فَجَلَسْتُ قَلِيلًا ثُمَّ غَلَبَنِي مَا أَجِدُ ثُمَّ أَتَيْتُ الْغُلَامَ فَقُلْتُ اسْتَأْذِنْ ‏ ‏لِعُمَرَ ‏ ‏فَدَخَلَ ثُمَّ خَرَجَ إِلَيَّ فَقَالَ قَدْ ذَكَرْتُكَ لَهُ فَصَمَتَ فَوَلَّيْتُ ‏ ‏مُدْبِرًا ‏ ‏فَإِذَا الْغُلَامُ يَدْعُونِي فَقَالَ ادْخُلْ فَقَدْ أَذِنَ لَكَ فَدَخَلْتُ فَسَلَّمْتُ عَلَى رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَإِذَا هُوَ مُتَّكِئٌ عَلَى ‏ ‏رَمْلِ ‏ ‏حَصِيرٍ قَدْ أَثَّرَ فِي جَنْبِهِ فَقُلْتُ أَطَلَّقْتَ يَا رَسُولَ اللَّهِ نِسَاءَكَ فَرَفَعَ رَأْسَهُ إِلَيَّ وَقَالَ لَا فَقُلْتُ اللَّهُ أَكْبَرُ لَوْ رَأَيْتَنَا يَا رَسُولَ اللَّهِ وَكُنَّا مَعْشَرَ ‏ ‏قُرَيْشٍ ‏ ‏قَوْمًا نَغْلِبُ النِّسَاءَ فَلَمَّا قَدِمْنَا ‏ ‏الْمَدِينَةَ ‏ ‏وَجَدْنَا قَوْمًا تَغْلِبُهُمْ نِسَاؤُهُمْ فَطَفِقَ نِسَاؤُنَا يَتَعَلَّمْنَ مِنْ نِسَائِهِمْ فَتَغَضَّبْتُ عَلَى امْرَأَتِي يَوْمًا فَإِذَا هِيَ ‏ ‏تُرَاجِعُنِي ‏ ‏فَأَنْكَرْتُ أَنْ ‏ ‏تُرَاجِعَنِي ‏ ‏فَقَالَتْ مَا تُنْكِرُ أَنْ أُرَاجِعَكَ فَوَاللَّهِ إِنَّ أَزْوَاجَ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لَيُرَاجِعْنَهُ ‏ ‏وَتَهْجُرُهُ إِحْدَاهُنَّ الْيَوْمَ إِلَى اللَّيْلِ فَقُلْتُ قَدْ خَابَ مَنْ فَعَلَ ذَلِكِ مِنْهُنَّ وَخَسِرَ أَفَتَأْمَنُ إِحْدَاهُنَّ أَنْ يَغْضَبَ اللَّهُ عَلَيْهَا لِغَضَبِ رَسُولِهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَإِذَا هِيَ قَدْ هَلَكَتْ فَتَبَسَّمَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ قَدْ دَخَلْتُ عَلَى ‏ ‏حَفْصَةَ ‏ ‏فَقُلْتُ لَا يَغُرَّنَّكِ أَنْ كَانَتْ جَارَتُكِ هِيَ أَوْسَمُ مِنْكِ وَأَحَبُّ إِلَى رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مِنْكِ فَتَبَسَّمَ أُخْرَى فَقُلْتُ أَسْتَأْنِسُ يَا رَسُولَ اللَّهِ قَالَ نَعَمْ فَجَلَسْتُ فَرَفَعْتُ رَأْسِي فِي الْبَيْتِ فَوَاللَّهِ مَا رَأَيْتُ فِيهِ شَيْئًا يَرُدُّ الْبَصَرَ إِلَّا أُهَبًا ثَلَاثَةً فَقُلْتُ ادْعُ اللَّهَ يَا رَسُولَ اللَّهِ أَنْ يُوَسِّعَ عَلَى أُمَّتِكَ فَقَدْ وَسَّعَ عَلَى ‏ ‏فَارِسَ ‏ ‏وَالرُّومِ ‏ ‏وَهُمْ لَا يَعْبُدُونَ اللَّهَ فَاسْتَوَى جَالِسًا ثُمَّ قَالَ أَفِي شَكٍّ أَنْتَ يَا ‏ ‏ابْنَ الْخَطَّابِ ‏ ‏أُولَئِكَ قَوْمٌ عُجِّلَتْ لَهُمْ طَيِّبَاتُهُمْ فِي الْحَيَاةِ الدُّنْيَا فَقُلْتُ اسْتَغْفِرْ لِي يَا رَسُولَ اللَّهِ وَكَانَ أَقْسَمَ أَنْ لَا يَدْخُلَ عَلَيْهِنَّ شَهْرًا مِنْ شِدَّةِ ‏ ‏مَوْجِدَتِهِ ‏ ‏عَلَيْهِنَّ حَتَّى عَاتَبَهُ اللَّهُ عَزَّ وَجَلَّ

நான் நீண்ட நாட்களாக நபி (ஸல்) அவர்களுடைய மனைவியருள் இருவரைப் பற்றி உமர் (ரலி) அவர்களிடம் கேட்க வேண்டும் என்று பேராவல் கொண்டிருந்தேன். (ஏனெனில், அவ்விருவரைப் பற்றித்தான்) உயர்ந்தோன் அல்லாஹ் (குர்ஆனில்), “நீங்கள் இருவரும் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரினால் (அது உங்களுக்கு) நல்லது. உங்கள் இருவரின் உள்ளங்களும் நேரிய வழியிலிருந்து பிறழ்ந்துவிட்டிருக்கின்றன” (66:4) என்று கூறியிருந்தான்.

உமர் (ரலி) ஹஜ்ஜுக்குச் சென்றபோது நானும் அவர்களுடன் ஹஜ் செய்தேன். (ஹஜ்ஜை முடித்துக்கொண்டு திரும்பும் வழியில்) உமர் (ரலி) (இயற்கைக் கடனை நிறைவேற்றுவதற்காக) ஒதுங்கினார்கள். அவர்களுடன் நானும் நீர்குவளையுடன் சென்றேன். அவர்கள் இயற்கைக் கடனை முடித்துவிட்டு என்னிடம் திரும்பிவந்தார்கள். நான் அவர்களின் கைகளில் (குவளையிலிருந்த) தண்ணீரை ஊற்றினேன். அவர்கள் உளூச் செய்தார்கள். அப்போது நான் அவர்களிடம் “இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! நபி (ஸல்) அவர்களுடைய மனைவியருள் இருவரைக் குறித்து, ‘நீங்கள் இருவரும் அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புக் கோரினால் (அது உங்களுக்கு) நல்லது. உங்கள் இருவரின் உள்ளங்களும் நேரிய வழியிலிருந்து பிறழ்ந்துவிட்டிருக்கின்றன’ (66:4) என்று அல்லாஹ் கூறியுள்ளானே, அந்த இருவர் யாவர்?” என்று கேட்டேன். அதற்கு உமர் (ரலி), “இப்னு அப்பாஸே! உங்களை எண்ணி நான் வியப்படைகின்றேன்@. ஹஃப்ஸாவும் ஆயிஷாவும்தாம் அந்த இருவர்” என்று விடையளித்தார்கள்.

பிறகு உமர் (ரலி) நடந்த நிகழ்ச்சி முழுவதையும் கூறலானார்கள்:

குறைஷிக் குலத்தாராகிய நாங்கள் (மக்காவில் இருந்தபோது) பெண்களை மிகைத்தவர்களாகவே இருந்துவந்தோம். (எங்களை எதிர்த்துப் பேசாத அளவிற்கு அவர்களை அடக்கிவைத்திருந்தோம்.) நாங்கள் (மக்காவைத் துறந்து) மதீனாவிற்கு வந்தபோது, அங்கு ஆண்களைப் பெண்கள் மிகைக்கக்கூடியவர்களாக இருந்ததைக் கண்டோம். இதை எங்களுடைய பெண்களும் மதீனத்துப் பெண்களிடமிருந்து கற்றுக்கொள்ளத் தொடங்கினர்.

எனது வீடு (மதீனாவின்) மேட்டுப் பகுதி கிராமங்களில் பனூ உமய்யா பின் ஸைத் குலத்தாரிடையே இருந்தது. (ஒரு நாள்) நான் என் மனைவிமீது கோபப்பட்டேன். அவர் என்னை எதிர்த்துப் பேசினார். அவர் என்னை எதிர்த்துப் பேசிய(து எனக்குப் பிடிக்கவில்லை; அ)தை நான் வெறுத்தேன். அப்போது அவர், “நான் உங்களை எதிர்த்துப் பேசியதற்காக நீங்கள் ஏன் (என்னை) வெறுக்கின்றீர்கள்? அல்லாஹ்வின் மீதாணையாக! நபி (ஸல்) அவர்களுடைய மனைவியர்கூட (சிலபோது) எதிர்ப்பேச்சு பேசத்தான் செய்கிறார்கள். அவர்களில் சிலர் நபியவர்களிடம் பகலில் இருந்து இரவுவரை பேசுவதில்லை (தெரியுமா?)” என்று கூறினார்.

உடனே நான் அங்கிருந்து புறப்பட்டு (என் மகள்) ஹஃப்ஸாவிடம் சென்று, “நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் பேச்சுக்கு எதிர்ப்பேச்சு பேசுவதுண்டா?” என்று கேட்டேன். அதற்கு ஹஃப்ஸா “ஆம்”  என்று பதிலளித்தார். நான், “உங்களில் சிலர் அல்லாஹ்வின் தூதரிடம் பகலில் இருந்து இரவுவரை கோபமாக இருப்பதுண்டா?” என்று கேட்டேன். அதற்கும் ஹஃப்ஸா “ஆம்” என்றார். நான், “அவர்களில் இப்படிச் செய்தவர் இழப்புக்குள்ளாகி விட்டார். உங்களில் ஒருவர்மீது இறைத்தூதருக்குக் கோபம் ஏற்பட்டால் அவர்மீது அல்லாஹ்வும் கோபமடைந்துவிடுவான் எனும் அச்சம் இல்லாவிட்டால் அவர் அழிந்துபோய்விடுவார். (எனவே,) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை நீ எதிர்த்துப் பேசாதே! அவர்களிடம் (அதிகமாக உன் தேவைகள்) எதையும் கேட்டுக்கொண்டிராதே! உனக்கு(அவசியத் தேவையென)த் தோன்றியதை என்னிடம் கேள். உன் அண்டை வீட்டுக்காரர் (ஆயிஷா) உன்னை விட அழகு மிக்கவராகவும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குப் பிரியமானவராகவும் இருப்பதை வைத்து (அவர் நபியவர்களிடம் நடந்துகொள்வதைப் பார்த்து) நீ ஏமாறி (அவரைப் போல நடந்துகொள்ளத் துணிந்து)விடாதே!” என்று நான் (என் மகளுக்கு அறிவுரை) கூறினேன்.

எனக்கு அன்ஸாரிகளில் அண்டை வீட்டார் ஒருவர் இருந்தார். நாங்கள் இருவரும் (மேட்டுப் பாங்கான எங்கள் கிராமத்திலிருந்து) முறை வைத்துக்கொண்டு (அங்கிருந்து) இறங்கிவந்து, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் இருப்போம். அவர் ஒரு நாள் நபியவர்களுடன் இருப்பார். நான் மறுநாள் நபியவர்களுடன் இருப்பேன். அவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருக்கும் அன்றைய நாளின் வேத அறிவிப்புகள் (நபியவர்களின் சொல், செயல்) முதலானவற்றை என்னிடம் வந்து தெரிவிப்பார். அதைப் போன்றே நானும் செய்வேன்.

அந்தக் கால கட்டத்தில் நாங்கள் (சிரியா நாட்டில் வாழும்) ‘ஃகஸ்ஸான்’ குலத்தார் எங்கள் (மதீனா) மீது போர் தொடுப்பதற்காக (தங்கள்) குதிரைகளுக்கு லாடம் அடித்து(த் தயாராகி)க்கொண்டிருக்கின்றனர் என்று ஒரு செய்தியைப் பேசிக்கொண்டிருந்தோம். (அவ்வாறிருக்க ஒரு நாள்) என் நண்பர் (தமது முறை நாளில் எங்கள் பகுதியிலிருந்து) இறங்கி (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றுவிட்டு) இஷா நேரத்தில் என்னிடம் வந்து என் வீட்டுக் கதவை (பலமாகத்) தட்டி, என்னை அழைத்தார். நான் வெளியே வந்தபோது “(இன்று) மிகப்பெரிய சம்பவமொன்று நடந்துவிட்டது” என்று கூறினார். நான், “என்ன அது? ஃகஸ்ஸானியர் (படையெடுத்து) வந்துவிட்டனரா?” என்று கேட்டேன். “இல்லை; அதைவிடப் பெரிய, அதைவிடக் கடுமையான சம்பவம் நடந்துவிட்டது; நபி (ஸல்) தம் மனைவியரை மணவிலக்குச் செய்துவிட்டார்கள்” என்று சொன்னார்.

உடனே நான் “(என் மகள்) ஹஃப்ஸா இழப்புக்குள்ளாகிவிட்டார். (கூடிய விரைவில்) இப்படி நடக்கத்தான்போகிறது என்று நான் எண்ணியிருந்தேன்” என்று கூறிவிட்டு, சுப்ஹுத் தொழுகை தொழுததும் எனது மேலங்கியை எடுத்து அணிந்துகொண்டு (அங்கிருந்து) இறங்கி என் மகள் ஹஃப்ஸாவிடம் சென்றேன்; அவர் அழுதுகொண்டிருந்தார். அவரிடம் நான், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) உங்களை மணவிலக்குச் செய்து விட்டார்களா?” என்று கேட்டேன். அதற்கு அவர் “எனக்குத் தெரியாது; அதோ அவர்கள் அந்த மாடி அறையில் தனியாக இருக்கின்றார்கள்” என்று கூறினார். உடனே நான் (அங்கு இருந்த) நபியவர்களின் பணியாளரான கருப்பரிடம் சென்று, “உமருக்காக (நபியவர்களின் அறைக்குள் வர) அனுமதி கேள்” என்றேன்.அவர் உள்ளே சென்றுவிட்டு என்னிடம் வந்து, “அவர்களிடம் உங்களைப் பற்றிச் சொன்னேன். அவர்கள் மௌனமாக இருந்துவிட்டார்கள்” என்று கூறினார்.

உடனே நான் அங்கிருந்து அகன்று சொற்பொழிவு மேடை (மிம்பர்) அருகே சென்று அமர்ந்துவிட்டேன். அங்கு ஒரு கூட்டத்தார் அமர்ந்திருந்தார்கள். அவர்களில் சிலர் (கேள்விப்பட்ட செய்தியை எண்ணி) அழுதுகொண்டிருந்தனர். நான் சிறிது நேரம் அமர்ந்திருந்தேன். பிறகு துக்கம் தாளாமல் (மீண்டும்) அந்தப் பணியாளரிடம் நான் வந்து, “உமருக்காக (நபியவர்களின் அறைக்குள் வர) அனுமதி கேள்” என்று சொன்னேன். அவர் உள்ளே சென்றுவிட்டுப் பிறகு என்னிடம் வந்து “நான் நபியவர்களிடம் உங்களைப் பற்றிச் சொன்னேன். அவர்கள் மௌனமாக இருந்துவிட்டார்கள்” என்று கூறினார். எனவே, நான் திரும்பலானேன். அப்போது அந்தப் பணியாளர் என்னை அழைத்து, “உள்ளே செல்லுங்கள்! உங்களுக்கு நபியவர்கள் அனுமதியளித்துவிட்டார்கள்” என்று கூறினார். உடனே நான் (அந்த அறைக்குள்) நுழைந்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு ஸலாம் சொன்னேன். அங்கு அவர்கள் நெய்யப்பட்ட பாய் ஒன்றில் சாய்ந்து படுத்திருந்தார்கள். அவர்களது விலாப் பகுதியில் அந்தப் பாய் அடையாளம் பதித்திருந்தது.

பிறகு, “அல்லாஹ்வின் தூதரே! உங்கள் மனைவியரை நீங்கள் மணவிலக்குச் செய்துவிட்டீர்களா?” என்று கேட்டேன். நபியவர்கள் என்னை நோக்கி தமது தலையை உயர்த்தி “இல்லை” என்று கூறினார்கள். உடனே நான், “அல்லாஹு அக்பர் (அல்லாஹ் மிகப் பெரியவன்)” என்று சொன்னேன்.

பிறகு,“அல்லாஹ்வின் தூதரே! குறைஷிக் குலத்தாராகிய நாங்கள் பெண்களை அடக்கிவைத்திருந்தோம். நாங்கள் மதீனாவுக்கு வந்தபோது, ஆண்கள்மீது பெண்கள் ஆதிக்கம் செலுத்தும் ஒரு கூட்டத்தாரை(அன்ஸாரிகளை)க் கண்டோம். எங்கள் பெண்களும் அப்பெண்களைப் பார்த்து (ஆண்களை எதிர்த்துப் பேசும் பழக்கத்தைக்) கற்றுக்கொள்ளத் தொடங்கிவிட்டனர். நான் ஒரு நாள் என் மனைவிமீது கோபம் கொண்டேன். அவர் அப்போது என்னை எதிர்த்துப் பேசினார். அவர் என்னிடம் எதிர்த்துப் பேசிய(தை நான் விரும்பவில்லை; அ)தை நான் வெறுத்தேன். அப்போது அவர், “நான் உங்களை எதிர்த்துப் பேசுவதை வெறுக்கின்றீர்களே! அல்லாஹ்வின் மீதாணையாக! நபி (ஸல்) அவர்களின் மனைவியரும்கூட நபியவர்களின் பேச்சுக்கு எதிர்ப்பேச்சு பேசுகின்றனரே!. அவர்களில் ஒருவர் நபியவர்களுடன் பிணங்கிக்கொண்டு அன்றைய தினத்தில் இரவுவரை பேசுவதில்லை (தெரியுமா?)” என்று கூறினார். நான் “அவர்களில் இப்படிச் செய்தவர் இழப்புக்குள்ளாகிவிட்டார். அவர்களில் ஒருவர்மீது இறைத்தூதருக்குக் கோபம் ஏற்பட்டால் அவர்மீது அல்லாஹ்வும் கோபமடைந்து விடுவான் எனும் அச்சம் அவருக்கில்லையா? அவ்வாறாயின் அவர் அழிந்துபோய்விடுவார் என்று சொன்னேன்” என்று கூறினேன். இதைக் கேட்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) புன்னகைத்தார்கள்.

பிறகு நான், “அல்லாஹ்வின் தூதரே! நான் (என் மகள்) ஹஃப்ஸாவிடம் சென்று, “உன் அண்டை வீட்டுக்காரர் (ஆயிஷா) உன்னைவிட அழகானவராகவும் அல்லாஹ்வின் தூதருக்குப் பிரியமானவராகவும் இருப்பதை வைத்து (அவர் நபியவர்களிடம் அதிக உரிமை எடுத்துக்கொள்வதைக் கண்டு) நீ ஏமாறிவிடாதே!” என்று கூறியதைச் சொன்னேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) இன்னொரு முறை புன்னகைத்தார்கள்.

நான் “அல்லாஹ்வின் தூதரே! (உங்களுடன் அமர்ந்து உங்களது) வெறுமையைப் போக்கட்டுமா?” என்று கேட்டேன். அவர்கள் “சரி” என்றார்கள். உடனே நான் அமர்ந்துகொண்டேன். பிறகு எனது தலையை உயர்த்தி அந்த அறையை நோட்டமிட்டேன். அல்லாஹ்வின் மீதாணையாக! கண்ணைக் கவருகின்ற எந்தப் பொருளையும் நான் காணவில்லை; மூன்றே மூன்று தோல்களைத் தவிர! அப்போது நான் “உங்கள் சமுதாயத்தாருக்கு(உலகச் செல்வங்களை)த் தாராளமாக வழங்கும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள், அல்லாஹ்வின் தூதரே! ஏனெனில், பாரசீகர்களுக்கும் ரோமரும் -அவர்கள் (ஏக இறைவன்) அல்லாஹ்வை வழிபடாதவர்களாக இருந்தும்- உலகச் செல்வங்களை அல்லாஹ் தாராளமாக வழங்கியுள்ளானே?” என்று கூறினேன்.

உடனே (தலையணையில் சாய்ந்து அமர்ந்திருந்த) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) நிமிர்ந்து அமர்ந்துகொண்டு, “உங்களுக்கு இன்னும் (இத்தகைய) சந்தேகம் உண்டா, கத்தாபின் மகனே? அவர்கள், தமக்குரிய இன்பங்களை இவ்வுலக வாழ்விலேயே (மறுமைக்கு) முன்னதாகவே வழங்கப்பட்டுவிட்ட மக்கள் ஆவர்” என்று கூறினார்கள். உடனே நான், “அல்லாஹ்வின் தூதரே! (அவசரப்பட்டுக் கேட்டுவிட்ட) எனக்காக பாவமன்னிப்புக் கோரிப் பிரார்த்தியுங்கள்” என்று சொன்னேன்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), தம் மனைவியர்மீது ஏற்பட்ட கடும் கோபத்தின் காரணமாக “(என் மனைவியரான) அவர்களிடம் ஒரு மாத காலத்திற்கு நான் செல்ல மாட்டேன்” எனச் சத்தியம் செய்திருந்தார்கள். இறுதியில் (66:1ஆவது வசனத்தை இறக்கி) நபியவர்களை அல்லாஹ் கண்டித்தான்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி)


குறிப்புகள் :

@அறிவிப்பாளர்களுள் ஒருவரான இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) கூறுகிறார்கள்: அல்லாஹ்வின் மீதாணையாக! தம்மிடம் தம் மகள் தொடர்பான ஒரு வசனத்தைக் குறித்து இப்னு அப்பாஸ் (ரலி) கேட்டதை உமர் (ரலி) விரும்பவில்லை. ஆகவேதான், “உங்களை எண்ணி வியப்படைகின்றேன்” என்றார்கள். ஆயினும், அதற்குரிய பதிலை உமர் (ரலி) மறைக்கவில்லை).

“இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரியின் கருத்துத் தவறானதாகும். ‘உங்களை எண்ணி வியப்படைகின்றேன்’ என்று உமர் (ரலி), இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் கூறியது, ‘இதைக் கேட்க இவ்வளவு காலம் தாமதித்தது ஏன்?’ எனும் கருத்திலாம்” என்று இமாம் குர்துபீ (ரஹ்) விளக்கியுள்ளார்.