அத்தியாயம்: 25, பாடம்: 5, ஹதீஸ் எண்: 3085

‏‏حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى التَّمِيمِيُّ، أَخْبَرَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، عَنْ مَالِكِ بْنِ مِغْوَلٍ، عَنْ طَلْحَةَ بْنِ مُصَرِّفٍ قَالَ :‏ ‏

سَأَلْتُ عَبْدَ اللَّهِ بْنَ أَبِي أَوْفَى هَلْ أَوْصَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ لاَ ‏.‏ قُلْتُ فَلِمَ كُتِبَ عَلَى الْمُسْلِمِينَ الْوَصِيَّةُ أَوْ فَلِمَ أُمِرُوا بِالْوَصِيَّةِ قَالَ أَوْصَى بِكِتَابِ اللَّهِ عَزَّ وَجَلَّ


وَحَدَّثَنَاهُ أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا وَكِيعٌ، ح وَحَدَّثَنَا ابْنُ نُمَيْرٍ، حَدَّثَنَا أَبِي، كِلاَهُمَا عَنْ مَالِكِ بْنِ مِغْوَلٍ، بِهَذَا الإِسْنَادِ ‏.‏ مِثْلَهُ غَيْرَ أَنَّ فِي حَدِيثِ وَكِيعٍ قُلْتُ فَكَيْفَ أُمِرَ النَّاسُ بِالْوَصِيَّةِ وَفِي حَدِيثِ ابْنِ نُمَيْرٍ قُلْتُ كَيْفَ كُتِبَ عَلَى الْمُسْلِمِينَ الْوَصِيَّةُ.

நான் அப்துல்லாஹ் பின் அபீஅவ்ஃபா (ரலி) அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) மரண சாஸனம் செய்ததுண்டா?” என்று கேட்டேன். அவர்கள் “இல்லை” என்று பதிலளித்தார்கள். “அவ்வாறாயின் மரண சாஸனம் முஸ்லிம்களுக்கு ஏன் கடமையாக்கப்பட்டது?” என்றோ “அவ்வாறாயின் மரண சாஸனம் செய்யுமாறு மக்கள் ஏன் கட்டளையிடப்பட்டனர்?” என்றோ கேட்டேன். அதற்கு அவர்கள், “வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ்வின் வேதத்தின்படி செயல்படுமாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அறிவுறுத்தினார்கள்” என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் அபீஅவ்ஃபா (ரலி) வழியாக தல்ஹா பின் முஸர்ரிஃப் (ரஹ்)


குறிப்புகள் :

வகீஉ பின் அல்ஜர்ராஹ் (ரஹ்) வழி அறிவிப்பில் “மரண சாஸனம் செய்யும்படி மக்களுக்கு எவ்வாறு கட்டளையிடப்பட்டது?” என்று தல்ஹா பின் முஸர்ரிஃப் (ரஹ்) கேட்டார்கள் என இடம்பெற்றுள்ளது.

முஹம்மது பின் அப்தில்லாஹ் பின் நுமைர் (ரஹ்) வழி அறிவிப்பில், “மரண சாஸனம் செய்வது முஸ்லிம்கள்மீது எப்படிக் கடமையாக்கப்பட்டது?” என்று கேட்டார்கள் என இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 25, பாடம்: 4, ஹதீஸ் எண்: 3084

حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى التَّمِيمِيُّ، أَخْبَرَنَا سُلَيْمُ بْنُ أَخْضَرَ، عَنِ ابْنِ عَوْنٍ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ قَالَ :‏ ‏

أَصَابَ عُمَرُ أَرْضًا بِخَيْبَرَ فَأَتَى النَّبِيَّ صلى الله عليه وسلم يَسْتَأْمِرُهُ فِيهَا فَقَالَ يَا رَسُولَ اللَّهِ إِنِّي أَصَبْتُ أَرْضًا بِخَيْبَرَ لَمْ أُصِبْ مَالاً قَطُّ هُوَ أَنْفَسُ عِنْدِي مِنْهُ فَمَا تَأْمُرُنِي بِهِ قَالَ ‏ “‏ إِنْ شِئْتَ حَبَسْتَ أَصْلَهَا وَتَصَدَّقْتَ بِهَا ‏”‏ ‏.‏ قَالَ فَتَصَدَّقَ بِهَا عُمَرُ أَنَّهُ لاَ يُبَاعُ أَصْلُهَا وَلاَ يُبْتَاعُ وَلاَ يُورَثُ وَلاَ يُوهَبُ ‏.‏ قَالَ فَتَصَدَّقَ عُمَرُ فِي الْفُقَرَاءِ وَفِي الْقُرْبَى وَفِي الرِّقَابِ وَفِي سَبِيلِ اللَّهِ وَابْنِ السَّبِيلِ وَالضَّيْفِ لاَ جُنَاحَ عَلَى مَنْ وَلِيَهَا أَنْ يَأْكُلَ مِنْهَا بِالْمَعْرُوفِ أَوْ يُطْعِمَ صَدِيقًا غَيْرَ مُتَمَوِّلٍ فِيهِ ‏


قَالَ فَحَدَّثْتُ بِهَذَا الْحَدِيثِ مُحَمَّدًا فَلَمَّا بَلَغْتُ هَذَا الْمَكَانَ غَيْرَ مُتَمَوِّلٍ فِيهِ ‏.‏ قَالَ مُحَمَّدٌ غَيْرَ مُتَأَثِّلٍ مَالاً ‏.‏ قَالَ ابْنُ عَوْنٍ وَأَنْبَأَنِي مَنْ قَرَأَ هَذَا الْكِتَابَ أَنَّ فِيهِ غَيْرَ مُتَأَثِّلٍ مَالاً ‏

حَدَّثَنَاهُ أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا ابْنُ أَبِي زَائِدَةَ، ح وَحَدَّثَنَا إِسْحَاقُ، أَخْبَرَنَا أَزْهَرُ السَّمَّانُ، ح وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا ابْنُ أَبِي عَدِيٍّ، كُلُّهُمْ عَنِ ابْنِ عَوْنٍ، بِهَذَا الإِسْنَادِ ‏.‏ مِثْلَهُ غَيْرَ أَنَّ حَدِيثَ ابْنِ أَبِي زَائِدَةَ وَأَزْهَرَ انْتَهَى عِنْدَ قَوْلِهِ ‏ “‏ أَوْ يُطْعِمَ صَدِيقًا غَيْرَ مُتَمَوِّلٍ فِيهِ ‏”‏ ‏.‏ وَلَمْ يُذْكَرْ مَا بَعْدَهُ ‏.‏ وَحَدِيثُ ابْنِ أَبِي عَدِيٍّ فِيهِ مَا ذَكَرَ سُلَيْمٌ قَوْلُهُ فَحَدَّثْتُ بِهَذَا الْحَدِيثِ مُحَمَّدًا ‏.‏ إِلَى آخِرِهِ

وَحَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا أَبُو دَاوُدَ الْحَفَرِيُّ، عُمَرُ بْنُ سَعْدٍ عَنْ سُفْيَانَ، عَنِ ابْنِ عَوْنٍ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، عَنْ عُمَرَ، قَالَ أَصَبْتُ أَرْضًا مِنْ أَرْضِ خَيْبَرَ فَأَتَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَقُلْتُ أَصَبْتُ أَرْضًا لَمْ أُصِبْ مَالاً أَحَبَّ إِلَىَّ وَلاَ أَنْفَسَ عِنْدِي مِنْهَا ‏.‏ وَسَاقَ الْحَدِيثَ بِمِثْلِ حَدِيثِهِمْ وَلَمْ يَذْكُرْ فَحَدَّثْتُ مُحَمَّدًا وَمَا بَعْدَهُ

(என் தந்தை) உமர் (ரலி) அவர்களுக்கு கைபரில் ஒரு நிலம் சொந்தமாக இருந்தது. அந்த நிலம் தொடர்பாக ஆலோசனை பெறுவதற்காக நபி (ஸல்) அவர்களிடம் சென்றார்கள். “அல்லாஹ்வின் தூதரே! நான் கைபரில் ஒரு நிலத்தைப் பெற்றுள்ளேன். அதைவிடச் சிறந்த ஒரு செல்வத்தை (இதுவரை) நான் அடைந்ததே இல்லை. ஆகவே, அதை நான் என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் கட்டளையிடுகின்றீர்கள்?” என்று கேட்டார்கள். நபி (ஸல்), “நீங்கள் விரும்பினால் அந்த நிலத்தை நீங்களே வைத்துக்கொண்டு, அதன் விளைச்சலை தர்மம் செய்துவிடுங்கள்” என்று கூறினார்கள்.

அவ்வாறே உமர் (ரலி), “அந்த நிலம் விற்கப்படக் கூடாது; வாங்கப்படவும் கூடாது; வாரிசுரிமையாக்கப்படாது; அன்பளிப்பாக வழங்கப்படக் கூடாது” என்ற நிபந்தனைகளை விதித்து அறக்கொடையாக (வக்ஃபாக) வழங்கினார்கள். (அதன் வருமானத்தை) ஏழைகளுக்கும் (தம்) உறவினர்களுக்கும் அடிமைகளை விடுதலை செய்வதற்கும் அல்லாஹ்வின் பாதையி(ல் அறப்போர் புரிவோர் வகையி)லும் வழிப்போக்கருக்கும் விருந்தினர்களுக்கும் உரியதாக்கி அறக்கொடை அளித்தார்கள். அதைப் பராமரிக்கும் பொறுப்பேற்றிருப்பவர், (அதிலிருந்து எடுத்துத் தமக்கென்று) சேமித்து வைக்காமல் நியாயமான அளவில் உண்பதும் தம் தோழருக்கு உணவளிப்பதிலும் குற்றமில்லை (என்றும் எழுதிவைத்தார்கள்).

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)


குறிப்புகள் :

நாஃபிஉ (ரஹ்) அறிவித்த இந்த ஹதீஸை நான் முஹம்மது பின் ஸீரீன் (ரஹ்) அவர்களிடம் அறிவித்துக்கொண்டிருந்தேன். “அதிலிருந்து எடுத்துத் தமக்கென்று சேமித்து வைக்காமல் …“ எனும் இடத்தை நான் அடைந்ததும் “அதைத் தமது சொத்தாக ஆக்கிக் கொள்ளாமல் …“ என்று (திருத்திக்) கூறினார்கள் என்று இதன் அறிவிப்பாளர்களுள் ஒருவரான அப்துல்லாஹ் பின் அவ்னு (ரஹ்) கூறுகின்றார்.

மேலும், இது குறித்து எழுதப்பட்ட ஓர் ஆவணத்தை வாசித்த ஒருவர்  அதில், “அதைத் தமது சொத்தாக ஆக்கிக்கொள்ளாமல் என்றே காணப்பட்டது” என்று கூறினார்.

இப்னு அபீஸாயிதா (ரஹ்) மற்றும் அஸ்ஹர் அஸ்ஸம்மான் (ரஹ்) ஆகியோர் வழி அறிவிப்பில், “(அதிலிருந்து எடுத்துத் தமக்கென்று) சேமித்து வைக்காமல் தம் தோழருக்கு உணவளிப்பதில் …“ என்பதோடு ஹதீஸ் முடிவடைகிறது. அதற்குப் பின்னுள்ள குறிப்புகள் இடம்பெறவில்லை.

இப்னு அபீஅதீ (ரஹ்) வழி அறிவிப்பில் மேற்கண்ட ஹதீஸில் இடம்பெற்றுள்ள “இந்த ஹதீஸை நான் முஹம்மது பின் ஸீரீன் (ரஹ்) அவர்களிடம் அறிவித்தேன்…” எனத் தொடங்கும் குறிப்பு இடம்பெற்றுள்ளது.

ஸுஃப்யான் வழி அறிவிப்பில், “நான் கைபர் பகுதியில் ஒரு நிலத்தைப் பெற்றிருந்தேன். நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று, நான் கைபரில் ஒரு நிலத்தைப் பெற்றுள்ளேன். அதைவிட மிக விருப்பமானதையோ, அதைவிட மிகச் சிறந்ததையோ நான் அடைந்துகொண்டதேயில்லை… என்று உமர் (ரலி) கூறினார்கள்” என ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே தொடர்கின்றன.

இந்த அறிவிப்பில், அப்துல்லாஹ் பின் அவ்னு (ரஹ்)  முஹம்மது பின் ஸீரீன் (ரஹ்) அவர்களிடம் இந்த ஹதீஸை அறிவித்ததைப் பற்றியும் அதற்குப் பின்னுள்ள தகவலும் இடம்பெறவில்லை.

அத்தியாயம்: 25, பாடம்: 3, ஹதீஸ் எண்: 3083

حَدَّثَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ، وَقُتَيْبَةُ – يَعْنِي ابْنَ سَعِيدٍ – وَابْنُ حُجْرٍ قَالُوا حَدَّثَنَا إِسْمَاعِيلُ – هُوَ ابْنُ جَعْفَرٍ – عَنِ الْعَلاَءِ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ :‏ ‏

أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏ “‏ إِذَا مَاتَ الإِنْسَانُ انْقَطَعَ عَنْهُ عَمَلُهُ إِلاَّ مِنْ ثَلاَثَةٍ إِلاَّ مِنْ صَدَقَةٍ جَارِيَةٍ أَوْ عِلْمٍ يُنْتَفَعُ بِهِ أَوْ وَلَدٍ صَالِحٍ يَدْعُو لَهُ ‏”‏

“ஒரு மனிதன் இறந்துவிட்டால் அவனுடைய மூன்று செயல்களைத் தவிர மற்ற அனைத்தும் அவனை விட்டும் துண்டிக்கப்படுகின்றன :

1. நிலையான அறக்கொடை
2. பயன்பெறப்படும் கல்வி
3. அவனுக்காகப் பிரார்த்திக்கும் (அவனுடைய) நல்லொழுக்கமான பிள்ளை”
என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

அத்தியாயம்: 25, பாடம்: 2, ஹதீஸ் எண்: 3082

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بِشْرٍ، حَدَّثَنَا هِشَامٌ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ :‏ ‏

أَنَّ رَجُلاً، أَتَى النَّبِيَّ صلى الله عليه وسلم فَقَالَ يَا رَسُولَ اللَّهِ إِنَّ أُمِّيَ افْتُلِتَتْ نَفْسُهَا وَلَمْ تُوصِ وَأَظُنُّهَا لَوْ تَكَلَّمَتْ تَصَدَّقَتْ أَفَلَهَا أَجْرٌ إِنْ تَصَدَّقْتُ عَنْهَا قَالَ ‏ “‏ نَعَمْ ‏”‏


وَحَدَّثَنَاهُ أَبُو كُرَيْبٍ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، ح وَحَدَّثَنِي الْحَكَمُ بْنُ مُوسَى، حَدَّثَنَا شُعَيْبُ، بْنُ إِسْحَاقَ ح وَحَدَّثَنِي أُمَيَّةُ بْنُ بِسْطَامَ، حَدَّثَنَا يَزِيدُ – يَعْنِي ابْنَ زُرَيْعٍ – حَدَّثَنَا رَوْحٌ – وَهُوَ ابْنُ الْقَاسِمِ – ح وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا جَعْفَرُ بْنُ عَوْنٍ، كُلُّهُمْ عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، بِهَذَا الإِسْنَادِ أَمَّا أَبُو أُسَامَةَ وَرَوْحٌ فَفِي حَدِيثِهِمَا فَهَلْ لِي أَجْرٌ كَمَا قَالَ يَحْيَى بْنُ سَعِيدٍ ‏.‏ وَأَمَّا شُعَيْبٌ وَجَعْفَرٌ فَفِي حَدِيثِهِمَا أَفَلَهَا أَجْرٌ كَرِوَايَةِ ابْنِ بِشْرٍ

ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! மரண சாஸனம் செய்யாமல் என் தாயார் திடீரென இறந்துவிட்டார். அவர் (இறப்பதற்கு முன்பு) பேச முடிந்திருந்தால் தர்மம் செய்யச் சொல்லியிருப்பார் என்று நான் கருதுகிறேன். அவர் சார்பாக நான் தர்மம் செய்தால் அவருக்கு நன்மை உண்டா?” என்று கேட்டார். நபி (ஸல்) “ஆம்” என்றார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)


குறிப்பு :

அபூஉஸாமா (ரஹ்) மற்றும் ரவ்ஹு பின் அல்காசிம் (ரஹ்) வழி அறிவிப்பில், “எனக்கு நன்மை உண்டா?” என்று அம்மனிதர் கேட்டார் என இடம் பெற்றுள்ளது.

ஆனால், ஷுஐப் பின் இஸ்ஹாக் (ரஹ்) மற்றும் ஜஅஃபர் பின் அவ்னு (ரஹ்) வழி அறிவிப்பில் “என் தாயாருக்கு நன்மை உண்டா?” என்று அவர் கேட்டதாக இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 25, பாடம்: 2, ஹதீஸ் எண்: 3081

حَدَّثَنَا زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، أَخْبَرَنِي أَبِي، عَنْ عَائِشَةَ :‏ ‏

أَنَّ رَجُلاً، قَالَ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم إِنَّ أُمِّيَ افْتُلِتَتْ نَفْسُهَا وَإِنِّي أَظُنُّهَا لَوْ تَكَلَّمَتْ تَصَدَّقَتْ فَلِيَ أَجْرٌ أَنْ أَتَصَدَّقَ عَنْهَا قَالَ ‏ “‏نَعَمْ”‏ ‏

ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம், “என் தாயார் திடீரென இறந்துவிட்டார். அவர் (இறப்பதற்கு முன்பு) பேசியிருந்திருந்தால் தர்மம் செய்யச் சொல்லியிருப்பார் என்று நான் கருதுகிறேன். அவருக்காக நான் தர்மம் செய்தால் எனக்கு நன்மை உண்டா?” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) “ஆம்” என்று விடையளித்தார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)

அத்தியாயம்: 25, பாடம்: 2, ஹதீஸ் எண்: 3080

حَدَّثَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ، وَقُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، وَعَلِيُّ بْنُ حُجْرٍ، قَالُوا حَدَّثَنَا إِسْمَاعِيلُ – وَهُوَ ابْنُ جَعْفَرٍ – عَنِ الْعَلاَءِ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ :‏ ‏

أَنَّ رَجُلاً قَالَ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم إِنَّ أَبِي مَاتَ وَتَرَكَ مَالاً وَلَمْ يُوصِ فَهَلْ يُكَفِّرُ عَنْهُ أَنْ أَتَصَدَّقَ عَنْهُ قَالَ ‏ “‏ نَعَمْ ‏”‏

ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம், “என் தந்தை சொத்துகளை விட்டுவிட்டு இறந்துபோனார். அவர் மரண சாஸனம் எதுவும் செய்யவில்லை. இந்நிலையில் அவருக்காக நான் தர்மம் செய்தால், அவரு(டைய பாவங்களு)க்கு அது பரிகாரம் ஆகுமா?” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) “ஆம்” என்றார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

அத்தியாயம்: 25, பாடம்: 1, ஹதீஸ் எண்: 3079

حَدَّثَنِي إِبْرَاهِيمُ بْنُ مُوسَى الرَّازِيُّ، أَخْبَرَنَا عِيسَى يَعْنِي ابْنَ يُونُسَ، ح وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَأَبُو كُرَيْبٍ قَالاَ حَدَّثَنَا وَكِيعٌ، ح وَحَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، حَدَّثَنَا ابْنُ نُمَيْرٍ، كُلُّهُمْ عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ :‏ ‏

قَالَ لَوْ أَنَّ النَّاسَ، غَضُّوا مِنَ الثُّلُثِ إِلَى الرُّبُعِ فَإِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏”‏ الثُّلُثُ وَالثُّلُثُ كَثِيرٌ ‏”‏ ‏ وَفِي حَدِيثِ وَكِيعٍ ‏”‏ كَبِيرٌ أَوْ كَثِيرٌ ‏”‏ ‏

‏மக்கள் (தமது மரண சாஸனங்களை) மூன்றில் ஒரு பாகத்திலிருந்து நான்கில் ஒரு பாகமாகக் குறைத்துக்கொண்டால் நன்றாயிருக்கும். ஏனெனில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “மூன்றில் ஒரு பாகமா? மூன்றில் ஒரு பாகமே அதிகம்தான்” என்று கூறியுள்ளார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி)


குறிப்பு :

வகீஉ (ரஹ்) வழி அறிவிப்பில், “மூன்றில் ஒரு பாகமே பெரிதுதான் / அதிகம்தான்” என இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 25, பாடம்: 1, ஹதீஸ் எண்: 3078

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَبِي عُمَرَ الْمَكِّيُّ، حَدَّثَنَا الثَّقَفِيُّ، عَنْ أَيُّوبَ السَّخْتِيَانِيِّ، عَنْ عَمْرِو بْنِ سَعِيدٍ عَنْ حُمَيْدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ الْحِمْيَرِيِّ، عَنْ ثَلاَثَةٍ، مِنْ وَلَدِ سَعْدٍ كُلُّهُمْ يُحَدِّثُهُ عَنْ أَبِيهِ :‏ ‏

أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم دَخَلَ عَلَى سَعْدٍ يَعُودُهُ بِمَكَّةَ فَبَكَى قَالَ ‏”‏ مَا يُبْكِيكَ ‏”‏ ‏.‏ فَقَالَ قَدْ خَشِيتُ أَنْ أَمُوتَ بِالأَرْضِ الَّتِي هَاجَرْتُ مِنْهَا كَمَا مَاتَ سَعْدُ ابْنُ خَوْلَةَ ‏.‏ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏”‏ اللَّهُمَّ اشْفِ سَعْدًا اللَّهُمَّ اشْفِ سَعْدًا ‏”‏ ‏.‏ ثَلاَثَ مِرَارٍ ‏.‏ قَالَ يَا رَسُولَ اللَّهِ إِنَّ لِي مَالاً كَثِيرًا وَإِنَّمَا يَرِثُنِي ابْنَتِي أَفَأُوصِي بِمَالِي كُلِّهِ قَالَ ‏”‏ لاَ ‏”‏ ‏.‏ قَالَ فَبِالثُّلُثَيْنِ قَالَ ‏”‏ لاَ ‏”‏ ‏.‏ قَالَ فَالنِّصْفُ قَالَ ‏”‏ لاَ ‏”‏ ‏.‏ قَالَ فَالثُّلُثُ قَالَ ‏”‏ الثُّلُثُ وَالثُّلُثُ كَثِيرٌ إِنَّ صَدَقَتَكَ مِنْ مَالِكَ صَدَقَةٌ وَإِنَّ نَفَقَتَكَ عَلَى عِيَالِكَ صَدَقَةٌ وَإِنَّ مَا تَأْكُلُ امْرَأَتُكَ مِنْ مَالِكَ صَدَقَةٌ وَإِنَّكَ أَنْ تَدَعَ أَهْلَكَ بِخَيْرٍ – أَوْ قَالَ بِعَيْشٍ – خَيْرٌ مِنْ أَنْ تَدَعَهُمْ يَتَكَفَّفُونَ النَّاسَ ‏”‏ ‏.‏ وَقَالَ بِيَدِهِ ‏.‏


وَحَدَّثَنِي أَبُو الرَّبِيعِ الْعَتَكِيُّ، حَدَّثَنَا حَمَّادٌ، حَدَّثَنَا أَيُّوبُ، عَنْ عَمْرِو بْنِ سَعِيدٍ، عَنْ حُمَيْدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ الْحِمْيَرِيِّ، عَنْ ثَلاَثَةٍ مِنْ وَلَدِ سَعْدٍ قَالُوا مَرِضَ سَعْدٌ بِمَكَّةَ فَأَتَاهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَعُودُهُ ‏.‏ بِنَحْوِ حَدِيثِ الثَّقَفِيِّ ‏

‏وَحَدَّثَنِي مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا عَبْدُ الأَعْلَى، حَدَّثَنَا هِشَامٌ، عَنْ مُحَمَّدٍ، عَنْ حُمَيْدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ حَدَّثَنِي ثَلاَثَةٌ، مِنْ وَلَدِ سَعْدِ بْنِ مَالِكٍ كُلُّهُمْ يُحَدِّثُنِيهِ بِمِثْلِ حَدِيثِ صَاحِبِهِ فَقَالَ مَرِضَ سَعْدٌ بِمَكَّةَ فَأَتَاهُ النَّبِيُّ صلى الله عليه وسلم يَعُودُهُ ‏.‏ بِمِثْلِ حَدِيثِ عَمْرِو بْنِ سَعِيدٍ عَنْ حُمَيْدٍ الْحِمْيَرِيِّ

நபி (ஸல்), மக்காவில் (உடல் நலிவுற்றிருந்த) என்னை நலம் விசாரிப்பதற்காக என்னிடம் வந்தார்கள். அப்போது நான் அழுதேன். நபி (ஸல்), “ஏன் அழுகின்றீர்?” என்று கேட்டார்கள். “ஸஅத் பின் கவ்லா இறந்ததைப் போன்று நான் துறந்து சென்ற இந்த (மக்கா) மண்ணிலேயே இறந்துவிடுவேனோ என அஞ்சுகிறேன்” என்று நான் சொன்னேன். அதற்கு நபி (ஸல்) , “இறைவா! ஸஅதுக்குக் குணமளிப்பாயாக! இறைவா! ஸஅதுக்குக் குணமளிப்பாயாக!” என மூன்று முறை பிரார்த்தித்தார்கள்.

நான், “அல்லாஹ்வின் தூதரே! என்னிடம் ஏராளமான செல்வங்கள் உள்ளன. எனக்கு என் ஒரே மகள் மட்டுமே (இப்போது) வாரிசாக வருகின்றாள். ஆகவே, என் செல்வங்கள் அனைத்திலும் (அவை அறவழியில் செலவிடப்பட) மரண சாஸனம் எழுதிவிடட்டுமா?” என்று கேட்டேன். நபி (ஸல்), “வேண்டாம்” என்றார்கள். நான் “மூன்றில் இரண்டு பாகங்களில்?” என்று கேட்டேன்.

அதற்கும் “வேண்டாம்” என்றார்கள். “அவ்வாறாயின் பாதியிலாவது?” என்று கேட்டேன். அதற்கும் “வேண்டாம்” என்று சொன்னார்கள். “அவ்வாறாயின் மூன்றில் ஒரு பாகத்திலேனும்?” என்று கேட்டேன்.

நபி (ஸல்), “மூன்றில் ஒரு பாகமா! மூன்றில் ஒரு பாகம்கூட அதிகம்தான். நீர் உமது செல்வத்திலிருந்து (பிறருக்கு) ஈவதும் ஈகைதான். நீர் உம்முடைய குடும்பத்தாருக்கு வழங்கும் செலவுத் தொகையும் ஈகைதான். உமது செல்வத்திலிருந்து உம்முடைய மனைவி உண்பதும் ஈகைதான். நீர் உம்முடைய வீட்டாரை மக்களிடம் கையேந்தும் நிலையில் (என்று கூறும்போது தமது கையால் கையேந்துவதுபோல் செய்து காட்டினார்கள்) விட்டுச்செல்வதைவிட (பொருளாதார) நலத்துடன் விட்டுச்செல்வதே சிறந்ததாகும்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : ஸஅத் பின் அபீவக்காஸ் (ரலி) வழியாக அன்னாரின் மக்கள் ஆமிர், முஸ்அப், முஹம்மது.


குறிப்பு :

மேற்காணும் நிகழ்வுக்குப் பின்னர், தங்கள் தந்தை ஸஅத் பின் அபீவக்காஸ் (ரலி), உடல் நலம் பெற்று, 80 வயது வரை உயிர்வாழ்ந்தார்கள்; அவர்களுக்கு மக்களாக நாங்கள் பிறந்தோம் என ஆமிர் (ரஹ்), முஸ்அப் (ரஹ்), முஹம்மது (ரஹ்) ஆகிய மூவர் அறிவிக்கின்றனர்.

ஹம்மாது (ரஹ்) வழி அறிவிப்பு, “(எங்கள் தந்தை) ஸஅத் (ரலி) மக்காவில் உடல் நலிவுற்றிருந்தபோது அவர்களை உடல்நலம் விசாரிப்பதற்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) வந்தார்கள் …“ என்று ஸஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்களின் மூன்று மகன்கள் அறிவிப்பதாகத் தொடங்குகின்றது. மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.

அத்தியாயம்: 25, பாடம்: 1, ஹதீஸ் எண்: 3077

وَحَدَّثَنِي الْقَاسِمُ بْنُ زَكَرِيَّاءَ، حَدَّثَنَا حُسَيْنُ بْنُ عَلِيٍّ، عَنْ زَائِدَةَ، عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ عُمَيْرٍ عَنْ مُصْعَبِ بْنِ سَعْدٍ، عَنْ أَبِيهِ، قَالَ :‏ ‏

عَادَنِي النَّبِيُّ صلى الله عليه وسلم فَقُلْتُ أُوصِي بِمَالِي كُلِّهِ ‏.‏ قَالَ ‏”‏ لاَ ‏”‏ ‏.‏ قُلْتُ فَالنِّصْفُ ‏‏ قَالَ ‏”‏ لاَ ‏”‏ ‏.‏ فَقُلْتُ أَبِالثُّلُثِ فَقَالَ ‏”‏ نَعَمْ وَالثُّلُثُ كَثِيرٌ ‏”‏

என்னை உடல்நலம் விசாரிப்பதற்காக நபி (ஸல்) வந்தார்கள். அப்போது நான், “என் செல்வங்கள் அனைத்தையும் மரண சாஸனம் செய்துவிடட்டுமா?” என்று கேட்டேன். நபி (ஸல்) “வேண்டாம்” என்றார்கள். நான், “அவ்வாறாயின் (என் செல்வத்தில்) பாதியை?” என்று கேட்டேன். அதற்கும் “வேண்டாம்” என்றார்கள். நான் “மூன்றில் ஒரு பாகத்தை?” என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) “சரி; மூன்றில் ஒரு பாகம்கூட அதிகம்தான்” என்றார்கள்.

அறிவிப்பாளர் : ஸஅத் பின் அபீவக்காஸ் (ரலி)

அத்தியாயம்: 25, பாடம்: 1, ஹதீஸ் எண்: 3076

وَحَدَّثَنِي زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا الْحَسَنُ بْنُ مُوسَى، حَدَّثَنَا زُهَيْرٌ، حَدَّثَنَا سِمَاكُ بْنُ حَرْبٍ حَدَّثَنِي مُصْعَبُ بْنُ سَعْدٍ، عَنْ أَبِيهِ قَالَ :‏ ‏

مَرِضْتُ فَأَرْسَلْتُ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقُلْتُ دَعْنِي أَقْسِمْ مَالِي حَيْثُ شِئْتُ فَأَبَى ‏.‏ قُلْتُ فَالنِّصْفُ فَأَبَى ‏.‏ قُلْتُ فَالثُّلُثُ قَالَ فَسَكَتَ بَعْدَ الثُّلُثِ ‏.‏ قَالَ فَكَانَ بَعْدُ الثُّلُثُ جَائِزًا ‏


وَحَدَّثَنِي مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، وَابْنُ بَشَّارٍ قَالاَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ سِمَاكٍ، بِهَذَا الإِسْنَادِ نَحْوَهُ ‏.‏ وَلَمْ يَذْكُرْ فَكَانَ بَعْدُ الثُّلُثُ جَائِزًا ‏‏

நான் உடல் நலிவுற்றிருந்தபோது நபி (ஸல்) அவர்களுக்கு ஆளனுப்பினேன். (அவர்கள் வந்தபோது,) “நான் விரும்பிய முறையில் என் செல்வத்தைப் பங்கிட்டுக் கொடுக்க என்னை அனுமதியுங்கள்” என்று கேட்டேன். நபி (ஸல்) அதற்கு மறுத்துவிட்டார்கள். “அவ்வாறாயின் பாதியாவது (அறவழியில் செலவிட அனுமதியுங்கள்)” என்று கேட்டேன். அதற்கும் மறுப்புத் தெரிவித்தார்கள். நான் “(என் செல்வத்தில்) மூன்றில் ஒரு பாகத்தை (தர்மம் செய்ய அனுமதியுங்கள்)” என்று கேட்டபோது அமைதியாக இருந்தார்கள். இதன் பின்னரே மூன்றில் ஒரு பாகம் (மரண சாஸனம் செய்வதற்கு) அனுமதிக்கப்பட்டது என்றாயிற்று.

அறிவிப்பாளர் : ஸஅத் பின் அபீவக்காஸ் (ரலி)


குறிப்பு :

ஷுஅபா (ரஹ்) வழி அறிவிப்பில், “இதன் பின்னரே மூன்றில் ஒரு பாகம் (மரண சாஸனம் செய்வதற்கு) அனுமதிக்கப்பட்டது என்றாயிற்று” எனும் குறிப்பு இடம் பெறவில்லை.