அத்தியாயம்: 44, பாடம்: 43, ஹதீஸ் எண்: 4543

حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ الْحَنْظَلِيُّ، وَأَحْمَدُ بْنُ عَبْدَةَ، – وَاللَّفْظُ لإِسْحَاقَ – قَالاَ أَخْبَرَنَا سُفْيَانُ، عَنْ عَمْرٍو، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ قَالَ :‏

فِينَا نَزَلَتْ ‏{‏ إِذْ هَمَّتْ طَائِفَتَانِ مِنْكُمْ أَنْ تَفْشَلاَ وَاللَّهُ وَلِيُّهُمَا‏}‏ بَنُو سَلِمَةَ وَبَنُو حَارِثَةَ وَمَا نُحِبُّ أَنَّهَا لَمْ تَنْزِلْ لِقَوْلِ اللَّهِ عَزَّ وَجَلَّ ‏{‏ وَاللَّهُ وَلِيُّهُمَا‏}‏ ‏‏

“அப்போது உங்களில் இரு குழுவினர் துணிவிழந்து (திரும்பிவிட எண்ணி) நின்றனர். ஆனால், அவர்களுக்கு அல்லாஹ் உதவியாள(னாய் இருந்தா)ன்” எனும் (3:122) இறைவசனம், பனூ ஸலிமா மற்றும் பனூ ஹாரிஸா கூட்டத்தாராகிய எங்களைக் குறித்தே அருளப்பெற்றது. ‘இந்த வசனம் அருளப்பெறாமல் இருந்தால் நன்றாயிருந்திருக்குமே’ என்றெல்லாம் (கூற) நாங்கள் விரும்பமாட்டோம். ஏனெனில், வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ், “அவர்களுக்கு அல்லாஹ் உதவியாள(னாய் இருந்தா)ன்” என்று (எங்களை மேன்மைப்படுத்தியன்றோ) கூறுகின்றான்.

அறிவிப்பாளர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)

அத்தியாயம்: 44, பாடம்: 42, ஹதீஸ் எண்: 4542

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ حَاتِمٍ، حَدَّثَنَا بَهْزٌ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ ثَابِتٍ، عَنْ مُعَاوِيَةَ بْنِ قُرَّةَ عَنْ عَائِذِ بْنِ عَمْرٍو أَنَّ أَبَا سُفْيَانَ، أَتَى عَلَى سَلْمَانَ وَصُهَيْبٍ وَبِلاَلٍ فِي نَفَرٍ فَقَالُوا:‏

وَاللَّهِ مَا أَخَذَتْ سُيُوفُ اللَّهِ مِنْ عُنُقِ عَدُوِّ اللَّهِ مَأْخَذَهَا ‏.‏ قَالَ فَقَالَ أَبُو بَكْرٍ أَتَقُولُونَ هَذَا لِشَيْخِ قُرَيْشٍ وَسَيِّدِهِمْ فَأَتَى النَّبِيَّ صلى الله عليه وسلم فَأَخْبَرَهُ فَقَالَ ‏ “‏ يَا أَبَا بَكْرٍ لَعَلَّكَ أَغْضَبْتَهُمْ لَئِنْ كُنْتَ أَغْضَبْتَهُمْ لَقَدْ أَغْضَبْتَ رَبَّكَ ‏”‏ ‏.‏ فَأَتَاهُمْ أَبُو بَكْرٍ فَقَالَ يَا إِخْوَتَاهْ أَغْضَبْتُكُمْ قَالُوا لاَ يَغْفِرُ اللَّهُ لَكَ يَا أُخَىَّ ‏

ஸல்மான், ஸுஹைப், பிலால் (ரலி) ஆகியோர் கொண்ட ஒரு குழுவினரிடம் (அதுவரை இஸ்லாத்தை ஏற்காதிருந்த) அபூஸுஃப்யான் வந்தபோது, அக்குழுவினர் “அல்லாஹ்வின்  மீதாணையாக! இந்த இறைவிரோதியின் கழுத்தை (இன்னும்) உரிய முறையில் இறைவனின் வாட்கள் பதம் பார்க்கவில்லையே!” என்று கூறினர்.

அப்போது (அங்கு வந்த) அபூபக்ரு (ரலி), “குறைஷியரில் மூத்தவரும் அவர்களின் தலைவருமான ஒருவரைப் பார்த்தா இவ்வாறு கூறுகின்றீர்கள்!” என்று அவர்களிடம் (கடிந்து) கூறினார்கள்.

பிறகு நபி (ஸல்) அவர்களிடம் சென்று அதைப் பற்றி அபூபக்ரு (ரலி) தெரிவித்தபோது, “அபூபக்ரே! நீங்கள் அ(க்குழுவிலுள்ள)வர்களைக் கோபப்படுத்தியிருப்பீர்கள் போலும்! அவர்களை நீங்கள் கோபப்படுத்தியிருந்தால், உங்கள் இறைவனை நீங்கள் கோபப்படுத்திவிட்டீர்கள்!” என்று சொன்னார்கள்.

ஆகவே, அவர்களிடம் அபூபக்ரு (ரலி) வந்து, “என் சகோதரர்களே! நான் உங்களைக் கோப்படுத்திவிட்டேனா?” என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், “இல்லை, எங்கள் அருமைச் சகோதரரே! அல்லாஹ் உங்களை மன்னிப்பானாக!” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : ஆயித் பின் அம்ரு (ரலி)

அத்தியாயம்: 44, பாடம்: 41, ஹதீஸ் எண்: 4541

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ بَرَّادٍ الأَشْعَرِيُّ، وَمُحَمَّدُ بْنُ الْعَلاَءِ الْهَمْدَانِيُّ، قَالاَ حَدَّثَنَا أَبُو أُسَامَةَ حَدَّثَنِي بُرَيْدٌ، عَنْ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِي مُوسَى قَالَ :‏

بَلَغَنَا مَخْرَجُ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَنَحْنُ بِالْيَمَنِ فَخَرَجْنَا مُهَاجِرِينَ إِلَيْهِ أَنَا وَأَخَوَانِ لِي أَنَا أَصْغَرُهُمَا أَحَدُهُمَا أَبُو بُرْدَةَ وَالآخَرُ أَبُو رُهْمٍ – إِمَّا قَالَ بِضْعًا وَإِمَّا قَالَ ثَلاَثَةً وَخَمْسِينَ أَوِ اثْنَيْنِ وَخَمْسِينَ رَجُلاً مِنْ قَوْمِي – قَالَ فَرَكِبْنَا سَفِينَةً فَأَلْقَتْنَا سَفِينَتُنَا إِلَى النَّجَاشِيِّ بِالْحَبَشَةِ فَوَافَقْنَا جَعْفَرَ بْنَ أَبِي طَالِبٍ وَأَصْحَابَهُ عِنْدَهُ فَقَالَ جَعْفَرٌ إِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم بَعَثَنَا هَا هُنَا وَأَمَرَنَا بِالإِقَامَةِ فَأَقِيمُوا مَعَنَا ‏.‏ فَأَقَمْنَا مَعَهُ حَتَّى قَدِمْنَا جَمِيعًا – قَالَ – فَوَافَقْنَا رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم حِينَ افْتَتَحَ خَيْبَرَ فَأَسْهَمَ لَنَا – أَوْ قَالَ أَعْطَانَا مِنْهَا – وَمَا قَسَمَ لأَحَدٍ غَابَ عَنْ فَتْحِ خَيْبَرَ مِنْهَا شَيْئًا إِلاَّ لِمَنْ شَهِدَ مَعَهُ إِلاَّ لأَصْحَابِ سَفِينَتِنَا مَعَ جَعْفَرٍ وَأَصْحَابِهِ قَسَمَ لَهُمْ مَعَهُمْ – قَالَ – فَكَانَ نَاسٌ مِنَ النَّاسِ يَقُولُونَ لَنَا – يَعْنِي لأَهْلِ السَّفِينَةِ – نَحْنُ سَبَقْنَاكُمْ بِالْهِجْرَةِ ‏

قَالَ فَدَخَلَتْ أَسْمَاءُ بِنْتُ عُمَيْسٍ – وَهِيَ مِمَّنْ قَدِمَ مَعَنَا – عَلَى حَفْصَةَ زَوْجِ النَّبِيِّ صلى الله عليه وسلم زَائِرَةً وَقَدْ كَانَتْ هَاجَرَتْ إِلَى النَّجَاشِيِّ فِيمَنْ هَاجَرَ إِلَيْهِ فَدَخَلَ عُمَرُ عَلَى حَفْصَةَ وَأَسْمَاءُ عِنْدَهَا فَقَالَ عُمَرُ حِينَ رَأَى أَسْمَاءَ مَنْ هَذِهِ قَالَتْ أَسْمَاءُ بِنْتُ عُمَيْسٍ ‏.‏ قَالَ عُمَرُ الْحَبَشِيَّةُ هَذِهِ الْبَحْرِيَّةُ هَذِهِ فَقَالَتْ أَسْمَاءُ نَعَمْ ‏.‏ فَقَالَ عُمَرُ سَبَقْنَاكُمْ بِالْهِجْرَةِ فَنَحْنُ أَحَقُّ بِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم مِنْكُمْ ‏.‏ فَغَضِبَتْ وَقَالَتْ كَلِمَةً كَذَبْتَ يَا عُمَرُ كَلاَّ وَاللَّهِ كُنْتُمْ مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم يُطْعِمُ جَائِعَكُمْ وَيَعِظُ جَاهِلَكُمْ وَكُنَّا فِي دَارِ أَوْ فِي أَرْضِ الْبُعَدَاءِ الْبُغَضَاءِ فِي الْحَبَشَةِ وَذَلِكَ فِي اللَّهِ وَفِي رَسُولِهِ وَايْمُ اللَّهِ لاَ أَطْعَمُ طَعَامًا وَلاَ أَشْرَبُ شَرَابًا حَتَّى أَذْكُرَ مَا قُلْتَ لِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَنَحْنُ كُنَّا نُؤْذَى وَنُخَافُ وَسَأَذْكُرُ ذَلِكَ لِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَأَسْأَلُهُ وَوَاللَّهِ لاَ أَكْذِبُ وَلاَ أَزِيغُ وَلاَ أَزِيدُ عَلَى ذَلِكَ ‏.‏ قَالَ فَلَمَّا جَاءَ النَّبِيُّ صلى الله عليه وسلم قَالَتْ يَا نَبِيَّ اللَّهِ إِنَّ عُمَرَ قَالَ كَذَا وَكَذَا ‏.‏ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ “‏ لَيْسَ بِأَحَقَّ بِي مِنْكُمْ وَلَهُ وَلأَصْحَابِهِ هِجْرَةٌ وَاحِدَةٌ وَلَكُمْ أَنْتُمْ أَهْلَ السَّفِينَةِ هِجْرَتَانِ ‏”‏ ‏.‏ قَالَتْ فَلَقَدْ رَأَيْتُ أَبَا مُوسَى وَأَصْحَابَ السَّفِينَةِ يَأْتُونِي أَرْسَالاً يَسْأَلُونِي عَنْ هَذَا الْحَدِيثِ مَا مِنَ الدُّنْيَا شَىْءٌ هُمْ بِهِ أَفْرَحُ وَلاَ أَعْظَمُ فِي أَنْفُسِهِمْ مِمَّا قَالَ لَهُمْ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏.‏ قَالَ أَبُو بُرْدَةَ فَقَالَتْ أَسْمَاءُ فَلَقَدْ رَأَيْتُ أَبَا مُوسَى وَإِنَّهُ لَيَسْتَعِيدُ هَذَا الْحَدِيثَ مِنِّي ‏

“அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (மக்காவிலிருந்து புலம்பெயர்ந்து மதீனாவுக்கு ஹிஜ்ரத்) புறப்பட்டுவிட்ட செய்தி, நாங்கள் யமன் நாட்டில் இருந்தபோது எங்களுக்குத் தெரியவந்தது. உடனே நானும் என் இரு சகோதரர்களும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இணைந்துகொள்ள ஹிஜ்ரத் புறப்பட்டோம். அவர்களில் ஒருவர் அபூபுர்தா ஆவார்; மற்றொருவர் அபூருஹ்மு ஆவார். நான்தான் அவர்களுள் இளையவன் ஆவேன்”

“என் (அஷ்அரீ) குலத்தாரில் ஐம்பதுக்கும் மேற்பட்டவர்களுடன், ஐம்பத்திரண்டு (அ) ஐம்பத்து மூன்று பேர்களுடன் சேர்ந்து நாங்கள் சென்றோம்” என்று (என் தந்தை அபூமூஸா) கூறினார்கள். பிறகு பின்வருமாறும் குறிப்பிட்டார்கள்:

நாங்கள் ஒரு கப்பலில் ஏறி(மதீனாவை நோக்கி)ப் பயணம் செய்தோம். எங்கள் கப்பல் (திசை மாறி) அபிஸீனியாவில் (மன்னர்) நஜாஷீயிடம் எங்களை(க் கொண்டு சென்று) இறக்கிவிட்டது. அங்கு ஜஅஃபர் பின் அபீதாலிப் (ரலி) அவர்களையும் அவர்களுடைய சகாக்களையும் நஜாஷீக்கு அருகில் சந்திக்க நேர்ந்தது. (ஏற்கெனவே அவர்கள் மக்காவிலிருந்து அங்கு வந்து தங்கியிருந்தனர்).

அப்போது ஜஅஃபர் (ரலி), “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) எங்களை அனுப்பி (இங்கு) தங்கியிருக்கும்படி உத்தரவிட்டார்கள். நீங்களும் எங்களுடன் (இங்கேயே) தங்கிவிடுங்கள்” என்று கூறினார்கள்.

ஆகவே, நாங்களும் அவர்களுடன் (அபிஸீனியாவில்) தங்கினோம். இறுதியில் நாங்கள் அனைவரும் சேர்ந்து (மதீனாவுக்கு) வந்துசேர்ந்தோம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கைபரை வெற்றி கொண்ட சந்தர்ப்பத்தில் நாங்கள் அவர்களைச் சென்றடைந்தோம். அப்போது அவர்கள் (கைபர் போரில் கிடைத்த செல்வங்களில்) எங்களுக்கும் அதிலிருந்து பங்கு கொடுத்தார்கள். கைபர் போரில் கலந்துகொள்ளாத எவருக்கும் அதிலிருந்து எதையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) பங்கிட்டுத் தரவில்லை; தம்முடன் அதில் கலந்துகொண்டவர்களுக்கு மட்டுமே பங்கிட்டுத் தந்தார்கள்.

ஆனால், ஜஅஃபர் (ரலி) அவர்களுடனும் அவர்களுடைய சகாக்களுடனும் எங்களது கப்பலில் வந்தவர்களுக்கு மட்டும் (முஸ்லிம்களிடம் ஆலோசனை கலந்து ஒப்புதல் பெற்றபின்) பங்கிட்டுக் கொடுத்தார்கள்.

அப்போது மக்களில் சிலர் கப்பலில் வந்தவர்களான எங்களை நோக்கி, “உங்களுக்கு முன்பே நாங்கள் ஹிஜ்ரத் செய்துவிட்டோம்” என்று கூறலானார்கள்.

-எங்களுடன் (மதீனாவுக்கு) வந்தவர்களில் ஒருவரான (ஜஅஃபர் அவர்களின் மனைவி) அஸ்மா பின்த்தி உமைஸ் (ரலி), அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் மனைவி ஹஃப்ஸா பின்த்தி உமர் (ரலி) அவர்களைச் சந்திப்பதற்காகச் சென்றார்கள். நஜாஷீ மன்னரை நோக்கி (அபிஸீனியாவிற்கு) ஹிஜ்ரத் செய்தவர்களில் அஸ்மாவும் ஒருவராவார்.

ஹஃப்ஸா (ரலி) அவர்களுக்கு அருகில் அஸ்மா (ரலி) இருந்தபோது, அங்கு உமர் (ரலி) வந்தார்கள். உமர் (ரலி) அஸ்மாவைக் கண்டபோது “இவர் யார்?” என்று (தம் மகள்) ஹஃப்ஸாவிடம் கேட்டார்கள். “இவர் அஸ்மா பின்த்தி உமைஸ்” என்று ஹஃப்ஸா பதிலளித்தார்கள்.

உமர் (ரலி), “இவர் அபிஸீனிய(ஹிஜ்ரத் கார)ரா? இவர் கடல் மார்க்கமாக (மதீனா) வந்தவரா?” என்று கேட்டார்கள். அதற்கு அஸ்மா (ரலி) “ஆம்” என்று பதிலளித்தார்கள்.

அப்போது உமர் (ரலி), “உங்களுக்கு முன்பே நாங்கள் (மதீனாவுக்கு) ஹிஜ்ரத் செய்து வந்துவிட்டோம். ஆகவே, உங்களைவிட நாங்களே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு மிகவும் உரியவர்கள் (நெருக்கமானவர்கள்)” என்று கூறினார்கள்.

இதைக் கேட்டு அஸ்மா (ரலி) கோபப்பட்டு, ஏதோ சொல்லிவிட்டுப் பின்வருமாறு கூறினார்கள்: “உமரே! நீங்கள் தவறாகச் சொல்கின்றீர்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! (உண்மை, நீங்கள் கூறியதைப் போன்று) இல்லை. நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (அவர்களுக்கு அருகிலேயே) இருந்தீர்கள். உங்களில் பசித்தவருக்கு அவர்கள் உணவளித்தார்கள். உங்களில் அறியாதவருக்கு அவர்கள் அறிவூட்டினார்கள். (உடல் மற்றும் அறிவுரீதியாக அவர்களிடமிருந்து நீங்கள் உதவி பெற்றுவந்தீர்கள்).

நாங்களோ உறவிலும் மார்க்கத்திலும் வெகு தொலைவிலிருக்கும் அபிஸீனிய நாட்டில் / அந்தப் பகுதியில் இருந்தோம். அல்லாஹ்வுக்காகவும் அவனுடைய தூதருக்காகவுமே இவ்வாறு செய்தோம். அல்லாஹ்வின் மீதாணையாக! நீங்கள் சொன்னதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தெரிவிக்காமல் நான் எதையும் உண்ணவோ பருகவோமாட்டேன். நாங்கள் துன்புறுத்தப்பட்டோம்; அச்சுறுத்தப்பட்டோம்.

நான் இதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கூறி அவர்களிடம் (நியாயம்) கேட்கப் போகிறேன். அல்லாஹ்வின் மீதாணையாக! நான் பொய் சொல்லமாட்டேன். திரித்துப் பேசமாட்டேன்; நீங்கள் சொன்னதைவிடக் கூட்டிச் சொல்லவுமாட்டேன்” என்றார்.

பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (அங்கு) வந்தபோது, அஸ்மா பின்த்தி உமைஸ் (ரலி), “அல்லாஹ்வின் தூதரே! உமர் (ரலி) இப்படி … இப்படிச்… சொன்னார்கள்” என்று கூறினார்கள். அப்போது அல்லாஹ்வின்  தூதர் (ஸல்), “அவர், உங்களைவிட எனக்கு உரியவர் அல்லர். அவருக்கும் அவருடைய சகாக்களுக்கும் ஒரேயொரு ஹிஜ்ரத்(செய்த சிறப்பு)தான் உண்டு. (அபிஸீனியாவிலிருந்து) கப்பலில் வந்தவர்களே! உங்களுக்கு (அபிஸீனியாவுக்கு ஒன்றும், மதீனாவுக்கு ஒன்றுமாக) இரண்டு ஹிஜ்ரத் (செய்த சிறப்பு) உண்டு” என்று கூறினார்கள்.

அஸ்மா (ரலி) கூறினார்கள்: அபூமூஸாவும் அவர்களுடைய கப்பல் தோழர்களும் கூட்டம் கூட்டமாக என்னிடம் வந்து, இந்த ஹதீஸ் குறித்துக் கேட்பார்கள். அவர்களைப் பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறிய இந்தப் புகழுரையைவிட இந்த உலகத்தில் வேறெதுவும் அவர்களின் மகிழ்ச்சிக்குரியதாகவோ அவர்களின் மனத்தில் பெருமிதத்துக்குரியதாகவோ இருக்கவில்லை.

என்னிடம் அபூமூஸா (ரலி) இந்த ஹதீஸைத் திரும்பத் திரும்பச் சொல்லுமாறு கேட்டுக்கொண்டேயிருந்தார்கள்.

அறிவிப்பாளர் : அபூமூஸா (ரலி) வழியாக அபூபுர்தா ஆமிர் பின் அபீமூஸா (ரஹ்)

அத்தியாயம்: 44, பாடம்: 40, ஹதீஸ் எண்: 4540

حَدَّثَنِي عَبَّاسُ بْنُ عَبْدِ الْعَظِيمِ الْعَنْبَرِيُّ، وَأَحْمَدُ بْنُ جَعْفَرٍ الْمَعْقِرِيُّ، قَالاَ حَدَّثَنَا النَّضْرُ، – وَهُوَ ابْنُ مُحَمَّدٍ الْيَمَامِيُّ – حَدَّثَنَا عِكْرِمَةُ، حَدَّثَنَا أَبُو زُمَيْلٍ، حَدَّثَنِي ابْنُ عَبَّاسٍ قَالَ :‏

كَانَ الْمُسْلِمُونَ لاَ يَنْظُرُونَ إِلَى أَبِي سُفْيَانَ وَلاَ يُقَاعِدُونَهُ فَقَالَ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم يَا نَبِيَّ اللَّهِ ثَلاَثٌ أَعْطِنِيهِنَّ قَالَ ‏”‏ نَعَمْ ‏”‏ ‏.‏ قَالَ عِنْدِي أَحْسَنُ الْعَرَبِ وَأَجْمَلُهُ أُمُّ حَبِيبَةَ بِنْتُ أَبِي سُفْيَانَ أُزَوِّجُكَهَا قَالَ ‏”‏ نَعَمْ ‏”‏ ‏.‏ قَالَ وَمُعَاوِيَةُ تَجْعَلُهُ كَاتِبًا بَيْنَ يَدَيْكَ ‏.‏ قَالَ ‏”‏ نَعَمْ ‏”‏ ‏.‏ قَالَ وَتُؤَمِّرُنِي حَتَّى أُقَاتِلَ الْكُفَّارَ كَمَا كُنْتُ أُقَاتِلُ الْمُسْلِمِينَ ‏.‏ قَالَ ‏”‏ نَعَمْ ‏”‏ 


قَالَ أَبُو زُمَيْلٍ وَلَوْلاَ أَنَّهُ طَلَبَ ذَلِكَ مِنَ النَّبِيِّ صلى الله عليه وسلم مَا أَعْطَاهُ ذَلِكَ لأَنَّهُ لَمْ يَكُنْ يُسْئَلُ شَيْئًا إِلاَّ قَالَ ‏”‏ نَعَمْ ‏”‏

அபூஸுஃப்யான் (ரலி) (இஸ்லாத்தை ஏற்ற பிறகும்) அவரை முஸ்லிம்கள் ஏறெடுத்துப் பார்க்காமலும் தம் அவைகளில் அனுமதிக்காமலும் இருந்து வந்தனர்.

நபி (ஸல்) அவர்களிடம் அபூஸுஃப்யன், “அல்லாஹ்வின் தூதரே! மூன்று கோரிக்கைகளை எனக்கு(நிறைவேற்றி)த் தாருங்கள்” என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) “ஆகட்டும்!” என்றார்கள். அபூஸுஃப்யான் (ரலி), “என்னிடம் அரபியரிலேயே அழகு மிகுந்த, இலட்சணமான ஒரு பெண் இருக்கின்றார். அவர்தான் (என் மகள்) உம்மு ஹபீபா பின்த்தி அபீஸுஃப்யான். அவரை உங்களுக்கு நான் மணமுடித்துத் தருவேன்” என்றார்கள். அதற்கு நபி (ஸல்) “ஆகட்டும்!” என்றார்கள்.

அடுத்து, “நீங்கள் (என் மகன்) முஆவியாவை உங்களுடைய எழுத்தராக ஆக்கிக் கொள்ளுங்கள்” என்றார்கள். அதற்கும் நபி (ஸல்), “ஆகட்டும்!” என்றார்கள். அடுத்து “படைப் பிரிவொன்றுக்கு என்னைத் தலைவராக்குங்கள். முஸ்லிம்களை எதிர்த்து நான் போரிட்டுக் கொண்டிருந்ததைப் போன்று இறைமறுப்பாளர்களை எதிர்த்து நான் போரிட வேண்டும் (அவற்றின் மூலம் முஸ்லிம்களுக்கு என்மீதுள்ள வெறுப்பை நான் அகற்றிக்கொள்வேன்)” என்றார்கள். அதற்கும் நபி (ஸல்) “ஆகட்டும்!” என்றார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி)


குறிப்புகள் :

அபூஸுஃப்யான் (ரலி) இவற்றைக் கோராமலிருந்தால், அவற்றை நபி (ஸல்) அவருக்குக் கொடுத்திருக்கமாட்டார்கள். ஏனெனில், நபி (ஸல்) தம்மிடம் எதைக் கேட்டாலும் “ஆகட்டும்!” என்றே கூறுவார்கள் என்று இதன் அறிவிப்பாளரான அபூஸுமைல் ஸிமாக் பின் அல்வலீத் (ரஹ்) கூறுகின்றார்.

ஸஹீஹ் முஸ்லிமின் விரிவுரையாளர் இமாம் முஹம்மது ஃபுஆத் அப்துல் பாக்கீ (ரஹ்) கூறுகின்றார் :

“சிக்கலான ஹதீஸ்களுள் இந்த ஹதீஸ் பிரபலமான ஒன்று. சிக்கலுக்குக் காரணம் அபூஸுஃப்யானின் கூற்று.

அபூஸுஃப்யான் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டது ஹிஜ்ரீ எட்டாம் ஆண்டில் நிகழ்ந்த மக்கா வெற்றியின்போது என்பதில் எவருக்கும் வேறுபட்ட கருத்து இல்லை. ஆனால், ஏறத்தாழ இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே ஹிஜ்ரீ 6(அ)7இல் அல்லாஹ்வின் தூதர் (ஸல்), அன்னை உம்மு ஹபீபாவை  மணம் புரிந்திருந்தார்கள். அந்த மண உடன்படிக்கை நிகழ்ந்தேறியது அன்னை உம்மு ஹபீபா, ஹபஷாவில் இருந்தபோது என்றும் ஹபஷாவிலிருந்து மதீனாவுக்கு வந்த பின்னர் என்றும் இரு வேறு கருத்துகள் சொல்லப்படுகின்றன.

அத்தியாயம்: 44, பாடம்: 39, ஹதீஸ் எண்: 4539

حَدَّثَنَا أَبُو عَامِرٍ الأَشْعَرِيُّ، وَأَبُو كُرَيْبٍ جَمِيعًا عَنْ أَبِي أُسَامَةَ، قَالَ أَبُو عَامِرٍ حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، حَدَّثَنِي بُرَيْدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي بُرْدَةَ، عَنْ جَدِّهِ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِي مُوسَى قَالَ:‏

قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ “‏ إِنَّ الأَشْعَرِيِّينَ إِذَا أَرْمَلُوا فِي الْغَزْوِ أَوْ قَلَّ طَعَامُ عِيَالِهِمْ بِالْمَدِينَةِ جَمَعُوا مَا كَانَ عِنْدَهُمْ فِي ثَوْبٍ وَاحِدٍ ثُمَّ اقْتَسَمُوهُ بَيْنَهُمْ فِي إِنَاءٍ وَاحِدٍ بِالسَّوِيَّةِ فَهُمْ مِنِّي وَأَنَا مِنْهُمْ ‏”‏

“அறப்போரின்போது அஷ்அரீ குலத்தாரின் பயண உணவு (இருப்புக்) குறைந்துவிட்டால், அல்லது மதீனாவில் தம் மனைவி, மக்களின் உணவு (இருப்புக்) குறைந்துபோய்விட்டால், தம்மிடம் (எஞ்சி) இருப்பதை ஒரு துணியில் சேகரித்து, பிறகு ஒரே பாத்திரத்தின் மூலம் சமமாக அதைத் தமக்கிடையே  பங்கிட்டுக்கொள்வார்கள். அவர்கள் என்னைச் சேர்ந்தவர்கள்; நான் அவர்களைச் சேர்ந்தவன்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூமூஸா அல்அஷ்அரீ (ரலி)

அத்தியாயம்: 44, பாடம்: 39, ஹதீஸ் எண்: 4538

حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، مُحَمَّدُ بْنُ الْعَلاَءِ حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، حَدَّثَنَا بُرَيْدٌ، عَنْ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِي مُوسَى قَالَ :‏

قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ “‏ إِنِّي لأَعْرِفُ أَصْوَاتَ رُفْقَةِ الأَشْعَرِيِّينَ بِالْقُرْآنِ حِينَ يَدْخُلُونَ بِاللَّيْلِ وَأَعْرِفُ مَنَازِلَهُمْ مِنْ أَصْوَاتِهِمْ بِالْقُرْآنِ بِاللَّيْلِ وَإِنْ كُنْتُ لَمْ أَرَ مَنَازِلَهُمْ حِينَ نَزَلُوا بِالنَّهَارِ وَمِنْهُمْ حَكِيمٌ إِذَا لَقِيَ الْخَيْلَ – أَوْ قَالَ الْعَدُوَّ – قَالَ لَهُمْ إِنَّ أَصْحَابِي يَأْمُرُونَكُمْ أَنْ تَنْظُرُوهُمْ ‏”‏

“அஷ்அரீ’ குலத்தைச் சேர்ந்த என் நண்பர்கள் (தம் பணிகளை முடித்துக்கொண்டு) இரவில் (இருப்பிடங்களில்) நுழையும்போது, அவர்கள் குர்ஆன் ஓதும் ஓசையை நான் அறிவேன். பகல் நேரங்களில் அவர்கள் தங்கியிருக்கும் இடங்களை நான் பார்க்காவிட்டாலும் இரவில் அவர்கள் குர்ஆன் ஓதும் ஓசையைக் கேட்டு, அவர்கள் தங்கியிருக்கும் இடங்களை நான் அடையாளம் கண்டுகொள்கின்றேன்.

அவர்களில் விவேகம் மிக்க ஒருவர் இருக்கின்றார். அவர் குதிரைப் படையினரை / எதிரிகளைச் சந்தித்தால், அவர்களைப் பார்த்து (வெருண்டோடாமல்) ‘என் தோழர்கள், அவர்களுக்காகக் காத்திருக்கும்படி உங்களுக்கு உத்தரவிடுகின்றனர்’ என்று கூறுவார்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூமூஸா (ரலி)

அத்தியாயம்: 44, பாடம்: 38, ஹதீஸ் எண்: 4537

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ بَرَّادٍ أَبُو عَامِرٍ الأَشْعَرِيُّ، وَأَبُو كُرَيْبٍ مُحَمَّدُ بْنُ الْعَلاَءِ – وَاللَّفْظُ لأَبِي عَامِرٍ – قَالاَ حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ بُرَيْدٍ، عَنْ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِيهِ قَالَ :‏

لَمَّا فَرَغَ النَّبِيُّ صلى الله عليه وسلم مِنْ حُنَيْنٍ بَعَثَ أَبَا عَامِرٍ عَلَى جَيْشٍ إِلَى أَوْطَاسٍ فَلَقِيَ دُرَيْدَ بْنَ الصِّمَّةِ فَقُتِلَ دُرَيْدٌ وَهَزَمَ اللَّهُ أَصْحَابَهُ فَقَالَ أَبُو مُوسَى وَبَعَثَنِي مَعَ أَبِي عَامِرٍ – قَالَ – فَرُمِيَ أَبُو عَامِرٍ فِي رُكْبَتِهِ رَمَاهُ رَجُلٌ مِنْ بَنِي جُشَمٍ بِسَهْمٍ فَأَثْبَتَهُ فِي رُكْبَتِهِ فَانْتَهَيْتُ إِلَيْهِ فَقُلْتُ يَا عَمِّ مَنْ رَمَاكَ فَأَشَارَ أَبُو عَامِرٍ إِلَى أَبِي مُوسَى فَقَالَ إِنَّ ذَاكَ قَاتِلِي تَرَاهُ ذَلِكَ الَّذِي رَمَانِي ‏.‏ قَالَ أَبُو مُوسَى فَقَصَدْتُ لَهُ فَاعْتَمَدْتُهُ فَلَحِقْتُهُ فَلَمَّا رَآنِي وَلَّى عَنِّي ذَاهِبًا فَاتَّبَعْتُهُ وَجَعَلْتُ أَقُولُ لَهُ أَلاَ تَسْتَحْيِي أَلَسْتَ عَرَبِيًّا أَلاَ تَثْبُتُ فَكَفَّ فَالْتَقَيْتُ أَنَا وَهُوَ فَاخْتَلَفْنَا أَنَا وَهُوَ ضَرْبَتَيْنِ فَضَرَبْتُهُ بِالسَّيْفِ فَقَتَلْتُهُ ثُمَّ رَجَعْتُ إِلَى أَبِي عَامِرٍ فَقُلْتُ إِنَّ اللَّهَ قَدْ قَتَلَ صَاحِبَكَ ‏.‏ قَالَ فَانْزِعْ هَذَا السَّهْمَ فَنَزَعْتُهُ فَنَزَا مِنْهُ الْمَاءُ فَقَالَ يَا ابْنَ أَخِي انْطَلِقْ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَأَقْرِئْهُ مِنِّي السَّلاَمَ وَقُلْ لَهُ يَقُولُ لَكَ أَبُو عَامِرٍ اسْتَغْفِرْ لِي ‏.‏ قَالَ وَاسْتَعْمَلَنِي أَبُو عَامِرٍ عَلَى النَّاسِ وَمَكَثَ يَسِيرًا ثُمَّ إِنَّهُ مَاتَ فَلَمَّا رَجَعْتُ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم دَخَلْتُ عَلَيْهِ وَهُوَ فِي بَيْتٍ عَلَى سَرِيرٍ مُرْمَلٍ وَعَلَيْهِ فِرَاشٌ وَقَدْ أَثَّرَ رِمَالُ السَّرِيرِ بِظَهْرِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَجَنْبَيْهِ فَأَخْبَرْتُهُ بِخَبَرِنَا وَخَبَرِ أَبِي عَامِرٍ وَقُلْتُ لَهُ قَالَ قُلْ لَهُ يَسْتَغْفِرْ لِي ‏.‏ فَدَعَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِمَاءٍ فَتَوَضَّأَ مِنْهُ ثُمَّ رَفَعَ يَدَيْهِ ثُمَّ قَالَ ‏”‏ اللَّهُمَّ اغْفِرْ لِعُبَيْدٍ أَبِي عَامِرٍ ‏”‏ ‏.‏ حَتَّى رَأَيْتُ بَيَاضَ إِبْطَيْهِ ثُمَّ قَالَ ‏”‏ اللَّهُمَّ اجْعَلْهُ يَوْمَ الْقِيَامَةِ فَوْقَ كَثِيرٍ مِنْ خَلْقِكَ أَوْ مِنَ النَّاسِ ‏”‏ ‏.‏ فَقُلْتُ وَلِي يَا رَسُولَ اللَّهِ فَاسْتَغْفِرْ ‏.‏ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏”‏ اللَّهُمَّ اغْفِرْ لِعَبْدِ اللَّهِ بْنِ قَيْسٍ ذَنْبَهُ وَأَدْخِلْهُ يَوْمَ الْقِيَامَةِ مُدْخَلاً كَرِيمًا ‏”‏ ‏.‏ قَالَ أَبُو بُرْدَةَ إِحْدَاهُمَا لأَبِي عَامِرٍ وَالأُخْرَى لأَبِي مُوسَى ‏

ஹுனைன் போர் முடிந்த பின்னர் நபி (ஸல்), அபூஆமிர் (ரலி) அவர்களின் தலைமையில் ‘அவ்தாஸ்’ பள்ளத்தாக்கிற்கு ஒரு படைப் பிரிவை அனுப்பினார்கள். அப்போது அபூஆமிர் (ரலி) (கவிஞன்) ‘துரைத் பின் அஸ்ஸிம்மா’வை(ப் போரில்) எதிர்கொண்டார்கள்.

துரைத் (போரில்) கொல்லப்பட்டான்; அவனுடைய தோழர்களை அல்லாஹ் தோற்கடித்தான். அபூஆமிர் அவர்களுடன் என்னையும் நபி (ஸல்) (அந்தப் போருக்கு) அனுப்பியிருந்தார்கள். அப்போரின்போது அபூஆமிர் அவர்களின் முழங்கால்மீது  அம்பு (வந்து) பாய்ந்தது. ‘பனூ ஜுஷம்’ குலத்தைச் சேர்ந்தவன் அந்த அம்பை அவர்களது முழங்காலில் எய்தினான்.

உடனே நான் அபூஆமிர் அவர்களுக்கு அருகில் சென்று, “என் தந்தையின் சகோதரரே! உங்கள்மீது அம்பெய்தவன் யார்?” என்று கேட்டேன். “அதோ அங்கே தெரிகின்றானே அவன்தான் என்மீது அம்பெய்தவன்” என்று எனக்குச் சைகை செய்து காட்டினார்கள். நான் அவனைக் குறி வைத்து நேராக அவனை நோக்கிச் சென்று அவனை அடைந்தேன். என்னைக் கண்டதும் அவன் புறமுதுகிட்டு ஓடலானான். “புறமுதுகிட்டு ஓடுகிறாயே உனக்கு வெட்கமில்லையா? நீ ஓர் அரபியன் இல்லையா? நீ நிற்கமாட்டாயா?” என்று அவனிடம் கேட்டுக்கொண்டே அவனைப் பின்தொடர்ந்தேன். உடனே அவன் (ஓடுவதை) நிறுத்திக்கொண்டான்.

பிறகு நானும் அவனும் நேருக்குநேர் சந்தித்து, வாளால் மாறி மாறித் தாக்கிக்கொண்டோம். அவனை நான் வாளால் வெட்டிக் கொன்றேன். பிறகு அபூஆமிர் அவர்களிடம் திரும்பி வந்து, “உங்களைக் கொல்ல முயன்றவனை அல்லாஹ் கொன்றொழித்துவிட்டான்” என்று சொன்னேன். பிறகு “(எனது முழங்காலில் தைத்திருக்கும்) இந்த அம்பைப் பிடுங்கி எடுங்கள்” என்று அபூஆமிர் (ரலி) கூற, உடனே நான் அதைப் பிடுங்கினேன். அதிலிருந்து நீர் கொட்டியது.

அப்போது அபூஆமிர் அவர்கள், “என் சகோதரர் மகனே! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று அவர்களுக்கு என் ஸலாம் கூறி, அபூஆமிர் தமக்காகப் பாவமன்னிப்புக் கோரும்படி கூறியதாகச் சொல்வீராக!” என்றார்கள்.

பிறகு அபூஆமிர் (ரலி) என்னை மக்களுக்குத் தளபதியாக நியமித்துவிட்டுச் சிறிது நேரத்திற்குப்பின் இறந்துவிட்டார்கள்.

நான் (அங்கிருந்து) திரும்பி நபி (ஸல்) அவர்களிடம் வந்தேன். அப்போது அவர்கள் ஒரு வீட்டில் (பேரீச்ச நாரினால் வேயப்பட்ட) கயிற்றுக் கட்டிலில் படுத்திருந்தார்கள். அதன் மீது விரிப்பு ஒன்று இருந்தது. எனினும், கட்டிலின் கயிறு நபி (ஸல்) அவர்களின் முதுகிலும் விலாப் புறங்களிலும் அடையாளம் பதிந்திருந்தது.

அப்போது அவர்களிடம் எங்கள் (படையினர் பற்றிய) செய்தியையும் அபூஆமிர் (ரலி) அவர்களது செய்தியையும் கூறி, தமக்காகப் பாவமன்னிப்புக் கோரும்படி அபூஆமிர் வேண்டியது பற்றியும் கூறினேன்.

உடனே நபி (ஸல்) நீர் கொண்டுவரும்படி கூறி, அதில் உளூச் செய்தார்கள். பிறகு தம் அக்குள்களின் வெண்மையை நான் பார்க்குமளவுக்குத் தம் இரு கைகளையும் உயர்த்தி, “இறைவா! அபூஆமிர் உபைதுக்கு நீ மன்னிப்பு அளிப்பாயாக! மறுமை நாளில் உன் படைப்பினங்களில் / மனிதர்களில் பலரையும்விட (தகுதியில்) உயர்ந்தவராக அவரை ஆக்குவாயாக!” என்று பிரார்த்தித்தார்கள்.

உடனே நான், “எனக்காகவும் பாவமன்னிப்புக் கோருங்கள், அல்லாஹ்வின் தூதரே!” என்று கூறினேன். அதற்கு அவர்கள், “இறைவா! (அபூமூஸா) அப்துல்லாஹ் பின் கைஸின் பாவத்தை மன்னித்து, மறுமை நாளில் கண்ணியமான இருப்பிடத்திற்கு அவரை அனுப்புவாயாக!” என்று பிரார்த்தித்தார்கள்.

அறிவிப்பாளர் : அபூமூஸா (ரலி)


குறிப்பு :

இதன் அறிவிப்பாளர்களுள் ஒருவரான அபூபுர்தா (ரஹ்) கூறுகின்றார்: (நபி (ஸல்) செய்த) இரு பிரார்த்தனைகளில் முந்தியது அபூஆமிர் (ரலி) அவர்களுக்கும் இரண்டாவது (என் தந்தை) அபூமூஸா (ரலி) அவர்களுக்கும் உரியதாகும்.

அத்தியாயம்: 44, பாடம்: 38, ஹதீஸ் எண்: 4536

حَدَّثَنَا أَبُو عَامِرٍ الأَشْعَرِيُّ، وَأَبُو كُرَيْبٍ جَمِيعًا عَنْ أَبِي أُسَامَةَ، قَالَ أَبُو عَامِرٍ حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، حَدَّثَنَا بُرَيْدٌ، عَنْ جَدِّهِ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِي مُوسَى قَالَ :‏

كُنْتُ عِنْدَ النَّبِيِّ صلى الله عليه وسلم وَهُوَ نَازِلٌ بِالْجِعْرَانَةِ بَيْنَ مَكَّةَ وَالْمَدِينَةِ وَمَعَهُ بِلاَلٌ فَأَتَى رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم رَجُلٌ أَعْرَابِيٌّ فَقَالَ أَلاَ تُنْجِزُ لِي يَا مُحَمَّدُ مَا وَعَدْتَنِي فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏”‏ أَبْشِرْ ‏”‏ ‏.‏ فَقَالَ لَهُ الأَعْرَابِيُّ أَكْثَرْتَ عَلَىَّ مِنْ ‏”‏ أَبْشِرْ ‏”‏ ‏.‏ فَأَقْبَلَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَلَى أَبِي مُوسَى وَبِلاَلٍ كَهَيْئَةِ الْغَضْبَانِ فَقَالَ ‏”‏ إِنَّ هَذَا قَدْ رَدَّ الْبُشْرَى فَاقْبَلاَ أَنْتُمَا ‏”‏ ‏.‏ فَقَالاَ قَبِلْنَا يَا رَسُولَ اللَّهِ ‏.‏ ثُمَّ دَعَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِقَدَحٍ فِيهِ مَاءٌ فَغَسَلَ يَدَيْهِ وَوَجْهَهُ فِيهِ وَمَجَّ فِيهِ ثُمَّ قَالَ ‏”‏ اشْرَبَا مِنْهُ وَأَفْرِغَا عَلَى وُجُوهِكُمَا وَنُحُورِكُمَا وَأَبْشِرَا ‏”‏ ‏.‏ فَأَخَذَا الْقَدَحَ فَفَعَلاَ مَا أَمَرَهُمَا بِهِ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَنَادَتْهُمَا أُمُّ سَلَمَةَ مِنْ وَرَاءِ السِّتْرِ أَفْضِلاَ لأُمِّكُمَا مِمَّا فِي إِنَائِكُمَا ‏.‏ فَأَفْضَلاَ لَهَا مِنْهُ طَائِفَةً

நபி (ஸல்) மக்காவுக்கும் மதீனாவுக்கும் இடையில் ‘ஜிஅரானா’ எனுமிடத்தில் தங்கியிருந்தபோது அவர்களுடன் நானும் இருந்தேன்; அவர்களுடன் பிலால் (ரலி) அவர்களும் இருந்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்களிடம் கிராமவாசியொருவர் வந்து, “முஹம்மதே! நீங்கள் எனக்கு வாக்களித்ததைக் கொடுக்கமாட்டீர்களா?” என்று கேட்டார்.

நபி (ஸல்), “நற்செய்தியைப் பெற்றுக்கொள்!” என்று சொன்னார்கள். அதற்கு அவர் “நற்செய்தியைப் பெற்றுக்கொள் என்று என்னிடம் பலமுறை சொல்லிவிட்டீர்களே!” என்று கேட்டார். உடனே நபி (ஸல்) என்னையும் பிலால் (ரலி) அவர்களையும் நோக்கி கோபத்திலுள்ள ஒருவரைப் போன்று திரும்பி, “இவர் (எனது) நற்செய்தியை ஏற்க மறுத்துவிட்டார். நீங்கள் இருவரும் அதை ஏற்றுக்கொள்ளுங்கள்” என்று சொன்னார்கள்.

நாங்கள் இருவரும் “நாங்கள் ஏற்றுக் கொண்டோம், அல்லாஹ்வின் தூதரே!” என்று சொன்னோம். பிறகு நபி (ஸல்), நீருள்ள ஒரு பாத்திரத்தைக் கொண்டு வரச் சொல்லி, அதில் தம் கைகளையும் முகத்தையும் கழுவி, அந்தப் பாத்திரத்திற்குள் உமிழ்ந்தார்கள். பிறகு “நீங்கள் இருவரும் இதில் சிறிது அருந்திவிட்டு, உங்கள் முகங்களிலும் மார்புகளிலும் ஊற்றிக்கொள்ளுங்கள்; நற்செய்தியைப் பெற்றுக்கொள்ளுங்கள்!” என்று சொன்னார்கள். நாங்கள் அந்தப் பாத்திரத்தை எடுத்து நபியவர்கள் கூறியதைப் போன்றே செய்தோம்.

அப்போது இறைநம்பிக்கையாளர்களின் அன்னை உம்மு ஸலமா (ரலி) திரைக்குப் பின்னாலிருந்து எங்கள் இருவரையும் அழைத்து, “உங்கள் அன்னைக்காகவும் (அதாவது எனக்காகவும்) அதிலிருந்து சிறிது நீரை மீதி வையுங்கள்” என்று சொன்னார்கள். அவ்வாறே நாங்கள் இருவரும் அதில் சிறிது நீரை மீதி வைத்தோம்.

அறிவிப்பாளர் : அபூமூஸா அல்அஷ்அரீ (ரலி)

அத்தியாயம்: 44, பாடம்: 37, ஹதீஸ் எண்: 4535

حَدَّثَنِي هَارُونُ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا حَجَّاجُ بْنُ مُحَمَّدٍ، قَالَ قَالَ ابْنُ جُرَيْجٍ أَخْبَرَنِي أَبُو الزُّبَيْرِ، أَنَّهُ سَمِعَ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ يَقُولُ :‏

أَخْبَرَتْنِي أُمُّ مُبَشِّرٍ أَنَّهَا سَمِعَتِ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ عِنْدَ حَفْصَةَ ‏”‏ لاَ يَدْخُلُ النَّارَ إِنْ شَاءَ اللَّهُ مِنْ أَصْحَابِ الشَّجَرَةِ أَحَدٌ ‏.‏ الَّذِينَ بَايَعُوا تَحْتَهَا ‏”‏ ‏.‏ قَالَتْ بَلَى يَا رَسُولَ اللَّهِ ‏.‏ فَانْتَهَرَهَا فَقَالَتْ حَفْصَةُ ‏{‏ وَإِنْ مِنْكُمْ إِلاَّ وَارِدُهَا‏}‏ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏”‏ قَدْ قَالَ اللَّهُ عَزَّ وَجَلَّ ‏{‏ ثُمَّ نُنَجِّي الَّذِينَ اتَّقَوْا وَنَذَرُ الظَّالِمِينَ فِيهَا جِثِيًّا‏}‏

நபி (ஸல்), (தம் மனைவி) ஹஃப்ஸா (ரலி) அவர்களிடம், “அல்லாஹ் நாடினால் அந்த மரத்தின் கீழ் வாக்குறுதி அளித்தவர்களில் யாரும் நரகத்திற்குள் நுழையமாட்டார்கள்” என்று கூறினார்கள். அதற்கு ஹஃப்ஸா (ரலி), “அல்லாஹ்வின் தூதரே! அப்படியல்ல” என்று கூறினார்கள்.

உடனே நபி (ஸல்), ஹஃப்ஸா (ரலி) அவர்களைக் கண்டித்தார்கள். அப்போது ஹஃப்ஸா (ரலி), “உங்களில் யாரும் அ(ந்த நரகத்)தைக் கடக்காமல் இருக்க முடியாது” எனும் (19:71) வசனத்தை ஓதிக்காட்டினார்கள். அதற்கு நபி (ஸல்), “பின்னர் (நம்மை) அஞ்சி நடந்தோரை நாம் காப்பாற்றுவோம். அநீதி இழைத்தோரை மண்டியிட்டோராக அதிலேயே விட்டுவிடுவோம்” என்றும் (19:72) அல்லாஹ் கூறியுள்ளான் என்றார்கள்.

அறிவிப்பாளர் : உம்மு முபஷ்ஷிர் (ரலி)


குறிப்பு :

அறிவிப்பாளர் உம்மு முபஷ்ஷிர் (ரலி) என்பவர், நபித்தோழர் ஸைத் பின் ஹாரிஸா (ரலி) அவர்களின் மனைவியாவார்.

அத்தியாயம்: 44, பாடம்: 36, ஹதீஸ் எண்: 4534

حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا لَيْثٌ، ح وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رُمْحٍ، أَخْبَرَنَا اللَّيْثُ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ :‏

أَنَّ عَبْدًا لِحَاطِبٍ جَاءَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَشْكُو حَاطِبًا فَقَالَ يَا رَسُولَ اللَّهِ لَيَدْخُلَنَّ حَاطِبٌ النَّارَ ‏.‏ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ “‏ كَذَبْتَ لاَ يَدْخُلُهَا فَإِنَّهُ شَهِدَ بَدْرًا وَالْحُدَيْبِيَةَ ‏”‏ ‏

ஹாத்திப் (ரலி) அவர்களின் அடிமை ஒருவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து (தம் உரிமையாளர்) ஹாத்திபைப் பற்றி முறையிட்டுவிட்டு, “அல்லாஹ்வின் தூதரே! ஹாத்திப் கட்டாயம் நரகத்திற்குத்தான் செல்வார்” என்று கூறினார்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “நீ தவறாகச் சொல்கின்றாய். அவர் (நரகத்திற்குச்) செல்லமாட்டார். ஏனெனில், அவர் பத்ருப் போரிலும் ஹுதைபியாவிலும் கலந்துகொண்டிருக்கின்றார்” என்று சொன்னார்கள்.

அறிவிப்பாளர் : ஜாபிர் (ரலி)