அத்தியாயம்: 4, பாடம்: 11, ஹதீஸ் எண்: 602

حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ سَعِيدٍ ‏ ‏عَنْ ‏ ‏عُبَيْدِ اللَّهِ ‏ ‏قَالَ حَدَّثَنِي ‏ ‏سَعِيدُ بْنُ أَبِي سَعِيدٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏
‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏دَخَلَ الْمَسْجِدَ فَدَخَلَ رَجُلٌ فَصَلَّى ثُمَّ جَاءَ فَسَلَّمَ عَلَى رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَرَدَّ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏السَّلَامَ قَالَ ‏ ‏ارْجِعْ فَصَلِّ فَإِنَّكَ لَمْ تُصَلِّ فَرَجَعَ الرَّجُلُ فَصَلَّى كَمَا كَانَ صَلَّى ثُمَّ جَاءَ إِلَى النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَسَلَّمَ عَلَيْهِ فَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَعَلَيْكَ السَّلَامُ ثُمَّ قَالَ ارْجِعْ فَصَلِّ فَإِنَّكَ لَمْ تُصَلِّ حَتَّى فَعَلَ ذَلِكَ ثَلَاثَ مَرَّاتٍ فَقَالَ الرَّجُلُ وَالَّذِي بَعَثَكَ بِالْحَقِّ مَا أُحْسِنُ غَيْرَ هَذَا عَلِّمْنِي قَالَ إِذَا قُمْتَ إِلَى الصَّلَاةِ فَكَبِّرْ ثُمَّ اقْرَأْ مَا تَيَسَّرَ مَعَكَ مِنْ الْقُرْآنِ ثُمَّ ارْكَعْ حَتَّى تَطْمَئِنَّ رَاكِعًا ثُمَّ ارْفَعْ حَتَّى تَعْتَدِلَ قَائِمًا ثُمَّ اسْجُدْ حَتَّى تَطْمَئِنَّ سَاجِدًا ثُمَّ ارْفَعْ حَتَّى تَطْمَئِنَّ جَالِسًا ثُمَّ افْعَلْ ذَلِكَ فِي صَلَاتِكَ كُلِّهَا ‏
‏حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو أُسَامَةَ ‏ ‏وَعَبْدُ اللَّهِ بْنُ نُمَيْرٍ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏ابْنُ نُمَيْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏عُبَيْدُ اللَّهِ ‏ ‏عَنْ ‏ ‏سَعِيدِ بْنِ أَبِي سَعِيدٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏أَنَّ رَجُلًا دَخَلَ الْمَسْجِدَ فَصَلَّى وَرَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فِي نَاحِيَةٍ وَسَاقَا الْحَدِيثَ بِمِثْلِ هَذِهِ الْقِصَّةِ وَزَادَا فِيهِ إِذَا قُمْتَ إِلَى الصَّلَاةِ ‏ ‏فَأَسْبِغْ ‏ ‏الْوُضُوءَ ثُمَّ اسْتَقْبِلْ الْقِبْلَةَ فَكَبِّرْ ‏

நபி (ஸல்) அவர்கள் (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலுக்கு வந்தார்கள். அப்போது ஒருவர் பள்ளிவாசலுக்கு வந்து (அவசர அவசரமாக) தொழலானார். (தொழுது முடித்ததும்) அவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து ஸலாம் சொன்னார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பதில் ஸலாம் சொல்லிவிட்டு, “நீர் திரும்பச் சென்று தொழுவீராக. ஏனெனில், நீர் (முறையாகத்) தொழவில்லை” என்று சொன்னார்கள்.

அவர் திரும்பிப் போய் முன்பு தொழுததைப் போன்றே மீண்டும் தொழுது விட்டு நபி (ஸல்) அவர்களிடம் வந்து ஸலாம் சொன்னார். அப்போதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பதில் ஸலாம் சொல்லி விட்டு, “நீர் (முறையாகத்) தொழவில்லை. எனவே, திரும்பச் சென்று தொழுவீராக” என்று கூறினார்கள். இவ்வாறு மூன்று தடவை நடந்தது. பிறகு அவர், “சத்திய(மார்க்க)த்துடன் தங்களை அனுப்பியவன் மீது ஆணையாக! இதைவிடச் சிறந்த முறையில் எனக்குத் தொழத் தெரியாது. எனவே, எனக்கு (தொழுகை முறையை)க் கற்றுத் தாருங்கள்” என்று கேட்டார்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நீர் தொழுகைக்கு நின்றதும் (‘அல்லாஹு அக்பர்’ என்று) தக்பீர் கூறுவீராக. பிறகு குர்ஆனில் உமக்குத் தெரிந்ததை ஓதிக் கொள்வீராக. பிறகு (குனிந்து) ருகூஉச் செய்வீராக. அதில் (சற்று நேரம்) நிலை கொள்வீராக. பின்னர் தலையை உயர்த்தி நேராக நிற்பீராக. பிறகு சிரவணக்கம் (சஜ்தா) செய்வீராக. அதில் சற்று நேரம் நிலை கொள்வீராக. பின்னர் தலையை உயர்த்தி (சற்று நேரம்) நன்றாக அமர்வீராக. பிறகு இதே (நடை)முறையை உமது தொழுகை முழுவதிலும் கடைப்பிடிப்பீராக” என்று சொன்னார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி).

குறிப்பு: அபூ உஸாமா (ரஹ்), அப்துல்லாஹ் இபுனு நுமைர் (ரஹ்) ஆகியோர் வழி அறிவிப்பில், மேற்காணும் நிகழ்வின்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) பள்ளியின் ஓர் ஓரத்தில் அமர்ந்திருந்தார்கள் என்றும் “நீர் தொழ வேண்டும்போது, உளூச் செய்து கொண்டு, கிப்லாவை முன்னோக்கித் தக்பீர் கூறுவீராக” என்று அவரிடம் கூறியதாகவும் கூடுதலாக இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 4, பாடம்: 11, ஹதீஸ் எண்: 601

َدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏يَزِيدُ يَعْنِي ابْنَ زُرَيْعٍ ‏ ‏عَنْ ‏ ‏حَبِيبٍ الْمُعَلِّمِ ‏ ‏عَنْ ‏ ‏عَطَاءٍ ‏ ‏قَالَ قَالَ ‏ ‏أَبُو هُرَيْرَةَ ‏
‏فِي كُلِّ صَلَاةٍ قِرَاءَةٌ فَمَا أَسْمَعَنَا النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَسْمَعْنَاكُمْ وَمَا أَخْفَى مِنَّا أَخْفَيْنَاهُ مِنْكُمْ وَمَنْ قَرَأَ ‏ ‏بِأُمِّ الْكِتَابِ ‏ ‏فَقَدْ أَجْزَأَتْ عَنْهُ وَمَنْ زَادَ فَهُوَ أَفْضَلُ ‏

“தொழுகையில் ஒவ்வொரு ரக்அத்திலும் குர்ஆன் வசங்களை ஓத வேண்டும். நபி (ஸல்) அவர்கள் எங்களுக்குச் செவியுறுமாறு ஓதிய( ரக்அத்)தில் நாங்களும் உங்களுக்குச் செவியுறும்படி ஓதுகிறோம். அவர்கள் எங்களுக்குச் செவியுறாதவாறு ஓதிய( ரக்அத்)தில் நாங்களும் உங்களுக்குச் செவியுறாத வண்ணம் ஓதுகிறோம். ஒருவர் (தம் தொழுகையில்) குர்ஆனின் அன்னை (எனப்படும் அல்ஃபாத்திஹா) அத்தியாத்தை மட்டும் ஓதுவது அவருக்குப் போதுமானதாகும். அதைவிட அதிகமாக ஓதுவது சிறப்பிற்குரியதாகும்”.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

அத்தியாயம்: 4, பாடம்: 11, ஹதீஸ் எண்: 600

حَدَّثَنَا ‏ ‏عَمْرٌو النَّاقِدُ ‏ ‏وَزُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏وَاللَّفْظُ ‏ ‏لِعَمْرٍو ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏إِسْمَعِيلُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ جُرَيْجٍ ‏ ‏عَنْ ‏ ‏عَطَاءٍ ‏ ‏قَالَ قَالَ ‏ ‏أَبُو هُرَيْرَةَ ‏
‏فِي كُلِّ الصَّلَاةِ يَقْرَأُ فَمَا أَسْمَعَنَا رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَسْمَعْنَاكُمْ وَمَا أَخْفَى مِنَّا أَخْفَيْنَا مِنْكُمْ ‏
‏فَقَالَ لَهُ رَجُلٌ إِنْ لَمْ أَزِدْ عَلَى ‏ ‏أُمِّ الْقُرْآنِ ‏ ‏فَقَالَ إِنْ زِدْتَ عَلَيْهَا فَهُوَ خَيْرٌ وَإِنْ انْتَهَيْتَ إِلَيْهَا أَجْزَأَتْ عَنْكَ ‏

“அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகையின் ஒவ்வொரு ரக்அத்திலும் குர்ஆன் வசனங்களை ஓதுவார்கள். அவர்கள் எங்களுக்குக் கேட்கும்படி ஒலியுயர்த்தி ஓதிய(ரக்அத்)தில் நாங்களும் உங்களுக்குக் கேட்கும்படி ஒலியுயர்த்தி ஓதுகிறோம். நாங்கள் செவியுறவியலா வண்ணம் அவர்கள் ஒலிதாழ்த்தி ஓதிய(ரக்அத்)தில் நாங்களும் உங்களுக்குச் செவியுறவியலா வண்ணம் அமைதியாக ஓதுகிறோம்” என்று அபூஹுரைரா (ரலி) கூறினார்கள்.

அப்போது ஒருவர், “குர்ஆனின் அன்னை (எனப்படும் அல்ஃபாத்திஹா) அத்தியாத்தைவிடக் கூடுதலாக (எதையும்) நான் ஓதாவிட்டால்?” என்று வினவினார். அதற்கு அபூஹுரைரா (ரலி), “அதைவிட அதிகமாக ஓதினால் அது உமக்குச் சிறந்ததாகும். அத்துடன் முடித்துக் கொண்டால், அது உமக்குப் போதுமானதாகி விடும்” என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி) வழியாக அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்)

அத்தியாயம்: 4, பாடம்: 11, ஹதீஸ் எண்: 599

حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو أُسَامَةَ ‏ ‏عَنْ ‏ ‏حَبِيبِ بْنِ الشَّهِيدِ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏عَطَاءً ‏ ‏يُحَدِّثُ عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏
‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏لَا صَلَاةَ إِلَّا بِقِرَاءَةٍ ‏
‏قَالَ ‏ ‏أَبُو هُرَيْرَةَ ‏ ‏فَمَا أَعْلَنَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَعْلَنَّاهُ لَكُمْ وَمَا أَخْفَاهُ أَخْفَيْنَاهُ لَكُمْ ‏

“(குர்ஆனின் வசனங்களை) ஓதாமல் தொழுகை என்பதில்லை” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். மேலும், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒலியுயர்த்தி ஓதிய(ரக்அத்)தில் நாம் உங்களுக்கு ஒலியுயர்த்தியும் அவர்கள் ஒலிதாழ்த்தி ஓதிய(ரக்அத்)தில் நாமும் உங்களுக்கு ஒலிதாழ்த்தி ஓதுகிறோம்” என்று அபூஹுரைரா (ரலி) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

அத்தியாயம்: 4, பாடம்: 11, ஹதீஸ் எண்: 598

و حَدَّثَنَاه ‏ ‏إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ الْحَنْظَلِيُّ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ ‏ ‏عَنْ ‏ ‏الْعَلَاءِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏
‏عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ مَنْ صَلَّى صَلَاةً لَمْ يَقْرَأْ فِيهَا ‏ ‏بِأُمِّ الْقُرْآنِ ‏ ‏فَهِيَ ‏ ‏خِدَاجٌ ‏ ‏ثَلَاثًا غَيْرُ تَمَامٍ فَقِيلَ ‏ ‏لِأَبِي هُرَيْرَةَ ‏ ‏إِنَّا نَكُونُ وَرَاءَ الْإِمَامِ فَقَالَ اقْرَأْ بِهَا فِي نَفْسِكَ فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَقُولُ قَالَ اللَّهُ تَعَالَى ‏ ‏قَسَمْتُ الصَّلَاةَ بَيْنِي وَبَيْنَ عَبْدِي نِصْفَيْنِ وَلِعَبْدِي مَا سَأَلَ فَإِذَا قَالَ الْعَبْدُ

‏الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ ‏ ‏قَالَ اللَّهُ تَعَالَى حَمِدَنِي عَبْدِي وَإِذَا قَالَ ‏
‏الرَّحْمَنِ الرَّحِيمِ ‏‏قَالَ اللَّهُ تَعَالَى أَثْنَى عَلَيَّ عَبْدِي وَإِذَا قَالَ ‏
‏مَالِكِ يَوْمِ الدِّينِ ‏‏قَالَ مَجَّدَنِي عَبْدِي وَقَالَ مَرَّةً فَوَّضَ إِلَيَّ عَبْدِي فَإِذَا قَالَ ‏
‏إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ ‏‏قَالَ هَذَا بَيْنِي وَبَيْنَ عَبْدِي وَلِعَبْدِي مَا سَأَلَ فَإِذَا قَالَ ‏
‏اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ ‏‏قَالَ هَذَا لِعَبْدِي وَلِعَبْدِي مَا سَأَلَ ‏

‏قَالَ ‏ ‏سُفْيَانُ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏بِهِ ‏ ‏الْعَلَاءُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ يَعْقُوبَ ‏ ‏دَخَلْتُ عَلَيْهِ وَهُوَ مَرِيضٌ فِي بَيْتِهِ فَسَأَلْتُهُ أَنَا عَنْهُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏عَنْ ‏ ‏مَالِكِ بْنِ أَنَسٍ ‏ ‏عَنْ ‏ ‏الْعَلَاءِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ ‏ ‏أَنَّهُ سَمِعَ ‏ ‏أَبَا السَّائِبِ ‏ ‏مَوْلَى ‏ ‏هِشَامِ بْنِ زُهْرَةَ ‏ ‏يَقُولُ سَمِعْتُ ‏ ‏أَبَا هُرَيْرَةَ ‏ ‏يَقُولُا ‏ ‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ رَافِعٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الرَّزَّاقِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ جُرَيْجٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏الْعَلَاءُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ يَعْقُوبَ ‏ ‏أَنَّ ‏ ‏أَبَا السَّائِبِ ‏ ‏مَوْلَى بَنِي ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ هِشَامِ بْنِ زُهْرَةَ ‏ ‏أَخْبَرَهُ أَنَّهُ سَمِعَ ‏ ‏أَبَا هُرَيْرَةَ ‏ ‏يَقُولُا ‏ ‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مَنْ صَلَّى صَلَاةً فَلَمْ يَقْرَأْ فِيهَا ‏ ‏بِأُمِّ الْقُرْآنِ ‏ ‏بِمِثْلِ حَدِيثِ ‏ ‏سُفْيَانَ ‏ ‏وَفِي حَدِيثِهِمَا قَالَ اللَّهُ تَعَالَى قَسَمْتُ الصَّلَاةَ بَيْنِي وَبَيْنَ عَبْدِي نِصْفَيْنِ فَنِصْفُهَا لِي وَنِصْفُهَا لِعَبْدِي ‏ ‏حَدَّثَنِي ‏ ‏أَحْمَدُ بْنُ جَعْفَرٍ الْمَعْقِرِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏النَّضْرُ بْنُ مُحَمَّدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو أُوَيْسٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏الْعَلَاءُ ‏ ‏قَالَ سَمِعْتُ مِنْ ‏ ‏أَبِي ‏ ‏وَمِنْ ‏ ‏أَبِي السَّائِبِ ‏ ‏وَكَانَا جَلِيسَيْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏قَالَا قَالَ ‏ ‏أَبُو هُرَيْرَةَ ‏ ‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مَنْ صَلَّى صَلَاةً لَمْ يَقْرَأْ فِيهَا ‏ ‏بِفَاتِحَةِ الْكِتَابِ ‏ ‏فَهِيَ ‏ ‏خِدَاجٌ ‏ ‏يَقُولُهَا ثَلَاثًا بِمِثْلِ حَدِيثِهِمْ ‏

அபூஹுரைரா (ரலி) அவர்கள், “குர்ஆனின் அன்னை (எனும் சிறப்புடைய அல்ஃபாத்திஹா) அத்தியாத்தை ஓதாமல் தொழுதவரது தொழுகை, குறைபாடு உடையதும் நிறைவு பெறாததுமாகும் என நபி (ஸல்) அவர்கள் மும்முறை கூறினார்கள்” என்று அறிவித்தார்கள். அபூஹுரைரா (ரலி) அவர்களிடம், “நாங்கள் இமாமுக்குப் பின்னால் தொழுது கொண்டிருக்கிறோம் (அப்போதும் ஓத வேண்டுமா?)” என்று கேட்கப்பட்டது. அதற்கு, “அதை உங்களுடைய மனதுக்குள் ஓதிக் கொள்ளுங்கள். ஏனெனில் …”,

“தொழுகை(யில் ஓதப்படும் அல்ஃபாத்திஹா)ப் பிரார்த்தனையை எனக்கும் என் அடியானுக்குமிடையே இரு பகுதிகளாகப் பிரித்துள்ளேன். என் அடியான் கேட்டது அவனுக்குக் கிடைக்கும். அடியான் ‘அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்’ (எல்லாப் புகழும் அனைத்துலகின் அதிபதியான அல்லாஹ்வுக்கே) என்று சொன்னால், மிக்குயர்ந்தோன் அல்லாஹ், ‘என் அடியான் என்னைப் புகழ்ந்து விட்டான்’ என்று கூறுவான். அடியான், ‘அர்ரஹ்மானிர்ரஹீம்’ (அவன் அளவிலா அருளாளன்; நிகரிலா அன்புடையோன்) என்று சொன்னால் மிக்குயர்ந்தோன் அல்லாஹ், ‘என் அடியான் என்னைத் துதித்து விட்டான்’ என்று கூறுவான். அடியான், ‘மாலிக்கி யவ்மித்தீன்’ (தீர்ப்பு நாளின் அதிபதி) என்று சொன்னால், அல்லாஹ், ‘என் அடியான் என்னைக் கண்ணியப்படுத்தி விட்டான் / என்னைச் சார்ந்து விட்டான்’ என்று கூறுவான்.

மேலும், அடியான் ‘இய்யாக்க நஃபுது வ இய்யாக்க நஸ்தஈன்’ (உன்னையே நாங்கள் வணங்குகிறோம். உன்னிடமே நாங்கள் உதவி தேடுகிறோம்) என்று சொன்னால், அல்லாஹ், ‘இது எனக்கும் என் அடியானுக்கும் இடைப்பட்ட சிறப்புத் தொடர்பாகும். என் அடியானுக்கு அவன் கேட்டது கிடைக்கும்’ என்று கூறுவான். அடியான், ‘இஹ்தினஸ் ஸிராத்தல் முஸ்தகீம். ஸிராத்தல்லதீன அன்அம்த்த அலைஹிம், ஃகைரில் மஃக்ளூபி அலைஹிம் வலள் ளால்லீன்’ (எங்களுக்கு நேரான வழியைக் காட்டுவாயாக. அவ்வழி உன்னுடைய அருளைப் பெற்றவர்களின் வழி. உன்னுடைய கோபத்துக்கு ஆளானோர் வழியுமல்ல; வழி தவறியோரின் வழியுமல்ல) என்று சொன்னால், அல்லாஹ் ‘இது என் அடியானுக்கு உரிய(நேர்வழியான)து; என் அடியானுக்கு அவன் கேட்டது கிடைக்கும்’ என்று கூறுவான்” என்று அல்லாஹ் கூறியதாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி) வழியாக அலாஉ பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்).

குறிப்பு : இந்த ஹதீஸ், ஸுஃப்யான் (ரஹ்) வழியாக அறிவிக்கப்படும்போது, “அலாஉ பின் அப்திர் ரஹ்மான் பின் யஃகூப் (ரஹ்) நோயுற்றிருந்தபோது அவர்களைச் சந்திக்க அவர் இல்லத்துக்கு நான் சென்றிருந்தவேளை, இந்த ஹதீஸைப் பற்றி அன்னாரிடம் கேட்டேன். அப்போது, இந்த ஹதீஸை அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்து அபுஸ்ஸாயிப் (ரஹ்) செவியுற்றுத் தமக்கு அறிவித்ததாகக் அலாஉ (ரஹ்) கூறினார்” என்று ஸுஃப்யான் (ரஹ்) கூறிய தகவல் இடம்பெற்றுள்ளது.

இபுனு ஜுரைஜ் (ரஹ்) வழி அறிவிப்பில், “குர்ஆனின் அன்னை (எனும் சிறப்புடைய அல்ஃபாத்திஹா) அத்தியாத்தை ஓதாமல் தொழுதவரது தொழுகை …” எனத் தொடங்குவதோடு ஸுஃப்யான் (ரஹ்) வழி அறிவிப்பை ஒத்தமைந்துள்ளது. இவ்விரு அறிவிப்புகளிலும் “தொழுகை(யில் ஓதப்படும் அல்ஃபாத்திஹா)ப் பிரார்த்தனையை எனக்கும் என் அடியானுக்குமிடையே இரு பகுதிகளாகப் பிரித்துள்ளேன். அவ்விரண்டில் ஒரு பகுதி எனக்கும் மற்றொரு பகுதி என் அடியானுக்கும் உரியதாகும் என்று அல்லாஹ் கூறினான்” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக இடம் பெற்றுள்ளது.

“குர்ஆனின் தோற்றுவாய் (எனும் அல்ஃபாத்திஹா) அத்தியாத்தை ஓதாமல் தொழுதவரது தொழுகை குறைபாடு உடையதாகும் என நபி (ஸல்) அவர்கள் மும்முறை கூறினார்கள்” எனும் அபூஹுரைரா (ரலி) அவர்களின் அறிவிப்பை, அன்னாரின் இரு அணுக்கத் தோழர்களான என் தந்தையும் அபுஸ்ஸாயிப் (ரஹ்) அவர்களும் அறிவிக்க நான் செவியுற்றிருக்கிறேன் என்று அலாஉ பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) தனது அறிவிப்பில் கூறுகிறார்.

அத்தியாயம்: 4, பாடம்: 11, ஹதீஸ் எண்: 597

حَدَّثَنَا ‏ ‏الْحَسَنُ بْنُ عَلِيٍّ الْحُلْوَانِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ سَعْدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏عَنْ ‏ ‏صَالِحٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏أَنَّ ‏ ‏مَحْمُودَ بْنَ الرَّبِيعِ ‏ ‏الَّذِي مَجَّ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فِي وَجْهِهِ مِنْ بِئْرِهِمْ ‏ ‏أَخْبَرَهُ أَنَّ ‏ ‏عُبَادَةَ بْنَ الصَّامِتِ ‏ ‏أَخْبَرَهُ ‏
‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏لَا صَلَاةَ لِمَنْ لَمْ يَقْرَأْ ‏ ‏بِأُمِّ الْقُرْآنِ ‏
‏و حَدَّثَنَاه ‏ ‏إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏وَعَبْدُ بْنُ حُمَيْدٍ ‏ ‏قَالَا أَخْبَرَنَا ‏ ‏عَبْدُ الرَّزَّاقِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏مَعْمَرٌ ‏ ‏عَنْ ‏ ‏الزُّهْرِيِّ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏مِثْلَهُ وَزَادَ فَصَاعِدًا

“குர்ஆனின் அன்னை (எனும் சிறப்புடைய அல்ஃபாத்திஹா) அத்தியாயத்தை ஓதாதவருக்குத் தொழுகையே இல்லை” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி)

குறிப்பு : மஃமர் (ரஹ்) வழி அறிவிப்பில், “அதைத் தொடர்ந்து(வேறேது)ம்” என்று கூடுதலாக இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 4, பாடம்: 11, ஹதீஸ் எண்: 596

‏حَدَّثَنِي ‏ ‏أَبُو الطَّاهِرِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏عَنْ ‏ ‏يُونُسَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏حَرْمَلَةُ بْنُ يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏يُونُسُ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏مَحْمُودُ بْنُ الرَّبِيعِ ‏ ‏عَنْ ‏ ‏عُبَادَةَ بْنِ الصَّامِتِ ‏ ‏قَالَ ‏
‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لَا صَلَاةَ لِمَنْ لَمْ يَقْتَرِئْ ‏ ‏بِأُمِّ الْقُرْآنِ ‏

“குர்ஆனின் அன்னை (எனும் சிறப்புடைய அல்ஃபாத்திஹா) அத்தியாயத்தை ஓதாதவருக்குத் தொழுகையே இல்லை” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி)

அத்தியாயம்: 4, பாடம்: 11, ஹதீஸ் எண்: 595

حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَعَمْرٌو النَّاقِدُ ‏ ‏وَإِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏سُفْيَانَ ‏ ‏قَالَ ‏ ‏أَبُو بَكْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ ‏ ‏عَنْ ‏ ‏الزُّهْرِيِّ ‏ ‏عَنْ ‏ ‏مَحْمُودِ بْنِ الرَّبِيعِ ‏ ‏عَنْ ‏ ‏عُبَادَةَ بْنِ الصَّامِتِ ‏
‏يَبْلُغُ بِهِ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لَا صَلَاةَ لِمَنْ لَمْ يَقْرَأْ ‏ ‏بِفَاتِحَةِ الْكِتَابِ

“(தொழுகையில்) இறைமறையின் தோற்றுவாய் (அல்ஃபாத்திஹா) ஓதாதவருக்குத் தொழுகையே இல்லை” என்று நபி (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி)