அத்தியாயம்: 5, பாடம்: 20, ஹதீஸ் எண்: 899

‏و حَدَّثَنَا ‏ ‏إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏عَبْدُ الْوَهَّابِ الثَّقَفِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏خَالِدٌ وَهُوَ الْحَذَّاءُ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي قِلَابَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي الْمُهَلَّبِ ‏ ‏عَنْ ‏ ‏عِمْرَانَ بْنِ الْحُصَيْنِ ‏ ‏قَالَ

‏سَلَّمَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فِي ثَلَاثِ رَكَعَاتٍ مِنْ الْعَصْرِ ثُمَّ قَامَ فَدَخَلَ الْحُجْرَةَ فَقَامَ رَجُلٌ بَسِيطُ الْيَدَيْنِ فَقَالَ أَقُصِرَتْ الصَّلَاةُ يَا رَسُولَ اللَّهِ فَخَرَجَ مُغْضَبًا فَصَلَّى الرَّكْعَةَ الَّتِي كَانَ تَرَكَ ثُمَّ سَلَّمَ ثُمَّ سَجَدَ سَجْدَتَيْ السَّهْوِ ثُمَّ سَلَّمَ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (ஓர்) அஸ்ருத் தொழுகையில் மூன்று ரக்அத் முடிந்ததும் ஸலாம் கொடுத்துவிட்டார்கள். பிறகு எழுந்து (பள்ளியை ஒட்டியிருந்த) தமது அறைக்குள் சென்று விட்டார்கள். உடனே நீளமான கைகளை உடைய ஒருவர் (துல்யதைன்) எழுந்து, “தொழுகை குறைக்கப்பட்டுவிட்டதா அல்லாஹ்வின் தூதரே?” என்று கேட்டார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கோபத்தோடு வெளியே வந்தார்கள். விடுபட்ட ரக்அத்தைத் தொழுவித்தார்கள். பிறகு ஸலாம் கொடுத்தார்கள். பிறகு (மறதிக்கான) இரு ஸஜ்தாக்கள் செய்துவிட்டு (மீண்டும்) ஸலாம் கொடுத்தார்கள்.

அறிவிப்பாளர் : இம்ரான் பின் ஹுஸொய்ன் (ரலி)

அத்தியாயம்: 5, பாடம்: 20, ஹதீஸ் எண்: 898

‏و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَزُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عُلَيَّةَ ‏ ‏قَالَ ‏ ‏زُهَيْرٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏إِسْمَعِيلُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏عَنْ ‏ ‏خَالِدٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي قِلَابَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي الْمُهَلَّبِ ‏ ‏عَنْ ‏ ‏عِمْرَانَ بْنِ حُصَيْنٍ ‏

‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏صَلَّى الْعَصْرَ فَسَلَّمَ فِي ثَلَاثِ رَكَعَاتٍ ثُمَّ دَخَلَ مَنْزِلَهُ فَقَامَ إِلَيْهِ رَجُلٌ يُقَالُ لَهُ ‏ ‏الْخِرْبَاقُ ‏ ‏وَكَانَ فِي يَدَيْهِ طُولٌ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ فَذَكَرَ لَهُ صَنِيعَهُ وَخَرَجَ غَضْبَانَ يَجُرُّ رِدَاءَهُ حَتَّى انْتَهَى إِلَى النَّاسِ فَقَالَ أَصَدَقَ هَذَا قَالُوا نَعَمْ ‏ ‏فَصَلَّى رَكْعَةً ثُمَّ سَلَّمَ ثُمَّ سَجَدَ سَجْدَتَيْنِ ثُمَّ سَلَّمَ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (ஓர்) அஸ்ருத் தொழுகையில் மூன்றாவது ரக்அத் முடிந்ததும் ஸலாம் கொடுத்துவிட்டு(ப் பள்ளியை ஒட்டியிருந்த) தமது இல்லத்திற்குள் நுழைந்துவிட்டார்கள். உடனே கிர்பாக் எனும் பெயருடைய, கைகள் நீளமான ஒருவர் (துல்யதைன்) எழுந்து, “அல்லாஹ்வின் தூதரே! …” என்றழைத்து அவர்கள் செய்ததை நினைவூட்டினார். அப்போது கோபத்தோடு தமது மேல்துண்டை தரையில் இழுத்தபடி வெளியேறி வந்து சேர்ந்தார்கள். பிறகு “இவர் சொல்வது உண்மைதானா?” என்று மக்களிடம் கேட்டார்கள். மக்கள் “ஆம்!” என்றனர். உடனே அவர்கள் இன்னொரு ரக்அத் தொழுவித்து ஸலாம் கொடுத்தார்கள். பிறகு (மறதிக்காக) இரு ஸஜ்தாக்கள் செய்து விட்டுப் பிறகு (மீண்டும்) ஸலாம் கொடுத்தார்கள்.

அறிவிப்பாளர் : இம்ரான் பின் ஹுஸொய்ன் (ரலி)

அத்தியாயம்: 5, பாடம்: 20, ஹதீஸ் எண்: 897

‏حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏عَنْ ‏ ‏مَالِكِ بْنِ أَنَسٍ ‏ ‏عَنْ ‏ ‏دَاوُدَ بْنِ الْحُصَيْنِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي سُفْيَانَ ‏ ‏مَوْلَى ‏ ‏ابْنِ أَبِي أَحْمَدَ ‏ ‏أَنَّهُ قَالَ سَمِعْتُ ‏ ‏أَبَا هُرَيْرَةَ ‏ ‏يَقُولُا ‏

‏صَلَّى لَنَا رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏صَلَاةَ الْعَصْرِ فَسَلَّمَ فِي رَكْعَتَيْنِ فَقَامَ ‏ ‏ذُو الْيَدَيْنِ ‏ ‏فَقَالَ أَقُصِرَتْ الصَّلَاةُ يَا رَسُولَ اللَّهِ أَمْ نَسِيتَ فَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏كُلُّ ذَلِكَ لَمْ يَكُنْ فَقَالَ قَدْ كَانَ بَعْضُ ذَلِكَ يَا رَسُولَ اللَّهِ فَأَقْبَلَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏عَلَى النَّاسِ فَقَالَ أَصَدَقَ ‏ ‏ذُو الْيَدَيْنِ ‏ ‏فَقَالُوا نَعَمْ يَا رَسُولَ اللَّهِ فَأَتَمَّ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مَا بَقِيَ مِنْ الصَّلَاةِ ثُمَّ سَجَدَ سَجْدَتَيْنِ وَهُوَ جَالِسٌ بَعْدَ التَّسْلِيمِ ‏

‏و حَدَّثَنِي ‏ ‏حَجَّاجُ بْنُ الشَّاعِرِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏هَارُونُ بْنُ إِسْمَعِيلَ الْخَزَّازُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَلِيٌّ وَهُوَ ابْنُ الْمُبَارَكِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو سَلَمَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو هُرَيْرَةَ ‏ ‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏صَلَّى رَكْعَتَيْنِ مِنْ صَلَاةِ الظُّهْرِ ثُمَّ سَلَّمَ فَأَتَاهُ رَجُلٌ مِنْ ‏ ‏بَنِي سُلَيْمٍ ‏ ‏فَقَالَ يَا رَسُولَ اللَّهِ أَقُصِرَتْ الصَّلَاةُ أَمْ نَسِيتَ وَسَاقَ الْحَدِيثَ ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏إِسْحَقُ بْنُ مَنْصُورٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏عُبَيْدُ اللَّهِ بْنُ مُوسَى ‏ ‏عَنْ ‏ ‏شَيْبَانَ ‏ ‏عَنْ ‏ ‏يَحْيَى ‏ ‏عَنْ ‏ ‏أَبِي سَلَمَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏قَالَ ‏ ‏بَيْنَا أَنَا أُصَلِّي مَعَ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏صَلَاةَ الظُّهْرِ سَلَّمَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مِنْ الرَّكْعَتَيْنِ فَقَامَ رَجُلٌ مِنْ ‏ ‏بَنِي سُلَيْمٍ ‏ ‏وَاقْتَصَّ الْحَدِيثَ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) எங்களுக்கு அஸ்ருத் தொழுகையைத் தொழுவித்தபோது இரண்டு ரக்அத் முடிந்ததும் ஸலாம் கொடுத்து விட்டார்கள். உடனே துல்யதைன் (கிர்பாக் பின் அம்ர் ரலி) என்பார் எழுந்து, “அல்லாஹ்வின் தூதரே! தொழுகை(யின் ரக்அத் ஏதேனும்) குறைக்கப்பட்டுவிட்டதா, அல்லது தாங்கள்தாம் மறந்துவிட்டீர்களா?” என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “இவற்றில் எதுவுமே நடக்கவில்லை” என்று கூறினார்கள். துல்யதைன், “(இல்லை) இதில் ஏதோ ஒன்று நிகழ்ந்தது அல்லாஹ்வின் தூதரே!” என்று கூறினர். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எஞ்சிய ரக்அத்களையும் தொழு(வித்)துவிட்டு அந்த இருப்பிலேயே ஸலாம் கொடுத்தபின் இரு ஸஜ்தாக்கள் செய்தார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

குறிப்பு :

அபூஸலமா (ரலி) வழி அறிவிப்பில், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) லுஹ்ருத் தொழுகையின் இரண்டு ரக்அத் முடிந்ததும் ஸலாம் கொடுத்துவிட்டார்கள். அப்போது பனூஸுலைம் குலத்தைச் சேர்ந்த ஒருவர் (துல்யதைன்) வந்து, ‘அல்லாஹ்வின் தூதரே! தொழுகை(யின் ரக்அத்) குறைக்கப்பட்டு விட்டதா, அல்லது தாங்கள் மறந்துவிட்டீர்களா?’ என்று கேட்டார் …” என்று இடம்பெற்றுள்ளது.

உபைதுல்லாஹ் பின் மன்ஸூர் (ரஹ்) வழி அறிவிப்பில், “நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் லுஹ்ருத் தொழுகை தொழுது கொண்டிருந்தேன். அவர்கள் இரண்டாவது ரக்அத் முடிந்ததும் ஸலாம் கொடுத்துவிட்டார்கள். உடனே பனூஸுலைம் குலத்தைச் சேர்ந்த ஒருவர் (துல்யதைன்) எழுந்தார் …” என்று அபூஹுரைரா (ரலி) அறிவித்ததாகக் குறிப்பிடப் பட்டுள்ளது.

அத்தியாயம்: 5, பாடம்: 20, ஹதீஸ் எண்: 896

‏حَدَّثَنِي ‏ ‏عَمْرٌو النَّاقِدُ ‏ ‏وَزُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عُيَيْنَةَ ‏ ‏قَالَ ‏ ‏عَمْرٌو ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَيُّوبُ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏مُحَمَّدَ بْنَ سِيرِينَ ‏ ‏يَقُولُ سَمِعْتُ ‏ ‏أَبَا هُرَيْرَةَ ‏ ‏يَقُولُا ‏

‏صَلَّى بِنَا رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِحْدَى صَلَاتَيْ ‏ ‏الْعَشِيِّ ‏ ‏إِمَّا الظُّهْرَ وَإِمَّا الْعَصْرَ فَسَلَّمَ فِي رَكْعَتَيْنِ ثُمَّ أَتَى ‏ ‏جِذْعًا ‏ ‏فِي قِبْلَةِ الْمَسْجِدِ فَاسْتَنَدَ إِلَيْهَا مُغْضَبًا وَفِي الْقَوْمِ ‏ ‏أَبُو بَكْرٍ ‏ ‏وَعُمَرَ ‏ ‏فَهَابَا أَنْ يَتَكَلَّمَا وَخَرَجَ سَرَعَانُ النَّاسِ قُصِرَتْ الصَّلَاةُ فَقَامَ ‏ ‏ذُو الْيَدَيْنِ ‏ ‏فَقَالَ يَا رَسُولَ اللَّهِ أَقُصِرَتْ الصَّلَاةُ أَمْ نَسِيتَ فَنَظَرَ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَمِينًا وَشِمَالًا فَقَالَ مَا يَقُولُ ‏ ‏ذُو الْيَدَيْنِ ‏ ‏قَالُوا صَدَقَ لَمْ تُصَلِّ إِلَّا رَكْعَتَيْنِ ‏ ‏فَصَلَّى رَكْعَتَيْنِ وَسَلَّمَ ثُمَّ كَبَّرَ ثُمَّ سَجَدَ ثُمَّ كَبَّرَ فَرَفَعَ ثُمَّ كَبَّرَ وَسَجَدَ ثُمَّ كَبَّرَ وَرَفَعَ

‏قَالَ ‏ ‏وَأُخْبِرْتُ ‏ ‏عَنْ ‏ ‏عِمْرَانَ بْنِ حُصَيْنٍ ‏ ‏أَنَّهُ قَالَ ‏ ‏وَسَلَّمَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو الرَّبِيعِ الزَّهْرَانِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حَمَّادٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَيُّوبُ ‏ ‏عَنْ ‏ ‏مُحَمَّدٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏قَالَ ‏ ‏صَلَّى بِنَا رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِحْدَى صَلَاتَيْ ‏ ‏الْعَشِيِّ ‏ ‏بِمَعْنَى حَدِيثِ ‏ ‏سُفْيَانَ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்கு மதியத் தொழுகைகளில் ஒன்றான லுஹ்ரையோ அஸ்ரையோ தொழுவிக்கும்போது இரண்டு ரக்அத் முடிந்த உடனே ஸலாம் கொடுத்துவிட்டார்கள். பிறகு பள்ளிவாசலின் கிப்லாத் திசையிலிருந்த ஓர் ஈச்சமரக் கட்டைக்கு வந்து அதன்மீது சாய்ந்து கொண்டார்கள். அப்போது அவர்கள் ஏதோ கோபத்தில் இருந்தார்கள். மக்களிடையேயிருந்த அபூபக்ரு (ரலி) அவர்களும் உமர் (ரலி) அவர்களும் நபியவர்களிடம் பேச்சுக்கொடுக்க அஞ்சினர். மக்களில் தொழுதுவிட்டு விரைந்து செல்பவர்கள் தொழுகை குறைக்கப்பட்டுவிட்டது என்று புறப்பட்டுச் சென்றும்விட்டனர்.

இந்நிலையில் துல்யதைன் (கிர்பாக் பின் அம்ரு) என்பவர் எழுந்து, “அல்லாஹ்வின் தூதரே! தொழுகை குறைக்கப்பட்டுவிட்டதா? அல்லது தாங்கள் மறந்துவிட்டீர்களா” என்று கேட்டார். உடனே நபி (ஸல்) வலப்பக்கமும் இடப்பக்கமும் (திரும்பிப்) பார்த்தார்கள். பிறகு, “துல்யதைன் என்ன சொல்கிறார்?” என்று கேட்டார்கள். மக்கள், “(ஆம்) அவர் சொல்வது உண்மைதான். தாங்கள் இரு ரக்அத்கள்தாம் தொழுவித்தீர்கள்” என்று கூறினர். உடனே நபி (ஸல்) மேலும் இரு ரக்அத்கள் தொழுவித்துவிட்டு ஸலாம் கொடுத்தார்கள். பிறகு தக்பீர் சொல்லி மற்றொரு ஸஜ்தாச் செய்தார்கள். பிறகு தக்பீர் சொல்லிவிட்டு எழுந்துவிட்டார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

குறிப்பு :

இம்ரான் பின் ஹுஸொய்ன் (ரலி) வழி அறிவிப்பில், “(இறுதியில்) ஸலாம் கொடுத்தார்கள்” எனக் கூடுதலாக இடம் பெற்றுள்ளது.

அத்தியாயம்: 5, பாடம்: 20, ஹதீஸ் எண்: 895

‏و حَدَّثَنِي ‏ ‏الْقَاسِمُ بْنُ زَكَرِيَّاءَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حُسَيْنُ بْنُ عَلِيٍّ الْجُعْفِيُّ ‏ ‏عَنْ ‏ ‏زَائِدَةَ ‏ ‏عَنْ ‏ ‏سُلَيْمَانَ ‏ ‏عَنْ ‏ ‏إِبْرَاهِيمَ ‏ ‏عَنْ ‏ ‏عَلْقَمَةَ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ ‏ ‏قَالَ

‏صَلَّيْنَا مَعَ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَإِمَّا ‏ ‏زَادَ أَوْ نَقَصَ قَالَ ‏ ‏إِبْرَاهِيمُ ‏ ‏وَايْمُ اللَّهِ مَا جَاءَ ذَاكَ إِلَّا مِنْ قِبَلِي ‏ ‏قَالَ فَقُلْنَا يَا رَسُولَ اللَّهِ أَحَدَثَ فِي الصَّلَاةِ شَيْءٌ فَقَالَ لَا قَالَ فَقُلْنَا لَهُ الَّذِي صَنَعَ فَقَالَ ‏ ‏إِذَا زَادَ الرَّجُلُ أَوْ نَقَصَ فَلْيَسْجُدْ سَجْدَتَيْنِ قَالَ ثُمَّ سَجَدَ سَجْدَتَيْنِ

நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் தொழுதோம். அப்போது அவர்கள் (ரக்அத்தைக்) கூட்டிவிட்டார்கள் அல்லது குறைத்துவிட்டார்கள்.

உடனே நாங்கள், “அல்லாஹ்வின் தூதரே! தொழுகையில் (மாற்றம்) ஏதேனும் வந்துவிட்டதா?” என்று கேட்டோம். அதற்கு அவர்கள், “இல்லை” என்றார்கள். அவர்களிடம் அவர்கள் செய்ததைத் தெரிவித்தோம். அப்போது அவர்கள், “ஒருவர் (தமது தொழுகையில்) கூட்டிவிட்டாலோ குறைத்துவிட்டாலோ அவர் இரு ஸஜ்தாக்கள் செய்துகொள்ளட்டும்” என்று சொல்லிவிட்டுப் பிறகு (தாம் மறந்துவிட்டதற்காக) இரு ஸஜ்தாக்கள் செய்தார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)

குறிப்பு:

“அல்லாஹ்வின் மீதாணையாக! கூட்டினார்களா குறைத்தார்களா என்ற ஐயப்பாடு எனது தரப்பிலிருந்து ஏற்பட்டதேயாகும்” என்று அறிவிப்பாளர்களில் ஒருவரான இப்ராஹீம் பின் ஸுவைத் (ரஹ்) கூறியுள்ளார்.

அத்தியாயம்: 5, பாடம்: 20, ஹதீஸ் எண்: 894

‏و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَأَبُو كُرَيْبٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏أَبُو مُعَاوِيَةَ ‏ ‏قَالَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏ابْنُ نُمَيْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حَفْصٌ ‏ ‏وَأَبُو مُعَاوِيَةَ ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْمَشِ ‏ ‏عَنْ ‏ ‏إِبْرَاهِيمَ ‏ ‏عَنْ ‏ ‏عَلْقَمَةَ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ

‏أَنَّ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏سَجَدَ سَجْدَتَيْ السَّهْوِ بَعْدَ السَّلَامِ وَالْكَلَامِ

நபி (ஸல்) (தொழுது) ஸலாம் கொடுத்து (மக்களிடம்) பேசியபின் மறதிக்கான இரு ஸஜ்தாக்கள் செய்தார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)

அத்தியாயம்: 5, பாடம்: 20, ஹதீஸ் எண்: 893

‏و حَدَّثَنَا ‏ ‏مِنْجَابُ بْنُ الْحَارِثِ التَّمِيمِيُّ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ مُسْهِرٍ ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْمَشِ ‏ ‏عَنْ ‏ ‏إِبْرَاهِيمَ ‏ ‏عَنْ ‏ ‏عَلْقَمَةَ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ ‏ ‏قَالَ ‏

‏صَلَّى رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَزَادَ أَوْ نَقَصَ قَالَ ‏ ‏إِبْرَاهِيمُ ‏ ‏وَالْوَهْمُ مِنِّي ‏ ‏فَقِيلَ يَا رَسُولَ اللَّهِ أَزِيدَ فِي الصَّلَاةِ شَيْءٌ فَقَالَ ‏ ‏إِنَّمَا أَنَا بَشَرٌ مِثْلُكُمْ ‏ ‏أَنْسَى كَمَا تَنْسَوْنَ فَإِذَا نَسِيَ أَحَدُكُمْ فَلْيَسْجُدْ سَجْدَتَيْنِ وَهُوَ جَالِسٌ ثُمَّ تَحَوَّلَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَسَجَدَ سَجْدَتَيْنِ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (ஒருபோது) எங்களுக்குத் தொழுவித்தார்கள். அதில் அவர்கள் கூட்டியோ குறைத்தோ தொழவைத்துவிட்டார்கள். அப்போது, “அல்லாஹ்வின் தூதரே! தொழுகையில் (ரக்அத்) ஏதேனும் அதிகமாக்கப்பட்டுவிட்டதா?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “நானும் உங்களைப் போன்ற ஒரு மனிதன்தான். நீங்கள் மறப்பதைப் போன்று நானும் மறந்துவிடுகிறேன். ஆகவே, உங்களில் ஒருவர் (தொழுகையில்) மறந்துவிட்டால் அதே இருப்பில் இரு ஸஜ்தாக்கள் செய்துகொள்ளட்டும்” என்று கூறிவிட்டுப் பிறகு (கிப்லாவை நோக்கித்) திரும்பி இரு ஸஜ்தாக்கள் செய்தார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)

குறிப்பு :

இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்களில் ஒருவரான இப்ராஹீம் பின் ஸுவைத் (ரஹ்), “(கூட்டினார்களா குறைத்தார்களா என்பதில்) ஐயம் எனக்கு ஏற்பட்டதுதான்” என்று கூறுகின்றார்.

அத்தியாயம்: 5, பாடம்: 20, ஹதீஸ் எண்: 892

‏و حَدَّثَنَاه ‏ ‏عَوْنُ بْنُ سَلَّامٍ الْكُوفِيُّ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏أَبُو بَكْرٍ النَّهْشَلِيُّ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْأَسْوَدِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ ‏ ‏قَالَ ‏

‏صَلَّى بِنَا رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏خَمْسًا فَقُلْنَا يَا رَسُولَ اللَّهِ أَزِيدَ فِي الصَّلَاةِ قَالَ وَمَا ذَاكَ قَالُوا صَلَّيْتَ خَمْسًا قَالَ ‏ ‏إِنَّمَا أَنَا بَشَرٌ مِثْلُكُمْ أَذْكُرُ كَمَا تَذْكُرُونَ ‏ ‏وَأَنْسَى كَمَا تَنْسَوْنَ ثُمَّ سَجَدَ سَجْدَتَيْ السَّهْوِ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) எங்களுக்கு (ஒருமுறை) ஐந்து ரக்அத்கள் தொழுவித்தார்கள். நாங்கள், “அல்லாஹ்வின் தூதரே! தொழுகையில் (ரக்அத்) ஏதேனும் அதிகமாக்கப்பட்டுவிட்டதா?” என்று கேட்டோம். அவர்கள், “என்ன விஷயம்?” என்று கேட்டார்கள். மக்கள், “தாங்கள் ஐந்து ரக்அத் தொழுவித்தீர்கள்” என்று கூறினர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “நானும் உங்களைப் போன்ற ஒரு மனிதன்தான். நீங்கள் நினைப்பதைப் போன்று நானும் நினைக்கிறேன்; நீங்கள் மறப்பதைப் போன்று நானும் மறக்கிறேன்” என்று கூறிவிட்டு பிறகு மறதிக்கான இரு ஸஜ்தாக்கள் செய்தார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)

அத்தியாயம்: 5, பாடம்: 20, ஹதீஸ் எண்: 891

‏و حَدَّثَنَا ‏ ‏ابْنُ نُمَيْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ إِدْرِيسَ ‏ ‏عَنْ ‏ ‏الْحَسَنِ بْنِ عُبَيْدِ اللَّهِ ‏ ‏عَنْ ‏ ‏إِبْرَاهِيمَ ‏ ‏عَنْ ‏ ‏عَلْقَمَةَ ‏ ‏أَنَّهُ صَلَّى بِهِمْ خَمْسًا ‏ ‏ح ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَاللَّفْظُ لَهُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏جَرِيرٌ ‏ ‏عَنْ ‏ ‏الْحَسَنِ بْنِ عُبَيْدِ اللَّهِ ‏ ‏عَنْ ‏ ‏إِبْرَاهِيمَ بْنِ سُوَيْدٍ ‏ ‏قَالَ ‏ ‏صَلَّى بِنَا ‏ ‏عَلْقَمَةُ ‏ ‏الظُّهْرَ خَمْسًا فَلَمَّا سَلَّمَ قَالَ الْقَوْمُ يَا ‏ ‏أَبَا شِبْلٍ ‏ ‏قَدْ صَلَّيْتَ خَمْسًا قَالَ كَلَّا مَا فَعَلْتُ قَالُوا بَلَى قَالَ وَكُنْتُ فِي نَاحِيَةِ الْقَوْمِ وَأَنَا غُلَامٌ فَقُلْتُ بَلَى قَدْ صَلَّيْتَ خَمْسًا قَالَ لِي ‏ ‏وَأَنْتَ أَيْضًا يَا أَعْوَرُ تَقُولُ ذَاكَ قَالَ قُلْتُ نَعَمْ قَالَ ‏ ‏فَانْفَتَلَ ‏ ‏فَسَجَدَ سَجْدَتَيْنِ ثُمَّ سَلَّمَ ‏ ‏ثُمَّ ‏ ‏قَالَ قَالَ ‏ ‏عَبْدُ اللَّهِ ‏

‏صَلَّى بِنَا رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏خَمْسًا فَلَمَّا ‏ ‏انْفَتَلَ ‏ ‏تَوَشْوَشَ ‏ ‏الْقَوْمُ بَيْنَهُمْ فَقَالَ مَا شَأْنُكُمْ قَالُوا يَا رَسُولَ اللَّهِ هَلْ زِيدَ فِي الصَّلَاةِ قَالَ لَا قَالُوا فَإِنَّكَ قَدْ صَلَّيْتَ خَمْسًا ‏ ‏فَانْفَتَلَ ‏ ‏ثُمَّ سَجَدَ سَجْدَتَيْنِ ثُمَّ سَلَّمَ ثُمَّ قَالَ ‏ ‏إِنَّمَا أَنَا بَشَرٌ مِثْلُكُمْ ‏ ‏أَنْسَى كَمَا تَنْسَوْنَ ‏ ‏وَزَادَ ‏ ‏ابْنُ نُمَيْرٍ ‏ ‏فِي حَدِيثِهِ فَإِذَا نَسِيَ أَحَدُكُمْ فَلْيَسْجُدْ سَجْدَتَيْنِ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) எங்களுக்கு (ஒருபோது) ஐந்து ரக்அத்கள் தொழுவித்தார்கள். அவர்கள் தொழுகையை முடித்துத் திரும்பியபோது மக்கள் தமக்கிடையே முணுமுணுத்துக் கொண்டனர். அப்போது நபி (ஸல்), “உங்களுக்கு என்ன நேர்ந்தது?” என்று கேட்டார்கள். மக்கள், “அல்லாஹ்வின் தூதரே! தொழுகையில் (ரக்அத்) அதிகமாக்கப்பட்டு விட்டதா?” என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “இல்லை” என்றார்கள். “அவ்வாறாயின் தாங்கள் ஐந்து ரக்அத்கள் தொழுவித்துவிட்டீர்களே?” என்று கூறினர். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (அப்படியே) திரும்பி இரு ஸஜ்தாக்கள் செய்துவிட்டுப் பிறகு ஸலாம் கொடுத்தார்கள். மேலும், “நானும் உங்களைப் போன்ற ஒரு மனிதன்தான். நீங்கள் மறப்பதைப் போன்று நானும் மறந்துவிடுகிறேன்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)

குறிப்பு :

இப்னு நுமைர் (ரஹ்) வழி அறிவிப்பில், “உங்களில் ஒருவர் (தமது தொழுகையில்) மறந்து விட்டால் அவர் இரு ஸஜ்தாக்கள் செய்து கொள்ளட்டும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறியதாக இடம் பெற்றுள்ளது.

ஹஸனிபுனு உபைதுல்லாஹ் வழி அறிவிப்பில், “… நபி (ஸல்) மக்களுக்கு (மறதியாக) ஐந்து ரக்அத்கள் தொழுவித்துவிட்டார்கள் …” என்று இடம்பெற்றுள்ளது.

அல்கமா (ரஹ்) அவர்கள் எங்களுக்கு (ஒரு) லுஹ்ருத் தொழுகையில் ஐந்து ரக்அத்கள் தொழுவித்தார்கள். அவர்கள் ஸலாம் கொடுத்தபோது (அவர்களிடம்) மக்கள், “அபூஷிப்லே! தாங்கள் ஐந்து ரக்அத் தொழுவித்து விட்டீர்கள்” என்று கூறினர். அதற்கு அல்கமா (ரஹ்), “இல்லை; அவ்வாறு நான் செய்யவில்லை” என்று மறுத்தார்கள். மக்கள், “ஆம் (அவ்வாறுதான் செய்தீர்கள்)” என்று கூறினர். அப்போது சிறுவனாயிருந்த நான் கூட்டத்தின் ஓரத்தில் இருந்து கொண்டிருந்தேன். நானும், “ஆம் தாங்கள் ஐந்து ரக்அத்கள் தொழுவித்து விட்டீர்கள்” என்று கூறினேன். அல்கமா (ரஹ்) அவர்கள் என்னைப் பார்த்து, “மாறுகண்ணா! நீயுமா இவ்வாறு கூறுகிறாய்?” என்று கேட்டார்கள். நான், “ஆம்!” என்றேன். உடனே அவர்கள் அப்படியே திரும்பி இரு ஸஜ்தாக்கள் செய்துவிட்டுப் பின்னர் ஸலாம் கொடுத்தார்கள். பிறகு அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாக மேற்கண்ட ஹதீஸைக் கூறினார்கள் என்று இப்ராஹீம் பின் சுவைத் (ரஹ்) குறிப்பிடுகிறார்.

அத்தியாயம்: 5, பாடம்: 20, ஹதீஸ் எண்: 890

‏حَدَّثَنَا ‏ ‏عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ الْعَنْبَرِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏عَنْ ‏ ‏الْحَكَمِ ‏ ‏عَنْ ‏ ‏إِبْرَاهِيمَ ‏ ‏عَنْ ‏ ‏عَلْقَمَةَ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ ‏

‏أَنَّ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏صَلَّى الظُّهْرَ خَمْسًا فَلَمَّا سَلَّمَ قِيلَ لَهُ أَزِيدَ فِي الصَّلَاةِ قَالَ وَمَا ذَاكَ قَالُوا صَلَّيْتَ خَمْسًا فَسَجَدَ سَجْدَتَيْنِ

நபி (ஸல்) (ஒருபோது) லுஹ்ருத் தொழுகையில் ஐந்து ரக்அத்கள் தொழுவித்தார்கள். அவர்கள் ஸலாம் கொடுத்(துத் தொழுகையை முடித்)தபோது அவர்களிடம், “தொழுகையில் (ரக்அத்) அதிகமாக்கப்பட்டு விட்டதா?” என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள், “என்ன விஷயம்?” என்று கேட்டார்கள். மக்கள், “நீங்கள் ஐந்து ரக்அத்கள் தொழுவித்தீர்கள்” என்று கூறினர். உடனே நபி (ஸல்) இரு ஸஜ்தாக்கள் செய்தார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)