அத்தியாயம்: 5, பாடம்: 35, ஹதீஸ் எண்: 990

حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ مِهْرَانَ الرَّازِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏الْأَوْزَاعِيُّ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي النَّجَاشِيِّ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏رَافِعَ بْنَ خَدِيجٍ ‏ ‏يَقُولُ ‏:‏

كُنَّا نُصَلِّي الْعَصْرَ مَعَ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏ثُمَّ تُنْحَرُ ‏ ‏الْجَزُورُ ‏ ‏فَتُقْسَمُ عَشَرَ قِسَمٍ ثُمَّ تُطْبَخُ فَنَأْكُلُ لَحْمًا نَضِيجًا قَبْلَ مَغِيبِ الشَّمْسِ


حَدَّثَنَا ‏ ‏إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏عِيسَى بْنُ يُونُسَ ‏ ‏وَشُعَيْبُ بْنُ إِسْحَقَ الدِّمَشْقِيُّ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏الْأَوْزَاعِيُّ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏غَيْرَ أَنَّهُ قَالَ كُنَّا نَنْحَرُ ‏ ‏الْجَزُورَ ‏ ‏عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بَعْدَ الْعَصْرِ وَلَمْ يَقُلْ كُنَّا نُصَلِّي مَعَهُ

நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் அஸ்ருத் தொழுவோம். பிறகு ஒட்டகம் அறுக்கப்படும். அது பத்துக் கூறுகளாகப் பங்கிடப்படும். பிறகு அது சமைக்கப்படும். நாங்கள் சூரியன் மறைவதற்கு முன் (அதன்) சமைக்கப்பட்ட இறைச்சியை உண்டுவிடுவோம்.

அறிவிப்பாளர் : ராஃபிஉ பின் கதீஜ் (ரலி)


குறிப்பு :

அல் அவ்ஸாயீ (ரஹ்) வழி அறிவிப்பில், “நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் அஸ்ருத் தொழுகைக்குப் பிறகு ஒட்டகத்தை அறுப்போம் …” என்பது இடம்பெற்றபோதிலும், ” … நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் அஸ்ருத் தொழுவோம்” எனும் சொற்கள் இடம் பெறவில்லை.

அத்தியாயம்: 5, பாடம்: 35, ஹதீஸ் எண்: 989

حَدَّثَنَا ‏ ‏عَمْرُو بْنُ سَوَّادٍ الْعَامِرِيُّ ‏ ‏وَمُحَمَّدُ بْنُ سَلَمَةَ الْمُرَادِيُّ ‏ ‏وَأَحْمَدُ بْنُ عِيسَى ‏ ‏وَأَلْفَاظُهُمْ مُتَقَارِبَةٌ ‏ ‏قَالَ ‏ ‏عَمْرٌو ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏و قَالَ ‏ ‏الْآخَرَانِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏عَمْرُو بْنُ الْحَارِثِ ‏ ‏عَنْ ‏ ‏يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ ‏ ‏أَنَّ ‏ ‏مُوسَى بْنَ سَعْدٍ الْأَنْصَارِيَّ ‏ ‏حَدَّثَهُ عَنْ ‏ ‏حَفْصِ بْنِ عُبَيْدِ اللَّهِ ‏ ‏عَنْ ‏ ‏أَنَسِ بْنِ مَالِكٍ ‏ ‏أَنَّهُ قَالَ ‏:‏

صَلَّى لَنَا رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏الْعَصْرَ فَلَمَّا انْصَرَفَ أَتَاهُ رَجُلٌ مِنْ ‏ ‏بَنِي سَلِمَةَ ‏ ‏فَقَالَ يَا رَسُولَ اللَّهِ إِنَّا نُرِيدُ أَنْ نَنْحَرَ ‏ ‏جَزُورًا ‏ ‏لَنَا وَنَحْنُ نُحِبُّ أَنْ تَحْضُرَهَا قَالَ ‏ ‏نَعَمْ فَانْطَلَقَ وَانْطَلَقْنَا مَعَهُ فَوَجَدْنَا ‏ ‏الْجَزُورَ ‏ ‏لَمْ تُنْحَرْ فَنُحِرَتْ ثُمَّ قُطِّعَتْ ثُمَّ طُبِخَ مِنْهَا ثُمَّ أَكَلْنَا قَبْلَ أَنْ تَغِيبَ الشَّمْسُ ‏


و قَالَ ‏ ‏الْمُرَادِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ لَهِيعَةَ ‏ ‏وَعَمْرِو بْنِ الْحَارِثِ ‏ ‏فِي هَذَا الْحَدِيثِ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (ஒரு நாள்) எங்களுக்கு அஸ்ருத் தொழுகையைத் தொழவைத்து முடித்தார்கள். அப்போது அவர்களிடம் பனூஸலிமா குலத்தைச் சேர்ந்த ஒருவர், “அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் எங்களுக்குரிய ஓர் ஒட்டகத்தை அறுக்க விரும்புகிறோம். அ(ந்த விருந்)தில் நீங்களும் கலந்துகொள்ள வேண்டுமென நாங்கள் விரும்புகின்றோம்” என்று கூறினர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ‘சரி’ என்று சொல்லிவிட்டு நடக்கலானார்கள். நாங்களும் அவர்களுடன் நடந்தோம். அந்த ஒட்டகம் இன்னும் அறுக்கப்படாமலிருப்பதைக் கண்டோம். பின்னர் அது அறுக்கப்பட்டு சிறுசிறு துண்டுகளாக்கப்பட்டது. பிறகு அதில் சிறிது சமைக்கப்பட்டது. பின்னர் நாங்கள் அதைச் சூரியன் மறைவதற்குள் உண்டு முடித்தோம்.

அறிவிப்பாளர் : அனஸ் (ரலி)


குறிப்பு :

“ஓர் ஒட்டகத்தை அறுத்து, துண்டுகள் போட்டு, சமைத்து சாப்பிடுவதுவரை அஸ்ருக்கும் மக்ரிபுக்கும் இடைப்பட்ட நேரத்தில் நடந்து முடிந்தன. அந்த அளவிற்கு அஸ்ரை அதன் ஆரம்ப நேரத்திலேயே தொழுதோம்” என்று அனஸ் (ரலி) கூறமுனைவது இங்குக் கருத்தாகும்.

அத்தியாயம்: 5, பாடம்: 35, ஹதீஸ் எண்: 988

و حَدَّثَنَا ‏ ‏مَنْصُورُ بْنُ أَبِي مُزَاحِمٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي بَكْرِ بْنِ عُثْمَانِ بْنِ سَهْلِ بْنِ حُنَيْفٍ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏أَبَا أُمَامَةَ بْنَ سَهْلٍ ‏ ‏يَقُولُ ‏:‏

صَلَّيْنَا مَعَ ‏ ‏عُمَرَ بْنِ عَبْدِ الْعَزِيزِ ‏ ‏الظُّهْرَ ثُمَّ خَرَجْنَا حَتَّى دَخَلْنَا عَلَى ‏ ‏أَنَسِ بْنِ مَالِكٍ ‏ ‏فَوَجَدْنَاهُ ‏ ‏يُصَلِّي الْعَصْرَ فَقُلْتُ يَا عَمِّ مَا هَذِهِ الصَّلَاةُ الَّتِي صَلَّيْتَ قَالَ ‏ ‏الْعَصْرُ وَهَذِهِ صَلَاةُ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ تَعَالَى عَلَيْهِ وَسَلَّمَ الَّتِي كُنَّا نُصَلِّي مَعَهُ

நாங்கள் உமர் பின் அப்தில் அஸீஸ் (ரஹ்) அவர்களுடன் (அவர்கள் மதீனாவில் இடைக்கால ஆட்சியராக இருந்தபோது) லுஹ்ருத் தொழுகையை (அதன் இறுதி நேரத்தில்) தொழுதோம். பிறகு அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடம் சென்றோம். அப்போது அனஸ் (ரலி) அஸ்ருத் தொழுகை தொழுதுகொண்டிருப்பதைக் கண்டோம். அப்போது நான் (மரியாதை நிமித்தம்) “என் தந்தையின் சகோதரரே!’ (என்றழைத்து) நீங்கள் தொழுதீர்களே இது என்ன தொழுகை?” என்று கேட்டேன். அவர்கள், “(இது) அஸ்ருத் தொழுகை. நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இவ்வாறே (ஆரம்ப நேரத்தில்) தொழுபவர்களாக இருந்தோம்” என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பாளர் : அபூஉமாமா பின் ஸஹ்லு (ரலி)

அத்தியாயம்: 5, பாடம்: 35, ஹதீஸ் எண்: 987

و حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ أَيُّوبَ ‏ ‏وَمُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ ‏ ‏وَقُتَيْبَةُ ‏ ‏وَابْنُ حُجْرٍ ‏ ‏قَالُوا حَدَّثَنَا ‏ ‏إِسْمَعِيلُ بْنُ جَعْفَرٍ ‏ ‏عَنْ ‏ ‏الْعَلَاءِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ :‏‏

أَنَّهُ دَخَلَ عَلَى ‏ ‏أَنَسِ بْنِ مَالِكٍ ‏ ‏فِي دَارِهِ ‏ ‏بِالْبَصْرَةِ ‏ ‏حِينَ انْصَرَفَ مِنْ الظُّهْرِ وَدَارُهُ بِجَنْبِ الْمَسْجِدِ فَلَمَّا دَخَلْنَا عَلَيْهِ قَالَ أَصَلَّيْتُمْ الْعَصْرَ فَقُلْنَا لَهُ إِنَّمَا انْصَرَفْنَا السَّاعَةَ مِنْ الظُّهْرِ قَالَ فَصَلُّوا الْعَصْرَ فَقُمْنَا فَصَلَّيْنَا فَلَمَّا انْصَرَفْنَا قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَقُولُ ‏ ‏تِلْكَ صَلَاةُ الْمُنَافِقِ يَجْلِسُ ‏ ‏يَرْقُبُ ‏ ‏الشَّمْسَ حَتَّى إِذَا كَانَتْ بَيْنَ قَرْنَيْ الشَّيْطَانِ قَامَ فَنَقَرَهَا أَرْبَعًا لَا يَذْكُرُ اللَّهَ فِيهَا إِلَّا قَلِيلًا

நான் லுஹ்ருத் தொழுதுவிட்டு, பஸ்ரா நகர்ப் பள்ளிவாசலுக்குப் பக்கத்தில் இருந்த அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களின் இல்லத்துக்குச் (சிலரோடு) சென்றேன். நாங்கள் அவர்களிடம் சென்றபோது, “நீங்கள் அஸ்ருத் தொழுதுவிட்டீர்களா?” என்று கேட்டார்கள். அதற்கு நாங்கள், “(இல்லை) நாங்கள் இப்போதுதான் லுஹ்ருத் தொழுதுவிட்டு வருகிnறோம்” என்று சொன்னோம். அனஸ் (ரலி), “அவ்வாறாயின் நீங்கள் அஸ்ருத் தொழுங்கள்” என்றார்கள். உடனே நாங்கள் எழுந்து (அஸ்ரைத்) தொழுதோம். நாங்கள் தொழுது முடித்ததும் அனஸ் (ரலி), “நயவஞ்சகன் சூரியனை எதிர்பார்த்துக்கொண்டு அமர்ந்திருப்பான். சூரியன் (சரியாக) ஷைத்தானின் இரு கொம்புகளுக்கிடையே (உதயமாகி/மறைந்து) வரும்போது அவன் (அவசர அவசரமாகக் கோழி கொத்துவதைப் போன்று) நான்கு கொத்து கொத்துவான். அவன் அதில் மிகக் குறைவாகவே இறைவனை நினைவுகூர்வான். அந்தத் தொழுகை நயவஞ்சகனின் தொழுகையாகும்” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறியதை நான் செவிமடுத்துள்ளேன் என்றார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் (ரலி) வழியாக அலா பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்)

அத்தியாயம்: 5, பாடம்: 35, ஹதீஸ் எண்: 986

و حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏قَالَ قَرَأْتُ عَلَى ‏ ‏مَالِكٍ ‏ ‏عَنْ ‏ ‏إِسْحَقَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَنَسِ بْنِ مَالِكٍ ‏ ‏قَالَ ‏:‏

كُنَّا نُصَلِّي الْعَصْرَ ثُمَّ يَخْرُجُ الْإِنْسَانُ إِلَى ‏ ‏بَنِي عَمْرِو بْنِ عَوْفٍ ‏ ‏فَيَجِدُهُمْ يُصَلُّونَ الْعَصْرَ

நாங்கள் அஸ்ருத் தொழுகை தொழுவோம். பிறகு (எங்களில்) ஒருவர் பனூ அம்ரு பின் அவ்ஃபு குலத்தாரிடம் சென்று சேரும்போது அவர்கள் அஸ்ருத் தொழுகை தொழுதுகொண்டிருப்பதை அவர் காண்பார்.

அறிவிப்பாளர் : அனஸ் பின் மாலிக் (ரலி)

அத்தியாயம்: 5, பாடம்: 35, ஹதீஸ் எண்: 985

و حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏قَالَ قَرَأْتُ عَلَى ‏ ‏مَالِكٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏عَنْ ‏ ‏أَنَسِ بْنِ مَالِكٍ ‏ ‏قَالَ ‏:‏

كُنَّا نُصَلِّي الْعَصْرَ ثُمَّ يَذْهَبُ الذَّاهِبُ إِلَى ‏ ‏قُبَاءٍ ‏ ‏فَيَأْتِيهِمْ وَالشَّمْسُ مُرْتَفِعَةٌ

நாங்கள் அஸ்ருத் தொழுவோம். பிறகு எங்களில் (மேட்டுப் பகுதிகளில் ஒன்றான) ‘குபா’வுக்குச் செல்பவர் அங்குச் சென்றடைவார். அப்போதும் சூரியன் (சாயாமல் வானில்) உயர்ந்தே இருக்கும்.

அறிவிப்பாளர் : அனஸ் பின் மாலிக் (ரலி)

அத்தியாயம்: 5, பாடம்: 35, ஹதீஸ் எண்: 984

حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏لَيْثٌ ‏ ‏قَالَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ رُمْحٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏اللَّيْثُ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏عَنْ ‏ ‏أَنَسِ بْنِ مَالِكٍ ‏ ‏أَنَّهُ أَخْبَرَهُ ‏:‏

أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏كَانَ ‏ ‏يُصَلِّي الْعَصْرَ وَالشَّمْسُ مُرْتَفِعَةٌ ‏ ‏حَيَّةٌ ‏ ‏فَيَذْهَبُ الذَّاهِبُ إِلَى ‏ ‏الْعَوَالِي ‏ ‏فَيَأْتِي ‏ ‏الْعَوَالِيَ ‏ ‏وَالشَّمْسُ مُرْتَفِعَةٌ ‏


وَلَمْ يَذْكُرْ ‏ ‏قُتَيْبَةُ ‏ ‏فَيَأْتِي ‏ ‏الْعَوَالِيَ ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏هَارُونُ بْنُ سَعِيدٍ الْأَيْلِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏عَمْرٌو ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏عَنْ ‏ ‏أَنَسٍ ‏ ‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏كَانَ ‏ ‏يُصَلِّي الْعَصْرَ ‏ ‏بِمِثْلِهِ سَوَاءً

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அஸ்ருத் தொழுகை தொழுவார்கள். அப்போது சூரியன் (சாயாமல்) உயர்ந்து தெளிவாகவே இருக்கும். (அஸ்ருத் தொழுதுவிட்டு மதீனாவை அடுத்திருக்கும்) மேட்டுப் பகுதி (கிராமங்)களுக்குச் செல்லும் ஒருவர், அங்குப் போய்ச்சேரும்போதும் சூரியன் (சாய்ந்துவிடாமல்) உயர்ந்தே இருக்கும்.

அறிவிப்பாளர் : அனஸ் பின் மாலிக் (ரலி)


குறிப்பு :

குதைபா (ரஹ்) வழி அறிவிப்பில், “அங்குப் போய்ச்சேரும்போதும்” எனும் சொற்கள் இடம்பெறவில்லை.