அத்தியாயம்: 53, பாடம்: 13, ஹதீஸ் எண்: 5071

حَدَّثَنِي عَمْرٌو النَّاقِدُ، وَحَسَنٌ الْحُلْوَانِيُّ، وَعَبْدُ بْنُ حُمَيْدٍ، قَالَ عَبْدٌ أَخْبَرَنِي وَقَالَ الآخَرَانِ حَدَّثَنَا يَعْقُوبُ، – وَهُوَ ابْنُ إِبْرَاهِيمَ بْنِ سَعْدٍ – حَدَّثَنَا أَبِي، عَنْ صَالِحٍ، عَنِ ابْنِ شِهَابٍ قَالَ سَمِعْتُ سَعِيدَ بْنَ الْمُسَيَّبِ يَقُولُ :‏

إِنَّ الْبَحِيرَةَ الَّتِي يُمْنَعُ دَرُّهَا لِلطَّوَاغِيتِ فَلاَ يَحْلُبُهَا أَحَدٌ مِنَ النَّاسِ وَأَمَّا السَّائِبَةُ الَّتِي كَانُوا يُسَيِّبُونَهَا لآلِهَتِهِمْ فَلاَ يُحْمَلُ عَلَيْهَا شَىْءٌ ‏.‏ وَقَالَ ابْنُ الْمُسَيَّبِ قَالَ أَبُو هُرَيْرَةَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ “‏ رَأَيْتُ عَمْرَو بْنَ عَامِرٍ الْخُزَاعِيَّ يَجُرُّ قُصْبَهُ فِي النَّارِ وَكَانَ أَوَّلَ مَنْ سَيَّبَ السُّيُوبَ ‏”‏

பஹீரா என்பது, (அறியாமைக் கால) சிலைகளுக்காக (அவற்றின் பெயரால்) பால் கறக்கக் கூடாதெனத் தடை விதிக்கப்பட்ட ஒட்டகமாகும்; மக்களில் யாரும் அதனிடம் பால் கறக்கமாட்டார்கள்.

ஸாயிபா என்பது, (அறியாமைக் காலத்தில் நோய் நிவாரணம் வேண்டி) சிலைகளுக்காக (நேர்ந்து) சுதந்திரமாகத் திரியவிடப்பட்ட ஒட்டகமாகும். அதன் மீது எந்தச் சுமையும் ஏற்றப்படாது.

“அம்ரு பின் ஆமிர் அல்குஸாயீ, தமது குடலை இழுத்தபடி நரகத்தில் சென்றுகொண்டிருப்பதை நான் கண்டேன். அவர்தாம் முதன் முதலாக ஸாயிபா ஒட்டகத்தை, (சிலைகளுக்காக நேர்ச்சை செய்து) திரியவிட்டவர்” என்று  அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி) வழியாக ஸயீத் பின் அல்முஸய்யப் (ரஹ்)


குறிப்பு :

‘பஹீரா’ (காது கிழிக்கப்பட்ட பெண் ஒட்டகம்), ‘ஸாயிபா’ (தானாகவே மேயவிடப்படும் பெண் ஒட்டகம்) ‘வஸீலா’ (இரட்டைக் குட்டிகளை ஈன்றதற்காக சில நிலைகளில் சிலைகளுக்கு நேர்ந்து விடப்பட்ட ஆடுகள்) ‘ஹாமி’ (வேலை வாங்கப்படாமல் தானாகத் திரியும்படி விடப்பபடும் ஆண் ஒட்டகம்) என்பவை(போன்ற போலிச் சடங்குகளுக்கான விலங்கு)களை அல்லாஹ் ஏற்படுத்தவில்லை – ஆனால் காஃபிர்கள்தாம் அல்லாஹ்வின் மீது பொய்யாகக் கற்பனை செய்(து கூறு)கின்றனர். மேலும், அவர்களில் பெரும்பாலோர் நல்லறிவு பெறாதவர்களாகளே – அல்குர்ஆன் 5:103.

Share this Hadith: