அத்தியாயம்: 53, பாடம்: 13, ஹதீஸ் எண்: 5074

حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ، وَأَبُو بَكْرِ بْنُ نَافِعٍ وَعَبْدُ بْنُ حُمَيْدٍ قَالُوا حَدَّثَنَا أَبُو عَامِرٍ الْعَقَدِيُّ حَدَّثَنَا أَفْلَحُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ رَافِعٍ، مَوْلَى أُمِّ سَلَمَةَ قَالَ سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ يَقُولُ :‏

سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ ‏ “‏ إِنْ طَالَتْ بِكَ مُدَّةٌ أَوْشَكْتَ أَنْ تَرَى قَوْمًا يَغْدُونَ فِي سَخَطِ اللَّهِ وَيَرُوحُونَ فِي لَعْنَتِهِ فِي أَيْدِيهِمْ مِثْلُ أَذْنَابِ الْبَقَرِ ‏”‏

“நீ நீண்ட நாள் வாழ்ந்தால் ஒரு சமுதாயத்தைக் காணக்கூடும். அவர்கள் அல்லாஹ்வின் கடுங்கோபத்துடனேயே காலையில் புறப்படுவார்கள். அவனுடைய சாபத்துடனேயே மாலையில் திரும்புவார்கள். அவர்களின் கைகளில் மாட்டின் வாலைப் போன்றவை (நீளமான சாட்டைகள்) இருக்கும்” என்று என்னிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

.அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

அத்தியாயம்: 53, பாடம்: 13, ஹதீஸ் எண்: 5073

حَدَّثَنَا ابْنُ نُمَيْرٍ، حَدَّثَنَا زَيْدٌ، – يَعْنِي ابْنَ حُبَابٍ – حَدَّثَنَا أَفْلَحُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ رَافِعٍ، مَوْلَى أُمِّ سَلَمَةَ قَالَ سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ يَقُولُ :‏

قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ “‏ يُوشِكُ إِنْ طَالَتْ بِكَ مُدَّةٌ أَنْ تَرَى قَوْمًا فِي أَيْدِيهِمْ مِثْلُ أَذْنَابِ الْبَقَرِ يَغْدُونَ فِي غَضَبِ اللَّهِ وَيَرُوحُونَ فِي سَخَطِ اللَّهِ ‏”‏

“நீ நீண்ட நாள் வாழ்ந்தால் ஒரு சமுதாயத்தைப் காணக்கூடும். அவர்களின் கைகளில் மாட்டின் வாலைப் போன்று (நீளமான சாட்டைகள்) இருக்கும். அவர்கள் அல்லாஹ்வின் கோபத்துடனேயே காலையில் புறப்படுவார்கள். அல்லாஹ்வின் கடுங்கோபத்துடனேயே மாலையில் திரும்புவார்கள்” என்று என்னிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

அத்தியாயம்: 53, பாடம்: 13, ஹதீஸ் எண்: 5072

حَدَّثَنِي زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ سُهَيْلٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ :‏

قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ “‏ صِنْفَانِ مِنْ أَهْلِ النَّارِ لَمْ أَرَهُمَا قَوْمٌ مَعَهُمْ سِيَاطٌ كَأَذْنَابِ الْبَقَرِ يَضْرِبُونَ بِهَا النَّاسَ وَنِسَاءٌ كَاسِيَاتٌ عَارِيَاتٌ مُمِيلاَتٌ مَائِلاَتٌ رُءُوسُهُنَّ كَأَسْنِمَةِ الْبُخْتِ الْمَائِلَةِ لاَ يَدْخُلْنَ الْجَنَّةَ وَلاَ يَجِدْنَ رِيحَهَا وَإِنَّ رِيحَهَا لَتُوجَدُ مِنْ مَسِيرَةِ كَذَا وَكَذَا ‏”‏

“நரகவாசிகளில் இரு பிரிவினர் அடங்குவர். அவ்விரு பிரிவினரை நான் பார்த்ததில்லை. (முதலாம் பிரிவினர் யாரெனில்,) பசுவின் வாலைப் போன்ற (நீண்ட) சாட்டைகளைத் தம்மிடம் வைத்துக்கொண்டு மக்களை அடி(த்து இம்சி)க்கும் கூட்டத்தார்.

மெல்லிய உடையணிந்து, தம் தோள்களைச் சாய்த்தபடி (தளுக்கி, குலுக்கி ஒயிலாக) நடந்து (அந்நிய ஆடவர்களின் கவனத்தைத்) தம் பக்கம் ஈர்க்கக்கூடிய பெண்கள் (இரண்டாம் பிரிவினர்) ஆவர். அவர்களின் கொண்டை, கழுத்து நீண்ட ஒட்டகத்தின் சாயும் திமில்களைப் போன்று கூம்பாக இருக்கும். அவர்கள் சொர்க்கத்தில் நுழையமாட்டார்கள் (மட்டுமல்ல); சொர்க்கத்தின் நறுமணமோ இவ்வளவு … இவ்வளவு … தொலைவிலிருந்து வீசிக் கொண்டிருக்கும். அதன் வாடையைக்கூட நுகரமாட்டார்கள் ” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)


குறிப்பு :

ஹதீஸ் எண் : 3962

அத்தியாயம்: 53, பாடம்: 13, ஹதீஸ் எண்: 5071

حَدَّثَنِي عَمْرٌو النَّاقِدُ، وَحَسَنٌ الْحُلْوَانِيُّ، وَعَبْدُ بْنُ حُمَيْدٍ، قَالَ عَبْدٌ أَخْبَرَنِي وَقَالَ الآخَرَانِ حَدَّثَنَا يَعْقُوبُ، – وَهُوَ ابْنُ إِبْرَاهِيمَ بْنِ سَعْدٍ – حَدَّثَنَا أَبِي، عَنْ صَالِحٍ، عَنِ ابْنِ شِهَابٍ قَالَ سَمِعْتُ سَعِيدَ بْنَ الْمُسَيَّبِ يَقُولُ :‏

إِنَّ الْبَحِيرَةَ الَّتِي يُمْنَعُ دَرُّهَا لِلطَّوَاغِيتِ فَلاَ يَحْلُبُهَا أَحَدٌ مِنَ النَّاسِ وَأَمَّا السَّائِبَةُ الَّتِي كَانُوا يُسَيِّبُونَهَا لآلِهَتِهِمْ فَلاَ يُحْمَلُ عَلَيْهَا شَىْءٌ ‏.‏ وَقَالَ ابْنُ الْمُسَيَّبِ قَالَ أَبُو هُرَيْرَةَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ “‏ رَأَيْتُ عَمْرَو بْنَ عَامِرٍ الْخُزَاعِيَّ يَجُرُّ قُصْبَهُ فِي النَّارِ وَكَانَ أَوَّلَ مَنْ سَيَّبَ السُّيُوبَ ‏”‏

பஹீரா என்பது, (அறியாமைக் கால) சிலைகளுக்காக (அவற்றின் பெயரால்) பால் கறக்கக் கூடாதெனத் தடை விதிக்கப்பட்ட ஒட்டகமாகும்; மக்களில் யாரும் அதனிடம் பால் கறக்கமாட்டார்கள்.

ஸாயிபா என்பது, (அறியாமைக் காலத்தில் நோய் நிவாரணம் வேண்டி) சிலைகளுக்காக (நேர்ந்து) சுதந்திரமாகத் திரியவிடப்பட்ட ஒட்டகமாகும். அதன் மீது எந்தச் சுமையும் ஏற்றப்படாது.

“அம்ரு பின் ஆமிர் அல்குஸாயீ, தமது குடலை இழுத்தபடி நரகத்தில் சென்றுகொண்டிருப்பதை நான் கண்டேன். அவர்தாம் முதன் முதலாக ஸாயிபா ஒட்டகத்தை, (சிலைகளுக்காக நேர்ச்சை செய்து) திரியவிட்டவர்” என்று  அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி) வழியாக ஸயீத் பின் அல்முஸய்யப் (ரஹ்)


குறிப்பு :

‘பஹீரா’ (காது கிழிக்கப்பட்ட பெண் ஒட்டகம்), ‘ஸாயிபா’ (தானாகவே மேயவிடப்படும் பெண் ஒட்டகம்) ‘வஸீலா’ (இரட்டைக் குட்டிகளை ஈன்றதற்காக சில நிலைகளில் சிலைகளுக்கு நேர்ந்து விடப்பட்ட ஆடுகள்) ‘ஹாமி’ (வேலை வாங்கப்படாமல் தானாகத் திரியும்படி விடப்பபடும் ஆண் ஒட்டகம்) என்பவை(போன்ற போலிச் சடங்குகளுக்கான விலங்கு)களை அல்லாஹ் ஏற்படுத்தவில்லை – ஆனால் காஃபிர்கள்தாம் அல்லாஹ்வின் மீது பொய்யாகக் கற்பனை செய்(து கூறு)கின்றனர். மேலும், அவர்களில் பெரும்பாலோர் நல்லறிவு பெறாதவர்களாகளே – அல்குர்ஆன் 5:103.

அத்தியாயம்: 53, பாடம்: 13, ஹதீஸ் எண்: 5070

حَدَّثَنِي زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ سُهَيْلٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ :‏

قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ “‏ رَأَيْتُ عَمْرَو بْنَ لُحَىِّ بْنِ قَمَعَةَ بْنِ خِنْدِفَ أَبَا بَنِي كَعْبٍ هَؤُلاَءِ يَجُرُّ قُصْبَهُ فِي النَّارِ ‏”‏

“பனூ கஅப் குலத்தாரின் தந்தையான அம்ரு பின் லுஹை பின் கம்ஆ பின் கிந்திஃப், தனது குடலை இழுத்தபடி நரகத்தில் சென்றுகொண்டிருப்பதை நான் கண்டேன்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)


குறிப்பு :

இந்த ஹதீஸில் குறிப்பிடப்படும் அம்ரு என்பாருக்குச் சுருக்கமான இன்னொரு பெயர் ‘குஸாஆ‘ என்பதாகும். இவர்தாம் ‘ஹுபல்‘ எனும் சிலையை ஷாமிலிருந்து கொண்டுவந்து மக்காவில் நிறுவி, சிலை வணக்கத்திற்குப் புத்துயிர் கொடுத்தவர் என்று ‘தக்மிலா‘வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்தியாயம்: 53, பாடம்: 13, ஹதீஸ் எண்: 5069

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَأَبُو كُرَيْبٍ قَالاَ حَدَّثَنَا ابْنُ نُمَيْرٍ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ زَمْعَةَ قَالَ :‏

خَطَبَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَذَكَرَ النَّاقَةَ وَذَكَرَ الَّذِي عَقَرَهَا فَقَالَ ‏”‏ إِذِ انْبَعَثَ أَشْقَاهَا انْبَعَثَ بِهَا رَجُلٌ عَزِيزٌ عَارِمٌ مَنِيعٌ فِي رَهْطِهِ مِثْلُ أَبِي زَمْعَةَ ‏”‏ ‏.‏ ثُمَّ ذَكَرَ النِّسَاءَ فَوَعَظَ فِيهِنَّ ثُمَّ قَالَ ‏”‏ إِلاَمَ يَجْلِدُ أَحَدُكُمُ امْرَأَتَهُ ‏”‏ ‏.‏ فِي رِوَايَةِ أَبِي بَكْرٍ ‏”‏ جَلْدَ الأَمَةِ ‏”‏ ‏.‏ وَفِي رِوَايَةِ أَبِي كُرَيْبٍ ‏”‏ جَلْدَ الْعَبْدِ وَلَعَلَّهُ يُضَاجِعُهَا مِنْ آخِرِ يَوْمِهِ ‏”‏ ‏.‏ ثُمَّ وَعَظَهُمْ فِي ضَحِكِهِمْ مِنَ الضَّرْطَةِ فَقَالَ ‏”‏ إِلاَمَ يَضْحَكُ أَحَدُكُمْ مِمَّا يَفْعَلُ ‏”‏ ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) உரையாற்றினார்கள். அப்போது (இறைத்தூதர் ஸாலிஹ் அவர்களின் தூதுவத்திற்குச் சான்றாகப் பாறையிலிருந்து வெளிப்பட்ட) ஒட்டகத்தையும் அத(ன் கால் நரம்பி)னைத் துண்டித்துக் கொன்றவனையும் நினைவு கூர்ந்தார்கள்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “அவர்களில் நற்பேறற்ற ஒருவன் முன் வந்தான் …” எனும் (91:12) இறைவசனத்தைக் கூறிவிட்டு, “அபூஸம்ஆவைப் போன்று ஸாலிஹ் (அலை) அவர்களின் (ஸமூத்) சமுதாயத்தில் மதிப்பு மிக்கவனும் ஆதிக்கவாதியும் பலசாலியுமான ஒருவன் அந்த ஒட்டகத்(தைக் கொல்வ)துக்காக முன்வந்தான்” என்று சொன்னார்கள்.

பிறகு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) பெண்க(ளின் உரிமைக)ள் குறித்து அறிவுறுத்தினார்கள்; பிறகு “உங்களில் ஒருவர் தம் மனைவியை (அடிமையை அடிப்பதைப் போன்று) அடிக்க முற்படுகின்றார். (ஆனால்,) அவரே அந்நாளின் இறுதியில் (இரவில்) அவளுடன்தான் படுக்க நேரிடும். (இது முறையா?)” என்று கூறினார்கள்.

பிறகு, (பின் துவார வழியாகக்) காற்றுப் பிரிந்தால் மக்கள் சிரிப்பது குறித்து, “உங்களில் ஒருவருக்கு நிகழும் (இயல்பான) செயல், பிறருக்கு நிகழும்போது (கேலியாகச்) சிரிக்கலாமா?” என்று கேட்டு உபதேசித்தார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் ஸம்ஆ (ரலி)


குறிப்புகள் :

அபூபக்ரு பின் அபீஷைபா (ரஹ்) வழி அறிவிப்பில், “ … அடிமைப் பெண்ணை அடிப்பதைப் போன்று …” எனக் காணப்படுகிறது. அபூகுறைப் (ரஹ்) வழி அறிவிப்பில், “ … அடிமையை அடிப்பதைப் போன்று …” என இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 53, பாடம்: 13, ஹதீஸ் எண்: 5068

حَدَّثَنِي سُوَيْدُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنِي حَفْصُ بْنُ مَيْسَرَةَ، عَنِ الْعَلاَءِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ :‏

أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏ “‏ رُبَّ أَشْعَثَ مَدْفُوعٍ بِالأَبْوَابِ لَوْ أَقْسَمَ عَلَى اللَّهِ لأَبَرَّهُ ‏”‏‏

“பரட்டைத் தலையுடன், வீட்டுவாசல்களுக்கு வெளியே தடுத்து நிறுத்தப்படக்கூடிய எத்தனையோ பேர், (அல்லாஹ்விடம் தகுதியால் உயர்ந்தவர்களாய் இருப்பர்.) அவர்கள் அல்லாஹ்வின் மேல் ஆணையிட்டு (எதையேனும்) கூறுவார்களானால், அல்லாஹ் அதை உண்மையாக்குவான்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

அத்தியாயம்: 53, பாடம்: 13, ஹதீஸ் எண்: 5067

وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ، حَدَّثَنَا وَكِيعٌ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ مَعْبَدِ بْنِ خَالِدٍ، قَالَ سَمِعْتُ حَارِثَةَ بْنَ وَهْبٍ الْخُزَاعِيَّ يَقُولُ :‏

قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ “‏ أَلاَ أُخْبِرُكُمْ بِأَهْلِ الْجَنَّةِ كُلُّ ضَعِيفٍ مُتَضَعَّفٍ لَوْ أَقْسَمَ عَلَى اللَّهِ لأَبَرَّهُ أَلاَ أُخْبِرُكُمْ بِأَهْلِ النَّارِ كُلُّ جَوَّاظٍ زَنِيمٍ مُتَكَبِّرٍ ‏”‏

“சொர்க்கவாசிகள் யார் என்று உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா? அவர்கள் (மக்களின் பார்வையில்) பலவீனமானவர்கள்; பணிவானவர்கள். (ஆனால்,) அவர்கள் அல்லாஹ்வின் மேல் ஆணையிட்டு (எதையேனும்) கூறுவார்களானால், அல்லாஹ் அதை நிறைவேற்றி வைப்பான். நரகவாசிகள் யார் என்று உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா? அவர்கள் இரக்கமற்றவர்கள்; ஒரு வமிசத்தில் பிறந்ததாகப் பொய்யாக வாதிடுபவர்கள்; பெருமை அடிப்பவர்கள்“ என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : ஹாரிஸா பின் வஹ்பு (ரலி)

அத்தியாயம்: 53, பாடம்: 13, ஹதீஸ் எண்: 5066

حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ الْعَنْبَرِيُّ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا شُعْبَةُ، حَدَّثَنِي مَعْبَدُ بْنُ خَالِدٍ، أَنَّهُ سَمِعَ حَارِثَةَ بْنَ وَهْبٍ :‏

أَنَّهُ سَمِعَ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ ‏”‏ أَلاَ أُخْبِرُكُمْ بِأَهْلِ الْجَنَّةِ ‏”‏ ‏.‏ قَالُوا بَلَى ‏.‏ قَالَ صلى الله عليه وسلم ‏”‏ كُلُّ ضَعِيفٍ مُتَضَعَّفٍ لَوْ أَقْسَمَ عَلَى اللَّهِ لأَبَرَّهُ ‏”‏ ‏.‏ ثُمَّ قَالَ ‏”‏ أَلاَ أُخْبِرُكُمْ بِأَهْلِ النَّارِ ‏”‏ ‏.‏ قَالُوا بَلَى ‏.‏ قَالَ ‏”‏ كُلُّ عُتُلٍّ جَوَّاظٍ مُسْتَكْبِرٍ ‏”‏ ‏


وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، بِهَذَا الإِسْنَادِ بِمِثْلِهِ غَيْرَ أَنَّهُ قَالَ ‏ “‏ أَلاَ أَدُلُّكُمْ ‏”‏

நபி (ஸல்), “சொர்க்கவாசிகள் யார் என்று உங்களுக்குத் தெரிவிக்கட்டுமா?“ என்று (மக்களிடம்) கேட்டார்கள். மக்கள், “ஆம் (தெரிவியுங்கள்)” என்றார்கள். நபி (ஸல்), “(மக்களின் பார்வையில்) அவர்கள் பலவீனமானவர்கள்; பணிவானவர்கள். (ஆனால்,) அவர்கள் அல்லாஹ்வின் மேல் ஆணையிட்டு (எதையேனும்) கூறுவார்களானால், அல்லாஹ் அதை நிறைவேற்றி வைப்பான்” என்று கூறியதையும்,

பிறகு “நரகவாசிகள் யார் என்று உங்களுக்கு நான் தெரிவிக்கட்டுமா?” என்று கேட்டார்கள். மக்கள், “ஆம்” என்றார்கள். “அவர்கள் இரக்கமற்றவர்கள்; உண்டு கொழுத்தவர்கள்; பெருமையடிப்பவர்கள் ஆவர்” என்று நபியவர்கள் கூறியதையும் நான் செவியுற்றேன்.

அறிவிப்பாளர் : ஹாரிஸா பின் வஹ்பு (ரலி)


குறிப்பு :

முஹம்மது பின் ஜஅஃபர் (ரஹ்) வழி அறிவிப்பில்,  “உங்களுக்கு நான் தெரிவிக்கட்டுமா?“ என்பதற்குப் பகரமாக “உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா?“ என்று இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 53, பாடம்: 13, ஹதீஸ் எண்: 5065

حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، وَأَحْمَدُ بْنُ عُمَرَ الْوَكِيعِيُّ، قَالاَ حَدَّثَنَا ابْنُ فُضَيْلٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ يَرْفَعُهُ قَالَ :‏

‏”‏ مَا بَيْنَ مَنْكِبَىِ الْكَافِرِ فِي النَّارِ مَسِيرَةُ ثَلاَثَةِ أَيَّامٍ لِلرَّاكِبِ الْمُسْرِعِ ‏”‏


وَلَمْ يَذْكُرِ الْوَكِيعِيُّ ‏”‏ فِي النَّارِ ‏”‏

“நரகத்தில் இறைமறுப்பாளனின் இரு தோள்களுக்கிடையே உள்ள தூரம்,  வாகனத்தில் விரைந்து பயணிப்பவர் மூன்று நாள்கள் கடக்கும் தூரமாக இருக்கும்” என்று நபி (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)


குறிப்பு :

அஹ்மது பின் உமர் அல்வகீயீ (ரஹ்) வழி அறிவிப்பில், ஹதீஸின் தொடக்கத்திலுள்ள “நரகத்தில்” எனும் சொல் இடம்பெறவில்லை.