அத்தியாயம்: 21, பாடம்: 3, ஹதீஸ் எண்: 2784

‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏وَمُحَمَّدُ بْنُ رُمْحٍ ‏ ‏قَالَا أَخْبَرَنَا ‏ ‏اللَّيْثُ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏لَيْثٌ ‏ ‏عَنْ ‏ ‏نَافِعٍ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ : ‏

‏عَنْ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَنَّهُ ‏ ‏نَهَى عَنْ ‏ ‏بَيْعِ حَبَلِ الْحَبَلَةِ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), சினை ஒட்டகத்தின் வயிற்றிலுள்ள கன்று சூலுற்று, அது ஈனும் கன்றை (முன்னதாக விலைபேசி) விற்பதற்குத் தடை விதித்தார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)

அத்தியாயம்: 21, பாடம்: 1, ஹதீஸ் எண்: 2782

‏و حَدَّثَنِي ‏ ‏أَبُو الطَّاهِرِ ‏ ‏وَحَرْمَلَةُ بْنُ يَحْيَى ‏ ‏وَاللَّفْظُ ‏ ‏لِحَرْمَلَةَ ‏ ‏قَالَا أَخْبَرَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏يُونُسُ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏عَامِرُ بْنُ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ ‏ ‏أَنَّ ‏ ‏أَبَا سَعِيدٍ الْخُدْرِيَّ ‏ ‏قَالَ : ‏

‏نَهَانَا رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏عَنْ بَيْعَتَيْنِ وَلِبْسَتَيْنِ نَهَى عَنْ ‏ ‏الْمُلَامَسَةِ ‏ ‏وَالْمُنَابَذَةِ ‏ ‏فِي الْبَيْعِ ‏


وَالْمُلَامَسَةُ لَمْسُ الرَّجُلِ ثَوْبَ الْآخَرِ بِيَدِهِ بِاللَّيْلِ أَوْ بِالنَّهَارِ وَلَا يَقْلِبُهُ إِلَّا بِذَلِكَ وَالْمُنَابَذَةُ أَنْ يَنْبِذَ الرَّجُلُ إِلَى الرَّجُلِ بِثَوْبِهِ وَيَنْبِذَ الْآخَرُ إِلَيْهِ ثَوْبَهُ وَيَكُونُ ذَلِكَ بَيْعَهُمَا مِنْ غَيْرِ نَظَرٍ وَلَا تَرَاضٍ ‏ ‏و حَدَّثَنِيهِ ‏ ‏عَمْرٌو النَّاقِدُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ سَعْدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏عَنْ ‏ ‏صَالِحٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) வியாபார முறைகள் இரண்டையும் ஆடை அணியும் முறைகள் இரண்டையும் எங்களுக்குத் தடை செய்தார்கள்.

வியாபாரத்தில் தொடுமுறை (முலாமஸா) வியாபாரம், எறிமுறை (முனாபதா) வியாபாரம் ஆகிய இரண்டையும் தடை செய்தார்கள். தொடுமுறை (முலாமஸா) வியாபாரம் என்பது, இரவிலோ பகலிலோ (துணி வாங்கும்) ஒருவர் (விற்கும்) மற்றொருவரின் துணியைத் தமது கரத்தால் தொடுவதாகும். விரித்துப் பார்க்காமலேயே தொட்டதோடு வியாபாரத்தை முடித்துக் கொள்வதாகும். எறிமுறை (முனாபதா) வியாபாரம் என்பது, ஒருவர் மற்றொருவரை நோக்கித் தமது துணியை எறிய, மற்றவர் இவரை நோக்கித் தமது துணியை எறிய (துணியைப் பிரித்துப்) பார்க்காமலும் பரஸ்பர திருப்தி இல்லாமலும் இருவருக்குமிடையிலான வியாபார(ஒப்பந்த)மாக அதுவே ஆகிவிடுவதாகும்.

அறிவிப்பாளர் : அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)

அத்தியாயம்: 21, பாடம்: 1, ஹதீஸ் எண்: 2781

‏و حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ رَافِعٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الرَّزَّاقِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ جُرَيْجٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏عَمْرُو بْنُ دِينَارٍ ‏ ‏عَنْ ‏ ‏عَطَاءِ بْنِ مِينَاءَ ‏ ‏أَنَّهُ سَمِعَهُ يُحَدِّثُ عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏أَنَّهُ قَالَ : ‏

‏نُهِيَ عَنْ بَيْعَتَيْنِ الْمُلَامَسَةِ وَالْمُنَابَذَةِ ‏


أَمَّا الْمُلَامَسَةُ فَأَنْ يَلْمِسَ كُلُّ وَاحِدٍ مِنْهُمَا ثَوْبَ صَاحِبِهِ بِغَيْرِ تَأَمُّلٍ وَالْمُنَابَذَةُ أَنْ يَنْبِذَ كُلُّ وَاحِدٍ مِنْهُمَا ثَوْبَهُ إِلَى الْآخَرِ وَلَمْ يَنْظُرْ وَاحِدٌ مِنْهُمَا إِلَى ثَوْبِ صَاحِبِهِ

‘முலாமஸா’ மற்றும் ‘முனாபதா’ ஆகிய வியாபார முறைகள் இரண்டுக்கும் தடை விதிக்கப்பட்டது. ‘முலாமஸா’ என்பது, (விற்பவர் வாங்குபவர் ஆகிய இருவரில்) ஒவ்வொருவரும் மற்றவரின் (விற்பனைக்கான) துணியை யோசிக்காமல் தொட்டு(விட்டாலே வியாபார ஒப்பந்தம் முடிந்துவிட்டதாக ஆகி)விடுவதாகும். ‘முனாபதா’ என்பது, இருவரில் ஒவ்வொருவரும் மற்றவரை நோக்கித் தமது துணியை எறிய, அவர்களில் எவரும் மற்றவரின் துணியை(ப் பிரித்து)ப் பார்க்காமலேயே (வியாபாரத்தை முடித்து) விடுவதாகும்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

அத்தியாயம்: 21, பாடம்: 1, ஹதீஸ் எண்: 2780

‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى التَّمِيمِيُّ ‏ ‏قَالَ قَرَأْتُ عَلَى ‏ ‏مَالِكٍ ‏ ‏عَنْ ‏ ‏مُحَمَّدِ بْنِ يَحْيَى بْنِ حَبَّانَ ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْرَجِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ : ‏

‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏نَهَى عَنْ الْمُلَامَسَةِ وَالْمُنَابَذَةِ ‏


و حَدَّثَنَا ‏ ‏أَبُو كُرَيْبٍ ‏ ‏وَابْنُ أَبِي عُمَرَ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏وَكِيعٌ ‏ ‏عَنْ ‏ ‏سُفْيَانَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي الزِّنَادِ ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْرَجِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مِثْلَهُ ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ نُمَيْرٍ ‏ ‏وَأَبُو أُسَامَةَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الْوَهَّابِ ‏ ‏كُلُّهُمْ ‏ ‏عَنْ ‏ ‏عُبَيْدِ اللَّهِ بْنِ عُمَرَ ‏ ‏عَنْ ‏ ‏خُبَيْبِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ ‏ ‏عَنْ ‏ ‏حَفْصِ بْنِ عَاصِمٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بِمِثْلِهِ ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَعْقُوبُ يَعْنِي ابْنَ عَبْدِ الرَّحْمَنِ ‏ ‏عَنْ ‏ ‏سُهَيْلِ بْنِ أَبِي صَالِحٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مِثْلَهُ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), ‘முலாமஸா’ எனப்படும் தொடுமுறை வியாபாரத்தையும் ‘முனாபதா’ எனப்படும் எறிமுறை வியாபாரத்தையும் தடை செய்தார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)


குறிப்புகள் :

இஸ்லாத்தின் மீளெழுச்சிக்கு முன்னர், அறியாமைக் காலத்தில் நடைமுறையிலிருந்த வியாபாரங்களுள்: 1.‘முலாமஸா’ 2. ‘முனாபதா’ ஆகிய இருவகை வியாபாரங்களை நபி (ஸல்) தடை செய்தார்கள். காரணம், வியாபாரியிடம் விற்பனைக்குள்ள ஒரு பொருளை, யாராவது தொட்டுப் பார்த்தாலே அவரிடம் அப்பொருளை வலுக் கட்டாயமாகத் தலையில் கட்டி, சொல்லும் விலைக்கான தொகையை வசூலிக்கும் முறைக்கு ‘முலாமஸா’ என்றும்,

வியாபாரியிடம் ஒரு பொருளைப் பற்றி யாராவது விசாரித்தால், அப்பொருளை வியாபாரி எடுத்து, விசாரித்தவரிடம் வீசுவார். வீசப்பட்ட பொருளுக்கான விலையை, விசாரித்தவர் கொடுத்தேயாகவேண்டும். அவ்வகை வியாபாரம் ‘முனாபதா’ என்றும் வழக்கில் இருந்தன. நுகர்வோரை பாதிக்கும் அவ்விரு வியாபாரங்களும் நபி (ஸல்) அவர்களால் தடை செய்யப்பட்டன.

மேற்காணும் ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) மூலம் பல அறிவிப்பாளர்கள் வழியாகப் பதிவாகியுள்ளது.

அத்தியாயம்: 20, பாடம்: 7, ஹதீஸ் எண்: 2779

‏حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَزُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏جَرِيرٌ ‏ ‏عَنْ ‏ ‏سُهَيْلٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏قَالَ : ‏

‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لَا ‏ ‏يَجْزِي ‏ ‏وَلَدٌ وَالِدًا إِلَّا أَنْ يَجِدَهُ مَمْلُوكًا فَيَشْتَرِيَهُ فَيُعْتِقَهُ ‏


وَفِي رِوَايَةِ ‏ ‏ابْنِ أَبِي شَيْبَةَ ‏ ‏وَلَدٌ وَالِدَهُ ‏ ‏و حَدَّثَنَاه ‏ ‏أَبُو كُرَيْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏وَكِيعٌ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏ابْنُ نُمَيْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏عَمْرٌو النَّاقِدُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو أَحْمَدَ الزُّبَيْرِيُّ ‏ ‏كُلُّهُمْ ‏ ‏عَنْ ‏ ‏سُفْيَانَ ‏ ‏عَنْ ‏ ‏سُهَيْلٍ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏مِثْلَهُ وَقَالُوا وَلَدٌ وَالِدَهُ

“தன் தந்தை அடிமையாக இருப்பதை அறிந்து, அவரை மகனானவன்  விலைக்கு வாங்கி விடுதலை செய்யாதவரை தந்தைக்குச் செய்ய வேண்டிய கடமையை நிறைவேற்றியவனாக ஆகமாட்டான்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)


குறிப்பு :

இப்னு அபீ ஷைபா (ரஹ்) வழி அறிவிப்பிலும் ஸுஃப்யான் (ரஹ்) வழி அறிவிப்பிலும் “தன்” தந்தைக்குச் செய்ய வேண்டிய கடமையை என்று இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 20, பாடம்: 6, ஹதீஸ் எண்: 2778

‏و حَدَّثَنِي ‏ ‏حُمَيْدُ بْنُ مَسْعَدَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏بِشْرُ بْنُ الْمُفَضَّلِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَاصِمٌ وَهُوَ ابْنُ مُحَمَّدٍ الْعُمَرِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏وَاقِدٌ يَعْنِي أَخَاهُ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏سَعِيدُ ابْنُ مَرْجَانَةَ ‏ ‏صَاحِبُ ‏ ‏عَلِيِّ بْنِ حُسَيْنٍ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏أَبَا هُرَيْرَةَ ‏ ‏يَقُولُ : ‏

‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَيُّمَا امْرِئٍ مُسْلِمٍ أَعْتَقَ امْرَأً مُسْلِمًا اسْتَنْقَذَ اللَّهُ بِكُلِّ عُضْوٍ مِنْهُ عُضْوًا مِنْهُ مِنْ النَّارِ ‏

‏قَالَ ‏ ‏فَانْطَلَقْتُ حِينَ سَمِعْتُ الْحَدِيثَ مِنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏فَذَكَرْتُهُ ‏ ‏لِعَلِيِّ بْنِ الْحُسَيْنِ ‏ ‏فَأَعْتَقَ عَبْدًا لَهُ قَدْ أَعْطَاهُ بِهِ ‏ ‏ابْنُ جَعْفَرٍ ‏ ‏عَشْرَةَ آلَافِ دِرْهَمٍ ‏ ‏أَوْ أَلْفَ دِينَارٍ

“ஒரு முஸ்லிம், மற்றொரு முஸ்லிமான அடிமையை விடுதலை செய்தால், (விடுதலை செய்யப்பட்ட) அந்த முஸ்லிமின் ஒவ்வோர் உறுப்புக்கும் பகரமாக (விடுதலை செய்தவரின்) ஓர் உறுப்பை அல்லாஹ் நரகத்திலிருந்து காப்பாற்றுவான்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள் என அபூஹுரைரா (ரலி) அறிவித்ததை நான் கேட்டேன்.

இந்த ஹதீஸை அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்து செவியுற்ற நான், அதை அலீ பின் ஹுஸைன் (ரஹ்) அவர்களிடம் தெரிவித்தேன். அதைக் கேட்ட அலீ (ரஹ்), உடனே தம் அடிமை ஒருவரை விடுதலை செய்துவிட்டார்கள். அந்த அடிமைக்கு (விலையாக) அப்துல்லாஹ் பின் ஜஅஃபர் பின் அபீதாலிப் (ரலி) பத்தாயிரம் திர்ஹம்களை, அல்லது ஆயிரம் தீனாரை அலீ பின் ஹுஸைன் (ரஹ்) அவர்களிடம் கொடுத்திருந்தார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி) வழியாக ஸயீத் பின் அப்தில்லாஹ் இப்னு மர்ஜானா (ரஹ்)

அத்தியாயம்: 20, பாடம்: 6, ஹதீஸ் எண்: 2777

‏و حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏لَيْثٌ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ الْهَادِ ‏ ‏عَنْ ‏ ‏عُمَرَ بْنِ عَلِيِّ بْنِ حُسَيْنٍ ‏ ‏عَنْ ‏ ‏سَعِيدِ ابْنِ مَرْجَانَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏قَالَ : ‏

‏سَمِعْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَقُولُ ‏ ‏مَنْ أَعْتَقَ رَقَبَةً مُؤْمِنَةً أَعْتَقَ اللَّهُ بِكُلِّ عُضْوٍ مِنْهُ عُضْوًا مِنْ النَّارِ حَتَّى يُعْتِقَ فَرْجَهُ بِفَرْجِهِ

“இறைநம்பிக்கையுள்ள (முஃமினான) ஓர் அடிமையை யார் விடுதலை செய்கிறாரோ (விடுதலை செய்யப்பட்ட) அந்த அடிமையின் ஒவ்வோர் உறுப்புக்கும் பகரமாக (விடுதலை செய்தவரின்) உறுப்புக்களில் ஒன்றை நரகத்திலிருந்து அல்லாஹ் விடுதலை செய்வான்; அவருடைய இன உறுப்புக்குப் பகரமாக இவருடைய இன உறுப்பையும் விடுதலை செய்வான்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

அத்தியாயம்: 20, பாடம்: 6, ஹதீஸ் எண்: 2776

‏و حَدَّثَنَا ‏ ‏دَاوُدُ بْنُ رُشَيْدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ ‏ ‏عَنْ ‏ ‏مُحَمَّدِ بْنِ مُطَرِّفٍ أَبِي غَسَّانَ الْمَدَنِيِّ ‏ ‏عَنْ ‏ ‏زَيْدِ بْنِ أَسْلَمَ ‏ ‏عَنْ ‏ ‏عَلِيِّ بْنِ حُسَيْنٍ ‏ ‏عَنْ ‏ ‏سَعِيدِ ابْنِ مَرْجَانَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ : ‏

‏عَنْ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏مَنْ أَعْتَقَ رَقَبَةً أَعْتَقَ اللَّهُ بِكُلِّ عُضْوٍ مِنْهَا عُضْوًا مِنْ أَعْضَائِهِ مِنْ النَّارِ حَتَّى فَرْجَهُ بِفَرْجِهِ

“ஓர் அடிமையை யார் விடுதலை செய்கின்றாரோ அந்த அடிமையின் ஒவ்வோர் உறுப்புக்கும் பகரமாக (விடுதலை செய்தவரின்) உறுப்புகளில் ஒன்றை நரகத்திலிருந்து அல்லாஹ் விடுதலை செய்வான்; அவருடைய இன உறுப்புக்குப் பதிலாக இவருடைய இன உறுப்பையும் (விடுதலை செய்வான்)“ என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

அத்தியாயம்: 20, பாடம்: 6, ஹதீஸ் எண்: 2775

‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى الْعَنَزِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ سَعِيدٍ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ سَعِيدٍ وَهُوَ ابْنُ أَبِي هِنْدٍ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏إِسْمَعِيلُ بْنُ أَبِي حَكِيمٍ ‏ ‏عَنْ ‏ ‏سَعِيدِ ابْنِ مَرْجَانَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ : ‏

‏عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏مَنْ أَعْتَقَ رَقَبَةً مُؤْمِنَةً أَعْتَقَ اللَّهُ بِكُلِّ إِرْبٍ مِنْهَا إِرْبًا مِنْهُ مِنْ النَّارِ

“இறைநம்பிக்கையுள்ள (முஃமினான) ஓர் அடிமையை யார் விடுதலை செய்கிறாரோ (விடுதலை செய்யப்பட்ட) அந்த அடிமையின் ஒவ்வோர் உறுப்புக்கும் பகரமாக (விடுதலை செய்தவரின்) ஓர் உறுப்பை நரகத்திலிருந்து அல்லாஹ் விடுதலை செய்வான்” என்று நபி (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

அத்தியாயம்: 20, பாடம்: 5, ஹதீஸ் எண்: 2774

‏و حَدَّثَنَا ‏ ‏أَبُو كُرَيْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو مُعَاوِيَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏الْأَعْمَشُ ‏ ‏عَنْ ‏ ‏إِبْرَاهِيمَ التَّيْمِيِّ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏قَالَ : ‏

‏خَطَبَنَا ‏ ‏عَلِيُّ بْنُ أَبِي طَالِبٍ ‏ ‏فَقَالَ مَنْ زَعَمَ أَنَّ عِنْدَنَا شَيْئًا نَقْرَؤُهُ إِلَّا كِتَابَ اللَّهِ وَهَذِهِ الصَّحِيفَةَ قَالَ وَصَحِيفَةٌ مُعَلَّقَةٌ فِي ‏ ‏قِرَابِ ‏ ‏سَيْفِهِ فَقَدْ كَذَبَ فِيهَا أَسْنَانُ الْإِبِلِ وَأَشْيَاءُ مِنْ الْجِرَاحَاتِ وَفِيهَا قَالَ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏الْمَدِينَةُ ‏ ‏حَرَمٌ مَا بَيْنَ ‏ ‏عَيْرٍ ‏ ‏إِلَى ‏ ‏ثَوْرٍ ‏ ‏فَمَنْ ‏ ‏أَحْدَثَ ‏ ‏فِيهَا ‏ ‏حَدَثًا ‏ ‏أَوْ ‏ ‏آوَى ‏ ‏مُحْدِثًا ‏ ‏فَعَلَيْهِ لَعْنَةُ اللَّهِ وَالْمَلَائِكَةِ وَالنَّاسِ أَجْمَعِينَ لَا يَقْبَلُ اللَّهُ مِنْهُ يَوْمَ الْقِيَامَةِ ‏ ‏صَرْفًا ‏ ‏وَلَا ‏ ‏عَدْلًا ‏ ‏وَذِمَّةُ الْمُسْلِمِينَ وَاحِدَةٌ ‏ ‏يَسْعَى بِهَا أَدْنَاهُمْ وَمَنْ ‏ ‏ادَّعَى ‏ ‏إِلَى غَيْرِ أَبِيهِ أَوْ انْتَمَى إِلَى غَيْرِ ‏ ‏مَوَالِيهِ ‏ ‏فَعَلَيْهِ لَعْنَةُ اللَّهِ وَالْمَلَائِكَةِ وَالنَّاسِ أَجْمَعِينَ لَا يَقْبَلُ اللَّهُ مِنْهُ يَوْمَ الْقِيَامَةِ ‏ ‏صَرْفًا ‏ ‏وَلَا ‏ ‏عَدْلًا

அலீ பின் அபீதாலிப் (ரலி) எங்களுக்கு (ஒரு முறை) உரையாற்றும்போது, “நாம் ஓதிவருகின்ற இறைவேதத்தையும் (நபியவர்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற) இந்த ஏட்டையும் தவிர (எழுத்து வடிவிலான மார்க்கச் சட்டம்) வேறெதுவும் (நபியின் குடும்பத்தாரான) எங்களிடம் இருப்பதாக யார் கூறுகின்றாரோ அவர் பொய்யுரைத்து விட்டார். (அப்போது அலீ (ரலி) அவர்களது வாள் உறையில் ஓர் ஏடு பின்னிக் கிடந்தது) அந்த ஏட்டில் (உயிரீட்டிற்காகவும் ஸகாத்தாகவும் வழங்கப்படும்) ஒட்டகங்களின் வயது குறித்தும், காயங்களுக்கான தண்டனை குறித்தும் எழுதப்பட்டிருந்தது”

மேலும், அதில் “மதீனா நகரம் ‘அய்ரு’ எனும் மலையிலிருந்து ‘ஸவ்ரு’ மலைவரை புனிதமானதாகும். அதில் யார் (மார்க்கத்தின் பெயரால்) புதிதாக ஒன்றை உருவாக்குகிறாரோ, அல்லது (அவ்வாறு) புதிதாக ஒன்றை உருவாக்குபவருக்கு அடைக்கலம் அளிக்கிறாரோ அவர்மீது அல்லாஹ்வின் சாபமும் வானவர்கள் மற்றும் அனைத்து மக்களின் சாபமும் உண்டாகும். மேலும், அவர் புரிந்த கடமையான வழிபாட்டையோ கூடுதலான வழிபாட்டையோ அவரிடமிருந்து மறுமை நாளில் அல்லாஹ் ஏற்கமாட்டான். முஸ்லிம்களில் எவர் அடைக்கலம் கொடுத்தாலும் அது ஒன்றேயாகும். (மற்ற முஸ்லிம்கள் தரும் அடைக்கலத்திற்குச் சமமானதாகும்) அவர்களில் கடை நிலையில் உள்ளவர்கள்கூட அடைக்கலம் தர முன்வரலாம். யார் தம் தந்தை அல்லாத ஒருவரைத் தம் தந்தை என்று வாதிடுகின்றாரோ, அல்லது விடுதலை செய்த உரிமையாளர்கள் அல்லாத வேறு யாரையேனும் வாரிசாக ஆக்கிக்கொள்கிறரோ அவர்மீது அல்லாஹ்வின் சாபமும் வானவர்கள் மற்றும் அனைத்து மக்களின் சாபமும் உண்டாகும். மேலும், அவர் புரிந்த கடமையான வழிபாட்டையோ கூடுதலான வழிபாட்டையோ அவரிடமிருந்து மறுமை நாளில் அல்லாஹ் ஏற்கமாட்டான்” என்று நபி (ஸல்) கூறினார்கள் என்றும் (எழுதப்பட்டு) இருந்தது.

அறிவிப்பாளர் : அலீ (ரலி) வழியாக யஸீத் பின் ஷரீக் பின் தாரிக் (ரஹ்)