அத்தியாயம்: 20, பாடம்: 5, ஹதீஸ் எண்: 2773

‏حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حُسَيْنُ بْنُ عَلِيٍّ الْجُعْفِيُّ ‏ ‏عَنْ ‏ ‏زَائِدَةَ ‏ ‏عَنْ ‏ ‏سُلَيْمَانَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي صَالِحٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ : ‏

‏عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏مَنْ تَوَلَّى قَوْمًا بِغَيْرِ إِذْنِ ‏ ‏مَوَالِيهِ ‏ ‏فَعَلَيْهِ لَعْنَةُ اللَّهِ وَالْمَلَائِكَةِ وَالنَّاسِ أَجْمَعِينَ لَا يُقْبَلُ مِنْهُ يَوْمَ الْقِيَامَةِ ‏ ‏عَدْلٌ ‏ ‏وَلَا ‏ ‏صَرْفٌ ‏


و حَدَّثَنِيهِ ‏ ‏إِبْرَاهِيمُ بْنُ دِينَارٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عُبَيْدُ اللَّهِ بْنُ مُوسَى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شَيْبَانُ ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْمَشِ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏غَيْرَ أَنَّهُ قَالَ وَمَنْ ‏ ‏وَالَى ‏ ‏غَيْرَ ‏ ‏مَوَالِيهِ ‏ ‏بِغَيْرِ إِذْنِهِمْ

“தன்னை விடுதலை செய்த உரிமையாளர்களின் அனுமதியின்றி, தனக்கு வாரிசாகும் உரிமையை வேறொரு கூட்டத்தாருக்கு வழங்குகின்ற அடிமைமீது அல்லாஹ்வின் சாபமும் வானவர்கள் மற்றும் அனைத்து மக்களின் சாபமும் உண்டாகும். அவர் புரிந்த கடமையான, கூடுதலான வழிபாடுகள் எதுவும் மறுமை நாளில் அவரிடமிருந்து ஏற்கப்படாது” என்று நபி (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)


குறிப்பு :

அஃமஷ் (ரஹ்) வழி அறிவிப்பில், “… தன்னை விடுதலை செய்த உரிமையாளர்களின் அனுமதியின்றி, பிறரை உரிமையாளர்களாக ஆக்கிக்கொள்கிறாரோ …” என இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 20, பாடம்: 5, ஹதீஸ் எண்: 2772

‏حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَعْقُوبُ يَعْنِي ابْنَ عَبْدِ الرَّحْمَنِ الْقَارِيَّ ‏ ‏عَنْ ‏ ‏سُهَيْلٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ: ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏مَنْ تَوَلَّى قَوْمًا بِغَيْرِ إِذْنِ ‏ ‏مَوَالِيهِ ‏ ‏فَعَلَيْهِ لَعْنَةُ اللَّهِ وَالْمَلَائِكَةِ لَا يُقْبَلُ مِنْهُ ‏ ‏عَدْلٌ ‏ ‏وَلَا ‏ ‏صَرْفٌ

“தன்னை விடுதலை செய்த உரிமையாளர்களின் அனுமதியின்றி, தனக்கு வாரிசாகும் உரிமையை வேறொரு கூட்டத்தாருக்கு வழங்குகின்ற அடிமைமீது அல்லாஹ்வின் சாபமும் வானவர்களின் சாபமும் உண்டாகும். மேலும், அவர் புரிந்த கடமையான மற்றும் கூடுதலான வழிபாடுகள் எதுவும் அவரிடமிருந்து ஏற்கப்படாது” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

அத்தியாயம்: 20, பாடம்: 5, ஹதீஸ் எண்: 2771

‏و حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ رَافِعٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الرَّزَّاقِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ جُرَيْجٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏أَبُو الزُّبَيْرِ ‏ ‏أَنَّهُ سَمِعَ ‏ ‏جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ ‏ ‏يَقُولُ : ‏

‏كَتَبَ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏عَلَى كُلِّ ‏ ‏بَطْنٍ ‏ ‏عُقُولَهُ ‏ ‏ثُمَّ كَتَبَ أَنَّهُ ‏ ‏لَا يَحِلُّ لِمُسْلِمٍ أَنْ ‏ ‏يُتَوَالَى ‏ ‏مَوْلَى ‏ ‏رَجُلٍ مُسْلِمٍ بِغَيْرِ إِذْنِهِ ثُمَّ أُخْبِرْتُ أَنَّهُ لَعَنَ فِي صَحِيفَتِهِ مَنْ فَعَلَ ذَلِكَ

நபி (ஸல்), ஒவ்வொரு குலத்தாரின் மீதும், (அவர்களில் ஒருவர் தவறுதலாகச் செய்துவிட்ட கொலைக் குற்றத்திற்கு) உரிய இழப்பீட்டை வழங்க வேண்டும் என விதியாக்கினார்கள். பிறகு “எந்த ஒரு முஸ்லிமும் மற்றொரு முஸ்லிமால் விடுதலை செய்யப்பட்ட அடிமைக்கு, அவரது அனுமதியின்றி வாரிசு ஆவது சட்டப்படிக் கூடாது” என்றும் விதியாக்கினார்கள்.

அறிவிப்பாளர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)


குறிப்பு :

“ … அவ்வாறு செய்பவரை நபி (ஸல்) (பல்வேறு குலங்களுக்கு எழுதிய) தமது கடிதத்தில் சபித்திருந்தார்கள் என்றும் எனக்குத் தெரிவிக்கப்பட்டது” என்று இதன் அறிவிப்பாளர்களுள் ஒருவரான அபுஸ்ஸுபைர் (ரஹ்) கூறுகின்றார்.

அத்தியாயம்: 20, பாடம்: 4, ஹதீஸ் எண்: 2770

‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى التَّمِيمِيُّ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏سُلَيْمَانُ بْنُ بِلَالٍ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عُمَرَ : ‏

‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏نَهَى عَنْ بَيْعِ ‏ ‏الْوَلَاءِ ‏ ‏وَعَنْ هِبَتِهِ ‏


قَالَ ‏ ‏مُسْلِم ‏ ‏النَّاسُ كُلُّهُمْ عِيَالٌ عَلَى ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ ‏ ‏فِي هَذَا الْحَدِيثِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَزُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏ابْنُ عُيَيْنَةَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ أَيُّوبَ ‏ ‏وَقُتَيْبَةُ ‏ ‏وَابْنُ حُجْرٍ ‏ ‏قَالُوا حَدَّثَنَا ‏ ‏إِسْمَعِيلُ بْنُ جَعْفَرٍ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏ابْنُ نُمَيْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ بْنُ سَعِيدٍ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏ابْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏ابْنُ الْمُثَنَّى ‏ ‏قَالَ حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الْوَهَّابِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عُبَيْدُ اللَّهِ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏ابْنُ رَافِعٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ أَبِي فُدَيْكٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏الضَّحَّاكُ يَعْنِي ابْنَ عُثْمَانَ ‏ ‏كُلُّ هَؤُلَاءِ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عُمَرَ ‏ ‏عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بِمِثْلِهِ ‏ ‏غَيْرَ أَنَّ ‏ ‏الثَّقَفِيَّ ‏ ‏لَيْسَ فِي حَدِيثِهِ عَنْ ‏ ‏عُبَيْدِ اللَّهِ ‏ ‏إِلَّا الْبَيْعُ وَلَمْ يَذْكُرْ الْهِبَةَ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), (விடுவித்த அடிமைக்கு) வாரிசாகும் உரிமையைப் பிறருக்கு விற்பதற்கும் அன்பளிப்பாக வழங்குவதற்கும் தடை விதித்தார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி)


குறிப்புகள் :

அறியாமைக் காலத்தில், அடிமையை விடுதலை செய்து பெறுகின்ற வாரிசுரிமையை, பிறருக்கு விற்கின்ற / அன்பளிப்புச் செய்கின்ற பழக்கம் இருந்தது. நபி (ஸல்) அவர்களால் அப்பழக்கம் ஒழிக்கப்பட்டது.

அப்துல் வஹ்ஹாப் பின் அப்தில் மஜீத் அஸ்ஸகஃபீ (ரஹ்) வழி அறிவிப்பில், “அன்பளிப்பாக வழங்குவதற்குத் தடை விதித்தார்கள்” என்றில்லாமல், “விற்பதற்குத் தடை விதித்தார்கள்” என்பது மட்டும் இடம்பெற்றுள்ளது.

“இந்த ஹதீஸை அறிவிப்பவர்கள் அனைவரும் அப்துல்லாஹ் பின் தீனார் (ரஹ்) அவர்களிடமிருந்தே அறிவிக்கின்றனர்” என்று இமாம் முஸ்லிம் (ரஹ்) குறிப்பிடுகின்றார்கள்.

அத்தியாயம்: 20, பாடம்: 3, ஹதீஸ் எண்: 2769

‏و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏خَالِدُ بْنُ مَخْلَدٍ ‏ ‏عَنْ ‏ ‏سُلَيْمَانَ بْنِ بِلَالٍ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏سُهَيْلُ بْنُ أَبِي صَالِحٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏قَالَ : ‏

‏أَرَادَتْ ‏ ‏عَائِشَةُ ‏ ‏أَنْ تَشْتَرِيَ ‏ ‏جَارِيَةً ‏ ‏تُعْتِقُهَا فَأَبَى أَهْلُهَا إِلَّا أَنْ يَكُونَ لَهُمْ ‏ ‏الْوَلَاءُ ‏ ‏فَذَكَرَتْ ذَلِكَ لِرَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقَالَ لَا يَمْنَعُكِ ذَلِكِ فَإِنَّمَا ‏ ‏الْوَلَاءُ ‏ ‏لِمَنْ أَعْتَقَ

ஆயிஷா (ரலி), ஓர் அடிமைப் பெண்ணை விலைக்கு வாங்கி விடுதலை செய்ய விரும்பினார்கள். அப்பெண்ணின் உரிமையாளர்கள், அவளுக்கு வாரிசாகும் உரிமை தங்களுக்கு இருந்தால் தவிர (விற்க மாட்டோம்) என மறுத்துவிட்டனர். இதைப் பற்றி ஆயிஷா அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சொன்னபோது, “அ(வர்களின் (செல்லாத) நிபந்தனையான)து உனக்குத் தடையாக இராது. ஏனெனில்,  (சட்டப்படி அடிமையின்) வாரிசுரிமை, விடுதலை செய்தவருக்கே” என்று சொன்னார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

அத்தியாயம்: 20, பாடம்: 3, ஹதீஸ் எண்: 2768

‏و حَدَّثَنِي ‏ ‏أَبُو الطَّاهِرِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏مَالِكُ بْنُ أَنَسٍ ‏ ‏عَنْ ‏ ‏رَبِيعَةَ بْنِ أَبِي عَبْدِ الرَّحْمَنِ ‏ ‏عَنْ ‏ ‏الْقَاسِمِ بْنِ مُحَمَّدٍ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ زَوْجِ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَنَّهَا قَالَتْ : ‏

‏كَانَ فِي ‏ ‏بَرِيرَةَ ‏ ‏ثَلَاثُ سُنَنٍ خُيِّرَتْ عَلَى زَوْجِهَا حِينَ عَتَقَتْ وَأُهْدِيَ لَهَا لَحْمٌ فَدَخَلَ عَلَيَّ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَالْبُرْمَةُ ‏ ‏عَلَى النَّارِ فَدَعَا بِطَعَامٍ فَأُتِيَ بِخُبْزٍ ‏ ‏وَأُدُمٍ ‏ ‏مِنْ ‏ ‏أُدُمِ ‏ ‏الْبَيْتِ فَقَالَ أَلَمْ أَرَ ‏ ‏بُرْمَةً ‏ ‏عَلَى النَّارِ فِيهَا لَحْمٌ فَقَالُوا بَلَى يَا رَسُولَ اللَّهِ ذَلِكَ لَحْمٌ تُصُدِّقَ بِهِ عَلَى ‏ ‏بَرِيرَةَ ‏ ‏فَكَرِهْنَا أَنْ نُطْعِمَكَ مِنْهُ فَقَالَ هُوَ عَلَيْهَا صَدَقَةٌ وَهُوَ مِنْهَا لَنَا هَدِيَّةٌ وَقَالَ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فِيهَا إِنَّمَا ‏ ‏الْوَلَاءُ ‏ ‏لِمَنْ أَعْتَقَ

பரீராவால் மூன்று முன்மாதிரிகள் (நமக்குக்) கிடைத்தன:

  1. அவர் விடுதலை பெற்றபோது தம் (அடிமைக்) கணவர் விஷயத்தில் (அவருடன் சேர்ந்து வாழ, அல்லது பிரிந்துவிட) விருப்ப உரிமை அளிக்கப்பட்டார்.
  2. எனக்கு அன்பளிப்பாக இறைச்சி வழங்கப்பட்டது. அடுப்பில் சமையல் பாத்திரம் இருக்கும் நிலையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) என்னிடம் வந்து உணவு கேட்டார்கள். அப்போது அவர்களுக்கு முன்னால் ரொட்டியும் வீட்டிலிருந்த குழம்பும் கொண்டுவரப்பட்டது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “நான் அடுப்பில் இறைச்சியுள்ள பாத்திரத்தைக் கண்டேனே?” என்று கேட்டார்கள். அ(தற்கு அங்கிருந்த)வர்கள், “ஆம்; அல்லாஹ்வின் தூதரே! (ஆயினும்,) அது பரீராவுக்குத் தர்மமாக வழங்கப்பட்ட இறைச்சி. தர்மப் பொருளை உங்களுக்கு உண்ணத் தருவதை நாங்கள் விரும்பவில்லை” என்று கூறினர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “அது பரீராவிற்குத்தான் தர்மம்; நமக்கு அது (பரீராவின்) அன்பளிப்பு” என்று கூறினார்கள்.
  3. மேலும், பரீரா விஷயத்தில்தான் “விடுதலை செய்தவருக்கே (அடிமையின் சொத்தில்) வாரிசுரிமை உரியதாகும்” என்றும் கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)

அத்தியாயம்: 20, பாடம்: 3, ஹதீஸ் எண்: 2767

‏و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏وَابْنُ بَشَّارٍ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هِشَامٍ ‏ ‏قَالَ ‏ ‏ابْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُغِيرَةُ بْنُ سَلَمَةَ الْمَخْزُومِيُّ أَبُو هِشَامٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏وُهَيْبٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عُبَيْدُ اللَّهِ ‏ ‏عَنْ ‏ ‏يَزِيدَ بْنِ رُومَانَ ‏ ‏عَنْ ‏ ‏عُرْوَةَ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏قَالَتْ : ‏

‏كَانَ زَوْجُ ‏ ‏بَرِيرَةَ ‏ ‏عَبْدًا

பரீராவின் கணவர் அடிமையாக இருந்தார்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)

அத்தியாயம்: 20, பாடம்: 3, ஹதீஸ் எண்: 2766

‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏عَبْدَ الرَّحْمَنِ بْنَ الْقَاسِمِ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏الْقَاسِمَ ‏ ‏يُحَدِّثُ عَنْ ‏ ‏عَائِشَةَ : ‏

‏أَنَّهَا أَرَادَتْ أَنْ تَشْتَرِيَ ‏ ‏بَرِيرَةَ ‏ ‏لِلْعِتْقِ فَاشْتَرَطُوا ‏ ‏وَلَاءَهَا ‏ ‏فَذَكَرَتْ ذَلِكَ لِرَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقَالَ اشْتَرِيهَا وَأَعْتِقِيهَا فَإِنَّ ‏ ‏الْوَلَاءَ ‏ ‏لِمَنْ أَعْتَقَ وَأُهْدِيَ لِرَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لَحْمٌ فَقَالُوا لِلنَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏هَذَا تُصُدِّقَ بِهِ عَلَى ‏ ‏بَرِيرَةَ ‏ ‏فَقَالَ هُوَ لَهَا صَدَقَةٌ وَهُوَ لَنَا هَدِيَّةٌ وَخُيِّرَتْ فَقَالَ ‏ ‏عَبْدُ الرَّحْمَنِ ‏ ‏وَكَانَ زَوْجُهَا حُرًّا قَالَ ‏ ‏شُعْبَةُ ‏ ‏ثُمَّ سَأَلْتُهُ عَنْ زَوْجِهَا فَقَالَ لَا أَدْرِي ‏


و حَدَّثَنَاه ‏ ‏أَحْمَدُ بْنُ عُثْمَانَ النَّوْفَلِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو دَاوُدَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏نَحْوَهُ

நான் பரீராவை விலைக்கு வாங்கி விடுதலை செய்ய விரும்பினேன். (அவருடைய உரிமையாளர்கள்) அவருக்கு வாரிசாகும் உரிமை தங்களுக்கே வேண்டும் என நிபந்தனையிட்டார்கள். அது குறித்து நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சொன்னேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “நீ அவரை விலைக்கு வாங்கி விடுதலை செய்துவிடு. வாரிசாகும் உரிமை, (சட்டப்படி அவ்வடிமையை) விடுதலை செய்தவருக்கே” என்று கூறினார்கள்.

பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு இறைச்சி அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அப்போது மக்கள், “இது பரீராவுக்குத் தர்மமாகக் கிடைத்தது” என்று கூறினர். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “இது அவருக்குத் தர்மமாகும்; நமக்கு (பரீராவின்) அன்பளிப்பாகும்” என்று சொன்னார்கள்.

மேலும், பரீரா (தம் கணவருடன் சேர்ந்து வாழ, அல்லது பிரிந்துவிட) விருப்ப உரிமை அளிக்கப்பட்டார்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)


குறிப்பு :

அப்துர் ரஹ்மான் பின் அல்காஸிம் (ரஹ்) (இந்த ஹதீஸை எனக்கு அறிவிக்கையில்) “பரீராவின் கணவர் சுதந்திரமான மனிதராக இருந்தார்” என்றார். பின்னர் அவரிடம் பரீராவின் கணவரைப் பற்றி மேற்கொண்டு கேட்டபோது, “எனக்குத் தெரியாது” என்று சொல்லிவிட்டார் என இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான ஷுஅபா (ரஹ்) கூறுகின்றார்.

அத்தியாயம்: 20, பாடம்: 3, ஹதீஸ் எண்: 2765

‏و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حُسَيْنُ بْنُ عَلِيٍّ ‏ ‏عَنْ ‏ ‏زَائِدَةَ ‏ ‏عَنْ ‏ ‏سِمَاكٍ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْقَاسِمِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ : ‏

‏أَنَّهَا اشْتَرَتْ ‏ ‏بَرِيرَةَ ‏ ‏مِنْ أُنَاسٍ مِنْ ‏ ‏الْأَنْصَارِ ‏ ‏وَاشْتَرَطُوا ‏ ‏الْوَلَاءَ ‏ ‏فَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏الْوَلَاءُ ‏ ‏لِمَنْ وَلِيَ النِّعْمَةَ وَخَيَّرَهَا رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَكَانَ زَوْجُهَا عَبْدًا وَأَهْدَتْ ‏ ‏لِعَائِشَةَ ‏ ‏لَحْمًا فَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لَوْ صَنَعْتُمْ لَنَا مِنْ هَذَا اللَّحْمِ قَالَتْ ‏ ‏عَائِشَةُ ‏ ‏تُصُدِّقَ بِهِ عَلَى ‏ ‏بَرِيرَةَ ‏ ‏فَقَالَ هُوَ لَهَا صَدَقَةٌ وَلَنَا هَدِيَّةٌ

நான் அன்ஸாரிகளில் சிலரிடமிருந்து (அவர்களின் அடிமையாக இருந்த) பரீராவை விலைக்குக் கேட்டேன். அப்போது அவர்கள், அவருக்கு வாரிசாகும் உரிமை தங்களுக்கே வேண்டும் என நிபந்தனை விதித்தனர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “(விடுதலை எனும்) உபகாரம் செய்தவருக்கே வாரிசாகும் உரிமை உண்டு” என்று கூறினார்கள்.

(விடுதலையடைந்த) பரீராவுக்கு (அவர் தம் கணவருடன் சேர்ந்து வாழ, அல்லது பிரிந்துவிட) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) விருப்ப உரிமை அளித்தார்கள். அவருடைய கணவரும் அடிமையாகவே இருந்தார்.

பரீரா (ஒரு முறை) எனக்கு அன்பளிப்பாக இறைச்சியை வழங்கினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “இந்த இறைச்சியிலிருந்து நமக்கு (உணவு) தயாரித்திருந்தால் நன்றாயிருக்குமே!” என்று சொன்னார்கள். நான், “இது பரீராவுக்குத் தர்மமாக வழங்கப்பட்டதாயிற்றே?” என்றேன். அதற்கு “இது அவருக்கு தர்மமாகும்; நமக்கு (பரீராவின்) அன்பளிப்பாகும்” என்றார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)

அத்தியாயம்: 20, பாடம்: 3, ஹதீஸ் எண்: 2764

‏حَدَّثَنَا ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏وَمُحَمَّدُ بْنُ الْعَلَاءِ ‏ ‏وَاللَّفْظُ ‏ ‏لِزُهَيْرٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏أَبُو مُعَاوِيَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏هِشَامُ بْنُ عُرْوَةَ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْقَاسِمِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏قَالَتْ : ‏

‏كَانَ فِي ‏ ‏بَرِيرَةَ ‏ ‏ثَلَاثُ قَضِيَّاتٍ أَرَادَ أَهْلُهَا أَنْ يَبِيعُوهَا وَيَشْتَرِطُوا وَلَاءَهَا فَذَكَرْتُ ذَلِكَ لِلنَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقَالَ اشْتَرِيهَا وَأَعْتِقِيهَا فَإِنَّ ‏ ‏الْوَلَاءَ ‏ ‏لِمَنْ أَعْتَقَ قَالَتْ وَعَتَقَتْ فَخَيَّرَهَا رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَاخْتَارَتْ نَفْسَهَا قَالَتْ وَكَانَ النَّاسُ يَتَصَدَّقُونَ عَلَيْهَا ‏ ‏وَتُهْدِي لَنَا فَذَكَرْتُ ذَلِكَ لِلنَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقَالَ هُوَ عَلَيْهَا صَدَقَةٌ وَهُوَ لَكُمْ هَدِيَّةٌ فَكُلُوهُ

பரீராவால் மூன்று தீர்வுகள் (நமக்குக்) கிட்டின:

  1. அவருடைய உரிமையாளர்கள் அவருடைய வாரிசுரிமை தமக்கே உரியது என நிபந்தனையிட்டு, அவரை விற்பதற்கு முன்வந்தனர். அதை நான் நபி (ஸல்) அவர்களிடம் கூறியபோது “நீ அவரை விலைக்கு வாங்கி விடுதலை செய்துவிடு. விடுதலை செய்தவருக்கே (சட்டப்படி அடிமையின்) வாரிசுரிமை உரியதாகும்” என்று கூறினார்கள்.
  2. அவர் விடுதலை செய்யப்பட்டபோது, (தம் அடிமைக் கணவருடனான உறவைத் தொடரவும் முறித்துக்கொள்ளவும்) அவருக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) விருப்ப உரிமை வழங்கினார்கள். அப்போது அவர் தனித்து வாழ்வதையே தேர்ந்தெடுத்துக்கொண்டார்.
  3. மக்கள் அவருக்கு தர்மப் பொருட்களை வழங்குவார்கள்; (அவற்றை) அவர் எங்களுக்கு அன்பளிப்பாக வழங்குவார். அது குறித்து நான் நபி (ஸல்) அவர்களிடம் தெரிவித்தபோது, “இது அவருக்கு தர்மமாகும்; உங்களுக்கு அது அன்பளிப்பாகும். எனவே, அதை நீங்கள் உண்ணலாம்” என்று நபி (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)