அத்தியாயம்: 15, பாடம்: 88, ஹதீஸ் எண்: 2453

‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏قَالَ قَرَأْتُ عَلَى ‏ ‏مَالِكٍ ‏ ‏عَنْ ‏ ‏مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ ‏ ‏عَنْ ‏ ‏جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ : ‏

أَنَّ أَعْرَابِيًّا بَايَعَ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَأَصَابَ الْأَعْرَابِيَّ ‏ ‏وَعْكٌ ‏ ‏بِالْمَدِينَةِ ‏ ‏فَأَتَى النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقَالَ يَا ‏ ‏مُحَمَّدُ ‏ ‏أَقِلْنِي ‏ ‏بَيْعَتِي فَأَبَى رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏ثُمَّ جَاءَهُ فَقَالَ ‏ ‏أَقِلْنِي ‏ ‏بَيْعَتِي فَأَبَى ثُمَّ جَاءَهُ فَقَالَ ‏ ‏أَقِلْنِي ‏ ‏بَيْعَتِي فَأَبَى فَخَرَجَ الْأَعْرَابِيُّ فَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِنَّمَا ‏ ‏الْمَدِينَةُ ‏ ‏كَالْكِيرِ ‏ ‏تَنْفِي ‏ ‏خَبَثَهَا ‏ ‏وَيَنْصَعُ ‏ ‏طَيِّبُهَا

கிராமவாசி ஒருவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வதாக) விசுவாசப் பிரமாணம் செய்தார். (அதன் பின்னர்) அந்தக் கிராமவாசிக்கு மதீனாவில் கடுமையான காய்ச்சல் ஏற்பட்டது. ஆகவே, அவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “முஹம்மதே! என் விசுவாசப் பிரமாணத்திலிருந்து என்னை விடுவித்துவிடுங்கள்” என்று சொன்னார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) மறுத்துவிட்டார்கள். பின்னர் (மீண்டும்) வந்து, “என் விசுவாசப் பிரமாணத்திலிருந்து என்னை நீக்கிவிடுங்கள்” என்றார். அப்போதும் நபி (ஸல்) மறுத்து விட்டார்கள். பிறகு (மீண்டும்) வந்து, “என் விசுவாசப் பிரமாணத்திலிருந்து என்னை நீக்கி விடுங்கள்” என்றார். அப்போதும் நபி (ஸல்) மறுத்துவிடவே, அந்தக் கிராமவாசி (மதீனாவிலிருந்து) வெளியேறினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “மதீனா, (கொல்லனின்) உலை போன்றதாகும். அது தன்னிலுள்ள தீயவர்களை வெளியேற்றிவிடும்; அதிலுள்ள நல்லவர்கள் தூய்மை அடைவார்கள்” என்று சொன்னார்கள்.

அறிவிப்பாளர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)

அத்தியாயம்: 15, பாடம்: 88, ஹதீஸ் எண்: 2452

‏و حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏عَنْ ‏ ‏مَالِكِ بْنِ أَنَسٍ ‏ ‏فِيمَا قُرِئَ عَلَيْهِ ‏ ‏عَنْ ‏ ‏يَحْيَى بْنِ سَعِيدٍ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏أَبَا الْحُبَابِ سَعِيدَ بْنَ يَسَارٍ ‏ ‏يَقُولُ سَمِعْتُ ‏ ‏أَبَا هُرَيْرَةَ ‏ ‏يَقُولُ : ‏

قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أُمِرْتُ بِقَرْيَةٍ تَأْكُلُ الْقُرَى يَقُولُونَ ‏ ‏يَثْرِبَ ‏ ‏وَهِيَ ‏ ‏الْمَدِينَةُ ‏ ‏تَنْفِي ‏ ‏النَّاسَ كَمَا يَنْفِي ‏ ‏الْكِيرُ ‏ ‏خَبَثَ الْحَدِيدِ ‏


و حَدَّثَنَا ‏ ‏عَمْرٌو النَّاقِدُ ‏ ‏وَابْنُ أَبِي عُمَرَ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏ابْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الْوَهَّابِ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏يَحْيَى بْنِ سَعِيدٍ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ وَقَالَ ‏ ‏كَمَا يَنْفِي ‏ ‏الْكِيرُ ‏ ‏الْخَبَثَ ‏ ‏لَمْ يَذْكُرَا الْحَدِيدَ

“எல்லா ஊர்களையும் தூக்கிச் சாப்பிடக்கூடிய, ‘யஸ்ரிப்’ என மக்கள் கூறக்கூடிய ஓர் ஊருக்கு (நாடு துறந்து செல்லுமாறு) நான் கட்டளையிடப்பட்டேன். அதுதான் மதீனாவாகும். இரும்பின் துருவை (கொல்லனின்) உலை நீக்கிவிடுவதைப் போன்று மதீனா (தீய) மனிதர்களை வெளியேற்றிவிடும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)


குறிப்பு :

இப்னுல் முஸன்னா (ரஹ்) போண்றோரின் வழி அறிவிப்பில், “கொல்லனின் உலை, துருவை நீக்கிவிடுவதைப் போன்று … “ என்று இடம்பெற்றுள்ளது. ‘இரும்பு’ எனும் சொல் இடம்பெறவில்லை.

அத்தியாயம்: 15, பாடம்: 88, ஹதீஸ் எண்: 2451

‏حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الْعَزِيزِ يَعْنِي الدَّرَاوَرْدِيَّ ‏ ‏عَنْ ‏ ‏الْعَلَاءِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ : ‏

أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏يَأْتِي عَلَى النَّاسِ زَمَانٌ يَدْعُو الرَّجُلُ ابْنَ عَمِّهِ وَقَرِيبَهُ ‏ ‏هَلُمَّ ‏ ‏إِلَى الرَّخَاءِ ‏ ‏هَلُمَّ ‏ ‏إِلَى الرَّخَاءِ ‏ ‏وَالْمَدِينَةُ ‏ ‏خَيْرٌ لَهُمْ لَوْ كَانُوا يَعْلَمُونَ وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَا يَخْرُجُ مِنْهُمْ أَحَدٌ رَغْبَةً عَنْهَا إِلَّا ‏ ‏أَخْلَفَ ‏ ‏اللَّهُ فِيهَا خَيْرًا مِنْهُ أَلَا إِنَّ ‏ ‏الْمَدِينَةَ ‏ ‏كَالْكِيرِ ‏ ‏تُخْرِجُ ‏ ‏الْخَبِيثَ ‏ ‏لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى تَنْفِيَ ‏ ‏الْمَدِينَةُ ‏ ‏شِرَارَهَا كَمَا يَنْفِي ‏ ‏الْكِيرُ ‏ ‏خَبَثَ الْحَدِيدِ

“மக்களுக்கு ஒரு காலம் வரும். அன்று ஒருவர் தம் தந்தையின் சகோதரர் மகனையும் தம் உறவினரையும் ‘செழிப்பான இடத்திற்கு வா! செழிப்பான இடத்திற்கு வா!’ என அழைப்பார். ஆனால், அவர்கள் (உண்மையை) அறிந்திருப்போராயின் மதீனாவே அவர்களுக்குச் சிறந்ததாகும். என் உயிர் கையிலுள்ளவன் மீது சத்தியமாக! அவர்களில் எவரேனும் மதீனாவை வெறுத்து அதிலிருந்து வெளியேறினால், அவருக்குப் பதிலாக அவரைவிடச் சிறந்தவரை அங்கு அல்லாஹ் குடியமர்த்தாமல் இருப்பதில்லை. அறிந்துகொள்ளுங்கள்! மதீனா, (கொல்லனின்) உலையைப் போன்று அசுத்தங்களை அகற்றிவிடும். இரும்பின் துருவை (கொல்லனின்) உலை நீக்கிவிடுவதைப் போன்று, மதீனா தன்னிலுள்ள தீயவர்களை வெளியேற்றாமல் இறுதி நாள் நிகழாது” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

அத்தியாயம்: 15, பாடம்: 87, ஹதீஸ் எண்: 2450

‏و حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ أَيُّوبَ ‏ ‏وَقُتَيْبَةُ ‏ ‏وَابْنُ حُجْرٍ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏إِسْمَعِيلَ بْنِ جَعْفَرٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏الْعَلَاءُ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ : ‏

أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏يَأْتِي ‏ ‏الْمَسِيحُ ‏ ‏مِنْ ‏ ‏قِبَلِ ‏ ‏الْمَشْرِقِ هِمَّتُهُ ‏ ‏الْمَدِينَةُ ‏ ‏حَتَّى يَنْزِلَ ‏ ‏دُبُرَ ‏ ‏أُحُدٍ ‏ ‏ثُمَّ تَصْرِفُ الْمَلَائِكَةُ وَجْهَهُ قِبَلَ ‏ ‏الشَّامِ ‏ ‏وَهُنَالِكَ يَهْلِكُ

“மஸீஹுத் தஜ்ஜால் (இறுதி நாள் நெருங்கும்போது) கிழக்குத் திசையிலிருந்து மதீனாவைக் குறிவைத்து வந்து, ‘உஹுத்’ மலைக்குப் பின்னால் இறங்குவான். பின்னர் வானவர்கள் அவனது முகத்தை ஷாம் (வடக்குத்) திசையை நோக்கித் திருப்பிவிடுவார்கள். அவன் அங்குதான் அழிவான்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

அத்தியாயம்: 15, பாடம்: 87, ஹதீஸ் எண்: 2449

‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏قَالَ قَرَأْتُ عَلَى ‏ ‏مَالِكٍ ‏ ‏عَنْ ‏ ‏نُعَيْمِ بْنِ عَبْدِ اللَّهِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏قَالَ : ‏

قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏عَلَى ‏ ‏أَنْقَابِ ‏ ‏الْمَدِينَةِ ‏ ‏مَلَائِكَةٌ لَا يَدْخُلُهَا الطَّاعُونُ وَلَا الدَّجَّالُ

“மதீனாவின் நுழைவாயில்களில் வானவர்கள் இருப்பர். மதீனாவிற்குள் கொள்ளை நோயும் தஜ்ஜாலும் நுழைய முடியாது” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

அத்தியாயம்: 15, பாடம்: 86, ஹதீஸ் எண்: 2448

‏و حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ أَيُّوبَ ‏ ‏وَقُتَيْبَةُ ‏ ‏وَابْنُ حُجْرٍ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏إِسْمَعِيلَ بْنِ جَعْفَرٍ ‏ ‏عَنْ ‏ ‏الْعَلَاءِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ : ‏

أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏لَا يَصْبِرُ عَلَى ‏ ‏لَأْوَاءِ ‏ ‏الْمَدِينَةِ ‏ ‏وَشِدَّتِهَا أَحَدٌ مِنْ أُمَّتِي إِلَّا كُنْتُ لَهُ شَفِيعًا يَوْمَ الْقِيَامَةِ أَوْ شَهِيدًا ‏


و حَدَّثَنَا ‏ ‏ابْنُ أَبِي عُمَرَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هَارُونَ مُوسَى بْنِ أَبِي عِيسَى ‏ ‏أَنَّهُ سَمِعَ ‏ ‏أَبَا عَبْدِ اللَّهِ الْقَرَّاظَ ‏ ‏يَقُولُ سَمِعْتُ ‏ ‏أَبَا هُرَيْرَةَ ‏ ‏يَقُولُ ‏ ‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بِمِثْلِهِ ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏يُوسُفُ بْنُ عِيسَى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏الْفَضْلُ بْنُ مُوسَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏هِشَامُ بْنُ عُرْوَةَ ‏ ‏عَنْ ‏ ‏صَالِحِ بْنِ أَبِي صَالِحٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏قَالَ ‏ ‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لَا يَصْبِرُ أَحَدٌ عَلَى ‏ ‏لَأْوَاءِ ‏ ‏الْمَدِينَةِ ‏ ‏بِمِثْلِهِ

“என் சமுதாயத்தாரில் மதீனாவின் இடர்பாடுகளையும் கஷ்ட-நஷ்டங்களையும் சகித்துக் கொள்பவருக்காக மறுமை நாளில் பரிந்துரைப்பவனாக / சான்றுரைப்பவனாக நான் இருப்பேன்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

அத்தியாயம்: 15, பாடம்: 86, ஹதீஸ் எண்: 2447

‏و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ رَافِعٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ أَبِي فُدَيْكٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏الضَّحَّاكُ ‏ ‏عَنْ ‏ ‏قَطَنٍ الْخُزَاعِيِّ ‏ ‏عَنْ ‏ ‏يُحَنَّسَ ‏ ‏مَوْلَى ‏ ‏مُصْعَبٍ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ‏ ‏قَالَ : ‏

سَمِعْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَقُولُ ‏ ‏مَنْ صَبَرَ عَلَى ‏ ‏لَأْوَائِهَا ‏ ‏وَشِدَّتِهَا كُنْتُ لَهُ شَهِيدًا أَوْ شَفِيعًا يَوْمَ الْقِيَامَةِ ‏ ‏يَعْنِي ‏ ‏الْمَدِينَةَ

“மதீனாவின் இடர்பாடுகளையும் கஷ்ட-நஷ்டங்களையும் சகித்துக்கொண்டவருக்காக மறுமை நாளில் நான் சான்றுரைப்பவனாக / பரிந்துரைப்பவனாக இருப்பேன்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்..

அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி)

அத்தியாயம்: 15, பாடம்: 86, ஹதீஸ் எண்: 2446

‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏قَالَ قَرَأْتُ عَلَى ‏ ‏مَالِكٍ ‏ ‏عَنْ ‏ ‏قَطَنِ بْنِ وَهْبِ بْنِ عُوَيْمِرِ بْنِ الْأَجْدَعِ ‏ ‏عَنْ ‏ ‏يُحَنَّسَ ‏ ‏مَوْلَى ‏ ‏الزُّبَيْرِ ‏ ‏أَخْبَرَهُ : ‏

أَنَّهُ كَانَ جَالِسًا عِنْدَ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ‏ ‏فِي الْفِتْنَةِ فَأَتَتْهُ مَوْلَاةٌ لَهُ تُسَلِّمُ عَلَيْهِ فَقَالَتْ إِنِّي أَرَدْتُ الْخُرُوجَ يَا ‏ ‏أَبَا عَبْدِ الرَّحْمَنِ ‏ ‏اشْتَدَّ عَلَيْنَا الزَّمَانُ فَقَالَ لَهَا ‏ ‏عَبْدُ اللَّهِ ‏ ‏اقْعُدِي ‏ ‏لَكَاعِ ‏ ‏فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَقُولُ ‏ ‏لَا يَصْبِرُ عَلَى ‏ ‏لَأْوَائِهَا ‏ ‏وَشِدَّتِهَا أَحَدٌ إِلَّا كُنْتُ لَهُ شَهِيدًا أَوْ شَفِيعًا يَوْمَ الْقِيَامَةِ

குழப்பமானதொரு காலகட்டத்தில் நான் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அருகில் அமர்ந்திருந்தேன். அப்போது அவர்களிடம் அவர்களுடைய அடிமைப் பெண்களில் ஒருவர் வந்து ஸலாம் சொல்லிவிட்டு, “அபூஅப்திர் ரஹ்மான் அவர்களே! நெருக்கடியான ஒரு காலகட்டம் நமக்கு ஏற்பட்டுள்ளது. எனவே, நான் (மதீனாவிலிருந்து) வெளியேற விரும்புகின்றேன்” என்று கூறினார். அப்போது அப்துல்லாஹ் பின் உமர் (ரலி), “பேதைப் பெண்ணே! உட்கார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “மதீனாவின் இடர்பாடுகளையும் கஷ்ட- நஷ்டங்களையும் சகித்துக்கொள்ளும் எவருக்கும் மறுமை நாளில் நான் சான்றுரைப்பவனாக / அல்லது பரிந்துரைப்பவனாக இருப்பேன்’ என்று கூறியதை நான் கேட்டுள்ளேன்” என்றார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி) வழியாக யுஹன்னஸ் பின் அபீமூஸா (ரஹ்)


குறிப்பு :

ஹஜ்ஜாஜ் இப்னு யூஸுஃபின் இராணுவம், இப்னுஸ் ஸுபைர் (ரலி) அவர்களை முற்றுகையிட்டபோது மேற்காணும் உரையாடல் நடைபெற்றது.

அத்தியாயம்: 15, பாடம்: 86, ஹதீஸ் எண்: 2445

‏حَدَّثَنِي ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عُثْمَانُ بْنُ عُمَرَ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏عِيسَى بْنُ حَفْصِ بْنِ عَاصِمٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏نَافِعٌ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عُمَرَ ‏ ‏قَالَ : ‏

سَمِعْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَقُولُ ‏ ‏مَنْ صَبَرَ عَلَى ‏ ‏لَأْوَائِهَا ‏ ‏كُنْتُ لَهُ شَفِيعًا أَوْ شَهِيدًا يَوْمَ الْقِيَامَةِ

“மதீனாவின் இடர்பாடுகளைச் சகித்துக்கொண்டவருக்காக மறுமை நாளில் நான் பரிந்துரைப்பவனாக / சான்றுரைப்பவனாக இருப்பேன்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி)

அத்தியாயம்: 15, பாடம்: 86, ஹதீஸ் எண்: 2444

‏و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدَةُ ‏ ‏عَنْ ‏ ‏هِشَامٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏قَالَتْ : ‏

قَدِمْنَا ‏ ‏الْمَدِينَةَ ‏ ‏وَهِيَ وَبِيئَةٌ فَاشْتَكَى ‏ ‏أَبُو بَكْرٍ ‏ ‏وَاشْتَكَى ‏ ‏بِلَالٌ ‏ ‏فَلَمَّا رَأَى رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏شَكْوَى أَصْحَابِهِ قَالَ ‏ ‏اللَّهُمَّ حَبِّبْ إِلَيْنَا ‏ ‏الْمَدِينَةَ ‏ ‏كَمَا حَبَّبْتَ ‏ ‏مَكَّةَ ‏ ‏أَوْ أَشَدَّ وَصَحِّحْهَا وَبَارِكْ لَنَا فِي ‏ ‏صَاعِهَا ‏ ‏وَمُدِّهَا ‏ ‏وَحَوِّلْ ‏ ‏حُمَّاهَا ‏ ‏إِلَى الْجُحْفَةِ ‏


و حَدَّثَنَا ‏ ‏أَبُو كُرَيْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو أُسَامَةَ ‏ ‏وَابْنُ نُمَيْرٍ ‏ ‏عَنْ ‏ ‏هِشَامِ بْنِ عُرْوَةَ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏نَحْوَهُ

நாங்கள் (நாடு துறந்து) மதீனாவிற்கு வந்தபோது, மதீனாவில் பெருநோய் ஏற்பட்டிருந்தது. அபூபக்ரு (ரலி) அவர்களும் பிலால் (ரலி) அவர்களும் நோய்வாய்ப்பட்டனர். தம் தோழர்கள் நோய்வாய்ப்படுவதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கண்டபோது, “இறைவா! நீ மக்காவை எங்கள் நேசத்திற்குரியதாக ஆக்கியதைப் போன்று, அல்லது அதைவிட அதிகமாக மதீனாவை எங்கள் நேசத்திற்குரியதாக ஆக்குவாயாக! மேலும், இந்நகரை நோயற்றதாகவும் ஆக்குவாயாக! இதன் (முகத்தல் அளவைகளான) ‘ஸாஉ’விலும் ‘முத்’துவிலும் எங்களுக்கு நீ வளத்தை வழங்குவாயாக! இங்குள்ள காய்ச்சல் நோயை ‘ஜுஹ்ஃபா’ எனுமிடத்திற்கு இடம்பெயரச் செய்வாயாக!” என்று பிரார்த்தித்தார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)