அத்தியாயம்: 15, பாடம்: 85, ஹதீஸ் எண்: 2423

‏و حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏بَكْرٌ يَعْنِي ابْنَ مُضَرَ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ الْهَادِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي بَكْرِ بْنِ مُحَمَّدٍ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ عُثْمَانَ ‏ ‏عَنْ ‏ ‏رَافِعِ بْنِ خَدِيجٍ ‏ ‏قَالَ : ‏

قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِنَّ ‏ ‏إِبْرَاهِيمَ ‏ ‏حَرَّمَ ‏ ‏مَكَّةَ ‏ ‏وَإِنِّي أُحَرِّمُ مَا بَيْنَ ‏ ‏لَابَتَيْهَا ‏ ‏يُرِيدُ ‏ ‏الْمَدِينَةَ

“இப்ராஹீம் (அலை) மக்காவைப் புனித நகரமாக அறிவித்தார்கள். நான், இந்த இரு மலைகளுக்கு இடைப்பட்ட (மதீனா) நகரப் பகுதியைப் புனிதமானதாக அறிவிக்கின்றேன்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : ராஃபிஉ பின் கதீஜ் (ரலி)

அத்தியாயம்: 15, பாடம்: 85, ஹதீஸ் எண்: 2422

‏حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الْعَزِيزِ يَعْنِي ابْنَ مُحَمَّدٍ الدَّرَاوَرْدِيَّ ‏ ‏عَنْ ‏ ‏عَمْرِو بْنِ يَحْيَى الْمَازِنِيِّ ‏ ‏عَنْ ‏ ‏عَبَّادِ بْنِ تَمِيمٍ ‏ ‏عَنْ ‏ ‏عَمِّهِ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ زَيْدِ بْنِ عَاصِمٍ : ‏

أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏إِنَّ ‏ ‏إِبْرَاهِيمَ ‏ ‏حَرَّمَ ‏ ‏مَكَّةَ ‏ ‏وَدَعَا لِأَهْلِهَا وَإِنِّي حَرَّمْتُ ‏ ‏الْمَدِينَةَ ‏ ‏كَمَا حَرَّمَ ‏ ‏إِبْرَاهِيمُ ‏ ‏مَكَّةَ ‏ ‏وَإِنِّي دَعَوْتُ فِي ‏ ‏صَاعِهَا ‏ ‏وَمُدِّهَا ‏ ‏بِمِثْلَيْ مَا دَعَا بِهِ ‏ ‏إِبْرَاهِيمُ ‏ ‏لِأَهْلِ ‏ ‏مَكَّةَ ‏


و حَدَّثَنِيهِ ‏ ‏أَبُو كَامِلٍ الْجَحْدَرِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الْعَزِيزِ يَعْنِي ابْنَ الْمُخْتَارِ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏خَالِدُ بْنُ مَخْلَدٍ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏سُلَيْمَانُ بْنُ بِلَالٍ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَاه ‏ ‏إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏الْمَخْزُومِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏وُهَيْبٌ ‏ ‏كُلُّهُمْ ‏ ‏عَنْ ‏ ‏عَمْرِو بْنِ يَحْيَى هُوَ الْمَازِنِيُّ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏أَمَّا حَدِيثُ ‏ ‏وُهَيْبٍ ‏ ‏فَكَرِوَايَةِ ‏ ‏الدَّرَاوَرْدِيِّ ‏ ‏بِمِثْلَيْ مَا دَعَا بِهِ ‏ ‏إِبْرَاهِيمُ ‏ ‏وَأَمَّا ‏ ‏سُلَيْمَانُ بْنُ بِلَالٍ ‏ ‏وَعَبْدُ الْعَزِيزِ بْنُ الْمُخْتَارِ ‏ ‏فَفِي رِوَايَتِهِمَا مِثْلَ مَا دَعَا بِهِ ‏ ‏إِبْرَاهِيمُ

“இப்ராஹீம் (அலை) மக்காவைப் புனித நகரமாக அறிவித்து, மக்காவாசிகளுக்காகப் பிரார்த்தித்தார்கள். இப்ராஹீம் (அலை) மக்காவைப் புனித நகரமாக அறிவித்ததைப் போன்று நான் மதீனாவைப் புனித நகரமாக அறிவிக்கின்றேன். இப்ராஹீம் (அலை) மக்காவாசிகளுக்காகப் பிரார்த்தித்ததைப் போன்று நான் மதீனாவின் (முகத்தல் அளவைகளான) ‘ஸாஉ’ மற்றும் ‘முத்’து ஆகியவற்றில் இரு மடங்கு (வளம் ஏற்படப்) பிரார்த்திக்கின்றேன்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் ஸைத் பின் ஆஸிம் (ரலி)


குறிப்புகள் :

உஹைப் பின் காலித் (ரஹ்) வழி அறிவிப்பில் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே “இப்ராஹீம் (அலை) மக்காவாசிகளுக்காகப் பிரார்த்தித்ததைப் போன்று இரு மடங்கு (வளம் வேண்டி) நான் பிரார்த்திக்கின்றேன்” என்று இடம்பெற்றுள்ளது.

சுலைமான் பின் பிலால் (ரஹ்) மற்றும் அப்துல் அஸீஸ் பின் அல்முக்தார் (ரஹ்) ஆகியோரது அறிவிப்பில் “இப்ராஹீம் (அலை) பிரார்த்தித்ததைப் போன்றே …” என இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 15, பாடம்: 84, ஹதீஸ் எண்: 2421

‏و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَالْحَسَنُ الْحُلْوَانِيُّ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏أَبُو أُسَامَةَ ‏ ‏عَنْ ‏ ‏مُسَاوِرٍ الْوَرَّاقِ ‏ ‏قَالَ حَدَّثَنِي ‏ ‏وَفِي رِوَايَةِ ‏ ‏الْحُلْوَانِيِّ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏جَعْفَرَ بْنَ عَمْرِو بْنِ حُرَيْثٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏قَالَ : ‏

كَأَنِّي أَنْظُرُ إِلَى رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏عَلَى الْمِنْبَرِ ‏ ‏وَعَلَيْهِ عِمَامَةٌ سَوْدَاءُ قَدْ أَرْخَى طَرَفَيْهَا بَيْنَ كَتِفَيْهِ ‏


وَلَمْ يَقُلْ ‏ ‏أَبُو بَكْرٍ ‏ ‏عَلَى الْمِنْبَرِ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (மக்கா வெற்றி நாளில்) தலையில் கறுப்புத் தலைப்பாகை கட்டி, அதன் இரு ஓரங்களையும் தம் தோள்களுக்குமிடையே தொங்கவிட்டவர்களாகச் சொற்பொழிவு மேடை மீதிருந்ததை இப்போதும் என் மனக்கண்ணால் காண்கின்றேன்.

அறிவிப்பாளர் : அம்ரு பின் ஹுரைஸ் (ரலி)


குறிப்பு :

அபூபக்ரு பின் அபீஷைபா (ரஹ்) வழி அறிவிப்பில் “சொற்பொழிவு மேடை மீதிருந்ததை…“ எனும் குறிப்பு இடம்பெறவில்லை.

அத்தியாயம்: 15, பாடம்: 84, ஹதீஸ் எண்: 2420

‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏وَإِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏قَالَا أَخْبَرَنَا ‏ ‏وَكِيعٌ ‏ ‏عَنْ ‏ ‏مُسَاوِرٍ الْوَرَّاقِ ‏ ‏عَنْ ‏ ‏جَعْفَرِ بْنِ عَمْرِو بْنِ حُرَيْثٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ : ‏

أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏خَطَبَ النَّاسَ وَعَلَيْهِ عِمَامَةٌ سَوْدَاءُ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (மக்கா வெற்றி நாளில்) தலையில் கறுப்புத் தலைப்பாகை கட்டிய நிலையில் மக்களுக்கு உரை நிகழ்த்தினார்கள்.

அறிவிப்பாளர் : அம்ரு பின் ஹுரைஸ் (ரலி)

அத்தியாயம்: 15, பாடம்: 84, ஹதீஸ் எண்: 2419

‏حَدَّثَنَا ‏ ‏عَلِيُّ بْنُ حَكِيمٍ الْأَوْدِيُّ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏شَرِيكٌ ‏ ‏عَنْ ‏ ‏عَمَّارٍ الدُّهْنِيِّ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي الزُّبَيْرِ ‏ ‏عَنْ ‏ ‏جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ : ‏

أَنَّ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏دَخَلَ يَوْمَ فَتْحِ ‏ ‏مَكَّةَ ‏ ‏وَعَلَيْهِ عِمَامَةٌ سَوْدَاءُ

நபி (ஸல்) மக்கா வெற்றி நாளில் தலையில் கறுப்புத் தலைப்பாகையுடன் (மக்காவினுள்) நுழைந்தார்கள்.

அறிவிப்பாளர் : ஜாபிர் (ரலி)

அத்தியாயம்: 15, பாடம்: 84, ஹதீஸ் எண்: 2418

‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى التَّمِيمِيُّ ‏ ‏وَقُتَيْبَةُ بْنُ سَعِيدٍ الثَّقَفِيُّ ‏ ‏و قَالَ ‏ ‏يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏و قَالَ ‏ ‏قُتَيْبَةُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُعَاوِيَةُ بْنُ عَمَّارٍ الدُّهْنِيُّ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي الزُّبَيْرِ ‏ ‏عَنْ ‏ ‏جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ الْأَنْصَارِيِّ : ‏

أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏دَخَلَ ‏ ‏مَكَّةَ ‏ ‏وَقَالَ ‏ ‏قُتَيْبَةُ ‏ ‏دَخَلَ يَوْمَ فَتْحِ ‏ ‏مَكَّةَ ‏ ‏وَعَلَيْهِ عِمَامَةٌ سَوْدَاءُ بِغَيْرِ إِحْرَامٍ ‏


وَفِي رِوَايَةِ ‏ ‏قُتَيْبَةَ ‏ ‏قَالَ حَدَّثَنَا ‏ ‏أَبُو الزُّبَيْرِ ‏ ‏عَنْ ‏ ‏جَابِرٍ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) இஹ்ராமின்றி தலையில் கறுப்புத் தலைப்பாகை அணிந்த நிலையில் மக்காவிற்குள் நுழைந்தார்கள்.

அறிவிப்பாளர் : ஜாபிர் (ரலி)


குறிப்பு :

குதைபா (ரஹ்) வழி அறிவிப்பில், “மக்காவின் வெற்றி நாளில் நுழைந்தார்கள்” என்ற கூடுதல் தகவலுடன் இடம் பெற்றுள்ளது.

அத்தியாயம்: 15, பாடம்: 84, ஹதீஸ் எண்: 2417

‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ الْقَعْنَبِيُّ ‏ ‏وَيَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏وَقُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏أَمَّا ‏ ‏الْقَعْنَبِيُّ ‏ ‏فَقَالَ قَرَأْتُ عَلَى ‏ ‏مَالِكِ بْنِ أَنَسٍ ‏ ‏وَأَمَّا ‏ ‏قُتَيْبَةُ ‏ ‏فَقَالَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مَالِكٌ ‏ ‏و قَالَ ‏ ‏يَحْيَى ‏ ‏وَاللَّفْظُ لَهُ قُلْتُ ‏ ‏لِمَالِكٍ ‏ ‏أَحَدَّثَكَ ‏ ‏ابْنُ شِهَابٍ ‏ ‏عَنْ ‏ ‏أَنَسِ بْنِ مَالِكٍ : ‏

أَنَّ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏دَخَلَ ‏ ‏مَكَّةَ ‏ ‏عَامَ الْفَتْحِ وَعَلَى رَأْسِهِ ‏ ‏مِغْفَرٌ ‏ ‏فَلَمَّا نَزَعَهُ جَاءَهُ رَجُلٌ فَقَالَ ‏ ‏ابْنُ خَطَلٍ ‏ ‏مُتَعَلِّقٌ بِأَسْتَارِ ‏ ‏الْكَعْبَةِ ‏ ‏فَقَالَ اقْتُلُوهُ فَقَالَ ‏ ‏مَالِكٌ ‏ ‏نَعَمْ

நான் மாலிக் பின் அனஸ் (ரஹ்) அவர்களிடம், “நபி (ஸல்) மக்கா வெற்றி ஆண்டில் (இஹ்ராம் இல்லாத நிலையில்) தலையில் இரும்புத் தொப்பியுடன்  மக்காவினுள் நுழைந்தார்கள். அதை அவர்கள் கழற்றியபோது ஒருவர் வந்து, ‘இப்னு கத்தல் (அபயம் வேண்டி) கஅபாவின் திரைகளைப் பிடித்துக்கொண்டிருக்கின்றான்’ என்று கூறினார். அப்போது நபி (ஸல்) ‘அவனைக் கொன்றுவிடுங்கள்’ என உத்தரவிட்டார்கள் என அனஸ் (ரலி) அவர்களிடமிருந்து இப்னு ஷிஹாப் (ரஹ்) தங்களுக்கு அறிவித்தார்களா?” என்று கேட்டேன். அதற்கு மாலிக் பின் அனஸ் (ரஹ்) “ஆம்” என்றார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் (ரலி) வழியாக யஹ்யா பின் யஹ்யா (ரஹ்)

அத்தியாயம்: 15, பாடம்: 83, ஹதீஸ் எண்: 2416

‏حَدَّثَنِي ‏ ‏سَلَمَةُ بْنُ شَبِيبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ أَعْيَنَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مَعْقِلٌ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي الزُّبَيْرِ ‏ ‏عَنْ ‏ ‏جَابِرٍ ‏ ‏قَالَ : ‏

سَمِعْتُ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَقُولُ ‏ ‏لَا يَحِلُّ لِأَحَدِكُمْ أَنْ يَحْمِلَ ‏ ‏بِمَكَّةَ ‏ ‏السِّلَاحَ

“மக்காவிற்குள் ஆயுதம் எடுத்துச் செல்வதற்கு உங்களில் எவருக்கும் அனுமதி இல்லை” என்று நபி (ஸல்) கூற நான் செவியேற்றுள்ளேன்.

அறிவிப்பாளர் : ஜாபிர் (ரலி)

அத்தியாயம்: 15, பாடம்: 82, ஹதீஸ் எண்: 2415

‏حَدَّثَنِي ‏ ‏إِسْحَقُ بْنُ مَنْصُورٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏عُبَيْدُ اللَّهِ بْنُ مُوسَى ‏ ‏عَنْ ‏ ‏شَيْبَانَ ‏ ‏عَنْ ‏ ‏يَحْيَى ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏أَبُو سَلَمَةَ ‏ ‏أَنَّهُ سَمِعَ ‏ ‏أَبَا هُرَيْرَةَ ‏ ‏يَقُولُ : ‏

إِنَّ ‏ ‏خُزَاعَةَ ‏ ‏قَتَلُوا رَجُلًا مِنْ ‏ ‏بَنِي لَيْثٍ ‏ ‏عَامَ فَتْحِ ‏ ‏مَكَّةَ ‏ ‏بِقَتِيلٍ مِنْهُمْ قَتَلُوهُ فَأُخْبِرَ بِذَلِكَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَرَكِبَ ‏ ‏رَاحِلَتَهُ ‏ ‏فَخَطَبَ فَقَالَ ‏ ‏إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ حَبَسَ عَنْ ‏ ‏مَكَّةَ ‏ ‏الْفِيلَ وَسَلَّطَ عَلَيْهَا رَسُولَهُ وَالْمُؤْمِنِينَ أَلَا وَإِنَّهَا لَمْ تَحِلَّ لِأَحَدٍ قَبْلِي وَلَنْ تَحِلَّ لِأَحَدٍ بَعْدِي أَلَا وَإِنَّهَا أُحِلَّتْ لِي سَاعَةً مِنْ النَّهَارِ أَلَا وَإِنَّهَا سَاعَتِي هَذِهِ حَرَامٌ لَا ‏ ‏يُخْبَطُ ‏ ‏شَوْكُهَا وَلَا ‏ ‏يُعْضَدُ ‏ ‏شَجَرُهَا وَلَا يَلْتَقِطُ ‏ ‏سَاقِطَتَهَا ‏ ‏إِلَّا مُنْشِدٌ وَمَنْ قُتِلَ لَهُ قَتِيلٌ فَهُوَ بِخَيْرِ النَّظَرَيْنِ إِمَّا أَنْ يُعْطَى ‏ ‏يَعْنِي ‏ ‏الدِّيَةَ ‏ ‏وَإِمَّا أَنْ ‏ ‏يُقَادَ ‏ ‏أَهْلُ الْقَتِيلِ قَالَ فَجَاءَ رَجُلٌ مِنْ أَهْلِ ‏ ‏الْيَمَنِ ‏ ‏يُقَالُ لَهُ ‏ ‏أَبُو شَاهٍ ‏ ‏فَقَالَ اكْتُبْ لِي يَا رَسُولَ اللَّهِ فَقَالَ اكْتُبُوا ‏ ‏لِأَبِي شَاهٍ ‏ ‏فَقَالَ رَجُلٌ مِنْ ‏ ‏قُرَيْشٍ ‏ ‏إِلَّا ‏ ‏الْإِذْخِرَ ‏ ‏فَإِنَّا نَجْعَلُهُ فِي بُيُوتِنَا وَقُبُورِنَا فَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِلَّا ‏ ‏الْإِذْخِرَ

மக்கா வெற்றி ஆண்டில் ‘குஸாஆ’ குலத்தார், ‘பனூ லைஸ்’ குலத்தாரில் ஒருவரைக் கொலை செய்துவிட்டனர். (அறியாமைக் காலத்தில்) தங்களில் ஒருவரை பனூ லைஸ் குலத்தார் கொலை செய்ததற்குப் பதிலாகவே குஸாஆ குலத்தார் இதைச் செய்தனர். இதைப் பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தெரிவிக்கப்பட்டபோது, அவர்கள் தமது வாகனத்தின் மீதேறி,

“வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் இந்த(ப் புனித) மக்கா நகரை விட்டும் யானைப் படையைத் தடுத்து நிறுத்தினான். மக்காவின் மீது தன் தூதருக்கும் இறைநம்பிக்கையாளர்களுக்கும் அல்லாஹ் ஆதிக்கம் அளித்தான். எச்சரிக்கை! மக்காவினுள் போர் செய்வது எனக்கு முன்னர் யாருக்கும் அனுமதிக்கப்பட்டதில்லை. எனக்குப் பின்னரும் எவருக்கும் ஒருபோதும் அனுமதிக்கப்படப்போவதில்லை. கவனத்தில் கொள்க! எனக்குக்கூட பகலில் சிறிது நேரம் போரிடவே அனுமதிக்கப்பட்டது. எச்சரிக்கை! (இங்குப்) போர் செய்வது, இந்த நேரத்திலிருந்து (முற்றாகத்) தடை செய்யப்பட்டுவிட்டது. இங்குள்ள முட்கள் பிடுங்கப்படக் கூடாது. இதன் மரங்கள் வெட்டப்படக் கூடாது. இங்கே கீழே விழுந்து கிடக்கும் பொருட்களை (அவற்றைப் பற்றி) மக்களுக்கு அறிவிப்புச் செய்பவரைத் தவிர வேறு யாரும் எடுக்கக் கூடாது. ஒருவர் கொலை செய்யப்பட்டுவிட்டால், அவருடைய உறவினர்கள் இழப்பீடு பெறுதல், அல்லது பழிவாங்குதல் ஆகிய இரண்டு முடிவுகளில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம்” என்று உரையாற்றினார்கள்.

அப்போது யமன்வாசிகளில் அபூஷாஹ் எனப்படும் ஒருவர் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! (இந்த உரையை) எனக்கு எழுதித் தரச் சொல்லுங்கள்” என்று கேட்டுக்கொண்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “அபூஷாஹிற்கு (என் உரையை) எழுதிக் கொடுங்கள்” என்று சொன்னார்கள்.

அப்போது குறைஷியரில் ஒருவர், “(மக்காவின் செடிகொடிகளை வெட்டக் கூடாது என்பதிலிருந்து) ‘இத்கிர்’ புல்லிற்கு விலக்கு அளியுங்கள். ஏனெனில், நாங்கள் அதை எங்கள் வீடுகளி(ன் கூரைகளி)லும் எங்கள் சவக் குழிகளிலும் பயன்படுத்திக்கொண்டிருக்கின்றோம்” என்று கூறினார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) “இத்கிர் புல்லைத் தவிர” என்றார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

அத்தியாயம்: 15, பாடம்: 82, ஹதீஸ் எண்: 2414

‏حَدَّثَنِي ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏وَعُبَيْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏الْوَلِيدِ ‏ ‏قَالَ ‏ ‏زُهَيْرٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏الْأَوْزَاعِيُّ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏يَحْيَى بْنُ أَبِي كَثِيرٍ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏أَبُو سَلَمَةَ هُوَ ابْنُ عَبْدِ الرَّحْمَنِ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏أَبُو هُرَيْرَةَ ‏ ‏قَالَ : ‏

لَمَّا فَتَحَ اللَّهُ عَزَّ وَجَلَّ عَلَى رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مَكَّةَ ‏ ‏قَامَ فِي النَّاسِ فَحَمِدَ اللَّهَ وَأَثْنَى عَلَيْهِ ثُمَّ قَالَ ‏ ‏إِنَّ اللَّهَ حَبَسَ عَنْ ‏ ‏مَكَّةَ ‏ ‏الْفِيلَ وَسَلَّطَ عَلَيْهَا رَسُولَهُ وَالْمُؤْمِنِينَ وَإِنَّهَا لَنْ تَحِلَّ لِأَحَدٍ كَانَ قَبْلِي وَإِنَّهَا أُحِلَّتْ لِي سَاعَةً مِنْ نَهَارٍ وَإِنَّهَا لَنْ تَحِلَّ لِأَحَدٍ بَعْدِي فَلَا يُنَفَّرُ صَيْدُهَا وَلَا ‏ ‏يُخْتَلَى ‏ ‏شَوْكُهَا وَلَا تَحِلُّ ‏ ‏سَاقِطَتُهَا ‏ ‏إِلَّا ‏ ‏لِمُنْشِدٍ ‏ ‏وَمَنْ قُتِلَ لَهُ قَتِيلٌ فَهُوَ بِخَيْرِ النَّظَرَيْنِ إِمَّا أَنْ يُفْدَى وَإِمَّا أَنْ يُقْتَلَ فَقَالَ ‏ ‏الْعَبَّاسُ ‏ ‏إِلَّا ‏ ‏الْإِذْخِرَ ‏ ‏يَا رَسُولَ اللَّهِ فَإِنَّا نَجْعَلُهُ فِي قُبُورِنَا وَبُيُوتِنَا فَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِلَّا ‏ ‏الْإِذْخِرَ ‏ ‏فَقَامَ ‏ ‏أَبُو شَاهٍ ‏ ‏رَجُلٌ مِنْ أَهْلِ ‏ ‏الْيَمَنِ ‏ ‏فَقَالَ اكْتُبُوا لِي يَا رَسُولَ اللَّهِ فَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏اكْتُبُوا ‏ ‏لِأَبِي شَاهٍ ‏


قَالَ ‏ ‏الْوَلِيدُ ‏ ‏فَقُلْتُ ‏ ‏لِلْأَوْزَاعِيِّ ‏ ‏مَا قَوْلُهُ اكْتُبُوا لِي يَا رَسُولَ اللَّهِ قَالَ هَذِهِ الْخُطْبَةَ الَّتِي سَمِعَهَا مِنْ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ

வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ், தன் தூதர் (ஸல்) அவர்களுக்கு மக்கா நகர வெற்றியை அளித்தபோது, மக்கள் மத்தியில் அவர்கள் நின்று அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்துவிட்டு, “அல்லாஹ், மக்காவை (துவம்சம் செய்வதை)விட்டும் யானைப் படையைத் தடுத்தான். அதன் மீது (தற்போது) தன் தூதருக்கும் ஓரிறைநம்பிக்கையாளர்களுக்கும் அதிகாரம் வழங்கியுள்ளான். இந்த மக்கா நகரில் எனக்கு முன்பு எவருக்கும் போரிடுவதற்கு அனுமதியளிக்கப்பட்டதில்லை. எனக்கும்கூட பகலின் சிறிது நேரம் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. எனக்குப் பின்பும் அது எவருக்கும் ஒருபோதும் அனுமதிக்கப்படாது. ஆகவே, இதன் வேட்டைப் பிராணிகள் விரட்டப்படக் கூடாது. இதன் முட்கள் வெட்டப்படக் கூடாது. இங்குக் கீழே விழுந்து கிடக்கும் பொருள், அதை அறிவிப்புச் செய்பவருக்கே தவிர வேறெவருக்கும் அனுமதிக்கப்படாது. எவர், கொல்லப்பட்ட தன் உறவினர் தொடர்பான உரிமை பெற்றிருக்கிறாரோ அவர் இரண்டு முடிவுகளில் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். ஒன்று, (சட்டப்படி) இழப்பீட்டுத் தொகை பெற்றுக்கொள்ளலாம்; அல்லது பழிவாங்கிக்கொள்ளலாம்” என்று கூறினார்கள்.

அப்பாஸ் (ரலி), “அல்லாஹ்வின் தூதரே! (செடிகொடிகள் பிடுங்கப்படாது என்பதில்) இத்கிர் புல்லைத் தவிரவா? ஏனெனில், அதை நாங்கள் எங்கள் சவக் குழிகளுக்கும் வீடுகளுக்கும் பயன்படுத்துகிறோமே?” என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “இத்கிர் புல்லைத் தவிர” என்று விடையளித்தார்கள். அப்போது யமன்வாசிகளில் ஒருவரான அபூஷாஹ் (ரலி) என்பவர் எழுந்து, “அல்லாஹ்வின் தூதரே! (இதை) எனக்கு எழுதிக் கொடுங்கள்” என்று கேட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “அபூஷாஹுக்கு எழுதிக் கொடுங்கள்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)


குறிப்பு :

“எனக்கு (இதை) எழுதிக் கொடுங்கள் அல்லாஹ்வின் தூதரே! எனும் அபூஷாஹ் (ரலி) அவர்களது வேண்டுகோள் எதைக் குறிக்கின்றது?” என்று (இந்த ஹதீஸை எனக்கு அறிவித்த) அவ்ஸாயீ (ரஹ்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள், “அல்லாஹ்வின் தூதரிடமிருந்து அவர் கேட்ட இந்த உரையை(எழுதிக் கொடுக்கச் சொன்னதை)யே குறிக்கிறது” என்று பதிலளித்தார்கள் என்பதாக (இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) வலீத் பின் முஸ்லிம் (ரஹ்) கூறுகின்றார்.