அத்தியாயம்: 15, பாடம்: 82, ஹதீஸ் எண்: 2413

‏حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏لَيْثٌ ‏ ‏عَنْ ‏ ‏سَعِيدِ بْنِ أَبِي سَعِيدٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي شُرَيْحٍ الْعَدَوِيِّ ‏ ‏أَنَّهُ قَالَ ‏ ‏لِعَمْرِو بْنِ سَعِيدٍ : ‏

وَهُوَ يَبْعَثُ الْبُعُوثَ إِلَى ‏ ‏مَكَّةَ ‏ ‏ائْذَنْ لِي أَيُّهَا الْأَمِيرُ أُحَدِّثْكَ قَوْلًا قَامَ بِهِ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏الْغَدَ مِنْ يَوْمِ الْفَتْحِ سَمِعَتْهُ أُذُنَايَ وَوَعَاهُ قَلْبِي وَأَبْصَرَتْهُ عَيْنَايَ حِينَ تَكَلَّمَ بِهِ أَنَّهُ حَمِدَ اللَّهَ وَأَثْنَى عَلَيْهِ ثُمَّ قَالَ ‏ ‏إِنَّ ‏ ‏مَكَّةَ ‏ ‏حَرَّمَهَا اللَّهُ وَلَمْ يُحَرِّمْهَا النَّاسُ فَلَا يَحِلُّ لِامْرِئٍ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ أَنْ يَسْفِكَ بِهَا دَمًا وَلَا ‏ ‏يَعْضِدَ ‏ ‏بِهَا شَجَرَةً فَإِنْ أَحَدٌ ‏ ‏تَرَخَّصَ ‏ ‏بِقِتَالِ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فِيهَا فَقُولُوا لَهُ إِنَّ اللَّهَ أَذِنَ لِرَسُولِهِ وَلَمْ يَأْذَنْ لَكُمْ وَإِنَّمَا أَذِنَ لِي فِيهَا سَاعَةً مِنْ نَهَارٍ وَقَدْ عَادَتْ حُرْمَتُهَا الْيَوْمَ كَحُرْمَتِهَا بِالْأَمْسِ وَلْيُبَلِّغْ الشَّاهِدُ الْغَائِبَ ‏‏فَقِيلَ ‏ ‏لِأَبِي شُرَيْحٍ ‏ ‏مَا قَالَ لَكَ ‏ ‏عَمْرٌو ‏ ‏قَالَ ‏ ‏أَنَا أَعْلَمُ بِذَلِكَ مِنْكَ يَا ‏ ‏أَبَا شُرَيْحٍ ‏ ‏إِنَّ الْحَرَمَ لَا يُعِيذُ عَاصِيًا وَلَا ‏ ‏فَارًّا ‏ ‏بِدَمٍ وَلَا ‏ ‏فَارًّا ‏ ‏بِخَرْبَةٍ

அம்ரு பின் ஸயீத், (அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்களுக்கு எதிராக) மக்காவை நோக்கிப் படைப் பிரிவுகளை அனுப்பியபோது அவரிடம் அபூ ஷுரைஹ் அல்அதவீ (ரலி) கூறினார்கள்:

தலைவரே! எனக்கு அனுமதி தாருங்கள்! மக்கா வெற்றிக்கு மறு நாள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறிய செய்தியை உங்களுக்கு நான் அறிவிக்கின்றேன். என் காதுகள் அதைக் கேட்டிருக்கின்றன. எனது உள்ளம் அதை நினைவில் வைத்துள்ளது. அதை அவர்கள் கூறியபோது என் கண்கள் அவர்களைப் பார்த்திருக்கின்றன.

அவ்வுரையின்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்துவிட்டு, “அல்லாஹ்தான் மக்கா நகருக்குப் புனிதத்தை வழங்கினான். அதற்குப் புனிதத்தை வழங்கியவர்கள் மனிதர்களல்லர். எனவே, அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பக்கூடிய எவருக்கும் இங்கு (சண்டையிட்டு) இரத்தத்தைச் சிந்துவதற்கோ, இங்குள்ள மரம் செடிகொடிகளை வெட்டுவதற்கோ அனுமதி இல்லை. அல்லாஹ்வின் தூதர் (மக்கா வெற்றி நாளில் ஒரு பகற்பொழுது மட்டும்) இங்குப் போரிட்டதால் (அதைக் காரணமாகக் காட்டி) இதைப் பொது அனுமதி என்று யாரேனும் கருதினால், ‘அல்லாஹ் தன் தூதருக்கு மட்டும்தான் அனுமதியளித்தான், உங்களுக்கு அவன் அனுமதி வழங்கவில்லை’ என்று சொல்லிவிடுங்கள். எனக்குக்கூட (நேற்றைய) பகலில் சிறிது நேரம் மட்டுமே அல்லாஹ் அனுமதியளித்தான். இன்று அதன் முந்தைய புனிதத் தன்மைக்கு அது மீண்டு வந்துவிட்டது. (நான் சொன்ன விஷயங்கள் யாவற்றையும் இங்கு) வந்திருப்பவர்கள் வராதவர்களுக்குச் சொல்லிவிடுங்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அப்போது “அதற்கு அம்ரு பின் ஸயீத் என்ன பதிலளித்தார்?” என்று அபூஷுரைஹ் (ரலி) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு “அபூஷுரைஹே! உம்மைவிட இதைப் பற்றி நான் நன்கறிவேன். நிச்சயமாக (புனித நகரமான) மக்கா, குற்றவாளிக்கும் மரண தண்டனைக்குப் பயந்து (மக்காவிற்குள்) ஓடிவந்த(கொலைக் குற்றம் புரிந்த)வனுக்கும், திருட்டுக் குற்றம் புரிந்துவிட்டு ஓடிவந்தவனுக்கும் பாதுகாப்பளிக்காது என்று அம்ரு கூறினார்” என்றார்கள்.

அறிவிப்பாளர் : அபூ ஷுரைஹ் அல்அதவீ (ரலி) வழியாக ஸயீத் பின் அபீஸயீத் (ரஹ்)


குறிப்பு :

அம்ரு பின் ஸயீத் என்பவர், யஸீதின் ஆட்சியின்கீழ் மதீனாவின் ஆளுநராக நியமிக்கப்பட்டிருந்தார்.

அத்தியாயம்: 15, பாடம்: 82, ஹதீஸ் எண்: 2412

‏حَدَّثَنَا ‏ ‏إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ الْحَنْظَلِيُّ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏جَرِيرٌ ‏ ‏عَنْ ‏ ‏مَنْصُورٍ ‏ ‏عَنْ ‏ ‏مُجَاهِدٍ ‏ ‏عَنْ ‏ ‏طَاوُسٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عَبَّاسٍ ‏ ‏قَالَ : ‏

قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَوْمَ الْفَتْحِ فَتْحِ ‏ ‏مَكَّةَ ‏ ‏لَا هِجْرَةَ وَلَكِنْ جِهَادٌ وَنِيَّةٌ وَإِذَا ‏ ‏اسْتُنْفِرْتُمْ ‏ ‏فَانْفِرُوا ‏ ‏وَقَالَ يَوْمَ الْفَتْحِ فَتْحِ ‏ ‏مَكَّةَ ‏ ‏إِنَّ هَذَا ‏ ‏الْبَلَدَ ‏ ‏حَرَّمَهُ اللَّهُ يَوْمَ خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ فَهُوَ حَرَامٌ بِحُرْمَةِ اللَّهِ إِلَى يَوْمِ الْقِيَامَةِ وَإِنَّهُ لَمْ يَحِلَّ الْقِتَالُ فِيهِ لِأَحَدٍ قَبْلِي وَلَمْ يَحِلَّ لِي إِلَّا سَاعَةً مِنْ نَهَارٍ فَهُوَ حَرَامٌ بِحُرْمَةِ اللَّهِ إِلَى يَوْمِ الْقِيَامَةِ لَا ‏ ‏يُعْضَدُ ‏ ‏شَوْكُهُ وَلَا يُنَفَّرُ صَيْدُهُ وَلَا يَلْتَقِطُ إِلَّا مَنْ ‏ ‏عَرَّفَهَا ‏ ‏وَلَا ‏ ‏يُخْتَلَى ‏ ‏خَلَاهَا ‏ ‏فَقَالَ ‏ ‏الْعَبَّاسُ ‏ ‏يَا رَسُولَ اللَّهِ إِلَّا ‏ ‏الْإِذْخِرَ ‏ ‏فَإِنَّهُ ‏ ‏لِقَيْنِهِمْ ‏ ‏وَلِبُيُوتِهِمْ فَقَالَ إِلَّا ‏ ‏الْإِذْخِرَ ‏


و حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ رَافِعٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ آدَمَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُفَضَّلٌ ‏ ‏عَنْ ‏ ‏مَنْصُورٍ ‏ ‏فِي هَذَا الْإِسْنَادِ ‏ ‏بِمِثْلِهِ وَلَمْ يَذْكُرْ يَوْمَ خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَقَالَ بَدَلَ الْقِتَالِ الْقَتْلَ وَقَالَ لَا يَلْتَقِطُ ‏ ‏لُقَطَتَهُ ‏ ‏إِلَّا مَنْ ‏ ‏عَرَّفَهَا

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) மக்கா வெற்றி நிகழ்ந்த நாளில், “இனி ஹிஜ்ரத் (மக்காவைத் துறப்பது) என்பது கிடையாது. ஆயினும், அறப்போர் புரிவதும் (அதற்காகவும் பிற நற்செயல்கள் புரியவும்) நாட்டம் கொள்வதும்தான் உள்ளது. நீங்கள் போருக்குப் புறப்படும்படி அழைக்கப்பட்டால் போருக்குச் செல்லுங்கள்” என்று கூறினார்கள். மேலும் (அதே) மக்கா வெற்றி நாளில், “அல்லாஹ் வானங்களையும் பூமியையும் படைத்த நாள் முதலாய் இந்த நகரத்தைப் புனிதமாக்கியுள்ளான். அல்லாஹ் புனிதமாக்கிய காரணத்தால் இது மறுமை நாள் வரை புனிதமானதாகவே இருக்கும். மேலும், எனக்கு முன்னர் (வாழ்ந்த) யாருக்கும் இங்குப் போர் புரிய அனுமதி தரப்படவில்லை. எனக்கும்கூட (இந்த மக்கா வெற்றி நாளில்) பகலில் சிறிது நேரம் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. அல்லாஹ் இந்த நகரத்தைப் புனிதமாக்கியுள்ள காரணத்தால் இது, மறுமை நாள்வரை புனிதமானதாகவே திகழும். இங்கு அதன் முட்கள் வெட்டப்படக் கூடாது. அதன் வேட்டைப் பிராணி விரட்டப்படக் கூடாது. இங்கே கீழே விழுந்து கிடக்கும் பொருளை, அதை அறிவிப்புச் செய்(து உரியவரிடம் சேர்ப்)பவர் தவிர வேறெவரும் எடுக்கக் கூடாது. இங்குள்ள புற்பூண்டுகளைப் பறிக்கக் கூடாது” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

உடனே (என் தந்தை) அப்பாஸ் (ரலி), “அல்லாஹ்வின் தூதரே! இத்கிர் புல்லைத் தவிரவா? ஏனெனில், அது அவர்களுடைய உலோகத் தொழிலாளர்களுக்கு(உலை மூட்டவு)ம், அவர்களுடைய வீடுக(ளின் மேல்கூரை)களுக்கும் பயன்படுகிறதே?” என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “(ஆம்) இத்கிரைத் தவிர” என்று விடையளித்தார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி)


குறிப்பு :

முஃபள்ளல் (ரஹ்) வழி அறிவிப்பில், “வானங்களையும் பூமியையும் படைத்த நாள் முதலாய் …” எனும் குறிப்பு இடம்பெறவில்லை. “போர் புரிய” என்பதற்குப் பகரமாக “உயிர்ச் சேதம் விளைவிக்க” என்று காணப்படுகிறது. “இங்குக் கீழே விழுந்து கிடக்கும் பொருளை, அதை அறிவிப்புச் செய்பவர் தவிர வேறெவரும் எடுக்கக் கூடாது” என்பதைக் குறிக்க, ‘லா யல்தகிது லுக்தத்தஹு இல்லா மன் அர்ரஃபஹா’ எனும் சொற்றொடர் இடம் பெற்றுள்ளது.

அத்தியாயம்: 15, பாடம்: 81, ஹதீஸ் எண்: 2411

‏و حَدَّثَنَا ‏ ‏إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏عَبْدُ الرَّزَّاقِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ جُرَيْجٍ ‏ ‏وَأَمْلَاهُ عَلَيْنَا إِمْلَاءً أَخْبَرَنِي ‏ ‏إِسْمَعِيلُ بْنُ مُحَمَّدِ بْنِ سَعْدٍ ‏ ‏أَنَّ ‏ ‏حُمَيْدَ بْنَ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ ‏ ‏أَخْبَرَهُ أَنَّ ‏ ‏السَّائِبَ بْنَ يَزِيدَ ‏ ‏أَخْبَرَهُ أَنَّ ‏ ‏الْعَلَاءَ بْنَ الْحَضْرَمِيِّ ‏ ‏أَخْبَرَهُ : ‏

عَنْ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏مَكْثُ ‏ ‏الْمُهَاجِرِ ‏ ‏بِمَكَّةَ ‏ ‏بَعْدَ ‏ ‏قَضَاءِ ‏ ‏نُسُكِهِ ‏ ‏ثَلَاثٌ ‏


و حَدَّثَنِي ‏ ‏حَجَّاجُ بْنُ الشَّاعِرِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏الضَّحَّاكُ بْنُ مَخْلَدٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ جُرَيْجٍ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏مِثْلَهُ

“முஹாஜிர், (ஹஜ்) கிரியைகளை நிறைவேற்றிய பிறகு மக்காவில் மூன்று இரவுகள் தங்கியிருக்கலாம்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அலாஉ பின் அல்ஹள்ரமீ (ரலி)

அத்தியாயம்: 15, பாடம்: 81, ஹதீஸ் எண்: 2410

‏و حَدَّثَنَا ‏ ‏حَسَنٌ الْحُلْوَانِيُّ ‏ ‏وَعَبْدُ بْنُ حُمَيْدٍ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏يَعْقُوبَ بْنِ إِبْرَاهِيمَ بْنِ سَعْدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏عَنْ ‏ ‏صَالِحٍ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ الرَّحْمَنِ بْنِ حُمَيْدٍ ‏ ‏أَنَّهُ سَمِعَ ‏ ‏عُمَرَ بْنَ عَبْدِ الْعَزِيزِ ‏ ‏يَسْأَلُ ‏ ‏السَّائِبَ بْنَ يَزِيدَ ‏ ‏فَقَالَ ‏ ‏السَّائِبُ ‏ ‏سَمِعْتُ ‏ ‏الْعَلَاءَ بْنَ الْحَضْرَمِيِّ ‏ ‏يَقُولُ : ‏

سَمِعْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَقُولُ ‏ ‏ثَلَاثُ لَيَالٍ يَمْكُثُهُنَّ ‏ ‏الْمُهَاجِرُ ‏ ‏بِمَكَّةَ ‏ ‏بَعْدَ ‏ ‏الصَّدَرِ

ஸாயிப் பின் யஸீத் (ரலி) அவர்களிடம் உமர் பின் அப்தில் அஸீஸ் (ரஹ்), மக்காவில் முஹாஜிர் தங்குவதைப் பற்றிக் கேட்டார். அதற்கு ஸாயிப் (ரலி), “முஹாஜிர் (மினாவிலிருந்து) திரும்பிய பிறகு மூன்று இரவுகள் மக்காவில் தங்கியிருக்கலாம் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள் என்று அலாஉ பின் அல்ஹள்ரமீ (ரலி) சொல்ல நான் கேட்டுள்ளேன்” என்றார்கள்.

அறிவிப்பாளர் : ஸாயிப் பின் யஸீத் (ரலி) வழியாக அப்துர் ரஹ்மான் பின் ஹுமைத் (ரஹ்)

அத்தியாயம்: 15, பாடம்: 81, ஹதீஸ் எண்: 2409

‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ الرَّحْمَنِ بْنِ حُمَيْدٍ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏عُمَرَ بْنَ عَبْدِ الْعَزِيزِ ‏ ‏يَقُولُ لِجُلَسَائِهِ مَا سَمِعْتُمْ فِي سُكْنَى ‏ ‏مَكَّةَ ‏ ‏فَقَالَ ‏ ‏السَّائِبُ بْنُ يَزِيدَ ‏ ‏سَمِعْتُ ‏ ‏الْعَلَاءَ ‏ ‏أَوْ قَالَ ‏ ‏الْعَلَاءَ بْنَ الْحَضْرَمِيِّ : ‏

قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يُقِيمُ ‏ ‏الْمُهَاجِرُ ‏ ‏بِمَكَّةَ ‏ ‏بَعْدَ ‏ ‏قَضَاءِ ‏ ‏نُسُكِهِ ‏ ‏ثَلَاثًا

உமர் பின் அப்தில் அஸீஸ் (ரஹ்) தம் அவையோரிடம், “மக்காவில் (முஹாஜிர், ஹஜ் கிரியைகளை நிறைவேற்றிவிட்டு) தங்குவது பற்றி நீங்கள் என்ன செவியுற்றுள்ளீர்கள்?” என்று கேட்டார். அப்போது (அங்கிருந்த) ஸாயிப் பின் யஸீத் (ரலி), “முஹாஜிர் தமது (ஹஜ்) கிரியைகளை நிறைவேற்றிவிட்டு மக்காவில் மூன்று இரவுகள் தங்கலாம் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள் என்று அலாஉ பின் அல் ஹள்ரமீ (ரலி) சொல்ல நான் கேட்டுள்ளேன்” என்றார்கள்.

அறிவிப்பாளர் : ஸாயிப் பின் யஸீத் (ரலி) வழியாக அப்துர் ரஹ்மான் பின் ஹுமைத் (ரஹ்)

அத்தியாயம்: 15, பாடம்: 81, ஹதீஸ் எண்: 2408

‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ بْنِ قَعْنَبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُلَيْمَانُ يَعْنِي ابْنَ بِلَالٍ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ الرَّحْمَنِ بْنِ حُمَيْدٍ ‏ ‏أَنَّهُ سَمِعَ ‏ ‏عُمَرَ بْنَ عَبْدِ الْعَزِيزِ ‏ ‏يَسْأَلُ ‏ ‏السَّائِبَ بْنَ يَزِيدَ ‏ ‏يَقُولُ هَلْ سَمِعْتَ فِي الْإِقَامَةِ ‏ ‏بِمَكَّةَ ‏ ‏شَيْئًا ‏ ‏فَقَالَ ‏ ‏السَّائِبُ ‏ ‏سَمِعْتُ ‏ ‏الْعَلَاءَ بْنَ الْحَضْرَمِيِّ ‏ ‏يَقُولُ : ‏

سَمِعْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَقُولُ ‏ ‏لِلْمُهَاجِرِ إِقَامَةُ ثَلَاثٍ بَعْدَ ‏ ‏الصَّدَرِ ‏ ‏بِمَكَّةَ كَأَنَّهُ يَقُولُ لَا يَزِيدُ عَلَيْهَا

ஸாயிப் பின் யஸீத் (ரலி) அவர்களிடம் (கலீஃபா) உமர் பின் அப்தில் அஸீஸ் (ரஹ்), “மக்காவில் (ஹஜ் கிரியைகளை நிறைவேற்றிவிட்டு, மினாவிலிருந்து திரும்பிய பிறகு) முஹாஜிர் தங்குவது பற்றி (ஹதீஸ்) எதையேனும் செவியுற்றுள்ளீர்களா?” என்று கேட்டார்கள். அதற்கு ஸாயிப் (ரலி), “முஹாஜிர் (மினாவிலிருந்து) திரும்பிய பிறகு மூன்று இரவுகள் மக்காவில் தங்க அனுமதி உண்டு என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள் என்று அலாஉ பின் அல்ஹள்ரமீ (ரலி) சொல்ல நான் கேட்டுள்ளேன்” என்றார்கள். அதில், “அதைவிட அதிகமாக்கக் கூடாது” என்று சொன்னதைப் போன்ற தொனி இருந்தது.

அறிவிப்பாளர் : ஸாயிப் பின் யஸீத் (ரலி) வழியாக அப்துர் ரஹ்மான் பின் ஹுமைத் (ரஹ்)

அத்தியாயம்: 15, பாடம்: 80, ஹதீஸ் எண்: 2407

‏و حَدَّثَنِيهِ ‏ ‏مُحَمَّدُ بْنُ حَاتِمٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏رَوْحُ بْنُ عُبَادَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ أَبِي حَفْصَةَ ‏ ‏وَزَمْعَةُ بْنُ صَالِحٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏ابْنُ شِهَابٍ ‏ ‏عَنْ ‏ ‏عَلِيِّ بْنِ حُسَيْنٍ ‏ ‏عَنْ ‏ ‏عَمْرِو بْنِ عُثْمَانَ ‏ ‏عَنْ ‏ ‏أُسَامَةَ بْنِ زَيْدٍ ‏ ‏أَنَّهُ قَالَ : ‏

يَا رَسُولَ اللَّهِ أَيْنَ تَنْزِلُ غَدًا إِنْ شَاءَ اللَّهُ وَذَلِكَ زَمَنَ الْفَتْحِ قَالَ ‏ ‏وَهَلْ تَرَكَ لَنَا ‏ ‏عَقِيلٌ ‏ ‏مِنْ مَنْزِلٍ

நான் (நபி (ஸல்) அவர்களிடம்), “அல்லாஹ்வின் தூதரே! இன்ஷா அல்லாஹ் நாளைய தினம் எங்குத் தங்குவீர்கள்?” என்று கேட்டேன். -இது மக்கா வெற்றியின்போது நடந்ததாகும்.- அதற்கு நபி (ஸல்), “அகீல் நமக்கு வீடு எதையேனும் விட்டுவைத்துள்ளாரா?” என்று கேட்டார்கள்.

அறிவிப்பாளர் : உஸாமா பின் ஸைத் (ரலி)


குறிப்பு :

அகீல் என்பவர், நபி (ஸல்) அவர்களின் பெரிய தகப்பனார் அபூதாலிபின் மகனாவார்.

அத்தியாயம்: 15, பாடம்: 80, ஹதீஸ் எண்: 2406

‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ مِهْرَانَ الرَّازِيُّ ‏ ‏وَابْنُ أَبِي عُمَرَ ‏ ‏وَعَبْدُ بْنُ حُمَيْدٍ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ الرَّزَّاقِ ‏ ‏قَالَ ‏ ‏ابْنُ مِهْرَانَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الرَّزَّاقِ ‏ ‏عَنْ ‏ ‏مَعْمَرٍ ‏ ‏عَنْ ‏ ‏الزُّهْرِيِّ ‏ ‏عَنْ ‏ ‏عَلِيِّ بْنِ حُسَيْنٍ ‏ ‏عَنْ ‏ ‏عَمْرِو بْنِ عُثْمَانَ ‏ ‏عَنْ ‏ ‏أُسَامَةَ بْنِ زَيْدٍ ‏ ‏قُلْتُ : ‏

يَا رَسُولَ اللَّهِ أَيْنَ تَنْزِلُ غَدًا وَذَلِكَ فِي حَجَّتِهِ حِينَ دَنَوْنَا مِنْ ‏ ‏مَكَّةَ ‏ ‏فَقَالَ ‏ ‏وَهَلْ تَرَكَ لَنَا ‏ ‏عَقِيلٌ ‏ ‏مَنْزِلًا

நபி (ஸல்) செய்த ஹஜ்ஜின் போது, நாங்கள் மக்காவை நெருங்கிய வேளையில், “அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் நாளை எங்குத் தங்குவீர்கள்?” என்று நான் கேட்டேன். அதற்கு அவர்கள், “அகீல் நமக்கு வீடு எதையேனும் விட்டு வைத்துள்ளாரா?” என்று கேட்டார்கள்.

அறிவிப்பாளர் : உஸாமா பின் ஸைத் (ரலி)


குறிப்பு :

அகீல் என்பவர், நபி (ஸல்) அவர்களின் பெரிய தகப்பனார் அபூதாலிபின் மகனாவார்.

அத்தியாயம்: 15, பாடம்: 80, ஹதீஸ் எண்: 2405

‏حَدَّثَنِي ‏ ‏أَبُو الطَّاهِرِ ‏ ‏وَحَرْمَلَةُ بْنُ يَحْيَى ‏ ‏قَالَا أَخْبَرَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏يُونُسُ بْنُ يَزِيدَ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏أَنَّ ‏ ‏عَلِيَّ بْنَ حُسَيْنٍ ‏ ‏أَخْبَرَهُ أَنَّ ‏ ‏عَمْرَو بْنَ عُثْمَانَ بْنِ عَفَّانَ ‏ ‏أَخْبَرَهُ عَنْ ‏ ‏أُسَامَةَ بْنِ زَيْدِ بْنِ حَارِثَةَ ‏ ‏أَنَّهُ قَالَ : ‏

يَا رَسُولَ اللَّهِ أَتَنْزِلُ فِي دَارِكَ ‏ ‏بِمَكَّةَ ‏ ‏فَقَالَ ‏ ‏وَهَلْ تَرَكَ لَنَا ‏ ‏عَقِيلٌ ‏ ‏مِنْ ‏ ‏رِبَاعٍ ‏ ‏أَوْ دُورٍ ‏
‏وَكَانَ ‏ ‏عَقِيلٌ ‏ ‏وَرِثَ ‏ ‏أَبَا طَالِبٍ ‏ ‏هُوَ ‏ ‏وَطَالِبٌ ‏ ‏وَلَمْ يَرِثْهُ ‏ ‏جَعْفَرٌ ‏ ‏وَلَا ‏ ‏عَلِيٌّ ‏ ‏شَيْئًا لِأَنَّهُمَا كَانَا مُسْلِمَيْنِ وَكَانَ ‏ ‏عَقِيلٌ ‏ ‏وَطَالِبٌ ‏ ‏كَافِرَيْنِ

நான் (நபி (ஸல்) அவர்களிடம்), “அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் மக்காவில் உங்கள் (பெரிய தந்தையின்) வீட்டில் தங்குவீர்களா?” என்று கேட்டேன்.

அதற்கு நபி (ஸல்), “குடியிருப்புகளில் அல்லது வீடுகளில் எதையேனும் (என் பெரிய தந்தை அபூதாலிபின் மகன்) அகீல் நமக்காக விட்டுவைத்துள்ளாரா, என்ன?” என்று கேட்டார்கள்.

அபூதாலிபின் சொத்துகளுக்கு அகீலும் தாலிபும் வாரிசானார்கள். (அபூதாலிபின் மற்ற இரு மகன்களான) ஜஅஃபர் (ரலி) அவர்களும் அலீ (ரலி) அவர்களும் முஸ்லிம்களாக இருந்ததால் (தம் தந்தையின் சொத்துகளில்) எதற்கும் வாரிசாக (முடிய)வில்லை. (அப்போது) அகீலும் தாலிபும் இறைமறுப்பாளர்களாக இருந்தனர்.

அறிவிப்பாளர் : உஸாமா பின் ஸைத் (ரலி)

அத்தியாயம்: 15, பாடம்: 79, ஹதீஸ் எண்: 2404

‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏وَزُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏قَالَ ‏ ‏يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏و قَالَ ‏ ‏زُهَيْرٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏جَرِيرٌ ‏ ‏عَنْ ‏ ‏مَنْصُورٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي حَازِمٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏قَالَ : ‏

قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مَنْ أَتَى هَذَا ‏ ‏الْبَيْتَ ‏ ‏فَلَمْ ‏ ‏يَرْفُثْ ‏ ‏وَلَمْ يَفْسُقْ رَجَعَ كَمَا وَلَدَتْهُ أُمُّهُ ‏


و حَدَّثَنَاه ‏ ‏سَعِيدُ بْنُ مَنْصُورٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي عَوَانَةَ ‏ ‏وَأَبِي الْأَحْوَصِ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏وَكِيعٌ ‏ ‏عَنْ ‏ ‏مِسْعَرٍ ‏ ‏وَسُفْيَانَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏ابْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏كُلُّ هَؤُلَاءِ ‏ ‏عَنْ ‏ ‏مَنْصُورٍ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏وَفِي حَدِيثِهِمْ جَمِيعًا مَنْ حَجَّ فَلَمْ ‏ ‏يَرْفُثْ ‏ ‏وَلَمْ يَفْسُقْ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سَعِيدُ بْنُ مَنْصُورٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏هُشَيْمٌ ‏ ‏عَنْ ‏ ‏سَيَّارٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي حَازِمٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مِثْلَهُ

“தீய பேச்சுகளிலும் பாவச் செயல்களிலும் ஈடுபடாமல் இந்த(க் கஅபா) ஆலயத்திற்கு வந்(து ஹஜ் செய்)தவர், தன்  தாயால் அன்றைய நாளில் பெற்றெடுத்த பாலகனைப் போன்று திரும்புகின்றார்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)


குறிப்பு :

“தீய பேச்சுகளிலும் பாவச் செயல்களில்களிலும் ஈடுபடாமல் ஒருவர் ஹஜ் செய்தால் …” என்று ஹதீஸ் தொடங்குவதாக ஷுஅபா (ரஹ்), இப்னுல் முஸன்னா (ரஹ்), மிஸ்அர் (ரஹ்), ஸுப்யான் (ரஹ்), அபூபக்ரு பின் அபீஷைபா (ரஹ்) ஆகியோர் வழி அறிவிப்புகளில் காணப்படுகிறது.