அத்தியாயம்: 15, பாடம்: 59, ஹதீஸ் எண்: 2313

‏حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَإِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏وَابْنُ أَبِي عُمَرَ ‏ ‏وَأَحْمَدُ بْنُ عَبْدَةَ ‏ ‏وَاللَّفْظُ ‏ ‏لِأَبِي بَكْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ ‏ ‏عَنْ ‏ ‏عَمْرٍو ‏ ‏عَنْ ‏ ‏عَطَاءٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عَبَّاسٍ ‏ ‏قَالَ : ‏

‏لَيْسَ التَّحْصِيبُ بِشَيْءٍ إِنَّمَا هُوَ مَنْزِلٌ نَزَلَهُ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ

‘அல்முஹஸ்ஸப்’ என்ற இடத்தில் (நஃப்ருடைய நாளில்) தங்குவது (ஓய்வெடுப்பதே அன்றி) எதுவுமில்லை. அது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (ஓய்வெடுப்பதற்காகத்) தங்கிய ஓர் இடம், அவ்வளவுதான்.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி)

அத்தியாயம்: 15, பாடம்: 59, ஹதீஸ் எண்: 2312

‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ بْنُ حُمَيْدٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏عَبْدُ الرَّزَّاقِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏مَعْمَرٌ ‏ ‏عَنْ ‏ ‏الزُّهْرِيِّ ‏ ‏عَنْ ‏ ‏سَالِمٍ ‏ ‏أَنَّ ‏ ‏أَبَا بَكْرٍ ‏ ‏وَعُمَرَ ‏ ‏وَابْنَ عُمَرَ ‏ ‏كَانُوا يَنْزِلُونَ ‏ ‏الْأَبْطَحَ ‏ ‏قَالَ ‏ ‏الزُّهْرِيُّ ‏ ‏وَأَخْبَرَنِي ‏ ‏عُرْوَةُ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ : ‏

‏أَنَّهَا لَمْ تَكُنْ تَفْعَلُ ذَلِكَ وَقَالَتْ إِنَّمَا ‏ ‏نَزَلَهُ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لِأَنَّهُ كَانَ مَنْزِلًا أَسْمَحَ لِخُرُوجِهِ

அபூபக்ரு (ரலி), உமர் (ரலி), இப்னு உமர் (ரலி) ஆகியோர் (நஃப்ருடைய நாளில்) ‘அல்அப்தஹ்’ எனும் இடத்தில் தங்கக்கூடியவர்களாக இருந்தனர்.

ஆயிஷா (ரலி) அங்குத் தங்கமாட்டார்கள். மேலும் அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அங்குத் தங்கியதற்குக் காரணம், அது (மதீனாவிற்குப்) புறப்பட்டுச் செல்ல வசதியான இடமாக அமைந்திருந்ததுதான்” என்றும் கூறினார்கள் என்று உர்வா (ரஹ்) தம்மிடம் தெரிவித்ததாக இதன் அறிவிப்பாளரான இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) கூறுகின்றார்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி) வழியாக ஸாலிம் (ரஹ்)

அத்தியாயம்: 15, பாடம்: 59, ஹதீஸ் எண்: 2311

‏حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَأَبُو كُرَيْبٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ نُمَيْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏هِشَامٌ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏قَالَتْ : ‏

‏نُزُولُ ‏ ‏الْأَبْطَحِ ‏ ‏لَيْسَ بِسُنَّةٍ إِنَّمَا ‏ ‏نَزَلَهُ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لِأَنَّهُ كَانَ أَسْمَحَ لِخُرُوجِهِ إِذَا خَرَجَ ‏


و حَدَّثَنَاه ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حَفْصُ بْنُ غِيَاثٍ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنِيهِ ‏ ‏أَبُو الرَّبِيعِ الزَّهْرَانِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حَمَّادٌ يَعْنِي ابْنَ زَيْدٍ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَاه ‏ ‏أَبُو كَامِلٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَزِيدُ بْنُ زُرَيْعٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حَبِيبٌ الْمُعَلِّمُ ‏ ‏كُلُّهُمْ ‏ ‏عَنْ ‏ ‏هِشَامٍ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏مِثْلَهُ

‘அல்அப்தஹ்’ எனும் இடத்தில் (நஃப்ருடைய நாளில்) தங்குவது நபிவழியன்று. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அங்குத் தங்கியதற்குக் காரணம், அந்த இடம் (மக்காவிலிருந்து) வெளியேறி(மதீனாவிற்கு)ச் செல்வதற்கு வசதியாக அமைந்திருந்ததுதான்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)

அத்தியாயம்: 15, பாடம்: 59, ஹதீஸ் எண்: 2310

‏حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ حَاتِمِ بْنِ مَيْمُونٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏رَوْحُ بْنُ عُبَادَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏صَخْرُ بْنُ جُوَيْرِيَةَ ‏ ‏عَنْ ‏ ‏نَافِعٍ : ‏

‏أَنَّ ‏ ‏ابْنَ عُمَرَ ‏ ‏كَانَ ‏ ‏يَرَى ‏ ‏التَّحْصِيبَ ‏ ‏سُنَّةً وَكَانَ ‏ ‏يُصَلِّي الظُّهْرَ ‏ ‏يَوْمَ النَّفْرِ ‏ ‏بِالْحَصْبَةِ ‏ ‏قَالَ ‏ ‏نَافِعٌ ‏ ‏قَدْ ‏ ‏حَصَّبَ ‏ ‏رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَالْخُلَفَاءُ بَعْدَهُ

இப்னு உமர் (ரலி) அல்முஹஸ்ஸப் எனும் அல்ஹஸ்பாவில் தங்குவதை நபிவழியாகக் கருதுவார்கள். ‘நஃப்ரு’டைய நாளில் ‘அல்ஹஸ்பா’வில் லுஹ்ருத் தொழுவார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அவர்களுக்குப் பின் கலீஃபாக்களும் அல்முஹஸ்ஸபில் தங்கினர்.

அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி) வழியாக நாஃபிஉ (ரஹ்)

அத்தியாயம்: 15, பாடம்: 59, ஹதீஸ் எண்: 2309

‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ مِهْرَانَ الرَّازِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الرَّزَّاقِ ‏ ‏عَنْ ‏ ‏مَعْمَرٍ ‏ ‏عَنْ ‏ ‏أَيُّوبَ ‏ ‏عَنْ ‏ ‏نَافِعٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عُمَرَ : ‏

‏أَنَّ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَأَبَا بَكْرٍ ‏ ‏وَعُمَرَ ‏ ‏كَانُوا يَنْزِلُونَ الْأَبْطَحَ

‘அல்அப்தஹ்’ எனும் இடத்தில் நபி (ஸல்) அவர்களும் அபூபக்ரு (ரலி), உமர் (ரலி) ஆகியோரும் (நஃப்ருடைய நாளில்) தங்கக்கூடியவர்களாக இருந்தனர்.

அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி)


குறிப்பு :

‘நஃப்ருடைய நாள்’ என்பது ஹாஜ்ஜுச் சடங்குகள் அனைத்தையும் முடித்துவிட்டு ஹாஜிகள் மினாவிலிருந்து புறப்பட்டு, கஅபாவுக்குத் திரும்பும் நாளாகும். பிறை 12இல் சிலரும் பிறை 13இல் பிறரும் மினாவிலிருந்து புறப்படுவர் (அல்குர்ஆன் 2:203).

அத்தியாயம்: 15, பாடம்: 58, ஹதீஸ் எண்: 2308

‏حَدَّثَنِي ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏إِسْحَقُ بْنُ يُوسُفَ الْأَزْرَقُ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏سُفْيَانُ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ الْعَزِيزِ بْنِ رُفَيْعٍ ‏ ‏قَالَ : ‏

‏سَأَلْتُ ‏ ‏أَنَسَ بْنَ مَالِكٍ ‏ ‏قُلْتُ أَخْبِرْنِي عَنْ شَيْءٍ ‏ ‏عَقَلْتَهُ ‏ ‏عَنْ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَيْنَ صَلَّى الظُّهْرَ ‏ ‏يَوْمَ التَّرْوِيَةِ ‏ ‏قَالَ ‏ ‏بِمِنًى ‏ ‏قُلْتُ فَأَيْنَ صَلَّى الْعَصْرَ ‏ ‏يَوْمَ النَّفْرِ ‏ ‏قَالَ ‏ ‏بِالْأَبْطَحِ ‏ ‏ثُمَّ قَالَ افْعَلْ مَا يَفْعَلُ أُمَرَاؤُكَ

நான் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடம் “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து நீங்கள் அறிந்த ஏதேனும் ஒரு செய்தியை என்னிடம் கூறுங்கள்! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தர்வியாவுடைய (துல் ஹஜ் எட்டாவது) நாளில் எங்கு லுஹ்ருத் தொழுதார்கள்?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “மினாவில்” என்று பதிலளித்தார்கள். நான், “மினாவிலிருந்து புறப்படும் (துல்ஹஜ் 12 அல்லது 13ஆவது) நாளில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) எங்கு அஸ்ருத் தொழுதார்கள்?” என்று கேட்டேன். அதற்கு, “அல்அப்தஹ் எனுமிடத்தில்” என்று பதிலளித்துவிட்டு, “உன்னுடைய தலைவர்கள் செய்வதைப் போன்று நீயும் செய்துகொள்” என்று அனஸ் (ரலி) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் (ரலி) வழியாக அப்துல் அஸீஸ் பின் ருஃபைஉ (ரஹ்)

அத்தியாயம்: 15, பாடம்: 58, ஹதீஸ் எண்: 2307

‏حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ رَافِعٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الرَّزَّاقِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏عُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ ‏ ‏عَنْ ‏ ‏نَافِعٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عُمَرَ : ‏

‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَفَاضَ ‏ ‏يَوْمَ النَّحْرِ ‏ ‏ثُمَّ رَجَعَ فَصَلَّى الظُّهْرَ ‏ ‏بِمِنًى ‏


قَالَ ‏ ‏نَافِعٌ ‏ ‏فَكَانَ ‏ ‏ابْنُ عُمَرَ ‏ ‏يُفِيضُ ‏ ‏يَوْمَ النَّحْرِ ‏ ‏ثُمَّ يَرْجِعُ فَيُصَلِّي الظُّهْرَ ‏ ‏بِمِنًى ‏ ‏وَيَذْكُرُ أَنَّ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَعَلَهُ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) நஹ்ருடைய (துல்ஹஜ் பத்தாவது) நாளில் ‘தவாஃபுல் இஃபாளா’ச் செய்துவிட்டுத் திரும்பிச் சென்று மினாவில் லுஹ்ருத் தொழுதார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி)


குறிப்பு :

“இப்னு உமர் (ரலி) அவர்களும் நஹ்ருடைய நாளில் ‘தவாஃபுல் இஃபாளா’ச் செய்து விட்டுத் திரும்பிச் சென்று மினாவில் லுஹ்ருத் தொழுவார்கள். இவ்வாறுதான் நபி (ஸல்) அவர்களும் செய்தார்கள் என்றும் அவர்கள் குறிப்பிடுவார்கள்” என்று இதன் அறிவிப்பாளரான நாஃபிஉ (ரஹ்) கூறுகின்றார்.

அத்தியாயம்: 15, பாடம்: 57, ஹதீஸ் எண்: 2306

‏حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ حَاتِمٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏بَهْزٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏وُهَيْبٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ طَاوُسٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عَبَّاسٍ : ‏

‏أَنَّ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قِيلَ لَهُ فِي الذَّبْحِ وَالْحَلْقِ وَالرَّمْيِ وَالتَّقْدِيمِ وَالتَّأْخِيرِ فَقَالَ ‏ ‏لَا ‏ ‏حَرَجَ

நபி (ஸல்) அவர்களிடம் (‘நஹ்ரு’டைய நாளில்) பலியிடுதல், தலைமுடியை மழித்தல், கல்லெறிதல் ஆகியவற்றை முன் பின்னாகச் செய்ததைப் பற்றிக் கேட்கப்பட்ட போது “குற்றமில்லை (இப்போது செய்யுங்கள்)” என்று விடையளித்தார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி)

அத்தியாயம்: 15, பாடம்: 57, ஹதீஸ் எண்: 2305

‏و حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ قُهْزَاذَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَلِيُّ بْنُ الْحَسَنِ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ الْمُبَارَكِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ أَبِي حَفْصَةَ ‏ ‏عَنْ ‏ ‏الزُّهْرِيِّ ‏ ‏عَنْ ‏ ‏عِيسَى بْنِ طَلْحَةَ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ ‏ ‏قَالَ : ‏

‏سَمِعْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَأَتَاهُ رَجُلٌ ‏ ‏يَوْمَ النَّحْرِ ‏ ‏وَهُوَ وَاقِفٌ عِنْدَ ‏ ‏الْجَمْرَةِ ‏ ‏فَقَالَ يَا رَسُولَ اللَّهِ إِنِّي حَلَقْتُ قَبْلَ أَنْ أَرْمِيَ فَقَالَ ‏ ‏ارْمِ وَلَا ‏ ‏حَرَجَ ‏ ‏وَأَتَاهُ آخَرُ فَقَالَ إِنِّي ذَبَحْتُ قَبْلَ أَنْ أَرْمِيَ قَالَ ارْمِ وَلَا ‏ ‏حَرَجَ ‏ ‏وَأَتَاهُ آخَرُ فَقَالَ إِنِّي ‏ ‏أَفَضْتُ ‏ ‏إِلَى ‏ ‏الْبَيْتِ ‏ ‏قَبْلَ أَنْ أَرْمِيَ قَالَ ارْمِ وَلَا ‏ ‏حَرَجَ ‏ ‏قَالَ فَمَا رَأَيْتُهُ سُئِلَ يَوْمَئِذٍ عَنْ شَيْءٍ إِلَّا قَالَ افْعَلُوا وَلَا ‏ ‏حَرَجَ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ‘நஹ்ரு’டைய (துல்ஹஜ் பத்தாவது) நாளில் ‘ஜம்ரத்துல் அகபா’விற்கு அருகில் நின்றுகொண்டு இருந்தபோது அவர்களிடம் ஒருவர் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! நான் கல்லெறிவதற்கு முன் தலைமுடியை மழித்துவிட்டேன்” என்றார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “குற்றமில்லை; (இப்போது) கல்லெறிவீராக!” என்றார்கள். மற்றொருவர் வந்து, “நான் கல்லெறிவதற்கு முன் அறுத்துப் பலியிட்டுவிட்டேன்” என்றார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “குற்றமில்லை; (இப்போது) கல்லெறிவீராக!” என்றார்கள். இன்னொருவர் வந்து, “நான் கல்லெறிவதற்கு முன் கஅபாவுக்குத் திரும்பிச் சென்று (தவாஃபுல் இஃபாளா செய்து)விட்டேன்” என்றார். அதற்கு, “குற்றமில்லை; (இப்போது சென்று) கல்லெறிவீராக!” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) விடையளித்தார்கள்.

அன்றைய நாளில் அவர்களிடம் கேட்கப்பட்ட அனைத்துக் கேள்விகளுக்கும் அவர்கள், “குற்றமில்லை. (இப்போது) செய்யுங்கள்” என்று விடையளித்ததை நான் கண்டேன்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் அம்ரு பின் அல்ஆஸ் (ரலி)

அத்தியாயம்: 15, பாடம்: 57, ஹதீஸ் எண்: 2304

‏و حَدَّثَنَاه ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَزُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏قَالَ ‏ ‏أَبُو بَكْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ عُيَيْنَةَ ‏ ‏عَنْ ‏ ‏الزُّهْرِيِّ ‏ ‏عَنْ ‏ ‏عِيسَى بْنِ طَلْحَةَ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو ‏ ‏قَالَ : ‏

‏أَتَى النَّبِيَّ رَجُلٌ فَقَالَ حَلَقْتُ قَبْلَ أَنْ أَذْبَحَ قَالَ ‏ ‏فَاذْبَحْ وَلَا ‏ ‏حَرَجَ ‏ ‏قَالَ ذَبَحْتُ قَبْلَ أَنْ أَرْمِيَ قَالَ ارْمِ وَلَا ‏ ‏حَرَجَ ‏


و حَدَّثَنَا ‏ ‏ابْنُ أَبِي عُمَرَ ‏ ‏وَعَبْدُ بْنُ حُمَيْدٍ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ الرَّزَّاقِ ‏ ‏عَنْ ‏ ‏مَعْمَرٍ ‏ ‏عَنْ ‏ ‏الزُّهْرِيِّ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ رَأَيْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏عَلَى نَاقَةٍ ‏ ‏بِمِنًى ‏ ‏فَجَاءَهُ رَجُلٌ ‏ ‏بِمَعْنَى حَدِيثِ ‏ ‏ابْنِ عُيَيْنَةَ

நபி (ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து, “நான் அறுத்துப் பலியிடுவதற்கு முன் தலைமுடியை மழித்துவிட்டேன்” என்றார். அதற்கு நபி (ஸல்), “குற்றமில்லை; (இப்போது) பலியிடுவீராக!” என்றார்கள். அவர், “நான் கல் லெறிவதற்கு முன் அறுத்துப் பலியிட்டு விட்டேன்” என்றார். அதற்கும் “குற்றமில்லை; (இப்போது) கல்லெறிவீராக!” என்று நபி (ஸல்) விடையளித்தார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் அம்ரு பின் அல்ஆஸ் (ரலி)


குறிப்பு :

மஅமர் (ரஹ்) வழி அறிவிப்பு, “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) மினாவில் ஓர் ஒட்டகத்தின் மீதிருந்தார்கள். அப்போது அவர்களிடம் ஒருவர் வந்தார் …” எனத் தொடங்குகிறது.