அத்தியாயம்: 15, பாடம்: 37, ஹதீஸ் எண்: 2203

‏حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ نُمَيْرٍ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏ابْنُ نُمَيْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عُبَيْدُ اللَّهِ ‏ ‏عَنْ ‏ ‏نَافِعٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عُمَرَ :‏

أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏كَانَ ‏ ‏يَخْرُجُ مِنْ طَرِيقِ الشَّجَرَةِ وَيَدْخُلُ مِنْ طَرِيقِ ‏ ‏الْمُعَرَّسِ ‏ ‏وَإِذَا دَخَلَ ‏ ‏مَكَّةَ ‏ ‏دَخَلَ مِنْ ‏ ‏الثَّنِيَّةِ الْعُلْيَا ‏ ‏وَيَخْرُجُ مِنْ ‏ ‏الثَّنِيَّةِ السُّفْلَى ‏


و حَدَّثَنِيهِ ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏وَمُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏يَحْيَى وَهُوَ الْقَطَّانُ ‏ ‏عَنْ ‏ ‏عُبَيْدِ اللَّهِ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏و قَالَ ‏ ‏فِي رِوَايَةِ ‏ ‏زُهَيْرٍ ‏ ‏الْعُلْيَا ‏ ‏الَّتِي ‏ ‏بِالْبَطْحَاءِ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (மதீனாவிலிருந்து) ‘அஷ்ஷஜரா’ எனும் இடத்தின் வழியாக வெளியேறுவார்கள். (திரும்பும்போது) ‘அல் முஅர்ரஸ்’ எனும் இடத்தின் வழியாக நுழைவார்கள். மக்காவிற்குள் செல்லும்போது மேற்புறக் கணவாய் வழியாக நுழைந்து, கீழ்ப்புறக் கணவாய் வழியாக வெளியேறுவார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி)


குறிப்பு :

ஸுஹைர் பின் ஹர்பு (ரஹ்) வழி அறிவிப்பில், “மேற்புறக் கணவாய் (அஸ்ஸனிய்யத்துல் உல்யா) என்பது அல்பத்ஹாவில் உள்ளதாகும்” என இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 15, பாடம்: 36, ஹதீஸ் எண்: 2202

‏و حَدَّثَنَا ‏ ‏أَحْمَدُ بْنُ عَبْدَةَ الضَّبِّيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَزِيدُ يَعْنِي ابْنَ زُرَيْعٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حَبِيبٌ الْمُعَلِّمُ ‏ ‏عَنْ ‏ ‏عَطَاءٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عَبَّاسٍ : ‏

أَنَّ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ لِامْرَأَةٍ مِنْ ‏ ‏الْأَنْصَارِ ‏ ‏يُقَالُ لَهَا ‏ ‏أُمُّ سِنَانٍ ‏ ‏مَا مَنَعَكِ أَنْ تَكُونِي حَجَجْتِ مَعَنَا قَالَتْ ‏ ‏نَاضِحَانِ ‏ ‏كَانَا لِأَبِي فُلَانٍ زَوْجِهَا حَجَّ هُوَ وَابْنُهُ عَلَى أَحَدِهِمَا وَكَانَ الْآخَرُ يَسْقِي عَلَيْهِ غُلَامُنَا قَالَ فَعُمْرَةٌ فِي رَمَضَانَ تَقْضِي حَجَّةً أَوْ حَجَّةً مَعِي

நபி (ஸல்), உம்மு ஸினான் எனும் அன்ஸாரிப் பெண்ணிடம், “நீ எங்களுடன் ஹஜ் செய்வதற்கு உனக்கு என்ன தடை?” என்று கேட்டார்கள். அதற்கு அப்பெண்மணி, “என் பிள்ளையின் தந்தையிடம் (அதாவது என் கணவரிடம்) தண்ணீர் இறைக்கும் இரு ஒட்டகங்கள் இருந்தன. ஒன்றில் அவரும் அவருடைய மகனும் ஹஜ்ஜுக்குச் சென்றுவிட்டனர்; மற்றொன்றில் எங்களின் அடிமை தண்ணீர் இறைத்துக் கொண்டிருக்கின்றார்” என்றார். நபி (ஸல்), “ரமளானில் செய்யப்படும் ஓர் உம்ரா ஹஜ்ஜுக்கு நிகரானதாகும்; அல்லது என்னோடு ஹஜ் செய்வதற்கு நிகரானதாகும்” என்றார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி)

அத்தியாயம்: 15, பாடம்: 36, ஹதீஸ் எண்: 2201

‏و حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ حَاتِمِ بْنِ مَيْمُونٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ سَعِيدٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ جُرَيْجٍ ‏ ‏قَالَ أَخْبَرَنِي ‏ ‏عَطَاءٌ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏ابْنَ عَبَّاسٍ ‏ ‏يُحَدِّثُنَا قَالَ :‏

قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لِامْرَأَةٍ ‏ ‏مِنْ ‏ ‏الْأَنْصَارِ ‏ ‏سَمَّاهَا ‏ ‏ابْنُ عَبَّاسٍ ‏ ‏فَنَسِيتُ اسْمَهَا ‏ ‏مَا مَنَعَكِ أَنْ تَحُجِّي مَعَنَا قَالَتْ لَمْ يَكُنْ لَنَا إِلَّا ‏ ‏نَاضِحَانِ ‏ ‏فَحَجَّ أَبُو وَلَدِهَا وَابْنُهَا عَلَى ‏ ‏نَاضِحٍ ‏ ‏وَتَرَكَ لَنَا ‏ ‏نَاضِحًا ‏ ‏نَنْضِحُ ‏ ‏عَلَيْهِ قَالَ فَإِذَا جَاءَ رَمَضَانُ فَاعْتَمِرِي فَإِنَّ عُمْرَةً فِيهِ تَعْدِلُ حَجَّةً

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அன்ஸாரிப் பெண் ஒருவரிடம், “நீ எங்களுடன் ஹஜ் செய்வதற்கு என்ன தடை?” என்று கேட்டார்கள். அதற்கு அப்பெண்மணி, “எங்களிடம் நீர் இறைப்பதற்கான இரண்டு ஒட்டகங்கள் மட்டுமே உள்ளன; ஓர் ஒட்டகத்தில் என் கணவரும் மகனும் ஏறி ஹஜ்ஜுக்குச் சென்றுவிட்டனர். மற்றோர் ஒட்டகத்தை எங்களுக்காக அவர் விட்டுச் சென்றுள்ளார். அதன் மூலம் நாங்கள் நீர் இறைத்துக் கொண்டிருக்கின்றோம்” என்றார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “ரமளான் மாதம் வந்துவிட்டால் அப்போது நீ உம்ராச் செய்துகொள். ஏனெனில், ரமளானில் உம்ராச் செய்வது ஹஜ்ஜுக்கு நிகரான(பலனுடைய)தாகும்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி)


குறிப்பு  :

“இப்னு அப்பாஸ் (ரலி) அப்பெண்ணின் பெயரைக் குறிப்பிட்டார்கள்; ஆனால், அதை நான் மறந்துவிட்டேன்” என்று இதன் அறிவிப்பாளர் அதாஉ (ரஹ்) கூறுகின்றார்.

அத்தியாயம்: 15, பாடம்: 35, ஹதீஸ் எண்: 2200

‏و حَدَّثَنَا ‏ ‏إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏جَرِيرٌ ‏ ‏عَنْ ‏ ‏مَنْصُورٍ ‏ ‏عَنْ ‏ ‏مُجَاهِدٍ ‏ ‏قَالَ ‏ ‏

دَخَلْتُ أَنَا ‏وَعُرْوَةُ بْنُ الزُّبَيْرِ ‏ ‏الْمَسْجِدَ فَإِذَا ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ ‏ ‏جَالِسٌ إِلَى حُجْرَةِ ‏ ‏عَائِشَةَ ‏ ‏وَالنَّاسُ يُصَلُّونَ الضُّحَى فِي الْمَسْجِدِ فَسَأَلْنَاهُ عَنْ صَلَاتِهِمْ فَقَالَ بِدْعَةٌ فَقَالَ لَهُ ‏ ‏عُرْوَةُ ‏ ‏يَا ‏ ‏أَبَا عَبْدِ الرَّحْمَنِ ‏ ‏كَمْ اعْتَمَرَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقَالَ أَرْبَعَ عُمَرٍ إِحْدَاهُنَّ فِي رَجَبٍ فَكَرِهْنَا أَنْ نُكَذِّبَهُ وَنَرُدَّ عَلَيْهِ وَسَمِعْنَا‏ ‏اسْتِنَانَ ‏ ‏عَائِشَةَ ‏ ‏فِي الْحُجْرَةِ فَقَالَ ‏ ‏عُرْوَةُ ‏ ‏أَلَا تَسْمَعِينَ يَا أُمَّ الْمُؤْمِنِينَ إِلَى مَا يَقُولُ ‏ ‏أَبُو عَبْدِ الرَّحْمَنِ ‏ ‏فَقَالَتْ وَمَا يَقُولُ قَالَ ‏يَقُولُ اعْتَمَرَ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَرْبَعَ عُمَرٍ إِحْدَاهُنَّ فِي رَجَبٍ فَقَالَتْ يَرْحَمُ اللَّهُ ‏ ‏أَبَا عَبْدِ الرَّحْمَنِ ‏ ‏مَا اعْتَمَرَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِلَّا وَهُوَ مَعَهُ وَمَا اعْتَمَرَ فِي رَجَبٍ قَطُّ

நானும் உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்களும் (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலுக்குள் நுழைந்தோம். அங்கு அப்துல்லாஹ் பின் உமர் (ரலி), ஆயிஷா (ரலி) அவர்களின் அறைச் சுவரில் சாய்ந்து அமர்ந்திருந்தார்கள். அப்போது மக்கள் பள்ளிவாசலில் முற்பகல் நேர(ளுஹா)த் தொழுகை தொழுது கொண்டிருந்தனர்.

நாங்கள் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடம் மக்களின் அந்தத் தொழுகையைப் பற்றிக் கேட்டோம். அதற்கு அவர்கள், “இது புதிய நடைமுறை (பித்அத்)” என்றார்கள். பிறகு அவர்களிடம், “அபூஅப்திர் ரஹ்மான்! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) எத்தனை உம்ராக்கள் செய்துள்ளார்கள்?” என்று உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) கேட்டார்கள்.

அதற்கு அப்துல்லாஹ் பின் உமர் (ரலி), “நான்கு உம்ராக்கள் செய்தார்கள்; அவற்றில் ஒன்றை ரஜப் மாதத்தில் செய்தார்கள்” என்றார்கள். நாங்கள் அவர்களது சொல்லைப் பொய்யாக்கவோ மறுக்கவோ விரும்பவில்லை. இதற்கிடையே அறையினுள் ஆயிஷா (ரலி) பல் துலக்கும் சப்தத்தைக் கேட்டோம். அப்போது உர்வா (ரஹ்), “இறைநம்பிக்கையாளர்களின் அன்னையே! அபூஅப்திர் ரஹ்மான் சொல்வதை நீங்கள் செவியுற்றீர்களா?” என்று கேட்டார்கள்.

அதற்கு ஆயிஷா (ரலி), “அவர் என்ன சொல்கின்றார்?” என்று கேட்டார்கள். “நபி (ஸல்) நான்கு உம்ராக்கள் செய்துள்ளார்கள்; அவற்றில் ஒன்று ரஜப் மாதத்தில் நடந்தது என்று சொல்கின்றார்” என்று உர்வா (ரஹ்) கூறினார்கள். ஆயிஷா (ரலி), “அபூஅப்திர் ரஹ்மானுக்கு அல்லாஹ் கருணை புரிவானாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) உம்ராச் செய்யும்போதெல்லாம் அவர்களுடன் அவரும் இருந்திருக்கிறார் (இப்போது மறந்துவிட்டார் போலும்!). அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ஒருபோதும் ரஜப் மாதத்தில் உம்ராச் செய்ததே இல்லை” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி) வழியாக முஜாஹித் (ரஹ்)


குறிப்பு  :

ளுஹாத் தொழுகை பித்அத் அல்ல; அதைக் கூட்டாகத் தொழுவது பித்அத் எனும் பொருளில் இப்னு உமர் (ரலி) கூறியுள்ளார்கள்.

அத்தியாயம்: 15, பாடம்: 35, ஹதீஸ் எண்: 2199

‏و حَدَّثَنَا ‏ ‏هَارُونُ بْنُ عَبْدِ اللَّهِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ بَكْرٍ الْبُرْسَانِيُّ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ جُرَيْجٍ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏‏عَطَاءً ‏ ‏يُخْبِرُ قَالَ أَخْبَرَنِي ‏ ‏عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ ‏ ‏قَالَ : ‏

‏كُنْتُ أَنَا ‏ ‏وَابْنُ عُمَرَ ‏ ‏مُسْتَنِدَيْنِ إِلَى حُجْرَةِ ‏ ‏عَائِشَةَ ‏ ‏وَإِنَّا لَنَسْمَعُ ‏ ‏ضَرْبَهَا بِالسِّوَاكِ ‏ ‏تَسْتَنُّ ‏ ‏قَالَ فَقُلْتُ يَا ‏ ‏أَبَا عَبْدِ الرَّحْمَنِ ‏ ‏اعْتَمَرَ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فِي رَجَبٍ قَالَ نَعَمْ فَقُلْتُ ‏ ‏لِعَائِشَةَ ‏‏أَيْ أُمَّتَاهُ أَلَا تَسْمَعِينَ مَا يَقُولُ ‏ ‏أَبُو عَبْدِ الرَّحْمَنِ ‏ ‏قَالَتْ وَمَا يَقُولُ قُلْتُ يَقُولُ اعْتَمَرَ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فِي رَجَبٍ فَقَالَتْ يَغْفِرُ اللَّهُ ‏ ‏لِأَبِي عَبْدِ الرَّحْمَنِ ‏ ‏لَعَمْرِي ‏ ‏مَا اعْتَمَرَ فِي رَجَبٍ وَمَا اعْتَمَرَ مِنْ عُمْرَةٍ إِلَّا وَإِنَّهُ لَمَعَهُ قَالَ ‏ ‏وَابْنُ عُمَرَ ‏ ‏يَسْمَعُ فَمَا قَالَ لَا وَلَا نَعَمْ سَكَتَ

நானும் இப்னு உமர் (ரலி) அவர்களும் என் (சிற்றன்னை) ஆயிஷா (ரலி) அவர்களின் அறையின் சுவரில் சாய்ந்து அமர்ந்திருந்தோம். அப்போது ஆயிஷா (ரலி), பல் துலக்கும் குச்சியால் பல் துலக்கிக் கொண்டிருந்த சப்தத்தை நாங்கள் செவியுற்றோம்.

அப்போது நான், “அபூ அப்திர் ரஹ்மான்! நபி (ஸல்) ரஜப் மாதத்தில் உம்ராச் செய்துள்ளார்களா?” என்று (இப்னு உமர் (ரலி) அவர்களிடம்) கேட்டேன். அதற்கு அவர்கள், “ஆம்” என்றார்கள். நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம், “அன்னையே! அபூஅப்திர் ரஹ்மான் கூறியதை நீங்கள் செவியுற்றீர்களா?” என்று கேட்டேன். அதற்கு ஆயிஷா (ரலி), “அவர் என்ன சொன்னார்?” என்று கேட்டார்கள். “நபி (ஸல்) ரஜப் மாதத்தில் உம்ராச் செய்துள்ளார்கள் என்று சொல்கின்றார்”
என்றேன்.

அப்போது ஆயிஷா (ரலி), “அபூஅப்திர் ரஹ்மானுக்கு அல்லாஹ் மன்னிப்பு அளிக்கட்டும்! என் ஆயுள்மீது அறுதியாக! நபி (ஸல்) ரஜப் மாதத்தில் உம்ராச் செய்ததில்லை. நபியவர்கள் உம்ராச் செய்தபோதெல்லாம் அவர்களுடன் அபூஅப்திர் ரஹ்மானும் இருந்திருக்கிறார் (ஆனால், இப்போது அவர் மறந்துவிட்டார்)” என்று கூறினார்கள்.

ஆயிஷா (ரலி) கூறியதைக் கேட்டுக் கொண்டிருந்த இப்னு உமர் (ரலி) இல்லை என்றோ, ஆம் என்றோ சொல்லாமல் அமைதியாக இருந்தார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி) வழியாக உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்)

அத்தியாயம்: 15, பாடம்: 35, ஹதீஸ் எண்: 2198

‏و حَدَّثَنِي ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏الْحَسَنُ بْنُ مُوسَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏زُهَيْرٌ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي إِسْحَقَ ‏ ‏قَالَ سَأَلْتُ ‏ ‏زَيْدَ بْنَ أَرْقَمَ : ‏

‏كَمْ غَزَوْتَ مَعَ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ سَبْعَ عَشْرَةَ قَالَ وَحَدَّثَنِي ‏ ‏زَيْدُ بْنُ أَرْقَمَ ‏ ‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏غَزَا تِسْعَ عَشْرَةَ وَأَنَّهُ حَجَّ بَعْدَ مَا هَاجَرَ حَجَّةً وَاحِدَةً حَجَّةَ الْوَدَاعِ ‏‏قَالَ ‏ ‏أَبُو إِسْحَقَ ‏ ‏وَبِمَكَّةَ ‏ ‏أُخْرَى

நான் ஸைத் பின் அர்கம் (ரலி) அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் எத்தனை அறப் போர்களில் நீங்கள் கலந்து கொண்டீர்கள்?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “பதினேழு அறப் போர்களில்” என்று விடையளித்தார்கள்.

தொடர்ந்து அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) பத்தொன்பது போர்களில் கலந்து கொண்டார்கள். அவர்கள் (மதீனாவிற்கு) நாடு துறந்து (ஹிஜ்ரத்) சென்ற பிறகு ஒரேயொரு ஹஜ் -விடைபெறும் ஹஜ்- மட்டுமே செய்தார்கள்” என்றும் கூறினார்கள்.

அறிவிப்பாளர் : ஸைத் பின் அர்கம் (ரலி) வழியாக அபூஇஸ்ஹாக் அம்ரு அஸ்ஸபீஈ (ரஹ்)

அத்தியாயம்: 15, பாடம்: 35, ஹதீஸ் எண்: 2197

‏حَدَّثَنَا ‏ ‏هَدَّابُ بْنُ خَالِدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏هَمَّامٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏قَتَادَةُ ‏ ‏أَنَّ ‏ ‏أَنَسًا ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُ ‏ ‏أَخْبَرَهُ : ‏

‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏اعْتَمَرَ أَرْبَعَ عُمَرٍ كُلُّهُنَّ فِي ذِي الْقَعْدَةِ إِلَّا الَّتِي مَعَ حَجَّتِهِ عُمْرَةً مِنْ‏ ‏الْحُدَيْبِيَةِ ‏ ‏أَوْ زَمَنَ ‏ ‏الْحُدَيْبِيَةِ ‏ ‏فِي ذِي الْقَعْدَةِ وَعُمْرَةً مِنْ الْعَامِ الْمُقْبِلِ فِي ذِي الْقَعْدَةِ وَعُمْرَةً مِنْ ‏‏جِعْرَانَةَ ‏ ‏حَيْثُ قَسَمَ غَنَائِمَ ‏ ‏حُنَيْنٍ ‏ ‏فِي ذِي الْقَعْدَةِ وَعُمْرَةً مَعَ حَجَّتِهِ ‏


حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنِي ‏ ‏عَبْدُ الصَّمَدِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏هَمَّامٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏قَتَادَةُ ‏ ‏قَالَ سَأَلْتُ ‏ ‏أَنَسًا ‏‏كَمْ حَجَّ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ حَجَّةً وَاحِدَةً وَاعْتَمَرَ أَرْبَعَ عُمَرٍ ثُمَّ ذَكَرَ ‏ ‏بِمِثْلِ حَدِيثِ ‏‏هَدَّابٍ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) நான்கு உம்ராக்கள் செய்தார்கள். தமது ஹஜ்ஜுடன் செய்த உம்ராவைத் தவிர மற்ற அனைத்தையும் துல்கஅதா மாதத்திலேயே செய்தார்கள்:

1) ஹுதைபியாவிலிருந்து அல்லது ஹுதைபியா உடன்படிக்கை நடந்த துல்கஅதா மாதத்தில் செய்த உம்ரா.

2) அடுத்த ஆண்டு துல்கஅதா மாதத்தில் செய்த உம்ரா.

3) ஹுனைன் போரில் கிடைத்த போர்ச் செல்வங்களைப் பங்குவைத்த இடமான ஜிஃரானாவிலிருந்து துல்கஅதா மாதத்தில் செய்த உம்ரா.

4) அவர்கள் (துல்ஹஜ் மாதத்தில்) தமது ஹஜ்ஜுடன் செய்த உம்ரா.

அறிவிப்பாளர் : அனஸ் (ரலி)


குறிப்பு :

அனஸ் (ரலி) அவர்களிடம் “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) எத்தனை ஹஜ் செய்தார்கள்?” என்று கத்தாதா (ரஹ்) கேட்டதற்கு, “அவர்கள் ஒரேயொரு ஹஜ் மட்டுமே செய்தார்கள்; நான்கு உம்ராக்கள் செய்தார்கள்” என்று அனஸ் (ரலி) விடையளித்தார்கள் என்று முஹம்மது பின் முஸன்னா (ரஹ்) வழி அறிவிப்பில் இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 15, பாடம்: 34, ஹதீஸ் எண்: 2196

‏و حَدَّثَنَا ‏ ‏سَعِيدُ بْنُ مَنْصُورٍ ‏ ‏وَعَمْرٌو النَّاقِدُ ‏ ‏وَزُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عُيَيْنَةَ ‏ ‏قَالَ ‏سَعِيدٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏الزُّهْرِيُّ ‏ ‏عَنْ ‏ ‏حَنْظَلَةَ الْأَسْلَمِيِّ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏أَبَا هُرَيْرَةَ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُ ‏ ‏يُحَدِّثُ ‏‏عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ

وَالَّذِي نَفْسِي بِيَدِهِ ‏ ‏لَيُهِلَّنَّ ‏ ‏ابْنُ مَرْيَمَ ‏ ‏بِفَجِّ الرَّوْحَاءِ ‏ ‏حَاجًّا أَوْ مُعْتَمِرًا أَوْ ‏ ‏لَيَثْنِيَنَّهُمَا


‏و حَدَّثَنَاه ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏لَيْثٌ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏مِثْلَهُ قَالَ وَالَّذِي نَفْسُ ‏‏مُحَمَّدٍ ‏ ‏بِيَدِهِ ‏ ‏و حَدَّثَنِيهِ ‏ ‏حَرْمَلَةُ بْنُ يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏يُونُسُ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏عَنْ ‏ ‏حَنْظَلَةَ بْنِ عَلِيٍّ الْأَسْلَمِيِّ ‏ ‏أَنَّهُ سَمِعَ ‏ ‏أَبَا هُرَيْرَةَ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُ ‏ ‏يَقُولُا ‏ ‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَالَّذِي نَفْسِي بِيَدِهِ بِمِثْلِ حَدِيثِهِمَا

“என் உயிர் கையிலுள்ளன்மீது ஆணையாக! (இறுதி நாட்களில்) மர்யமின் புதல்வர் (ஈஸா) (மக்கா – மதீனா இடையே உள்ள) ‘ஃபஜ்ஜுர் ரவ்ஹா’ எனுமிடத்தில் ஹஜ்ஜுக்காக அல்லது உம்ராவிற்காக அல்லது அவை இரண்டுக்கும் தல்பியாச் சொல்வார்கள்” என்று நபி (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)


குறிப்பு  :

குதைபா பின் ஸயீத் (ரஹ்) வழி அறிவிப்பு,, “முஹம்மதின் உயிர் கையிலுள்ளவன்மீது ஆணையாக!” என ஆரம்பமாகிறது. யூனுஸ் (ரஹ்) வழி அறிவிப்பில் “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ‘என் உயிர் கையிலுள்ளவன்மீது ஆணையாக!’ என்று கூறினார்கள் என்றே இடம் பெற்றுள்ளது.

அத்தியாயம்: 15, பாடம்: 34, ஹதீஸ் எண்: 2195

‏و حَدَّثَنِيهِ ‏ ‏عَلِيُّ بْنُ حُجْرٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏إِسْمَعِيلُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏عَنْ ‏ ‏يَحْيَى بْنِ أَبِي إِسْحَقَ ‏ ‏وَحُمَيْدٍ الطَّوِيلِ‏ ‏قَالَ ‏ ‏يَحْيَى ‏ ‏سَمِعْتُ ‏ ‏أَنَسًا ‏ ‏يَقُولُ : ‏

‏سَمِعْتُ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَقُولُ ‏ ‏لَبَّيْكَ عُمْرَةً وَحَجًّا ‏


و قَالَ ‏ ‏حُمَيْدٌ ‏ ‏قَالَ ‏ ‏أَنَسٌ ‏ ‏سَمِعْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَقُولُ ‏ ‏لَبَّيْكَ بِعُمْرَةٍ وَحَجٍّ

நபி (ஸல்) “லப்பைக்க உம்ரத்தன் வ ஹஜ்ஜன்” என்று கூறியதை நான் செவியுற்றேன்.

அறிவிப்பாளர் : அனஸ் (ரலி)


குறிப்பு :

ஹுமைத் அத்தவீல் (ரஹ்) வழி அறிவிப்பில் “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ‘லப்பைக்க பி உம்ரத்தின் வ ஹஜ்ஜின்’ (உம்ராவிற்கும் ஹஜ்ஜுக்கும் தல்பியாச் சொல்கிறேன்) என்று கூறியதை நான் கேட்டேன் என அனஸ் (ரலி) கூறினார்கள்” என்று இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 15, பாடம்: 34, ஹதீஸ் எண்: 2194

‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏هُشَيْمٌ ‏ ‏عَنْ ‏ ‏يَحْيَى بْنِ أَبِي إِسْحَقَ ‏ ‏وَعَبْدِ الْعَزِيزِ بْنِ صُهَيْبٍ ‏‏وَحُمَيْدٍ ‏ ‏أَنَّهُمْ سَمِعُوا ‏ ‏أَنَسًا ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُ ‏ ‏قَالَ : ‏

‏سَمِعْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَهَلَّ ‏ ‏بِهِمَا جَمِيعًا ‏ ‏لَبَّيْكَ عُمْرَةً وَحَجًّا لَبَّيْكَ عُمْرَةً وَحَجًّا

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ஹஜ் மற்றும் உம்ரா இரண்டிற்கும் சேர்த்து, “லப்பைக்க உம்ரத்தன் வ ஹஜ்ஜன்; லப்பைக்க உம்ரத்தன் வ ஹஜ்ஜன் (நான் உம்ராவிற்கும் ஹஜ்ஜுக்கும் தல்பியாச் சொல்கிறேன்; நான் உம்ராவிற்கும் ஹஜ்ஜுக்கும் தல்பியாச் சொல்கிறேன்)” என்று தல்பியாச் சொன்னதை நான் செவியுற்றுள்ளேன்.

அறிவிப்பாளர் : அனஸ் (ரலி)