அத்தியாயம்: 36, பாடம்: 6, ஹதீஸ் எண்: 3713

حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ، حَدَّثَنِي زَاذَانُ، قَالَ :‏

قُلْتُ لاِبْنِ عُمَرَ حَدِّثْنِي بِمَا نَهَى عَنْهُ النَّبِيُّ صلى الله عليه وسلم مِنَ الأَشْرِبَةِ بِلُغَتِكَ وَفَسِّرْهُ لِي بِلُغَتِنَا فَإِنَّ لَكُمْ لُغَةً سِوَى لُغَتِنَا ‏.‏ فَقَالَ نَهَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَنِ الْحَنْتَمِ وَهِيَ الْجَرَّةُ وَعَنِ الدُّبَّاءِ وَهِيَ الْقَرْعَةُ وَعَنِ الْمُزَفَّتِ وَهُوَ الْمُقَيَّرُ وَعَنِ النَّقِيرِ وَهْىَ النَّخْلَةُ تُنْسَحُ نَسْحًا وَتُنْقَرُ نَقْرًا وَأَمَرَ أَنْ يُنْتَبَذَ فِي الأَسْقِيَةِ


وَحَدَّثَنَاهُ مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، وَابْنُ بَشَّارٍ قَالاَ حَدَّثَنَا أَبُو دَاوُدَ، حَدَّثَنَا شُعْبَةُ، فِي هَذَا الإِسْنَادِ ‏

நான் இப்னு உமர் (ரலி) அவர்களிடம் “நபி (ஸல்) தடை செய்துள்ள குடிபானங்களைப் பற்றி உங்களது (வட்டார) மொழியில் கூறி, அதற்கு எங்களது (வட்டார) மொழியில் எனக்கு விளக்கமளியுங்கள். ஏனெனில், எங்களது மொழி வழக்கு அல்லாத வேறொரு மொழி வழக்கு உங்களுக்கு உள்ளது” என்று கூறினேன்.

அதற்கு இப்னு உமர் (ரலி), “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ‘ஹன்த்தமை’ப் பயன்படுத்த வேண்டாமெனத் தடை செய்தார்கள். அது, சுட்ட களிமண் பாத்திரமாகும். மேலும், அவர்கள் ‘துப்பா’வையும் தடை செய்தார்கள். அது, சுரைக்குடுவையாகும். ‘முஸஃப்பத்’தையும் தடை செய்தார்கள். அது, தார் பூசப்பட்ட பாத்திரமாகும். ‘நக்கீரை’யும் தடை செய்தார்கள். அது, பேரீச்சை மரத்தின் மேற்பட்டை உரிக்கப்பட்டு பின்னர் நன்கு குடைந்து தயாரிக்கப்பட்ட பாத்திரமாகும்” என்று கூறிவிட்டு, “(இவற்றை விடுத்து) தோல் பைகளில் பானங்களை ஊற்றிவைக்குமாறு உத்தரவிட்டார்கள்” என்று சொன்னார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி) வழியாக ஸாதான் (ரஹ்)

அத்தியாயம்: 36, பாடம்: 6, ஹதீஸ் எண்: 3712

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ جَبَلَةَ، قَالَ سَمِعْتُ ابْنَ عُمَرَ، يُحَدِّثُ قَالَ :‏

نَهَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَنِ الْحَنْتَمَةِ ‏.‏ فَقُلْتُ مَا الْحَنْتَمَةُ قَالَ الْجَرَّةُ ‏

இப்னு உமர் (ரலி), “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ‘ஹன்த்தமா’வை (பானங்களுக்குப்) பயன்படுத்த வேண்டாமெனத் தடை செய்தார்கள்” என்று கூறினார்கள். நான் ‘ஹன்த்தமா’ என்பது என்ன?” என்று கேட்டேன். அதற்கு இப்னு உமர் (ரலி), “சுட்ட களிமண் பாத்திரம்’ என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி) வழியாக ஜபலா பின் ஸஹீம் (ரஹ்)

அத்தியாயம்: 36, பாடம்: 6, ஹதீஸ் எண்: 3711

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، وَابْنُ بَشَّارٍ قَالاَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عُقْبَةَ بْنِ حُرَيْثٍ، قَالَ سَمِعْتُ ابْنَ عُمَرَ يَقُولُ :‏

نَهَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَنِ الْجَرِّ وَالدُّبَّاءِ وَالْمُزَفَّتِ وَقَالَ ‏ “‏ انْتَبِذُوا فِي الأَسْقِيَةِ ‏”‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) சுட்ட களிமண் பாத்திரம், சுரைக்குடுவை மற்றும் தார் பூசப்பட்ட பாத்திரம் ஆகியவற்றை(க் குடிபானங்களுக்கு)ப் பயன்படுத்த வேண்டாம் எனத் தடை செய்தார்கள். (மாறாக) “தோல் பைகளில் பானங்களை ஊற்றிவைத்துக்கொள்ளுங்கள்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி)

அத்தியாயம்: 36, பாடம்: 6, ஹதீஸ் எண்: 3710

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، وَابْنُ بَشَّارٍ قَالاَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ مُحَارِبِ بْنِ دِثَارٍ، قَالَ سَمِعْتُ ابْنَ عُمَرَ يَقُولُ :‏

نَهَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَنِ الْحَنْتَمِ وَالدُّبَّاءِ وَالْمُزَفَّتِ ‏.‏ قَالَ سَمِعْتُهُ غَيْرَ مَرَّةٍ ‏


وَحَدَّثَنَا سَعِيدُ بْنُ عَمْرٍو الأَشْعَثِيُّ، أَخْبَرَنَا عَبْثَرٌ، عَنِ الشَّيْبَانِيِّ، عَنْ مُحَارِبِ بْنِ دِثَارٍ عَنِ ابْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم ‏.‏ بِمِثْلِهِ ‏.‏ قَالَ وَأُرَاهُ قَالَ وَالنَّقِيرِ ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) மண்சாடி, சுரைக்குடுவை, தார் பூசப்பட்ட பாத்திரம் ஆகியவற்றை(க் குடிபானங்களுக்கு)ப் பயன்படுத்த வேண்டாமெனத் தடை செய்தார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி)


குறிப்பு :

“இதை நான் இப்னு உமர் (ரலி) அவர்களிடமிருந்து ஒன்றுக்கும் மேற்பட்ட முறை செவியுற்றுள்ளேன்” என்று அறிவிப்பாளர் முஹாரிப் பின் திஸார் (ரஹ்) கூறுகின்றார்.

மேலும், “இப்னு உமர் (ரலி) பேரீச்சை மரத்தின் அடிப் பாகத்தைக் குடைந்து தயாரிக்கப்பட்ட பாத்திரத்தையும் (சேர்த்துக்) குறிப்பிட்டார்கள் என்றே நினைக்கின்றேன்” என ஷைபானி (ரஹ்) வழி அறிவிப்பில் முஹாரிப் பின் திஸார் (ரஹ்) கூறுகின்றார்.

அத்தியாயம்: 36, பாடம்: 6, ஹதீஸ் எண்: 3709

حَدَّثَنَا عَمْرٌو النَّاقِدُ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ مَيْسَرَةَ، أَنَّهُ سَمِعَ طَاوُسًا، يَقُولُ :‏

كُنْتُ جَالِسًا عِنْدَ ابْنِ عُمَرَ فَجَاءَهُ رَجُلٌ فَقَالَ أَنَهَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَنْ نَبِيذِ الْجَرِّ وَالدُّبَّاءِ وَالْمُزَفَّتِ قَالَ نَعَمْ

நான் இப்னு உமர் (ரலி) அவர்களிடம் (ஒரு நாள்) அமர்ந்திருந்தேன். அப்போது அவர்களிடம் ஒருவர் வந்து, “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) சுட்ட களிமண் பாத்திரம், சுரைக்குடுவை மற்றும் தார் பூசப்பட்ட பாத்திரம் ஆகியவற்றில் பானங்களை ஊற்றிவைக்க வேண்டாமெனத் தடை செய்தார்களா?” என்று கேட்டார். அதற்கு இப்னு உமர் (ரலி) “ஆம்” என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி) வழியாக தாவூஸ் (ரஹ்)

அத்தியாயம்: 36, பாடம்: 6, ஹதீஸ் எண்: 3708

وَحَدَّثَنِي مُحَمَّدُ بْنُ حَاتِمٍ، حَدَّثَنَا بَهْزٌ، حَدَّثَنَا وُهَيْبٌ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ طَاوُسٍ، عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ عُمَرَ :‏

أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم نَهَى عَنِ الْجَرِّ وَالدُّبَّاءِ ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) சுட்ட களிமண் பாத்திரம், சுரைக்குடுவை ஆகியவற்றைப் பயன்படுத்த வேண்டாமெனத் தடை செய்தார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி)

அத்தியாயம்: 36, பாடம்: 6, ஹதீஸ் எண்: 3707

وَحَدَّثَنِي مُحَمَّدُ بْنُ رَافِعٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ، أَخْبَرَنِي ابْنُ طَاوُسٍ، عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ عُمَرَ:‏

أَنَّ رَجُلاً، جَاءَهُ فَقَالَ أَنَهَى النَّبِيُّ صلى الله عليه وسلم أَنْ يُنْبَذَ فِي الْجَرِّ وَالدُّبَّاءِ قَالَ نَعَمْ ‏

இப்னு உமர் (ரலி) அவர்களிடம் ஒருவர் வந்து, “அல்லாஹ்வின் தூதர் (ஸல்), சுட்ட களிமண் பாத்திரம், சுரைக்குடுவை ஆகியவற்றில் பானங்களை ஊற்றிவைக்க வேண்டாமெனத் தடை செய்தார்களா?” என்று கேட்டார். அதற்கு இப்னு உமர் (ரலி)“ஆம்” என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி) வழியாக தாவூஸ் (ரஹ்)

அத்தியாயம்: 36, பாடம்: 6, ஹதீஸ் எண்: 3706

وَحَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، أَخْبَرَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ ثَابِتٍ، قَالَ قُلْتُ لاِبْنِ عُمَرَ :‏

نَهَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَنْ نَبِيذِ الْجَرِّ قَالَ فَقَالَ قَدْ زَعَمُوا ذَاكَ ‏.‏ قُلْتُ أَنَهَى عَنْهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ قَدْ زَعَمُوا ذَاكَ


حَدَّثَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ، حَدَّثَنَا ابْنُ عُلَيَّةَ، حَدَّثَنَا سُلَيْمَانُ التَّيْمِيُّ، عَنْ طَاوُسٍ، قَالَ قَالَ رَجُلٌ لاِبْنِ عُمَرَ أَنَهَى نَبِيُّ اللَّهِ صلى الله عليه وسلم عَنْ نَبِيذِ الْجَرِّ قَالَ نَعَمْ ‏.‏ ثُمَّ قَالَ طَاوُسٌ وَاللَّهِ إِنِّي سَمِعْتُهُ مِنْهُ ‏.‏

நான் இப்னு உமர் (ரலி) அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) சுட்ட களிமண் பாத்திரத்தில் ஊறவைக்கப்பட்ட பானங்களைத் தடை செய்தார்களா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள் “அவ்வாறுதான் மக்கள் கூறுகின்றார்கள்” என்று பதிலளித்தார்கள்.

நான், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அதற்குத் தடை விதித்தார்களா?” என்று (மீண்டும்) கேட்டேன். இப்னு உமர் (ரலி), “அப்படித்தான் மக்கள் கூறுகின்றார்கள்” என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி) வழியாக ஸாபித் பின் அஸ்லம் அல்புனானீ (ரஹ்)


குறிப்பு :

இப்னு உமர் (ரலி) அவர்களிடம் ஒருவர் வந்து, “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) சுட்ட களிமண் பாத்திரத்தில் பானங்களை ஊற்றி வைக்க வேண்டாமெனத் தடை செய்தார்களா?” என்று கேட்டார். அதற்கு இப்னு உமர் (ரலி) “ஆம்” என்று பதிலளித்தார்கள் என்பதாக தாவூஸ் (ரஹ்) கூறுகின்றார்.

“அல்லாஹ்வின் மீதாணையாக! இவ்வாறே நான் இப்னு உமர் (ரலி) அவர்களிடமிருந்து செவியுற்றேன்” என்று தாவூஸ் (ரஹ்) கூறினார்கள் என்பதாக இதன் அறிவிப்பாளர்களுள் ஒருவரான ஸுலைமான் அத்தைமீ (ரஹ்) கூறுகின்றார்.

அத்தியாயம்: 36, பாடம்: 6, ஹதீஸ் எண்: 3705

حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، قَالَ قَرَأْتُ عَلَى مَالِكٍ عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ :‏

أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم خَطَبَ النَّاسَ فِي بَعْضِ مَغَازِيهِ قَالَ ابْنُ عُمَرَ فَأَقْبَلْتُ نَحْوَهُ فَانْصَرَفَ قَبْلَ أَنْ أَبْلُغَهُ فَسَأَلْتُ مَاذَا قَالَ قَالُوا نَهَى أَنْ يُنْتَبَذَ فِي الدُّبَّاءِ وَالْمُزَفَّتِ ‏


وَحَدَّثَنَا قُتَيْبَةُ، وَابْنُ رُمْحٍ عَنِ اللَّيْثِ بْنِ سَعْدٍ، ح وَحَدَّثَنَا أَبُو الرَّبِيعِ، وَأَبُو كَامِلٍ قَالاَ حَدَّثَنَا حَمَّادٌ، ح وَحَدَّثَنِي زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ، جَمِيعًا عَنْ أَيُّوبَ، ح وَحَدَّثَنَا ابْنُ نُمَيْرٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ، ح وَحَدَّثَنَا ابْنُ الْمُثَنَّى، وَابْنُ أَبِي عُمَرَ، عَنِ الثَّقَفِيِّ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، ح وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رَافِعٍ، حَدَّثَنَا ابْنُ أَبِي فُدَيْكٍ، أَخْبَرَنَا الضَّحَّاكُ يَعْنِي، ابْنَ عُثْمَانَ ح وَحَدَّثَنِي هَارُونُ الأَيْلِيُّ، أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي أُسَامَةُ، كُلُّ هَؤُلاَءِ عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، ‏.‏ بِمِثْلِ حَدِيثِ مَالِكٍ وَلَمْ يَذْكُرُوا فِي بَعْضِ مَغَازِيهِ ‏.‏ إِلاَّ مَالِكٌ وَأُسَامَةُ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), தாம் கலந்துகொண்ட போர் ஒன்றில் மக்களிடையே உரையாற்றினார்கள். நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) இருந்த பகுதியை நோக்கிச் சென்றேன். நான் அங்குச் சென்றடைவதற்குள் (அவர்கள் உரையை முடித்துத்) திரும்பிவிட்டார்கள்.

எனவே நான் (மக்களிடம்), “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) என்ன சொன்னார்கள்?” என்று கேட்டேன். மக்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) சுரைக்குடுவை, தார் பூசப்பட்ட பாத்திரம் ஆகியவற்றில் (பானங்களை) ஊற்றிவைக்க வேண்டாம் எனத் தடை விதித்தார்கள்” என்று பதிலளித்தனர்.

அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி)


குறிப்பு :

மாலிக் பின் அனஸ் (ரஹ்) மற்றும் உஸாமா பின் ஸைத் (ரஹ்) ஆகியோரது அறிவிப்பைத் தவிர மற்ற அறிவிப்புகளில் “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கலந்துகொண்ட போர்களுள் ஒன்றில்” எனும் குறிப்பு இடம்பெறவில்லை.

அத்தியாயம்: 36, பாடம்: 6, ஹதீஸ் எண்: 3704

حَدَّثَنَا شَيْبَانُ بْنُ فَرُّوخَ، حَدَّثَنَا جَرِيرٌ، – يَعْنِي ابْنَ حَازِمٍ – حَدَّثَنَا يَعْلَى بْنُ حَكِيمٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، قَالَ سَأَلْتُ ابْنَ عُمَرَ عَنْ نَبِيذِ الْجَرِّ، فَقَالَ :‏

حَرَّمَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم نَبِيذَ الْجَرِّ ‏.‏ فَأَتَيْتُ ابْنَ عَبَّاسٍ فَقُلْتُ أَلاَ تَسْمَعُ مَا يَقُولُ ابْنُ عُمَرَ قَالَ وَمَا يَقُولُ قُلْتُ قَالَ حَرَّمَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم نَبِيذَ الْجَرِّ ‏.‏ فَقَالَ صَدَقَ ابْنُ عُمَرَ حَرَّمَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم نَبِيذَ الْجَرِّ ‏.‏ فَقُلْتُ وَأَىُّ شَىْءٍ نَبِيذُ الْجَرِّ فَقَالَ كُلُّ شَىْءٍ يُصْنَعُ مِنَ الْمَدَرِ

நான் இப்னு உமர் (ரலி) அவர்களிடம், சுட்ட களிமண் பாத்திரத்தில் ஊறவைக்கப்பட்ட பானங்கள் பற்றிக் கேட்டேன். இப்னு உமர் (ரலி), “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) சுட்ட களிமண் பாத்திரத்தில் ஊறவைக்கப்பட்ட பானத்திற்குத் தடை விதித்தார்கள்” என்று பதிலளித்தார்கள்.

பின்னர் நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் சென்று, “இப்னு உமர் (ரலி) கூறுவதைக் கேட்டீர்களா?” என்று கேட்டேன். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி), “இப்னு உமர் என்ன கூறுகின்றார்?” என்று கேட்டார்கள். நான் “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) சுட்ட களிமண் பாத்திரத்தில் ஊறவைக்கப்பட்ட பானத்திற்குத் தடை விதித்தார்கள் என்று கூறினார்” என்றேன்.

அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி), “இப்னு உமர் உண்மை சொன்னார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ‘நபீதுல் ஜர்ரு’க்குத் தடை விதித்தார்கள்” என்று கூறினார்கள். உடனே நான், ‘நபீதுல் ஜர் என்பது என்ன?” என்று கேட்டேன். அதற்கு, “சுட்ட களிமண்ணில் தயாரிக்கப்படும் (பாத்திரங்கள்) ஒவ்வொன்றும் (நபீதுல் ஜர்) ஆகும்” என்று இப்னு அப்பாஸ் (ரலி) பதிலளித்தார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி) வழியாக ஸயீத் பின் ஜுபைர் (ரஹ்)