அத்தியாயம்: 4, பாடம்: 02, ஹதீஸ் எண்: 571

و حَدَّثَنِي ‏ ‏عُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ الْقَوَارِيرِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الْوَارِثِ بْنُ سَعِيدٍ ‏ ‏وَعَبْدُ الْوَهَّابِ بْنُ عَبْدِ الْمَجِيدِ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏أَيُّوبُ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي قِلَابَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَنَسٍ ‏ ‏قَالَ ‏
‏أُمِرَ ‏ ‏بِلَالٌ ‏ ‏أَنْ ‏ ‏يَشْفَعَ ‏ ‏الْأَذَانَ وَيُوتِرَ الْإِقَامَةَ ‏

தொழுகை அழைப்பு (அதான்) சொற்களை இரட்டைப்படையாகவும் தொழுகை அறிவிப்பு (இகாமத்) சொற்களை ஒற்றைப்படையாகவும் கூறும்படி பிலால் (ரலி) அவர்கள் கட்டளை இடப்பட்டார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் (ரலி)

அத்தியாயம்: 4, பாடம்: 02, ஹதீஸ் எண்: 570

و حَدَّثَنَا ‏ ‏إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ الْحَنْظَلِيُّ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏عَبْدُ الْوَهَّابِ الثَّقَفِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏خَالِدٌ الْحَذَّاءُ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي قِلَابَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَنَسِ بْنِ مَالِكٍ ‏ ‏قَالَ ‏
‏ذَكَرُوا أَنْ يُعْلِمُوا وَقْتَ الصَّلَاةِ بِشَيْءٍ يَعْرِفُونَهُ فَذَكَرُوا أَنْ يُنَوِّرُوا نَارًا أَوْ يَضْرِبُوا نَاقُوسًا ‏ ‏فَأُمِرَ ‏ ‏بِلَالٌ ‏ ‏أَنْ ‏ ‏يَشْفَعَ ‏ ‏الْأَذَانَ وَيُوتِرَ الْإِقَامَةَ ‏
‏و حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ حَاتِمٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏بَهْزٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏وُهَيْبٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏خَالِدٌ الْحَذَّاءُ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏لَمَّا كَثُرَ النَّاسُ ذَكَرُوا أَنْ يُعْلِمُوا بِمِثْلِ حَدِيثِ ‏ ‏الثَّقَفِيِّ ‏ ‏غَيْرَ أَنَّهُ قَالَ أَنْ يُورُوا نَارًا ‏

மக்கள் புரிந்து கொள்ளும் வகையில் தொழுகை நேரத்தை அறிவிக்கும் முறையை உருவாக்குவது குறித்து நபித்தோழர்கள் கலந்து பேசினர். அப்போது சிலர், “நெருப்பு மூட்டுவோம்; அல்லது மணி அடிப்போம்” என்றனர். (இரண்டும் யூத-கிறிஸ்தவக் கலாச்சாரம் என்பதால் புதிய முறையாக ‘அதான்’ எனும்) தொழுகைக்கான அழைப்புச் சொற்களை இரட்டைப்படையாகவும் இகாமத் எனும் தொழுகை அறிவிப்புச் சொற்களை ஒற்றைப்படையாகவும் கூறும்படி பிலால் (ரலி) அவர்கள் கட்டளை இடப்பட்டார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் பின் மாலிக் (ரலி)

குறிப்பு :

மேற்காணும் ஹதீஸ், உஹைப் (ரஹ்) மற்றும் காலித் அல்-ஹத்தா வழி அறிவிப்பில், “முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகமானபோது …” எனத் தொடங்குகிறது. அதில், “நெருப்பு மூட்டுவோம்” எனும் ஆலோசனை இடம்பெறவில்லை.

அத்தியாயம்: 4, பாடம்: 02, ஹதீஸ் எண்: 569

حَدَّثَنَا ‏ ‏خَلَفُ بْنُ هِشَامٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حَمَّادُ بْنُ زَيْدٍ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏إِسْمَعِيلُ ابْنُ عُلَيَّةَ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏خَالِدٍ الْحَذَّاءِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي قِلَابَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَنَسٍ ‏ ‏قَالَ ‏
‏أُمِرَ ‏ ‏بِلَالٌ ‏ ‏أَنْ يَشْفَعَ الْأَذَانَ وَيُوتِرَ الْإِقَامَةَ ‏
‏زَادَ ‏ ‏يَحْيَى ‏ ‏فِي حَدِيثِهِ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عُلَيَّةَ ‏ ‏فَحَدَّثْتُ بِهِ ‏ ‏أَيُّوبَ ‏ ‏فَقَالَ ‏ ‏إِلَّا الْإِقَامَةَ ‏

தொழுகை அழைப்பு (அதானில்) இரட்டையாகவும் தொழுகை அறிவிப்பு (இகாமத்தில்) ஒற்றையாகவும் சொற்றொடரை அமைத்துக் கொள்ளுமாறு பிலால் (ரலி) கட்டளை இடப்பட்டார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் (ரலி)

குறிப்பு :

யஹ்யா பின் யஹ்யா (ரஹ்) அவர்களின் அறிவிப்பில், ” (இகாமத்தில் சொல்லப்படும்) ‘கத் காமத்திஸ் ஸலாஹ்’ என்பதைத் தவிர” என்று அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது.