அத்தியாயம்: 5, பாடம்: 27, ஹதீஸ் எண்: 939

‏حَدَّثَنِي ‏ ‏عَبْدُ الْحَمِيدِ بْنُ بَيَانٍ الْوَاسِطِيُّ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏خَالِدُ بْنُ عَبْدِ اللَّهِ ‏ ‏عَنْ ‏ ‏سُهَيْلٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي عُبَيْدٍ الْمَذْحِجِيِّ ‏ ‏قَالَ ‏ ‏مُسْلِم ‏ ‏أَبُو عُبَيْدٍ ‏ ‏مَوْلَى ‏ ‏سُلَيْمَانَ بْنِ عَبْدِ الْمَلِكِ ‏ ‏عَنْ ‏ ‏عَطَاءِ بْنِ يَزِيدَ اللَّيْثِيِّ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏

عَنْ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مَنْ سَبَّحَ اللَّهَ فِي ‏ ‏دُبُرِ ‏ ‏كُلِّ صَلَاةٍ ثَلَاثًا وَثَلَاثِينَ وَحَمِدَ اللَّهَ ثَلَاثًا وَثَلَاثِينَ وَكَبَّرَ اللَّهَ ثَلَاثًا وَثَلَاثِينَ فَتْلِكَ تِسْعَةٌ وَتِسْعُونَ وَقَالَ تَمَامَ الْمِائَةِ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ غُفِرَتْ خَطَايَاهُ وَإِنْ كَانَتْ مِثْلَ ‏ ‏زَبَدِ ‏ ‏الْبَحْرِ ‏
‏و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏إِسْمَعِيلُ بْنُ زَكَرِيَّاءَ ‏ ‏عَنْ ‏ ‏سُهَيْلٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي عُبَيْدٍ ‏ ‏عَنْ ‏ ‏عَطَاءٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏قَالَ ‏ ‏قَالَ ‏ ‏رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بِمِثْلِهِ

“யார் ஒவ்வொரு தொழுகைக்குப் பின்பும் முப்பத்து மூன்று முறை ஸுப்ஹானல்லாஹ் என்றும், முப்பத்து மூன்று முறை அல்ஹம்து லில்லாஹ் என்றும், முப்பத்து மூன்று முறை அல்லாஹு அக்பர் என்றும் ஆக மொத்தம் தொன்னூற்று ஒன்பது முறை கூறி, இறுதியில் நூறாவதாக லா இலாஹ இல்லல்லாஹு; வஹ்தஹூ லா ஷரீக்க லஹு; லஹுல் முல்க்கு, வலஹுல் ஹம்து; வஹுவ அலா குல்லி ஷையின் கதீர் (வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறில்லை; அவன் தனித்தவன்; அவனுக்கு இணையில்லை; ஆட்சியதிகாரம் அவனுக்கே உரியது; எல்லாப் புகழும் அவனுக்கே உரியது. அவன் அனைத்தின் மீதும் ஆற்றலுள்ளவன்) என்று நிறைவு செய்கிறாரோ அவருடைய (சிறு) பாவங்கள் யாவும் கடலின் நுரையளவு இருந்தாலும் மன்னிக்கப்படுகின்றன” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

அத்தியாயம்: 5, பாடம்: 27, ஹதீஸ் எண்: 938

‏حَدَّثَنَا ‏ ‏نَصْرُ بْنُ عَلِيٍّ الْجَهْضَمِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو أَحْمَدَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حَمْزَةُ الزَّيَّاتُ ‏ ‏عَنْ ‏ ‏الْحَكَمِ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى ‏ ‏عَنْ ‏ ‏كَعْبِ بْنِ عُجْرَةَ ‏
‏عَنْ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏مُعَقِّبَاتٌ ‏ ‏لَا يَخِيبُ قَائِلُهُنَّ أَوْ فَاعِلُهُنَّ ثَلَاثٌ وَثَلَاثُونَ تَسْبِيحَةً وَثَلَاثٌ وَثَلَاثُونَ تَحْمِيدَةً وَأَرْبَعٌ وَثَلَاثُونَ تَكْبِيرَةً فِي ‏ ‏دُبُرِ ‏ ‏كُلِّ صَلَاةٍ ‏
‏حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ حَاتِمٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَسْبَاطُ بْنُ مُحَمَّدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَمْرُو بْنُ قَيْسٍ الْمُلَائِيُّ ‏ ‏عَنْ ‏ ‏الْحَكَمِ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏مِثْلَهُ

“சில துதிச் சொற்கள் உள்ளன. அவற்றை ஓதிவருபவர் நட்டமடையமாட்டார். (அவை) ஒவ்வொரு தொழுகைக்குப் பின்பும் முப்பத்து மூன்று முறை ஸுப்ஹானல்லாஹ்; முப்பத்து மூன்று முறை அல்ஹம்து லில்லாஹ்; முப்பத்து நான்கு முறை அல்லாஹுஅக்பர் என்று கூறும் துதிச்சொற்களாகும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : கஅப் பின் உஜ்ரா (ரலி)

அத்தியாயம்: 5, பாடம்: 27, ஹதீஸ் எண்: 937

و حَدَّثَنَا ‏ ‏الْحَسَنُ بْنُ عِيسَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ الْمُبَارَكِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏مَالِكُ بْنُ مِغْوَلٍ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏الْحَكَمَ بْنَ عُتَيْبَةَ ‏ ‏يُحَدِّثُ عَنْ ‏ ‏عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى ‏ ‏عَنْ ‏ ‏كَعْبِ بْنِ عُجْرَةَ ‏
‏عَنْ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏مُعَقِّبَاتٌ ‏ ‏لَا يَخِيبُ قَائِلُهُنَّ أَوْ فَاعِلُهُنَّ ‏ ‏دُبُرَ ‏ ‏كُلِّ صَلَاةٍ مَكْتُوبَةٍ ثَلَاثٌ وَثَلَاثُونَ تَسْبِيحَةً وَثَلَاثٌ وَثَلَاثُونَ تَحْمِيدَةً وَأَرْبَعٌ وَثَلَاثُونَ تَكْبِيرَةً

“சில துதிச் சொற்கள் உள்ளன. அவற்றைக் கடமையான ஒவ்வொரு தொழுகைக்குப் பிறகும் ஓதி வருபவர் நட்டமடையமாட்டார். (அவை) முப்பத்துமூன்று முறை ‘ஸுப்ஹானல்லாஹ்’; முப்பத்து மூன்று முறை ‘அல்ஹம்துலில்லாஹ்’; முப்பத்து நான்கு முறை ‘அல்லாஹு அக்பர்’ என்று துதிப்பதாகும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : கஅப் பின் உஜ்ரா (ரலி)

அத்தியாயம்: 5, பாடம்: 27, ஹதீஸ் எண்: 936

حَدَّثَنَا ‏ ‏عَاصِمُ بْنُ النَّضْرِ التَّيْمِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏الْمُعْتَمِرُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عُبَيْدُ اللَّهِ ‏ ‏قَالَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏لَيْثٌ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عَجْلَانَ ‏ ‏كِلَاهُمَا ‏ ‏عَنْ ‏ ‏سُمَيٍّ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي صَالِحٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏وَهَذَا حَدِيثُ ‏ ‏قُتَيْبَةَ ‏

أَنَّ فُقَرَاءَ ‏ ‏الْمُهَاجِرِينَ ‏ ‏أَتَوْا رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقَالُوا ذَهَبَ أَهْلُ ‏ ‏الدُّثُورِ ‏ ‏بِالدَّرَجَاتِ الْعُلَى وَالنَّعِيمِ الْمُقِيمِ فَقَالَ وَمَا ذَاكَ قَالُوا يُصَلُّونَ كَمَا نُصَلِّي وَيَصُومُونَ كَمَا نَصُومُ وَيَتَصَدَّقُونَ وَلَا نَتَصَدَّقُ وَيُعْتِقُونَ وَلَا نُعْتِقُ فَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَفَلَا أُعَلِّمُكُمْ شَيْئًا تُدْرِكُونَ بِهِ مَنْ سَبَقَكُمْ وَتَسْبِقُونَ بِهِ مَنْ بَعْدَكُمْ وَلَا يَكُونُ أَحَدٌ أَفْضَلَ مِنْكُمْ إِلَّا مَنْ صَنَعَ مِثْلَ مَا صَنَعْتُمْ قَالُوا بَلَى يَا رَسُولَ اللَّهِ قَالَ تُسَبِّحُونَ وَتُكَبِّرُونَ وَتَحْمَدُونَ ‏ ‏دُبُرَ ‏ ‏كُلِّ صَلَاةٍ ثَلَاثًا وَثَلَاثِينَ مَرَّةً ‏
‏قَالَ ‏ ‏أَبُو صَالِحٍ ‏ ‏فَرَجَعَ فُقَرَاءُ ‏ ‏الْمُهَاجِرِينَ ‏ ‏إِلَى رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقَالُوا سَمِعَ إِخْوَانُنَا أَهْلُ الْأَمْوَالِ بِمَا فَعَلْنَا فَفَعَلُوا مِثْلَهُ فَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏ذَلِكَ فَضْلُ اللَّهِ يُؤْتِهِ مَنْ يَشَاءُ ‏ ‏وَزَادَ غَيْرُ ‏ ‏قُتَيْبَةَ ‏ ‏فِي هَذَا الْحَدِيثِ ‏ ‏عَنْ ‏ ‏اللَّيْثِ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عَجْلَانَ ‏ ‏قَالَ ‏ ‏سُمَيٌّ ‏ ‏فَحَدَّثْتُ بَعْضَ أَهْلِي ‏ ‏هَذَا الْحَدِيثَ فَقَالَ وَهِمْتَ إِنَّمَا قَالَ تُسَبِّحُ اللَّهَ ثَلَاثًا وَثَلَاثِينَ وَتَحْمَدُ اللَّهَ ثَلَاثًا وَثَلَاثِينَ وَتُكَبِّرُ اللَّهَ ثَلَاثًا وَثَلَاثِينَ فَرَجَعْتُ إِلَى ‏ ‏أَبِي صَالِحٍ ‏ ‏فَقُلْتُ لَهُ ذَلِكَ فَأَخَذَ بِيَدِي فَقَالَ اللَّهُ أَكْبَرُ وَسُبْحَانَ اللَّهِ وَالْحَمْدُ لِلَّهِ اللَّهُ أَكْبَرُ وَسُبْحَانَ اللَّهِ وَالْحَمْدُ لِلَّهِ حَتَّى تَبْلُغَ مِنْ جَمِيعِهِنَّ ثَلَاثَةً وَثَلَاثِينَ ‏ ‏قَالَ ‏ ‏ابْنُ عَجْلَانَ ‏ ‏فَحَدَّثْتُ ‏ ‏بِهَذَا الْحَدِيثِ ‏ ‏رَجَاءَ بْنَ حَيْوَةَ ‏ ‏فَحَدَّثَنِي ‏ ‏بِمِثْلِهِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي صَالِحٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏عَنْ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏أُمَيَّةُ بْنُ بِسْطَامَ الْعَيْشِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَزِيدُ بْنُ زُرَيْعٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏رَوْحٌ ‏ ‏عَنْ ‏ ‏سُهَيْلٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏عَنْ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَنَّهُمْ قَالُوا يَا رَسُولَ اللَّهِ ذَهَبَ أَهْلُ ‏ ‏الدُّثُورِ ‏ ‏بِالدَّرَجَاتِ الْعُلَى وَالنَّعِيمِ الْمُقِيمِ بِمِثْلِ حَدِيثِ ‏ ‏قُتَيْبَةَ ‏ ‏عَنْ ‏ ‏اللَّيْثِ ‏ ‏إِلَّا أَنَّهُ أَدْرَجَ فِي حَدِيثِ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏قَوْلَ ‏ ‏أَبِي صَالِحٍ ‏ ‏ثُمَّ رَجَعَ فُقَرَاءُ ‏ ‏الْمُهَاجِرِينَ ‏ ‏إِلَى آخِرِ الْحَدِيثِ وَزَادَ فِي الْحَدِيثِ يَقُولُ ‏ ‏سُهَيْلٌ ‏ ‏إِحْدَى عَشْرَةَ إِحْدَى عَشْرَةَ فَجَمِيعُ ذَلِكَ كُلِّهِ ثَلَاثَةٌ وَثَلَاثُونَ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஏழை முஹாஜிர்கள் (சிலர்) வந்து, “செல்வந்தர்கள் (மறுமையின்) உயர் பதவிகளையும் நிலையான இன்பங்களையும் (தட்டிக்) கொண்டு போய்விடுகின்றனர்” என்று கூறினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “எப்படி?” என்று கேட்டார்கள். அவர்கள், “(ஏழைகளாகிய) நாங்கள் தொழுவதைப் போன்றே அவர்களும் தொழுகின்றனர். நாங்கள் நோன்பு நோற்பதைப் போன்றே அவர்களும் நோன்பு நோற்கின்றனர். ஆனால், அவர்கள் தர்மங்கள் செய்கின்றனர். நாங்கள் தர்மங்கள் செய்(ய முடி)வதில்லை. அவர்கள் அடிமைகளை விடுதலை செய்கின்றனர். நாங்கள் அடிமைகளை விடுதலை செய்(ய முடி)வதில்லை” என்று கூறினர். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “நான் ஒன்றை உங்களுக்கு அறிவிக்கட்டுமா (அதை நீங்கள் செயல்படுத்திவந்தால் இந்தச் சமுதாயத்தில்) உங்களை முந்திவிட்டவர்களையும் உங்களுக்குப் பின்னால் வருபவர்களையும் நீங்கள் எட்டிவிடுவீர்கள். உங்களைப் போன்று செயல்படுத்தினால் தவிர உங்களைவிட வேறெவரும் சிறந்தவர்களாக ஆகிவிட முடியாது” என்று கூறினார்கள். முஹாஜிர்கள், “ஆம் (அறிவியுங்கள்) அல்லாஹ்வின் தூதரே!” என்று வேண்டினர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “நீங்கள் ஒவ்வொரு தொழுகைக்குப் பின்பும் ஸுப்ஹானல்லாஹ் (அல்லாஹ் தூயவன்) என்றும், அல்லாஹு அக்பர் (அல்லாஹ் மிகப்பெரியவன்) என்றும், அல்ஹம்து லில்லாஹ் (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்றும் முப்பத்து மூன்று முறை கூறுங்கள்” என்றார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

குறிப்பு :

பிறகு அந்த ஏழை முஹாஜிர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் திரும்பிவந்து, “செல்வந்தர்களான எங்கள் சகோதரர்கள் நாங்கள் செய்துவருவதைக் கேள்விப்பட்டு அவர்களும் அவ்வாறே செய்து வருகின்றனர்” என்று கூறினார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “இது அல்லாஹ்வின் அருட்கொடை அவன் நாடியவர்களுக்கு அதை வழங்குகிறான்” என்று சொன்னார்கள் என்று அபூஸாலிஹ் (ரஹ்) கூறியதாக இடம்பெற்றுள்ளது.

நான் இந்த ஹதீஸை என் குடும்பத்தாரில் ஒருவரிடம் அறிவித்தேன். அவர், “நீர் கூறுவது தவறு. முப்பத்து மூன்று முறை ஸுப்ஹானல்லாஹ் என்றும், முப்பது மூன்று முறை அல்ஹம்துலில்லாஹ் என்றும், முப்பத்து மூன்று முறை அல்லாஹூ அக்பர் என்றும் கூறுவீராக! என்றே அபூஸாலிஹ் (ரஹ்) கூறினார்கள்” என்றார். உடனே நான் அபூஸாலிஹ் (ரஹ்) அவர்களிடம் சென்று இது பற்றிக் கேட்டேன். அவர்கள் எனது கையைப் பிடித்தவாறு, “அல்லாஹு அக்பர் வஸுப்ஹானல்லாஹி வல்ஹம்து லில்லாஹி; அல்லாஹு அக்பர் வஸுப்ஹானல்லாஹி வல்ஹம்து லில்லாஹி என்று எல்லாம் சேர்த்து முப்பத்து மூன்று தடவையை எட்டும் அளவுக்குக் கூறுவீராக!” என்றார்கள்.

இந்த ஹதீஸை நான் ரஜாஉ பின் ஹய்வா (ரஹ்) அவர்களிடம் தெரிவித்தேன். அவர்களும் அபூஸாலிஹ் (ரஹ்) அவர்கள் அபூஹுரைரா (ரலி) அவர்கள் வழியாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து அறிவித்ததைப் போன்றே எனக்கு அறிவித்தார்கள் என்று குதைபா (ரஹ்) இடம்பெறாத அறிவிப்புகளில் ஸுமை (ரஹ்) கூறியதாக இடம்பெற்றுள்ளது.

உமையா பின் பிஸ்தாம் அல்அய்ஷீ (ரஹ்) வழி அறிவிப்பில், “… பிறகு ஏழை முஹாஜிர்கள் திரும்பி வந்தனர் …” என்று அபூஸாலிஹ் (ரஹ்) கூறியது இடையில் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் சுஹைல் (ரஹ்), “(ஸுப்ஹானல்லாஹ் அல்ஹம்து லில்லாஹ் அல்லாஹூ அக்பர் ஆகிய ஒவ்வொன்றையும்) பதினோரு முறை பதினோரு முறை கூறுங்கள். ஆக மொத்தம் இவை யாவும் சேர்ந்து முப்பத்து மூன்று முறையாகும்” என்று அறிவித்தார்கள் என அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 5, பாடம்: 27, ஹதீஸ் எண்: 935

و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏حَدَّثَنَا ‏ ‏هِشَامٌ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي الزُّبَيْرِ ‏ ‏قَالَ ‏
‏كَانَ ‏ ‏ابْنُ الزُّبَيْرِ ‏ ‏يَقُولُ فِي ‏ ‏دُبُرِ ‏ ‏كُلِّ صَلَاةٍ حِينَ يُسَلِّمُ ‏ ‏لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَلَا نَعْبُدُ إِلَّا إِيَّاهُ لَهُ النِّعْمَةُ وَلَهُ الْفَضْلُ وَلَهُ الثَّنَاءُ الْحَسَنُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ مُخْلِصِينَ لَهُ الدِّينَ وَلَوْ كَرِهَ الْكَافِرُونَ وَقَالَ كَانَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يُهَلِّلُ ‏ ‏بِهِنَّ ‏ ‏دُبُرَ ‏ ‏كُلِّ صَلَاةٍ ‏

و حَدَّثَنَاه ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدَةُ بْنُ سُلَيْمَانَ ‏ ‏عَنْ ‏ ‏هِشَامِ بْنِ عُرْوَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي الزُّبَيْرِ ‏ ‏مَوْلًى لَهُمْ ‏ ‏أَنَّ ‏ ‏عَبْدَ اللَّهِ بْنَ الزُّبَيْرِ ‏ ‏كَانَ ‏ ‏يُهَلِّلُ ‏ ‏دُبُرَ ‏ ‏كُلِّ صَلَاةٍ بِمِثْلِ حَدِيثِ ‏ ‏ابْنِ نُمَيْرٍ ‏ ‏وَقَالَ فِي آخِرِهِ ثُمَّ يَقُولُ ‏ ‏ابْنُ الزُّبَيْرِ ‏ ‏كَانَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يُهَلِّلُ ‏ ‏بِهِنَّ ‏ ‏دُبُرَ ‏ ‏كُلِّ صَلَاةٍ ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ الدَّوْرَقِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ عُلَيَّةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏الْحَجَّاجُ بْنُ أَبِي عُثْمَانَ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏أَبُو الزُّبَيْرِ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏عَبْدَ اللَّهِ بْنَ الزُّبَيْرِ ‏ ‏يَخْطُبُ عَلَى هَذَا الْمِنْبَرِ وَهُوَ يَقُولُ ‏ ‏كَانَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَقُولُ إِذَا سَلَّمَ فِي ‏ ‏دُبُرِ ‏ ‏الصَّلَاةِ ‏ ‏أَوْ الصَّلَوَاتِ ‏ ‏فَذَكَرَ بِمِثْلِ حَدِيثِ ‏ ‏هِشَامِ بْنِ عُرْوَةَ ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ سَلَمَةَ الْمُرَادِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ ‏ ‏عَنْ ‏ ‏يَحْيَى بْنِ عَبْدِ اللَّهِ بْنِ سَالِمٍ ‏ ‏عَنْ ‏ ‏مُوسَى بْنِ عُقْبَةَ ‏ ‏أَنَّ ‏ ‏أَبَا الزُّبَيْرِ الْمَكِّيَّ ‏ ‏حَدَّثَهُ أَنَّهُ سَمِعَ ‏ ‏عَبْدَ اللَّهِ بْنَ الزُّبَيْرِ ‏ ‏وَهُوَ يَقُولُ فِي ‏ ‏إِثْرِ ‏ ‏الصَّلَاةِ إِذَا سَلَّمَ ‏ ‏بِمِثْلِ حَدِيثِهِمَا وَقَالَ فِي آخِرِهِ وَكَانَ يَذْكُرُ ذَلِكَ عَنْ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ

அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்கள் ஒவ்வொரு தொழுகைக்குப் பின்பும் ஸலாம் கொடுத்தவுடன், “லா இலாஹ இல்லல்லாஹு; வஹ்தஹூ லா ஷரீக்க லஹூ; லஹுல் முல்க்கு வலஹுல் ஹம்து வஹுவ அலா குல்லி ஷையின் கதீர். லா ஹவ்ல, வலா குவ்வத்த இல்லா பில்லாஹ். லா இலாஹ இல்லல்லாஹு வலா நஅபுது இல்லா இய்யாஹு; லஹுந் நிஅமத்து, வலஹுல் ஃபள்லு, வலஹுஸ் ஸனாஉல் ஹஸனு; லா இலாஹ இல்லல்லாஹு முக்லிஸீன லஹுத்தீன வலவ் கரிஹல் காஃபிரூன் (வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறில்லை; அவன் தனித்தவன்; அவனுக்கு இணையில்லை; ஆட்சியதிகாரம் அவனுக்கே உரியது. எல்லாப் புகழும் அவனுக்கே உரியது. அவன் அனைத்தின் மீதும் ஆற்றலுள்ளவன். அல்லாஹ்வின் உதவியின்றி பாவங்களிலிருந்து விலகிச் செல்லவோ, நல்லறங்கள் புரிய வலிமை பெறவோ (எவராலும்) இயலாது; வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறில்லை; அவனைத் தவிர வேறெவரையும் நாங்கள் வழிபடமாட்டோம். அருட்கொடைகள் அவனுக்கே உரியன. மாட்சிமை அவனுக்கே உரியது. அழகிய கீர்த்தியும் அவனுக்கே உரியது. வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறில்லை; இறைமறுப்பாளர்கள் எத்துணை வெறுத்தாலும் வழிபாடுகளை அப்பழுக்கற்று முற்றிலும் அவனுக்கே உரித்தாக்குகிறோம்)” என்று கூறுவார்கள். மேலும், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒவ்வொரு தொழுகைக்குப் பிறகும் இந்த திக்ருகளை ஓதிவந்தார்கள்” என்றும் கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) வழியாக அபுஸ்ஸுபைர் அல்மக்கீ (ரஹ்)

குறிப்பு :

அல்ஹஜ்ஜாஜ் பின் அபீஉஸ்மான் (ரஹ்) வழி அறிவிப்பில், “அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்கள் இந்தச் சொற்பொழிவு மேடைமீது நின்று உரையாற்றும்போது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகைக்கு/தொழுகைகளுக்குப்பின் ஸலாம் கொடுத்தவுடன் மேற்கண்டவாறு கூறுவார்கள்” என அபுஸ்ஸுபைர் அல்மக்கீ (ரஹ்) கூறியதாக இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 5, பாடம்: 27, ஹதீஸ் எண்: 934

و حَدَّثَنَا ‏ ‏ابْنُ أَبِي عُمَرَ الْمَكِّيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدَةُ بْنُ أَبِي لُبَابَةَ ‏ ‏وَعَبْدُ الْمَلِكِ بْنُ عُمَيْرٍ ‏ ‏سَمِعَا ‏ ‏وَرَّادًا ‏ ‏كَاتِبَ ‏ ‏الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ ‏ ‏يَقُولُا ‏
‏كَتَبَ ‏ ‏مُعَاوِيَةُ ‏ ‏إِلَى ‏ ‏الْمُغِيرَةِ ‏ ‏اكْتُبْ إِلَيَّ بِشَيْءٍ سَمِعْتَهُ مِنْ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ فَكَتَبَ إِلَيْهِ سَمِعْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَقُولُ إِذَا قَضَى الصَّلَاةَ ‏ ‏لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ اللَّهُمَّ لَا مَانِعَ لِمَا أَعْطَيْتَ وَلَا مُعْطِيَ لِمَا مَنَعْتَ وَلَا يَنْفَعُ ‏ ‏ذَا الْجَدِّ ‏ ‏مِنْكَ ‏ ‏الْجَدُّ

முஆவியா (ரலி), முஃகீரா (ரலி) அவர்களுக்கு, “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து தாங்கள் செவியேற்ற (ஹதீஸ்) ஒன்றை எனக்கு எழுதி அனுப்புங்கள்” என்று எழுதிக் கேட்டிருந்தார். அதற்கு, “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுது முடித்ததும் ‘லா இலாஹ இல்லல்லாஹு, வஹ்தஹூ லா ஷரீக்க லஹூ, லஹுல் முல்க்கு, வலஹுல் ஹம்து, வஹுவ அலா குல்லி ஷையின் கதீர். அல்லாஹும்ம லா மானிஅ லிமா அஃதைத்த; வலா முஃத்திய லிமா மனஃத்த; வலா யன்ஃபஉ தல்ஜத்தி மின்க்கல் ஜத் (வணங்குதற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறில்லை; அவன் தனித்தவன்; அவனுக்கு இணையில்லை. ஆட்சியதிகாரம் அவனுக்கே உரியது. எல்லாப் புகழும் அவனுக்கே உரியது. அவன் அனைத்தின் மீதும் ஆற்றலுள்ளவன். இறைவா, நீ கொடுத்ததைத் தடுப்பவர் எவருமிலர். நீ தடுத்ததைக் கொடுப்பவர் எவருமிலர். செல்வந்தரின் செல்வம் எதுவும் உன்னிடமிருந்து காத்துக் கொள்ள அவருக்குப் பயனளிக்காது)’ என்று கூறுவதை நான் செவியேற்றிருக்கிறேன்” என்று முஃகீரா (ரலி) மறுமொழி எழுதினார்கள்.

அறிவிப்பாளர் : முஃகீரா பின் ஷுஅபா (ரலி) வழியாக அவர்களின் (முன்னாள்) அடிமை வர்ராது (ரஹ்)

அத்தியாயம்: 5, பாடம்: 27, ஹதீஸ் எண்: 933

حَدَّثَنَا ‏ ‏إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏جَرِيرٌ ‏ ‏عَنْ ‏ ‏مَنْصُورٍ ‏ ‏عَنْ ‏ ‏الْمُسَيَّبِ بْنِ رَافِعٍ ‏ ‏عَنْ ‏ ‏وَرَّادٍ ‏ ‏مَوْلَى ‏ ‏الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ ‏ ‏قَالَ ‏
‏كَتَبَ ‏ ‏الْمُغِيرَةُ بْنُ شُعْبَةَ ‏ ‏إِلَى ‏ ‏مُعَاوِيَةَ ‏ ‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏كَانَ إِذَا فَرَغَ مِنْ الصَّلَاةِ وَسَلَّمَ قَالَ ‏ ‏لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ اللَّهُمَّ لَا مَانِعَ لِمَا أَعْطَيْتَ وَلَا مُعْطِيَ لِمَا مَنَعْتَ وَلَا يَنْفَعُ ‏ ‏ذَا الْجَدِّ ‏ ‏مِنْكَ ‏ ‏الْجَدُّ ‏
‏و حَدَّثَنَاه ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَأَبُو كُرَيْبٍ ‏ ‏وَأَحْمَدُ بْنُ سِنَانٍ ‏ ‏قَالُوا ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو مُعَاوِيَةَ ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْمَشِ ‏ ‏عَنْ ‏ ‏الْمُسَيَّبِ بْنِ رَافِعٍ ‏ ‏عَنْ ‏ ‏وَرَّادٍ ‏ ‏مَوْلَى ‏ ‏الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ ‏ ‏عَنْ ‏ ‏الْمُغِيرَةِ ‏ ‏عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مِثْلَهُ ‏ ‏قَالَ ‏ ‏أَبُو بَكْرٍ ‏ ‏وَأَبُو كُرَيْبٍ ‏ ‏فِي رِوَايَتِهِمَا قَالَ فَأَمْلَاهَا عَلَيَّ ‏ ‏الْمُغِيرَةُ ‏ ‏وَكَتَبْتُ بِهَا إِلَى ‏ ‏مُعَاوِيَةَ ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ حَاتِمٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ بَكْرٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ جُرَيْجٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏عَبْدَةُ بْنُ أَبِي لُبَابَةَ ‏ ‏أَنَّ ‏ ‏وَرَّادًا ‏ ‏مَوْلَى ‏ ‏الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ ‏ ‏قَالَ كَتَبَ ‏ ‏الْمُغِيرَةُ بْنُ شُعْبَةَ ‏ ‏إِلَى ‏ ‏مُعَاوِيَةَ ‏ ‏كَتَبَ ذَلِكَ الْكِتَابَ لَهُ ‏ ‏وَرَّادٌ ‏ ‏إِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَقُولُ حِينَ سَلَّمَ ‏ ‏بِمِثْلِ حَدِيثِهِمَا إِلَّا قَوْلَهُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ فَإِنَّهُ لَمْ يَذْكُرْ ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏حَامِدُ بْنُ عُمَرَ الْبَكْرَاوِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏بِشْرٌ يَعْنِي ابْنَ الْمُفَضَّلِ ‏ ‏قَالَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنِي ‏ ‏أَزْهَرُ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عَوْنٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي سَعِيدٍ ‏ ‏عَنْ ‏ ‏وَرَّادٍ ‏ ‏كَاتِبِ ‏ ‏الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ ‏ ‏قَالَ كَتَبَ ‏ ‏مُعَاوِيَةُ ‏ ‏إِلَى ‏ ‏الْمُغِيرَةِ ‏ ‏بِمِثْلِ حَدِيثِ ‏ ‏مَنْصُورٍ ‏ ‏وَالْأَعْمَشِ

முஃகீரா பின் ஷுஅபா (ரலி), முஆவியா பின் அபீஸுஃப்யான் (ரலி) அவர்களுக்குக் கடிதம் எழுதினார்கள். அதில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுது முடித்தவுடன், “லா இலாஹ இல்லல்லாஹு வஹ்தஹூ லா ஷரீக்க லஹூ; லஹுல் முல்க்கு வலஹுல் ஹம்து; வஹுவ அலா குல்லி ஷையின் கதீர். அல்லாஹும்ம லா மானிஅ லிமா அஃதைத்த; வலா முஃத்திய லிமா மனஃத்த; வலா யன்ஃபஉ தல்ஜத்தி மின்க்கல் ஜத் (வணங்குதற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறில்லை; அவன் தனித்தவன்; அவனுக்கு இணையில்லை. ஆட்சியதிகாரம் அவனுக்கே உரியது. எல்லாப் புகழும் அவனுக்கே உரியது. அவன் அனைத்தின் மீதும் ஆற்றலுள்ளவன். இறைவா, நீ கொடுத்ததைத் தடுப்பவர் எவருமிலர். நீ தடுத்ததைக் கொடுப்பவர் எவருமிலர். செலவந்தரின் செல்வம் எதுவும் உன்னிடமிருந்து காத்துக் கொள்ள அவருக்குப் பயனளிக்காது)” என்று கூறுவார்கள் என்று எழுதப்பட்டிருந்தது.

அறிவிப்பாளர் : முஃகீரா பின் ஷுஅபா (ரலி) வழியாக அவர்களின் (முன்னாள்) அடிமை வர்ராது (ரஹ்)

குறிப்பு :

அபூபக்ரு (ரஹ்), அபூகுரைப் (ரஹ்) ஆகிய இருவர் வழி அறிவிப்பில், “முஃகீரா (ரலி) என்னை எழுதப் பணித்ததன்பேரில், முஆவியா (ரலி) அவர்களுக்கு அதை நான் எழுதினேன்” என்று வர்ராது (ரஹ்) குறிப்பிடுகிறார்.

இபுனு ஜுரைஜ் (ரஹ்) வழி அறிவிப்பு, “முஃகீரா பின் ஷுஅபா (ரலி), முஆவியா (ரலி) அவர்களுக்குக் கடிதம் எழுதினார்கள் … அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தொழுகையை முடித்து விட்டால் …” என்று தொடங்கி, “லா இலாஹ இல்லல்லாஹு … ” எனத் தொடர்ந்து, “… என்று கூற நான் செவியேற்றிருக்கிறேன்” என முஃகீரா (ரலி) கூறியதாக முடிகிறது. ஆனால் அதில், “… வஹுவ அலா குல்லி ஷையின் கதீர் (அவன் அனைத்தின் மீதும் ஆற்றலுள்ளவன்)” எனும் சொற்கள் இடம்பெறாமல் (விடுபட்டு) உள்ளன.

இபுனு அவ்னு (ரஹ்) வழி அறிவிப்பில், “முஆவியா (ரலி), முஃகீரா (ரலி) அவர்களுக்கு விளக்கம் கேட்டு எழுதியதாகவும் அதற்கு மறுமொழியாக, முஃகீரா (ரலி) இந்த ஹதீஸை(க்கூற, வர்ராது-ரஹ்) எழுதியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்தியாயம்: 5, பாடம்: 27, ஹதீஸ் எண்: 932

حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَابْنُ نُمَيْرٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏أَبُو مُعَاوِيَةَ ‏ ‏عَنْ ‏ ‏عَاصِمٍ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ الْحَارِثِ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏قَالَتْ ‏
‏كَانَ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِذَا سَلَّمَ لَمْ يَقْعُدْ إِلَّا مِقْدَارَ مَا يَقُولُ ‏ ‏اللَّهُمَّ أَنْتَ السَّلَامُ وَمِنْكَ السَّلَامُ تَبَارَكْتَ ذَا ‏ ‏الْجَلَالِ ‏ ‏وَالْإِكْرَامِ ‏
‏وَفِي رِوَايَةِ ‏ ‏ابْنِ نُمَيْرٍ ‏ ‏يَا ذَا ‏ ‏الْجَلَالِ ‏ ‏وَالْإِكْرَامِ ‏ ‏و حَدَّثَنَاه ‏ ‏ابْنُ نُمَيْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو خَالِدٍ يَعْنِي الْأَحْمَرَ ‏ ‏عَنْ ‏ ‏عَاصِمٍ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ وَقَالَ ‏ ‏يَا ذَا ‏ ‏الْجَلَالِ ‏ ‏وَالْإِكْرَامِ ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الْوَارِثِ بْنُ عَبْدِ الصَّمَدِ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏أَبِي ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏عَنْ ‏ ‏عَاصِمٍ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ الْحَارِثِ ‏ ‏وَخَالِدٍ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ الْحَارِثِ ‏ ‏كِلَاهُمَا ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏أَنَّ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏بِمِثْلِهِ غَيْرَ أَنَّهُ كَانَ يَقُولُ يَا ذَا ‏ ‏الْجَلَالِ ‏ ‏وَالْإِكْرَامِ

நபி (ஸல்) அவர்கள் (தொழுகையில்) ஸலாம் கொடுத்து முடித்ததும், “அல்லாஹும்ம அன்த்தஸ் ஸலாம்; வ மின்கஸ் ஸலாம்; தபாரக்த தல் ஜலாலி வல் இக்ராம் (இறைவா, நீ சாந்தியளிப்பவன்; உன்னிடமிருந்தே சாந்தி ஏற்படுகிறது; வல்லமையும் மாண்பும் உடைய நீ பேறுமிக்கவன்)” என்று கூறும் அளவுக்குத்தான் அமர்ந்திருப்பார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)

குறிப்பு :

அபூகாலித் அல் அஹ்மர் (ரஹ்), ஷுஅபா (ரஹ்), அப்துல் வாரிஸ் பின் அப்துஸ்ஸமது (ரஹ்) இப்னு நுமைர் (ரஹ்) ஆகியோர் வழி அறிவிப்பில், “யா தல் ஜலாலி இக்ராம் (வல்லமையும் மாண்பும் உடையவனே! நீ பேறுமிக்கவன்)” என்று “யா” எனும் விளிச்சொல் கூடுதலாக இடம் பெற்றுள்ளது.

அத்தியாயம்: 5, பாடம்: 27, ஹதீஸ் எண்: 931

حَدَّثَنَا ‏ ‏دَاوُدُ بْنُ رُشَيْدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏الْوَلِيدُ ‏ ‏عَنْ ‏ ‏الْأَوْزَاعِيِّ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي عَمَّارٍ اسْمُهُ شَدَّادُ بْنُ عَبْدِ اللَّهِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي أَسْمَاءَ ‏ ‏عَنْ ‏ ‏ثَوْبَانَ ‏ ‏قَالَ

‏كَانَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِذَا انْصَرَفَ مِنْ صَلَاتِهِ اسْتَغْفَرَ ثَلَاثًا وَقَالَ ‏ ‏اللَّهُمَّ أَنْتَ السَّلَامُ وَمِنْكَ السَّلَامُ تَبَارَكْتَ ذَا ‏ ‏الْجَلَالِ ‏ ‏وَالْإِكْرَامِ ‏
‏قَالَ ‏ ‏الْوَلِيدُ ‏ ‏فَقُلْتُ ‏ ‏لِلْأَوْزَاعِيِّ ‏ ‏كَيْفَ الْاسْتِغْفَارُ قَالَ تَقُولُ أَسْتَغْفِرُ اللَّهَ أَسْتَغْفِرُ اللَّهَ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகையை முடித்ததும் மூன்று முறை இறைவனிடம் பாவமன்னிப்பு (இஸ்திஃபார்) கோரிவிட்டு, “அல்லாஹும்ம அன்த்தஸ் ஸலாம்; வ மின்கஸ்ஸலாம்; தபாரக்த தல் ஜலாலி வல் இக்ராம்” (இறைவா, நீ சாந்தியளிப்பவன்; உன்னிடமிருந்தே சாந்தி ஏற்படுகிறது; வல்லமையும் மாண்பும் உடைய நீ பேறுமிக்கவன்)” என்று கூறுவார்கள்.

அறிவிப்பாளர் : ஸவ்பான் (ரலி)

குறிப்பு :

நான் (இந்த ஹதீஸை எனக்கு அறிவித்த) அவ்ஸாயீ (ரஹ்) அவர்களிடம், “பாவமன்னிப்புக் கோருவது எவ்வாறு?” என்று கேட்டேன். அதற்கு, “அஸ்தஃக்ஃபிருல்லாஹ்; அஸ்தஃக்ஃபிருல்லாஹ் (நான் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோருகிறேன்; நான் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோருகிறேன்) என்று கூறுவீராக!” என்றார்கள் என்று இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான வலீத் (ரஹ்) கூறுகிறார்.