அத்தியாயம்: 12, பாடம்: 50, ஹதீஸ் எண்: 1783

حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏وَابْنُ بَشَّارٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏مُعَاذُ بْنُ هِشَامٍ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏أَبِي ‏ ‏عَنْ ‏ ‏قَتَادَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَنَسٍ :‏

‏أَنَّ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَجَدَ تَمْرَةً فَقَالَ ‏ ‏لَوْلَا أَنْ تَكُونَ صَدَقَةً لَأَكَلْتُهَا

நபி (ஸல்) ஒரு பேரீச்சம் பழத்தைக் கண்டபோது, “இது தர்மப் பொருளாக இருக்காது என்று (உறுதியாகத்) தெரிந்தால், இதை நான் சாப்பிட்டிருப்பேன்” என்றார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் பின் மாலிக் (ரலி)

அத்தியாயம்: 12, பாடம்: 50, ஹதீஸ் எண்: 1782

و حَدَّثَنَا ‏ ‏أَبُو كُرَيْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو أُسَامَةَ ‏ ‏عَنْ ‏ ‏زَائِدَةَ ‏ ‏عَنْ ‏ ‏مَنْصُورٍ ‏ ‏عَنْ ‏ ‏طَلْحَةَ بْنِ مُصَرِّفٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَنَسُ بْنُ مَالِكٍ :‏

‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مَرَّ بِتَمْرَةٍ بِالطَّرِيقِ فَقَالَ ‏ ‏لَوْلَا أَنْ تَكُونَ مِنْ الصَّدَقَةِ لَأَكَلْتُهَا

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) பாதையில் (கிடந்த) ஒரு பேரீச்சம் பழத்தைக் கடந்து சென்றபோது, “இது தர்மப் பொருளாக இருக்காது என்று (உறுதியாகத்) தெரிந்தால் இதை நான் சாப்பிட்டிருப்பேன்” என்றார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் பின் மாலிக் (ரலி)

அத்தியாயம்: 12, பாடம்: 50, ஹதீஸ் எண்: 1781

حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏وَكِيعٌ ‏ ‏عَنْ ‏ ‏سُفْيَانَ ‏ ‏عَنْ ‏ ‏مَنْصُورٍ ‏ ‏عَنْ ‏ ‏طَلْحَةَ بْنِ مُصَرِّفٍ ‏ ‏عَنْ ‏ ‏أَنَسِ بْنِ مَالِكٍ :‏

‏أَنَّ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَجَدَ تَمْرَةً فَقَالَ ‏ ‏لَوْلَا أَنْ تَكُونَ مِنْ الصَّدَقَةِ لَأَكَلْتُهَا

நபி (ஸல்) ஒரு பேரீச்சம் பழத்தைக் கண்டு, “இது தர்மப் பொருளாக இருக்காது என்று (உறுதியாகத்) தெரிந்தால் இதை நான் சாப்பிட்டிருப்பேன்” என்றார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் பின் மாலிக் (ரலி)

அத்தியாயம்: 12, பாடம்: 50, ஹதீஸ் எண்: 1780

و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ رَافِعٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الرَّزَّاقِ بْنُ هَمَّامٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مَعْمَرٌ ‏ ‏عَنْ ‏ ‏هَمَّامِ بْنِ مُنَبِّهٍ ‏ ‏قَالَ هَذَا مَا حَدَّثَنَا ‏ ‏أَبُو هُرَيْرَةَ ‏ ‏عَنْ ‏ ‏مُحَمَّدٍ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَذَكَرَ أَحَادِيثَ مِنْهَا : ‏

‏وَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَاللَّهِ ‏ ‏إِنِّي لَأَنْقَلِبُ إِلَى أَهْلِي فَأَجِدُ التَّمْرَةَ سَاقِطَةً عَلَى فِرَاشِي أَوْ فِي بَيْتِي فَأَرْفَعُهَا لِآكُلَهَا ثُمَّ ‏ ‏أَخْشَى أَنْ تَكُونَ صَدَقَةً ‏ ‏أَوْ مِنْ الصَّدَقَةِ ‏ ‏فَأُلْقِيهَا

“அல்லாஹ்வின் மீது சத்தியமாக.! நான் என் குடும்பத்தாரிடம் செல்லும்(சில)வேளை எனது வீட்டில் (அல்லது) எனது படுக்கையின் மீது பேரீச்சம் பழம் கிடப்பதைப் பார்த்து, அதை உண்பதற்காக எடுத்து, பின்னர் அது தர்மப் பொருளாக (அல்லது) தர்மப் பொருட்களில் ஒன்றாக இருக்குமோ என்று அஞ்சி உடனே அதைப் போட்டுவிடுவதுண்டு” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி) வழியாக ஹம்மாம் பின் முனப்பிஹ் (ரஹ்).


குறிப்பு :

“அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து அபூஹுரைரா (ரலி) எங்களுக்கு அறிவித்த ஹதீஸ்களுள் இதுவும் ஒன்றாகும்” என்று ஹம்மாம் பின் முனப்பிஹ் (ரஹ்) குறிப்பிடுகின்றார்.

அத்தியாயம்: 12, பாடம்: 50, ஹதீஸ் எண்: 1779

حَدَّثَنِي ‏ ‏هَارُونُ بْنُ سَعِيدٍ الْأَيْلِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏عَمْرٌو ‏ ‏أَنَّ ‏ ‏أَبَا يُونُسَ ‏ ‏مَوْلَى ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏حَدَّثَهُ عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ :‏

‏عَنْ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَنَّهُ قَالَ ‏ ‏إِنِّي ‏ ‏لَأَنْقَلِبُ ‏ ‏إِلَى أَهْلِي فَأَجِدُ التَّمْرَةَ سَاقِطَةً عَلَى فِرَاشِي ثُمَّ أَرْفَعُهَا لِآكُلَهَا ثُمَّ ‏ ‏أَخْشَى أَنْ تَكُونَ صَدَقَةً فَأُلْقِيهَا

“நான் என் குடும்பத்தாரிடம் செல்லும்(சில)வேளை எனது படுக்கையின் மீது பேரீச்சம் பழம் கிடப்பதைப் பார்த்து, அதை உண்பதற்காக எடுப்பதுண்டு. பின்னர் அது தர்மப் பொருளாக இருக்குமோ என்று நான் அஞ்சி, உடனே அதைப் போட்டுவிடுவேன்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

அத்தியாயம்: 12, பாடம்: 50, ஹதீஸ் எண்: 1778

حَدَّثَنَا ‏ ‏عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ الْعَنْبَرِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏عَنْ ‏ ‏مُحَمَّدٍ وَهُوَ ابْنُ زِيَادٍ ‏ ‏سَمِعَ ‏ ‏أَبَا هُرَيْرَةَ ‏ ‏يَقُولُ : ‏

‏أَخَذَ ‏ ‏الْحَسَنُ بْنُ عَلِيٍّ ‏ ‏تَمْرَةً مِنْ تَمْرِ الصَّدَقَةِ فَجَعَلَهَا فِي ‏ ‏فِيهِ ‏ ‏فَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏كِخْ كِخْ ‏ ‏ارْمِ بِهَا ‏ ‏أَمَا عَلِمْتَ أَنَّا لَا نَأْكُلُ الصَّدَقَةَ ‏


‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏وَأَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَزُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏وَكِيعٍ ‏ ‏عَنْ ‏ ‏شُعْبَةَ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ وَقَالَ ‏ ‏أَنَّا لَا تَحِلُّ لَنَا الصَّدَقَةُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ بَشَّارٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏ابْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ أَبِي عَدِيٍّ ‏ ‏كِلَاهُمَا ‏ ‏عَنْ ‏ ‏شُعْبَةَ ‏ ‏فِي هَذَا الْإِسْنَادِ كَمَا قَالَ ‏ ‏ابْنُ مُعَاذٍ ‏ ‏أَنَّا لَا نَأْكُلُ الصَّدَقَةَ

ஹஸன் பின் அலீ (ரலி) (ஒரு முறை) தர்மப் பேரீச்சம் பழங்களில் ஒன்றை எடுத்து வாயில் போட்டார். இதைக் கண்ட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “துப்பு, துப்பிவிடு; நாம் தர்மப் பொருளைச் சாப்பிடக் கூடாது என்பது உனக்குத் தெரியாதா?” என்றார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)


குறிப்புகள் :

வகீஃ (ரஹ்) வழி அறிவிப்பில், “நமக்கு தர்மப் பொருட்கள் அனுமதிக்கப்படவில்லை என்பது உனக்குத் தெரியாதா?” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கேட்டதாக இடம்பெற்றுள்ளது.

முஹம்மது பின் பஷ்ஷார் (ரஹ்) வழி அறிவிப்பில், “நாம் தர்மப் பொருளைச் சாப்பிடக் கூடாது” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கட்டளை இட்டதாக இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 12, பாடம்: 49, ஹதீஸ் எண்: 1777

حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَإِسْحَقُ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏يَزِيدَ ‏ ‏قَالَ ‏ ‏أَبُو بَكْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَزِيدُ بْنُ هَارُونَ ‏ ‏عَنْ ‏ ‏الْعَوَّامِ بْنِ حَوْشَبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو إِسْحَقَ الشَّيْبَانِيُّ ‏ ‏عَنْ ‏ ‏أُسَيْرِ بْنِ عَمْرٍو ‏ ‏عَنْ ‏ ‏سَهْلِ بْنِ حُنَيْفٍ : ‏

‏عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏يَتِيهُ قَوْمٌ قِبَلَ الْمَشْرِقِ مُحَلَّقَةٌ رُءُوسُهُمْ

“கிழக்கு (இராக்) திசையிலிருந்து வழி தவறிய ஒரு கூட்டத்தார் கிளம்புவார்கள். அவர்களுடைய தலைகள் மழிக்கப்பட்டு (மொட்டையாக) இருக்கும்” என்று நபி (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : ஸஹ்லு பின் ஹுனைஃப் (ரலி)

அத்தியாயம்: 12, பாடம்: 49, ஹதீஸ் எண்: 1776

حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَلِيُّ بْنُ مُسْهِرٍ ‏ ‏عَنْ ‏ ‏الشَّيْبَانِيِّ ‏ ‏عَنْ ‏ ‏يُسَيْرِ بْنِ عَمْرٍو ‏ ‏قَالَ

سَأَلْتُ ‏ ‏سَهْلَ بْنَ حُنَيْفٍ هَلْ سَمِعْتَ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَذْكُرُ ‏ ‏الْخَوَارِجَ ‏ ‏فَقَالَ سَمِعْتُهُ وَأَشَارَ بِيَدِهِ نَحْوَ الْمَشْرِقِ ‏ ‏قَوْمٌ يَقْرَءُونَ الْقُرْآنَ بِأَلْسِنَتِهِمْ لَا يَعْدُو ‏ ‏تَرَاقِيَهُمْ ‏ ‏يَمْرُقُونَ ‏ ‏مِنْ الدِّينِ كَمَا ‏ ‏يَمْرُقُ ‏ ‏السَّهْمُ مِنْ ‏ ‏الرَّمِيَّةِ ‏


‏و حَدَّثَنَاه ‏ ‏أَبُو كَامِلٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الْوَاحِدِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُلَيْمَانُ الشَّيْبَانِيُّ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ وَقَالَ ‏ ‏يَخْرُجُ مِنْهُ أَقْوَامٌ

நான் ஸஹ்லு பின் ஹுனைஃப் (ரலி) அவர்களிடம், “காரிஜிய்யாக்கள் குறித்து நபி (ஸல்) ஏதேனும் கூறக் கேட்டுள்ளீர்களா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “நபி (ஸல்) கிழக்கு (இராக்) திசையில் தமது கையால் சைகை செய்தவாறு (அங்கிருந்து) ஒரு கூட்டத்தார் புறப்படுவார்கள். அவர்கள் குர்ஆன் ஓதுவார்கள். ஆனால், அது அவர்களது தொண்டைக் குழியைத் தாண்டிச் செல்லாது. வேட்டைப் பிராணியை(த் துளைத்து)விட்டு அம்பு வெளியேறிச் சென்றுவிடுவதைப் போன்று மார்க்கத்திலிருந்து அவர்கள் வெளியேறிச் சென்றுவிடுவார்கள் என்று கூறினார்கள்” என்று பதிலளித்தார்.

அறிவிப்பாளர் : யுஸைர் பின் அம்ரு (ரலி)


குறிப்பு :

அபூகாமில் (ரஹ்) வழி அறிவிப்பில், “அங்கிருந்து சில கூட்டத்தார் கிளம்புவார்கள்” என்று இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 12, பாடம்: 49, ஹதீஸ் எண்: 1775

حَدَّثَنَا ‏ ‏شَيْبَانُ بْنُ فَرُّوخَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُلَيْمَانُ بْنُ الْمُغِيرَةِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حُمَيْدُ بْنُ هِلَالٍ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ الصَّامِتِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي ذَرٍّ ‏ ‏قَالَ : ‏

‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِنَّ بَعْدِي مِنْ أُمَّتِي أَوْ ‏ ‏سَيَكُونُ بَعْدِي مِنْ أُمَّتِي قَوْمٌ يَقْرَءُونَ الْقُرْآنَ ‏ ‏لَا يُجَاوِزُ ‏ ‏حَلَاقِيمَهُمْ يَخْرُجُونَ مِنْ الدِّينِ كَمَا يَخْرُجُ السَّهْمُ مِنْ ‏ ‏الرَّمِيَّةِ ‏ ‏ثُمَّ لَا يَعُودُونَ فِيهِ هُمْ شَرُّ الْخَلْقِ وَالْخَلِيقَةِ ‏


‏فَقَالَ ‏ ‏ابْنُ الصَّامِتِ ‏ ‏فَلَقِيتُ ‏ ‏رَافِعَ بْنَ عَمْرٍو الْغِفَارِيَّ ‏ ‏أَخَا ‏ ‏الْحَكَمِ الْغِفَارِيِّ ‏ ‏قُلْتُ مَا حَدِيثٌ سَمِعْتُهُ مِنْ ‏ ‏أَبِي ذَرٍّ ‏ ‏كَذَا وَكَذَا فَذَكَرْتُ لَهُ هَذَا الْحَدِيثَ فَقَالَ وَأَنَا سَمِعْتُهُ مِنْ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ

“எனக்குப் பின் என் சமுதாயத்தில் (அல்லது) எனக்குப் பின் விரைவில் என் சமுதாயத்தில் ஒரு கூட்டத்தார் தோன்றுவார்கள். அவர்கள் குர்ஆனை ஓதுவார்கள். ஆனால், அது அவர்களுடைய தொண்டைக் குழிகளைத் தாண்டிச் செல்லாது. வேட்டைப் பிராணியை(த் துளைத்து)விட்டு அம்பு வெளியேறிச் சென்றுவிடுவதைப் போன்று மார்க்கத்திலிருந்து அவர்கள் வெளியேறிச் சென்றுவிடுவார்கள். பிறகு அதன் பக்கம் திரும்பமாட்டார்கள். அவர்கள்தாம் படைப்பினங்களில் தீயவர்கள் ஆவர்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூதர் (ரலி)


குறிப்பு :

“நான் ஹகம் அல்கிஃபாரீ (ரலி) அவர்களுடைய சகோதரர் ராஃபிஉ பின் அம்ரு அல்கிஃபாரீ (ரலி) அவர்களைச் சந்தித்தபோது, அபூதர் (ரலி) அவர்களிடமிருந்து இன்னின்ன ஹதீஸ்களைச் செவியுற்றிருக்கின்றேன் என்று சொல்லிவரும்போது, மேற்கண்ட ஹதீஸையும் அவர்களிடம் சொன்னேன். அப்போது ராஃபிஉ பின் அம்ரு (ரலி), ‘நானும் இந்த ஹதீஸை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்றேன்’ என்று சொன்னார்கள்” என்பதாக இந்த ஹதீஸை அபூதர் (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கும் அப்துல்லாஹ் பின் அஸ்ஸாமித் (ரஹ்) கூறினார்.

அத்தியாயம்: 12, பாடம்: 48, ஹதீஸ் எண்: 1774

حَدَّثَنِي ‏ ‏أَبُو الطَّاهِرِ ‏ ‏وَيُونُسُ بْنُ عَبْدِ الْأَعْلَى ‏ ‏قَالَا أَخْبَرَنَا ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏عَمْرُو بْنُ الْحَارِثِ ‏ ‏عَنْ ‏ ‏بُكَيْرِ بْنِ الْأَشَجِّ ‏ ‏عَنْ ‏ ‏بُسْرِ بْنِ سَعِيدٍ ‏ ‏عَنْ ‏ ‏عُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي رَافِعٍ ‏ ‏مَوْلَى رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ :‏

‏أَنَّ ‏ ‏الْحَرُورِيَّةَ ‏ ‏لَمَّا خَرَجَتْ وَهُوَ مَعَ ‏ ‏عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُ ‏ ‏قَالُوا لَا حُكْمَ إِلَّا لِلَّهِ قَالَ ‏ ‏عَلِيٌّ ‏ ‏كَلِمَةُ حَقٍّ أُرِيدَ بِهَا بَاطِلٌ إِنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَصَفَ نَاسًا إِنِّي لَأَعْرِفُ صِفَتَهُمْ فِي هَؤُلَاءِ ‏ ‏يَقُولُونَ الْحَقَّ بِأَلْسِنَتِهِمْ لَا يَجُوزُ هَذَا مِنْهُمْ ‏ ‏وَأَشَارَ إِلَى حَلْقِهِ ‏ ‏مِنْ أَبْغَضِ خَلْقِ اللَّهِ إِلَيْهِ مِنْهُمْ أَسْوَدُ إِحْدَى يَدَيْهِ طُبْيُ شَاةٍ أَوْ حَلَمَةُ ثَدْيٍ ‏

‏فَلَمَّا قَتَلَهُمْ ‏ ‏عَلِيُّ بْنُ أَبِي طَالِبٍ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُ ‏ ‏قَالَ انْظُرُوا فَنَظَرُوا فَلَمْ يَجِدُوا شَيْئًا فَقَالَ ارْجِعُوا فَوَاللَّهِ مَا كَذَبْتُ وَلَا كُذِبْتُ مَرَّتَيْنِ ‏ ‏أَوْ ثَلَاثًا ‏ ‏ثُمَّ وَجَدُوهُ فِي خَرِبَةٍ فَأَتَوْا بِهِ حَتَّى وَضَعُوهُ بَيْنَ يَدَيْهِ


قَالَ ‏ ‏عُبَيْدُ اللَّهِ ‏ ‏وَأَنَا حَاضِرُ ذَلِكَ مِنْ أَمْرِهِمْ وَقَوْلِ ‏ ‏عَلِيٍّ ‏ ‏فِيهِمْ ‏ ‏زَادَ ‏ ‏يُونُسُ ‏ ‏فِي رِوَايَتِهِ قَالَ ‏ ‏بُكَيْرٌ ‏ ‏وَحَدَّثَنِي رَجُلٌ عَنْ ‏ ‏ابْنِ حُنَيْنٍ ‏ ‏أَنَّهُ قَالَ رَأَيْتُ ذَلِكَ الْأَسْوَدَ

ஹரூராவாசி(களான காரிஜிய்யாக்)கள் தோன்றியபோது நான் அலீ (ரலி) அவர்களுடன் (அவர்களது அணியில்) இருந்தேன். ஹரூரிய்யாக்கள் “ஆட்சி என்பது அல்லாஹ்வைத் தவிர வேறெவருக்குமில்லை (லா ஹுக்ம இல்லா லில்லாஹ்)” எனும் முழக்கத்தை முன்வைத்தனர். அப்போது அலீ (ரலி), “சத்திய வார்த்தை, அசத்தியத்துக்குப் பயன்படுத்தப்படுகின்றது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்), சிலரைப் பற்றி(ய அடையாளங்களை) எங்களுக்குத் தெரிவித்தார்கள். நபி (ஸல்) குறிப்பிட்ட அப் பண்புகளை (காரிஜிய்யாக்களான) இவர்களிடம் நான் பார்க்கின்றேன். இவர்கள் பேசும் உண்மை, நாவால் மட்டுமே. ஆனால், அது அவர்களது தொண்டையைத் தாண்டாது. அல்லாஹ்வின் படைப்புகளிலேயே அவனிடம் மிகவும் வெறுப்புக்குரியவன், இவர்களில் கறுப்பு நிறமுடைய ஒரு மனிதனாவான். அவனது கைகளில் ஒன்று ஆட்டின் பால் மடியைப் போன்றிருக்கும்; அல்லது (பெண்ணின்) மார்புக் காம்பைப் போன்றிருக்கும்” என்று கூறினார்கள்.

அலீ (ரலி), (காரிஜிய்யாக்களுடன் போரிட்டு) அவர்களைக் கொன்றொழித்தபோது, “(அந்தக் கறுப்பு மனிதனைத்) தேடிப் பாருங்கள்” என்று கூறினார்கள். அவர்கள் (தேடிப்) பார்த்தபோது அவர்களுக்குக் கிடைக்கவில்லை. அலீ (ரலி), “மீண்டும் சென்று பாருங்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! நான் பொய்யுரைக்கவில்லை; என்னிடம் பொய்யுரைக்கப்படவுமில்லை” என்று இரண்டு அல்லது மூன்று முறை சொன்னார்கள். பிறகு அவர்கள் அவனது உடலை ஒரு குழியில் கண்டுபிடித்தனர். அதைக் கொண்டுவந்து அலீ (ரலி) அவர்களுக்கு முன்னால் வைத்தனர். இந்த நிகழ்ச்சி நடந்தபோதும் காரிஜிய்யாக்கள் குறித்து அலீ (ரலி) கூறியபோதும் அங்கு நான் இருந்தேன்.

அறிவிப்பாளர் : அலீ (ரலி) வழியாக உபைதுல்லாஹ் பின் அபீராஃபிஉ (ரஹ்)


குறிப்பு :

உபைதுல்லாஹ் பின் அபீராஃபிஉ (ரஹ்) என்பவர், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் முன்னாள் அடிமையாவார்.

“இவர்கள் பேசும் உண்மை, நாவால் மட்டுமே. ஆனால், அது அவர்களது தொண்டையைத் தாண்டாது” என்று அலீ (ரலி) கூறியபோது தம் தொண்டையைச் சுட்டிக்காட்டினார்கள்.

“அந்தக் கறுப்பு மனிதனை நான் பார்த்தேன்” என்று இப்னு ஹுனைன் (ரஹ்) கூறியதாக புகைர் (ரஹ்) வழி அறிவிப்பில் இடம்பெற்றுள்ளது.