அத்தியாயம்: 12, பாடம்: 48, ஹதீஸ் எண்: 1773

حَدَّثَنَا ‏ ‏عَبْدُ بْنُ حُمَيْدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الرَّزَّاقِ بْنُ هَمَّامٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الْمَلِكِ بْنُ أَبِي سُلَيْمَانَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سَلَمَةُ بْنُ كُهَيْلٍ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏زَيْدُ بْنُ وَهْبٍ الْجُهَنِيُّ : ‏

‏أَنَّهُ كَانَ فِي الْجَيْشِ الَّذِينَ كَانُوا مَعَ ‏ ‏عَلِيٍّ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُ ‏ ‏الَّذِينَ سَارُوا إِلَى ‏ ‏الْخَوَارِجِ ‏ ‏فَقَالَ ‏ ‏عَلِيٌّ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُ ‏ ‏أَيُّهَا النَّاسُ إِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَقُولُ ‏ ‏يَخْرُجُ قَوْمٌ مِنْ أُمَّتِي يَقْرَءُونَ الْقُرْآنَ لَيْسَ قِرَاءَتُكُمْ إِلَى قِرَاءَتِهِمْ بِشَيْءٍ وَلَا صَلَاتُكُمْ إِلَى صَلَاتِهِمْ بِشَيْءٍ وَلَا صِيَامُكُمْ إِلَى صِيَامِهِمْ بِشَيْءٍ يَقْرَءُونَ الْقُرْآنَ يَحْسِبُونَ أَنَّهُ لَهُمْ وَهُوَ عَلَيْهِمْ لَا تُجَاوِزُ صَلَاتُهُمْ ‏ ‏تَرَاقِيَهُمْ ‏ ‏يَمْرُقُونَ ‏ ‏مِنْ الْإِسْلَامِ كَمَا ‏ ‏يَمْرُقُ ‏ ‏السَّهْمُ مِنْ ‏ ‏الرَّمِيَّةِ ‏ ‏لَوْ يَعْلَمُ الْجَيْشُ الَّذِينَ يُصِيبُونَهُمْ مَا قُضِيَ لَهُمْ عَلَى لِسَانِ نَبِيِّهِمْ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لَاتَّكَلُوا عَنْ الْعَمَلِ وَآيَةُ ذَلِكَ أَنَّ فِيهِمْ رَجُلًا لَهُ عَضُدٌ وَلَيْسَ لَهُ ذِرَاعٌ عَلَى رَأْسِ عَضُدِهِ مِثْلُ حَلَمَةِ الثَّدْيِ عَلَيْهِ شَعَرَاتٌ بِيضٌ ‏

‏فَتَذْهَبُونَ إِلَى ‏ ‏مُعَاوِيَةَ ‏ ‏وَأَهْلِ ‏ ‏الشَّامِ ‏ ‏وَتَتْرُكُونَ هَؤُلَاءِ يَخْلُفُونَكُمْ فِي ذَرَارِيِّكُمْ وَأَمْوَالِكُمْ وَاللَّهِ إِنِّي لَأَرْجُو أَنْ يَكُونُوا هَؤُلَاءِ الْقَوْمَ فَإِنَّهُمْ قَدْ سَفَكُوا الدَّمَ الْحَرَامَ وَأَغَارُوا فِي ‏ ‏سَرْحِ ‏ ‏النَّاسِ فَسِيرُوا عَلَى اسْمِ اللَّهِ


قَالَ ‏ ‏سَلَمَةُ بْنُ كُهَيْلٍ ‏ ‏فَنَزَّلَنِي ‏ ‏زَيْدُ بْنُ وَهْبٍ ‏ ‏مَنْزِلًا حَتَّى قَالَ مَرَرْنَا عَلَى قَنْطَرَةٍ فَلَمَّا الْتَقَيْنَا وَعَلَى ‏ ‏الْخَوَارِجِ ‏ ‏يَوْمَئِذٍ ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ الرَّاسِبِيُّ ‏ ‏فَقَالَ لَهُمْ أَلْقُوا الرِّمَاحَ وَسُلُّوا سُيُوفَكُمْ مِنْ ‏ ‏جُفُونِهَا ‏ ‏فَإِنِّي أَخَافُ أَنْ يُنَاشِدُوكُمْ كَمَا نَاشَدُوكُمْ يَوْمَ ‏ ‏حَرُورَاءَ ‏ ‏فَرَجَعُوا ‏ ‏فَوَحَّشُوا ‏ ‏بِرِمَاحِهِمْ وَسَلُّوا السُّيُوفَ ‏ ‏وَشَجَرَهُمْ ‏ ‏النَّاسُ بِرِمَاحِهِمْ قَالَ وَقُتِلَ بَعْضُهُمْ عَلَى بَعْضٍ وَمَا أُصِيبَ مِنْ النَّاسِ يَوْمَئِذٍ إِلَّا رَجُلَانِ فَقَالَ ‏ ‏عَلِيٌّ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُ ‏ ‏الْتَمِسُوا فِيهِمْ ‏ ‏الْمُخْدَجَ ‏ ‏فَالْتَمَسُوهُ فَلَمْ يَجِدُوهُ فَقَامَ ‏ ‏عَلِيٌّ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُ ‏ ‏بِنَفْسِهِ حَتَّى أَتَى نَاسًا قَدْ قُتِلَ بَعْضُهُمْ عَلَى بَعْضٍ قَالَ أَخِّرُوهُمْ فَوَجَدُوهُ مِمَّا ‏ ‏يَلِي ‏ ‏الْأَرْضَ فَكَبَّرَ ثُمَّ قَالَ صَدَقَ اللَّهُ وَبَلَّغَ رَسُولُهُ قَالَ فَقَامَ إِلَيْهِ ‏ ‏عَبِيدَةُ السَّلْمَانِيُّ ‏ ‏فَقَالَ يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ أَلِلَّهَ الَّذِي لَا إِلَهَ إِلَّا هُوَ لَسَمِعْتَ هَذَا الْحَدِيثَ مِنْ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقَالَ إِي وَاللَّهِ الَّذِي لَا إِلَهَ إِلَّا هُوَ حَتَّى اسْتَحْلَفَهُ ثَلَاثًا وَهُوَ يَحْلِفُ لَهُ

காரிஜிய்யாக்களை நோக்கி(நஹ்ரவான் நகரத்துக்கு)ச் சென்ற அலீ (ரலி) அவர்களின் படையில் நானும் இருந்தேன். (செல்லும் வழியில்) அலீ (ரலி), “மக்களே! ‘என் சமுதாயத்திலிருந்து ஒரு கூட்டத்தார் தோன்றுவார்கள். அவர்கள் குர்ஆனை ஓதுவார்கள். அவர்களின் ஓதலுடன் உங்களின் ஓதலை ஒப்பிடும்போது, உங்களின் ஓதல் ஒன்றுமேயில்லை; அவர்களது தொழுகையுடன் உங்களது தொழுகையை ஒப்பிடும்போது, உங்களது தொழுகை ஒன்றுமேயில்லை; அவர்களது நோன்புடன் உங்களது நோன்பை ஒப்பிடும்போது, உங்களது நோன்பு ஒன்றுமேயில்லை. (அந்த அளவிற்கு அவர்களுடைய வணக்க வழிபாடுகள் இருக்கும்.) தங்களுக்குச் சாதகமான ஆதாரம் என்று எண்ணிக்கொண்டு அவர்கள் குர்ஆனை ஓதுவார்கள். ஆனால், அது அவர்களுக்கு எதிரான ஆதாரமாகவே இருக்கும். அவர்களது தொழுகை(யில் அவர்கள் குர்ஆனை ஓதுவது), அவர்களது குரல்வளையைத் தாண்டிச் செல்லாது. வேட்டைப் பிராணியை(த் துளைத்து)விட்டு அம்பு வெளியேறிச் சென்றுவிடுவதைப் போன்று இஸ்லாத்திலிருந்து அவர்கள் வெளியேறிச் சென்றுவிடுவார்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறியதை நான் செவியேற்றுள்ளேன்.

அவர்களை வீழ்த்தும் படையினர், அதற்காகத் தமக்கு வழங்கப்படவுள்ள நற்பலன் குறித்துத் தங்களுடைய நபியின் நாவினால் அறிவிக்கப்பட்டுள்ளதை அறிவார்களாயின், அதை (மட்டும்) நம்பிக்கொண்டு பிற நற்செயல்கள் செய்யாமல் இருந்துவிடுவார்கள்.

அவர்களிடையே கைபுஜம் மட்டுமே உள்ள ஒரு மனிதன் அவர்களுக்கு அடையாளம் ஆவான். முழங்கைக்குக் கீழே அவனுக்குக் கையிருக்காது. அவனது கை புஜத்தின் மீது (பெண்)மார்புக் காம்பைப் போன்று ஒரு கட்டியிருக்கும். அதன் மீது வெள்ளை முடிகள் முளைத்திருக்கும். நீங்கள் சந்ததிகளையும் செல்வங்களையும் கவனிக்கும் பிரதிநிதிகளாக அந்த(க் காரிஜியா)க்கூட்டத்தாரை நம்பி விட்டுவிட்டு, முஆவியா (ரலி) அவர்களிடமும் ஷாம்வாசிகளிடமும் (ஸிஃப்பீன் போருக்காகச்) சென்றுவிடுவீர்கள். (அந்தக் காரிஜிய்யாக்களோ உங்கள் குழந்தை குட்டிகளைத் துன்புறுத்துவார்கள். உங்கள் சொத்துகளைச் சூறையாடுவார்கள்.) அல்லாஹ்வின் மீதாணையாக! (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) வர்ணித்த) அந்த(க் காரிஜிய்யா)க் கூட்டத்தார் இவர்களாகத்தாம் இருப்பார்கள் என்று நான் நம்புகிறேன். ஏனெனில், இவர்கள் அல்லாஹ் புனிதப்படுத்தியுள்ள உயிர்களைக் கொலை செய்துள்ளார்கள்; மக்களுடைய கால்நடைகளைக் கொள்ளையடித்துள்ளார்கள். எனவே, அல்லாஹ்வின் பெயர் கூறி, அவர்களை நோக்கிச் செல்லுங்கள் (அவர்களை வெல்லுங்கள்)” என்று சொன்னார்கள்.

அறிவிப்பாளர் : அலீ (ரலி) வழியாக ஸைத் பின் வஹ்பு அல்ஜுஹனீ (ரஹ்)


குறிப்பு  :

இதன் அறிவிப்பாளரான ஸலமா பின் குஹைல் (ரஹ்) கூறும்போது, “ஸைத் பின் வஹ்பு (ரஹ்) (அந்தப் பயணத்தில், காரிஜிய்யாக்கள்) முகாமிட்டிருந்த ஒவ்வொரு தளங்களையும் எனக்குக் காட்டினார்கள். இறுதியாக நாங்கள் (அத்தப்ரஜான் எனும்) ஒரு பாலத்தைக் கடந்து சென்றோம். நாங்கள் சந்தித்தபோது, (கலகக்காரர்களான) காரிஜிய்யாக்களின் அன்றைய தளபதியாக அப்துல்லாஹ் பின் வஹ்பு அர்ராஸிபீ என்பான் இருந்தான். அவன் காரிஜிய்யாக்களிடம், ‘ஹரூரா போரின்போது இவர்கள் அல்லாஹ்வின் பெயரால் ஆணையிட்டு உங்களிடம் (சமாதான ஒப்பந்தக்) கோரிக்கையை முன்வைத்ததைப் போன்று இப்போதும் கோரிக்கை வைத்துவிடுவார்களோ என்று நான் அஞ்சுகிறேன். (அதற்கு இடமளித்துவிடாமல்) ஈட்டியை எறியுங்கள்; வாட்களை உறைகளிலிருந்து உருவிக் கொள்ளுங்கள்’ என்று கூறினான். உடனே அவர்கள் திரும்பிச் சென்று தூரத்தில் நின்று கொண்டு தங்களுடைய ஈட்டிகளை வீசினர்; தங்களுடைய வாட்களை உருவி(யவாறு மக்களிடையே புகுந்த)னர். (அலீ (ரலி) அவர்களுடைய படையிலிருந்த) மக்களும் அவர்கள் மீது தங்களுடைய ஈட்டிகளைப் பாய்ச்சினர். அவர்கள் ஒருவர் பின் ஒருவராகக் கொல்லப்பட்டனர். அன்றைய தினம் அலீ (ரலி) அவர்களின் அணியிலிருந்த இருவர் மட்டுமே கொல்லப்பட்டனர்.

பிறகு (எங்களிடம்) அலீ (ரலி), ‘அவர்களிடையே ஊனமான கையுடைய அந்த மனிதனைத் தேடிப் பாருங்கள்’ என்று கூறினார்கள். மக்கள் தேடிப் பார்த்தபோது அவன் தட்டுப்படவில்லை. எனவே, அலீ (ரலி) அவர்களே எழுந்து சென்று, அவர்கள் கொல்லப்பட்டு ஒருவர் மீது ஒருவராகக் கிடந்த பகுதிக்கு வந்து ‘உடல்களை நகர்த்துங்கள்’ என்று கூறினார்கள். அவனது உடல் தரைப் பகுதியின் அடியில் கிடப்பதைக் கண்டார்கள். அப்போது அலீ (ரலி), ‘தக்பீர்’ கூறினார்கள். பிறகு, ‘அல்லாஹ் உண்மையே சொன்னான்; அவனுடைய தூதர் (அவனது செய்தியை) எட்டச் செய்தார்கள்’ என்று சொன்னார்கள்.

அப்போது அலீ (ரலி) அவர்களிடம் அபீதா அஸ்ஸல்மானீ (ரஹ்) வந்து, ‘இறை நம்பிக்கையாளர்களின் தலைவரே! எவனைத் தவிர வேறு இறைவன் இல்லையோ அவன்மீது சத்தியமாக! (காரிஜிய்யாக்கள் குறித்த) இந்த ஹதீஸை நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடருந்து செவியுற்றீர்களா?’ என்று கேட்டார். அதற்கு அலீ (ரலி), ‘ஆம்; எவனைத் தவிர வேறு இறைவன் இல்லையோ அவன்மீது சத்தியமாக!’ என்று பதிலளித்தார்கள். இவ்வாறு மூன்று முறை சத்தியம் செய்யுமாறு அலீ (ரலி) அவர்களை அபீதா (ரஹ்) கோரினார். அலீ (ரலி) அவர்களும் அவ்வாறே சத்தியம் செய்தார்கள்” என்று விளக்கினார்.

அத்தியாயம்: 12, பாடம்: 48, ஹதீஸ் எண்: 1772

و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ أَبِي بَكْرٍ الْمُقَدَّمِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ عُلَيَّةَ ‏ ‏وَحَمَّادُ بْنُ زَيْدٍ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حَمَّادُ بْنُ زَيْدٍ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَزُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏وَاللَّفْظُ لَهُمَا ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏إِسْمَعِيلُ ابْنُ عُلَيَّةَ ‏ ‏عَنْ ‏ ‏أَيُّوبَ ‏ ‏عَنْ ‏ ‏مُحَمَّدٍ ‏ ‏عَنْ ‏ ‏عَبِيدَةَ ‏ ‏عَنْ ‏ ‏عَلِيٍّ ‏ ‏قَالَ : ‏

‏ذَكَرَ ‏ ‏الْخَوَارِجَ ‏ ‏فَقَالَ فِيهِمْ رَجُلٌ ‏ ‏مُخْدَجُ ‏ ‏الْيَدِ ‏ ‏أَوْ ‏ ‏مُودَنُ ‏ ‏الْيَدِ أَوْ ‏ ‏مَثْدُونُ الْيَدِ ‏ ‏لَوْلَا أَنْ ‏ ‏تَبْطَرُوا ‏ ‏لَحَدَّثْتُكُمْ بِمَا وَعَدَ اللَّهُ الَّذِينَ يَقْتُلُونَهُمْ عَلَى لِسَانِ ‏ ‏مُحَمَّدٍ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ قُلْتُ ‏ ‏آنْتَ سَمِعْتَهُ مِنْ ‏ ‏مُحَمَّدٍ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ إِي وَرَبِّ ‏ ‏الْكَعْبَةِ ‏ ‏إِي وَرَبِّ ‏ ‏الْكَعْبَةِ ‏ ‏إِي وَرَبِّ ‏ ‏الْكَعْبَةِ ‏


‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ أَبِي عَدِيٍّ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عَوْنٍ ‏ ‏عَنْ ‏ ‏مُحَمَّدٍ ‏ ‏عَنْ ‏ ‏عَبِيدَةَ ‏ ‏قَالَ ‏ ‏لَا أُحَدِّثُكُمْ إِلَّا مَا سَمِعْتُ مِنْهُ فَذَكَرَ عَنْ ‏ ‏عَلِيٍّ ‏ ‏نَحْوَ حَدِيثِ ‏ ‏أَيُّوبَ ‏ ‏مَرْفُوعًا

அலீ (ரலி) (ஒரு முறை) காரிஜிய்யாக்களைப் பற்றிய குறிப்பைக் கூறுகையில், “அவர்களிடையே ஊனமான கையுடைய ஒருவர் இருப்பார். நீங்கள் வரம்பு மீறிவிடுவீர்கள் என்ற அச்சம் எனக்கில்லையாயின், காரிஜியாக்களைக் கொல்பவர்களுக்கு அல்லாஹ் தன் தூதரின் நாவினால் வாக்களித்துள்ள நற்பலனை உங்களுக்கு நான் அறிவித்துவிடுவேன்” என்று கூறினார்கள். நான், “இதை நீங்கள் முஹம்மது (ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்றீர்களா?” என்று கேட்டேன். அதற்கு அலீ (ரலி), “ஆம்; கஅபாவின் அதிபதிமீது சத்தியமாக! கஅபாவின் அதிபதிமீது சத்தியமாக! கஅபாவின் அதிபதிமீது சத்தியமாக!” என்று (மூன்று முறை) சொன்னார்கள்.

அறிவிப்பாளர் : அலீ (ரலி) வழியாக அபீதா பின் அம்ரு (ரஹ்)


குறிப்பு :

இபுனு அபீ அதீ (ரஹ்) வழி அறிவிப்பில், “நான் செவியுற்ற செய்தியைத்தான் உங்களுக்கு அறிவிக்கின்றேன்” என்று அறிவிப்பாளர் அபீதா (ரஹ்) கூறிவிட்டு, அலீ (ரலி) தொடர்பான மேற்கண்ட ஹதீஸை அறிவித்தார்கள் என்று இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 12, பாடம்: 48, ஹதீஸ் எண்: 1771

حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ ‏ ‏وَعَبْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ الْأَشَجُّ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏وَكِيعٍ ‏ ‏قَالَ ‏ ‏الْأَشَجُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏وَكِيعٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏الْأَعْمَشُ ‏ ‏عَنْ ‏ ‏خَيْثَمَةَ ‏ ‏عَنْ ‏ ‏سُوَيْدِ بْنِ غَفَلَةَ ‏ ‏قَالَ قَالَ ‏ ‏عَلِيٌّ :‏

‏إِذَا حَدَّثْتُكُمْ عَنْ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَلَأَنْ أَخِرَّ مِنْ السَّمَاءِ أَحَبُّ إِلَيَّ مِنْ أَنْ أَقُولَ عَلَيْهِ مَا لَمْ يَقُلْ وَإِذَا حَدَّثْتُكُمْ فِيمَا بَيْنِي وَبَيْنَكُمْ فَإِنَّ الْحَرْبَ خَدْعَةٌ ‏
‏سَمِعْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَقُولُ ‏ ‏سَيَخْرُجُ فِي آخِرِ الزَّمَانِ قَوْمٌ ‏ ‏أَحْدَاثُ الْأَسْنَانِ ‏ ‏سُفَهَاءُ ‏ ‏الْأَحْلَامِ ‏ ‏يَقُولُونَ مِنْ خَيْرِ قَوْلِ ‏ ‏الْبَرِيَّةِ ‏ ‏يَقْرَءُونَ الْقُرْآنَ ‏ ‏لَا يُجَاوِزُ ‏ ‏حَنَاجِرَهُمْ ‏ ‏يَمْرُقُونَ ‏ ‏مِنْ الدِّينِ كَمَا ‏ ‏يَمْرُقُ ‏ ‏السَّهْمُ مِنْ ‏ ‏الرَّمِيَّةِ ‏ ‏فَإِذَا لَقِيتُمُوهُمْ فَاقْتُلُوهُمْ فَإِنَّ فِي قَتْلِهِمْ أَجْرًا لِمَنْ قَتَلَهُمْ عِنْدَ اللَّهِ يَوْمَ الْقِيَامَةِ ‏


‏حَدَّثَنَا ‏ ‏إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏عِيسَى بْنُ يُونُسَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ أَبِي بَكْرٍ الْمُقَدَّمِيُّ ‏ ‏وَأَبُو بَكْرِ بْنُ نَافِعٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ ‏ ‏كِلَاهُمَا ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْمَشِ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏مِثْلَهُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏جَرِيرٌ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَأَبُو كُرَيْبٍ ‏ ‏وَزُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏قَالُوا حَدَّثَنَا ‏ ‏أَبُو مُعَاوِيَةَ ‏ ‏كِلَاهُمَا ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْمَشِ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏وَلَيْسَ فِي حَدِيثِهِمَا يَمْرُقُونَ مِنْ الدِّينِ كَمَا يَمْرُقُ السَّهْمُ مِنْ ‏ ‏الرَّمِيَّةِ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் கூற்றை உள்ளது உள்ளபடி நான் உங்களுக்கு அறிவிக்கின்றேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) சொல்லாததைப் புனைந்து சொல்வதைவிட நான் வானத்திலிருந்து கீழே விழுந்துவிடுவது, எனக்கு விருப்பமானதாகும்.

எனக்கும் உங்களுக்கும் இடையே பேசப்படும் (போர் போன்ற) விவகாரம் பற்றி நான் உங்களிடம் (கூட-குறைய) பேசுவது என்பது வேறு. போர்(த் தகவல்) என்பது (ராஜ)தந்திரமாகும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “இறுதிக் காலத்தில் ஒரு கூட்டத்தார் தோன்றுவார்கள். அவர்கள் இளம் வயதினராயிருப்பார்கள். முதிர்ச்சியற்ற புத்தியுடையவர்களாக இருப்பார்கள். பூமியிலேயே நன்மையான கூற்றை (குர்ஆன் வசனங்களை) எடுத்துச்சொல்வார்கள். குர்ஆனை ஓதுவார்கள். வேட்டைப் பிராணியை(த் துளைத்து)விட்டு அம்பு வெளியேறிச் சென்றுவிடுவதைப் போன்று மார்க்கத்திலிருந்து அவர்கள் வெளியேறிச் சென்றுவிடுவார்கள். (அதிகாரம் பெற்றவர்கள்) அவர்களைக் கண்டால் அதே இடத்தில் கொன்றுவிடுங்கள். ஏனெனில், அவர்களைக் கொன்றவர்களுக்கு, அவர்களைக் கொன்றதற்காக மறுமை நாளில் நற்பலன் கிடைக்கும்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அலீ (ரலி)


குறிப்பு :

ஸுஹைர் பின் ஹர்பு (ரஹ்) வழி அறிவிப்பில், “வேட்டைப் பிராணியை(த் துளைத்து)விட்டு அம்பு வெளியேறிச் சென்றுவிடுவதைப் போன்று மார்க்கத்திலிருந்து அவர்கள் வெளியேறிச் சென்றுவிடுவார்கள்” எனும் சொற்றொடர் இடம்பெறவில்லை.

அத்தியாயம்: 12, பாடம்: 47, ஹதீஸ் எண்: 1770

حَدَّثَنِي ‏ ‏عُبَيْدُ اللَّهِ الْقَوَارِيرِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ ‏ ‏عَنْ ‏ ‏حَبِيبِ بْنِ أَبِي ثَابِتٍ ‏ ‏عَنْ ‏ ‏الضَّحَّاكِ الْمِشْرَقِيِّ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ :‏

‏عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فِي حَدِيثٍ ذَكَرَ فِيهِ ‏ ‏قَوْمًا يَخْرُجُونَ عَلَى فُرْقَةٍ مُخْتَلِفَةٍ يَقْتُلُهُمْ أَقْرَبُ الطَّائِفَتَيْنِ مِنْ الْحَقِّ

நபி (ஸல்), ஒரு கூட்டத்தாரைப் பற்றி, “பிரிவினை ஏற்படும் வேளையில் அவர்கள் தோன்றுவார்கள். இரு பிரிவினருள் சத்தியத்திற்கு மிக நெருக்கத்திலிருக்கும் பிரிவினர் அவர்களைக் கொன்றொழிப்பார்கள்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)

அத்தியாயம்: 12, பாடம்: 47, ஹதீஸ் எண்: 1769

حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الْأَعْلَى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏دَاوُدُ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي نَضْرَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ :‏

‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏تَمْرُقُ ‏ ‏مَارِقَةٌ ‏ ‏فِي فُرْقَةٍ مِنْ النَّاسِ ‏ ‏فَيَلِي قَتْلَهُمْ أَوْلَى الطَّائِفَتَيْنِ بِالْحَقِّ

“மக்களிடையே பிரிவினை ஏற்படும் வேளையில் (கிளர்ச்சியாளர்கள்) கூட்டம் ஒன்று தோன்றும். இரு பிரிவினருள் சத்தியத்திற்கு மிக நெருக்கத்திலிருக்கும் பிரிவினரே அவர்களைக் கொன்றொழிக்கப் பொறுப்பேற்றுக்கொள்வர்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)

அத்தியாயம்: 12, பாடம்: 47, ஹதீஸ் எண்: 1768

حَدَّثَنَا ‏ ‏أَبُو الرَّبِيعِ الزَّهْرَانِيُّ ‏ ‏وَقُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏قَالَ ‏ ‏قُتَيْبَةُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو عَوَانَةَ ‏ ‏عَنْ ‏ ‏قَتَادَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي نَضْرَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ ‏ ‏قَالَ :‏

‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏تَكُونُ فِي أُمَّتِي فِرْقَتَانِ فَتَخْرُجُ مِنْ بَيْنِهِمَا ‏ ‏مَارِقَةٌ ‏ ‏يَلِي قَتْلَهُمْ أَوْلَاهُمْ بِالْحَقِّ

“என் சமுதாயத்தார் இரு பிரிவினராகி நிற்கும்போது, அவர்களிடையேயிருந்து (கிளர்ச்சியாளர்கள்) கூட்டம் ஒன்று தோன்றும். அவ்விரு பிரிவினரில் சத்தியத்திற்கு மிக அருகிலிருக்கும் ஒரு சாரார் அவர்களைக் கொன்றொழிக்கப் பொறுப்பேற்றுக்கொள்வர்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)

அத்தியாயம்: 12, பாடம்: 47, ஹதீஸ் எண்: 1767

حَدَّثَنَا ‏ ‏شَيْبَانُ بْنُ فَرُّوخَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏الْقَاسِمُ وَهُوَ ابْنُ الْفَضْلِ الْحُدَّانِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو نَضْرَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ ‏ ‏قَالَ :‏

‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏تَمْرُقُ ‏ ‏مَارِقَةٌ ‏ ‏عِنْدَ فُرْقَةٍ مِنْ الْمُسْلِمِينَ يَقْتُلُهَا أَوْلَى الطَّائِفَتَيْنِ بِالْحَقِّ

“முஸ்லிம்களிடையே பிரிவினை ஏற்படும் வேளையில் (கிளர்ச்சியாளர்கள்) கூட்டம் ஒன்று தோன்றும். இரு குழுவினருள் சத்தியத்திற்கு மிக நெருக்கத்திலிருக்கும் குழுவினர் அவர்களைக் கொன்றொழிப்பார்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)

அத்தியாயம்: 12, பாடம்: 47, ஹதீஸ் எண்: 1766

و حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ أَبِي عَدِيٍّ ‏ ‏عَنْ ‏ ‏سُلَيْمَانَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي نَضْرَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي سَعِيدٍ :‏

‏أَنَّ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏ذَكَرَ قَوْمًا يَكُونُونَ فِي أُمَّتِهِ يَخْرُجُونَ فِي فُرْقَةٍ مِنْ النَّاسِ ‏ ‏سِيمَاهُمْ ‏ ‏التَّحَالُقُ قَالَ ‏ ‏هُمْ شَرُّ الْخَلْقِ ‏ ‏أَوْ مِنْ أَشَرِّ الْخَلْقِ ‏ ‏يَقْتُلُهُمْ أَدْنَى الطَّائِفَتَيْنِ إِلَى الْحَقِّ قَالَ فَضَرَبَ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لَهُمْ مَثَلًا ‏ ‏أَوْ قَالَ قَوْلًا ‏ ‏الرَّجُلُ يَرْمِي ‏ ‏الرَّمِيَّةَ ‏ ‏أَوْ قَالَ الْغَرَضَ ‏ ‏فَيَنْظُرُ فِي ‏ ‏النَّصْلِ ‏ ‏فَلَا يَرَى بَصِيرَةً وَيَنْظُرُ فِي النَّضِيِّ فَلَا يَرَى بَصِيرَةً وَيَنْظُرُ فِي ‏ ‏الْفُوقِ ‏ ‏فَلَا يَرَى بَصِيرَةً ‏


قَالَ ‏ ‏قَالَ ‏ ‏أَبُو سَعِيدٍ ‏ ‏وَأَنْتُمْ قَتَلْتُمُوهُمْ يَا أَهْلَ ‏ ‏الْعِرَاقِ

நபி (ஸல்), தம் சமுதாயத்தாரில் தோன்றவிருக்கின்ற ஒரு கூட்டத்தாரைப் பற்றிக் கூறுகையில், “அவர்கள் மக்களிடையே பிரிவினை ஏற்படும் வேளையில் வெளிப்படுவார்கள். அவர்களின் (பிரிவு) அடையாளம், தலைமுடியைச் சிரைத்துக் கொள்வதுதான். அவர்கள்தாம் படைப்பினங்களிலேயே தீயவர்கள் அல்லது படைப்பினங்களில் தீயவர்களில் உள்ளவர்களாவர். இரண்டு பிரிவினர்களுள் உண்மைக்கு மிகவும் நெருக்கமான ஒரு பிரிவினர் அவர்களை அழிப்பார்கள்” என்று கூறினார்கள். பிறகு அவர்களுக்கு உதாரணமாக ஒரு மனிதரைக் குறிப்பிட்டார்கள். “ஒருவர் வேட்டைப் பிராணியை நோக்கி அம்பை எய்வார். பிறகு அம்பின் முனையை ஆராய்வார். அதில் (பிராணியின் உடலைத் துளைத்த) எந்த அடையாளத்தையும் அவர் காணமாட்டார். பிறகு அம்பின் அடிப் பாகக் குச்சியைப் பார்பபார். அதிலும் (பிராணியை வீழ்த்திவிட்டதற்கான) எந்தச் சான்றையும் அவர் காணமாட்டார். பிறகு அம்பின் முனையில் நாணைப் பொருத்தப் பயன்படும் இடத்தைப் பார்ப்பார். அதிலும் (பிராணியைத் தாக்கியதற்கான) எந்தச் சான்றையும் அவர் காண மாட்டார்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)


குறிப்பு :

“இராக்வாசிகளே! நீங்கள்தாம் அவர்களைக் கொன்றொழித்தீர்கள்” என்று அபூஸயீத் (ரலி) கூறினார்கள்.

அத்தியாயம்: 12, பாடம்: 47, ஹதீஸ் எண்: 1765

حَدَّثَنِي ‏ ‏أَبُو الطَّاهِرِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏يُونُسُ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏أَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏حَرْمَلَةُ بْنُ يَحْيَى ‏ ‏وَأَحْمَدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الْفِهْرِيُّ ‏ ‏قَالَا أَخْبَرَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏يُونُسُ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏أَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ ‏ ‏وَالضَّحَّاكُ الْهَمْدَانِيُّ ‏ ‏أَنَّ ‏ ‏أَبَا سَعِيدٍ الْخُدْرِيَّ ‏ ‏قَالَ : ‏

‏بَيْنَا نَحْنُ عِنْدَ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَهُوَ يَقْسِمُ قَسْمًا أَتَاهُ ‏ ‏ذُو الْخُوَيْصِرَةِ ‏ ‏وَهُوَ ‏ ‏رَجُلٌ ‏ ‏مِنْ ‏ ‏بَنِي تَمِيمٍ ‏ ‏فَقَالَ يَا رَسُولَ اللَّهِ اعْدِلْ قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَيْلَكَ وَمَنْ يَعْدِلُ إِنْ لَمْ أَعْدِلْ قَدْ خِبْتُ وَخَسِرْتُ إِنْ لَمْ أَعْدِلْ فَقَالَ ‏ ‏عُمَرُ بْنُ الْخَطَّابِ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُ ‏ ‏يَا رَسُولَ اللَّهِ ائْذَنْ لِي فِيهِ أَضْرِبْ عُنُقَهُ قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏دَعْهُ فَإِنَّ لَهُ أَصْحَابًا يَحْقِرُ أَحَدُكُمْ صَلَاتَهُ مَعَ صَلَاتِهِمْ وَصِيَامَهُ مَعَ صِيَامِهِمْ يَقْرَءُونَ الْقُرْآنَ ‏ ‏لَا يُجَاوِزُ ‏ ‏تَرَاقِيَهُمْ ‏ ‏يَمْرُقُونَ ‏ ‏مِنْ الْإِسْلَامِ كَمَا ‏ ‏يَمْرُقُ ‏ ‏السَّهْمُ مِنْ ‏ ‏الرَّمِيَّةِ ‏ ‏يُنْظَرُ إِلَى ‏ ‏نَصْلِهِ ‏ ‏فَلَا يُوجَدُ فِيهِ شَيْءٌ ثُمَّ يُنْظَرُ إِلَى ‏ ‏رِصَافِهِ ‏ ‏فَلَا يُوجَدُ فِيهِ شَيْءٌ ثُمَّ يُنْظَرُ إِلَى ‏ ‏نَضِيِّهِ ‏ ‏فَلَا يُوجَدُ فِيهِ شَيْءٌ وَهُوَ الْقِدْحُ ثُمَّ يُنْظَرُ إِلَى ‏ ‏قُذَذِهِ ‏ ‏فَلَا يُوجَدُ فِيهِ شَيْءٌ ‏ ‏سَبَقَ ‏ ‏الْفَرْثَ ‏ ‏وَالدَّمَ آيَتُهُمْ رَجُلٌ أَسْوَدُ إِحْدَى عَضُدَيْهِ مِثْلُ ثَدْيِ الْمَرْأَةِ أَوْ مِثْلُ ‏ ‏الْبَضْعَةِ ‏ ‏تَتَدَرْدَرُ ‏ ‏يَخْرُجُونَ عَلَى حِينِ فُرْقَةٍ مِنْ النَّاسِ ‏


‏قَالَ ‏ ‏أَبُو سَعِيدٍ ‏ ‏فَأَشْهَدُ أَنِّي سَمِعْتُ هَذَا مِنْ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَأَشْهَدُ أَنَّ ‏ ‏عَلِيَّ بْنَ أَبِي طَالِبٍ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُ ‏ ‏قَاتَلَهُمْ وَأَنَا مَعَهُ فَأَمَرَ بِذَلِكَ الرَّجُلِ فَالْتُمِسَ فَوُجِدَ فَأُتِيَ بِهِ حَتَّى نَظَرْتُ إِلَيْهِ عَلَى ‏ ‏نَعْتِ ‏ ‏رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏الَّذِي ‏ ‏نَعَتَ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (ஹவாஸின்) போரில் கிடைத்த செல்வங்களைப் பங்கிட்டுக்கொண்டிருந்தபோது அவர்களின் அருகில் நாங்கள் இருந்தோம். அப்போது பனூ தமீம் குலத்தைச் சேர்ந்த துல்குவைஸிரா என்பவர், “அல்லாஹ்வின் தூதரே! நீதியுடன் நடந்துகொள்ளுங்கள்” என்று சொன்னார். உடனே நபி (ஸல்), “உனக்குக் கேடுதான். நான் நீதியுடன் நடந்துகொள்ளவில்லை என்றால் வேறு யார்தாம் நீதியுடன் நடந்துகொள்வார்? நான் நீதியுடன் நடந்துகொள்ளவில்லை என்றால் நான் இழப்புக்குள்ளாகி நஷ்டமடைந்துவிடுவேன்” என்று பதிலளித்தார்கள். உடனே உமர் பின் அல்கத்தாப் (ரலி), “அல்லாஹ்வின் தூதரே! இவரது விவகாரத்தில் எனக்கு அனுமதி கொடுங்கள். இவரது கழுத்தைக் கொய்துவிடுகின்றேன்” என்று கேட்டார்கள்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “இவரை விட்டுவிடுங்கள். நிச்சயமாக, இவருக்குத் தோழர்கள் சிலர் இருக்கின்றார்கள். அவர்களது தொழுகையுடன் உங்களது தொழுகையையும், அவர்களது நோன்புடன் உங்களது நோன்பையும் ஒப்பிட்டுப் பார்த்து உங்களது தொழுகையையும் உங்களது நோன்பையும் அற்பமானவையாகக் கருதுவீர்கள். அவர்கள் குர்ஆனை ஓதுவார்கள்; ஆனால், அது அவர்களது தொண்டைக் குழியைத் தாண்டாது. வேட்டைப் பிராணியிலிருந்து அம்பு (உடலின் மறு பக்கம்) வெளிப்பட்டுச் சென்றுவிடுவதைப் போன்று மார்க்கத்திலிருந்து அவர்கள் வெளியேறிச் சென்றுவிடுவார்கள். அம்பின் முனை, (இரத்தக் குறி எதுவும் இருக்கிறதா என்று சோதித்துப்) பார்க்கப்படும். அதில் (அடையாளம்) எதுவும் காணக் கிடைக்காது. பிறகு (அம்பில்) அதன் நாண் ஆராயப்படும். அதிலும் (அடையாளம்) எதுவும் காணக் கிடைக்காது. பிறகு, அம்பின் (அடிப் பாகக்) குச்சி பார்க்கப்படும். அதிலும் எதுவும் காணப்படாது. பிறகு, அம்பின் இறகு பார்க்கப்படும். அதிலும் (அடையாளம்) எதுவும் காணப்படாது. அம்பின் விரைவு, சாணத்தையும் இரத்தத்தையும் ஊடறுத்துத் தாண்டியிருக்கும்.

அவர்களின் அடையாளம் ஒரு கறுப்பு நிற மனிதராவார். அவருடைய இரு கை புஜங்களில் ஒன்று பெண்ணின் கொங்கை போன்றிருக்கும் அல்லது துடிக்கும் இறைச்சித் துண்டு போன்றிருக்கும். அவர்கள் மக்களிடையே பிரிவினை ஏற்படும் வேளையில் வெளிப்படுவார்கள்” என்று சொன்னார்கள்.

அறிவிப்பாளர் : அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)


குறிப்பு :

”நான் இந்த நபிமொழியை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து கேட்டேன் என்று உறுதி அளிக்கின்றேன். மேலும், அந்தக் கூட்டத்தாருடன் அலீ (ரலி) போர் புரிந்தார்கள். அப்போது நானும் அலீயுடன் இருந்தேன். அலீ (ரலி), (நபி (ஸல்) அடையாளம் கூறிய) அந்த மனிதரைக் கொண்டுவரும்படி கட்டளையிட, அவ்வாறே அவர் தேடப்பட்டுக் கொண்டு வரப்பட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) குறிப்பிட்ட வர்ணனையின்படியே அவர் இருப்பதை நான் பார்த்தேன் என்றும் உறுதி கூறுகின்றேன்” என்று அறிவிப்பாளர் அபூஸயீத் அல் குத்ரி (ரலி) கூறினார்கள்..

அத்தியாயம்: 12, பாடம்: 47, ஹதீஸ் எண்: 1764

و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الْوَهَّابِ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏يَحْيَى بْنَ سَعِيدٍ ‏ ‏يَقُولُ أَخْبَرَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي سَلَمَةَ ‏ ‏وَعَطَاءِ بْنِ يَسَارٍ :‏ ‏

أَنَّهُمَا أَتَيَا ‏ ‏أَبَا سَعِيدٍ الْخُدْرِيَّ ‏ ‏فَسَأَلَاهُ عَنْ ‏ ‏الْحَرُورِيَّةِ ‏ ‏هَلْ سَمِعْتَ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَذْكُرُهَا قَالَ لَا أَدْرِي مَنْ ‏ ‏الْحَرُورِيَّةُ ‏ ‏وَلَكِنِّي ‏
‏سَمِعْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَقُولُ ‏ ‏يَخْرُجُ فِي هَذِهِ الْأُمَّةِ ‏ ‏وَلَمْ يَقُلْ مِنْهَا ‏ ‏قَوْمٌ ‏ ‏تَحْقِرُونَ ‏ ‏صَلَاتَكُمْ مَعَ صَلَاتِهِمْ فَيَقْرَءُونَ الْقُرْآنَ ‏ ‏لَا يُجَاوِزُ ‏ ‏حُلُوقَهُمْ ‏ ‏أَوْ حَنَاجِرَهُمْ ‏ ‏يَمْرُقُونَ ‏ ‏مِنْ الدِّينِ ‏ ‏مُرُوقَ ‏ ‏السَّهْمِ مِنْ ‏ ‏الرَّمِيَّةِ ‏ ‏فَيَنْظُرُ الرَّامِي إِلَى سَهْمِهِ إِلَى ‏ ‏نَصْلِهِ ‏ ‏إِلَى ‏ ‏رِصَافِهِ ‏ ‏فَيَتَمَارَى فِي ‏ ‏الْفُوقَةِ ‏ ‏هَلْ عَلِقَ بِهَا مِنْ الدَّمِ شَيْءٌ

அபூஸயீத் அல்குத்ரீ (ரலி) அவர்களிடம் நாங்கள் இருவரும் சென்று ‘ஹரூரி(காரிஜி)ய்யா’க்கள் குறித்துக் கேட்டோம். ”அவர்களைப் பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ஏதேனும் கூறியதை நீங்கள் செவியுற்றுள்ளீர்களா?” என்று வினவினோம்.

அதற்கு அபூஸயீத் (ரலி), “ஹரூரிய்யாக்கள் யார் என்று எனக்குத் தெரியாது. ஆனால், ‘இந்தச் சமுதாயத்தாரிடையே ஒரு கூட்டத்தார் புறப்படுவர். அவர்களது தொழுகையுடன் உங்களது தொழுகையை ஒப்பிட்டுப் பார்த்து உங்களது தொழுகையை நீங்கள் அற்பமாகக் கருதுவீர்கள். அவர்கள் (அதிகமாகக்) குர்ஆனை ஓதுவார்கள். ஆனால், அது அவர்களின் தொண்டைக் குழிகளைத் தாண்டிச் செல்லாது. வேட்டைப் பிராணியின் உடலை அம்பு (துளைத்து உடலின் மறு பக்கம்) வெளிப்பட்டுச் சென்றுவிடுவதைப் போன்று மார்க்கத்திலிருந்து அவர்கள் வெளியேறிச் சென்றுவிடுவார்கள். அம்பெய்தவர் அம்பின் முனையையும், (அம்பில்) அதன் முனையைப் பொருத்துவதற்குப் பயன்படும் நாணையும் ஆராய்வார். (அவற்றில் இரத்த அடையாளம் எதையும் காணமாட்டார்.) அம்பின் முனையில் நாணைப் பொருத்தும் இடத்தில் இரத்தம் படிந்துள்ளதா என்றும் அவர் சந்தேகப்படுவார்’ என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்” என்பதாக அபூஸயீத் அல்குத்ரீ (ரலி) அறிவித்தார்.

அறிவிப்பாளர்கள் :

அபூஸயீத் அல்குத்ரீ (ரலி) வழியாக அபூஸலமா பின் அப்திர் ரஹ்மான் பின் அவ்ஃபு மற்றும் அதாஉ பின் யஸார் (ரஹ்)