அத்தியாயம்: 12, பாடம்: 31, ஹதீஸ் எண்: 1713

حَدَّثَنَا ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏جَرِيرٌ ‏ ‏عَنْ ‏ ‏عُمَارَةَ بْنِ الْقَعْقَاعِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي زُرْعَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏قَالَ :‏

‏أَتَى رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏رَجُلٌ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ أَيُّ الصَّدَقَةِ أَعْظَمُ فَقَالَ ‏ ‏أَنْ تَصَدَّقَ وَأَنْتَ صَحِيحٌ ‏ ‏شَحِيحٌ ‏ ‏تَخْشَى الْفَقْرَ وَتَأْمُلُ الْغِنَى وَلَا تُمْهِلَ حَتَّى إِذَا بَلَغَتْ الْحُلْقُومَ قُلْتَ لِفُلَانٍ كَذَا وَلِفُلَانٍ كَذَا أَلَا وَقَدْ كَانَ لِفُلَانٍ

ஒருவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! மகத்தான தர்மம் எது?” என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “நீங்கள் உடல் நலமுள்ளவராகவும், பொருளாதாரத் தேவை உள்ளவராகவும், வறுமையால் பாதிக்கப்பட்டு செல்வத்தை எதிர்பார்த்தவராகவும் இருக்கும்போது நீங்கள் செய்யும் தர்மமே (மகத்தான தர்மம் ஆகும்). உயிர் தொண்டைக் குழியை அடைந்துவிட்டிருக்க, ‘இன்னவருக்கு இவ்வளவு (கொடுங்கள்); இன்னவருக்கு இவ்வளவு (கொடுங்கள்)’ என்று சொல்லும் (நேரம் வரும்)வரை தர்மம் செய்வதைத் தள்ளிப்போடாதீர்கள்! ஏனெனில், அப்போது உங்கள் செல்வம் (வாரிசாகிய) இன்னவருக்கு உரியதாகிவிட்டிருக்கும்” என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

அத்தியாயம்: 12, பாடம்: 30, ஹதீஸ் எண்: 1712

حَدَّثَنِي ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏وَمُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏يَحْيَى الْقَطَّانِ ‏ ‏قَالَ ‏ ‏زُهَيْرٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ سَعِيدٍ ‏ ‏عَنْ ‏ ‏عُبَيْدِ اللَّهِ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏خُبَيْبُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ ‏ ‏عَنْ ‏ ‏حَفْصِ بْنِ عَاصِمٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ :‏

‏عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏سَبْعَةٌ يُظِلُّهُمْ اللَّهُ فِي ظِلِّهِ يَوْمَ لَا ظِلَّ إِلَّا ظِلُّهُ الْإِمَامُ الْعَادِلُ وَشَابٌّ نَشَأَ بِعِبَادَةِ اللَّهِ وَرَجُلٌ قَلْبُهُ مُعَلَّقٌ فِي الْمَسَاجِدِ وَرَجُلَانِ تَحَابَّا فِي اللَّهِ اجْتَمَعَا عَلَيْهِ وَتَفَرَّقَا عَلَيْهِ وَرَجُلٌ دَعَتْهُ امْرَأَةٌ ذَاتُ مَنْصِبٍ وَجَمَالٍ فَقَالَ إِنِّي أَخَافُ اللَّهَ وَرَجُلٌ تَصَدَّقَ بِصَدَقَةٍ فَأَخْفَاهَا حَتَّى لَا تَعْلَمَ يَمِينُهُ مَا تُنْفِقُ شِمَالُهُ وَرَجُلٌ ذَكَرَ اللَّهَ خَالِيًا فَفَاضَتْ عَيْنَاهُ ‏


‏و حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏قَالَ قَرَأْتُ عَلَى ‏ ‏مَالِكٍ ‏ ‏عَنْ ‏ ‏خُبَيْبِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ ‏ ‏عَنْ ‏ ‏حَفْصِ بْنِ عَاصِمٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ ‏ ‏أَوْ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏أَنَّهُ قَالَ ‏ ‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بِمِثْلِ حَدِيثِ ‏ ‏عُبَيْدِ اللَّهِ ‏ ‏وَقَالَ وَرَجُلٌ مُعَلَّقٌ بِالْمَسْجِدِ إِذَا خَرَجَ مِنْهُ حَتَّى يَعُودَ إِلَيْهِ

“அல்லாஹ், தனது (அரியணையின்) நிழலைத் தவிர வேறு நிழலே இல்லாத (மறுமை) நாளில் தனது நிழலில் ஏழு வகையினருக்கு நிழல் அளிப்பான்:

1)நீதி மிக்க ஆட்சியாளர், 2)இறைவழிபாட்டிலேயே வளர்ந்த இளைஞன், 3)பள்ளிவாசல்களுடன் (எப்போதும்) தொடர்பு வைத்துக்கொள்ளும் இதயமுடையவர், 4)இறைவனுக்காகவே நேசித்து, அவனுக்காகவே இணைந்து, அவனுக்காகவே பிரிந்த இருவர், 5)தகுதியும் அழகும் உடைய ஒரு பெண் (தவறு செய்ய) அழைத்தபோதும் ‘நான் அல்லாஹ்வை அஞ்சுகின்றேன்’ என்று கூறியவர், 6)தமது இடக் கரம் செய்த தர்மத்தை வலக் கரம்கூட அறியாத வகையில் இரகசியமாகச் செய்தவர், 7)தனிமையில் அல்லாஹ்வை நினைத்து (அவனது அச்சத்தால்) கண்ணீர் சிந்திய மனிதர்” என்று நபி (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)


குறிப்பு :

யஹ்யா இப்னு யஹ்யா (ரஹ்) வழி அறிவிப்பில், “பள்ளிவாசலிலிருந்து புறப்பட்டுச் சென்றாலும் திரும்பி வரும்வரை அதனுடனேயே தொடர்பு வைத்துக்கொள்ளும் இதயமுடையவர்” என்று இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 12, பாடம்: 29, ஹதீஸ் எண்: 1711

حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏اللَّيْثُ بْنُ سَعْدٍ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏اللَّيْثُ ‏ ‏عَنْ ‏ ‏سَعِيدِ بْنِ أَبِي سَعِيدٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ : ‏

‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏كَانَ يَقُولُ ‏ ‏يَا نِسَاءَ الْمُسْلِمَاتِ لَا تَحْقِرَنَّ جَارَةٌ لِجَارَتِهَا وَلَوْ فِرْسِنَ شَاةٍ

“முஸ்லிம் பெண்களே! (உங்களில்) எவரேனும் தன் அண்டை வீட்டுக்காரிக்கு ஓர் ஆட்டின் கால் குளம்பை (அன்பளிப்பாக) அளித்தாலும் அதை அவள் அற்பமாகக் கருத வேண்டாம்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறுவார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

அத்தியாயம்: 12, பாடம்: 28, ஹதீஸ் எண்: 1710

و حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ حَاتِمٍ ‏ ‏وَهَارُونُ بْنُ عَبْدِ اللَّهِ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏حَجَّاجُ بْنُ مُحَمَّدٍ ‏ ‏قَالَ قَالَ ‏ ‏ابْنُ جُرَيْجٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏ابْنُ أَبِي مُلَيْكَةَ ‏ ‏أَنَّ ‏ ‏عَبَّادَ بْنَ عَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ ‏ ‏أَخْبَرَهُ عَنْ ‏ ‏أَسْمَاءَ بِنْتِ أَبِي بَكْرٍ : ‏

‏أَنَّهَا جَاءَتْ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقَالَتْ يَا نَبِيَّ اللَّهِ لَيْسَ لِي شَيْءٌ إِلَّا مَا أَدْخَلَ عَلَيَّ ‏ ‏الزُّبَيْرُ ‏ ‏فَهَلْ عَلَيَّ جُنَاحٌ أَنْ ‏ ‏أَرْضَخَ ‏ ‏مِمَّا يُدْخِلُ عَلَيَّ فَقَالَ ‏ ‏ارْضَخِي ‏ ‏مَا اسْتَطَعْتِ وَلَا ‏ ‏تُوعِي ‏ ‏فَيُوعِيَ ‏ ‏اللَّهُ عَلَيْكِ

நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்று, “அல்லாஹ்வின் நபியே! எனக்கு (என் கணவர்) ஸுபைர் (ரலி) அளித்ததைத் தவிர வேறு செல்வம் எதுவும் கிடையாது. அவர் அளிப்பவற்றில் சிலவற்றை நான் தர்மம் செய்தால் அது குற்றமாகுமா?” என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்), “உன்னால் இயன்ற மட்டும் தர்மம் செய். பையில் (முடிந்து) வைத்துக்கொள்ளாதே. அவ்வாறு செய்தால் அல்லாஹ்வும் உன் விஷயத்தில் (தன் அருள் வளங்களைப் பொழியாமல்) முடிந்து வைத்துக்கொள்வான்” என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பாளர் : அஸ்மா பின்த்தி அபீபக்ரு (ரலி)

அத்தியாயம்: 12, பாடம்: 28, ஹதீஸ் எண்: 1709

و حَدَّثَنَا ‏ ‏عَمْرٌو النَّاقِدُ ‏ ‏وَزُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏وَإِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏أَبِي مُعَاوِيَةَ ‏ ‏قَالَ ‏ ‏زُهَيْرٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ خَازِمٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏هِشَامُ بْنُ عُرْوَةَ ‏ ‏عَنْ ‏ ‏عَبَّادِ بْنِ حَمْزَةَ ‏ ‏وَعَنْ ‏ ‏فَاطِمَةَ بِنْتِ الْمُنْذِرِ ‏ ‏عَنْ ‏ ‏أَسْمَاءَ ‏ ‏قَالَتْ : ‏

‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏انْفَحِي أَوْ ‏ ‏انْضَحِي ‏ ‏أَوْ ‏ ‏أَنْفِقِي وَلَا ‏ ‏تُحْصِي ‏ ‏فَيُحْصِيَ اللَّهُ عَلَيْكِ وَلَا ‏ ‏تُوعِي ‏ ‏فَيُوعِيَ ‏ ‏اللَّهُ عَلَيْكِ ‏


‏و حَدَّثَنَا ‏ ‏ابْنُ نُمَيْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ بِشْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏هِشَامٌ ‏ ‏عَنْ ‏ ‏عَبَّادِ بْنِ حَمْزَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَسْمَاءَ ‏ ‏أَنَّ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ لَهَا ‏ ‏نَحْوَ حَدِيثِهِمْ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “அறவழியில் அள்ளிப் பொழி! வாரி வழங்கு! தாராளமாகக் கொடு! கொடுப்பதில் கணக்குப் பார்க்காதே! அப்படிச் செய்தால், அல்லாஹ்வும் உனக்குக் கணக்குப் பார்த்தே வழங்குவான். பையில் (முடிந்து) வைத்துக் கொள்ளாதே! அவ்வாறு செய்தால், அல்லாஹ்வும் உன் விஷயத்தில் (தனது அருள் வளங்களைப் பொழியாமல்) முடிந்து வைத்துக்கொள்வான்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அஸ்மா பின்த்தி அபீபக்ரு (ரலி)

அத்தியாயம்: 12, பாடம்: 28, ஹதீஸ் எண்: 1708

حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حَفْصٌ يَعْنِي ابْنَ غِيَاثٍ ‏ ‏عَنْ ‏ ‏هِشَامٍ ‏ ‏عَنْ ‏ ‏فَاطِمَةَ بِنْتِ الْمُنْذِرِ ‏ ‏عَنْ ‏ ‏أَسْمَاءَ بِنْتِ أَبِي بَكْرٍ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهَا ‏ ‏قَالَتْ :‏

‏قَالَ لِي رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَنْفِقِي أَوْ ‏ ‏انْضَحِي ‏ ‏أَوْ ‏ ‏انْفَحِي وَلَا ‏ ‏تُحْصِي ‏ ‏فَيُحْصِيَ اللَّهُ عَلَيْكِ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) என்னிடம், “அறவழியில் செலவழி! – தாராளமாகக் கொடு! அள்ளிப் பொழி! வாரி வழங்கு! கொடுப்பதில் கணக்குப் பார்க்காதே! அப்படிச் செய்தால், அல்லாஹ்வும் உனக்குக் கணக்குப் பார்த்தே வழங்குவான்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அஸ்மா பின்த்தி அபீபக்ரு (ரலி)

அத்தியாயம்: 12, பாடம்: 27, ஹதீஸ் எண்: 1707

حَدَّثَنَا ‏ ‏ابْنُ أَبِي عُمَرَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مَرْوَانُ يَعْنِي الْفَزَارِيَّ ‏ ‏عَنْ ‏ ‏يَزِيدَ وَهُوَ ابْنُ كَيْسَانَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي حَازِمٍ الْأَشْجَعِيِّ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏قَالَ : ‏

‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مَنْ أَصْبَحَ مِنْكُمْ الْيَوْمَ صَائِمًا قَالَ ‏ ‏أَبُو بَكْرٍ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُ ‏ ‏أَنَا قَالَ فَمَنْ تَبِعَ مِنْكُمْ الْيَوْمَ جَنَازَةً قَالَ ‏ ‏أَبُو بَكْرٍ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُ ‏ ‏أَنَا قَالَ فَمَنْ أَطْعَمَ مِنْكُمْ الْيَوْمَ مِسْكِينًا قَالَ ‏ ‏أَبُو بَكْرٍ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُ ‏ ‏أَنَا قَالَ فَمَنْ عَادَ مِنْكُمْ الْيَوْمَ ‏ ‏مَرِيضًا ‏ ‏قَالَ ‏ ‏أَبُو بَكْرٍ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُ ‏ ‏أَنَا فَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مَا اجْتَمَعْنَ فِي امْرِئٍ إِلَّا دَخَلَ الْجَنَّةَ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (ஒரு நாள் எங்களிடம்), “இன்று உங்களுள் நோன்பு நோற்றிருப்பவர் யார்?” என்று கேட்டார்கள். அபூபக்ரு (ரலி), ‘நான்’ என்றார்கள். “இன்றைய தினம் உங்களுள் ஜனாஸாவைப் பின்தொடர்ந்து சென்றவர் யார்?” என்று கேட்டார்கள். அபூபக்ரு (ரலி), ‘நான்’ என்றார்கள். “இன்றைய தினம் ஓர் ஏழைக்கு உணவளித்தவர் உங்களுள் யார்?” என்று அவர்கள் கேட்க, அதற்கும் அபூபக்ரு (ரலி), ‘நான்’ என்றார்கள். “இன்றைய தினம் ஒரு நோயாளியை உடல் நலம் விசாரித்தவர் உங்களுள் யார்?” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கேட்க, அதற்கும் அபூபக்ரு (ரலி), ‘நான்’ என்றார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “எவர் (நல்லறங்களான) இவை அனைத்தையும் மொத்தமாகச் செய்தாரோ அவர் சொர்க்கத்தில் நுழையாமல் இருப்பதில்லை” என்றார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

அத்தியாயம்: 12, பாடம்: 27, ஹதீஸ் எண்: 1706

و حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ رَافِعٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شَيْبَانُ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ حَاتِمٍ ‏ ‏وَاللَّفْظُ لَهُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شَبَابَةُ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏شَيْبَانُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ ‏ ‏عَنْ ‏ ‏يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ ‏ ‏أَنَّهُ سَمِعَ ‏ ‏أَبَا هُرَيْرَةَ ‏ ‏يَقُولُ : ‏

‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مَنْ أَنْفَقَ زَوْجَيْنِ فِي سَبِيلِ اللَّهِ دَعَاهُ خَزَنَةُ الْجَنَّةِ كُلُّ خَزَنَةِ بَابٍ أَيْ ‏ ‏فُلُ ‏ ‏هَلُمَّ ‏ ‏فَقَالَ ‏ ‏أَبُو بَكْرٍ ‏ ‏يَا رَسُولَ اللَّهِ ذَلِكَ الَّذِي لَا ‏ ‏تَوَى ‏ ‏عَلَيْهِ قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِنِّي لَأَرْجُو أَنْ تَكُونَ مِنْهُمْ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “எவர் அல்லாஹ்வின் பாதையில் ஒரு ஜோடிப் பொருட்களைச் செலவிட்டாரோ அவரைச் சொர்க்கத்தின் காவலர்கள் அழைப்பார்கள். ஒவ்வொரு வாசலின் காவலர்களும், ‘இன்னவரே! இங்கு வாரும்!’ என்று அழைப்பார்கள்” என்று கூறினார்கள். இதைக் கேட்ட அபூபக்ரு (ரலி), “அல்லாஹ்வின் தூதரே! இப்படிப்பட்டவருக்குக் கவலையே கிடையாது (எந்த வாசல் வழியாகவும் அவர் சொர்க்கத்தினுள் நுழையலாம்)” என்று கூறினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “அவர்களில் நீங்களும் ஒருவராக இருக்க வேண்டுமென நான் எதிர்பார்க்கின்றேன்” என்று சொன்னார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

அத்தியாயம்: 12, பாடம்: 27, ஹதீஸ் எண்: 1705

حَدَّثَنِي ‏ ‏أَبُو الطَّاهِرِ ‏ ‏وَحَرْمَلَةُ بْنُ يَحْيَى التُّجِيبِيُّ ‏ ‏وَاللَّفْظُ ‏ ‏لِأَبِي الطَّاهِرِ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏يُونُسُ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏عَنْ ‏ ‏حُمَيْدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ :‏

‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏مَنْ أَنْفَقَ زَوْجَيْنِ فِي سَبِيلِ اللَّهِ نُودِيَ فِي الْجَنَّةِ يَا عَبْدَ اللَّهِ هَذَا خَيْرٌ فَمَنْ كَانَ مِنْ أَهْلِ الصَّلَاةِ دُعِيَ مِنْ بَابِ الصَّلَاةِ وَمَنْ كَانَ مِنْ أَهْلِ الْجِهَادِ دُعِيَ مِنْ بَابِ الْجِهَادِ وَمَنْ كَانَ مِنْ أَهْلِ الصَّدَقَةِ دُعِيَ مِنْ بَابِ الصَّدَقَةِ وَمَنْ كَانَ مِنْ أَهْلِ الصِّيَامِ دُعِيَ مِنْ بَابِ ‏ ‏الرَّيَّانِ ‏ ‏قَالَ ‏ ‏أَبُو بَكْرٍ الصِّدِّيقُ ‏ ‏يَا رَسُولَ اللَّهِ مَا عَلَى أَحَدٍ يُدْعَى مِنْ تِلْكَ الْأَبْوَابِ مِنْ ضَرُورَةٍ فَهَلْ يُدْعَى أَحَدٌ مِنْ تِلْكَ الْأَبْوَابِ كُلِّهَا قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏نَعَمْ وَأَرْجُو أَنْ تَكُونَ مِنْهُمْ ‏


‏حَدَّثَنِي ‏ ‏عَمْرٌو النَّاقِدُ ‏ ‏وَالْحَسَنُ الْحُلْوَانِيُّ ‏ ‏وَعَبْدُ بْنُ حُمَيْدٍ ‏ ‏قَالُوا حَدَّثَنَا ‏ ‏يَعْقُوبُ وَهُوَ ابْنُ إِبْرَاهِيمَ بْنِ سَعْدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏عَنْ ‏ ‏صَالِحٍ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏عَبْدُ بْنُ حُمَيْدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الرَّزَّاقِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏مَعْمَرٌ ‏ ‏كِلَاهُمَا ‏ ‏عَنْ ‏ ‏الزُّهْرِيِّ ‏ ‏بِإِسْنَادِ ‏ ‏يُونُسَ ‏ ‏وَمَعْنَى حَدِيثِهِ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “எவர் அல்லாஹ்வின் பாதையில் ஒரு ஜோடிப் பொருளைச் செலவிட்டாரோ அவர் சொர்க்கத்தி(ன் வாசல்களில் ஒவ்வொன்றி)ல் இருந்து, ‘அல்லாஹ்வின் அடியாரே! இது சிறந்ததாகும். (இதன் வழியாக நுழையுங்கள்)’ என்று அழைக்கப்படுவார். அதாவது தொழுகையாளியாக இருந்தவர், தொழுகைக்குரிய வாசலில் இருந்து அழைக்கப்படுவார். அறப்போராளியாக இருந்தவர், அறப்போருக்குரிய வாசலில் இருந்து அழைக்கப்படுவார். தர்மம் செய்பவராக இருந்தவர் தர்மத்திற்குரிய வாசலில் இருந்து அழைக்கப்படுவார். நோன்பாளியாக இருந்தவர் (நோன்பாளிகளுக்கே உரிய) ‘அர்ரய்யான்’ எனும் வாசலில் இருந்து அழைக்கப்படுவார்” என்று சொன்னார்கள். உடனே அபூபக்ரு அஸ்ஸித்தீக் (ரலி), “அல்லாஹ்வின் தூதரே! இந்த வாசல்களில் இருந்து அழைக்கப்படும் ஒருவருக்கு வேறுவாசலின் (வழியாகச் செல்ல வேண்டிய) தேவை இராது. அந்தத் தலைவாயில்கள் எல்லாவற்றிலிருந்தும் எவராவது அழைக்கப்படுவாரா?” என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “ஆம். அவர்களில் நீங்களும் ஒருவராக இருக்க வேண்டுமென்று நான் எதிர்பார்க்கின்றேன்” என்றார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

அத்தியாயம்: 12, பாடம்: 26, ஹதீஸ் எண்: 1704

حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ رَافِعٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الرَّزَّاقِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مَعْمَرٌ ‏ ‏عَنْ ‏ ‏هَمَّامِ بْنِ مُنَبِّهٍ ‏ ‏قَالَ هَذَا مَا حَدَّثَنَا ‏ ‏أَبُو هُرَيْرَةَ ‏ ‏عَنْ ‏ ‏مُحَمَّدٍ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَذَكَرَ أَحَادِيثَ مِنْهَا :‏

‏وَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لَا تَصُمْ الْمَرْأَةُ وَبَعْلُهَا شَاهِدٌ إِلَّا بِإِذْنِهِ وَلَا تَأْذَنْ فِي بَيْتِهِ وَهُوَ شَاهِدٌ إِلَّا بِإِذْنِهِ وَمَا أَنْفَقَتْ مِنْ كَسْبِهِ مِنْ غَيْرِ أَمْرِهِ فَإِنَّ نِصْفَ أَجْرِهِ لَهُ

“ஒரு பெண் தன் கணவன் உள்ளூரில் இருக்கும்போது அவனது அனுமதி இல்லாமல் (நஃபில்) நோன்பு நோற்க வேண்டாம். கணவன் ஊரில் இருக்கும்போது அவனது அனுமதி இல்லாமல் யாரையும் அவனது வீட்டுக்குள் அனுமதிக்க வேண்டாம். அவள் தன் கணவனின் உத்தரவு இல்லாமல் அவனது சம்பாத்தியத்திலிருந்து (அறவழியில்) செலவு செய்தால் அதன் நற்பலனில் பாதி அவனுக்கும் கிடைக்கும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)


குறிப்பு  :

”அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்களிடமிருந்து அபூஹுரைரா (ரலி) எமக்கு அறிவித்த ஹதீஸ்களுள் மேற்காண்பதும் ஒன்றாகும்” என்று ஹம்மாம் பின் முனப்பிஹ் (ரஹ்) குறிப்பிடுகின்றார்.