அத்தியாயம்: 5, பாடம்: 55, ஹதீஸ் எண்: 1083

حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ مِهْرَانَ الرَّازِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏الْأَوْزَاعِيُّ ‏ ‏عَنْ ‏ ‏يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي سَلَمَةَ ‏ ‏أَنَّ ‏ ‏أَبَا هُرَيْرَةَ ‏ ‏حَدَّثَهُمْ ‏:‏

أَنَّ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَنَتَ ‏ ‏بَعْدَ الرَّكْعَةِ فِي صَلَاةٍ شَهْرًا إِذَا قَالَ ‏ ‏سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ يَقُولُ فِي ‏ ‏قُنُوتِهِ ‏ ‏اللَّهُمَّ أَنْجِ ‏ ‏الْوَلِيدَ بْنَ الْوَلِيدِ ‏ ‏اللَّهُمَّ نَجِّ ‏ ‏سَلَمَةَ بْنَ هِشَامٍ ‏ ‏اللَّهُمَّ نَجِّ ‏ ‏عَيَّاشَ بْنَ أَبِي رَبِيعَةَ ‏ ‏اللَّهُمَّ نَجِّ الْمُسْتَضْعَفِينَ مِنْ الْمُؤْمِنِينَ اللَّهُمَّ اشْدُدْ ‏ ‏وَطْأَتَكَ ‏ ‏عَلَى ‏ ‏مُضَرَ ‏ ‏اللَّهُمَّ اجْعَلْهَا عَلَيْهِمْ سِنِينَ كَسِنِي ‏ ‏يُوسُفَ ‏ ‏قَالَ ‏ ‏أَبُو هُرَيْرَةَ ‏ ‏ثُمَّ رَأَيْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏تَرَكَ الدُّعَاءَ بَعْدُ فَقُلْتُ أُرَى رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَدْ تَرَكَ الدُّعَاءَ لَهُمْ قَالَ فَقِيلَ وَمَا ‏ ‏تُرَاهُمْ قَدْ قَدِمُوا ‏


و حَدَّثَنِي ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حُسَيْنُ بْنُ مُحَمَّدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شَيْبَانُ ‏ ‏عَنْ ‏ ‏يَحْيَى ‏ ‏عَنْ ‏ ‏أَبِي سَلَمَةَ ‏ ‏أَنَّ ‏ ‏أَبَا هُرَيْرَةَ ‏ ‏أَخْبَرَهُ ‏ ‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بَيْنَمَا هُوَ ‏ ‏يُصَلِّي الْعِشَاءَ إِذْ قَالَ سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ ثُمَّ قَالَ قَبْلَ أَنْ يَسْجُدَ اللَّهُمَّ نَجِّ ‏ ‏عَيَّاشَ بْنَ أَبِي رَبِيعَةَ ‏ ‏ثُمَّ ذَكَرَ بِمِثْلِ حَدِيثِ ‏ ‏الْأَوْزَاعِيِّ ‏ ‏إِلَى قَوْلِهِ كَسِنِي ‏ ‏يُوسُفَ ‏ ‏وَلَمْ يَذْكُرْ مَا بَعْدَهُ

நபி (ஸல்), தொழுகையில் ஒரு மாத காலம் ருகூஉவிற்குப் பிறகு குனூத் (எனும் பேரிடர்ப் பிரார்த்தனை) ஓதினார்கள். அவர்கள் “ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ்” என்று கூறியதும்,

“இறைவா! (மக்காவில் சிக்கிக்கொண்டிருக்கும்) வலீத் பின் அல்வலீதைக் காப்பாற்றுவாயாக! இறைவா! ஸலமா பின் ஹிஷாமைக் காப்பாற்றுவாயாக! இறைவா! அய்யாஷ் பின் அபீரபீஆவைக் காப்பாற்றுவாயாக! இறைவா! இறைநம்பிக்கையாளர்களில் ஒடுக்கப்பட்டவர்களைக் காப்பாற்றுவாயாக!

இறைவா! முளர் குலத்தாரின்மீது உனது பிடியை இறுக்குவாயாக!
இறைவா! (உன் தூதர்) யூஸுஃபின் (காலத்துப் பஞ்ச) ஆண்டுகளைகளைப்போல் அவர்களுக்கும் ஏற்படுத்துவாயாக!” எனப் பிரார்த்திப்பவர்களாக இருந்தார்கள்.

அதன் பின்னர் (ஒரு நாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவ்வாறு பிரார்த்திப்பதை விட்டுவிட்டதை நான் பார்த்துவிட்டு, “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அந்த (ஒடுக்கப்பட்ட) மக்களுக்காகப் பிரார்த்திப்பதைக் கைவிட்டு விட்டார்கள் எனக் கருதுகிறேன்” என்றேன். அப்போது, “(மக்காவில் சிக்கிக்கொண்டிருந்த) அவர்கள் (மதீனாவுக்குத் தப்பி) வந்துவிட்டதை நீங்கள் காணவில்லையா?” என்று கேட்கப்பட்டது.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)


குறிப்பு :

ஷைபான் (ரஹ்) வழி அறிவிப்பில், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்), இஷாத் தொழுகையில் ‘ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ்’ என்று சொல்லிவிட்டு, பிறகு ஸஜ்தாச் செய்வதற்கு முன்பாக, ‘இறைவா! (மக்காவில் சிக்கிக்கொண்டிருக்கும்) அய்யாஷ் பின் அபீரபிஆவைக் காப்பாற்றுவாயாக…!’ என்று தொடங்கி, … ‘(உன் தூதர்) யூஸுஃபின் (காலத்துப் பஞ்ச) ஆண்டுகளைகளைப்போல் அவர்களுக்கும் ஏற்படுத்துவாயாக!’ என்பதுவரை இடம்பெற்றுள்ளது. அதற்குப் பின்னுள்ளவை இடம்பெறவில்லை.

அத்தியாயம்: 5, பாடம்: 55, ஹதீஸ் எண்: 1082

حَدَّثَنِي ‏ ‏أَبُو الطَّاهِرِ ‏ ‏وَحَرْمَلَةُ بْنُ يَحْيَى ‏ ‏قَالَا أَخْبَرَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏يُونُسُ بْنُ يَزِيدَ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏قَالَ أَخْبَرَنِي ‏ ‏سَعِيدُ بْنُ الْمُسَيَّبِ ‏ ‏وَأَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ ‏ ‏أَنَّهُمَا سَمِعَا ‏ ‏أَبَا هُرَيْرَةَ ‏ ‏يَقُولُ ‏:‏

كَانَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَقُولُ حِينَ يَفْرُغُ مِنْ صَلَاةِ الْفَجْرِ مِنْ الْقِرَاءَةِ وَيُكَبِّرُ وَيَرْفَعُ رَأْسَهُ ‏ ‏سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ رَبَّنَا وَلَكَ الْحَمْدُ ثُمَّ يَقُولُ وَهُوَ قَائِمٌ اللَّهُمَّ أَنْجِ ‏ ‏الْوَلِيدَ بْنَ الْوَلِيدِ ‏ ‏وَسَلَمَةَ بْنَ هِشَامٍ ‏ ‏وَعَيَّاشَ بْنَ أَبِي رَبِيعَةَ ‏ ‏وَالْمُسْتَضْعَفِينَ مِنْ الْمُؤْمِنِينَ اللَّهُمَّ اشْدُدْ ‏ ‏وَطْأَتَكَ ‏ ‏عَلَى ‏ ‏مُضَرَ ‏ ‏وَاجْعَلْهَا عَلَيْهِمْ كَسِنِي ‏ ‏يُوسُفَ ‏ ‏اللَّهُمَّ الْعَنْ ‏ ‏لِحْيَانَ ‏ ‏وَرِعْلًا ‏ ‏وَذَكْوَانَ ‏ ‏وَعُصَيَّةَ ‏ ‏عَصَتْ اللَّهَ وَرَسُولَهُ ثُمَّ بَلَغَنَا أَنَّهُ تَرَكَ ذَلِكَ لَمَّا أُنْزِلَ ‏‏لَيْسَ لَكَ مِنْ الْأَمْرِ شَيْءٌ أَوْ يَتُوبَ عَلَيْهِمْ أَوْ يُعَذِّبَهُمْ فَإِنَّهُمْ ظَالِمُونَ ‏


و حَدَّثَنَاه ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَعَمْرٌو النَّاقِدُ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏ابْنُ عُيَيْنَةَ ‏ ‏عَنْ ‏ ‏الزُّهْرِيِّ ‏ ‏عَنْ ‏ ‏سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏عَنْ النَّبِيِّ ‏ ‏إِلَى قَوْلِهِ وَاجْعَلْهَا عَلَيْهِمْ كَسِنِي ‏ ‏يُوسُفَ ‏ ‏وَلَمْ يَذْكُرْ مَا بَعْدَهُ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), ஃபஜ்ருத் தொழும்போது (முதல் ரக்அத்தின் நிலையில் இறைவசனங்களை) ஓதியபின் தக்பீர் சொல்(லி ருகூஉ செய்)வார்கள். பிறகு ருகூஉவிலிருந்து தலையை உயர்த்தும்போது ‘ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ்’ ‘ரப்பனா வலக்கல் ஹம்து’ என்று கூறுவார்கள். பிறகு நின்றநிலையில்,
“இறைவா! வலீத் பின் அல்வலீத், ஸலமா பின் ஹிஷாம், அய்யாஷ் பின் அபீரபீஆ ஆகியோரையும் (மக்காவிலுள்ள) ஒடுக்கப்பட்ட இறைநம்பிக்கையாளர்களையும் நீ காப்பாற்றுவாயாக!
இறைவா, முளர் குலத்தார்மீது உனது பிடியை இறுக்குவாயாக! இறைவா! (உன் தூதர்) யூஸுஃபின் (காலத்துப் பஞ்ச) ஆண்டுகளைகளைப்போல் அவர்களுக்கும் ஏற்படுத்துவாயாக!
இறைவா! லிஹ்யான், ரிஃல், தக்வான், உஸய்யா ஆகிய குலத்தாரை நீ உன் அருளிலிருந்து அப்புறப்படுத்துவாயாக! உஸய்யா குலத்தார் (பெயருக்கேற்ப) அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் மாறு செய்துவிட்டனர்” என்று பிரார்த்திப்பவர்களாக இருந்தார்கள். (ஒருநாள்),

“(நபியே! எவரையும் சபிக்கும்) இந்த விஷயத்தில் உமக்கு எவ்வித உரிமையும் இல்லை. அல்லாஹ் அவர்களை (இஸ்லாத்தில் புகுத்தி, அவர்களது பாவங்களை) மன்னித்துவிடலாம். அல்லாமல், அவர்கள் அக்கிரமக்காரர்களாக இருப்பதால் அவன் அவர்களை தண்டிக்கலாம்” எனும் (3:128ஆவது) இறைவசனம் அருளப்பெற்றவுடன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்), அவ்வாறு பிரார்த்திப்பதை விட்டுவிட்டார்கள் என்ற தகவல் நமக்குக் கிடைத்துள்ளது.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)


குறிப்புகள் :

இபுனு உயைனா (ரஹ்) வழி அறிவிப்பில், “இறைவா! (உன் தூதர்) யூஸுஃபின் (காலத்துப் பஞ்ச) ஆண்டுகளைகளைப்போல் அவர்களுக்கும் ஏற்படுத்துவாயாக!” என்பதற்குப் பின்னுள்ளவை இடம்பெறவில்லை.

பிஃரு மஊனாப் படுகொலை:

“எதிரிகளிடமிருந்து தங்களைக் காப்பதற்கும் இஸ்லாத்தைக் கற்றுத் தருவதற்கும் ஒரு குழுவினரைத் தங்களோடு அனுப்பி வைக்க வேண்டும்” என்ற கோரிக்கையோடு பனூ ஸுலைம் கோத்திரத்தைச் சேர்ந்த ரிஃல், தக்வான், உஸைய்யா ஆகிய முக்குலத்தவர் நபி (ஸல்) அவர்களைச் சந்திக்க வந்தனர். இது நிகழ்ந்தது ஹிஜ்ரீ நான்காம் ஆண்டில். பனூ ஸுலைம் கோத்திரத்தாரின் கோரிக்கையை ஏற்று, இறைமறையில் தேர்ச்சி மிக்க எழுபது நபித் தோழர்களை அவர்களோடு நபி (ஸல்) அனுப்பி வைத்தார்கள். மதீனாவிலிருந்து நபித்தோழர்களோடு புறப்பட்ட பனூ ஸுலைமியர், ‘பிஃர் மஊனா’ எனுமிடத்தில் வாழ்ந்த தம் கூட்டத்தாரோடு சேர்ந்து கொண்டு நிராயுதபாணிகளான அப்பாவி நபித்தோழர்களை நயவஞ்சகமாகக் கொலை செய்து, அவர்களது உடமைகளைக் கொள்ளையடித்தனர்.

அத்தியாயம்: 5, பாடம்: 54, ஹதீஸ் எண்: 1081

‏و حَدَّثَنِي ‏ ‏إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ الْحَنْظَلِيُّ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏عَبْدُ الْوَهَّابِ الثَّقَفِيُّ ‏ ‏عَنْ ‏ ‏خَالِدٍ الْحَذَّاءِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي قِلَابَةَ ‏ ‏عَنْ ‏ ‏مَالِكِ بْنِ الْحُوَيْرِثِ ‏ ‏قَالَ :‏‏

أَتَيْتُ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَنَا وَصَاحِبٌ لِي ‏ ‏فَلَمَّا أَرَدْنَا ‏ ‏الْإِقْفَالَ ‏ ‏مِنْ عِنْدِهِ قَالَ لَنَا ‏ ‏إِذَا حَضَرَتْ الصَّلَاةُ فَأَذِّنَا ثُمَّ أَقِيمَا وَلْيَؤُمَّكُمَا أَكْبَرُكُمَا ‏


و حَدَّثَنَاه ‏ ‏أَبُو سَعِيدٍ الْأَشَجُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حَفْصٌ يَعْنِي ابْنَ غِيَاثٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏خَالِدٌ الْحَذَّاءُ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏وَزَادَ قَالَ ‏ ‏الْحَذَّاءُ ‏ ‏وَكَانَا مُتَقَارِبَيْنِ فِي الْقِرَاءَةِ

நானும் என் நண்பர் ஒருவரும் நபி (ஸல்) அவர்களிடம் சென்றோம். நாங்கள் (சில நாட்கள் அங்குத் தங்கியிருந்து விட்டு) அவர்களிடமிருந்து திரும்பிச்செல்ல விரும்பியபோது எங்களிடம் அவர்கள், “தொழுகை (நேரம்) வந்துவிட்டால் தொழுகைக்கு அழையுங்கள். பிறகு இகாமத் சொல்லுங்கள். உங்களில் (வயதில்) மூத்தவர் உங்களுக்குத் தலைமை தாங்கித் தொழுவிக்கட்டும்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : மாலிக் பின் அல்ஹுவைரிஸ் (ரலி)


குறிப்பு :

ஹஃப்ஸு பின் கியாஸ் (ரஹ்) வழி அறிவிப்பில், “இருவரும் சமஅளவில் ஓதத் தெரிந்தவர்களாய் இருந்தனர்” என காலித் அல்ஹத்தாஉ (ரஹ்) கூறியதாகக் கூடுதலாக இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 5, பாடம்: 54, ஹதீஸ் எண்: 1080

و حَدَّثَنِي ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏إِسْمَعِيلُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَيُّوبُ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي قِلَابَةَ ‏ ‏عَنْ ‏ ‏مَالِكِ بْنِ الْحُوَيْرِثِ ‏ ‏قَالَ : ‏

أَتَيْنَا رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَنَحْنُ شَبَبَةٌ مُتَقَارِبُونَ فَأَقَمْنَا عِنْدَهُ عِشْرِينَ لَيْلَةً وَكَانَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏رَحِيمًا رَقِيقًا فَظَنَّ أَنَّا قَدْ اشْتَقْنَا أَهْلَنَا فَسَأَلَنَا عَنْ مَنْ تَرَكْنَا مِنْ أَهْلِنَا فَأَخْبَرْنَاهُ فَقَالَ ‏ ‏ارْجِعُوا إِلَى أَهْلِيكُمْ فَأَقِيمُوا فِيهِمْ وَعَلِّمُوهُمْ وَمُرُوهُمْ فَإِذَا حَضَرَتْ الصَّلَاةُ فَلْيُؤَذِّنْ لَكُمْ أَحَدُكُمْ ثُمَّ لِيَؤُمَّكُمْ أَكْبَرُكُمْ ‏


و حَدَّثَنَا ‏ ‏أَبُو الرَّبِيعِ الزَّهْرَانِيُّ ‏ ‏وَخَلَفُ بْنُ هِشَامٍ ‏ ‏قَالَا ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حَمَّادٌ ‏ ‏عَنْ ‏ ‏أَيُّوبَ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏و حَدَّثَنَاه ‏ ‏ابْنُ أَبِي عُمَرَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الْوَهَّابِ ‏ ‏عَنْ ‏ ‏أَيُّوبَ ‏ ‏قَالَ قَالَ لِي ‏ ‏أَبُو قِلَابَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مَالِكُ بْنُ الْحُوَيْرِثِ أَبُو سُلَيْمَانَ ‏ ‏قَالَ ‏ ‏أَتَيْتُ رَسُولَ اللَّهِ فِي نَاسٍ وَنَحْنُ شَبَبَةٌ مُتَقَارِبُونَ وَاقْتَصَّا جَمِيعًا الْحَدِيثَ بِنَحْوِ حَدِيثِ ‏ ‏ابْنِ عُلَيَّةَ

ஒத்த வயதுடைய இளைஞர்களான (பனூலைஸ் தூதுக் குழுவினரான) நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றோம். அவர்களிடம் இருபது இரவுகள் தங்கினோம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கருணையும் கனிவும் கொண்டவராக இருந்தார்கள். நாங்கள் எங்கள் குடும்பத்தாரிடம் (திரும்பிச்) செல்ல ஆசைப்படுகிறோம் என எண்ணிய அல்லாஹ்வின் தூதர் (ஸல்), (ஊரில்) நாங்கள் விட்டுவந்த எங்கள் குடும்பத்தாரைப் பற்றி விசாரித்தார்கள். நாங்கள் அவர்களைப் பற்றித் தெரிவித்தோம். ஆகவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “நீங்கள் உங்கள் குடும்பத்தாரிடம் திரும்பிச்சென்று அவர்களிடையே தங்கியிருந்து அவர்களுக்குக் கல்வி கற்றுக்கொடுங்கள். (கடமைகளை நிறைவேற்றும்படி) அவர்களைப் பணியுங்கள். தொழுகை (நேரம்) வந்ததும் உங்களில் ஒருவர் தொழுகைக்கு அழைக்கட்டும்; பிறகு உங்களில் (வயதில்) மூத்தவர் உங்களுக்குத் தலைமை தாங்கித் தொழுவிக்கட்டும்” என்றார்கள்.

அறிவிப்பாளர் : மாலிக் பின் அல்ஹுவைரிஸ் (ரலி)


குறிப்பு :

அபூகிலாபா (ரஹ்) வழி அறிவிப்பில், “நான் (என் குலத்தார்) சிலருடன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றேன். நாங்கள் ஒத்த வயதுடைய இளைஞர்களாய் இருந்தோம்” என்று மாலிக் பின் அல்ஹுவைரிஸ் (ரலி) கூறியதாக ஹதீஸ் தொடங்குகிறது.

அத்தியாயம்: 5, பாடம்: 54, ஹதீஸ் எண்: 1079

و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏وَابْنُ بَشَّارٍ ‏ ‏قَالَ ‏ ‏ابْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ ‏ ‏عَنْ ‏ ‏شُعْبَةَ ‏ ‏عَنْ ‏ ‏إِسْمَعِيلَ بْنِ رَجَاءٍ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏أَوْسَ بْنَ ضَمْعَجٍ ‏ ‏يَقُولُ سَمِعْتُ ‏ ‏أَبَا مَسْعُودٍ ‏ ‏يَقُولُ : ‏

قَالَ لَنَا رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَؤُمُّ الْقَوْمَ أَقْرَؤُهُمْ لِكِتَابِ اللَّهِ وَأَقْدَمُهُمْ قِرَاءَةً فَإِنْ كَانَتْ قِرَاءَتُهُمْ سَوَاءً فَلْيَؤُمَّهُمْ أَقْدَمُهُمْ هِجْرَةً فَإِنْ كَانُوا فِي الْهِجْرَةِ سَوَاءً فَلْيَؤُمَّهُمْ أَكْبَرُهُمْ سِنًّا وَلَا تَؤُمَّنَّ الرَّجُلَ فِي أَهْلِهِ وَلَا فِي سُلْطَانِهِ وَلَا تَجْلِسْ عَلَى ‏ ‏تَكْرِمَتِهِ ‏ ‏فِي بَيْتِهِ إِلَّا أَنْ يَأْذَنَ لَكَ أَوْ بِإِذْنِهِ

“மக்களுள் அல்லாஹ்வின் வேதத்தை நன்கு ஓதத் தெரிந்தவரும் அதை முதலில் ஓதக் கற்றுக்கொண்டவரும் அவர்களுக்குத் தலைமை தாங்கித் தொழுவிக்கத் தக்கவராவார். ஓதுதலில் அவர்கள் அனைவரும் சமமாக இருப்பின், அவர்களில் முதலில் நாடு துறந்து (ஹிஜ்ரத்) வந்தவர் மக்களுக்குத் தலைமை தாங்கித் தொழுவிக்கட்டும். ஹிஜ்ரத்தில் அவர்கள் அனைவரும் சமகாலத்தவராக இருப்பின் அவர்களில் வயதில் மூத்தவர் மக்களுக்குத் தலைமை தாங்கித் தொழுவிக்கட்டும்.

ஒருவரது குடும்பத்தாருக்கோ அவருடைய அதிகாரத்திற்கு உட்பட்டவர்களுக்கோ (உரிய இடத்தில் அவருடைய அனுமதியின்றி) நீங்கள் தலைமை தாங்கித் தொழுவிக்க வேண்டாம். ஒருவருடைய வீட்டில் அவர் உங்களுக்கு அனுமதியளித்தால் தவிர / அவரது அனுமதியின்றிஅவரது விரிப்பின் மீது நீங்கள் அமராதீர்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) எங்களிடம் கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூமஸ்ஊத் அல்அன்ஸாரீ (ரலி)

அத்தியாயம்: 5, பாடம்: 54, ஹதீஸ் எண்: 1078

و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَأَبُو سَعِيدٍ الْأَشَجُّ ‏ ‏كِلَاهُمَا ‏ ‏عَنْ ‏ ‏أَبِي خَالِدٍ ‏ ‏قَالَ ‏ ‏أَبُو بَكْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو خَالِدٍ الْأَحْمَرُ ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْمَشِ ‏ ‏عَنْ ‏ ‏إِسْمَعِيلَ بْنِ رَجَاءٍ ‏ ‏عَنْ ‏ ‏أَوْسِ بْنِ ضَمْعَجٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي مَسْعُودٍ الْأَنْصَارِيِّ ‏ ‏قَالَ :‏

قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَؤُمُّ الْقَوْمَ أَقْرَؤُهُمْ لِكِتَابِ اللَّهِ فَإِنْ كَانُوا فِي الْقِرَاءَةِ سَوَاءً فَأَعْلَمُهُمْ بِالسُّنَّةِ فَإِنْ كَانُوا فِي السُّنَّةِ سَوَاءً فَأَقْدَمُهُمْ هِجْرَةً فَإِنْ كَانُوا فِي الْهِجْرَةِ سَوَاءً فَأَقْدَمُهُمْ ‏ ‏سِلْمًا ‏ ‏وَلَا يَؤُمَّنَّ الرَّجُلُ الرَّجُلَ فِي سُلْطَانِهِ وَلَا يَقْعُدْ فِي بَيْتِهِ عَلَى ‏ ‏تَكْرِمَتِهِ ‏ ‏إِلَّا بِإِذْنِهِ ‏


قَالَ ‏ ‏الْأَشَجُّ ‏ ‏فِي رِوَايَتِهِ مَكَانَ سِلْمًا سِنًّا ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو كُرَيْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو مُعَاوِيَةَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏إِسْحَقُ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏جَرِيرٌ ‏ ‏وَأَبُو مُعَاوِيَةَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏الْأَشَجُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ فُضَيْلٍ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏ابْنُ أَبِي عُمَرَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ ‏ ‏كُلُّهُمْ ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْمَشِ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏مِثْلَهُ

“அல்லாஹ்வின் வேதத்தை நன்கு ஓதத் தெரிந்தவரே மக்களுக்குத் தலைமை தாங்கித் தொழுவிக்கத் தக்கவர். ஓதுதலில் அனைவரும் சமமாக இருந்தால் அவர்களில் நபிவழியை நன்கு அறிந்தவர் (தலைமை தாங்கட்டும்). நபிவழி அறிவிலும் சமமாக அனைவரும் இருந்தால் அவர்களில் முதலில் நாடு துறந்து (ஹிஜ்ரத்) வந்தவர் (தலைமை தாங்கட்டும்). அவர்கள் அனைவரும் சமகாலத்தில் நாடு துறந்து வந்திருப்பின் அவர்களில் முதலில் இஸ்லாத்தைத் தழுவியவர் (தலைமை தாங்கித் தொழுவிக்கட்டும்). ஒருவர் மற்றொருவரது அதிகாரத்திற்குட்பட்ட இடத்தில் (அவருடைய அனுமதியின்றி) தலைமை தாங்கித் தொழுவிக்க வேண்டாம். ஒருவரின் வீட்டில் அவரது விரிப்பின்மீது அவருடைய அனுமதியின்றி அமர வேண்டாம்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூமஸ்ஊத் அல்அன்ஸாரீ (ரலி)


குறிப்பு :

அபூஸயீத் அல் அஷஜ்ஜு (ரஹ் வழி அறிவிப்பில், “முதலில் இஸ்லாத்தைத் தழுவியவர்” எனும் இடத்தில் “அவர்களில் வயதில் மூத்தவர்” எனும் சொற்றொடர் இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 5, பாடம்: 54, ஹதீஸ் எண்: 1077

حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو عَوَانَةَ ‏ ‏عَنْ ‏ ‏قَتَادَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي نَضْرَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ ‏ ‏قَالَ :‏

قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِذَا كَانُوا ثَلَاثَةً فَلْيَؤُمَّهُمْ أَحَدُهُمْ وَأَحَقُّهُمْ بِالْإِمَامَةِ أَقْرَؤُهُمْ ‏


و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ بَشَّارٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ سَعِيدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو خَالِدٍ الْأَحْمَرُ ‏ ‏عَنْ ‏ ‏سَعِيدِ بْنِ أَبِي عَرُوبَةَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏أَبُو غَسَّانَ الْمِسْمَعِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُعَاذٌ وَهُوَ ابْنُ هِشَامٍ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏أَبِي ‏ ‏كُلُّهُمْ ‏ ‏عَنْ ‏ ‏قَتَادَةَ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏مِثْلَهُ ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سَالِمُ بْنُ نُوحٍ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏حَسَنُ بْنُ عِيسَى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ الْمُبَارَكِ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏الْجُرَيْرِيِّ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي نَضْرَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي سَعِيدٍ ‏ ‏عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بِمِثْلِهِ

“(தொழுவதற்கு) மூவர் இருந்தால் அவர்களில் ஒருவர் தலைமை தாங்கித் தொழுவிக்கட்டும்; அவர்களில் நன்கு ஓதத் தெரிந்தவரே தொழுவிக்க அதிகத் தகுதியுடையவர் ஆவார்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)

அத்தியாயம்: 5, பாடம்: 53, ஹதீஸ் எண்: 1076

و حَدَّثَنَا ‏ ‏هَارُونُ بْنُ مَعْرُوفٍ ‏ ‏وَإِسْحَقُ بْنُ مُوسَى الْأَنْصَارِيُّ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏أَنَسُ بْنُ عِيَاضٍ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏ابْنُ أَبِي ذُبَابٍ ‏ ‏فِي رِوَايَةِ ‏ ‏هَارُونَ ‏ ‏وَفِي حَدِيثِ الْأَنْصَارِيِّ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏الْحَارِثُ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ الرَّحْمَنِ بْنِ مِهْرَانَ ‏ ‏مَوْلَى ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ :‏

أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏أَحَبُّ الْبِلَادِ إِلَى اللَّهِ مَسَاجِدُهَا وَأَبْغَضُ الْبِلَادِ إِلَى اللَّهِ أَسْوَاقُهَا

“ஓர் ஊரிலுள்ள இடங்களில் அல்லாஹ்விற்கு மிகவும் விருப்பமானவை பள்ளிவாசல்களாகும். ஓர் ஊரிலுள்ள இடங்களிலேயே அல்லாஹ்வின் வெறுப்பிற்குரியவை கடைவீதிகளாகும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

அத்தியாயம்: 5, பாடம்: 53, ஹதீஸ் எண்: 1075

و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏وَكِيعٌ ‏ ‏عَنْ ‏ ‏سُفْيَانَ ‏ ‏قَالَ ‏ ‏أَبُو بَكْرٍ ‏ ‏وَحَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ بِشْرٍ ‏ ‏عَنْ ‏ ‏زَكَرِيَّاءَ ‏ ‏كِلَاهُمَا ‏ ‏عَنْ ‏ ‏سِمَاكٍ ‏ ‏عَنْ ‏ ‏جَابِرِ بْنِ سَمُرَةَ : ‏

أَنَّ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏كَانَ ‏ ‏إِذَا صَلَّى الْفَجْرَ جَلَسَ فِي مُصَلَّاهُ حَتَّى تَطْلُعَ الشَّمْسُ حَسَنًا ‏


و حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ ‏ ‏وَأَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏أَبُو الْأَحْوَصِ ‏ ‏قَالَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏ابْنُ الْمُثَنَّى ‏ ‏وَابْنُ بَشَّارٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏كِلَاهُمَا ‏ ‏عَنْ ‏ ‏سِمَاكٍ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏وَلَمْ يَقُولَا حَسَنًا

நபி (ஸல்) ஃபஜ்ருத் தொழுதுவிட்டு, தொழுத இடத்திலேயே சூரியன் நன்கு உதயமாகும்வரை அமர்ந்திருப்பார்கள்.

அறிவிப்பாளர் : ஜாபிர் பின் ஸமுரா (ரலி)


குறிப்பு :

குதைபா, அபுல் அஹ்வஸ், இப்னு முஸன்னா, ஷுஅபா (ரஹ்-அலைஹிம்) வழி அறிவிப்புகளில் “நன்கு” எனும் சொல் இடம்பெறவில்லை.

அத்தியாயம்: 5, பாடம்: 53, ஹதீஸ் எண்: 1074

‏حَدَّثَنَا ‏ ‏أَحْمَدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ يُونُسَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏زُهَيْرٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سِمَاكٌ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏وَاللَّفْظُ لَهُ ‏ ‏قَالَ أَخْبَرَنَا ‏ ‏أَبُو خَيْثَمَةَ ‏ ‏عَنْ ‏ ‏سِمَاكِ بْنِ حَرْبٍ ‏ ‏قَالَ :‏

قُلْتُ ‏ ‏لِجَابِرِ بْنِ سَمُرَةَ ‏ ‏أَكُنْتَ تُجَالِسُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ نَعَمْ كَثِيرًا كَانَ لَا يَقُومُ مِنْ مُصَلَّاهُ الَّذِي ‏ ‏يُصَلِّي فِيهِ الصُّبْحَ أَوْ الْغَدَاةَ حَتَّى تَطْلُعَ الشَّمْسُ فَإِذَا طَلَعَتْ الشَّمْسُ قَامَ وَكَانُوا يَتَحَدَّثُونَ فَيَأْخُذُونَ فِي أَمْرِ الْجَاهِلِيَّةِ فَيَضْحَكُونَ وَيَتَبَسَّمُ

நான் ஜாபிர் பின் ஸமுரா (ரலி) அவர்களிடம், “நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் அவைகளில் அமர்ந்திருந்தது உண்டா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள் “ஆம், அதிகமாக (அமர்ந்திருக்கிறேன்). அல்லாஹ்வின் தூதர் (ஸல்) சூரியன் உதயமாகாதவரை (சுப்ஹுத் தொழுத இடத்திலிருந்து) எழமாட்டார்கள். சூரியன் உதயமானபின் (அங்கிருந்து) எழுவார்கள். அப்போது மக்கள் அறியாமைக் காலம் குறித்துப் பேசிச் சிரித்துக் கொண்டிருப்பார்கள். (இதைக் கேட்டு) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) புன்னகைப்பார்கள்.” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : ஜாபிர் பின் ஸமுரா (ரலி) வழியாக ஸிமாக் பின் ஹர்பு (ரஹ்)