அத்தியாயம்: 5, பாடம்: 55, ஹதீஸ் எண்: 1093

حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏وَابْنُ بَشَّارٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏عَنْ ‏ ‏عَمْرِو بْنِ مُرَّةَ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏ابْنَ أَبِي لَيْلَى ‏ ‏قَالَ حَدَّثَنَا ‏ ‏الْبَرَاءُ بْنُ عَازِبٍ :‏

أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏كَانَ ‏ ‏يَقْنُتُ ‏ ‏فِي الصُّبْحِ وَالْمَغْرِبِ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), சுப்ஹுத் தொழுகையிலும் மஃக்ரிபுத் தொழுகையிலும் குனூத் ஓதுபவர்களாக இருந்தனர்.

அறிவிப்பாளர் : அல்பராஉ பின் ஆஸிப் (ரலி)

அத்தியாயம்: 5, பாடம்: 55, ஹதீஸ் எண்: 1092

حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الرَّحْمَنِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏هِشَامٌ ‏ ‏عَنْ ‏ ‏قَتَادَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَنَسٍ :‏

أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَنَتَ ‏ ‏شَهْرًا يَدْعُو عَلَى أَحْيَاءٍ مِنْ أَحْيَاءِ ‏ ‏الْعَرَبِ ‏ ‏ثُمَّ تَرَكَهُ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), ஒருமாத காலம் (தொழுகையில்) சில அரபுக் குலத்தினருக்கெதிராகப் பிரார்த்தித்து, குனூத் ஓதினார்கள். பின்னர் அதை விட்டுவிட்டார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் (ரலி)

அத்தியாயம்: 5, பாடம்: 55, ஹதீஸ் எண்: 1091

و حَدَّثَنَا ‏ ‏عَمْرٌو النَّاقِدُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏الْأَسْوَدُ بْنُ عَامِرٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏عَنْ ‏ ‏قَتَادَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَنَسِ بْنِ مَالِكٍ :‏

أَنَّ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَنَتَ شَهْرًا يَلْعَنُ ‏ ‏رِعْلًا ‏ ‏وَذَكْوَانَ ‏ ‏وَعُصَيَّةَ ‏ ‏عَصَوْا اللَّهَ وَرَسُولَهُ ‏


و حَدَّثَنَا ‏ ‏عَمْرٌو النَّاقِدُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏الْأَسْوَدُ بْنُ عَامِرٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏عَنْ ‏ ‏مُوسَى بْنِ أَنَسٍ ‏ ‏عَنْ ‏ ‏أَنَسٍ ‏ ‏عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بِنَحْوِهِ

நபி (ஸல்), ஒருமாத காலம் (தொழுகையில்) குனூத் ஓதினார்கள். அதில், அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் மாறு செய்துவிட்ட உஸய்யா மற்றும் ரிஃல், தக்வான் ஆகிய குலத்தாரைச் சபித்தார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் (ரலி)

அத்தியாயம்: 5, பாடம்: 55, ஹதீஸ் எண்: 1090

حَدَّثَنَا ‏ ‏ابْنُ أَبِي عُمَرَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ ‏ ‏عَنْ ‏ ‏عَاصِمٍ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏أَنَسًا ‏ ‏يَقُولُ ‏

مَا رَأَيْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَجَدَ ‏ ‏عَلَى ‏ ‏سَرِيَّةٍ ‏ ‏مَا ‏ ‏وَجَدَ ‏ ‏عَلَى السَّبْعِينَ الَّذِينَ ‏ ‏أُصِيبُوا ‏ ‏يَوْمَ ‏ ‏بِئْرِ مَعُونَةَ ‏ ‏كَانُوا يُدْعَوْنَ الْقُرَّاءَ فَمَكَثَ شَهْرًا يَدْعُو عَلَى قَتَلَتِهِمْ ‏


و حَدَّثَنَا ‏ ‏أَبُو كُرَيْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حَفْصٌ ‏ ‏وَابْنُ فُضَيْلٍ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏ابْنُ أَبِي عُمَرَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مَرْوَانُ ‏ ‏كُلُّهُمْ ‏ ‏عَنْ ‏ ‏عَاصِمٍ ‏ ‏عَنْ ‏ ‏أَنَسٍ ‏ ‏عَنْ النَّبِيِّ ‏ ‏بِهَذَا الْحَدِيثِ يَزِيدُ بَعْضُهُمْ عَلَى بَعْضٍ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), ‘பிஃரு மஊனா’ நாளில் கொல்லப்பட்ட குர்ஆன் அறிஞர்கள் (அல்குர்ராஉ) என்றழைக்கப்பட்ட எழுபது பேருக்காக மனவேதனைப்பட்டதைப் போன்று, தாம் அனுப்பிவைத்த வேறு எந்தப் படைப் பிரிவினருக்காகவும் மனவேதனைப்பட்டதில்லை. அவர்களைப் படுகொலை செய்தவர்களுக்கு எதிராக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ஒரு மாத காலம் குனூத் ஓதினார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் (ரலி)

அத்தியாயம்: 5, பாடம்: 55, ஹதீஸ் எண்: 1089

و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَأَبُو كُرَيْبٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏أَبُو مُعَاوِيَةَ ‏ ‏عَنْ ‏ ‏عَاصِمٍ ‏ ‏عَنْ ‏ ‏أَنَسٍ ‏ ‏قَالَ :‏‏

سَأَلْتُهُ عَنْ ‏ ‏الْقُنُوتِ ‏ ‏قَبْلَ الرُّكُوعِ أَوْ بَعْدَ الرُّكُوعِ فَقَالَ قَبْلَ الرُّكُوعِ قَالَ قُلْتُ فَإِنَّ نَاسًا يَزْعُمُونَ أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَنَتَ ‏ ‏بَعْدَ الرُّكُوعِ فَقَالَ إِنَّمَا ‏ ‏قَنَتَ ‏ ‏رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏شَهْرًا يَدْعُو عَلَى أُنَاسٍ قَتَلُوا أُنَاسًا مِنْ أَصْحَابِهِ يُقَالُ لَهُمْ الْقُرَّاءُ

நான் அனஸ் (ரலி) அவர்களிடம், “குனூத் ருகூஉக்கு முன்பா அல்லது அதற்குப் பின்பா (எப்போது ஓதப்பட்டது)?” என்று கேட்டேன். அதற்கு அனஸ் (ரலி), “ருகூஉக்கு முன்புதான்” என்று பதிலளித்தார்கள். நான் “ருகூஉக்குப் பின்னர்தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) குனூத் ஓதினார்கள் என்று சிலர் கூறுகின்றனரே?” என்று கேட்டேன் அதற்கு அனஸ் (ரலி), “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ஒருமாத காலம்தான் (ருகூஉவிற்குப் பிறகு) குனூத் ஓதினார்கள். அதில் குர்ஆன் அறிஞர்கள் (அல்குர்ராஉ) என்றழைக்கப்பட்ட தம் தோழர்களைக் கொன்றவர்களுக்கெதிராகப் பிரார்த்தித்தார்கள்” என்று சொன்னார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் (ரலி) வழியாக ஆஸிம் அல் அஹ்வல் (ரஹ்)

அத்தியாயம்: 5, பாடம்: 55, ஹதீஸ் எண்: 1088

و حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ حَاتِمٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏بَهْزُ بْنُ أَسَدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حَمَّادُ بْنُ سَلَمَةَ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏أَنَسُ بْنُ سِيرِينَ ‏ ‏عَنْ ‏ ‏أَنَسِ بْنِ مَالِكٍ :‏‏

أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَنَتَ ‏ ‏شَهْرًا بَعْدَ الرُّكُوعِ فِي صَلَاةِ الْفَجْرِ يَدْعُو عَلَى ‏ ‏بَنِي عُصَيَّةَ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), ஒருமாத காலம் ஃபஜ்ருத் தொழுகையில் ருகூஉக்குப் பிறகு குனூத் ஓதினார்கள். அதில் பனூ உஸய்யா குலத்தாருக்கெதிராகப் பிரார்த்தித்தார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் (ரலி)

அத்தியாயம்: 5, பாடம்: 55, ஹதீஸ் எண்: 1087

و حَدَّثَنِي ‏ ‏عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ الْعَنْبَرِيُّ ‏ ‏وَأَبُو كُرَيْبٍ ‏ ‏وَإِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏وَمُحَمَّدُ بْنُ عَبْدِ الْأَعْلَى ‏ ‏وَاللَّفْظُ ‏ ‏لِابْنِ مُعَاذٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏الْمُعْتَمِرُ بْنُ سُلَيْمَانَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي مِجْلَزٍ ‏ ‏عَنْ ‏ ‏أَنَسِ بْنِ مَالِكٍ ‏:‏

 قَنَتَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم شَهْرًا بَعْدَ الرُّكُوعِ فِي صَلاَةِ الصُّبْحِ يَدْعُو عَلَى رِعْلٍ وَذَكْوَانَ وَيَقُولُ ‏ “‏ عُصَيَّةُ عَصَتِ اللَّهَ وَرَسُولَهُ ‏”‏ ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), சுப்ஹுத் தொழுகையில் ருகூஉவிற்குப் பிறகு ஒருமாத காலம் குனூத் ஓதினார்கள். அதில் ரிஃல், தக்வான் ஆகிய குலத்தாருக்கெதிராகப் பிரார்த்தித்தார்கள். மேலும், “உஸய்யா குலத்தார் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் மாறு செய்துவிட்டார்கள்” என்றும் கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் பின் மாலிக் (ரலி)

அத்தியாயம்: 5, பாடம்: 55, ஹதீஸ் எண்: 1086

و حَدَّثَنِي ‏ ‏عَمْرٌو النَّاقِدُ ‏ ‏وَزُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏إِسْمَعِيلُ ‏ ‏عَنْ ‏ ‏أَيُّوبَ ‏ ‏عَنْ ‏ ‏مُحَمَّدٍ ‏ ‏قَالَ قُلْتُ ‏ ‏لِأَنَسٍ :‏‏

هَلْ قَنَتَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فِي صَلاَةِ الصُّبْحِ قَالَ نَعَمْ بَعْدَ الرُّكُوعِ يَسِيرًا ‏

நான் அனஸ் (ரலி) அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சுப்ஹுத் தொழுகையில் குனூத் ஓதினார்களா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “ஆம், கொஞ்ச காலம் ருகூஉவிற்குப் பின்பு ஓதினார்கள்” என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் (ரலி) வழியாக முஹம்மது பின் ஸீரீன் (ரஹ்)

அத்தியாயம்: 5, பாடம்: 55, ஹதீஸ் எண்: 1085

و حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏قَالَ قَرَأْتُ عَلَى ‏ ‏مَالِكٍ ‏ ‏عَنْ ‏ ‏إِسْحَقَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَنَسِ بْنِ مَالِكٍ ‏ ‏قَالَ :‏ ‏

دَعَا رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏عَلَى الَّذِينَ قَتَلُوا أَصْحَابَ ‏ ‏بِئْرِ مَعُونَةَ ‏ ‏ثَلَاثِينَ صَبَاحًا يَدْعُو عَلَى ‏ ‏رِعْلٍ ‏ ‏وَذَكْوَانَ ‏ ‏وَلِحْيَانَ ‏ ‏وَعُصَيَّةَ ‏ ‏عَصَتْ اللَّهَ وَرَسُولَهُ قَالَ ‏ ‏أَنَسٌ ‏ ‏أَنْزَلَ اللَّهُ عَزَّ وَجَلَّ فِي الَّذِينَ قُتِلُوا ‏ ‏بِبِئْرِ مَعُونَةَ ‏ ‏قُرْآنًا قَرَأْنَاهُ حَتَّى ‏ ‏نُسِخَ ‏ ‏بَعْدُ أَنْ بَلِّغُوا قَوْمَنَا أَنْ قَدْ لَقِينَا رَبَّنَا فَرَضِيَ عَنَّا وَرَضِينَا عَنْهُ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), ‘பிஃரு மஊனா’ (எனுமிடத்தில், இஸ்லாத்தைப் பயிற்றுவிக்கச் சென்ற தம்) தோழர்களைக் கொன்று, அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் மாறு செய்த உஸய்யா, ரிஃலு, தக்வான், லிஹ்யான் ஆகிய குலத்தாருக்கு எதிராக முப்பது வைகறை(த் தொழுகை) நேரங்களில் பிரார்த்தித்தார்கள். பிஃரு மஊனாவில் கொல்லப்பட்டவர்கள் விஷயத்தில் அல்லாஹ் அருளிய, “நாங்கள் எங்கள் இறைவனிடம் வந்து சேர்ந்துவிட்டோம். அவன் எங்களைக் குறித்துத் திருப்தியடைந்தான்; நாங்கள் அவனைக் குறித்து திருப்தியடைந்தோம் என்று எங்கள் சமுதாயத்தாரிடம் தெரிவித்துவிடுங்கள்” எனும் ஒரு வசனத்தை (அவனால் அது) மாற்றப்படும்வரை நாங்கள் ஓதிக்கொண்டிருந்தோம்.

அறிவிப்பாளர் : அனஸ் (ரலி)


குறிப்புகள் :

“ஏதேனும் ஒரு வசனத்தை நாம் மாற்றினாலோ மறக்கடித்தாலோ, அதற்கொப்பானதையோ அதைவிடச் சிறந்ததையோ நாம் தருவோம். திண்ணமாக அனைத்தின் மீதும் அல்லாஹ் ஆதிக்கப் பேராற்றல் உடையவன் என்பது (நபியே!) உமக்குத் தெரியுமன்றோ?” எனும் (2:106) வசனத்திற்கு ஒப்ப, மாற்றப்பட்ட / மறக்கடிக்கப்பட்ட இறைவசனத்திற்குப் பகரமாக அருளப்பட்ட இறைவசனத்தை அறியும்வரை, இறைவசனம் ஒன்று மாற்றப்பட்டது என்பதை ஏற்றுக் கொள்ளக்கூடாது என்று இமாம் ஷாஃபியீ (ரஹ்), தமது ஆய்வு நூலான ‘அர்ரிஸாலா’வில் குறிப்பிடுகின்றார்.

மேற்காணும் ஹதீஸுக்கு விளக்கமாக, இமாம் இப்னு ஹஜர் அல்அஸ்கலானீ (ரஹ்), ஸஹீஹுல் புகாரீக்கான தமது விரிவுரையான ‘ஃபத்ஹுல் பாரீ’யில், “நாங்கள் எங்கள் இறைவனிடம் வந்து சேர்ந்துவிட்டோம். அவன் எங்களைக் குறித்துத் திருப்தியடைந்தான்; நாங்கள் அவனைக் குறித்து திருப்தியடைந்தோம் என்று எங்கள் சமுதாயத்தாரிடம் தெரிவித்துவிடுங்கள்” எனும் இறைவசனம், “அல்லாஹ்வின் அறவழியில் கொல்லப்பட்டோரை, இறந்தவர்கள் எனக் கொள்ளாதீர்கள். அவர்கள் திண்ணமாகத் தம் இறைவனிடத்தில் உயிர் வாழ்பவர்கள்; உணவளிக்கப்படுபவர்கள்” எனும் (3:169) இறைவசனத்தால் மாற்றப்பட்டது என்பதை இஸ்ஹாக் பின் அபீதல்ஹா (ரஹ்) வழியாக உமர் பின் யூனுஸ் அறிவிப்பதாகப் பதிவு செய்திருக்கின்றார். இமாம் இபுனு கஸீர் (ரஹ்), தம் இறைமறையின் விரிவுரையில் அதை உறுதி செய்திருக்கின்றார்.

அத்தியாயம்: 5, பாடம்: 55, ஹதீஸ் எண்: 1084

حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُعَاذُ بْنُ هِشَامٍ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏أَبِي ‏ ‏عَنْ ‏ ‏يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ ‏ ‏قَالَ حَدَّثَنَا ‏ ‏أَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ ‏ ‏أَنَّهُ سَمِعَ ‏ ‏أَبَا هُرَيْرَةَ ‏ ‏يَقُولُ :‏

وَاللَّهِ لَأُقَرِّبَنَّ بِكُمْ صَلَاةَ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَكَانَ ‏ ‏أَبُو هُرَيْرَةَ ‏ ‏يَقْنُتُ ‏ ‏فِي الظُّهْرِ وَالْعِشَاءِ الْآخِرَةِ وَصَلَاةِ الصُّبْحِ وَيَدْعُو لِلْمُؤْمِنِينَ وَيَلْعَنُ الْكُفَّارَ

அபூஹுரைரா (ரலி), “அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது தொழுகைக்கு வெகுநெருக்கமாக நான் உங்களுக்குக் தொழுவிக்கிறேன்” என்று கூறினார்கள். லுஹ்ரு, இஷா, சுப்ஹு ஆகியத் தொழுகைகளில் குனூத் ஓதுவார்கள். அதில் இறைநம்பிக்கையாளர்களுக்குச் சார்பாகவும் (கொடுஞ் செயல்புரிந்த) இறைமறுப்பாளர்களைச் சபித்தும் பிரார்த்திப்பவர்களாக அபூஹுரைரா (ரலி) இருந்தார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி) வழியாக அபூஸலமா பின் அப்திர்ரஹ்மான் (ரஹ்)