அத்தியாயம்: 5, பாடம்: 38, ஹதீஸ் எண்: 1003

و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَأَبُو كُرَيْبٍ ‏ ‏وَإِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏وَكِيعٍ ‏ ‏قَالَ ‏ ‏أَبُو كُرَيْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏وَكِيعٌ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ أَبِي خَالِدٍ ‏ ‏وَمِسْعَرٍ ‏ ‏وَالْبَخْتَرِيِّ بْنِ الْمُخْتَارِ ‏ ‏سَمِعُوهُ مِنْ ‏ ‏أَبِي بَكْرِ بْنِ عُمَارَةَ بْنِ رُؤَيْبَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏قَالَ :‏‏

سَمِعْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَقُولُ ‏ ‏لَنْ ‏ ‏يَلِجَ ‏ ‏النَّارَ أَحَدٌ صَلَّى قَبْلَ طُلُوعِ الشَّمْسِ وَقَبْلَ غُرُوبِهَا ‏ ‏يَعْنِي الْفَجْرَ وَالْعَصْرَ ‏ ‏فَقَالَ لَهُ رَجُلٌ مِنْ أَهْلِ ‏ ‏الْبَصْرَةِ ‏ ‏آنْتَ سَمِعْتَ هَذَا مِنْ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ نَعَمْ قَالَ الرَّجُلُ وَأَنَا أَشْهَدُ أَنِّي سَمِعْتُهُ مِنْ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏سَمِعَتْهُ أُذُنَايَ وَوَعَاهُ قَلْبِي

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “சூரியன் உதிப்பதற்கு முன்னரும் சூரியன் மறைவதற்கு முன்னரும் தொழுதவர் -அதாவது ஃபஜ்ரையும் அஸ்ரையும் (உரிய வேளையில்) தொழுதவர் – எவரும் ஒருபோதும் நரக நெருப்பில் நுழையமாட்டார்” என்று கூறுவதை நான் கேட்டுள்ளேன் என (என் தந்தை) உமாரா பின் ருஐபா (ரலி)  கூறினார்கள். அப்போது அவர்களிடம் பஸ்ராவாசிகளில் ஒருவர், “இதை நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்றீர்களா?”என்று கேட்டார். அதற்கு உமாரா (ரலி) “ஆம்” என்றார்கள். “நானும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து இவ்வாறு செவியுற்றேன் என உறுதி அளிக்கின்றேன். அதை என்னிரு செவிகளும் செவிமடுத்தன; என் மனம் அதை மனனமிட்டுக்கொண்டது” என்று அவர் கூறினார்.

அறிவிப்பாளர் : உமாரா பின் ருஐபா (ரலி) வழியாக அவரின் மகன் அபூபக்ரிப்னு உமாரா (ரஹ்)

அத்தியாயம்: 5, பாடம்: 38, ஹதீஸ் எண்: 1002

و حَدَّثَنَا ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مَرْوَانُ بْنُ مُعَاوِيَةَ الْفَزَارِيُّ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏إِسْمَعِيلُ بْنُ أَبِي خَالِدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏قَيْسُ بْنُ أَبِي حَازِمٍ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏جَرِيرَ بْنَ عَبْدِ اللَّهِ ‏ ‏وَهُوَ ‏ ‏يَقُولُ :‏ ‏

كُنَّا جُلُوسًا عِنْدَ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِذْ نَظَرَ إِلَى الْقَمَرِ لَيْلَةَ الْبَدْرِ فَقَالَ ‏ ‏أَمَا إِنَّكُمْ سَتَرَوْنَ رَبَّكُمْ كَمَا تَرَوْنَ هَذَا الْقَمَرَ لَا ‏ ‏تُضَامُّونَ ‏ ‏فِي رُؤْيَتِهِ فَإِنْ اسْتَطَعْتُمْ أَنْ لَا تُغْلَبُوا عَلَى صَلَاةٍ قَبْلَ طُلُوعِ الشَّمْسِ وَقَبْلَ غُرُوبِهَا ‏ ‏يَعْنِي الْعَصْرَ وَالْفَجْرَ ‏ ‏ثُمَّ قَرَأَ ‏ ‏جَرِيرٌ ‏ ‏وَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ قَبْلَ طُلُوعِ الشَّمْسِ وَقَبْلَ غُرُوبِهَا ‏


و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ نُمَيْرٍ ‏ ‏وَأَبُو أُسَامَةَ ‏ ‏وَوَكِيعٌ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ وَقَالَ ‏ ‏أَمَا إِنَّكُمْ سَتُعْرَضُونَ عَلَى رَبِّكُمْ فَتَرَوْنَهُ كَمَا تَرَوْنَ هَذَا الْقَمَرَ وَقَالَ ثُمَّ قَرَأَ وَلَمْ يَقُلْ ‏ ‏جَرِيرٌ

நாங்கள் (முழு நிலவுள்ள ஓர் இரவில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் அமர்ந்திருந்தோம். அப்போது அவர்கள் முழுநிலவைக் கூர்ந்து பார்த்தவாறு, “நீங்கள் எவ்வித இடருமின்றி இந்த முழுநிலவைக் காண்பதைப் போன்றே உங்கள் இறைவனையும் (மறுமையில்) காண்பீர்கள். எனவே, சூரியன் உதிக்கும் முன்னருள்ள தொழுகையிலும் சூரியன் மறையும் முன்னருள்ள தொழுகையிலும் -அதாவது அஸ்ரிலும் ஃபஜ்ரிலும்- (உறக்கம் அசதி போன்ற எதுவும்) உங்களை மிகைப்பதற்கு இடம்கொடுக்காமல் இருக்க உங்களால் இயலுமானால் (இறைவனை நீங்கள் தரிசிக்கலாம்)” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி)


குறிப்பு :

இந்த ஹதீஸை அறிவித்த பிறகு ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி), “சூரியன் உதயமாகும் முன்னரும் மறையும் முன்னரும் உங்கள் இறைவனைப் போற்றித் துதியுங்கள்” எனும் (20:130ஆவது) இறைவசனத்தை ஓதிக்காட்டினார்கள் என்று இதன் அறிவிப்பாளரான கைஸ் பின் அபீஹாஸிம் (ரஹ்) கூறினார்.

அபூபக்ரிப்னு அபீஷைபா (ரஹ்), அப்துல்லாஹ் பின் நுமைர் (ரஹ்), அபூஉஸாமா (ரஹ்) ஆகியோரின் அறிவிப்புகளில், “நீங்கள் (மறுமையில்) உங்கள் இறைவன்முன் நிறுத்தப்படுவீர்கள். அப்போது நீங்கள் அவனை இந்த முழுநிலவைக் காண்பதைப் போன்று காண்பீர்கள்”என்று கூறிவிட்டு, (20:130ஆவது) வசனத்தை நபி (ஸல்) ஓதிக் காட்டினார்கள் என இடம்பெற்றுள்ளதேயன்றி,. ஜரீர் (ரலி) ஓதிக்காட்டியதாக இடம்பெறவில்லை.

அத்தியாயம்: 5, பாடம்: 38, ஹதீஸ் எண்: 1001

حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏قَالَ قَرَأْتُ عَلَى ‏ ‏مَالِكٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي الزِّنَادِ ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْرَجِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ :‏‏

أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏يَتَعَاقَبُونَ ‏ ‏فِيكُمْ مَلَائِكَةٌ بِاللَّيْلِ وَمَلَائِكَةٌ بِالنَّهَارِ وَيَجْتَمِعُونَ فِي صَلَاةِ الْفَجْرِ وَصَلَاةِ الْعَصْرِ ثُمَّ ‏ ‏يَعْرُجُ ‏ ‏الَّذِينَ بَاتُوا فِيكُمْ فَيَسْأَلُهُمْ رَبُّهُمْ وَهُوَ أَعْلَمُ بِهِمْ ‏ ‏كَيْفَ تَرَكْتُمْ عِبَادِي فَيَقُولُونَ تَرَكْنَاهُمْ وَهُمْ يُصَلُّونَ وَأَتَيْنَاهُمْ وَهُمْ يُصَلُّونَ ‏


و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ رَافِعٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الرَّزَّاقِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مَعْمَرٌ ‏ ‏عَنْ ‏ ‏هَمَّامِ بْنِ مُنَبِّهٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ وَالْمَلَائِكَةُ ‏ ‏يَتَعَاقَبُونَ ‏ ‏فِيكُمْ ‏ ‏بِمِثْلِ حَدِيثِ ‏ ‏أَبِي الزِّنَادِ

“இரவில் சில வானவர்களும் பகலில் சில வானவர்களும் அடுத்தடுத்து உங்களிடம் வருகின்றனர். அவர்கள் ஃபஜ்ருத் தொழுகையிலும் அஸ்ருத் தொழுகையிலும் ஒன்றுசேர்கின்றனர். பிறகு உங்களிடையே இரவில் தங்கியவர்கள் (வானத்திற்கு) ஏறிச் செல்கின்றனர். அப்போது இறைவன் தன் அடியார்களைப் பற்றி அறிந்திருத்தும் அ(வ்வான) வர்களிடம், ‘(பூமியிலுள்ள) என் அடியார்களை எந்த நிலையில் விட்டுவந்தீர்கள்?’ என்று கேட்பான். அதற்கு அவ்வானவர்கள், ‘அவர்கள் (உன்னைத்) தொழுதவர்களாக விட்டுவந்தோம்; (உன்னைத்) தொழுதவர்களான நிலையிலேயே அவர்களிடம் நாங்கள் சென்றோம்’ என்று பதிலளிப்பார்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

அத்தியாயம்: 5, பாடம்: 38, ஹதீஸ் எண்: 1000

و حَدَّثَنِي ‏ ‏أَبُو غَسَّانَ الْمِسْمَعِيُّ ‏ ‏وَمُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏عَنْ ‏ ‏مُعَاذِ بْنِ هِشَامٍ ‏ ‏قَالَ ‏ ‏أَبُو غَسَّانَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُعَاذُ بْنُ هِشَامٍ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏أَبِي ‏ ‏عَنْ ‏ ‏يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ ‏ ‏قَالَ حَدَّثَنَا ‏ ‏أَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ ‏ ‏عَنْ ‏ ‏جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ : ‏

أَنَّ ‏ ‏عُمَرَ بْنَ الْخَطَّابِ ‏ ‏يَوْمَ ‏ ‏الْخَنْدَقِ ‏ ‏جَعَلَ يَسُبُّ كُفَّارَ ‏ ‏قُرَيْشٍ ‏ ‏وَقَالَ يَا رَسُولَ اللَّهِ وَاللَّهِ مَا كِدْتُ أَنْ أُصَلِّيَ الْعَصْرَ حَتَّى كَادَتْ أَنْ تَغْرُبَ الشَّمْسُ فَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَوَاللَّهِ إِنْ صَلَّيْتُهَا فَنَزَلْنَا إِلَى ‏ ‏بُطْحَانَ ‏ ‏فَتَوَضَّأَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَتَوَضَّأْنَا فَصَلَّى رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏الْعَصْرَ بَعْدَ مَا غَرَبَتْ الشَّمْسُ ثُمَّ صَلَّى بَعْدَهَا الْمَغْرِبَ ‏


و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَإِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏قَالَ ‏ ‏أَبُو بَكْرٍ ‏ ‏حَدَّثَنَا وَقَالَ ‏ ‏إِسْحَقُ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏وَكِيعٌ ‏ ‏عَنْ ‏ ‏عَلِيِّ بْنِ الْمُبَارَكِ ‏ ‏عَنْ ‏ ‏يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ ‏ ‏فِي هَذَا الْإِسْنَادِ ‏ ‏بِمِثْلِهِ

அகழ்ப் போரின்போது உமர் பின் அல்கத்தாப் (ரலி) குறைஷிக்குல இறைமறுப்பாளர்களை ஏசிக்கொண்டே (நபியவர்களிடம் வந்து), “அல்லாஹ்வின் தூதரே! சூரியன் மறையத் தொடங்கும்வரை என்னால் அஸ்ருத் தொழுகை தொழ முடியாமல் போய்விட்டது” என்று கூறினார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “அல்லாஹ்வின் மீதாணையாக! நானும் அதை(இதுவரை)த் தொழவில்லை” என்று கூறினார்கள். பிறகு நாங்கள் (மதீனாவிலுள்ள) புத்ஹான் எனும் பள்ளத்தாக்கில் இறங்கினோம். அங்கே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) உளூச் செய்தார்கள். நாங்களும் உளூச் செய்தோம். (அன்று) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) சூரியன் மறைந்த பிறகு அஸ்ருத் தொழுதார்கள். அதன் பிறகு மஃக்ரிப் தொழுதார்கள்.

அறிவிப்பாளர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)

அத்தியாயம்: 5, பாடம்: 37, ஹதீஸ் எண்: 999

حَدَّثَنَا ‏ ‏إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ الْحَنْظَلِيُّ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏يَحْيَى بْنُ آدَمَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏الْفُضَيْلُ بْنُ مَرْزُوقٍ ‏ ‏عَنْ ‏ ‏شَقِيقِ بْنِ عُقْبَةَ ‏ ‏عَنْ ‏ ‏الْبَرَاءِ بْنِ عَازِبٍ ‏ ‏قَالَ :   ‏

نَزَلَتْ هَذِهِ الْآيَةُ ‏حَافِظُوا عَلَى الصَّلَوَاتِ ‏ ‏وَصَلَاةِ الْعَصْرِ فَقَرَأْنَاهَا مَا شَاءَ اللَّهُ ثُمَّ ‏ ‏نَسَخَهَا ‏ ‏اللَّهُ فَنَزَلَتْ ‏حَافِظُوا عَلَى الصَّلَوَاتِ وَالصَّلَاةِ الْوُسْطَى ‏ فَقَالَ رَجُلٌ كَانَ جَالِسًا عِنْدَ شَقِيقٍ لَهُ هِيَ إِذَنْ صَلَاةُ الْعَصْرِ فَقَالَ ‏ ‏الْبَرَاءُ ‏ ‏قَدْ أَخْبَرْتُكَ كَيْفَ نَزَلَتْ وَكَيْفَ ‏ ‏نَسَخَهَا ‏ ‏اللَّهُ وَاللَّهُ أَعْلَمُ ‏


قَالَ ‏ ‏مُسْلِم ‏ ‏وَرَوَاهُ ‏ ‏الْأَشْجَعِيُّ ‏ ‏عَنْ ‏ ‏سُفْيَانَ الثَّوْرِيِّ ‏ ‏عَنْ ‏ ‏الْأَسْوَدِ بْنِ قَيْسٍ ‏ ‏عَنْ ‏ ‏شَقِيقِ بْنِ عُقْبَةَ ‏ ‏عَنْ ‏ ‏الْبَرَاءِ بْنِ عَازِبٍ ‏ ‏قَالَ ‏ ‏قَرَأْنَاهَا مَعَ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏زَمَانًا بِمِثْلِ حَدِيثِ ‏ ‏فُضَيْلِ بْنِ مَرْزُوقٍ‏

“அனைத்துத் தொழுகைகளையும் அஸ்ருத் தொழுகையையும் பேணி(த் தொழுது)வாருங்கள்” என்றுதான் இந்த (2:238ஆவது) வசனம் (முதலில்) அருளப்பெற்றது. அல்லாஹ் நாடிய(காலம்)வரை அவ்வாறே நாங்கள் ஓதி்வந்தோம். பின்னர் அல்லாஹ் அந்த வசனத்தை, “அனைத்துத் தொழுகைகளையும் (குறிப்பாக) நடுத்தொழுகையையும் பேணி(த் தொழுது)வாருங்கள்” என்று மாற்றி அருளினான் என்று பராஉ பின் ஆஸிப் (ரலி) கூறினார்கள்.

இந்த ஹதீஸை பராஉ (ரலி) அறிவித்துக்கொண்டிருந்தபோது அருகில் அமர்ந்திருந்த ஒருவர் பராஉ (ரலி) அவர்களிடம், “அப்படியானால் நடுத் தொழுகை என்பது அஸ்ருத் தொழுகையையே குறிக்கிறது” என்று சொன்னார். அதற்கு பராஉ (ரலி), “அவ்வசனம் (முதலில்) எவ்வாறு அருளப்பெற்றது; பின்னர் அல்லாஹ் அதை எவ்வாறு மாற்றினான் என்பதை நான் உமக்கு தெரிவித்துவிட்டேன். அல்லாஹ்வே அறிந்தவன்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : பராஉ பின் ஆஸிப் (ரலி) வழியாக ஷகீக் பின் உக்பா (ரஹ்)


குறிப்பு :

அல் அஸ்வத் பின் கைஸ் (ரஹ்) வழி அறிவிப்பில், “நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் கொஞ்சகாலம் அந்த வசனத்தை ஓதி வந்தோம்” என்று பராஉ (ரலி) கூறியதாக இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 5, பாடம்: 37, ஹதீஸ் எண்: 998

و حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى التَّمِيمِيُّ ‏ ‏قَالَ قَرَأْتُ عَلَى ‏ ‏مَالِكٍ ‏ ‏عَنْ ‏ ‏زَيْدِ بْنِ أَسْلَمَ ‏ ‏عَنْ ‏ ‏الْقَعْقَاعِ بْنِ حَكِيمٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي يُونُسَ ‏ ‏مَوْلَى ‏ ‏عَائِشَةَ ‏ ‏أَنَّهُ قَالَ ‏ ‏ : ‏

‏أَمَرَتْنِي ‏ ‏عَائِشَةُ ‏ ‏أَنْ أَكْتُبَ لَهَا مُصْحَفًا وَقَالَتْ إِذَا بَلَغْتَ هَذِهِ الْآيَةَ ‏ ‏فَآذِنِّي ‏ ‏حَافِظُوا عَلَى الصَّلَوَاتِ وَالصَّلَاةِ الْوُسْطَى ‏ ‏فَلَمَّا بَلَغْتُهَا ‏ ‏آذَنْتُهَا فَأَمْلَتْ عَلَيَّ ‏ ‏حَافِظُوا عَلَى الصَّلَوَاتِ وَالصَّلَاةِ الْوُسْطَى ‏وَصَلَاةِ الْعَصْرِ ‏وَقُومُوا لِلَّهِ ‏ ‏قَانِتِينَ ‏ ‏قَالَتْ ‏ ‏عَائِشَةُ ‏ ‏سَمِعْتُهَا مِنْ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ

ஆயிஷா (ரலி) குர்ஆன் பிரதியொன்றைத் தமக்காகப் படியெடுத்துத் தருமாறு என்னிடம் கூறினார்கள். மேலும், “அனைத்துத் தொழுகைகளையும் (குறிப்பாக) நடுத் தொழுகையையும் பேணி(த் தொழுது)வாருங்கள் எனும் (இந்த 2:238ஆவது) வசனத்தை நீ எட்டும்போது என்னிடம் தெரிவிப்பாயாக!” என்றும் கூறினார்கள். அவ்வாறே அந்த வசனம் வந்ததும் நான் அவர்களுக்குத் தெரிவித்தேன். அப்போது அவர்கள், “அனைத்துத் தொழுகைகளையும் (குறிப்பாக) நடுத் தொழுகையையும் (அதாவது) அஸ்ருத் தொழுகையையும் பேணி(த் தொழுது) வாருங்கள். நீங்கள் உள்ளச்சம் உடையவர்களாக நின்று அல்லாஹ்வை வழிபடுங்கள்” என்று எழுதுமாறு என்னிடம் கூறினார்கள். மேலும் ஆயிஷா (ரலி), “இதை நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து செவியேற்றுள்ளேன்” என்றும் கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி) வழியாக அபூயூனுஸ் (ரஹ்)

அத்தியாயம்: 5, பாடம்: 37, ஹதீஸ் எண்: 997

و حَدَّثَنَا ‏ ‏عَوْنُ بْنُ سَلَّامٍ الْكُوفِيُّ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ طَلْحَةَ الْيَامِيُّ ‏ ‏عَنْ ‏ ‏زُبَيْدٍ ‏ ‏عَنْ ‏ ‏مُرَّةَ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ ‏ ‏قَالَ ‏ : ‏

حَبَسَ الْمُشْرِكُونَ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏عَنْ صَلَاةِ الْعَصْرِ حَتَّى احْمَرَّتْ الشَّمْسُ أَوْ اصْفَرَّتْ فَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏شَغَلُونَا عَنْ الصَّلَاةِ الْوُسْطَى صَلَاةِ الْعَصْرِ مَلَأَ اللَّهُ أَجْوَافَهُمْ وَقُبُورَهُمْ نَارًا ‏ ‏أَوْ قَالَ حَشَا اللَّهُ أَجْوَافَهُمْ وَقُبُورَهُمْ نَارًا

இணைவைப்பாளர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைச் சூரியன் செந்நிறமாகும் நேரம்வரை / மஞ்சள்நிறமாகும் நேரம்வரை அஸ்ருத் தொழுகையைத் தொழவிடாமல் தடுத்துவிட்டார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நடுத் தொழுகையான அஸ்ருத் தொழுகையிலிருந்து அவர்கள் நம்மைத் திசைதிருப்பிவிட்டார்கள். அல்லாஹ் அவர்களுடைய வயிறுகளையும் புதைகுழிகளையும் நெருப்பால் நிரப்புவானாக!” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)

அத்தியாயம்: 5, பாடம்: 37, ஹதீஸ் எண்: 996

و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَزُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏وَأَبُو كُرَيْبٍ ‏ ‏قَالُوا حَدَّثَنَا ‏ ‏أَبُو مُعَاوِيَةَ ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْمَشِ ‏ ‏عَنْ ‏ ‏مُسْلِمِ بْنِ صُبَيْحٍ ‏ ‏عَنْ ‏ ‏شُتَيْرِ بْنِ شَكَلٍ ‏ ‏عَنْ ‏ ‏عَلِيٍّ ‏ ‏قَالَ : ‏‏

قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَوْمَ الْأَحْزَابِ ‏ ‏شَغَلُونَا عَنْ الصَّلَاةِ الْوُسْطَى صَلَاةِ الْعَصْرِ مَلَأَ اللَّهُ بُيُوتَهُمْ وَقُبُورَهُمْ نَارًا ثُمَّ صَلَّاهَا بَيْنَ الْعِشَاءَيْنِ بَيْنَ الْمَغْرِبِ وَالْعِشَاءِ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அஹ்ஸாப் (எனும் அகழ்ப்) போரின்போது “(எதிரிகளான) அவர்கள் நடுத்தொழுகையான அஸ்ருத் தொழுகையிலிருந்து நம்மைத் திசைதிருப்பிவிட்டார்கள். அவர்களுடைய வீடுகளையும் புதைகுழிகளையும் அல்லாஹ் நெருப்பால் நிரப்புவானாக!” என்று கூறினார்கள். பிறகு அத்தொழுகையை இரு இரவுத் தொழுகைகளான மஃக்ரிபுக்கும் இஷாவுக்கும் இடையே தொழுதார்கள்.

அறிவிப்பாளர் : அலீ (ரலி)

அத்தியாயம்: 5, பாடம்: 37, ஹதீஸ் எண்: 995

و حَدَّثَنَاه ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَزُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏وَكِيعٌ ‏ ‏عَنْ ‏ ‏شُعْبَةَ ‏ ‏عَنْ ‏ ‏الْحَكَمِ ‏ ‏عَنْ ‏ ‏يَحْيَى بْنِ الْجَزَّارِ ‏ ‏عَنْ ‏ ‏عَلِيٍّ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَاه ‏ ‏عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ ‏ ‏وَاللَّفْظُ لَهُ ‏ ‏قَالَ حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏عَنْ ‏ ‏الْحَكَمِ ‏ ‏عَنْ ‏ ‏يَحْيَى ‏ ‏سَمِعَ ‏ ‏عَلِيًّا ‏ ‏يَقُولُ : ‏

قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَوْمَ الْأَحْزَابِ وَهُوَ قَاعِدٌ عَلَى ‏ ‏فُرْضَةٍ ‏ ‏مِنْ ‏ ‏فُرَضِ ‏ ‏الْخَنْدَقِ ‏ ‏شَغَلُونَا عَنْ ‏ ‏الصَّلَاةِ الْوُسْطَى ‏ ‏حَتَّى غَرَبَتْ الشَّمْسُ مَلَأَ اللَّهُ قُبُورَهُمْ وَبُيُوتَهُمْ ‏ ‏أَوْ قَالَ قُبُورَهُمْ وَبُطُونَهُمْ نَارًا

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அஹ்ஸாப் (எனும் அகழ்ப்) போரின்போது அகழின் நுழைவாயில்களில் ஒன்றில் அமர்ந்தவாறு, “(எதிரிகளான) அவர்கள் சூரியன் மறையும் நேரம்வரை நடுத்தொழுகை(யான அஸ்ருத் தொழுகை)யிலிருந்து நம்மைத் திசைதிருப்பிவிட்டார்கள். அவர்களுடைய புதைகுழிகளையும் வீடுகளையும் (அ) புதைகுழிகளையும் வயிறுகளையும் அல்லாஹ் நெருப்பால் நிரப்புவானாக!” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அலீ (ரலி)

அத்தியாயம்: 5, பாடம்: 37, ஹதீஸ் எண்: 994

و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏وَمُحَمَّدُ بْنُ بَشَّارٍ ‏ ‏قَالَ ‏ ‏ابْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏قَتَادَةَ ‏ ‏يُحَدِّثُ عَنْ ‏ ‏أَبِي حَسَّانَ ‏ ‏عَنْ ‏ ‏عَبِيدَةَ ‏ ‏عَنْ ‏ ‏عَلِيٍّ ‏ ‏قَالَ : ‏

قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَوْمَ الْأَحْزَابِ ‏ ‏شَغَلُونَا عَنْ ‏ ‏صَلَاةِ الْوُسْطَى ‏ ‏حَتَّى ‏ ‏آبَتْ ‏ ‏الشَّمْسُ مَلَأَ اللَّهُ قُبُورَهُمْ نَارًا ‏ ‏أَوْ بُيُوتَهُمْ أَوْ بُطُونَهُمْ شَكَّ ‏ ‏شُعْبَةُ ‏ ‏فِي الْبُيُوتِ وَالْبُطُونِ ‏


و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ أَبِي عَدِيٍّ ‏ ‏عَنْ ‏ ‏سَعِيدٍ ‏ ‏عَنْ ‏ ‏قَتَادَةَ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ وَقَالَ ‏ ‏بُيُوتَهُمْ وَقُبُورَهُمْ وَلَمْ يَشُكَّ

அஹ்ஸாப் (எனும் அகழ்ப்) போரின்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “சூரியன் மறையும் நேரம்வரை (எதிரிகளான) அவர்கள் நடுத் தொழுகை(யான அஸ்ருத் தொழுகை)யிலிருந்து நம்மைத் திசைதிருப்பிவிட்டார்கள். அவர்களுடைய புதைகுழிகளை/அவர்களுடைய வீடுகளை/அவர்களுடைய வயிறுகளை அல்லாஹ் நெருப்பால் நிரப்புவானாக!” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அலீ (ரலி)


குறிப்பு :

இதன் அறிவிப்பாளர்களுள் ஒருவரான ஷுஅபா (ரஹ்), “… அவர்களுடைய வீடுகளையோ வயிறுகளையோ” என்று ஐயத்துடன் அறிவிக்கிறார்.

கதாதா (ரஹ்) வழி அறிவிப்பில், “அவர்களுடைய வீடுகளையும் வயிறுகளையும்” என்று உம்மைத் தொடராக உறுதியோடு இடம்பெற்றுள்ளது.