அத்தியாயம்: 5, பாடம்: 40, ஹதீஸ் எண்: 1013

و حَدَّثَنِي ‏ ‏حَجَّاجُ بْنُ الشَّاعِرِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو زَيْدٍ سَعِيدُ بْنُ الرَّبِيعِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏قُرَّةُ بْنُ خَالِدٍ ‏ ‏عَنْ ‏ ‏قَتَادَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَنَسِ بْنِ مَالِكٍ ‏ ‏قَالَ ‏:‏

نَظَرْنَا رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لَيْلَةً حَتَّى كَانَ قَرِيبٌ مِنْ نِصْفِ اللَّيْلِ ثُمَّ جَاءَ فَصَلَّى ثُمَّ أَقْبَلَ عَلَيْنَا بِوَجْهِهِ فَكَأَنَّمَا أَنْظُرُ إِلَى ‏ ‏وَبِيصِ ‏ ‏خَاتَمِهِ فِي يَدِهِ مِنْ فِضَّةٍ ‏


و حَدَّثَنِي ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ الصَّبَّاحِ الْعَطَّارُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ الْمَجِيدِ الْحَنَفِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏قُرَّةُ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏وَلَمْ يَذْكُرْ ثُمَّ أَقْبَلَ عَلَيْنَا بِوَجْهِهِ

ஓர் இரவில் நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை (இஷாத் தொழுகைக்காக) எதிர்பார்த்துப் பாதி இரவு நெருங்கும்வரைக் காத்திருந்தோம். அதன்பிறகு அவர்கள் வந்து எங்களுக்கு (இஷாத்) தொழுவித்தார்கள். பிறகு எங்களை நோக்கித் திரும்பினார்கள். அப்போது அவர்களுடைய விரலில் மின்னிய வெள்ளி மோதிரம், இப்போதும் என் மனக்கண்ணில் மின்னுகின்றது.

அறிவிப்பாளர் : அனஸ் பின் மாலிக் (ரலி)


குறிப்பு :

உபைதுல்லாஹ் அல்ஹனஃபீ (ரஹ்) வழி அறிவிப்பில், “பிறகு அவர்கள் எங்களை நோக்கித் திரும்பினார்கள்” எனும் குறிப்பு இடம்பெறவில்லை.

அத்தியாயம்: 5, பாடம்: 40, ஹதீஸ் எண்: 1012

‏و حَدَّثَنِي ‏ ‏أَبُو بَكْرِ بْنُ نَافِعٍ الْعَبْدِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏بَهْزُ بْنُ أَسَدٍ الْعَمِّيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حَمَّادُ بْنُ سَلَمَةَ ‏ ‏عَنْ ‏ ‏ثَابِتٍ :‏ ‏

أَنَّهُمْ سَأَلُوا ‏ ‏أَنَسًا ‏ ‏عَنْ خَاتَمِ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقَالَ أَخَّرَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏الْعِشَاءَ ذَاتَ لَيْلَةٍ إِلَى ‏ ‏شَطْرِ ‏ ‏اللَّيْلِ أَوْ كَادَ يَذْهَبُ ‏ ‏شَطْرُ ‏ ‏اللَّيْلِ ثُمَّ جَاءَ فَقَالَ ‏ ‏إِنَّ النَّاسَ قَدْ صَلَّوْا وَنَامُوا وَإِنَّكُمْ لَمْ تَزَالُوا فِي صَلَاةٍ مَا انْتَظَرْتُمْ الصَّلَاةَ قَالَ ‏ ‏أَنَسٌ ‏ ‏كَأَنِّي أَنْظُرُ إِلَى ‏ ‏وَبِيصِ ‏ ‏خَاتَمِهِ مِنْ فِضَّةٍ وَرَفَعَ إِصْبَعَهُ الْيُسْرَى بِالْخِنْصِرِ

அனஸ் (ரலி) அவர்களிடம் மக்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய மோதிரம் தொடர்பாக வினா எழுப்பினார்கள். அதற்கு அனஸ் (ரலி), “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ஓர் இரவில் இஷாத் தொழுகையைப் பாதி இரவுவரை/பாதி இரவு கழியும்வரை தாமதப்படுத்தினார்கள். அதன்பிறகு வந்து, ‘மக்கள் (பலர்) தொழுதுவிட்டு உறங்கிவிட்டார்கள். நீங்கள் ஒரு தொழுகையை எதிர்பார்த்துக் காத்திருக்கும்வரை அந்தத் தொழுகையிலேயே உள்ளீர்கள் (அதுவரை அதன் நன்மை உங்களுக்குக் கிடைத்துக் கொண்டேயிருக்கும்)’ என்று சொன்னார்கள். அப்போது அவர்களது விரலில் மின்னிய வெள்ளி மோதிரம் இப்போதும் என் மனக்கண்ணில் காட்சியளிக்கிறது” என்று கூறிவிட்டு, அனஸ் (ரலி) தமது இடக் கை சுண்டு விரலை உயர்த்திக் காட்டினார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் (ரலி) வழியாக ஸாபித் பின் அஸ்லம் (ரஹ்)

அத்தியாயம்: 5, பாடம்: 40, ஹதீஸ் எண்: 1011

و حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ رَافِعٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الرَّزَّاقِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ جُرَيْجٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏نَافِعٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ ‏:‏

أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏شُغِلَ عَنْهَا لَيْلَةً فَأَخَّرَهَا حَتَّى رَقَدْنَا فِي الْمَسْجِدِ ثُمَّ اسْتَيْقَظْنَا ثُمَّ رَقَدْنَا ثُمَّ اسْتَيْقَظْنَا ثُمَّ خَرَجَ عَلَيْنَا رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏ثُمَّ قَالَ ‏ ‏لَيْسَ أَحَدٌ مِنْ أَهْلِ الْأَرْضِ اللَّيْلَةَ يَنْتَظِرُ الصَّلَاةَ غَيْرُكُمْ

ஓர் இரவில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்), தமது அலுவல் காரணமாக இஷாத் தொழுகையைத் தாமதப்படுத்தினார்கள். நாங்கள் பள்ளிவாசலிலேயே உறங்குவதும் விழிப்பதும் பின்னர் உறங்குவதும் விழிப்பதுமாக இருந்தோம். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) எங்களிடம் வந்து, “இந்த இரவில் உங்களைத் தவிர பூமியிலுள்ள வேறெவரும் இத்தொழுகையை எதிர்பார்த்துக் காத்திருக்கவில்லை” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)

அத்தியாயம்: 5, பாடம்: 40, ஹதீஸ் எண்: 1010

و حَدَّثَنِي ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏وَإِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏قَالَ ‏ ‏إِسْحَقُ ‏ ‏أَخْبَرَنَا وَقَالَ ‏ ‏زُهَيْرٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏جَرِيرٌ ‏ ‏عَنْ ‏ ‏مَنْصُورٍ ‏ ‏عَنْ ‏ ‏الْحَكَمِ ‏ ‏عَنْ ‏ ‏نَافِعٍ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ‏ ‏قَالَ :‏‏

مَكَثْنَا ذَاتَ لَيْلَةٍ نَنْتَظِرُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لِصَلَاةِ الْعِشَاءِ الْآخِرَةِ فَخَرَجَ إِلَيْنَا حِينَ ذَهَبَ ثُلُثُ اللَّيْلِ أَوْ بَعْدَهُ فَلَا نَدْرِي أَشَيْءٌ شَغَلَهُ فِي أَهْلِهِ أَوْ غَيْرُ ذَلِكَ فَقَالَ حِينَ خَرَجَ ‏ ‏إِنَّكُمْ لَتَنْتَظِرُونَ صَلَاةً مَا يَنْتَظِرُهَا أَهْلُ دِينٍ غَيْرُكُمْ وَلَوْلَا أَنْ يَثْقُلَ عَلَى أُمَّتِي لَصَلَّيْتُ بِهِمْ هَذِهِ السَّاعَةَ ثُمَّ أَمَرَ الْمُؤَذِّنَ فَأَقَامَ الصَّلَاةَ وَصَلَّى

ஓர் இரவில் நாங்கள் இஷாத் தொழுகைக்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை எதிர்பார்த்துக் காத்திருந்தோம். இரவின் மூன்றில் ஒரு பகுதி கழிந்தோ, அதற்குப் பிறகோதான் அவர்கள் எங்களிடம் வந்தார்கள். அவர்களது குடும்பத்தில் ஏதேனும் அலுவல் இருந்ததா, வேறு காரணமா என்று எங்களுக்குத் தெரியாது. அவர்கள் வந்ததும், “உங்களைத் தவிர வேறு எந்த மார்க்கத்தைச் சேர்ந்தோரும் (இந்நேரத்தில்) எதிர்பார்த்திராத ஒரு தொழுகையை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றீர்கள். எனது சமுதாயத்துக்குப் பளுவாகிவிடும் என்றில்லாவிடில் இந்த நேரத்தில்தான் (இத்தொழுகையை) அவர்களுக்கு நான் தொழுவித்துக் காட்டுவேன்” என்று கூறினார்கள். பிறகு தொழுகை அறிவிப்பாளரிடம் (இகாமத் கூறும்படி) உத்தரவிட, அவர் (இஷாத்) தொழுகைக்காக இகாமத் சொன்னார். நபி (ஸல்) தொழுவித்தார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)

அத்தியாயம்: 5, பாடம்: 40, ஹதீஸ் எண்: 1009

حَدَّثَنِي ‏ ‏إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏وَمُحَمَّدُ بْنُ حَاتِمٍ ‏ ‏كِلَاهُمَا ‏ ‏عَنْ ‏ ‏مُحَمَّدِ بْنِ بَكْرٍ ‏ ‏قَالَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏هَارُونُ بْنُ عَبْدِ اللَّهِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حَجَّاجُ بْنُ مُحَمَّدٍ ‏ ‏قَالَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏حَجَّاجُ بْنُ الشَّاعِرِ ‏ ‏وَمُحَمَّدُ بْنُ رَافِعٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الرَّزَّاقِ ‏ ‏وَأَلْفَاظُهُمْ مُتَقَارِبَةٌ ‏ ‏قَالُوا جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ جُرَيْجٍ ‏ ‏قَالَ أَخْبَرَنِي ‏ ‏الْمُغِيرَةُ بْنُ حَكِيمٍ ‏ ‏عَنْ ‏ ‏أُمِّ كُلْثُومٍ بِنْتِ أَبِي بَكْرٍ ‏ ‏أَنَّهَا أَخْبَرَتْهُ عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏قَالَتْ :‏‏

أَعْتَمَ ‏ ‏النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏ذَاتَ لَيْلَةٍ حَتَّى ذَهَبَ عَامَّةُ اللَّيْلِ وَحَتَّى نَامَ أَهْلُ الْمَسْجِدِ ثُمَّ خَرَجَ فَصَلَّى فَقَالَ ‏ ‏إِنَّهُ لَوَقْتُهَا لَوْلَا أَنْ أَشُقَّ عَلَى أُمَّتِي ‏


وَفِي حَدِيثِ ‏ ‏عَبْدِ الرَّزَّاقِ ‏ ‏لَوْلَا أَنَّ يَشُقَّ عَلَى أُمَّتِي

ஓர் இரவில் நபி (ஸல்), இஷாத் தொழுகையை நன்கு இருள் சூழும்வரை, இரவின் கணிசமான பகுதி கடந்து பள்ளிவாசலில் இருந்தவர்கள் உறங்கியும்விட்ட அளவுக்குத் தாமதப்படுத்தினார்கள். பிறகு நபி (ஸல்) வந்து தொழுவித்துவிட்டு, “என் சமுதாயத்தாருக்குச் சிரமம் ஏற்பட்டுவிடும் என்ற அச்சம் எனக்கில்லையாயின் இதுதான் இஷாத் தொழுகைக்கான (சிறந்த) நேரமாகும்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)


குறிப்பு :

அப்துர் ரஸ்ஸாக் (ரஹ்) வழி அறிவிப்பில் “என் சமுதாயத்தாருக்குச் சிரமமாகத் தோன்றவில்லையாயின்” என இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 5, பாடம்: 40, ஹதீஸ் எண்: 1008

و حَدَّثَنَا ‏ ‏عَمْرُو بْنُ سَوَّادٍ الْعَامِرِيُّ ‏ ‏وَحَرْمَلَةُ بْنُ يَحْيَى ‏ ‏قَالَا أَخْبَرَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏يُونُسُ ‏ ‏أَنَّ ‏ ‏ابْنَ شِهَابٍ ‏ ‏أَخْبَرَهُ قَالَ أَخْبَرَنِي ‏ ‏عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ ‏:‏

أَنَّ ‏ ‏عَائِشَةَ زَوْجَ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَتْ ‏ ‏أَعْتَمَ ‏ ‏رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لَيْلَةً مِنْ اللَّيَالِي ‏ ‏بِصَلَاةِ الْعِشَاءِ وَهِيَ الَّتِي ‏ ‏تُدْعَى الْعَتَمَةَ فَلَمْ يَخْرُجْ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏حَتَّى قَالَ ‏ ‏عُمَرُ بْنُ الْخَطَّابِ ‏ ‏نَامَ النِّسَاءُ وَالصِّبْيَانُ فَخَرَجَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقَالَ لِأَهْلِ الْمَسْجِدِ حِينَ خَرَجَ عَلَيْهِمْ ‏ ‏مَا يَنْتَظِرُهَا أَحَدٌ مِنْ أَهْلِ الْأَرْضِ غَيْرُكُمْ وَذَلِكَ قَبْلَ أَنْ يَفْشُوَ الْإِسْلَامُ فِي النَّاسِ ‏ ‏زَادَ ‏ ‏حَرْمَلَةُ ‏ ‏فِي رِوَايَتِهِ ‏ ‏قَالَ ‏ ‏ابْنُ شِهَابٍ ‏ ‏وَذُكِرَ لِي ‏ ‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ وَمَا كَانَ لَكُمْ أَنْ ‏ ‏تَنْزُرُوا ‏ ‏رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏عَلَى الصَّلَاةِ وَذَاكَ حِينَ صَاحَ ‏ ‏عُمَرُ بْنُ الْخَطَّابِ ‏


و حَدَّثَنِي ‏ ‏عَبْدُ الْمَلِكِ بْنُ شُعَيْبِ بْنِ اللَّيْثِ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏أَبِي ‏ ‏عَنْ ‏ ‏جَدِّي ‏ ‏عَنْ ‏ ‏عُقَيْلٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏مِثْلَهُ وَلَمْ يَذْكُرْ قَوْلَ ‏ ‏الزُّهْرِيِّ ‏ ‏وَذُكِرَ لِي ‏ ‏وَمَا بَعْدَهُ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), ‘அல்-அதமா’ என வழங்கிவந்த இஷாத் தொழுகையை ஓர் இரவில் நன்கு இருள் சூழும்வரை தாமதப்படுத்தினார்கள். உமர் பின் அல்கத்தாப் (ரலி),  “பெண்களும் சிறுவர்களும் உறங்கிவிட்டனர்” என்று (உரத்துக்) கூறும்வரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (தமது இல்லத்திலிருந்து) வெளிவரவில்லை. (பின்னர்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) வந்து, அப்போது பள்ளிவாசலில் இருந்தவர்களை நோக்கி, “இந்த பூமியில் வசிப்பவர்களில் உங்களைத் தவிர வேறு யாரும் (இப்போது) இத்தொழுகையை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கவில்லை” என்று கூறினார்கள். இது, மக்களிடையே இஸ்லாம் (அதிகமாகப்) பரவுவதற்கு முன் நடைபெற்றதாகும்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)


குறிப்பு :

ஹர்மலா (ரஹ்) வழி அறிவிப்பில், உமர் பின் அல்கத்தாப் (ரலி) உரத்த குரலில் அழைத்தபோது “தொழுவிக்க வருமாறு அல்லாஹ்வின் தூதரை வற்புறுத்துகின்ற உரிமை உங்களுக்கு இல்லை என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்” என்று எனக்கு அறிவிக்கப்பட்டது என இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) கூறியதாக இடம்பெற்றுள்ளது.

அல்லைஸ் (ரஹ்) வழி அறிவிப்பில், இப்னு ஷிஹாப் (ரஹ்) குறிப்பிட்டுள்ள கூடுதல் தகவல் இடம்பெறவில்லை.

அத்தியாயம்: 5, பாடம்: 39, ஹதீஸ் எண்: 1007

و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ مِهْرَانَ الرَّازِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏الْأَوْزَاعِيُّ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏أَبُو النَّجَاشِيِّ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏رَافِعَ بْنَ خَدِيجٍ ‏ ‏يَقُولُ :‏ ‏

كُنَّا نُصَلِّي الْمَغْرِبَ مَعَ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَيَنْصَرِفُ أَحَدُنَا وَإِنَّهُ لَيُبْصِرُ مَوَاقِعَ نَبْلِهِ ‏


و حَدَّثَنَا ‏ ‏إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ الْحَنْظَلِيُّ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏شُعَيْبُ بْنُ إِسْحَقَ الدِّمَشْقِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏الْأَوْزَاعِيُّ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏أَبُو النَّجَاشِيِّ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏رَافِعُ بْنُ خَدِيجٍ ‏ ‏قَالَ ‏ ‏كُنَّا نُصَلِّي الْمَغْرِبَ ‏ ‏بِنَحْوِهِ

நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் மஃக்ரிபுத் தொழுவோம். பிறகு எங்களில் ஒருவர் திரும்பிச் செல்லும்போது (அவர் அம்பெய்தால்) அம்பு விழும் இடத்தை அவர் (அடையாளம்) கண்டு கொள்வார்.

அறிவிப்பாளர் : ராஃபிஉ பின் கதீஸ் (ரலி)

அத்தியாயம்: 5, பாடம்: 39, ஹதீஸ் எண்: 1006

حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حَاتِمٌ وَهُوَ ابْنُ إِسْمَعِيلَ ‏ ‏عَنْ ‏ ‏يَزِيدَ بْنِ أَبِي عُبَيْدٍ ‏ ‏عَنْ ‏ ‏سَلَمَةَ بْنِ الْأَكْوَعِ ‏:‏

أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏كَانَ ‏ ‏يُصَلِّي الْمَغْرِبَ إِذَا غَرَبَتْ الشَّمْسُ وَتَوَارَتْ بِالْحِجَابِ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), சூரியன் (அடிவானின்) திரையில் மறையும்போது மஃக்ரிப் தொழுவார்கள்.

அறிவிப்பாளர் : ஸலமா பின் அக்வஃ (ரலி)

அத்தியாயம்: 5, பாடம்: 38, ஹதீஸ் எண்: 1005

و حَدَّثَنَا ‏ ‏هَدَّابُ بْنُ خَالِدٍ الْأَزْدِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏هَمَّامُ بْنُ يَحْيَى ‏ ‏حَدَّثَنِي ‏ ‏أَبُو جَمْرَةَ الضُّبَعِيُّ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي بَكْرٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏:‏

أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏مَنْ صَلَّى ‏ ‏الْبَرْدَيْنِ ‏ ‏دَخَلَ الْجَنَّةَ ‏


حَدَّثَنَا ‏ ‏ابْنُ أَبِي عُمَرَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏بِشْرُ بْنُ السَّرِيِّ ‏ ‏قَالَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏ابْنُ خِرَاشٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَمْرُو بْنُ عَاصِمٍ ‏ ‏قَالَا ‏ ‏جَمِيعًا ‏ ‏حَدَّثَنَا ‏ ‏هَمَّامٌ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏وَنَسَبَا ‏ ‏أَبَا بَكْرٍ ‏ ‏فَقَالَا ‏ ‏ابْنُ أَبِي مُوسَى

“பகலின் இரு முனைகளிலுள்ள (ஃபஜ்ரு, அஸ்ரு ஆகிய) இரு குளிர்நேரத் தொழுகைகளைத் தொழுபவர் சொர்க்கத்தில் நுழைவார்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூமூஸா அல்அஷ்அரீ (ரலி) வழியாக அவரின் மகன் அபூபக்ரு பின் அபீமூஸா (ரஹ்)


குறிப்பு :

“இதில் இடம்பெறும் அபூபக்ரு (ரஹ்) என்பார் நபித்தோழர் அபூமூஸா அல்அஷ்அரீ (ரலி) அவர்களின் மகனாவார்” என உறுதிப்படுத்தும் வேறுவழி அறிவிப்புகளும் உள்ளன.

அத்தியாயம்: 5, பாடம்: 38, ஹதீஸ் எண்: 1004

و حَدَّثَنِي ‏ ‏يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ الدَّوْرَقِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ أَبِي بُكَيْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شَيْبَانُ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ الْمَلِكِ بْنِ عُمَيْرٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عُمَارَةَ بْنِ رُؤَيْبَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏قَالَ ‏:‏

قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لَا ‏ ‏يَلِجُ ‏ ‏النَّارَ مَنْ صَلَّى قَبْلَ طُلُوعِ الشَّمْسِ وَقَبْلَ غُرُوبِهَا ‏


وَعِنْدَهُ رَجُلٌ مِنْ أَهْلِ ‏ ‏الْبَصْرَةِ ‏ ‏فَقَالَ ‏ ‏آنْتَ سَمِعْتَ هَذَا مِنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ نَعَمْ أَشْهَدُ بِهِ عَلَيْهِ قَالَ وَأَنَا أَشْهَدُ لَقَدْ سَمِعْتُ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَقُولُهُ بِالْمَكَانِ الَّذِي سَمِعْتَهُ مِنْهُ

“சூரியன் உதிப்பதற்கு முன்னரும் சூரியன் மறைவதற்கு முன்னரும் (ஃபஜ்ரையும் அஸ்ரையும் வேளை தவறாது) தொழுபவர், நரக நெருப்பில் நுழையமாட்டார்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள் என (என் தந்தை) உமாரா பின் ருஐபா (ரலி) அறிவித்தார்கள். அப்போது உமாரா (ரலி) அவர்களுக்கு அருகில் இருந்த பஸ்ராவாசிகளில் ஒருவர், “இதை நீங்கள் நபி (ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்றீர்களா?'”என்று கேட்டார். அதற்கு உமாரா (ரலி), “ஆம், நபி (ஸல்) அவ்வாறு கூறினார்கள் என நான் உறுதி அளிக்கின்றேன்” என்று பதிலளித்தார்கள். அதற்கு அந்த பஸ்ராவாசி, “நபி (ஸல்) இவ்வாறு கூறியதை நீங்கள் செவியேற்ற அதே இடத்தில் நானும் செவியுற்றிருக்கின்றேன் என நானும் உறுதி அளிக்கின்றேன்” என்றார்.

அறிவிப்பாளர் : உமாரா பின் ருஐபா (ரலி) வழியாக அவரின் மகன் அபூபக்ரிப்னு உமாரா (ரஹ்)