அத்தியாயம்: 5, பாடம்: 26, ஹதீஸ் எண்: 923

حَدَّثَنِي ‏ ‏عَمْرٌو النَّاقِدُ ‏ ‏وَزُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ سَعْدٍ ‏ ‏قَالَ حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏عَنْ ‏ ‏صَالِحٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏قَالَ أَخْبَرَنِي ‏ ‏عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ ‏ ‏أَنَّ ‏ ‏عَائِشَةَ ‏ ‏قَالَتْ ‏:‏

سَمِعْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَسْتَعِيذُ فِي صَلَاتِهِ مِنْ فِتْنَةِ ‏ ‏الدَّجَّالِ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தமது தொழுகையில் தஜ்ஜாலின் குழப்பத்திலிருந்து (இறைவனிடம்) பாதுகாப்புக் கோருவதை நான் செவியுற்றிருக்கின்றேன்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)

அத்தியாயம்: 5, பாடம்: 25, ஹதீஸ் எண்: 922

حَدَّثَنَا ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏وَإِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏كِلَاهُمَا ‏ ‏عَنْ ‏ ‏جَرِيرٍ ‏ ‏قَالَ ‏ ‏زُهَيْرٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏جَرِيرٌ ‏ ‏عَنْ ‏ ‏مَنْصُورٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي وَائِلٍ ‏ ‏عَنْ ‏ ‏مَسْرُوقٍ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏قَالَتْ :‏‏

دَخَلَتْ عَلَيَّ عَجُوزَانِ مِنْ عُجُزِ يَهُودِ ‏ ‏الْمَدِينَةِ ‏ ‏فَقَالَتَا إِنَّ أَهْلَ الْقُبُورِ يُعَذَّبُونَ فِي قُبُورِهِمْ قَالَتْ فَكَذَّبْتُهُمَا وَلَمْ أُنْعِمْ أَنْ أُصَدِّقَهُمَا فَخَرَجَتَا وَدَخَلَ عَلَيَّ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقُلْتُ لَهُ يَا رَسُولَ اللَّهِ إِنَّ عَجُوزَيْنِ مِنْ عُجُزِ يَهُودِ ‏ ‏الْمَدِينَةِ ‏ ‏دَخَلَتَا عَلَيَّ فَزَعَمَتَا أَنَّ أَهْلَ الْقُبُورِ يُعَذَّبُونَ فِي قُبُورِهِمْ فَقَالَ صَدَقَتَا إِنَّهُمْ يُعَذَّبُونَ عَذَابًا تَسْمَعُهُ الْبَهَائِمُ قَالَتْ فَمَا رَأَيْتُهُ بَعْدُ فِي صَلَاةٍ إِلَّا ‏ ‏يَتَعَوَّذُ مِنْ عَذَابِ الْقَبْرِ ‏


حَدَّثَنَا ‏ ‏هَنَّادُ بْنُ السَّرِيِّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو الْأَحْوَصِ ‏ ‏عَنْ ‏ ‏أَشْعَثَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏مَسْرُوقٍ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏بِهَذَا الْحَدِيثِ وَفِيهِ قَالَتْ وَمَا صَلَّى صَلَاةً بَعْدَ ذَلِكَ إِلَّا سَمِعْتُهُ يَتَعَوَّذُ مِنْ عَذَابِ الْقَبْرِ

மதீனத்து யூதமூதாட்டிகள் இருவர் என்னிடம் வந்து (பேசிக் கொண்டிருந்தபோது), “மண்ணறைகளில் புதைக்கப்பட்டிருப்போர் வேதனை செய்யப்படுகின்றனர்” என்று கூறினர். அவர்கள் இருவரும் கூறியதை நான் நம்பவில்லை. அவர்கள் கூறியதை நம்புவதற்கு என் மனம் இடம்தரவில்லை. பிறகு அவர்கள் இருவரும் வெளியேறிவிட்டனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) என்னிடம் வந்தபோது, “அல்லாஹ்வின் தூதரே! மதீனத்து யூதமூதாட்டியரில் இருவர் என்னிடம் வந்து மண்ணறைகளில் புதைக்கப்பட்டிருப்போர் வேதனை செய்யப்படுகின்றனர் என்று கூறினர்” என அவர்களிடம் தெரிவித்தேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “அவர்கள் சொன்னது உண்மையே! (மண்ணறைகளிலிருக்கும் பாவிகள்) கடுமையாக வேதனை செய்யப்படுகின்றனர். அந்த வேதனை(ஓலங்)களை மிருகங்கள் செவியேற்கின்றன” என்று கூறினார்கள்.

அதற்குப் பின் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) எந்தத் தொழுகையிலும் மண்ணறையின் வேதனையிலிருந்து (இறைவனிடம்) பாதுகாப்புக் கோராமல் இருந்ததில்லை.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)


குறிப்பு :

அபுல் அஹ்வஸ் (ரஹ்) வழி அறிவிப்பில், “… அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அதற்குப் பிறகு தொழுத எந்தத் தொழுகையிலும் மண்ணறையின் வேதனையிலிருந்து (இறைவனிடம்) பாதுகாப்புக் கோராமல் இருந்ததில்லை” என்று இடம் பெற்றுள்ளது.

அத்தியாயம்: 5, பாடம்: 25, ஹதீஸ் எண்: 921

و حَدَّثَنِي ‏ ‏هَارُونُ بْنُ سَعِيدٍ ‏ ‏وَحَرْمَلَةُ بْنُ يَحْيَى ‏ ‏وَعَمْرُو بْنُ سَوَّادٍ ‏ ‏قَالَ ‏ ‏حَرْمَلَةُ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏وَقَالَ الْآخَرَانِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏يُونُسُ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏عَنْ ‏ ‏حُمَيْدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏قَالَ ‏

سَمِعْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بَعْدَ ذَلِكَ ‏ ‏يَسْتَعِيذُ مِنْ عَذَابِ الْقَبْرِ

(இதற்கு முந்தைய ஹதீஸ் எண் 920இல் குறிப்பிட்டுள்ள) அந்த நிகழ்வுக்குப் பின்னர், பின்னர், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) மண்ணறையின் வேதனையிலிருந்து (இறைவனிடம்) பாதுகாப்புக் கோருவதை நான் செவியுற்றேன்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

அத்தியாயம்: 5, பாடம்: 25, ஹதீஸ் எண்: 920

حَدَّثَنَا ‏ ‏هَارُونُ بْنُ سَعِيدٍ ‏ ‏وَحَرْمَلَةُ بْنُ يَحْيَى ‏ ‏قَالَ ‏ ‏هَارُونُ ‏ ‏حَدَّثَنَا وَقَالَ ‏ ‏حَرْمَلَةُ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏يُونُسُ بْنُ يَزِيدَ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏قَالَ حَدَّثَنِي ‏ ‏عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ ‏ ‏أَنَّ ‏ ‏عَائِشَةَ ‏ ‏قَالَتْ ‏:‏

دَخَلَ عَلَيَّ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَعِنْدِي امْرَأَةٌ مِنْ ‏ ‏الْيَهُودِ ‏ ‏وَهِيَ تَقُولُ هَلْ شَعَرْتِ أَنَّكُمْ ‏ ‏تُفْتَنُونَ ‏ ‏فِي الْقُبُورِ قَالَتْ ‏ ‏فَارْتَاعَ ‏ ‏رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَقَالَ إِنَّمَا تُفْتَنُ ‏ ‏يَهُودُ ‏ ‏قَالَتْ ‏ ‏عَائِشَةُ ‏ ‏فَلَبِثْنَا ‏ ‏لَيَالِيَ ثُمَّ قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏هَلْ شَعَرْتِ ‏ ‏أَنَّهُ أُوحِيَ إِلَيَّ أَنَّكُمْ تُفْتَنُونَ فِي الْقُبُورِ قَالَتْ ‏ ‏عَائِشَةُ ‏ ‏فَسَمِعْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بَعْدُ يَسْتَعِيذُ مِنْ عَذَابِ الْقَبْرِ

என்னிடம் யூதப்பெண் ஒருவர், “உங்களுக்குத் தெரியுமா? நீங்கள் உங்கள் மண்ணறைகளில் வேதனை செய்யப்படுவீர்கள்” என்று கூறிக் கொண்டிருந்தபோது அங்கு வந்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் திடுக்குற்றார்கள். மேலும், “யூதர்கள்தாம் (மண்ணறைகளில்) வேதனை செய்யப்படுவார்கள்” என்றார்கள்.

சிலநாள்கள் கழிந்தபின் அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “உனக்குத் தெரியுமா? மண்ணறைகளில் நீங்கள் வேதனை செய்யப்படுவீர்கள் என இறைவனால் எனக்கு அறிவிக்கப்பட்டுள்ளது” என்று என்னிடம் கூறினார்கள். அதற்குப்பின் அல்லாஹ்வின் தூதர் (ஸல்)  மண்ணறையின் வேதனையிலிருந்து (இறைவனிடம்) பாதுகாப்புக் கோருவதை நான் செவியுற்றேன்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)

அத்தியாயம்: 5, பாடம்: 24, ஹதீஸ் எண்: 919

حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ حَاتِمٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ بَكْرٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ جُرَيْجٍ ‏ ‏قَالَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏إِسْحَقُ بْنُ مَنْصُورٍ ‏ ‏وَاللَّفْظُ لَهُ ‏ ‏قَالَ أَخْبَرَنَا ‏ ‏عَبْدُ الرَّزَّاقِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ جُرَيْجٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏عَمْرُو بْنُ دِينَارٍ ‏ ‏أَنَّ ‏ ‏أَبَا مَعْبَدٍ ‏ ‏مَوْلَى ‏ ‏ابْنِ عَبَّاسٍ ‏ ‏أَخْبَرَهُ أَنَّ ‏ ‏ابْنَ عَبَّاسٍ ‏ ‏أَخْبَرَهُ :‏‏

أَنَّ رَفْعَ الصَّوْتِ بِالذِّكْرِ حِينَ يَنْصَرِفُ النَّاسُ مِنْ الْمَكْتُوبَةِ كَانَ عَلَى عَهْدِ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَأَنَّهُ قَالَ قَالَ ‏ ‏ابْنُ عَبَّاسٍ ‏ ‏كُنْتُ أَعْلَمُ إِذَا انْصَرَفُوا بِذَلِكَ إِذَا سَمِعْتُهُ

மக்கள் கடமையான தொழுகையை முடிக்கும்போது குரலுயர்த்தி, (‘அல்லாஹு அக்பர்’ எனக்கூறி) இறைவனை நினைவுகூரும் நடைமுறை நபி (ஸல்) அவர்களது காலத்தில் இருந்தது. அவ்வாறு செவியுற்றால் மக்கள் தொழுகையை முடித்துவிட்டார்கள் என்பதை நான் அறிந்துகொள்வேன்.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி)

அத்தியாயம்: 5, பாடம்: 24, ஹதீஸ் எண்: 918

حَدَّثَنَا ‏ ‏ابْنُ أَبِي عُمَرَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ ‏ ‏عَنْ ‏ ‏عَمْرِو بْنِ دِينَارٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي مَعْبَدٍ ‏ ‏مَوْلَى ‏ ‏ابْنِ عَبَّاسٍ ‏ ‏أَنَّهُ سَمِعَهُ يُخْبِرُ عَنْ ‏ ‏ابْنِ عَبَّاسٍ ‏ ‏قَالَ :‏‏

مَا كُنَّا نَعْرِفُ ‏ ‏انْقِضَاءَ ‏ ‏صَلَاةِ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِلَّا بِالتَّكْبِيرِ ‏


قَالَ ‏ ‏عَمْرٌو ‏ ‏فَذَكَرْتُ ذَلِكَ ‏ ‏لِأَبِي مَعْبَدٍ ‏ ‏فَأَنْكَرَهُ وَقَالَ لَمْ أُحَدِّثْكَ بِهَذَا قَالَ ‏ ‏عَمْرٌو ‏ ‏وَقَدْ أَخْبَرَنِيهِ قَبْلَ ذَلِكَ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தொழுகையை முடித்துவிட்டார்கள் என்பதை(த்தொழுதவர்கள் கூறும்) தக்பீரின் மூலமே நாங்கள் அறிந்துவந்தோம்.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி)


குறிப்பு :

இந்த ஹதீஸை எனக்கு அறிவித்திருந்த அபூமஅபத் (ரஹ்) இடம் நான் (மீண்டும் இதை) எடுத்துரைத்தபோது, “இதை நான் உமக்கு அறிவிக்கவில்லையே” என்று மறுத்தார் என அம்ரு (ரஹ்) கூறுகின்றார்.

அத்தியாயம்: 5, பாடம்: 24, ஹதீஸ் எண்: 917

‏حَدَّثَنَا ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ ‏ ‏عَنْ ‏ ‏عَمْرٍو ‏ ‏قَالَ أَخْبَرَنِي ‏ ‏بِذَا ‏ ‏أَبُو مَعْبَدٍ ‏ ‏ثُمَّ أَنْكَرَهُ بَعْدُ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عَبَّاسٍ ‏ ‏قَالَ :‏‏

كُنَّا نَعْرِفُ ‏ ‏انْقِضَاءَ ‏ ‏صَلَاةِ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بِالتَّكْبِيرِ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தொழுகையை முடித்துவிட்டார்கள் என்பதை, “அல்லாஹு அக்பர்” என்று (தொழுதவர்கள்) கூறுவதன் மூலம் நாங்கள் அறிந்து கொள்வோம்.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி)


குறிப்பு :

“இந்த ஹதீஸை இப்னு அப்பாஸ் (ரலி) கூறியதாக அபூமஅபத் (ரஹ்) அறிவித்துவிட்டு, பின்னர் மறுத்துவிட்டார்” என அம்ரு (ரஹ்) கூறுகின்றார்.

அத்தியாயம்: 5, பாடம்: 23, ஹதீஸ் எண்: 916

و حَدَّثَنَا ‏ ‏إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏أَبُو عَامِرٍ الْعَقَدِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ جَعْفَرٍ ‏ ‏عَنْ ‏ ‏إِسْمَعِيلَ بْنِ مُحَمَّدٍ ‏ ‏عَنْ ‏ ‏عَامِرِ بْنِ سَعْدٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏قَالَ ‏:‏

كُنْتُ أَرَى رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يُسَلِّمُ عَنْ يَمِينِهِ وَعَنْ يَسَارِهِ حَتَّى أَرَى بَيَاضَ خَدِّهِ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (தொழுகையை முடிக்கும்போது) வலப்பக்கத்திலும் இடப்பக்கத்திலும் (முகத்தைத் திருப்பி) ஸலாம் கூறுவார்கள். அவர்களுடைய கன்னத்தின் வெண்மையை நான் (அப்போது) காண்பது வழக்கம்.

அறிவிப்பாளர் : ஸஅத் பின் அபீவக்காஸ் (ரலி)

அத்தியாயம்: 5, பாடம்: 23, ஹதீஸ் எண்: 915

و حَدَّثَنِي ‏ ‏أَحْمَدُ بْنُ حَنْبَلٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ سَعِيدٍ ‏ ‏عَنْ ‏ ‏شُعْبَةَ ‏ ‏عَنْ ‏ ‏الْحَكَمِ ‏ ‏عَنْ ‏ ‏مُجَاهِدٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي مَعْمَرٍ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ ‏ ‏قَالَ ‏ ‏شُعْبَةُ ‏ ‏رَفَعَهُ مَرَّةً ‏:‏

أَنَّ أَمِيرًا أَوْ رَجُلًا سَلَّمَ تَسْلِيمَتَيْنِ فَقَالَ ‏ ‏عَبْدُ اللَّهِ ‏ ‏أَنَّى ‏ ‏عَلِقَهَا

ஒருவர்/ஓர் ஆட்சியாளர் (தொழுகையை முடிக்கும்போது) இருமுறை ஸலாம் கூறுபவராயிருந்தார். (இதைக் கண்ட) அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி), “இந்த (வழி)முறையை இவர் அறிந்ததெப்படி?” என்று கேட்டார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு மஸ்ஊத் (ரலி) வழியாக அபூமஅமர் (ரஹ்)

அத்தியாயம்: 5, பாடம்: 23, ஹதீஸ் எண்: 914

‏حَدَّثَنَا ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ سَعِيدٍ ‏ ‏عَنْ ‏ ‏شُعْبَةَ ‏ ‏عَنْ ‏ ‏الْحَكَمِ ‏ ‏وَمَنْصُورٍ ‏ ‏عَنْ ‏ ‏مُجَاهِدٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي مَعْمَرٍ :‏‏

أَنَّ أَمِيرًا كَانَ ‏ ‏بِمَكَّةَ ‏ ‏يُسَلِّمُ تَسْلِيمَتَيْنِ فَقَالَ ‏ ‏عَبْدُ اللَّهِ ‏ ‏أَنَّى ‏ ‏عَلِقَهَا ‏ ‏


قَالَ ‏ ‏الْحَكَمُ ‏ ‏فِي حَدِيثِهِ إِنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏كَانَ يَفْعَلُهُ

மக்காவின் ஆட்சியாளராக இருந்த ஒருவர் (தொழுகையை முடிக்கும்போது) இருமுறை ஸலாம் கூறுபவராயிருந்தார். (இதைக் கண்ட) அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி), “இந்த(ப் புதுவழி)முறையை இவர் அறிந்ததெப்படி?” என்று கேட்டார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு மஸ்ஊத் (ரலி) வழியாக அபூமஅமர் (ரஹ்)


குறிப்பு :

ஹகம் (ரஹ்) வழி அறிவிப்பில் கூடுதலாக, “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) இவ்வாறுதான் செய்வார்கள்” என்று அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரலி) கூறியதாக இடம் பெற்றுள்ளது.