அத்தியாயம்: 5, பாடம்: 14, ஹதீஸ் எண்: 853

حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏وَأَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَعَمْرٌو النَّاقِدُ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏سُفْيَانَ ‏ ‏قَالَ ‏ ‏يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ ‏ ‏عَنْ ‏ ‏الزُّهْرِيِّ ‏ ‏عَنْ ‏ ‏حُمَيْدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ : ‏

أَنَّ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏رَأَى ‏ ‏نُخَامَةً ‏ ‏فِي قِبْلَةِ الْمَسْجِدِ فَحَكَّهَا بِحَصَاةٍ ثُمَّ نَهَى أَنْ يَبْزُقَ الرَّجُلُ عَنْ يَمِينِهِ أَوْ أَمَامَهُ وَلَكِنْ يَبْزُقُ عَنْ يَسَارِهِ أَوْ تَحْتَ قَدَمِهِ الْيُسْرَى ‏


‏ ‏حَدَّثَنِي ‏ ‏أَبُو الطَّاهِرِ ‏ ‏وَحَرْمَلَةُ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏عَنْ ‏ ‏يُونُسَ ‏ ‏قَالَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏كِلَاهُمَا ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏عَنْ ‏ ‏حُمَيْدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ ‏ ‏أَنَّ ‏ ‏أَبَا هُرَيْرَةَ ‏ ‏وَأَبَا سَعِيدٍ ‏ ‏أَخْبَرَاهُ ‏ ‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏رَأَى ‏ ‏نُخَامَةً ‏ ‏بِمِثْلِ حَدِيثِ ‏ ‏ابْنِ عُيَيْنَةَ ‏

நபி (ஸல்), பள்ளிவாசலின் கிப்லாத் திசையில் (காறி உமிழப்பட்டிருந்த) சளியைக் கண்டு, ஒரு சிறுகல் மூலம் அதைச் சுரண்டி (சுத்தப்படுத்தி)னார்கள். பிறகு, “ஒருவர் (தொழும்போது உமிழ வேண்டிய அவசியம் ஏற்பட்டால்) தமது வலப்பக்கத்தில் அல்லது முன்பக்கத்தில் உமிழ வேண்டாம்; மாறாக, தமது இடப்பக்கத்தில் அல்லது தம் பாதங்களுக்கு அடியில் அவர் உமிழ்ந்து கொள்ளட்டும்” என்று கூறி(எதிரிலும் வலப்பக்கத்திலும் உமிழ)த் தடை விதித்தார்கள்.

அறிவிப்பாளர் : அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)

அத்தியாயம்: 5, பாடம்: 14, ஹதீஸ் எண்: 852

حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى التَّمِيمِيُّ ‏ ‏قَالَ قَرَأْتُ عَلَى ‏ ‏مَالِكٍ ‏ ‏عَنْ ‏ ‏نَافِعٍ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ: ‏

أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏رَأَى بُصَاقًا فِي جِدَارِ الْقِبْلَةِ فَحَكَّهُ ثُمَّ أَقْبَلَ عَلَى النَّاسِ فَقَالَ ‏ ‏إِذَا كَانَ أَحَدُكُمْ ‏ ‏يُصَلِّي فَلَا يَبْصُقْ ‏ ‏قِبَلَ ‏ ‏وَجْهِهِ فَإِنَّ اللَّهَ ‏ ‏قِبَلَ ‏ ‏وَجْهِهِ إِذَا صَلَّى ‏


‏حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ نُمَيْرٍ ‏ ‏وَأَبُو أُسَامَةَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏ابْنُ نُمَيْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏عُبَيْدِ اللَّهِ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ ‏ ‏وَمُحَمَّدُ بْنُ رُمْحٍ ‏ ‏عَنْ ‏ ‏اللَّيْثِ بْنِ سَعْدٍ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏إِسْمَعِيلُ يَعْنِي ابْنَ عُلَيَّةَ ‏ ‏عَنْ ‏ ‏أَيُّوبَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏ابْنُ رَافِعٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ أَبِي فُدَيْكٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏الضَّحَّاكُ يَعْنِي ابْنَ عُثْمَانَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏هَارُونُ بْنُ عَبْدِ اللَّهِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حَجَّاجُ بْنُ مُحَمَّدٍ ‏ ‏قَالَ قَالَ ‏ ‏ابْنُ جُرَيْجٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏مُوسَى بْنُ عُقْبَةَ ‏ ‏كُلُّهُمْ ‏ ‏عَنْ ‏ ‏نَافِعٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عُمَرَ ‏ ‏عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَنَّهُ رَأَى ‏ ‏نُخَامَةً ‏ ‏فِي قِبْلَةِ الْمَسْجِدِ ‏ ‏إِلَّا ‏ ‏الضَّحَّاكَ ‏ ‏فَإِنَّ فِي حَدِيثِهِ ‏ ‏نُخَامَةً ‏ ‏فِي الْقِبْلَةِ بِمَعْنَى حَدِيثِ ‏ ‏مَالِكٍ ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (பள்ளிவாசலின்) கிப்லாத் திசையிலுள்ள சுவரில் (ஒருநாள்) எச்சிலைக் கண்டார்கள். அதைச் சுரண்டி(சுத்தப்படுத்தி)ய பின் மக்களை நோக்கி, “உங்களில் ஒருவர் தொழும்போது தமது முகத்துக்கெதிரே (கிப்லாத் திசையில்) எச்சில் துப்ப வேண்டாம். ஏனெனில், அவர் தொழும்போது அல்லாஹ் அவருடைய முகத்துக்கெதிரே இருக்கின்றான்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)


குறிப்புகள் :

நாஃபிஉ (ரஹ்) வழி அறிவிப்பில், “… கிப்லாத் திசையில் (உமிழப்பட்டிருந்த) சளியைக் கண்டார்கள் …” என ஹதீஸ் தொடங்குகிறது.

ளஹ்ஹாக் பின் உஸ்மான் (ரஹ்) வழி அறிவிப்பில், “… கிப்லாத் திசையில் (காறித் துப்பப்பட்டிருந்த) சளியைக் கண்டார்கள் …” என இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 5, பாடம்: 13, ஹதீஸ் எண்: 851

و حَدَّثَنَاه ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏الْحَسَنُ بْنُ مُوسَى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شَيْبَانُ ‏ ‏عَنْ ‏ ‏يَحْيَى ‏ ‏عَنْ ‏ ‏أَبِي سَلَمَةَ ‏ ‏قَالَ حَدَّثَنِي ‏ ‏مُعَيْقِيبٌ : بٌ

‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ فِي الرَّجُلِ يُسَوِّي التُّرَابَ حَيْثُ يَسْجُدُ قَالَ ‏ ‏إِنْ كُنْتَ فَاعِلًا فَوَاحِدَةً

ஸஜ்தாச் செய்வதற்காகத் தரைமண்ணைச் சமப்படுத்திய ஒருவரிடம், “நீர் இவ்வாறு செய்வதாயின் ஒருதடவை மட்டும் செய்து கொள்வீராக” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) சொன்னார்கள்.

அறிவிப்பாளர் : முஐகீப் (ரலி)

அத்தியாயம்: 5, பாடம்: 13, ஹதீஸ் எண்: 850

حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ سَعِيدٍ ‏ ‏عَنْ ‏ ‏هِشَامٍ ‏ ‏قَالَ حَدَّثَنِي ‏ ‏ابْنُ أَبِي كَثِيرٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي سَلَمَةَ ‏ ‏عَنْ ‏ ‏مُعَيْقِيبٍ:‏

‏أَنَّهُمْ ‏ ‏سَأَلُوا النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏عَنْ الْمَسْحِ فِي الصَّلَاةِ فَقَالَ وَاحِدَةً ‏


‏و حَدَّثَنِيهِ ‏ ‏عُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ الْقَوَارِيرِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏خَالِدٌ يَعْنِي ابْنَ الْحَارِثِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏هِشَامٌ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ وَقَالَ فِيهِ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏مُعَيْقِيبٌ ‏ ‏ح ‏

தொழுகையில் (ஸஜ்தாச் செய்யுமிடத்தில் கிடக்கும்) சிறு கற்களை அகற்றுவது பற்றி நபி (ஸல்) அவர்களிடம் மக்கள் கேட்டனர். அதற்கு அவர்கள், “ஒரு தடவை மட்டும் (செய்து கொள்ளுங்கள்)” என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பாளர் : முஐகீப் (ரலி)

அத்தியாயம்: 5, பாடம்: 13, ஹதீஸ் எண்: 849

حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏وَكِيعٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏هِشَامٌ الدَّسْتَوَائِيُّ ‏ ‏عَنْ ‏ ‏يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي سَلَمَةَ ‏ ‏عَنْ ‏ ‏مُعَيْقِيبٍ ‏ ‏قَالَ :‏‏

‏ذَكَرَ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏الْمَسْحَ فِي الْمَسْجِدِ ‏ ‏يَعْنِي الْحَصَى قَالَ ‏ ‏إِنْ كُنْتَ لَا بُدَّ فَاعِلًا فَوَاحِدَةً

நபி (ஸல்) அவர்களிடம் தொழுகையில் (ஸஜ்தாச் செய்யுமிடத்தில் கிடக்கும்) சிறு கற்களை அப்புறப்படுத்துவது பற்றி மக்கள் கேட்டனர். அதற்கு அவர்கள், “கட்டாயம் எனில், ஒரு தடவை மட்டும் (செய்து கொள்ளுங்கள்)” என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பாளர் : முஐகீப் (ரலி)

அத்தியாயம்: 5, பாடம்: 12, ஹதீஸ் எண்: 848

و حَدَّثَنِي ‏ ‏الْحَكَمُ بْنُ مُوسَى الْقَنْطَرِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ ‏ ‏قَالَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو خَالِدٍ ‏ ‏وَأَبُو أُسَامَةَ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏هِشَامٍ ‏ ‏عَنْ ‏ ‏مُحَمَّدٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ :‏

عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَنَّهُ ‏ ‏نَهَى أَنْ يُصَلِّيَ الرَّجُلُ ‏ ‏مُخْتَصِرًا


‏وَفِي رِوَايَةِ ‏ ‏أَبِي بَكْرٍ ‏ ‏قَالَ نَهَى رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ

இடுப்பில் கையூன்றிக் கொண்டு தொழுவதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தடை விதித்தார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

அத்தியாயம்: 5, பாடம்: 11, ஹதீஸ் எண்: 847

حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏وَقُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏كِلَاهُمَا ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ الْعَزِيزِ ‏ ‏قَالَ ‏ ‏يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏عَبْدُ الْعَزِيزِ بْنُ أَبِي حَازِمٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ :‏

‏أَنَّ نَفَرًا جَاءُوا إِلَى ‏ ‏سَهْلِ بْنِ سَعْدٍ ‏ ‏قَدْ ‏ ‏تَمَارَوْا ‏ ‏فِي الْمِنْبَرِ مِنْ أَيِّ عُودٍ هُوَ فَقَالَ أَمَا وَاللَّهِ إِنِّي لَأَعْرِفُ مِنْ أَيِّ عُودٍ هُوَ وَمَنْ عَمِلَهُ وَرَأَيْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَوَّلَ يَوْمٍ جَلَسَ عَلَيْهِ قَالَ فَقُلْتُ لَهُ يَا ‏ ‏أَبَا عَبَّاسٍ ‏ ‏فَحَدِّثْنَا قَالَ أَرْسَلَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِلَى ‏ ‏امْرَأَةٍ ‏ ‏قَالَ ‏ ‏أَبُو حَازِمٍ ‏ ‏إِنَّهُ لَيُسَمِّهَا يَوْمَئِذٍ ‏ ‏انْظُرِي ‏ ‏غُلَامَكِ ‏ ‏النَّجَّارَ يَعْمَلْ لِي ‏ ‏أَعْوَادًا أُكَلِّمُ النَّاسَ عَلَيْهَا فَعَمِلَ هَذِهِ الثَّلَاثَ دَرَجَاتٍ ثُمَّ أَمَرَ بِهَا رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَوُضِعَتْ هَذَا الْمَوْضِعَ فَهِيَ مِنْ طَرْفَاءِ ‏ ‏الْغَابَةِ ‏ ‏وَلَقَدْ رَأَيْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَامَ عَلَيْهِ فَكَبَّرَ وَكَبَّرَ النَّاسُ وَرَاءَهُ وَهُوَ عَلَى الْمِنْبَرِ ثُمَّ رَفَعَ فَنَزَلَ الْقَهْقَرَى حَتَّى سَجَدَ فِي أَصْلِ الْمِنْبَرِ ثُمَّ عَادَ حَتَّى فَرَغَ مِنْ آخِرِ صَلَاتِهِ ثُمَّ أَقْبَلَ عَلَى النَّاسِ فَقَالَ يَا أَيُّهَا النَّاسُ إِنِّي صَنَعْتُ هَذَا لِتَأْتَمُّوا بِي وَلِتَعَلَّمُوا صَلَاتِي


حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَعْقُوبُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ مُحَمَّدِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدٍ الْقَارِيُّ الْقُرَشِيُّ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏أَبُو حَازِمٍ ‏ ‏أَنَّ ‏ ‏رِجَالًا أَتَوْا ‏ ‏سَهْلَ بْنَ سَعْدٍ ‏ ‏قَالَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَزُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏وَابْنُ أَبِي عُمَرَ ‏ ‏قَالُوا حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي حَازِمٍ ‏ ‏قَالَ أَتَوْا ‏ ‏سَهْلَ بْنَ سَعْدٍ ‏ ‏فَسَأَلُوهُ مِنْ أَيِّ شَيْءٍ مِنْبَرُ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَسَاقُوا الْحَدِيثَ ‏ ‏نَحْوَ حَدِيثِ ‏ ‏ابْنِ أَبِي حَازِمٍ ‏

ஸஹ்லிப்னு ஸஅத் (ரலி) அவர்களிடம் சிலர் வந்து, “(நபியவர்களின் சொற்பொழிவு மேடை) மிம்பரை உருவாக்குவதற்குப் பயன்பட்ட மரம் எது?” என்று சர்ச்சையில் ஈடுபட்டனர். அப்போது ஸஹ்லு (ரலி), “அறிந்து கொள்ளுங்கள்! அல்லாஹ்வின் மீதாணையாக! அது எந்த மரத்தால் செய்யப்பட்டது? அதைச் செய்தவர் யார்? என்பதை நான் நன்கறிவேன். அதன்மீது அல்லாஹ்வின் தூதர் (ஸல்)  முதல்நாளில் அமர்ந்ததை நான் பார்த்திருக்கின்றேன்” என்று கூறினார்கள். நான், “அபூஅப்பாஸ் (ஸஹ்லிப்னு ஸஅத்) அவர்களே! அது பற்றி எங்களுக்கு(விவரமாக)ச் சொல்லுங்கள்” என்று வேண்டினேன். அப்போது அவர்கள்,

“அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ஒரு பெண்மணிக்கு ஆளனுப்பி (அவரை வரவழைத்து), ‘நான் அமர்ந்து மக்களுக்கு உரையாற்றுவதற்காக உன் தச்சு வேலையாளிடம் எனக்காக மரச்சட்டங்களை(இணைத்து மிம்பர் ஒன்றை)ச் செய்யச் சொல்வாயாக!’ என்று கூறியதற்கு ஒப்ப, மூன்று படிகள் கொண்ட இந்த மிம்பரை அந்தத் தச்சர் செய்தார். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது உத்தரவுப்படி, அது (மஸ்ஜிதுந் நபவீ பள்ளிவாசலில்) இந்த இடத்தில் வைக்கப்பட்டது. அது அல்ஃகாபாக் காட்டின் ஒருவகை சவுக்கு மரத்தால் செய்யப்பட்டது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அந்த மேடைமீது (தொழுவதற்காக) நின்று தக்பீர் கூறினார்கள். அவர்களுக்குப் பின்னாலிருந்து மக்கள் தக்பீர் கூறினர். பிறகு (ருகூஉவிலிருந்து) நிமிர்ந்ததும் திரும்பாமல் அப்படியே பின்வாக்கில் இறங்கி அந்த மேடையின் கீழ்ப் பகுதி(க்கருகில் தரையில்) சஜ்தாச் செய்தார்கள். பிறகு முன்போன்றே மீண்டும் (அந்த மேடையில் ஏறியும் இறங்கியும்) இறுதிவரை தொழுதார்கள். பின்னர் மக்களை முன்னோக்கி, ‘மக்களே! நீங்கள் என்னைப் பின்பற்றவும் எனது தொழுகையை நீங்கள் கற்றுக் கொள்ளவுமே இவ்வாறு நான் செய்தேன்’ என்று விளக்கினார்கள்” என்று ஸஹ்லிப்னு ஸஅத் (ரலி) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : ஸஹ்லிப்னு ஸஅத் (ரலி)


குறிப்பு :

அபூஹாஸிம் வழி அறிவிப்பு, “… மக்கள் (சிலர்) ஸஹ்லிப்னு ஸஅத் (ரலி) அவர்களிடம் வந்து, நபி (ஸல்) அவர்களின் சொற்பொழிவு மேடை (மிம்பர்) எந்த மரத்தால் செய்யப்பட்டது? என்று கேட்டனர் …” என்று தொடங்குகிறது. இடையில், தச்சரின் எஜமானியான அப்பெண்ணின் பெயரை ஸஹ்லு (ரலி) குறிப்பிட்டதாகவும் இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 5, பாடம்: 10, ஹதீஸ் எண்: 846

حَدَّثَنِي ‏ ‏أَبُو الطَّاهِرِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏عَنْ ‏ ‏مَخْرَمَةَ بْنِ بُكَيْرٍ ‏ ‏قَالَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏هَارُونُ بْنُ سَعِيدٍ الْأَيْلِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏مَخْرَمَةُ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏عَمْرِو بْنِ سُلَيْمٍ الزُّرَقِيِّ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏أَبَا قَتَادَةَ الْأَنْصَارِيَّ ‏ ‏يَقُولُ :‏ ‏

رَأَيْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يُصَلِّي لِلنَّاسِ ‏ ‏وَأُمَامَةُ بِنْتُ أَبِي الْعَاصِ ‏ ‏عَلَى عُنُقِهِ فَإِذَا سَجَدَ وَضَعَهَا ‏


حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏لَيْثٌ ‏ ‏قَالَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرٍ الْحَنَفِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الْحَمِيدِ بْنُ جَعْفَرٍ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏سَعِيدٍ الْمَقْبُرِيِّ ‏ ‏عَنْ ‏ ‏عَمْرِو بْنِ سُلَيْمٍ الزُّرَقِيِّ ‏ ‏سَمِعَ ‏ ‏أَبَا قَتَادَةَ ‏ ‏يَقُولُا ‏ ‏بَيْنَا نَحْنُ فِي الْمَسْجِدِ جُلُوسٌ خَرَجَ عَلَيْنَا رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بِنَحْوِ حَدِيثِهِمْ غَيْرَ أَنَّهُ لَمْ يَذْكُرْ أَنَّهُ أَمَّ النَّاسَ فِي تِلْكَ الصَّلَاةِ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), (தம் பேத்தி) உமாமா பின்த்தி அபில்ஆஸைத் தமது கழுத்தின் மீது சுமந்துவாறு மக்களுக்குத் தொழுவித்துக் கொண்டிருந்ததை நான் பார்த்தேன். அவர்கள் ஸஜ்தாவிற்குச் செல்லும்போது உமாமாவைக் கீழே இறக்கிவிட்டார்கள்.

அறிவிப்பாளர் : அபூகத்தாதா அல்-அன்ஸாரீ (ரலி)


குறிப்பு :

ஸயீத் அல்-மக்பரீ (ரஹ்) வழி அறிவிப்பில், “நாங்கள் பள்ளிவாசலில் அமர்ந்திருந்தோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) எங்களிடம் வந்தார்கள் …” என ஹதீஸ் ஆரம்பமாகிறது. ஆனால் நபி (ஸல்) “… அத்தொழுகையை மக்களுக்குத் தொழுவித்தார்கள்” என்ற குறிப்பு இல்லை.

அத்தியாயம்: 5, பாடம்: 10, ஹதீஸ் எண்: 845

حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ أَبِي عُمَرَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ ‏ ‏عَنْ ‏ ‏عُثْمَانَ بْنِ أَبِي سُلَيْمَانَ ‏ ‏وَابْنِ عَجْلَانَ ‏ ‏سَمِعَا ‏ ‏عَامِرَ بْنَ عَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ ‏ ‏يُحَدِّثُ عَنْ ‏ ‏عَمْرِو بْنِ سُلَيْمٍ الزُّرَقِيِّ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي قَتَادَةَ الْأَنْصَارِيِّ ‏ ‏قَالَ :‏

‏رَأَيْتُ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَؤُمُّ النَّاسَ ‏ ‏وَأُمَامَةُ بِنْتُ أَبِي الْعَاصِ ‏ ‏وَهِيَ ابْنَةُ ‏ ‏زَيْنَبَ بِنْتِ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏عَلَى عَاتِقِهِ فَإِذَا رَكَعَ وَضَعَهَا وَإِذَا رَفَعَ مِنْ السُّجُودِ أَعَادَهَا

நபி (ஸல்), தம் மகள் ஸைனப்-அபுல்ஆஸ் பின் அர்ரபீஉ தம்பதியருக்குப் பிறந்த (தம் பேத்தி) உமாமாவைத் தமது தோளில் சுமந்துகொண்டு மக்களுக்குத் தலைமை தாங்கித் தொழுவித்ததை நான் பார்த்திருக்கின்றேன். அவர்கள் ருகூஉக்குச் செல்லும்போது உமாமாவைக் கீழே இறக்கிவிட்டார்கள். ஸஜ்தாவிலிருந்து எழுந்துவிட்டால் மீண்டும் உமாமாவைத் தமது தோளில் அமர்த்திக் கொண்டார்கள்.

அறிவிப்பாளர் : அபூகத்தாதா அல்-அன்ஸாரீ (ரலி)

அத்தியாயம்: 5, பாடம்: 10, ஹதீஸ் எண்: 844

حَدَّثَنَا ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ بْنِ قَعْنَبٍ ‏ ‏وَقُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏مَالِكٌ ‏ ‏عَنْ ‏ ‏عَامِرِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏قَالَ قُلْتُ ‏ ‏لِمَالِكٍ ‏ ‏حَدَّثَكَ ‏ ‏عَامِرُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ ‏ ‏عَنْ ‏ ‏عَمْرِو بْنِ سُلَيْمٍ الزُّرَقِيِّ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي قَتَادَةَ :‏

‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏كَانَ ‏ ‏يُصَلِّي وَهُوَ حَامِلٌ ‏ ‏أُمَامَةَ بِنْتَ زَيْنَبَ بِنْتِ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَلِأَبِي الْعَاصِ بْنِ الرَّبِيعِ ‏ ‏فَإِذَا قَامَ حَمَلَهَا وَإِذَا سَجَدَ وَضَعَهَا ‏ ‏قَالَ ‏ ‏يَحْيَى ‏ ‏قَالَ ‏ ‏مَالِكٌ ‏ ‏نَعَمْ ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (தம் பேத்தியான குழந்தை) உமாமாவை(த்தம் தோளில்) சுமந்து கொண்டு தொழுவார்கள். உமாமா, நபி (ஸல்) அவர்களின் மகள் ஸைனபு-அபுல்ஆஸ் பின் அர்ரபீஉ தம்பதியரின் மகளாவார். அவர்கள் (நிலையில்) நிற்கும்போது உமாமாவைச் சுமந்திருப்பார்கள். ஸஜ்தாவுக்குச் செல்லும்போது உமாமாவைக் கீழே இறக்கிவிடுவார்கள்.

அறிவிப்பாளர் : அபூகத்தாதா (ரலி)


குறிப்பு:

“இந்த ஹதீஸை, அபூகத்தாதா (ரலி) அவர்களிடமிருந்து >அம்ரு பின் ஸுலைம் அஸ்ஸுரைக் (ரஹ்) அவர்களும் அம்ரு அவர்களிடமிருந்து > ஆமிர் பின் அப்தில்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்களும் > உங்களுக்கு அறிவித்தார்களா? என்று மாலிக் (ரஹ்) அவர்களிடம் நான் கேட்டேன். அதற்கவர்கள் ஆம் என்றார்கள்” என்று யஹ்யா பின் யஹ்யா (ரஹ்) கூறியதாகக் குறிப்பிடப்படுகின்றது.