அத்தியாயம்: 5, பாடம்: 09, ஹதீஸ் எண்: 843

حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ سَلَمَةَ الْمُرَادِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ ‏ ‏عَنْ ‏ ‏مُعَاوِيَةَ بْنِ صَالِحٍ ‏ ‏يَقُولُ حَدَّثَنِي ‏ ‏رَبِيعَةُ بْنُ يَزِيدَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي إِدْرِيسَ الْخَوْلَانِيِّ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي الدَّرْدَاءِ ‏ ‏قَالَ :‏‏

‏قَامَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَسَمِعْنَاهُ يَقُولُ ‏ ‏أَعُوذُ بِاللَّهِ مِنْكَ ثُمَّ قَالَ أَلْعَنُكَ بِلَعْنَة اللَّهِ ثَلَاثًا وَبَسَطَ يَدَهُ كَأَنَّهُ يَتَنَاوَلُ شَيْئًا فَلَمَّا فَرَغَ مِنْ الصَّلَاةِ قُلْنَا يَا رَسُولَ اللَّهِ قَدْ سَمِعْنَاكَ تَقُولُ فِي الصَّلَاةِ شَيْئًا لَمْ نَسْمَعْكَ تَقُولُهُ قَبْلَ ذَلِكَ وَرَأَيْنَاكَ بَسَطْتَ يَدَكَ قَالَ إِنَّ عَدُوَّ اللَّهِ إِبْلِيسَ جَاءَ بِشِهَابٍ مِنْ نَارٍ لِيَجْعَلَهُ فِي وَجْهِي فَقُلْتُ أَعُوذُ بِاللَّهِ مِنْكَ ثَلَاثَ مَرَّاتٍ ثُمَّ قُلْتُ أَلْعَنُكَ بِلَعْنَةِ اللَّهِ التَّامَّةِ فَلَمْ يَسْتَأْخِرْ ثَلَاثَ مَرَّاتٍ ثُمَّ أَرَدْتُ أَخْذَهُ وَاللَّهِ لَوْلَا دَعْوَةُ أَخِينَا ‏ ‏سُلَيْمَانَ ‏ ‏لَأَصْبَحَ مُوثَقًا يَلْعَبُ بِهِ وِلْدَانُ أَهْلِ ‏ ‏الْمَدِينَةِ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (ஒரு நாள்) தொழும்போது, “நான் உன்னிடமிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருகின்றேன்” என்றும் “அல்லாஹ்வின் சாபத்தால் உன்னை நான் சபிக்கின்றேன்” என்றும் மூன்றுமுறை கூறியதை நாங்கள் செவியுற்றோம். மேலும், அவர்கள் தமது கரத்தை விரித்து எதையோ பிடிப்பதைப் போன்று சைகை செய்தார்கள். தொழுது முடித்ததும் நாங்கள், “அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் தொழும்போது, நாங்கள் இதுவரைச் செவியுறாத ஒன்றைக் கூறினீர்கள். மேலும், நீங்கள் உங்கள் கரத்தை விரித்ததையும் நாங்கள் கண்டோம்” என்று கேட்டோம். அதற்கு அவர்கள், “அல்லாஹ்வின் எதிரி இப்லீஸ் ஒரு தீப்பந்தத்தை ஏந்திக் கொண்டு அதை என் முகத்தில் வைக்க (என்னிடம்) வந்தான். உடனே நான் உன்னிடமிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருகின்றேன் என்று மூன்று முறையும் அல்லாஹ்வின் முழு சாபத்தால் உன்னை நான் சபிக்கின்றேன் என மூன்று முறையும் கூறினேன். ஆனால், அவன் பின்வாங்கிச் செல்லவில்லை. பிறகு நான் அவனைப் பிடிக்க நினைத்தேன். அல்லாஹ்வின் மீதாணையாக! எம் சகோதரர் ஸுலைமான் (அலை) அவர்களின் வேண்டுதல் மட்டும் இல்லையாயின், காலையில் மதீனத்துச் சிறுவர்கள் அவனைச் சீண்டி விளையாடும் வகையில் (இந்தப் பள்ளிவாசலில்) அவன் கட்டிவைக்கப்பட்டிருப்பான்” என்று சொன்னார்கள்.

அறிவிப்பாளர் : அபுத்தர்தா (ரலி)

அத்தியாயம்: 5, பாடம்: 09, ஹதீஸ் எண்: 842

حَدَّثَنَا ‏ ‏إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏وَإِسْحَقُ بْنُ مَنْصُورٍ ‏ ‏قَالَا أَخْبَرَنَا ‏ ‏النَّضْرُ بْنُ شُمَيْلٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدٌ وَهُوَ ابْنُ زِيَادٍ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏أَبَا هُرَيْرَةَ ‏ ‏يَقُولُ :‏ ‏

‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِنَّ عِفْرِيتًا مِنْ الْجِنِّ جَعَلَ ‏ ‏يَفْتِكُ ‏ ‏عَلَيَّ الْبَارِحَةَ لِيَقْطَعَ عَلَيَّ الصَّلَاةَ وَإِنَّ اللَّهَ أَمْكَنَنِي مِنْهُ ‏ ‏فَذَعَتُّهُ ‏ ‏فَلَقَدْ هَمَمْتُ أَنْ أَرْبِطَهُ إِلَى جَنْبِ سَارِيَةٍ مِنْ سَوَارِي الْمَسْجِدِ حَتَّى تُصْبِحُوا تَنْظُرُونَ إِلَيْهِ أَجْمَعُونَ أَوْ كُلُّكُمْ ثُمَّ ذَكَرْتُ قَوْلَ أَخِي ‏ ‏سُلَيْمَانَ ‏ ‏رَبِّ اغْفِرْ لِي ‏ ‏وَهَبْ لِي مُلْكًا لَا يَنْبَغِي لِأَحَدٍ مِنْ بَعْدِي ‏فَرَدَّهُ اللَّهُ ‏ ‏خَاسِئًا ‏


‏و قَالَ ‏ ‏ابْنُ مَنْصُورٍ ‏ ‏شُعْبَةُ ‏ ‏عَنْ ‏ ‏مُحَمَّدِ بْنِ زِيَادٍ ‏ ‏ح ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ بَشَّارٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدٌ هُوَ ابْنُ جَعْفَرٍ ‏ ‏قَالَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَاه ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شَبَابَةُ ‏ ‏كِلَاهُمَا ‏ ‏عَنْ ‏ ‏شُعْبَةَ ‏ ‏فِي هَذَا الْإِسْنَادِ ‏ ‏وَلَيْسَ فِي حَدِيثِ ‏ ‏ابْنِ جَعْفَرٍ ‏ ‏قَوْلُهُ ‏ ‏فَذَعَتُّهُ ‏ ‏وَأَمَّا ‏ ‏ابْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏فَقَالَ فِي رِوَايَتِهِ ‏ ‏فَدَعَتُّهُ

“நேற்றிரவு ஒரு முரட்டு ஜின் எனது தொழுகையைக் கெடுக்க சதி செய்தது. அல்லாஹ் அதை வெல்வதற்கு எனக்கு சக்தியளித்தான். அதன் குரல்வளையை நான் பிடித்துவிட்டேன். காலையில் எல்லாரும்/நீங்கள் எல்லாரும் வந்து அதைக் காணும்வரை இந்த (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலின் தூண்களில் ஒன்றில் அதைக் கட்டிவைக்க முடிவு செய்தேன். பிறகு என் சகோதரர் ஸுலைமான் (அலை), ‘இறைவா! என்னை மன்னித்துவிடுவாயாக! மேலும் எனக்குப்பின் வேறெவருக்கும் கிடைக்காத ஓர் ஆளுமையை எனக்கு நீ வழங்குவாயாக!’ (38:35) என்று வேண்டியது என் நினைவுக்கு வந்தது. ஆகவே, (எனது முடிவைக் கைவிட்டேன். பின்னர்) அல்லாஹ் அந்த ஜின்னை இழிந்த நிலையில் விரட்டியடித்துவிட்டான்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)


குறிப்பு :

இந்த ஹதீஸின் முஹம்மது பின் ஜஅஃபர் (ரஹ்) வழி அறிவிப்பில், “நான் அதன் குரல்வளையைப் பிடித்துவிட்டேன்” என்பது இடம்பெறவில்லை. அபூபக்ரு பின் அபீஷைபா (ரஹ்) வழி அறிவிப்பில், “நான் அதை வலுவாகப் பிடித்துத் தள்ளிவிட்டேன்” என்று இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 5, பாடம்: 08, ஹதீஸ் எண்: 841

حَدَّثَنَا ‏ ‏أَبُو كَامِلٍ الْجَحْدَرِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حَمَّادُ بْنُ زَيْدٍ ‏ ‏عَنْ ‏ ‏كَثِيرٍ ‏ ‏عَنْ ‏ ‏عَطَاءٍ ‏ ‏عَنْ ‏ ‏جَابِرٍ ‏ ‏قَالَ ‏:‏

كُنَّا مَعَ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَبَعَثَنِي فِي حَاجَةٍ فَرَجَعْتُ وَهُوَ ‏ ‏يُصَلِّي عَلَى رَاحِلَتِهِ وَوَجْهُهُ عَلَى غَيْرِ الْقِبْلَةِ فَسَلَّمْتُ عَلَيْهِ فَلَمْ يَرُدَّ عَلَيَّ فَلَمَّا انْصَرَفَ قَالَ ‏ ‏إِنَّهُ لَمْ يَمْنَعْنِي أَنْ أَرُدَّ عَلَيْكَ إِلَّا أَنِّي كُنْتُ أُصَلِّي ‏


‏و حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ حَاتِمٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُعَلَّى بْنُ مَنْصُورٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الْوَارِثِ بْنُ سَعِيدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏كَثِيرُ بْنُ شِنْظِيرٍ ‏ ‏عَنْ ‏ ‏عَطَاءٍ ‏ ‏عَنْ ‏ ‏جَابِرٍ ‏ ‏قَالَ ‏ ‏بَعَثَنِي رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فِي حَاجَةٍ ‏ ‏بِمَعْنَى حَدِيثِ ‏ ‏حَمَّادٍ

நாங்கள் (பனூ முஸ்தலிக் பயணத்தின் போது) நபி (ஸல்) அவர்களுடன் இருந்தோம். இடையே, அவர்கள் என்னை வேறொரு வேலையாக அனுப்பினார்கள். நான் (அந்த வேலையை முடித்துத்) திரும்பி வந்தபோது அவர்கள் தமது வாகன(ஒட்டக)த்தில் இறையில்லம் கஅபா அல்லாத வேறொரு திசையை நோக்கி அமர்ந்தவாறு (கூடுதலான தொழுகையைத்) தொழுது கொண்டிருந்தார்கள். நான் அவர்களுக்கு ஸலாம் சொன்னேன். ஆனால் அவர்கள் எனக்கு பதில் ஸலாம் சொல்லவில்லை அவர்கள் தொழுது முடித்ததும், “நான் தொழுது கொண்டிருந்ததுதான் உங்களுக்கு பதில் ஸலாம் கூறவிடாமல் என்னைத் தடுத்தது” என்றார்கள்.

அறிவிப்பாளர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)

அத்தியாயம்: 5, பாடம்: 08, ஹதீஸ் எண்: 840

حَدَّثَنَا ‏ ‏أَحْمَدُ بْنُ يُونُسَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏زُهَيْرٌ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏أَبُو الزُّبَيْرِ ‏ ‏عَنْ ‏ ‏جَابِرٍ ‏ ‏قَالَ :‏‏

‏أَرْسَلَنِي رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَهُوَ مُنْطَلِقٌ إِلَى ‏ ‏بَنِي الْمُصْطَلِقِ ‏ ‏فَأَتَيْتُهُ وَهُوَ ‏ ‏يُصَلِّي عَلَى بَعِيرِهِ فَكَلَّمْتُهُ فَقَالَ لِي ‏ ‏بِيَدِهِ هَكَذَا وَأَوْمَأَ ‏ ‏زُهَيْرٌ ‏ ‏بِيَدِهِ ثُمَّ كَلَّمْتُهُ فَقَالَ لِي ‏ ‏هَكَذَا فَأَوْمَأَ ‏ ‏زُهَيْرٌ ‏ ‏أَيْضًا بِيَدِهِ نَحْوَ الْأَرْضِ وَأَنَا أَسْمَعُهُ يَقْرَأُ يُومِئُ بِرَأْسِهِ فَلَمَّا فَرَغَ قَالَ ‏ ‏مَا فَعَلْتَ فِي الَّذِي أَرْسَلْتُكَ لَهُ فَإِنَّهُ لَمْ يَمْنَعْنِي أَنْ أُكَلِّمَكَ إِلَّا أَنِّي كُنْتُ أُصَلِّي


قَالَ ‏ ‏زُهَيْرٌ ‏ ‏وَأَبُو الزُّبَيْرِ ‏ ‏جَالِسٌ مُسْتَقْبِلَ ‏ ‏الْكَعْبَةِ ‏ ‏فَقَالَ بِيَدِهِ ‏ ‏أَبُو الزُّبَيْرِ ‏ ‏إِلَى ‏ ‏بَنِي الْمُصْطَلِقِ ‏ ‏فَقَالَ بِيَدِهِ إِلَى غَيْرِ ‏ ‏الْكَعْبَةِ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) பனூ முஸ்தலிக் குலத்தாரின் இடம் நோக்கிப் பயணம் செய்தபோது, வேறொரு வேலையாக என்னை அனுப்பியிருந்தார்கள். நான் (என் வேலையை முடித்துவிட்டு) அவர்களிடம் வந்தபோது அவர்கள் தமது ஒட்டகத்தில் அமர்ந்தவாறு குர்ஆன் ஓதித் தமது தலையால் சைகை செய்து தொழுது கொண்டிருந்தார்கள். அப்போது நான் அவர்களிடம் பேச்சுக் கொடுத்தேன். உடனே அவர்கள் தமது கரத்தால் இவ்வாறு சைகை செய்தார்கள். பிறகு மீண்டும் நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் பேச்சுக் கொடுத்தேன். அப்போதும் அவர்கள் இவ்வாறு சைகை செய்தார்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுது முடித்ததும், “நான் உங்களை அனுப்பிவைத்த வேலை என்ன ஆயிற்று?” என்று கேட்டுவிட்டு, “நான் தொழுது கொண்டிருந்ததுதான் உங்களிடம் பேசமுடியாமல் என்னைத் தடுத்தது” என்று சொன்னார்கள்.

அறிவிப்பாளர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)


குறிப்பு :

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது ஒவ்வொரு அசைவும் நபித்தோழர்கள் வழியாக அவர்கள்தம் மாணவத் தோழர்களுக்கு அசைத்துக் காட்டப் பட்டது. வழிவழியாக அந்த அசைவுகள் அண்ணலாரை நேரில் பார்த்து, அவர்கள் கூறுவதைச் செவியுறுவதுபோலவே உள்வாங்கப்பட்டன.

இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்களில் ஒருவரான ஸுஹைர் (ரஹ்) இதை அறிவிக்கும்போது, “அல்லாஹ்வின் தூதர் இவ்வாறு சைகை செய்தார்கள்” என நபித்தோழர் ஜாபிர் (ரலி) காட்டிய சைகையைப் போலவே தமது கரத்தால் “இவ்வாறு” என சைகை செய்து காட்டினார். இரண்டாவது முறை சைகையை, வாகனத்தில் இருக்கும் ஒருவர் தரையில் நிற்கும் ஒருவருக்குச் செய்யும் சைகையைப்போல் கீழ்நோக்கி சைகை செய்து காட்டினார்.

இந்த ஹதீஸை அபுஸ்ஸுஹைர் (ரஹ்) அறிவிக்கும்போது, இறையில்லம் கஅபாவை முன்னோக்கி அமர்ந்திருந்தார். அப்போது (கஅபா அல்லாத திசையான) பனூ முஸ்தலிக் குலத்தாரின் வசிப்பிடத்திசையை நோக்கி சைகை செய்து காட்டினார்.

அத்தியாயம்: 5, பாடம்: 08, ஹதீஸ் எண்: 839

دَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏لَيْثٌ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ رُمْحٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏اللَّيْثُ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي الزُّبَيْرِ ‏ ‏عَنْ ‏ ‏جَابِرٍ ‏ ‏أَنَّهُ قَالَ :‏ ‏

إِنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بَعَثَنِي لِحَاجَةٍ ثُمَّ أَدْرَكْتُهُ وَهُوَ يَسِيرُ ‏ ‏قَالَ ‏ ‏قُتَيْبَةُ ‏ ‏يُصَلِّي ‏ ‏فَسَلَّمْتُ عَلَيْهِ فَأَشَارَ إِلَيَّ فَلَمَّا فَرَغَ دَعَانِي فَقَالَ ‏ ‏إِنَّكَ سَلَّمْتَ ‏ ‏آنِفًا ‏ ‏وَأَنَا أُصَلِّي وَهُوَ مُوَجِّهٌ حِينَئِذٍ ‏ ‏قِبَلَ ‏ ‏الْمَشْرِقِ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) என்னை, தேவையான ஒரு வேலையைச் செய்துவர அனுப்பி இருந்தார்கள். அவர்கள் (தமது வாகனத்தில் கூடுதலான தொழுகை) தொழுதவாறு சென்று கொண்டிருந்தபோது, (என் வேலை முடிந்த பின்னர்) அவர்களிடம் நான் போய்ச்சேர்ந்தேன். அவர்களுக்கு ஸலாம் சொன்னேன். அவர்கள் (பதில் ஸலாம் கூறாமல்) என்னை நோக்கி சைகை செய்தார்கள். அவர்கள் தொழுது முடித்ததும் என்னை அழைத்து, “சற்று முன்னர் எனக்கு நீங்கள் ஸலாம் சொன்னீர்கள். அப்போது நான் தொழுது கொண்டிருந்தேன்” என்று கூறினார்கள். அப்போது அவர்களுடைய முகம் (கிப்லா அல்லாத) கிழக்குத் திசையை முன்னோக்கி இருந்தது.

அறிவிப்பாளர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)

அத்தியாயம்: 5, பாடம்: 08, ஹதீஸ் எண்: 838

حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏هُشَيْمٌ ‏ ‏عَنْ ‏ ‏إِسْمَعِيلَ بْنِ أَبِي خَالِدٍ ‏ ‏عَنْ ‏ ‏الْحَارِثِ بْنِ شُبَيْلٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي عَمْرٍو الشَّيْبَانِيِّ ‏ ‏عَنْ ‏ ‏زَيْدِ بْنِ أَرْقَمَ ‏ ‏قَالَ :‏

‏كُنَّا نَتَكَلَّمُ فِي الصَّلَاةِ يُكَلِّمُ الرَّجُلُ صَاحِبَهُ وَهُوَ إِلَى جَنْبِهِ فِي الصَّلَاةِ حَتَّى نَزَلَتْ ‏‏وَقُومُوا لِلَّهِ ‏ ‏قَانِتِينَ ‏ ‏فَأُمِرْنَا بِالسُّكُوتِ وَنُهِينَا عَنْ الْكَلَامِ ‏


‏حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ نُمَيْرٍ ‏ ‏وَوَكِيعٌ ‏ ‏قَالَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏عِيسَى بْنُ يُونُسَ ‏ ‏كُلُّهُمْ ‏ ‏عَنْ ‏ ‏إِسْمَعِيلَ بْنِ أَبِي خَالِدٍ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏نَحْوَهُ ‏

நாங்கள் தொழுகையில் (ஆரம்ப காலத்தில் ஒருவருக்கொருவர்) பேசிக் கொள்வது வழக்கம். “மேலும் நீங்கள் உள்ளச்சம் உடையவர்களாக நின்று அல்லாஹ்வை வணங்குங்கள்” எனும் (2:238ஆவது) வசனத் தொடர் அருளப் பெறும்வரை ஒருவர் (தொழுகையில்) தம் அருகிலிருக்கும் தோழரிடம் (சொந்தச் செய்திகளைப்) பேசிக் கொண்டிருப்பார். இந்த வசனம் அருளப்பெற்றவுடன் (தொழுகையில்) அமைதி காக்கும்படி கட்டளையிடப்பட்டது; பேசக்கூடாது என்று எங்களுக்குத் தடை விதிக்கப்பட்டது.

அறிவிப்பாளர் : ஸைத் பின் அர்கம் (ரலி)

அத்தியாயம்: 5, பாடம்: 08, ஹதீஸ் எண்: 837

حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَزُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏وَابْنُ نُمَيْرٍ ‏ ‏وَأَبُو سَعِيدٍ الْأَشَجُّ ‏ ‏وَأَلْفَاظُهُمْ مُتَقَارِبَةٌ ‏ ‏قَالُوا حَدَّثَنَا ‏ ‏ابْنُ فُضَيْلٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏الْأَعْمَشُ ‏ ‏عَنْ ‏ ‏إِبْرَاهِيمَ ‏ ‏عَنْ ‏ ‏عَلْقَمَةَ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ ‏ ‏قَالَ :‏

‏كُنَّا نُسَلِّمُ عَلَى رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَهُوَ فِي الصَّلَاةِ فَيَرُدُّ عَلَيْنَا فَلَمَّا رَجَعْنَا مِنْ عِنْدِ ‏ ‏النَّجَاشِيِّ ‏ ‏سَلَّمْنَا عَلَيْهِ فَلَمْ يَرُدَّ عَلَيْنَا فَقُلْنَا يَا رَسُولَ اللَّهِ كُنَّا نُسَلِّمُ عَلَيْكَ فِي الصَّلَاةِ فَتَرُدُّ عَلَيْنَا فَقَالَ ‏ ‏إِنَّ فِي الصَّلَاةِ شُغْلًا ‏


حَدَّثَنِي ‏ ‏ابْنُ نُمَيْرٍ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏إِسْحَقُ بْنُ مَنْصُورٍ السَّلُولِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏هُرَيْمُ بْنُ سُفْيَانَ ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْمَشِ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏نَحْوَهُ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தொழுதுகொண்டிருக்கையில் நாங்கள் அவர்களுக்கு ஸலாம் சொல்வதும் அவர்கள் எங்களுக்கு பதில் ஸலாம் சொல்வதும் வழக்கமாக இருந்தது. (இது முதலாவது புலப்பெயர்வுக்கு முன்னர் இருந்த நடைமுறை).

ஆனால், நாங்கள் (அபிசீனிய மன்னர்) நஜாஷியிடமிருந்து திரும்பிவந்த பின்னர் (தொழுகையில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு ஸலாம் சொன்னோம். அவர்கள் எங்களுக்கு பதில் ஸலாம் சொல்லவில்லை. பின்னர் நாங்கள், “அல்லாஹ்வின் தூதரே! (நீங்கள் தொழும்போது) நாங்கள் உங்களுக்கு ஸலாம் சொல்ல, நீங்களும் அதற்கு பதில் ஸலாம் சொல்வது வழக்கமாக இருந்ததே?” என்று கேட்டோம். அதற்கு அவர்கள், “திண்ணமாக, தொழுகையில் சிந்தனை சிதறலாகாது” என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)

அத்தியாயம்: 5, பாடம்: 08, ஹதீஸ் எண்: 836

حَدَّثَنَا ‏ ‏أَبُو جَعْفَرٍ مُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ ‏ ‏وَأَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَتَقَارَبَا فِي لَفْظِ الْحَدِيثِ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏إِسْمَعِيلُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏عَنْ ‏ ‏حَجَّاجٍ الصَّوَّافِ ‏ ‏عَنْ ‏ ‏يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ ‏ ‏عَنْ ‏ ‏هِلَالِ بْنِ أَبِي مَيْمُونَةَ ‏ ‏عَنْ ‏ ‏عَطَاءِ بْنِ يَسَارٍ ‏ ‏عَنْ ‏ ‏مُعَاوِيَةَ بْنِ الْحَكَمِ السُّلَمِيِّ ‏ ‏قَالَ :‏‏

‏بَيْنَا أَنَا أُصَلِّي مَعَ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِذْ عَطَسَ رَجُلٌ مِنْ الْقَوْمِ فَقُلْتُ يَرْحَمُكَ اللَّهُ فَرَمَانِي الْقَوْمُ بِأَبْصَارِهِمْ فَقُلْتُ وَا ثُكْلَ ‏ ‏أُمِّيَاهْ مَا شَأْنُكُمْ تَنْظُرُونَ إِلَيَّ فَجَعَلُوا يَضْرِبُونَ بِأَيْدِيهِمْ عَلَى أَفْخَاذِهِمْ فَلَمَّا رَأَيْتُهُمْ يُصَمِّتُونَنِي لَكِنِّي سَكَتُّ فَلَمَّا صَلَّى رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَبِأَبِي هُوَ وَأُمِّي مَا رَأَيْتُ مُعَلِّمًا قَبْلَهُ وَلَا بَعْدَهُ أَحْسَنَ تَعْلِيمًا مِنْهُ فَوَاللَّهِ مَا ‏ ‏كَهَرَنِي ‏ ‏وَلَا ضَرَبَنِي وَلَا شَتَمَنِي قَالَ ‏ ‏إِنَّ هَذِهِ الصَّلَاةَ لَا يَصْلُحُ فِيهَا شَيْءٌ مِنْ كَلَامِ النَّاسِ إِنَّمَا هُوَ التَّسْبِيحُ وَالتَّكْبِيرُ وَقِرَاءَةُ الْقُرْآنِ أَوْ كَمَا قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنِّي حَدِيثُ عَهْدٍ بِجَاهِلِيَّةٍ وَقَدْ جَاءَ اللَّهُ بِالْإِسْلَامِ وَإِنَّ مِنَّا رِجَالًا يَأْتُونَ ‏ ‏الْكُهَّانَ ‏ ‏قَالَ فَلَا تَأْتِهِمْ قَالَ وَمِنَّا رِجَالٌ ‏ ‏يَتَطَيَّرُونَ ‏ ‏قَالَ ذَاكَ شَيْءٌ يَجِدُونَهُ فِي صُدُورِهِمْ فَلَا يَصُدَّنَّهُمْ قَالَ ‏ ‏ابْنُ الصَّبَّاحِ ‏ ‏فَلَا يَصُدَّنَّكُمْ قَالَ قُلْتُ وَمِنَّا رِجَالٌ ‏ ‏يَخُطُّونَ ‏ ‏قَالَ كَانَ نَبِيٌّ مِنْ الْأَنْبِيَاءِ ‏ ‏يَخُطُّ ‏ ‏فَمَنْ وَافَقَ خَطَّهُ فَذَاكَ قَالَ وَكَانَتْ لِي ‏ ‏جَارِيَةٌ ‏ ‏تَرْعَى غَنَمًا لِي ‏ ‏قِبَلَ ‏ ‏أُحُدٍ ‏ ‏وَالْجَوَّانِيَّةِ ‏ ‏فَاطَّلَعْتُ ذَاتَ يَوْمٍ فَإِذَا ‏ ‏الذِّيبُ قَدْ ذَهَبَ بِشَاةٍ مِنْ غَنَمِهَا وَأَنَا رَجُلٌ مِنْ بَنِي ‏ ‏آدَمَ ‏ ‏آسَفُ كَمَا يَأْسَفُونَ لَكِنِّي ‏ ‏صَكَكْتُهَا ‏ ‏صَكَّةً فَأَتَيْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَعَظَّمَ ذَلِكَ عَلَيَّ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ أَفَلَا أُعْتِقُهَا قَالَ ائْتِنِي بِهَا فَأَتَيْتُهُ بِهَا فَقَالَ لَهَا أَيْنَ اللَّهُ قَالَتْ فِي السَّمَاءِ قَالَ مَنْ أَنَا قَالَتْ أَنْتَ رَسُولُ اللَّهِ قَالَ أَعْتِقْهَا فَإِنَّهَا مُؤْمِنَةٌ ‏


حَدَّثَنَا ‏ ‏إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏عِيسَى بْنُ يُونُسَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏الْأَوْزَاعِيُّ ‏ ‏عَنْ ‏ ‏يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏نَحْوَهُ

நான் (ஒரு நாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் தொழுது கொண்டிருந்தபோது, மக்களில் ஒருவர் தும்மினார். அதற்கு நான், “யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரிவானாக!)” என்று கூறினேன். மக்கள் என்னை வெறித்துப் பார்த்தனர். நான், “என்னை ஏன் இவ்வாறு வெறிக்கிறீன்ர்கள்?” என்று கேட்டேன். மக்கள் (பதிலேதும் கூறாமல்) தங்கள் கைகளால் தொடைகள் மீது தட்டினர். என்னை அவர்கள் அமைதியாக இருக்கச் சொல்கிறார்கள் என்று புரிந்துகொண்டு அமைதியாகி விட்டேன்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு முன்னரோ பின்னரோ அவர்களைவிட மிக அழகிய முறையில் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவரை நான் (என் வாழ்நாளில்) கண்டதேயில்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! அவர்கள் என்னைக் கண்டிக்கவில்லை; அடிக்கவில்லை; திட்டவில்லை. என் தந்தையும் என் தாயும் நபியவர்களுக்கு அர்ப்பணமாகட்டும். அவர்கள் தொழுது முடிந்ததும், “தொழுகை என்பது என்பது மனிதர்களோடு பேசுவதன்று. மாறாக, இறைவனைத் துதிப்பதும் பெருமைப்படுத்துவதும் குர்ஆன் ஓதுவதுமாகும்” என்றோ இந்தக் கருத்துப்படவோ என்னிடம் சொன்னார்கள்.

நான், “அல்லாஹ்வின் தூதரே! நான் அறியாமைக் காலத்திற்கு நெருக்கமானவன். அல்லாஹ் இஸ்லாத்தை (எங்களுக்கு) வழங்கினான். எங்களில் சிலர் சோதிடர்களிடம் செல்கிறார்களே?” என்று வினவினேன். அதற்கு அவர்கள், “சோதிடர்களிடம் நீங்கள் செல்லாதீர்கள்” என்றார்கள்.

நான் “எங்களில் இன்னும் சிலர் பறவையை வைத்துக் குறி பார்க்கிறார்களே?” என்றேன். அதற்கு நபியவர்கள், “இது மக்களின் உள்ளங்களில் மீந்துவிட்ட, அவர்கள் விடமறுக்கும் பழக்கமாகும். எனவே, இது அவர்களை/உங்களை (நற்செயல்களிலிருந்து) தடுத்துவிடக் கூடாது” என்று கூறினார்கள்.

நான் “எங்களில் இன்னும் சிலர் (நற்குறி அறிவதாகக்கூறி மணலில்) கோடு வரைகின்றனர்” என்றேன். அதற்கு அவர்கள், “நபிமார்களில் ஒருவர் இவ்வாறு கோடு வரைந்துவந்தார். அவருடைய கோட்டை ஒத்து எவராவது கோடு வரைவாரெனில் அதுவொரு கோடுதான்” என்றார்கள்.

அடுத்து, என்னிடம் ஓர் அடிமைப் பெண் இருந்தாள். அவள் என் ஆட்டு மந்தையை உஹது மலையின் ஜவ்வானிய்யாப் பகுதியில் மேய்த்து வந்தாள். ஒரு நாள் நான் சென்று பார்த்த போது ஓநாய் ஒன்று அவளிடமிருந்த ஆடுகளில் ஒன்றைக் கொண்டு சென்றுவிட்டது. நானும் ஆதமுடைய மக்களுள் ஒருவன்தானே, கோபப்பட்டேன். கூடுதலாக, அவளை நான் அறைந்துவிட்டேன். நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று அதைக் கூறியபோது அவர்கள் என்னைக் கடுமையாகக் கண்டித்தார்கள்.

நான் “அல்லாஹ்வின் தூதரே! நான் அவளை விடுதலை செய்துவிடட்டுமா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள் “அந்தப் பெண்ணை என்னிடம் அழைத்துவாருங்கள்” என்று சொன்னார்கள். நான் அவளை அழைத்துச் சென்றபோது அவளிடம் “அல்லாஹ் எங்கே இருக்கின்றான்?” என்று நபியவர்கள் கேட்டார்கள். அவள் “வானத்தில்” என்று பதிலளித்தாள். அடுத்து, “நான் யார்?” என்று கேட்டார்கள். அவள் “நீங்கள் அல்லாஹ்வின் தூதர்” என்றாள். அவர்கள் “(என்னிடம்) அவளை விடுதலை செய்துவிடுங்கள்! ஏனெனில், அவள் இறைநம்பிக்கையுடைய பெண் ஆவாள்” என்றார்கள்.

அறிவிப்பாளர் : முஆவியா பின் அல்ஹகம் அஸ்ஸுலமீ (ரலி)

அத்தியாயம்: 5, பாடம்: 07, ஹதீஸ் எண்: 835

حَدَّثَنَا ‏ ‏إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ بَكْرٍ ‏ ‏قَالَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏حَسَنٌ الْحُلْوَانِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الرَّزَّاقِ ‏ ‏وَتَقَارَبَا فِي اللَّفْظِ قَالَا جَمِيعًا ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ جُرَيْجٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏أَبُو الزُّبَيْرِ ‏ ‏أَنَّهُ سَمِعَ ‏ ‏طَاوُسًا ‏ ‏يَقُولُ :‏ ‏

‏قُلْنَا ‏ ‏لِابْنِ عَبَّاسٍ ‏ ‏فِي ‏ ‏الْإِقْعَاءِ ‏ ‏عَلَى الْقَدَمَيْنِ فَقَالَ ‏ ‏هِيَ السُّنَّةُ فَقُلْنَا لَهُ إِنَّا ‏ ‏لَنَرَاهُ ‏ ‏جَفَاءً ‏ ‏بِالرَّجُلِ فَقَالَ ‏ ‏ابْنُ عَبَّاسٍ ‏ ‏بَلْ هِيَ سُنَّةُ نَبِيِّكَ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏

நாங்கள் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் (தொழுகை அமர்வில்) பாதங்கள்மீது அமர்வது பற்றிக் கேட்டோம். அவர்கள், “அது நபிவழிதான்” என்று சொன்னார்கள். “அவ்வாறு ஒருவர் அமர்வது அவரது நேர்த்தியற்ற செயல் என்று நாங்கள் கருதுகின்றோம்” என்றோம். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், “இல்லை; அது உங்கள் நபியின் வழிமுறைதான்” என்று சொன்னார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக தாவூஸ் பின் கைஸான்

அத்தியாயம்: 5, பாடம்: 06, ஹதீஸ் எண்: 834

حَدَّثَنِي ‏ ‏الْحَكَمُ بْنُ مُوسَى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عِيسَى بْنُ يُونُسَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏إِسْمَعِيلُ بْنُ أَبِي خَالِدٍ ‏ ‏عَنْ ‏ ‏الزُّبَيْرِ بْنِ عَدِيٍّ ‏ ‏عَنْ ‏ ‏مُصْعَبِ بْنِ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ ‏ ‏قَالَ :‏

صَلَّيْتُ إِلَى جَنْبِ ‏ ‏أَبِي ‏ ‏فَلَمَّا رَكَعْتُ شَبَّكْتُ أَصَابِعِي وَجَعَلْتُهُمَا بَيْنَ رُكْبَتَيَّ فَضَرَبَ يَدَيَّ فَلَمَّا صَلَّى قَالَ قَدْ ‏ ‏كُنَّا نَفْعَلُ هَذَا ثُمَّ أُمِرْنَا أَنْ نَرْفَعَ إِلَى الرُّكَبِ

நான் என் தந்தையின் விலாப் புறத்தில் தொழுதேன். நான் ருகூஉச் செய்த போது என் இரு கைவிரல்களைக் கோத்து என் முழங்கால்களுக்கிடையே வைத்துக் கொண்டேன். அவர்கள் என் கைகள் மீது அடித்தார்கள். தொழுது முடித்ததும் “நாங்களும் (முன்னர்) இவ்வாறுதான் செய்து கொண்டிருந்தோம்; பின்னர் முழங்கால்களுக்கு (இடையில் வைத்த) கைகளை ஏற்றி, (முழங்கால்களின் மீது) வைக்குமாறு உத்தரவிடப்பட்டோம்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : ஸஅத் பின் அபீவக்காஸ் (ரலி) வழியாக அவரின் மகன் முஸ்அப் (ரஹ்)