அத்தியாயம்: 4, பாடம்: 41, ஹதீஸ் எண்: 743

و حَدَّثَنِي ‏ ‏عَمْرُو بْنُ عَلِيٍّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي بَكْرِ بْنِ حَفْصٍ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ حُنَيْنٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عَبَّاسٍ ‏ ‏أَنَّهُ قَالَ :‏‏

نُهِيتُ أَنْ أَقْرَأَ وَأَنَا رَاكِعٌ ‏


لَا يَذْكُرُ فِي الْإِسْنَادِ ‏ ‏عَلِيًّا ‏

ருகூஉச் செய்து கொண்டிருக்கும்போது குர்ஆன் (வசனங்களை) ஓதக்கூடாது என நான் தடை விதிக்கப்பெற்றுள்ளேன்.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி)


குறிப்பு :

இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடரில் அலீ (ரலி) பெயர் இடம்பெறாமல் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் நேரடியான அறிவிப்பாக உள்ளது.

அத்தியாயம்: 4, பாடம்: 41, ஹதீஸ் எண்: 742

حَدَّثَنَا ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏وَإِسْحَقُ ‏ ‏قَالَا أَخْبَرَنَا ‏ ‏أَبُو عَامِرٍ الْعَقَدِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏دَاوُدُ بْنُ قَيْسٍ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏إِبْرَاهِيمُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ حُنَيْنٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عَبَّاسٍ ‏ ‏عَنْ ‏ ‏عَلِيٍّ ‏ ‏قَالَ ‏:‏

نَهَانِي حِبِّي ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَنْ أَقْرَأَ رَاكِعًا أَوْ سَاجِدًا ‏


حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏قَالَ قَرَأْتُ عَلَى ‏ ‏مَالِكٍ ‏ ‏عَنْ ‏ ‏نَافِعٍ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏عِيسَى بْنُ حَمَّادٍ الْمِصْرِيُّ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏اللَّيْثُ ‏ ‏عَنْ ‏ ‏يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ ‏ ‏قَالَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏هَارُونُ بْنُ عَبْدِ اللَّهِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ أَبِي فُدَيْكٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏الضَّحَّاكُ بْنُ عُثْمَانَ ‏ ‏قَالَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏الْمُقَدَّمِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى وَهُوَ الْقَطَّانُ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عَجْلَانَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏هَارُونُ بْنُ سَعِيدٍ الْأَيْلِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏أُسَامَةُ بْنُ زَيْدٍ ‏ ‏قَالَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ أَيُّوبَ ‏ ‏وَقُتَيْبَةُ ‏ ‏وَابْنُ حُجْرٍ ‏ ‏قَالُوا حَدَّثَنَا ‏ ‏إِسْمَعِيلُ يَعْنُونَ ابْنَ جَعْفَرٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏مُحَمَّدٌ وَهُوَ ابْنُ عَمْرٍو ‏ ‏قَالَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏هَنَّادُ بْنُ السَّرِيِّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدَةُ ‏ ‏عَنْ ‏ ‏مُحَمَّدِ بْنِ إِسْحَقَ ‏ ‏كُلُّ هَؤُلَاءِ ‏ ‏عَنْ ‏ ‏إِبْرَاهِيمَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ حُنَيْنٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏عَلِيٍّ ‏ ‏ح ‏ ‏إِلَّا ‏ ‏الضَّحَّاكَ ‏ ‏وَابْنَ عَجْلَانَ ‏ ‏فَإِنَّهُمَا زَادَا ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عَبَّاسٍ ‏ ‏عَنْ ‏ ‏عَلِيٍّ ‏ ‏عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏كُلُّهُمْ قَالُوا نَهَانِي عَنْ قِرَاءَةِ الْقُرْآنِ وَأَنَا رَاكِعٌ وَلَمْ يَذْكُرُوا فِي رِوَايَتِهِمْ النَّهْيَ عَنْهَا فِي السُّجُودِ كَمَا ذَكَرَ ‏ ‏الزُّهْرِيُّ ‏ ‏وَزَيْدُ بْنُ أَسْلَمَ ‏ ‏وَالْوَلِيدُ بْنُ كَثِيرٍ ‏ ‏وَدَاوُدُ بْنُ قَيْسٍ ‏ ‏و حَدَّثَنَاه ‏ ‏قُتَيْبَةُ ‏ ‏عَنْ ‏ ‏حَاتِمِ بْنِ إِسْمَعِيلَ ‏ ‏عَنْ ‏ ‏جَعْفَرِ بْنِ مُحَمَّدٍ ‏ ‏عَنْ ‏ ‏مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ حُنَيْنٍ ‏ ‏عَنْ ‏ ‏عَلِيٍّ ‏ ‏وَلَمْ يَذْكُرْ فِي السُّجُودِ ‏

ருகூஉ அல்லது ஸஜ்தாச் செய்து கொண்டிருக்கும்போது குர்ஆன் (வசனங்களை) ஓத வேண்டாமென என் அன்பரான (நபி-ஸல்) என்னைத் தடுத்தார்கள்.

அறிவிப்பாளர் : அலீ பின் அபீதாலிப் (ரலி)


குறிப்பு :

அஸ்ஸுஹ்ரீ, ஸைதிப்னு அஸ்லம், அல்வலீதிப்னு கஸீர், தாவூத் பின் கைஸ் (ரஹ்-அலைஹிம்) போன்றோர் வழி அறிவிப்புகளில், “ருகூஉச் செய்து கொண்டிருக்கும்போது குர்ஆன் (வசனங்களை) ஓத வேண்டாமென என்னை நபி (ஸல்) தடுத்தார்கள்” என்று மட்டுமே இடம்பெற்றுள்ளது; “ஸஜ்தாவிலிருக்கும்போது குர்ஆனை ஓதக் கூடாது” என்பது பற்றிய குறிப்பு இடம் பெறவில்லை.

அத்தியாயம்: 4, பாடம்: 41, ஹதீஸ் எண்: 741

و حَدَّثَنِي ‏ ‏أَبُو بَكْرِ بْنُ إِسْحَقَ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ أَبِي مَرْيَمَ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏زَيْدُ بْنُ أَسْلَمَ ‏ ‏عَنْ ‏ ‏إِبْرَاهِيمَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ حُنَيْنٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ ‏ ‏أَنَّهُ قَالَ :‏‏

نَهَانِي رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏عَنْ الْقِرَاءَةِ فِي الرُّكُوعِ وَالسُّجُودِ وَلَا أَقُولُ نَهَاكُمْ ‏

ருகூவிலும் ஸஜ்தாவிலும் குர்ஆன் (வசனங்களை) ஓத வேண்டாமென அல்லாஹ்வின் தூதர் (ஸல்) என்னைத் தடுத்தார்கள். உங்களைத் தடுத்தார்கள் என்று நான் கூற மாட்டேன்.

அறிவிப்பாளர் : அலீ பின் அபீதாலிப் (ரலி)


குறிப்பு :

மேற்காணும் தடை, முஸ்லிம்கள் அனைவருக்கும் பொதுவானது.

அத்தியாயம்: 4, பாடம்: 41, ஹதீஸ் எண்: 740

و حَدَّثَنَا ‏ ‏أَبُو كُرَيْبٍ مُحَمَّدُ بْنُ الْعَلَاءِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو أُسَامَةَ ‏ ‏عَنْ ‏ ‏الْوَلِيدِ يَعْنِي ابْنَ كَثِيرٍ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏إِبْرَاهِيمُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ حُنَيْنٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏أَنَّهُ سَمِعَ ‏ ‏عَلِيَّ بْنَ أَبِي طَالِبٍ ‏ ‏يَقُولُ :‏ ‏

نَهَانِي رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏عَنْ قِرَاءَةِ الْقُرْآنِ وَأَنَا رَاكِعٌ أَوْ سَاجِدٌ ‏

எனது ருகூஉ நிலையிலும் ஸஜ்தாவிலும் குர்ஆன் (வசனங்களை) ஓத வேண்டாமென்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) எனக்குத் தடை விதித்தார்கள்.

அறிவிப்பாளர் : அலீ பின் அபீதாலிப் (ரலி)

அத்தியாயம்: 4, பாடம்: 41, ஹதீஸ் எண்: 739

حَدَّثَنِي ‏ ‏أَبُو الطَّاهِرِ ‏ ‏وَحَرْمَلَةُ ‏ ‏قَالَا أَخْبَرَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏عَنْ ‏ ‏يُونُسَ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏قَالَ حَدَّثَنِي ‏ ‏إِبْرَاهِيمُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ حُنَيْنٍ ‏ ‏أَنَّ ‏ ‏أَبَاهُ ‏ ‏حَدَّثَهُ أَنَّهُ سَمِعَ ‏ ‏عَلِيَّ بْنَ أَبِي طَالِبٍ ‏ ‏قَالَ :‏

نَهَانِي رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَنْ أَقْرَأَ رَاكِعًا أَوْ سَاجِدًا ‏

ருகூஉ நிலையிலும் ஸஜ்தாவிலும் (குர்ஆன் வசனங்களை) ஓத வேண்டாமென்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) எனக்குத் தடை விதித்தார்கள்.

அறிவிப்பாளர் : அலீ பின் அபீதாலிப் (ரலி)

அத்தியாயம்: 4, பாடம்: 41, ஹதீஸ் எண்: 738

حَدَّثَنَا ‏ ‏سَعِيدُ بْنُ مَنْصُورٍ ‏ ‏وَأَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَزُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏قَالُوا حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏سُلَيْمَانُ بْنُ سُحَيْمٍ ‏ ‏عَنْ ‏ ‏إِبْرَاهِيمَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ مَعْبَدٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عَبَّاسٍ ‏ ‏قَالَ :‏‏

كَشَفَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏السِّتَارَةَ وَالنَّاسُ صُفُوفٌ خَلْفَ ‏ ‏أَبِي بَكْرٍ ‏ ‏فَقَالَ ‏ ‏أَيُّهَا النَّاسُ إِنَّهُ لَمْ يَبْقَ مِنْ مُبَشِّرَاتِ النُّبُوَّةِ إِلَّا الرُّؤْيَا الصَّالِحَةُ يَرَاهَا الْمُسْلِمُ أَوْ تُرَى لَهُ أَلَا وَإِنِّي نُهِيتُ أَنْ أَقْرَأَ الْقُرْآنَ رَاكِعًا أَوْ سَاجِدًا فَأَمَّا الرُّكُوعُ فَعَظِّمُوا فِيهِ الرَّبَّ عَزَّ وَجَلَّ وَأَمَّا السُّجُودُ فَاجْتَهِدُوا فِي الدُّعَاءِ ‏ ‏فَقَمِنٌ ‏ ‏أَنْ يُسْتَجَابَ لَكُمْ ‏


قَالَ ‏ ‏أَبُو بَكْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ ‏ ‏عَنْ ‏ ‏سُلَيْمَانَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ أَيُّوبَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏إِسْمَعِيلُ بْنُ جَعْفَرٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏سُلَيْمَانُ بْنُ سُحَيْمٍ ‏ ‏عَنْ ‏ ‏إِبْرَاهِيمَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ مَعْبَدِ بْنِ عَبَّاسٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ عَبَّاسٍ ‏ ‏قَالَ ‏ ‏كَشَفَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏السِّتْرَ وَرَأْسُهُ مَعْصُوبٌ فِي مَرَضِهِ الَّذِي مَاتَ فِيهِ فَقَالَ ‏ ‏اللَّهُمَّ هَلْ بَلَّغْتُ ثَلَاثَ مَرَّاتٍ إِنَّهُ لَمْ يَبْقَ مِنْ مُبَشِّرَاتِ النُّبُوَّةِ إِلَّا الرُّؤْيَا يَرَاهَا الْعَبْدُ الصَّالِحُ أَوْ تُرَى لَهُ ثُمَّ ذَكَرَ بِمِثْلِ حَدِيثِ ‏ ‏سُفْيَانَ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (தம் இறுதி நாட்களில் உடல் நலிவுற்றிருந்த போது தமது அறையின்) திரைச் சீலையை விலக்கி(ப்பள்ளிவாசலுக்குள் நோக்)னார்கள். அப்போது மக்கள் அபூபக்ரு (ரலி) அவர்களுக்குப் பின்னால் அணிவகுத்து நின்றுகொண்டிருந்தனர். (அவர்களிடம்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “மக்களே! ஒரு முஸ்லிம் காண்கின்ற அல்லது அவருக்குக் காட்டப்படுகின்ற நல்ல (உண்மையான) கனவுகளைத் தவிர நபித்துவத்தின் நற்செய்திகளுள் வேறெதுவும் மிச்சமில்லை. அறிந்து கொள்ளுங்கள்! ருகூஉ அல்லது ஸஜ்தாச் செய்து கொண்டிருக்கையில் குர்ஆன் (வசனங்களை) ஓத வேண்டாமென்று நான் தடை விதிக்கப்பெற்றுள்ளேன். வல்லமையும் மாண்பும் மிக்க இறைவனை ருகூவில் மகிமைப் படுத்துங்கள். ஸஜ்தாவில் முனைந்து பிரார்த்தியுங்கள். அது, உங்கள் பிரார்த்தனை ஏற்கப்பட உங்களுக்கு மிகவும் உதவும்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி)


குறிப்பு :

யஹ்யா பின் அய்யூப் (ரஹ்) வழி அறிவிப்பில், அல்லாஹ்வின் தூதர்
(ஸல்) நோய்வாய்ப்பட்டிருந்தபோது தமது அறையின்) திரைச் சீலையை விலக்கினார்கள். அவர்களது தலையில், அவர்கள் இறந்த அந்த நோய்க்காகத்  துணி ஒன்று கட்டப்பட்டிருந்தது. அப்போது அவர்கள், “இறைவா! (உன் செய்திகளை) நான் (மக்களிடம்) சேர்த்துவிட்டேனா?” என்று மும்முறை கூறிவிட்டு, “ஒரு நல்ல அடியார் காண்கின்ற அல்லது அவருக்குக் காட்டப்படுகின்ற (நல்ல) கனவைத் தவிர நபித்துவத்தின் நற்செய்திகளுள் வேறெதுவும் மிச்சமில்லை” எனக் கூறியதாக இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 4, பாடம்: 40, ஹதீஸ் எண்: 737

حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏هُشَيْمُ بْنُ بَشِيرٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏هِشَامُ بْنُ حَسَّانَ ‏ ‏عَنْ ‏ ‏قَيْسِ بْنِ سَعْدٍ ‏ ‏عَنْ ‏ ‏عَطَاءٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عَبَّاسٍ ‏:‏

أَنَّ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏كَانَ إِذَا رَفَعَ رَأْسَهُ مِنْ الرُّكُوعِ قَالَ ‏ ‏اللَّهُمَّ رَبَّنَا لَكَ الْحَمْدُ مِلْءُ السَّمَاوَاتِ وَمِلْءُ الْأَرْضِ وَمَا بَيْنَهُمَا وَمِلْءُ مَا شِئْتَ مِنْ شَيْءٍ بَعْدُ أَهْلَ الثَّنَاءِ وَالْمَجْدِ لَا مَانِعَ لِمَا أَعْطَيْتَ وَلَا مُعْطِيَ لِمَا مَنَعْتَ وَلَا يَنْفَعُ ‏ ‏ذَا الْجَدِّ ‏ ‏مِنْكَ ‏ ‏الْجَدُّ ‏


حَدَّثَنَا ‏ ‏ابْنُ نُمَيْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حَفْصٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏هِشَامُ بْنُ حَسَّانَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏قَيْسُ بْنُ سَعْدٍ ‏ ‏عَنْ ‏ ‏عَطَاءٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عَبَّاسٍ ‏ ‏عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِلَى قَوْلِهِ ‏ ‏وَمِلْءُ مَا شِئْتَ مِنْ شَيْءٍ بَعْدُ وَلَمْ يَذْكُرْ مَا بَعْدَهُ

நபி (ஸல்) ருகூவிலிருந்து தலையை உயர்த்தியதும், “அல்லாஹும்ம ரப்பனா ல(க்)கல் ஹம்து மில்அஸ் ஸமாவாத்தி வ மில்அல் அர்ளி வ மா பய்னஹுமா வ மில்அ மா ஷிஃத்த மின் ஷையின் பஃது அஹ்லஸ் ஸனாயி வல்மஜ்தி லா மானிஅ லிமா அஃதைத்த வலா முஃத்திய லிமா மனஃத்த வலா யனஃபஉ தல்ஜத்தி மின்க்கல் ஜத்” என்று கூறுவார்கள். (பொருள் : இறைவா, எங்கள் அதிபதியே! வானங்கள் நிரம்ப, பூமி நிரம்ப, இன்னும் அவற்றுக்கிடையே உள்ளவை நிரம்ப, மற்றும் நீ நாடிய இன்ன பிறவும் நிரம்பப் புகழனைத்தும் உனக்கே உரியது. புகழுக்கும் மாண்புக்கும் உரியவனே! நீ கொடுத்ததைத் தடுப்பவர் எவருமிலர்; நீ தடுத்ததைக் கொடுப்பவர் எவருமிலர். எவ்வளவு செல்வத்தை உடையவராக இருப்பினும் அது, அவருக்கு உன்(விசாரணைப்) பிடியிலிருந்து தப்பிக்கப் பயன்படாது).

அறிவிப்பாளர் : இபுனு அப்பாஸ் (ரலி)


குறிப்பு :

இப்னு நுமைர் (ரஹ்) வழி அறிவிப்பில், “… வமில்அ மா ஷிஃத்த மின் ஷையின் பஃது” வரை மட்டுமே இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 4, பாடம்: 40, ஹதீஸ் எண்: 736

حَدَّثَنَا ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الدَّارِمِيُّ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏مَرْوَانُ بْنُ مُحَمَّدٍ الدِّمَشْقِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سَعِيدُ بْنُ عَبْدِ الْعَزِيزِ ‏ ‏عَنْ ‏ ‏عَطِيَّةَ بْنِ قَيْسٍ ‏ ‏عَنْ ‏ ‏قَزْعَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ ‏ ‏قَالَ :‏‏

كَانَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِذَا رَفَعَ رَأْسَهُ مِنْ الرُّكُوعِ قَالَ ‏ ‏رَبَّنَا لَكَ الْحَمْدُ مِلْءُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَمِلْءُ مَا شِئْتَ مِنْ شَيْءٍ بَعْدُ أَهْلَ الثَّنَاءِ وَالْمَجْدِ أَحَقُّ مَا قَالَ الْعَبْدُ وَكُلُّنَا لَكَ عَبْدٌ اللَّهُمَّ لَا مَانِعَ لِمَا أَعْطَيْتَ وَلَا مُعْطِيَ لِمَا مَنَعْتَ وَلَا يَنْفَعُ ‏ ‏ذَا الْجَدِّ ‏ ‏مِنْكَ ‏ ‏الْجَدُّ ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ருகூஉவிலிருந்து தமது தலையை உயர்த்தியதும், “ரப்பனா! ல(க்)கல் ஹம்து மில்அஸ் ஸமாவாத்தி வல் அர்ளி வ மில்அ மா ஷிஃத்த மின் ஷையின் பஃது அஹ்லஸ் ஸனாயி வல்மஜ்தி அஹக்கு மா காலல் அப்து வ குல்லுனா ல(க்)க அப்து. அல்லாஹும்ம லா மானிஅ லிமா அஃதைத்த வலா முஃத்திய லிமா மனஃத்த வலா யன்ஃபஉ தல்ஜத்தி மின்க்கல் ஜத்” என்று கூறுவார்கள். (பொருள் : “எங்கள் அதிபதியே! வானங்களும் பூமியும் நிரம்ப, நீ நாடும் இன்ன பிறவும் நிரம்ப புகழனைத்தும் உனக்கே உரியது! புகழுக்கும் மாண்புக்கும் உரியவனே! நாங்கள் அனைவரும் உன் அடிமைகள்தாம்” அடியார்களின் கூற்றுகளில், “இறைவா! நீ கொடுத்ததைத் தடுப்பவர் எவருமிலர்; நீ தடுத்ததைக் கொடுப்பவர் எவருமிலர்; எவ்வளவு செல்வத்தை உடையவராக இருப்பினும் அது, அவருக்கு உன்(விசாரணைப்) பிடியிலிருந்து தப்பிக்கப் பயன்படாது” எனக் கூறுவது மிகவும் தகுதி வாய்ந்த கூற்றாகும்).

அறிவிப்பாளர் : அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)

அத்தியாயம்: 4, பாடம்: 40, ஹதீஸ் எண்: 735

حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏وَابْنُ بَشَّارٍ ‏ ‏قَالَ ‏ ‏ابْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏عَنْ ‏ ‏مَجْزَأَةَ بْنِ زَاهِرٍ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏عَبْدَ اللَّهِ بْنَ أَبِي أَوْفَى ‏ ‏يُحَدِّثُ :‏‏

عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَنَّهُ كَانَ يَقُولُ ‏ ‏اللَّهُمَّ لَكَ الْحَمْدُ مِلْءُ السَّمَاءِ وَمِلْءُ الْأَرْضِ وَمِلْءُ مَا شِئْتَ مِنْ شَيْءٍ بَعْدُ اللَّهُمَّ طَهِّرْنِي بِالثَّلْجِ وَالْبَرَدِ وَالْمَاءِ الْبَارِدِ اللَّهُمَّ طَهِّرْنِي مِنْ الذُّنُوبِ وَالْخَطَايَا كَمَا يُنَقَّى الثَّوْبُ الْأَبْيَضُ مِنْ الْوَسَخِ ‏


حَدَّثَنَا ‏ ‏عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏قَالَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَزِيدُ بْنُ هَارُونَ ‏ ‏كِلَاهُمَا ‏ ‏عَنْ ‏ ‏شُعْبَةَ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏فِي رِوَايَةِ ‏ ‏مُعَاذٍ ‏ ‏كَمَا يُنَقَّى الثَّوْبُ الْأَبْيَضُ مِنْ الدَّرَنِ ‏ ‏وَفِي رِوَايَةِ ‏ ‏يَزِيدَ ‏ ‏مِنْ ‏ ‏الدَّنَسِ ‏

நபி (ஸல்) (ருகூவிலிருந்து நிமிர்ந்ததும்), “அல்லாஹும்ம ல(க்)கல் ஹம்து மில்அஸ்ஸமாவாத்தி வ அமில்அல் அர்ளி, வ மில்அ மா ஷிஃத்த மின் ஷையின் பஃது; அல்லாஹும்ம தஹ்ஹிர்னீ பிஸ்ஸல்ஜி வல்பரதி வல்மாயில் பாரித்; அல்லாஹும்ம தஹ்ஹிர்னீ மினத் துனூபி வல்கத்தாயா கமாயுனக்கஸ் ஸவ்புல் அப்யளு மினல் வஸக்” (பொருள் : இறைவா! வானங்கள் நிரம்ப, பூமி நிரம்ப அவற்றுக்குப் பின் நீ நாடிய இன்ன பிறவும் நிரம்ப, புகழனைத்தும் உனக்கே உரியது! இறைவா, (உனது கனிவு எனும்) பனிக்கட்டியாலும் (அருள் எனும்) ஆலங்கட்டியாலும் (பிழை பொறுத்தல் எனும்) குளிர்ந்த நீராலும் என்னைத் தூய்மைப்படுத்துவாயாக! இறைவா, அழுக்கிலிருந்து வெண்மையான ஆடை தூய்மைப்படுவதைப் போன்று பாவங்களிலிருந்தும் தவறுகளிலிருந்தும் என்னைத் தூய்மைப்படுத்துவாயாக!).

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் அபீஅவ்ஃபா (ரலி)


குறிப்பு :

முஆத் (ரஹ்) வழி அறிவிப்பில், (“வஸக்” எனும் சொல்லுக்குப் பகரமாக) “தரன்” எனும் சொல் இடம்பெற்றுள்ளது. யஸீத் பின் ஹாரூன் (ரஹ்) வழி அறிவிப்பில் “தனஸ்” எனும் சொல் இடம் பெற்றுள்ளது. (மூன்று சொற்களுக்கும் “அழுக்கு” என்பதே பொருளாகும்)

அத்தியாயம்: 4, பாடம்: 40, ஹதீஸ் எண்: 734

حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏وَابْنُ بَشَّارٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏عَنْ ‏ ‏عُبَيْدِ بْنِ الْحَسَنِ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏عَبْدَ اللَّهِ بْنَ أَبِي أَوْفَى ‏ ‏قَالَ :‏‏

كَانَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَدْعُو بِهَذَا الدُّعَاءِ ‏ ‏اللَّهُمَّ رَبَّنَا لَكَ الْحَمْدُ مِلْءُ السَّمَاوَاتِ وَمِلْءُ الْأَرْضِ وَمِلْءُ مَا شِئْتَ مِنْ شَيْءٍ بَعْدُ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (ருகூஉவிலிருந்து நிமிர்ந்து, “ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ்” என்று கூறிவிட்டு) “அல்லாஹும்ம ரப்பனா ல(க்)கல் ஹம்து மில்அஸ் ஸமாவாத்தி வ மில்அல் அர்ளி வ மில்அ மா ஷிஃத்த மின் ஷையின் பஃது” என்று துதிப்பார்கள் (பொருள் : இறைவா! எங்கள் அதிபதியே! வானங்கள் நிரம்ப, பூமி நிரம்ப, அவற்றுக்குப்பின் நீ நாடிய இன்ன பிறவும் நிரம்ப, புகழ் அனைத்தும் உனக்கே உரியது) என்று புகழ்வார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் அபீஅவ்ஃபா (ரலி)