அத்தியாயம்: 4, பாடம்: 40, ஹதீஸ் எண்: 733

حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو مُعَاوِيَةَ ‏ ‏وَوَكِيعٌ ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْمَشِ ‏ ‏عَنْ ‏ ‏عُبَيْدِ بْنِ الْحَسَنِ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ أَبِي أَوْفَى ‏ ‏قَالَ :‏‏

كَانَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِذَا رَفَعَ ظَهْرَهُ مِنْ الرُّكُوعِ قَالَ ‏ ‏سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ اللَّهُمَّ رَبَّنَا لَكَ الْحَمْدُ مِلْءُ السَّمَاوَاتِ وَمِلْءُ الْأَرْضِ وَمِلْءُ مَا شِئْتَ مِنْ شَيْءٍ بَعْدُ ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ருகூஉவிலிருந்து தமது முதுகை நிமிர்த்தி விட்டால், “ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ்; அல்லாஹும்ம ரப்பனா ல(க்)கல் ஹம்து மில்அஸ் ஸமாவாத்தி வ மில்அல்அர்ளி வ மில்அ மா ஷிஃத்த மின் ஷையின் பஃது” (பொருள் : அல்லாஹ் தன்னைப் புகழ்வோரின் புகழுரையை ஏற்றுக் கொள்கின்றான். இறைவா! எங்கள் அதிபதியே! வானங்கள் நிரம்ப, பூமி நிரம்ப, அவற்றுக்குப்பின் நீ நாடிய இன்ன பிறவும் நிரம்ப, புகழ் அனைத்தும் உனக்கே உரியது) என்று கூறுவார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் அபீஅவ்ஃபா (ரலி)

அத்தியாயம்: 4, பாடம்: 39, ஹதீஸ் எண்: 732

حَدَّثَنَا ‏ ‏مُحْرِزُ بْنُ عَوْنِ بْنِ أَبِي عَوْنٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏خَلَفُ بْنُ خَلِيفَةَ الْأَشْجَعِيُّ أَبُو أَحْمَدَ ‏ ‏عَنْ ‏ ‏الْوَلِيدِ بْنِ سَرِيعٍ ‏ ‏مَوْلَى آلِ ‏ ‏عَمْرِو بْنِ حُرَيْثٍ ‏ ‏عَنْ ‏ ‏عَمْرِو بْنِ حُرَيْثٍ ‏ ‏قَالَ ‏:‏

‏صَلَّيْتُ خَلْفَ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏الْفَجْرَ فَسَمِعْتُهُ ‏ ‏يَقْرَأُ ‏ ‏فَلَا أُقْسِمُ ‏ ‏بِالْخُنَّسِ ‏ ‏الْجَوَارِ ‏ ‏الْكُنَّسِ ‏ ‏وَكَانَ لَا يَحْنِي رَجُلٌ مِنَّا ظَهْرَهُ حَتَّى يَسْتَتِمَّ سَاجِدًا

நான் நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னால் (ஒரு) ஃபஜ்ருத் தொழுகையைத் தொழுதேன். அதில் அவர்கள், “ஃபலா உக்ஸிமு பில் குன்னஸ்; அல்ஜவாரில் குன்னஸ் …” எனும் வசன(ங்கள் இடம் பெற்றுள்ள 81ஆவது அத்தியாய)த்தை ஓதுவதை நான் செவியுற்றேன்.

நபி (ஸல்) முழுமையாக ஸஜ்தாவிற்குப் போய்ச் சேராதவரை எங்களில் எவரும் தமது முதுகை (ஸஜ்தாவிற்காக) வளைக்கமாட்டார்.

அறிவிப்பாளர் : அம்ரு பின் ஹுரைஸ் (ரலி)

அத்தியாயம்: 4, பாடம்: 39, ஹதீஸ் எண்: 731

حَدَّثَنَا ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏وَابْنُ نُمَيْرٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبَانُ ‏ ‏وَغَيْرُهُ ‏ ‏عَنْ ‏ ‏الْحَكَمِ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى ‏ ‏عَنْ ‏ ‏الْبَرَاءِ ‏ ‏قَالَ :‏‏

‏كُنَّا مَعَ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لَا ‏ ‏يَحْنُو أَحَدٌ مِنَّا ظَهْرَهُ حَتَّى ‏ ‏نَرَاهُ قَدْ سَجَدَ ‏


‏فَقَالَ ‏ ‏زُهَيْرٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ ‏ ‏قَالَ حَدَّثَنَا الْكُوفِيُّونَ ‏ ‏أَبَانُ ‏ ‏وَغَيْرُهُ قَالَ حَتَّى ‏ ‏نَرَاهُ يَسْجُدُ

நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் (தொழுகையில்) இருக்கும்போது அவர்கள் ஸஜ்தாச் செய்துவிட்டதைப் பார்க்கும்வரை எங்களில் எவரும் (ஸஜ்தாச் செய்வதற்காக) தமது முதுகை வளைக்கமாட்டார்.

அறிவிப்பாளர் : பராஉ பின் ஆஸிப் (ரலி)


குறிப்பு :

ஸுஃப்யான் (ரஹ்) வழி அறிவிப்பில் “… ஸஜ்தாச் செய்வதைப் பார்க்கும்வரை …” என்று இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 4, பாடம்: 39, ஹதீஸ் எண்: 730

حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ سَهْمٍ الْأَنْطَاكِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏إِبْرَاهِيمُ بْنُ مُحَمَّدٍ أَبُو إِسْحَقَ الْفَزَارِيُّ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي إِسْحَقَ الشَّيْبَانِيِّ ‏ ‏عَنْ ‏ ‏مُحَارِبِ بْنِ دِثَارٍ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏عَبْدَ اللَّهِ بْنَ يَزِيدَ ‏ ‏يَقُولُا ‏ ‏عَلَى الْمِنْبَرِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏الْبَرَاءُ :‏‏

‏أَنَّهُمْ كَانُوا يُصَلُّونَ مَعَ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَإِذَا رَكَعَ رَكَعُوا وَإِذَا رَفَعَ رَأْسَهُ مِنْ الرُّكُوعِ فَقَالَ ‏ ‏سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ لَمْ نَزَلْ قِيَامًا حَتَّى ‏ ‏نَرَاهُ قَدْ وَضَعَ وَجْهَهُ فِي الْأَرْضِ ثُمَّ نَتَّبِعُهُ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் நாங்கள் தொழுவோம். அவர்கள் ருகூஉச் செய்த பிறகுதான் நாங்கள் ருகூஉச் செய்வோம். அவர்கள் ருகூஉவிலிருந்து தலையை உயர்த்தி “ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ்” என்று கூறியபின் அவர்கள் (ஸஜ்தாவிற்குச் சென்று) தமது நெற்றியை பூமியில் வைப்பதைப் பார்க்கும்வரை நின்று கொண்டேயிருப்போம்; பிறகுதான் அவர்களைப் பின்தொடர்வோம்.

அறிவிப்பாளர் : பராஉ பின் ஆஸிப் (ரலி) வழியாக அப்துல்லாஹ் பின் யஸீத் (ரலி)


குறிப்பு :

அப்துல்லாஹ் பின் யஸீத் (ரலி) அவர்களின் ஒரு மேடைச் சொற்பொழிவின்போது இந்த ஹதீஸைக் கேட்டதாக முஹாரிப் பின் திஸார் குறிப்பிடுகின்றார்.

அத்தியாயம்: 4, பாடம்: 39, ஹதீஸ் எண்: 729

و حَدَّثَنِي ‏ ‏أَبُو بَكْرِ بْنُ خَلَّادٍ الْبَاهِلِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى يَعْنِي ابْنَ سَعِيدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏أَبُو إِسْحَقَ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ يَزِيدَ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏الْبَرَاءُ ‏ ‏وَهُوَ غَيْرُ كَذُوبٍ ‏ ‏قَالَ :‏‏

‏كَانَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِذَا قَالَ ‏ ‏سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ لَمْ يَحْنِ أَحَدٌ مِنَّا ظَهْرَهُ حَتَّى يَقَعَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏سَاجِدًا ثُمَّ نَقَعُ سُجُودًا بَعْدَهُ ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ்” என்று கூறி, அவர்கள் ஸஜ்தாச் செய்யாதவரை எங்களில் எவரும் எங்கள் முதுகை (ஸஜ்தாவிற்காக) வளைக்க மாட்டோம்; (அவர்கள் ஸஜ்தாச் செய்த) பிறகுதான் நாங்கள் ஸஜ்தாச் செய்வோம்.

அறிவிப்பாளர் : பராஉ பின் ஆஸிப் (ரலி) வழியாக அப்துல்லாஹ் பின் யஸீத் (ரலி)


குறிப்பு :

“பொய் பேசாதவரான பராஉ பின் ஆஸிப் (ரலி) எனக்கு இதை அறிவித்தார்” என அப்துல்லாஹ் பின் யஸீத் (ரலி) குறிப்பிடுகின்றார்.

அத்தியாயம்: 4, பாடம்: 39, ஹதீஸ் எண்: 728

حَدَّثَنَا ‏ ‏أَحْمَدُ بْنُ يُونُسَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏زُهَيْرٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو إِسْحَقَ ‏ ‏قَالَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏أَبُو خَيْثَمَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي إِسْحَقَ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ يَزِيدَ ‏ ‏قَالَ حَدَّثَنِي ‏ ‏الْبَرَاءُ ‏ ‏وَهُوَ غَيْرُ كَذُوبٍ :‏‏

‏أَنَّهُمْ كَانُوا ‏ ‏يُصَلُّونَ خَلْفَ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَإِذَا رَفَعَ رَأْسَهُ مِنْ الرُّكُوعِ لَمْ أَرَ أَحَدًا يَحْنِي ظَهْرَهُ حَتَّى يَضَعَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏جَبْهَتَهُ عَلَى الْأَرْضِ ثُمَّ يَخِرُّ مَنْ وَرَاءَهُ سُجَّدًا

நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குப் பின்னால் தொழுது வந்தோம். அவர்கள் ருகூஉச் செய்து தலையை உயர்த்திவிட்டால் அவர்கள் பூமியில் தமது நெற்றியை வைக்கும்வரை (எங்களில்) யாரும் தமது முதுகை (ஸஜ்தாச் செய்வதற்காக) வளைப்பதை நான் கண்டதில்லை. அல்லாஹ்வின் தூதர் (அவர்கள் ஸஜ்தாச் செய்த) பிறகுதான் பின்னாலிருப்பவர்கள் ஸஜ்தாச் செய்வார்கள்.

அறிவிப்பாளர் : பராஉ பின் ஆஸிப் (ரலி) வழியாக அப்துல்லாஹ் பின் யஸீத் (ரலி)


குறிப்பு :

“பொய் பேசாதவரான பராஉ பின் ஆஸிப் (ரலி) எனக்கு இதை அறிவித்தார்” என அப்துல்லாஹ் பின் யஸீத் (ரலி) குறிப்பிடுகிறார்.

அத்தியாயம்: 4, பாடம்: 38, ஹதீஸ் எண்: 727

و حَدَّثَنِي ‏ ‏أَبُو بَكْرِ بْنُ نَافِعٍ الْعَبْدِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏بَهْزٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حَمَّادٌ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ثَابِتٌ ‏ ‏عَنْ ‏ ‏أَنَسٍ ‏ ‏قَالَ ‏:‏

مَا صَلَّيْتُ خَلْفَ أَحَدٍ أَوْجَزَ صَلَاةً مِنْ صَلَاةِ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فِي تَمَامٍ كَانَتْ صَلَاةُ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مُتَقَارِبَةً وَكَانَتْ صَلَاةُ ‏ ‏أَبِي بَكْرٍ ‏ ‏مُتَقَارِبَةً فَلَمَّا كَانَ ‏ ‏عُمَرُ بْنُ الْخَطَّابِ ‏ ‏مَدَّ فِي صَلَاةِ الْفَجْرِ وَكَانَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِذَا قَالَ ‏ ‏سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ قَامَ حَتَّى نَقُولَ قَدْ أَوْهَمَ ثُمَّ يَسْجُدُ وَيَقْعُدُ بَيْنَ السَّجْدَتَيْنِ حَتَّى نَقُولَ قَدْ أَوْهَمَ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைவிட மிகச் சுருக்கமாகவும் நிறைவாகவும் தொழுவிக்கக்கூடிய எவருக்குப் பின்னாலும் நான் தொழுததில்லை. அவர்களது தொழுகை(யின் ஒவ்வொரு நிலையும்) சமமான அளவிலேயே அமைந்திருந்தது. அபூபக்ரு (ரலி) அவர்களது தொழுகையும் அவ்வாறே சமநிலைகளில் அமைந்திருந்தது. உமர் (ரலி) அவர்கள் (ஆட்சிக்கு) வந்தபோது ஃபஜ்ருத் தொழுகையை நீண்ட நேரம் தொழுவித்தார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (தொழுகையில்) “ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ்” என்று கூறியதும் (அடுத்த நிலையை) அவர்கள் மறந்துவிட்டார்களோ என்று நாங்கள் எண்ணும் அளவுக்கு நீண்ட நேரம் நிலையில் நிற்பார்கள். பிறகு ஸஜ்தாச் செய்வார்கள். (அடுத்த நிலையை) அவர்கள் மறந்துவிட்டார்களோ என்று நாங்கள் எண்ணும் அளவுக்கு இரு ஸஜ்தாக்களுக்கு இடையே (நீண்ட நேரம்) அமர்ந்திருப்பார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் (ரலி)

அத்தியாயம்: 4, பாடம்: 38, ஹதீஸ் எண்: 726

حَدَّثَنَا ‏ ‏خَلَفُ بْنُ هِشَامٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حَمَّادُ بْنُ زَيْدٍ ‏ ‏عَنْ ‏ ‏ثَابِتٍ :‏‏

عَنْ ‏ ‏أَنَسٍ ‏ ‏قَالَ ‏ ‏إِنِّي لَا ‏ ‏آلُو ‏ ‏أَنْ أُصَلِّيَ بِكُمْ كَمَا رَأَيْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يُصَلِّي بِنَا قَالَ فَكَانَ ‏ ‏أَنَسٌ ‏ ‏يَصْنَعُ شَيْئًا لَا أَرَاكُمْ تَصْنَعُونَهُ كَانَ إِذَا رَفَعَ رَأْسَهُ مِنْ الرُّكُوعِ انْتَصَبَ قَائِمًا حَتَّى يَقُولَ الْقَائِلُ قَدْ نَسِيَ وَإِذَا رَفَعَ رَأْسَهُ مِنْ السَّجْدَةِ مَكَثَ حَتَّى يَقُولَ الْقَائِلُ قَدْ نَسِيَ ‏

“அல்லாஹ்வின் தூதர் (ஸல்) எங்களுக்குத் தொழுவித்ததைப் பார்த்ததைப் போன்று, அதில் ஒருகுறையும் வைக்காமல் நான் உங்களுக்குத் தொழுவிக்கிறேன்” என (ஒருபோது) எங்களுக்கு அனஸ் (ரலி) கூறி(த் தொழவைக்கலா)னார்கள்.

அனஸ் (ரலி) (தொழுவித்தபோது) செய்த ஒன்றை நீங்கள் செய்ய நான் பார்த்ததில்லை. அவர்கள் குனிந்து (ருகூஉச் செய்து) நிமிர்ந்து, (அடுத்துச் செய்ய வேண்டியதை) மறந்துவிட்டார்களோ என்று எண்ணுமளவுக்கு நீண்ட நேரம் நிலையில் நிற்பார்கள்; ஸஜ்தாச் செய்து தலையை உயர்த்தியதும் (அடுத்துச் செய்ய வேண்டியதை) மறந்துவிட்டார்களோ என்று எண்ணுமளவுக்கு இருப்பில் (நீண்ட நேரம்) அமர்ந்திருப்பார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் (ரலி) வழியாக ஸாபித் அல் புனானீ (ரஹ்)

அத்தியாயம்: 4, பாடம்: 38, ஹதீஸ் எண்: 725

و حَدَّثَنَا ‏ ‏عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ الْعَنْبَرِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏عَنْ ‏ ‏الْحَكَمِ ‏ ‏قَالَ ‏ ‏غَلَبَ عَلَى ‏ ‏الْكُوفَةِ ‏ ‏رَجُلٌ قَدْ سَمَّاهُ زَمَنَ ‏ ‏ابْنِ الْأَشْعَثِ ‏ ‏فَأَمَرَ ‏ ‏أَبَا عُبَيْدَةَ بْنَ عَبْدِ اللَّهِ ‏ ‏أَنْ يُصَلِّيَ بِالنَّاسِ فَكَانَ ‏ ‏يُصَلِّي فَإِذَا رَفَعَ رَأْسَهُ مِنْ الرُّكُوعِ قَامَ قَدْرَ مَا أَقُولُ اللَّهُمَّ رَبَّنَا لَكَ الْحَمْدُ مِلْءُ السَّمَاوَاتِ وَمِلْءُ الْأَرْضِ وَمِلْءُ مَا شِئْتَ مِنْ شَيْءٍ بَعْدُ أَهْلَ الثَّنَاءِ وَالْمَجْدِ لَا مَانِعَ لِمَا أَعْطَيْتَ وَلَا مُعْطِيَ لِمَا مَنَعْتَ وَلَا يَنْفَعُ ‏ ‏ذَا الْجَدِّ ‏ ‏مِنْكَ ‏ ‏الْجَدُّ ‏ ‏قَالَ ‏ ‏الْحَكَمُ ‏ ‏فَذَكَرْتُ ذَلِكَ ‏ ‏لِعَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى ‏ ‏فَقَالَ سَمِعْتُ ‏ ‏الْبَرَاءَ بْنَ عَازِبٍ ‏ ‏يَقُولُ :‏ ‏

كَانَتْ صَلَاةُ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَرُكُوعُهُ وَإِذَا رَفَعَ رَأْسَهُ مِنْ الرُّكُوعِ وَسُجُودُهُ وَمَا بَيْنَ السَّجْدَتَيْنِ قَرِيبًا مِنْ السَّوَاءِ ‏


قَالَ ‏ ‏شُعْبَةُ ‏ ‏فَذَكَرْتُهُ ‏ ‏لِعَمْرِو بْنِ مُرَّةَ ‏ ‏فَقَالَ قَدْ رَأَيْتُ ‏ ‏ابْنَ أَبِي لَيْلَى ‏ ‏فَلَمْ تَكُنْ صَلَاتُهُ هَكَذَا ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏وَابْنُ بَشَّارٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏عَنْ ‏ ‏الْحَكَمِ ‏ ‏أَنَّ ‏ ‏مَطَرَ بْنَ نَاجِيَةَ ‏ ‏لَمَّا ظَهَرَ عَلَى ‏ ‏الْكُوفَةِ ‏ ‏أَمَرَ ‏ ‏أَبَا عُبَيْدَةَ ‏ ‏أَنْ يُصَلِّيَ بِالنَّاسِ ‏ ‏وَسَاقَ الْحَدِيثَ ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது தொழுகை (நிலை), அவர்களது ருகூஉ, ருகூவிலிருந்து தலைநிமிர்த்தி எழுந்து நிற்றல், அவர்களது ஸஜ்தா, இரு ஸஜ்தாக்களுக்கு இடைப்பட்ட அமர்வு ஆகியன ஏறத்தாழ சமஅளவில் அமைந்திருந்தன.

அறிவிப்பாளர் : பராஉ பின் ஆஸிப் (ரலி) வழியாக அப்துர்ரஹ்மான் பின் அபீலைலா (ரஹ்) வழியாக ஹகம் பின் உபைதா (ரஹ்).


குறிப்புகள் :

“இப்னுல் அஷ்அஸ் காலத்தில் (இராக்கிலுள்ள) கூஃபா நகரை, (மத்தர் பின் நாஜியா எனும் பெயருடைய) ஒருவர் வெற்றி கொண்டார். அவர், அபூஉபைதா பின் அப்தில்லாஹ் பின் மஸ்ஊத் (ரஹ்) அவர்களை மக்களுக்குத் (தலைமை தாங்கித்) தொழுவிக்குமாறு பணித்தார். அவ்வாறே அபூஉபைதா (ரஹ்) தொழவித்து வந்தார். அவர் தொழுகையில் ருகூவிலிருந்து தலையை உயர்த்தினால், ‘அல்லாஹும்ம ரப்பனா ல(க்)கல் ஹம்து மில்அஸ் ஸமாவாத்தி வ மில்அல் அர்ளி, வ மில்அ மா ஷிஃத்த மின் ஷையிம் பஅத் அஹ்லஸ் ஸனாயி வல்மஜ்தி. லா மானிஅ லிமா அஃதைத்த வலா முஃத்திய லிமா மனஃத்த வலா யன்ஃபஉ தல்ஜத்தி மின்க்கல் ஜத்’ என்று நான் சொல்லும் அளவிற்கு நிற்பார்” என்று ஹகம் பின் உபைதா (ரஹ்) சொல்லிக் கொண்டு வரும்போது, மேற்காணும் ஹதீஸை பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்களிடமிருந்து தாம் செவியுற்றதாக அப்துர்ரஹ்மான் பின் அபீலைலா கூறியதாகக் குறிப்பிடப் படுகின்றது.

“மத்தர் பின் நாஜியா என்பார் கூஃபா நகரை வெற்றி கொண்டபோது அபூஉபைதா (ரஹ்) அவர்களை மக்களுக்குத் (தலைமை தாங்கித்) தொழுவிக்குமாறு பணித்தார் …” (எனும் தகவலுடன் கூடிய) “இந்த ஹதீஸை நான் அம்ரு பின் முர்ரா (ரஹ்) அவர்களிடம் கூறினேன். அப்போது அவர்கள், ‘நான் அப்துர் ரஹ்மான் பின் அபீலைலா (ரஹ்) அவர்க(ளது தொழுகைக)ளைப் பார்த்திருக்கிறேன். அவர்களது தொழுகை அவ்வாறு அமைந்திருக்கவில்லை’ என்று கூறினார்” என்று ஷுஅபா (ரஹ்) குறிப்பிடுகிறார்.

அத்தியாயம்: 4, பாடம்: 38, ஹதீஸ் எண்: 724

و حَدَّثَنَا ‏ ‏حَامِدُ بْنُ عُمَرَ الْبَكْرَاوِيُّ ‏ ‏وَأَبُو كَامِلٍ فُضَيْلُ بْنُ حُسَيْنٍ الْجَحْدَرِيُّ ‏ ‏كِلَاهُمَا ‏ ‏عَنْ ‏ ‏أَبِي عَوَانَةَ ‏ ‏قَالَ ‏ ‏حَامِدٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو عَوَانَةَ ‏ ‏عَنْ ‏ ‏هِلَالِ بْنِ أَبِي حُمَيْدٍ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى ‏ ‏عَنْ ‏ ‏الْبَرَاءِ بْنِ عَازِبٍ ‏ ‏قَالَ ‏:‏

رَمَقْتُ ‏ ‏الصَّلَاةَ مَعَ ‏ ‏مُحَمَّدٍ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَوَجَدْتُ قِيَامَهُ فَرَكْعَتَهُ فَاعْتِدَالَهُ بَعْدَ رُكُوعِهِ فَسَجْدَتَهُ فَجَلْسَتَهُ بَيْنَ السَّجْدَتَيْنِ فَسَجْدَتَهُ فَجَلْسَتَهُ مَا بَيْنَ التَّسْلِيمِ ‏ ‏وَالِانْصِرَافِ قَرِيبًا مِنْ السَّوَاءِ

நான் முஹம்மது (ஸல்) அவர்களது தொழுகை(முறை)யை உற்று நோக்கி வந்தேன். தொழுகையில் அவர்களது நிலை (கியாம்), குனிதல் (ருகூஉ), நிமிர்ந்து நிலைகொள்ளல் (இஃதிதால்), சிரவணக்கம் (ஸஜ்தா), இரு ஸஜ்தாக்களின் இடைப்பட்ட அமர்வு, மறு ஸஜ்தா, மறு அமர்வு, ஸலாம் கூறித் தொழுகையை நிறைவு செய்து எழுவது ஆகியவற்றின் காலஅளவுகள் ஏறக்குறைய சமஅளவில் அமைந்திருந்தன.

அறிவிப்பாளர் : பராஉ பின் ஆஸிப் (ரலி)