அத்தியாயம்: 4, பாடம்: 10, ஹதீஸ் எண்: 593

حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَعْقُوبُ يَعْنِي ابْنَ عَبْدِ الرَّحْمَنِ ‏ ‏عَنْ ‏ ‏سُهَيْلٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏:‏

‏أَنَّهُ كَانَ ‏ ‏يُكَبِّرُ كُلَّمَا خَفَضَ وَرَفَعَ وَيُحَدِّثُ أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏كَانَ يَفْعَلُ ذَلِكَ ‏

அபூஹுரைரா (ரலி) (தொழுகையில்) ஒவ்வொரு முறை குனியும்போதும் நிமிரும்போதும் தக்பீர் கூறுபவர்களாக இருந்தார்கள். மேலும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவ்வாறு செய்து வந்ததாக அறிவித்தார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி) வழியாக அபூஸாலிஹ் தக்வான் (ரஹ்)

அத்தியாயம்: 4, பாடம்: 10, ஹதீஸ் எண்: 592

حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ مِهْرَانَ الرَّازِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏الْأَوْزَاعِيُّ ‏ ‏عَنْ ‏ ‏يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي سَلَمَةَ ‏ ‏أَنَّ ‏ ‏أَبَا هُرَيْرَةَ ‏:‏

‏كَانَ ‏ ‏يُكَبِّرُ فِي الصَّلَاةِ كُلَّمَا رَفَعَ وَوَضَعَ فَقُلْنَا يَا ‏ ‏أَبَا هُرَيْرَةَ ‏ ‏مَا هَذَا التَّكْبِيرُ قَالَ إِنَّهَا لَصَلَاةُ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏

அபூஹுரைரா (ரலி) தொழுகையில் ஒவ்வொரு முறை குனியும்போதும் நிமிரும்போதும் தக்பீர் கூறிக்கொண்டிருந்தார்கள். (தொழுகை முடிந்ததும் அவர்களிடம்) நாங்கள், “அபூஹுரைரா! இது என்ன தக்பீர்?” என்று கேட்டோம். அதற்கு அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தொழுகை இவ்வாறுதான் அமைந்திருந்தது” என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி) வழியாக அபூஸலமா பின் அப்திர் ரஹ்மான் பின் அவ்ஃபு (ரஹ்)

அத்தியாயம்: 4, பாடம்: 10, ஹதீஸ் எண்: 591

حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ رَافِعٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الرَّزَّاقِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ جُرَيْجٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏ابْنُ شِهَابٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي بَكْرِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ ‏ ‏أَنَّهُ سَمِعَ ‏ ‏أَبَا هُرَيْرَةَ ‏ ‏يَقُولُ‏ :‏

‏كَانَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِذَا قَامَ إِلَى الصَّلَاةِ يُكَبِّرُ حِينَ يَقُومُ ثُمَّ يُكَبِّرُ حِينَ يَرْكَعُ ثُمَّ يَقُولُ ‏ ‏سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ حِينَ يَرْفَعُ صُلْبَهُ مِنْ الرُّكُوعِ ثُمَّ يَقُولُ وَهُوَ قَائِمٌ رَبَّنَا وَلَكَ الْحَمْدُ ثُمَّ يُكَبِّرُ حِينَ يَهْوِي سَاجِدًا ثُمَّ يُكَبِّرُ حِينَ يَرْفَعُ رَأْسَهُ ثُمَّ يُكَبِّرُ حِينَ يَسْجُدُ ثُمَّ يُكَبِّرُ حِينَ يَرْفَعُ رَأْسَهُ ثُمَّ يَفْعَلُ مِثْلَ ذَلِكَ فِي الصَّلَاةِ كُلِّهَا حَتَّى يَقْضِيَهَا وَيُكَبِّرُ حِينَ يَقُومُ مِنْ الْمَثْنَى بَعْدَ الْجُلُوسِ ثُمَّ يَقُولُ ‏ ‏أَبُو هُرَيْرَةَ ‏ ‏إِنِّي لَأَشْبَهُكُمْ صَلَاةً بِرَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏


‏حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ رَافِعٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حُجَيْنٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏اللَّيْثُ ‏ ‏عَنْ ‏ ‏عُقَيْلٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏أَبُو بَكْرِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْحَارِثِ ‏ ‏أَنَّهُ سَمِعَ ‏ ‏أَبَا هُرَيْرَةَ ‏ ‏يَقُولُ ‏ ‏كَانَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِذَا قَامَ إِلَى الصَّلَاةِ يُكَبِّرُ حِينَ يَقُومُ بِمِثْلِ حَدِيثِ ‏ ‏ابْنِ جُرَيْجٍ ‏ ‏وَلَمْ يَذْكُرْ قَوْلَ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏إِنِّي أَشْبَهُكُمْ صَلَاةً بِرَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏حَرْمَلَةُ بْنُ يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏يُونُسُ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏أَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ ‏ ‏أَنَّ ‏ ‏أَبَا هُرَيْرَةَ ‏ ‏كَانَ حِينَ يَسْتَخْلِفُهُ ‏ ‏مَرْوَانُ ‏ ‏عَلَى ‏ ‏الْمَدِينَةِ ‏ ‏إِذَا قَامَ لِلصَّلَاةِ الْمَكْتُوبَةِ كَبَّرَ فَذَكَرَ نَحْوَ حَدِيثِ ‏ ‏ابْنِ جُرَيْجٍ ‏ ‏وَفِي حَدِيثِهِ فَإِذَا قَضَاهَا وَسَلَّمَ أَقْبَلَ عَلَى أَهْلِ الْمَسْجِدِ قَالَ وَالَّذِي نَفْسِي بِيَدِهِ إِنِّي لَأَشْبَهُكُمْ صَلَاةً بِرَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏

“அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தொழுகைக்காக நின்றவுடன் (தொடக்க) தக்பீர் கூறுவார்கள். பிறகு ருகூச் செய்யும்போதும் தக்பீர் கூறுவார்கள். பின்பு ருகூவிலிருந்து முதுகை நிமிர்த்தும்போது ‘ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ்’ என்று கூறுவார்கள். பின்பு நிலைக்கு வந்து ‘ரப்பனா வ லக்கல் ஹம்து’ என்று கூறுவார்கள். பிறகு ஸஜ்தாவுக்காகத் தாழும்போதும் தக்பீர் கூறுவார்கள். பின்பு (ஸஜ்தாவிலிருந்து) தலையை உயர்த்தும்போதும் தக்பீர் கூறுவார்கள். பிறகு (இரண்டாவது) ஸஜ்தாவுக்குச் செல்லும்போதும் பின்னர் (ஸஜ்தாவிலிருந்து) தலையை உயர்த்தும்போதும் தக்பீர் கூறுவார்கள். தொழுது முடிக்கும்வரை இவ்வாறே தொழுகையின் எல்லா ரக்அத்களிலும் செய்வார்கள். இரண்டாவது ரக்அத்தில் அமர்ந்து விட்டு எழும்போதும் தக்பீர் கூறுவார்கள்” என்று அபூஹுரைரா (ரலி) கூறினார்கள். பின்னர், “தொழுகை(முறை)யில் உங்களுள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது தொழுகை(முறை)யோடு நான் மிகவும் ஒத்திருக்கின்றேன்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி) வழியாக அபூஸலமா பின் அப்திர் ரஹ்மான் பின் அவ்ஃபு (ரஹ்)


குறிப்பு :

அபூபக்ரு பின் அப்திர்ரஹ்மான் அல் ஹாரிஸ் (ரஹ்) வழி அறிவிப்பு, “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தொழுகைக்காக நின்றவுடன் தக்பீர் கூறுவார்கள் …” எனத் தொடங்கித் தொடர்கிறது. ஆனால், (தொழுகின்ற முறையில்) உங்களுள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது தொழுகை முறையோடு நான் மிகவும் ஒத்திருக்கின்றேன்” என அபூஹுரைரா (ரலி) குறிப்பிட்ட இறுதிப் பகுதி அதில் இடம்பெறவில்லை.

யூனுஸ் (ரஹ்) வழி அறிவிப்பு, “மர்வான் பின் ஹகம் என்பார், அபூஹுரைரா (ரலி) அவர்களை மதீனாவின் ஆளுனராக நியமித்திருந்தபோது, அபூஹுரைரா (ரலி) கடமையான தொழுகையைத் தொழுவிக்கத் தொடங்கும்போது (தொடக்க) தக்பீர் கூறுவார்கள் …” எனத் தொடங்கித் தொடர்கிறது. அதன் இறுதியில், “தொழுது முடித்து விட்டு ஸலாம் கொடுத்ததும் பள்ளிவாசலில் அமர்ந்திருப்பவர்களை முன்னோக்கி அமர்ந்து கொண்டு, ‘என் உயிர் கையிலுள்ளவன் மீது ஆணையாக! தொழுகை(முறை)யில் உங்களுள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது தொழுகை(முறை)யோடு நான் மிகவும் ஒத்திருக்கின்றேன்’ என்று அபூஹுரைரா (ரலி)  கூறினார்கள்” என்று இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 4, பாடம்: 10, ஹதீஸ் எண்: 590

و حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏قَالَ قَرَأْتُ عَلَى ‏ ‏مَالِكٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ ‏ ‏أَنَّ ‏ ‏أَبَا هُرَيْرَةَ ‏:‏

‏كَانَ ‏ ‏يُصَلِّي لَهُمْ فَيُكَبِّرُ كُلَّمَا خَفَضَ وَرَفَعَ فَلَمَّا انْصَرَفَ قَالَ وَاللَّهِ إِنِّي لَأَشْبَهُكُمْ صَلَاةً بِرَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏

அபூஹுரைரா (ரலி) (தொழுகையின்) ஒவ்வொரு நிலைமாற்றத்தின் போதும் தக்பீர் கூறி மக்களுக்குத் தொழுவித்து வந்தார்கள். அவ்வாறு (ஒருபோது) தொழுது முடிந்ததும், “அல்லாஹ் மீதாணையாக! தொழுகை(முறை)யில் உங்களுள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது தொழுகை(முறை)யோடு நான் மிகவும் ஒத்திருக்கின்றேன்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி) வழியாக அபூஸலமா பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்)

அத்தியாயம்: 4, பாடம்: 09, ஹதீஸ் எண்: 589

حَدَّثَنِي ‏ ‏أَبُو كَامِلٍ الْجَحْدَرِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو عَوَانَةَ ‏ ‏عَنْ ‏ ‏قَتَادَةَ ‏ ‏عَنْ ‏ ‏نَصْرِ بْنِ عَاصِمٍ ‏ ‏عَنْ ‏ ‏مَالِكِ بْنِ الْحُوَيْرِثِ ‏:‏

‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏كَانَ إِذَا كَبَّرَ رَفَعَ يَدَيْهِ حَتَّى ‏ ‏يُحَاذِيَ ‏ ‏بِهِمَا أُذُنَيْهِ وَإِذَا رَكَعَ رَفَعَ يَدَيْهِ حَتَّى يُحَاذِيَ بِهِمَا أُذُنَيْهِ وَإِذَا رَفَعَ رَأْسَهُ مِنْ الرُّكُوعِ فَقَالَ ‏ ‏سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ فَعَلَ مِثْلَ ذَلِكَ ‏


‏و حَدَّثَنَاه ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ أَبِي عَدِيٍّ ‏ ‏عَنْ ‏ ‏سَعِيدٍ ‏ ‏عَنْ ‏ ‏قَتَادَةَ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏أَنَّهُ رَأَى نَبِيَّ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَقَالَ حَتَّى يُحَاذِيَ بِهِمَا فُرُوعَ أُذُنَيْهِ ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (தொழுகையின் தொடக்க) தக்பீர் (அல்லாஹு அக்பர்) கூறும்போதும் ருகூச் செய்யும்போதும் தம் இருகைகளையும் தம் காதுகளுக்கு நேராக உயர்த்துவார்கள். ருகூவிலிருந்து தலையை உயர்த்தி, “ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ்” என்று கூறும்போதும் அவ்வாறே (கைகளை உயர்த்துவார்கள்).

அறிவிப்பாளர் : மாலிக் பின் அல்ஹுவைரிஸ் (ரலி)


குறிப்பு :

இந்த ஹதீஸ் ஸயீத் (ரஹ்) வழியில் அறிவிக்கப்படும்போது, “நபி (ஸல்) தம் இரு காதுச் சோனைகளுக்கு நேராக இரு கைகளையும் உயர்த்தியதை நான் கண்டேன்” என அறிவிப்பாளர் கூறியதாக இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 4, பாடம்: 09, ஹதீஸ் எண்: 588

حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏خَالِدُ بْنُ عَبْدِ اللَّهِ ‏ ‏عَنْ ‏ ‏خَالِدٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي قِلَابَةَ ‏ ‏أَنَّهُ رَأَى ‏ ‏مَالِكَ بْنَ الْحُوَيْرِثِ ‏:‏

‏إِذَا صَلَّى كَبَّرَ ثُمَّ رَفَعَ يَدَيْهِ وَإِذَا أَرَادَ أَنْ يَرْكَعَ رَفَعَ يَدَيْهِ وَإِذَا رَفَعَ رَأْسَهُ مِنْ الرُّكُوعِ رَفَعَ يَدَيْهِ وَحَدَّثَ أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏كَانَ يَفْعَلُ هَكَذَا

மாலிக் பின் அல்ஹுவைரிஸ் (ரலி) தொழுதால் தக்பீர் கூறி, தம்மிரு கைகளை உயர்த்தித் தொடங்குவதையும் ருகூச் செய்யவேண்டும்போது தம்மிரு கைகளை உயர்த்துவதையும் ருகூவிலிருந்து தலையை உயர்த்தும்போது தம்மிரு கைகளை உயர்த்துவதையும் நான் கண்டிருக்கின்றேன். அத்தோடு, “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) இவ்வாறுதான் செய்பவர்களாக இருந்தார்கள்” என்று கூறியதையும் கேட்டிருக்கின்றேன்.

அறிவிப்பாளர் : மாலிக் பின் அல்ஹுவைரிஸ் (ரலி) வழியாக அப்துல்லாஹ் பின் ஸைத் (அபூகிலாபா – ரஹ்)

அத்தியாயம்: 4, பாடம்: 09, ஹதீஸ் எண்: 587

حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ رَافِعٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الرَّزَّاقِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ جُرَيْجٍ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏ابْنُ شِهَابٍ ‏ ‏عَنْ ‏ ‏سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ ‏ ‏أَنَّ ‏ ‏ابْنَ عُمَرَ ‏ ‏قَالَ :‏ ‏

‏كَانَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِذَا قَامَ لِلصَّلَاةِ رَفَعَ يَدَيْهِ حَتَّى تَكُونَا ‏ ‏حَذْوَ ‏ ‏مَنْكِبَيْهِ ثُمَّ كَبَّرَ فَإِذَا أَرَادَ أَنْ يَرْكَعَ فَعَلَ مِثْلَ ذَلِكَ وَإِذَا رَفَعَ مِنْ الرُّكُوعِ فَعَلَ مِثْلَ ذَلِكَ وَلَا يَفْعَلُهُ حِينَ يَرْفَعُ رَأْسَهُ مِنْ السُّجُودِ ‏


حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ رَافِعٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حُجَيْنٌ وَهُوَ ابْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏اللَّيْثُ ‏ ‏عَنْ ‏ ‏عُقَيْلٍ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ قُهْزَاذَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سَلَمَةُ بْنُ سُلَيْمَانَ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏عَبْدُ اللَّهِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏يُونُسُ ‏ ‏كِلَاهُمَا ‏ ‏عَنْ ‏ ‏الزُّهْرِيِّ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ كَمَا ‏ ‏قَالَ ‏ ‏ابْنُ جُرَيْجٍ ‏ ‏كَانَ رَسُولُ اللَّهِ إِذَا قَامَ لِلصَّلَاةِ رَفَعَ يَدَيْهِ حَتَّى تَكُونَا ‏ ‏حَذْوَ ‏ ‏مَنْكِبَيْهِ ثُمَّ كَبَّرَ ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தொழுகைக்காக நின்றால் தம் இருகைகளையும் தம் இருதோள்களுக்கு நேராக இருக்குமாறு உயர்த்தி, பின்னர் (தொழுகையின் தொடக்க) தக்பீர் (அல்லாஹு அக்பர்) கூறுவார்கள். ருகூச் செய்ய வேண்டியபோதும் அவ்வாறு கைகளை உயர்த்துவார்கள். ருகூவிலிருந்து நிமிரும்போதும் அவ்வாறே (கைகளை உயர்த்துவார்கள்). ஸஜ்தாவிலிருந்து தலையை உயர்த்தும்போது அவ்வாறு செய்யமாட்டார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி)


குறிப்பு :

மேற்கண்ட ஹதீஸ், உக்கைல் (ரஹ்) வழியாகவும் யூனுஸ் (ரஹ்) வழியாகவும் அறிவிக்கப் பட்டுள்ளது. அதிலும், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தொழுகைக்காக நின்றால் தம் இருகைகளையும் தம் இருதோள்களுக்கு நேராக இருக்குமாறு உயர்த்தி, பின்னர் தக்பீர் கூறுவார்கள்” என்று இபுனு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அறிவித்ததாகக் குறிப்பிடப்படுகின்றது.

அத்தியாயம்: 4, பாடம்: 09, ஹதீஸ் எண்: 586

حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى التَّمِيمِيُّ ‏ ‏وَسَعِيدُ بْنُ مَنْصُورٍ ‏ ‏وَأَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَعَمْرٌو النَّاقِدُ ‏ ‏وَزُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏وَابْنُ نُمَيْرٍ ‏ ‏كُلُّهُمْ ‏ ‏عَنْ ‏ ‏سُفْيَانَ بْنِ عُيَيْنَةَ ‏ ‏وَاللَّفْظُ ‏ ‏لِيَحْيَى ‏ ‏قَالَ أَخْبَرَنَا ‏ ‏سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ ‏ ‏عَنْ ‏ ‏الزُّهْرِيِّ ‏ ‏عَنْ ‏ ‏سَالِمٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏قَالَ ‏:‏

‏رَأَيْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِذَا افْتَتَحَ الصَّلَاةَ رَفَعَ يَدَيْهِ حَتَّى يُحَاذِيَ مَنْكِبَيْهِ وَقَبْلَ أَنْ يَرْكَعَ وَإِذَا رَفَعَ مِنْ الرُّكُوعِ وَلَا يَرْفَعُهُمَا بَيْنَ السَّجْدَتَيْنِ ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தொழுகையைத் தொடங்கும்போதும் ருகூச் செய்யும் முன்னும் ருகூவிலிருந்து நிமிரும்போதும் தம் இருகைகளையும் தம் இரு தோள்கள்வரை உயர்த்துவதையும் இரண்டு ஸஜ்தாக்களுக்கு இடையில் உயர்த்தாததையும் நான் கண்டிருக்கின்றேன்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி)

அத்தியாயம்: 4, பாடம்: 08, ஹதீஸ் எண்: 585

حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏الْمُغِيرَةُ يَعْنِي الْحِزَامِيَّ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي الزِّنَادِ ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْرَجِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ :‏ ‏

‏أَنَّ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏إِذَا نُودِيَ لِلصَّلَاةِ أَدْبَرَ الشَّيْطَانُ لَهُ ضُرَاطٌ حَتَّى لَا يَسْمَعَ التَّأْذِينَ فَإِذَا قُضِيَ التَّأْذِينُ أَقْبَلَ حَتَّى إِذَا ثُوِّبَ بِالصَّلَاةِ أَدْبَرَ حَتَّى إِذَا قُضِيَ التَّثْوِيبُ أَقْبَلَ حَتَّى ‏ ‏يَخْطُرَ ‏ ‏بَيْنَ الْمَرْءِ وَنَفْسِهِ يَقُولُ لَهُ اذْكُرْ كَذَا وَاذْكُرْ كَذَا لِمَا لَمْ يَكُنْ يَذْكُرُ مِنْ قَبْلُ حَتَّى يَظَلَّ الرَّجُلُ مَا يَدْرِي كَمْ صَلَّى ‏


‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ رَافِعٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الرَّزَّاقِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مَعْمَرٌ ‏ ‏عَنْ ‏ ‏هَمَّامِ بْنِ مُنَبِّهٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بِمِثْلِهِ غَيْرَ أَنَّهُ قَالَ حَتَّى يَظَلَّ الرَّجُلُ إِنْ يَدْرِي كَيْفَ صَلَّى

”தொழுகை அழைப்புக் கொடுக்கப்பட்டால் அதைச் செவியுறாமல் இருப்பதற்காக ஷைத்தான் வாயு வெளியேறிய வண்ணம் (வெகு தூரத்திற்குப்) பின்வாங்கி ஓடுகின்றான். தொழுகை அழைப்புக் கொடுத்து முடிந்ததும் மீண்டும் (பள்ளிவாசலுக்கு) வருகின்றான். பின்னர் ‘இகாமத்’ சொல்லப்பட்டால் பின்வாங்கி ஓடுகின்றான். ‘இகாமத்’ சொல்லி முடிக்கப்பட்டதும் (திரும்பவும் பள்ளிவாசலுக்கு) வந்து, (தொழுது கொண்டிருக்கும்) மனிதரின் உள்ளத்தில் ஊசலாட்டத்தைப் போடுகிறான். அவரிடம் ‘இன்ன இன்னதை நினை’ என்று தொழுகைக்கு முன்பு அவரது நினைவில் வராதவற்றையெல்லாம் (தொழும்போது நினைத்துப் பார்க்கும்படி) கூறுகின்றான். இறுதியில், அவருக்குத் தாம் எத்தனை ரக்அத்கள் தொழுதோம் என்பதேகூடத் தெரியாமல் போய்விடும்” என்று நபி (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)


குறிப்பு :

ஹம்மாம் பின் முநப்பிஹ் (ரஹ்) வழி அறிவிப்பில், “தாம் என்ன தொழுதோம்? எப்படித் தொழுதோம் என்பதே அவருக்குத் தெரியாமல் போய்விடும்” என்பதாக இடம்பெற்று உள்ளது.

அத்தியாயம்: 4, பாடம்: 08, ஹதீஸ் எண்: 584

حَدَّثَنِي ‏ ‏أُمَيَّةُ بْنُ بِسْطَامَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَزِيدُ يَعْنِي ابْنَ زُرَيْعٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏رَوْحٌ ‏ ‏عَنْ ‏ ‏سُهَيْلٍ ‏ ‏قَالَ :‏ ‏

‏أَرْسَلَنِي ‏ ‏أَبِي ‏ ‏إِلَى ‏ ‏بَنِي حَارِثَةَ ‏ ‏قَالَ وَمَعِي غُلَامٌ لَنَا ‏ ‏أَوْ صَاحِبٌ لَنَا ‏ ‏فَنَادَاهُ مُنَادٍ مِنْ حَائِطٍ بِاسْمِهِ قَالَ وَأَشْرَفَ الَّذِي مَعِي عَلَى الْحَائِطِ فَلَمْ يَرَ شَيْئًا فَذَكَرْتُ ذَلِكَ لِأَبِي فَقَالَ لَوْ شَعَرْتُ أَنَّكَ تَلْقَ هَذَا لَمْ أُرْسِلْكَ وَلَكِنْ إِذَا سَمِعْتَ صَوْتًا فَنَادِ بِالصَّلَاةِ فَإِنِّي سَمِعْتُ ‏ ‏أَبَا هُرَيْرَةَ ‏ ‏يُحَدِّثُ عَنْ رَسُولِ اللَّهِ أَنَّهُ قَالَ ‏ ‏إِنَّ الشَّيْطَانَ إِذَا نُودِيَ بِالصَّلَاةِ وَلَّى وَلَهُ ‏ ‏حُصَاصٌ ‏

என் தந்தை (அபூஸாலிஹ்) என்னை பனூ ஹாரிஸா கூட்டத்தாரிடம் அனுப்பியபோது, என்னுடன் எங்களுடைய அடிமை/தோழர் ஒருவரும் வந்திருந்தார். அப்போது என்னுடன் வந்தவரின் பெயரைக் குறிப்பிட்டு ஒரு சுவருக்கு அப்பாலிருந்து ஒருவர், அவரை அழைத்தார். என்னுடன் வந்தவர் அந்தச் சுவரின் மீதேறிப் பார்த்தபோது அங்கு யாரும் தென்படவில்லை. பின்னர் இதைப் பற்றி என் தந்தையிடம் குறிப்பிட்டேன். அப்போது அவர்கள், “இப்படி ஒரு நிலையை நீ சந்திக்க நேரிடும் என்று நான் உணர்ந்திருந்தால் உன்னை நான் அனுப்பியிருக்க மாட்டேன். எனினும் (இது போன்ற) சப்தத்தை நீ செவியுற்றால், தொழுகைக்கு அழைப்பதை(ப்போல்) உரத்துக் கூறு. ஏனெனில், “தொழுகை அழைப்புக் கொடுக்கப் பட்டால் ஷைத்தான் வாயு வெளியேறிய வண்ணம் வெருண்டோடுவான்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) சொன்னதாக அபூஹுரைரா (ரலி) அறிவித்துக் கொண்டிருந்ததை நான் செவியேற்றுள்ளேன்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி) வழியாக ஸுஹைல் பின் அபீஸாலிஹ் (ரஹ்)