அத்தியாயம்: 4, பாடம்: 08, ஹதீஸ் எண்: 583

حَدَّثَنِي ‏ ‏عَبْدُ الْحَمِيدِ بْنُ بَيَانٍ الْوَاسِطِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏خَالِدٌ يَعْنِي ابْنَ عَبْدِ اللَّهِ ‏ ‏عَنْ ‏ ‏سُهَيْلٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏قَالَ :‏ ‏

‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِذَا أَذَّنَ الْمُؤَذِّنُ أَدْبَرَ الشَّيْطَانُ وَلَهُ ‏ ‏حُصَاصٌ ‏

“முஅத்தின் தொழுகை அழைப்பைத் தொடங்கினால் ஷைத்தான் வாயு வெளியேறிய வண்ணம் புறமுதுகிட்டு ஓடுகின்றான்” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

அத்தியாயம்: 4, பாடம்: 08, ஹதீஸ் எண்: 582

حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏وَزُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏وَإِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏وَاللَّفْظُ ‏ ‏لِقُتَيْبَةَ ‏ ‏قَالَ ‏ ‏إِسْحَقُ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏وَقَالَ الْآخَرَانِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏جَرِيرٌ ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْمَشِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي صَالِحٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ :‏ ‏

‏عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏إِنَّ الشَّيْطَانَ إِذَا سَمِعَ النِّدَاءَ بِالصَّلَاةِ ‏ ‏أَحَالَ ‏ ‏لَهُ ضُرَاطٌ حَتَّى لَا يَسْمَعَ صَوْتَهُ فَإِذَا سَكَتَ رَجَعَ فَوَسْوَسَ فَإِذَا سَمِعَ الْإِقَامَةَ ذَهَبَ حَتَّى لَا يَسْمَعَ صَوْتَهُ فَإِذَا سَكَتَ رَجَعَ فَوَسْوَسَ ‏

“தொழுகை அழைப்போசையை ஷைத்தான் செவியுற்றால் அதைக் கேட்காமலிருப்பதற்காக வாயு வெளியேறியவனாக (வெகுதூரம்) வெருண்டோடுகின்றான். தொழுகை அழைப்பு முடிந்ததும் மீண்டும் (பள்ளிவாசலுக்கு) வந்து (தொழக்கூடியவர்களின் உள்ளத்தில்) ஊசலாட்டத்தை ஏற்படுத்துகிறான். தொழுகை அறிவிப்பு (இகாமத்) சொல்லும் ஓசையைக் கேட்கும்போது அந்த ஓசை கேட்காமலிருப்பதற்காக (மீண்டும் வெகு தூரம்) வெருண்டோடுகின்றான். இகாமத் சொல்லி முடிந்ததும் மீண்டும் (பள்ளிவாசலுக்கு) வந்து (தொழக்கூடியவர்களின் உள்ளத்தில்) ஊசலாட்டத்தை ஏற்படுத்துகின்றான்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

அத்தியாயம்: 4, பாடம்: 08, ஹதீஸ் எண்: 581

حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏وَعُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَإِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏قَالَ ‏ ‏إِسْحَقُ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏وَقَالَ الْآخَرَانِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏جَرِيرٌ ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْمَشِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي سُفْيَانَ ‏ ‏عَنْ ‏ ‏جَابِرٍ ‏ ‏قَالَ:‏ ‏

‏سَمِعْتُ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَقُولُ ‏ ‏إِنَّ الشَّيْطَانَ إِذَا سَمِعَ النِّدَاءَ بِالصَّلَاةِ ذَهَبَ حَتَّى يَكُونَ مَكَانَ ‏ ‏الرَّوْحَاءِ ‏


‏قَالَ ‏ ‏سُلَيْمَانُ ‏ ‏فَسَأَلْتُهُ عَنْ ‏ ‏الرَّوْحَاءِ ‏ ‏فَقَالَ ‏ ‏هِيَ مِنْ ‏ ‏الْمَدِينَةِ ‏ ‏سِتَّةٌ وَثَلَاثُونَ مِيلًا ‏ ‏و حَدَّثَنَاه ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَأَبُو كُرَيْبٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏أَبُو مُعَاوِيَةَ ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْمَشِ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ

“தொழுகை அழைப்பை ஷைத்தான் செவியுற்றால் ‘ரவ்ஹா’ எனும் இடம்வரை அவன் (வெருண்டோடிச்) சென்று விடுவான்” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : ஜாபிர் (ரலி)


குறிப்பு :

“ரவ்ஹா எனப்படுவது, மதீனாவிலிருந்து முப்பத்தாறு மைல் தொலைவிலுள்ள ஓர் இடமாகும்” என்று இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்களுள் ஒருவரான ஸுலைமான் பின் மிஹ்ரான் அல்அஃமஷ் (ரஹ்) தெரிவிக்கிறார்.

அத்தியாயம்: 4, பாடம்: 08, ஹதீஸ் எண்: 580

حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدَةُ ‏ ‏عَنْ ‏ ‏طَلْحَةَ بْنِ يَحْيَى ‏ ‏عَنْ ‏ ‏عَمِّهِ ‏ ‏قَالَ ‏ ‏كُنْتُ عِنْدَ ‏ ‏مُعَاوِيَةَ بْنِ أَبِي سُفْيَانَ ‏ ‏فَجَاءَهُ الْمُؤَذِّنُ يَدْعُوهُ إِلَى الصَّلَاةِ ‏ ‏فَقَالَ ‏ ‏مُعَاوِيَةُ ‏ ‏سَمِعْتُ :‏ ‏

‏رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَقُولُ ‏ ‏الْمُؤَذِّنُونَ أَطْوَلُ النَّاسِ أَعْنَاقًا يَوْمَ الْقِيَامَةِ ‏


‏و حَدَّثَنِيهِ ‏ ‏إِسْحَقُ بْنُ مَنْصُورٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏أَبُو عَامِرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ ‏ ‏عَنْ ‏ ‏طَلْحَةَ بْنِ يَحْيَى ‏ ‏عَنْ ‏ ‏عِيسَى بْنِ طَلْحَةَ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏مُعَاوِيَةَ ‏ ‏يَقُولُا ‏ ‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بِمِثْلِهِ ‏

நான் முஆவியா பின் அபீஸுஃப்யான் (ரலி) அவர்களுடன் இருந்த ஒருபோது, அவர்களைத் தொழுகைக்கு அழைப்பதற்காக அவர்களிடம் அழைப்பாளர்(முஅத்தின்) வந்தார். அப்போது முஆவியா (ரலி), “மறுமை நாளில் மக்களிலேயே நீண்ட கழுத்து உடையவர்களாக முஅத்தின்கள் காணப்படுவார்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறியதை நான் கேட்டிருக்கிறேன் என்று சொன்னார்கள்.

அறிவிப்பாளர் : முஆவியா (ரலி) வழியாக தல்ஹா பின் யஹ்யா (ரஹ்)

அத்தியாயம்: 4, பாடம்: 07, ஹதீஸ் எண்: 579

حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ رُمْحٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏اللَّيْثُ ‏ ‏عَنْ ‏ ‏الْحُكَيْمِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ قَيْسٍ الْقُرَشِيِّ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏لَيْثٌ ‏ ‏عَنْ ‏ ‏الْحُكَيْمِ بْنِ عَبْدِ اللَّهِ ‏ ‏عَنْ ‏ ‏عَامِرِ بْنِ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ ‏ ‏عَنْ ‏ ‏سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ ‏:‏

‏عَنْ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَنَّهُ قَالَ ‏ ‏مَنْ قَالَ حِينَ يَسْمَعُ الْمُؤَذِّنَ أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ وَأَنَّ ‏ ‏مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ ‏ ‏رَضِيتُ بِاللَّهِ رَبًّا ‏ ‏وَبِمُحَمَّدٍ ‏ ‏رَسُولًا وَبِالْإِسْلَامِ دِينًا غُفِرَ لَهُ ذَنْبُهُ ‏


‏قَالَ ‏ ‏ابْنُ رُمْحٍ ‏ ‏فِي رِوَايَتِهِ مَنْ قَالَ حِينَ يَسْمَعُ الْمُؤَذِّنَ وَأَنَا أَشْهَدُ ‏ ‏وَلَمْ يَذْكُرْ ‏ ‏قُتَيْبَةُ ‏ ‏قَوْلَهُ وَأَنَا ‏

“முஅத்தினின் தொழுகை அழைப்பைச் செவியுறுபவர் (இறுதியில்) ‘அஷ்ஹது அல்லா இலாஹ இல்லல்லாஹு, வஹ்தஹு, லா ஷரீக்க லஹு, வ அன்ன முஹம்மதன் அப்துஹு வ ரஸூலுஹு, ரளீத்து பில்லாஹி ரப்பன், வபி முஹம்மதின் ரஸூலன், வபில் இஸ்லாமி தீனா’ (பொருள்: அல்லாஹ்வைத் தவிர வேறு வணக்கத்துக்கு உரியவன் வேறில்லை. அவன் தனித்தவன்; அவனுக்கு இணையேதுமில்லை. முஹம்மது (ஸல்) அவனுடைய அடியாரும் தூதருமாவார்கள் என்று நான் உறுதிமொழி கூறுகிறேன். அல்லாஹ்வை இறைவனாகவும் முஹம்மது (ஸல்) அவர்களை (அவனுடைய) தூதராகவும் இஸ்லாத்தை மார்க்கமாகவும் நான் மனநிறைவுடன் ஏற்றுக்கொண்டேன்) என்று சொன்னால் அவருடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிடும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : ஸஅத் பின் அபீவக்காஸ் (ரலி)


குறிப்பு :

முஹம்மது பின் ரும்ஹு (ரஹ்) வழி அறிவிப்பில், (‘அஷ்ஹது'(உறுதிமொழிகிறேன்) என்பதற்குப் பதிலாக) ‘வ அன அஷ்ஹது’ (நானும் உறுதிமொழிகிறேன்) என்று இடம் பெற்றுள்ளது.

அத்தியாயம்: 4, பாடம்: 07, ஹதீஸ் எண்: 578

حَدَّثَنِي ‏ ‏إِسْحَقُ بْنُ مَنْصُورٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏أَبُو جَعْفَرٍ مُحَمَّدُ بْنُ جَهْضَمٍ الثَّقَفِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏إِسْمَعِيلُ بْنُ جَعْفَرٍ ‏ ‏عَنْ ‏ ‏عُمَارَةَ بْنِ غَزِيَّةَ ‏ ‏عَنْ ‏ ‏خُبَيْبِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ إِسَافٍ ‏ ‏عَنْ ‏ ‏حَفْصِ بْنِ عَاصِمِ بْنِ عُمَرَ بْنِ الْخَطَّابِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏جَدِّهِ ‏ ‏عُمَرَ بْنِ الْخَطَّابِ ‏ ‏قَالَ ‏:‏

‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِذَا قَالَ الْمُؤَذِّنُ اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ فَقَالَ أَحَدُكُمْ اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ ثُمَّ قَالَ أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ قَالَ أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ ثُمَّ قَالَ أَشْهَدُ أَنَّ ‏ ‏مُحَمَّدًا رَسُولُ اللَّهِ ‏ ‏قَالَ أَشْهَدُ أَنَّ ‏ ‏مُحَمَّدًا رَسُولُ اللَّهِ ‏ ‏ثُمَّ قَالَ حَيَّ عَلَى الصَّلَاةِ قَالَ لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ ثُمَّ قَالَ حَيَّ عَلَى الْفَلَاحِ قَالَ لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ ثُمَّ قَالَ اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ قَالَ اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ ثُمَّ قَالَ لَا إِلَهَ إِلَّا اللَّهُ قَالَ لَا إِلَهَ إِلَّا اللَّهُ مِنْ قَلْبِهِ دَخَلَ الْجَنَّةَ ‏

முஅத்தின், ‘அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர்’ என்று சொன்னால் ‘அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர்’ என்றும் பின்பு அவர், ‘அஹ்ஷது அல்லாயிலாஹ இல்லல்லாஹ்’ என்று சொன்னால் ‘அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹ்’ என்றும் பின்பு அவர், ‘அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரஸூலுல்லாஹ்’ என்று சொன்னால் ‘அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரஸூலுல்லாஹ்’ என்றும் பின்பு அவர், ‘ஹய்ய அலஸ் ஸலாஹ்’ என்று சொன்னால் ‘லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ்’ என்றும் பின்பு அவர், ‘ஹய்ய அலல் ஃபலாஹ்’ என்று சொன்னால் ‘லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ்’ என்றும் பின்பு அவர், ‘அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர்’ என்று சொன்னால் ‘அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர்’ என்றும் பின்பு அவர் ‘லா இலாஹ இல்லல்லாஹ்’ என்று சொன்னால் ‘லா இலாஹ இல்லல்லாஹ்’ என்றும் உங்களுள் உளமுவந்து (திருப்பிக்) கூறுபவர் சொர்க்கத்தில் நுழைந்துவிட்டார்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : உமர் பின் அல் கத்தாப் (ரலி)

அத்தியாயம்: 4, பாடம்: 07, ஹதீஸ் எண்: 577

حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ سَلَمَةَ الْمُرَادِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ ‏ ‏عَنْ ‏ ‏حَيْوَةَ ‏ ‏وَسَعِيدِ بْنِ أَبِي أَيُّوبَ ‏ ‏وَغَيْرِهِمَا ‏ ‏عَنْ ‏ ‏كَعْبِ بْنِ عَلْقَمَةَ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ الرَّحْمَنِ بْنِ جُبَيْرٍ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ:‏

‏ ‏أَنَّهُ ‏‏سَمِعَ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَقُولُ ‏ ‏إِذَا سَمِعْتُمْ الْمُؤَذِّنَ فَقُولُوا مِثْلَ مَا يَقُولُ ثُمَّ صَلُّوا عَلَيَّ فَإِنَّهُ مَنْ صَلَّى عَلَيَّ صَلَاةً صَلَّى اللَّهُ عَلَيْهِ بِهَا عَشْرًا ثُمَّ سَلُوا اللَّهَ لِي ‏ ‏الْوَسِيلَةَ فَإِنَّهَا مَنْزِلَةٌ فِي الْجَنَّةِ لَا ‏ ‏تَنْبَغِي إِلَّا لِعَبْدٍ مِنْ عِبَادِ اللَّهِ وَأَرْجُو أَنْ أَكُونَ أَنَا هُوَ فَمَنْ سَأَلَ لِي ‏ ‏الْوَسِيلَةَ ‏ ‏حَلَّتْ ‏ ‏لَهُ الشَّفَاعَةُ ‏

“முஅத்தின் தொழுகைக்கு அழைப்பதை நீங்கள் செவியுற்றால் அவர் கூறுவதைப் போன்றே நீங்களும் கூறுங்கள். பின்பு என் மீது ஸலவாத் சொல்லுங்கள். யார் என் மீது ஒருமுறை ஸலவாத் சொல்கிறாரோ அதன் காரணத்தால் அவருக்குப் பத்து முறை அல்லாஹ் அருள்புரிகின்றான். பின்பு எனக்காக அல்லாஹ்விடம் வஸீலாவைக் கேளுங்கள். வஸீலா என்பது சொர்க்கத்திலுள்ள (உயர்) பதவியாகும். அல்லாஹ்வின் அடியார்களில் ஒருவருக்குத்தான் அது கிடைக்கும். அந்த ஒருவர் நானாகவே இருக்க விரும்புகிறேன். எனவே, எனக்காக அந்தப் பதவியை (அல்லாஹ்விடம்) கேட்பவருக்கு (மறுமை நாளில்) எனது பரிந்துரை கட்டாயம் உண்டு” என நபி (ஸல்)  கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் அம்ரிப்னில் ஆஸ் (ரலி)

அத்தியாயம்: 4, பாடம்: 07, ஹதீஸ் எண்: 576

حَدَّثَنِي ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏قَالَ قَرَأْتُ عَلَى ‏ ‏مَالِكٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏عَنْ ‏ ‏عَطَاءِ بْنِ يَزِيدَ اللَّيْثِيِّ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ ‏:‏

‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏إِذَا سَمِعْتُمْ النِّدَاءَ فَقُولُوا مِثْلَ مَا يَقُولُ الْمُؤَذِّنُ ‏

“தொழுகை அழைப்பை நீங்கள் செவியுற்றால், அழைப்பவர் (முஅத்தின்) கூறுவதைப் போன்றே நீங்களும் கூறுங்கள்” என நபி (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)

அத்தியாயம்: 4, பாடம்: 06, ஹதீஸ் எண்: 575

و حَدَّثَنِي ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى يَعْنِي ابْنَ سَعِيدٍ ‏ ‏عَنْ ‏ ‏حَمَّادِ بْنِ سَلَمَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ثَابِتٌ ‏ ‏عَنْ ‏ ‏أَنَسِ بْنِ مَالِكٍ ‏ ‏قَالَ :‏ ‏

‏كَانَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يُغِيرُ ‏ ‏إِذَا طَلَعَ الْفَجْرُ وَكَانَ يَسْتَمِعُ الْأَذَانَ فَإِنْ سَمِعَ أَذَانًا أَمْسَكَ وَإِلَّا ‏ ‏أَغَارَ ‏ ‏فَسَمِعَ رَجُلًا يَقُولُ اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ فَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏عَلَى الْفِطْرَةِ ثُمَّ قَالَ أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ فَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏خَرَجْتَ مِنْ النَّارِ فَنَظَرُوا فَإِذَا هُوَ رَاعِي مِعْزًى ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (போர்க் காலத்தில்) ஃபஜ்ரு நேர உதயத்தின்போது போரைத் தொடங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள். (போரை ஆரம்பிக்கு முன்) ஃபஜ்ருத் தொழுகையின் அழைப்பொலியை எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள். தொழுகை அழைப்பொலியைக் கேட்டால் போரைத் தொடங்காமல் நிறுத்தி வைப்பார்கள்; இல்லையென்றால் போரைத் தொடங்குவார்கள்.

(ஒருமுறை) ஒருவர், “அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர்” என்று சொல்லக் கேட்டு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “நீ இயற்கையில் (இஸ்லாத்தில்) இருக்கிறாய்” என்று சொன்னார்கள். பின்பு அவர், “அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹ், அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹ்” என்று சொன்னார். அதற்கு, “நீ நரகத்திலிருந்து (விடுதலை பெற்று) வெளியேறி விட்டாய்” என்று சொன்னார்கள். அவ்வாறு கூறியவர் யாரென்று நோக்கியபோது அவர் வெள்ளாடுகளை மேய்க்கும் ஓர் இடையர் என்பது தெரிந்தது.

அறிவிப்பாளர் : அனஸ் பின் மாலிக் (ரலி)

அத்தியாயம்: 4, பாடம்: 05, ஹதீஸ் எண்: 574

حَدَّثَنِي ‏ ‏أَبُو كُرَيْبٍ مُحَمَّدُ بْنُ الْعَلَاءِ الْهَمْدَانِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏خَالِدٌ يَعْنِي ابْنَ مَخْلَدٍ ‏ ‏عَنْ ‏ ‏مُحَمَّدِ بْنِ جَعْفَرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏هِشَامٌ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏قَالَتْ :‏ ‏

‏كَانَ ‏ ‏ابْنُ أُمِّ مَكْتُومٍ ‏ ‏يُؤَذِّنُ لِرَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَهُوَ أَعْمَى ‏


‏و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ سَلَمَةَ الْمُرَادِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ ‏ ‏عَنْ ‏ ‏يَحْيَى بْنِ عَبْدِ اللَّهِ ‏ ‏وَسَعِيدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ ‏ ‏عَنْ ‏ ‏هِشَامٍ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏مِثْلَهُ ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்க(ளுடைய பள்ளிவாசலு)க்கு, பார்வையற்ற இப்னு உம்மி மக்தூம் (ரலி) தொழுகை அழைப்பாளராக (முஅத்தினாக) இருந்தார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)