அத்தியாயம்: 48, பாடம்: 17, ஹதீஸ் எண்: 4864

حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي السَّفَرِ، عَنْ أَبِي بَكْرِ بْنِ أَبِي مُوسَى، عَنِ الْبَرَاءِ :‏

أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ إِذَا أَخَذَ مَضْجَعَهُ قَالَ ‏”‏ اللَّهُمَّ بِاسْمِكَ أَحْيَا وَبِاسْمِكَ أَمُوتُ ‏”‏ ‏.‏ وَإِذَا اسْتَيْقَظَ قَالَ ‏”‏ الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَحْيَانَا بَعْدَ مَا أَمَاتَنَا وَإِلَيْهِ النُّشُورُ ‏”‏ ‏

நபி (ஸல்) உறங்கச் செல்லும்போது, “அல்லாஹும்ம! பிஸ்மிக்க அஹ்யா, வ பிஸ்மிக்க அமூத்து: இறைவா! உனது பெயராலேயே உயிர் பெ(ற்)று(எழு)கின்றேன்; உனது பெயர் கூறியே இறந்து (உறங்கிப்) போகின்றேன்” என்று கூறுவார்கள். உறக்கத்திலிருந்து விழித்தெழும்போது, “அல்ஹம்து லில்லாஹில்லதீ அஹ்யானா பஅத மா அமாத்தனா வ இலைஹிந் நுஷூர்” (அனைத்துப் புகழும் அல்லாஹ்வுக்கே உரியன. அவனே நம்மை இறக்கச்செய்த பின்னர் நமக்கு உயிரூட்டினான். மேலும், அவனிடமே செல்ல வேண்டியுள்ளது) என்று கூறுவார்கள்.

அறிவிப்பாளர் : பராஉ பின் ஆஸிப் (ரலி)

அத்தியாயம்: 48, பாடம்: 17, ஹதீஸ் எண்: 4863

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا أَبُو دَاوُدَ، حَدَّثَنَا شُعْبَةُ، ح وَحَدَّثَنَا ابْنُ بَشَّارٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ، وَأَبُو دَاوُدَ قَالاَ حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ، قَالَ سَمِعْتُ سَعْدَ بْنَ عُبَيْدَةَ، يُحَدِّثُ عَنِ الْبَرَاءِ بْنِ عَازِبٍ :‏

أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم أَمَرَ رَجُلاً إِذَا أَخَذَ مَضْجَعَهُ مِنَ اللَّيْلِ أَنْ يَقُولَ ‏ “‏ اللَّهُمَّ أَسْلَمْتُ نَفْسِي إِلَيْكَ وَوَجَّهْتُ وَجْهِي إِلَيْكَ وَأَلْجَأْتُ ظَهْرِي إِلَيْكَ وَفَوَّضْتُ أَمْرِي إِلَيْكَ رَغْبَةً وَرَهْبَةً إِلَيْكَ لاَ مَلْجَأَ وَلاَ مَنْجَا مِنْكَ إِلاَّ إِلَيْكَ آمَنْتُ بِكِتَابِكَ الَّذِي أَنْزَلْتَ وَبِرَسُولِكَ الَّذِي أَرْسَلْتَ ‏.‏ فَإِنْ مَاتَ مَاتَ عَلَى الْفِطْرَةِ ‏”‏


وَلَمْ يَذْكُرِ ابْنُ بَشَّارٍ فِي حَدِيثِهِ مِنَ اللَّيْلِ

حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، أَخْبَرَنَا أَبُو الأَحْوَصِ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الْبَرَاءِ بْنِ عَازِبٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم لِرَجُلٍ ‏”‏ يَا فُلاَنُ إِذَا أَوَيْتَ إِلَى فِرَاشِكَ ‏”‏ ‏.‏ بِمِثْلِ حَدِيثِ عَمْرِو بْنِ مُرَّةَ غَيْرَ أَنَّهُ قَالَ ‏”‏ وَبِنَبِيِّكَ الَّذِي أَرْسَلْتَ ‏.‏ فَإِنْ مُتَّ مِنْ لَيْلَتِكَ مُتَّ عَلَى الْفِطْرَةِ وَإِنْ أَصْبَحْتَ أَصَبْتَ خَيْرًا ‏”‏ ‏

حَدَّثَنَا ابْنُ الْمُثَنَّى، وَابْنُ، بَشَّارٍ قَالاَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي إِسْحَاقَ أَنَّهُ سَمِعَ الْبَرَاءَ بْنَ عَازِبٍ، يَقُولُ أَمَرَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم رَجُلاً ‏.‏ بِمِثْلِهِ وَلَمْ يَذْكُرْ ‏ “‏ وَإِنْ أَصْبَحْتَ أَصَبْتَ خَيْرًا ‏”‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “நீ இரவில் படுக்கைக்குச் செல்லும்போது, ‘அல்லாஹும்ம! அஸ்லம்த்து நஃப்ஸீ இலைக்க, வ வஜ்ஜஹ்த்து வஜ்ஹீ இலைக்க, வ அல்ஜஃத்து ழஹ்ரீ இலைக்க, வ ஃபவ்வள்த்து அம்ரீ இலைக்க; ரக்ஃபத்தன் வ ரஹ்பத்தன் இலைக்க. லா மல்ஜஅ வலா மன்ஜா மின்க்க இல்லா இலைக்க, ஆமன்த்து பி கித்தாபிக்கல்லதீ அன்ஸல்த்த வபி ரஸூலிக்கல்லதீ அர்ஸல்த்த’ என்று சொல்” என ஒருவருக்கு உத்தரவிட்டார்கள்.

(பொருள்: இறைவா! என்னை நான் உன்னிடம் ஒப்படைத்தேன். என் முகத்தை உன்னளவில் திருப்பிவிட்டேன். எனது முதுகை உன்னளவில் சாய்த்துவிட்டேன். என் காரியங்கள் அனைத்தையும் உன்னிடம் ஒப்படைத்துவிட்டேன். உன்மீதுள்ள அன்பிலும் அச்சத்திலும்தான் (இவற்றை நான் செய்தேன்). உன்னிடமிருந்து தப்பிக்கவும் ஒதுங்கிடவும் உன்னைத் தவிர வேறு போக்கிடம் இல்லை. நீ அருளிய உன்னுடைய வேதத்தையும் நீ அனுப்பிய உன் ரஸூலையும் நான் நம்பினேன்).

“அவர் (இவ்வாறு பிரார்த்தித்துவிட்டு உறங்கும்போது) இறந்துவிட்டால் (இஸ்லாம் எனும்) இயற்கை மரபில் இறந்தவராவார்” என்றும் கூறினார்கள்.

அறிவிப்பாளர் : பராஉ பின் ஆஸிப் (ரலி)


குறிப்புகள் :

இப்னு பஷ்ஷார் (ரஹ்) வழி அறிவிப்பில், ‘இரவில்’ எனும் குறிப்பு இடம்பெறவில்லை.

அபூஇஸ்ஹாக் (ரஹ்) வழி அறிவிப்பு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) “இன்னவரே! நீர் உமது படுக்கைக்குச் செல்லும்போது (இவ்வாறு சொல்வீராக…)” என்று கூறியதாக ஆரம்பமாகிறது. மேலும், (நீ அனுப்பிய உன்னுடைய ரஸூலையும் நம்பினேன் என்பதற்குப் பகரமாக) ‘நீ அனுப்பிய உன்னுடைய நபியையும் நான் நம்பினேன்’ என்று கூறியதாகவும், “(இவ்வாறு பிராத்தித்துவிட்டு) அன்றிரவிலேயே நீ இறந்து விட்டால் (இஸ்லாம் எனும்) இயற்கை மரபிலேயே இறந்தவன் ஆவாய். காலையில் (உயிருடன் விழித்து) எழுந்தால், (இந்தப் பிரார்த்தனையின்) நன்மைகளைப் பெற்றுக்கொள்வாய்” என்று கூறியதாகவும் அதில் இடம்பெற்றுள்ளது.

ஷுஅபா (ரஹ்) வழி அறிவிப்பு, “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (இவ்வாறு பிரார்த்திக்குமாறு) ஒருவருக்கு உத்தரவிட்டார்கள் …  : ” என்று ஆரம்பமாகிறது. “நீ காலையில் (உயிருடன் விழித்து) எழுந்தால் (இந்தப் பிரார்த்தனைக்கான) நன்மையைப் பெற்றுக்கொள்வாய்” எனும் குறிப்பு காணப்படவில்லை.

அத்தியாயம்: 48, பாடம்: 16, ஹதீஸ் எண்: 4861

وَحَدَّثَنَا هَارُونُ بْنُ مَعْرُوفٍ، وَأَبُو الطَّاهِرِ، كِلاَهُمَا عَنِ ابْنِ وَهْبٍ، – وَاللَّفْظُ لِهَارُونَ – حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ، قَالَ وَأَخْبَرَنَا عَمْرٌو، – وَهُوَ ابْنُ الْحَارِثِ – أَنَّ يَزِيدَ بْنَ أَبِي حَبِيبٍ وَالْحَارِثَ بْنَ يَعْقُوبَ حَدَّثَاهُ عَنْ يَعْقُوبَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الأَشَجِّ، عَنْ بُسْرِ بْنِ سَعِيدٍ، عَنْ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ، عَنْ خَوْلَةَ بِنْتِ حَكِيمٍ السُّلَمِيَّةِ :‏

أَنَّهَا سَمِعَتْ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ ‏”‏ إِذَا نَزَلَ أَحَدُكُمْ مَنْزِلاً فَلْيَقُلْ أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّاتِ مِنْ شَرِّ مَا خَلَقَ ‏.‏ فَإِنَّهُ لاَ يَضُرُّهُ شَىْءٌ حَتَّى يَرْتَحِلَ مِنْهُ ‏”‏ ‏


قَالَ يَعْقُوبُ وَقَالَ الْقَعْقَاعُ بْنُ حَكِيمٍ عَنْ ذَكْوَانَ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّهُ قَالَ جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ يَا رَسُولَ اللَّهِ مَا لَقِيتُ مِنْ عَقْرَبٍ لَدَغَتْنِي الْبَارِحَةَ قَالَ ‏”‏ أَمَا لَوْ قُلْتَ حِينَ أَمْسَيْتَ أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّاتِ مِنْ شَرِّ مَا خَلَقَ لَمْ تَضُرُّكَ ‏”‏

وَحَدَّثَنِي عِيسَى بْنُ حَمَّادٍ الْمِصْرِيُّ، أَخْبَرَنِي اللَّيْثُ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ، عَنْ جَعْفَرٍ، عَنْ يَعْقُوبَ، أَنَّهُ ذَكَرَ لَهُ أَنَّ أَبَا صَالِحٍ، مَوْلَى غَطَفَانَ أَخْبَرَهُ أَنَّهُ، سَمِعَ أَبَا هُرَيْرَةَ يَقُولُ قَالَ رَجُلٌ يَا رَسُولَ اللَّهِ لَدَغَتْنِي عَقْرَبٌ ‏.‏ بِمِثْلِ حَدِيثِ ابْنِ وَهْبٍ

“உங்களில் ஒருவர் (பயணத்தில்) ஓரிடத்தில் இறங்கித் தங்கும்போது. “அஊது பி கலிமாத்தில்லாஹித் தாம்மாத்தி மின் ஷர்ரி மா கலக’ என்று கூறினால், அவர் அங்கிருந்து புறப்பட்டுச் செல்லும்வரை அவருக்கு எதுவும் தீங்கிழைக்காது” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : கவ்லா பின்த்தி ஹகீம் அஸ்ஸுலமிய்யா (ரலி)


குறிப்புகள் :

அபூஹுரைரா (ரலி) வழியாக தக்வான் அபூஸாலிஹ் (ரஹ்) அறிவிப்பதில், நபி (ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! நேற்றிரவு என்னைத் தேள் ஒன்று கொட்டி விட்டது. அதனால் நான் (தூக்கத்தை) இழந்துவிட்டேன்” என்று கூறினார்.

அதற்கு நபி (ஸல்), “நீ மாலைப் பொழுதை அடையும்போது, ‘அஊது பிகலிமாத்தில்லாஹித் தாம்மாத்தி மின் ஷர்ரி மா கலக்’ என்று பிரார்த்தித்திருந்தால் அது உனக்குத் தீங்கிழைத்திருக்காது” என்று கூறினார்கள்.

யஃகூப் (ரஹ்) வழி அறிவிப்பு, “அல்லாஹ்வின் தூதரே! என்னைத் தேள் கொட்டிவிட்டது …” என்று ஒருவர் கூறியதாக ஆரம்பமாகிறது.

அத்தியாயம்: 48, பாடம்: 16, ஹதீஸ் எண்: 4860

حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا لَيْثٌ، ح وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رُمْحٍ، وَاللَّفْظُ لَهُ أَخْبَرَنَا اللَّيْثُ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ، عَنِ الْحَارِثِ بْنِ يَعْقُوبَ، أَنَّ يَعْقُوبَ بْنَ عَبْدِ اللَّهِ، حَدَّثَهُ أَنَّهُ، سَمِعَ بُسْرَ بْنَ سَعِيدٍ، يَقُولُ سَمِعْتُ سَعْدَ بْنَ أَبِي وَقَّاصٍ يَقُولُ سَمِعْتُ خَوْلَةَ بِنْتَ حَكِيمٍ السُّلَمِيَّةَ تَقُولُ :‏

سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ ‏ “‏ مَنْ نَزَلَ مَنْزِلاً ثُمَّ قَالَ أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّاتِ مِنْ شَرِّ مَا خَلَقَ ‏.‏ لَمْ يَضُرُّهُ شَىْءٌ حَتَّى يَرْتَحِلَ مِنْ مَنْزِلِهِ ذَلِكَ ‏”‏ ‏

யாரேனும் (பயணத்தில்) ஓரிடத்தில் இறங்கித் தங்கும்போது,  “அஊது பி கலிமாத்தில்லாஹித் தாம்மாத்தி மின் ஷர்ரி மா கலக்“ (பொருள்: அல்லாஹ்வின் நிறைவான சொற்களின் மூலம் அவனுடைய படைப்பினங்களின் தீங்கிலிருந்து நான் பாதுகாப்புக் கோருகின்றேன்) என்று கூறிப் பிரார்த்தித்தால், அந்த இடத்திலிருந்து அவர் கிளம்பிச் செல்லும்வரை எதுவும் அவருக்குத் தீங்கிழைக்காது என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : கவ்லா பின்த்தி ஹகீம் அஸ்ஸுலமிய்யா (ரலி)

அத்தியாயம்: 48, பாடம்: 16, ஹதீஸ் எண்: 4859

حَدَّثَنِي عَمْرٌو النَّاقِدُ، وَزُهَيْرُ بْنُ حَرْبٍ، قَالاَ حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، حَدَّثَنِي سُمَىٌّ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ :‏

أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ يَتَعَوَّذُ مِنْ سُوءِ الْقَضَاءِ وَمِنْ دَرَكِ الشَّقَاءِ وَمِنْ شَمَاتَةِ الأَعْدَاءِ وَمِنْ جَهْدِ الْبَلاَءِ


قَالَ عَمْرٌو فِي حَدِيثِهِ قَالَ سُفْيَانُ أَشُكُّ أَنِّي زِدْتُ وَاحِدَةً مِنْهَا

நபி (ஸல்), விதியின் கேட்டிலிருந்தும் அழிவில் வீழ்வதிலிருந்தும் எதிரிகளின் நகைப்புக்கு ஆளாவதிலிருந்தும் தாங்க முடியாத சோதனையிலிருந்தும் (இறைவனிடம்) பாதுகாப்புக் கோரிவந்தார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)


குறிப்பு :

அம்ருந்நாஜித் (ரஹ்) வழி அறிவிப்பில், “இந்த நான்கில் ஒன்றை நான் கூடுதலாக அறிவித்துவிட்டேனோ என்று சந்தேகப்படுகின்றேன்” என ஸுஃப்யான் பின் உயைனா (ரஹ்) கூறினார்கள் என்று காணப்படுகிறது.

அத்தியாயம்: 48, பாடம்: 15, ஹதீஸ் எண்: 4858

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ نَافِعٍ الْعَبْدِيُّ، حَدَّثَنَا بَهْزُ بْنُ أَسَدٍ الْعَمِّيُّ، حَدَّثَنَا هَارُونُ الأَعْوَرُ، حَدَّثَنَا شُعَيْبُ بْنُ الْحَبْحَابِ، عَنْ أَنَسٍ قَالَ :‏

كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَدْعُو بِهَؤُلاَءِ الدَّعَوَاتِ ‏ “‏ اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْبُخْلِ وَالْكَسَلِ وَأَرْذَلِ الْعُمُرِ وَعَذَابِ الْقَبْرِ وَفِتْنَةِ الْمَحْيَا وَالْمَمَاتِ ‏”‏

நபி (ஸல்) “அல்லாஹும்ம! இன்னீ அஊது பிக்க மினல் புக்லி, வல்கஸலி, வ அர்தலில் உமுரி, வ அதாபில் கப்ரி, வ ஃபித்னத்தில் மஹ்யா வல்மமாத்” எனப் பிரார்த்தித்துவந்தார்கள்.

(பொருள்: இறைவா! கருமித்தனத்திலிருந்தும் சோம்பேறித்தனத்திலிருந்தும் தள்ளாத வயதிலிருந்தும் மண்ணறையின் வேதனையிலிருந்தும் வாழ்வின் சோதனையிலிருந்தும், இறப்புவேளை சோதனையிலிருந்தும் உன்னிடம் நான் பாதுகாப்புக் கோருகின்றேன்).

அறிவிப்பாளர் : அனஸ் (ரலி)

அத்தியாயம்: 48, பாடம்: 15, ஹதீஸ் எண்: 4857

حَدَّثَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ، حَدَّثَنَا ابْنُ عُلَيَّةَ، قَالَ وَأَخْبَرَنَا سُلَيْمَانُ التَّيْمِيُّ، حَدَّثَنَا أَنَسُ بْنُ مَالِكٍ قَالَ :‏

كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ ‏ “‏ اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْعَجْزِ وَالْكَسَلِ وَالْجُبْنِ وَالْهَرَمِ وَالْبُخْلِ وَأَعُوذُ بِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ وَمِنْ فِتْنَةِ الْمَحْيَا وَالْمَمَاتِ ‏”‏


وَحَدَّثَنَا أَبُو كَامِلٍ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، ح وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الأَعْلَى، حَدَّثَنَا مُعْتَمِرٌ، كِلاَهُمَا عَنِ التَّيْمِيِّ، عَنْ أَنَسٍ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم ‏.‏ بِمِثْلِهِ غَيْرَ أَنَّ يَزِيدَ لَيْسَ فِي حَدِيثِهِ قَوْلُهُ ‏ “‏ وَمِنْ فِتْنَةِ الْمَحْيَا وَالْمَمَاتِ ‏”‏

حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، مُحَمَّدُ بْنُ الْعَلاَءِ أَخْبَرَنَا ابْنُ مُبَارَكٍ، عَنْ سُلَيْمَانَ التَّيْمِيِّ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ تَعَوَّذَ مِنْ أَشْيَاءَ ذَكَرَهَا وَالْبُخْلِ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “அல்லாஹும்ம!  இன்னீ அஊது பிக்க மினல் அஜ்ஸி, வல்கஸலி, வல்ஜுப்னி, வல்ஹரமி, வல்புக்லி. வ அஊது பிக்க மின் அதாபில் கப்ரி, வ மின் ஃபித்னத்தில் மஹ்யா வல்மமாத்” என்று பிரார்த்தித்துவந்தார்கள்.

(பொருள்: இறைவா! உன்னிடம் நான் இயலாமையிலிருந்தும் சோம்பேறித் தனத்திலிருந்தும் கோழைத்தனத்திலிருந்தும் தள்ளாமையிலிருந்தும் கருமித்தனத்திலிருந்தும் பாதுகாப்புக் கோருகின்றேன். மண்ணறையின் வேதனையிலிருந்தும் பாதுகாப்புக் கோருகின்றேன். வாழ்வின் சோதனையிலிருந்தும் மரணவேளை சோதனையிலிருந்தும் பாதுகாப்புக் கோருகின்றேன்).

அறிவிப்பாளர் : அனஸ் பின் மாலிக் (ரலி)


குறிப்பு :

முஅத்தமர் (ரஹ்) வழி அறிவிப்பில்,“வாழ்வின் சோதனையிலிருந்தும் மரணவேளை சோதனையிலிருந்தும் (வ மின் ஃபித்னத்தில் மஹ்யா வல்மமாத்)” எனும் குறிப்பு இடம்பெறவில்லை.

இப்னுல் முபாரக் (ரஹ்) வழி அறிவிப்பில் “மேற்காணும் அனைத்துச் சோதனைகளிலிருந்தும் (குறிப்பாக,) கருமித்தனத்திலிருந்தும் காக்குமாறு இறைவனிடம் வேண்டினார்கள்” என்று இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 48, பாடம்: 14, ஹதீஸ் எண்: 4856

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَأَبُو كُرَيْبٍ – وَاللَّفْظُ لأَبِي بَكْرٍ – قَالاَ حَدَّثَنَا ابْنُ نُمَيْرٍ حَدَّثَنَا هِشَامٌ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ :‏

أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ يَدْعُو بِهَؤُلاَءِ الدَّعَوَاتِ ‏ “‏ اللَّهُمَّ فَإِنِّي أَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ النَّارِ وَعَذَابِ النَّارِ وَفِتْنَةِ الْقَبْرِ وَعَذَابِ الْقَبْرِ وَمِنْ شَرِّ فِتْنَةِ الْغِنَى وَمِنْ شَرِّ فِتْنَةِ الْفَقْرِ وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّ فِتْنَةِ الْمَسِيحِ الدَّجَّالِ اللَّهُمَّ اغْسِلْ خَطَايَاىَ بِمَاءِ الثَّلْجِ وَالْبَرَدِ وَنَقِّ قَلْبِي مِنَ الْخَطَايَا كَمَا نَقَّيْتَ الثَّوْبَ الأَبْيَضَ مِنَ الدَّنَسِ وَبَاعِدْ بَيْنِي وَبَيْنَ خَطَايَاىَ كَمَا بَاعَدْتَ بَيْنَ الْمَشْرِقِ وَالْمَغْرِبِ اللَّهُمَّ فَإِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْكَسَلِ وَالْهَرَمِ وَالْمَأْثَمِ وَالْمَغْرَمِ ‏”‏


وَحَدَّثَنَاهُ أَبُو كُرَيْبٍ، حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، وَوَكِيعٌ، عَنْ هِشَامٍ، بِهَذَا الإِسْنَادِ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) “அல்லாஹும்ம! ஃப இன்னீ அஊது பிக்க மின் ஃபித்னத்திந் நாரி, வ அதாபிந் நாரி, வ ஃபித்னத்தில் கப்ரி, வ அதாபில் கப்ரி, வ மின் ஷர்ரி ஃபித்னத்தில் ஃகினா, வ மின் ஷர்ரி ஃபித்னத்தில் ஃபக்ரி, வ அஊது பிக்க மின் ஷர்ரி ஃபித்னத்தில் மஸீஹித் தஜ்ஜால். அல்லாஹும்மஃக்ஸில் கத்தாயாய பி மாயிஸ் ஸல்ஜி வல்பரத். வ நக்கி கல்பீ மினல் கத்தாயா கமா நக்கைத்தஸ் ஸவ்பல் அப்யள மினத் தனஸ். வ பாஇத் பைனீ வ பைன கத்தாயாய கமா பாஅத்த பைனல் மஷ்ரிக்கி வல்மஃக்ரிப். அல்லாஹும்ம! ஃப இன்னீ அஊது பிக்க மினல் கஸலி வல்ஹரமி வல்மஃஸமி வல் மஃக்ரம்” என்பதாக இறைவனிடம் பிரார்த்தித்து வந்தார்கள்.

((பொருள்: இறைவா! உன்னிடம் நான் நரகத்தின் சோதனையிலிருந்தும் நரகத்தின் வேதனையிலிருந்தும் மண்ணறையின் சோதனையிலிருந்தும் மண்ணறையின் வேதனையிலிருந்தும் செல்வத்தின் சோதனையின் தீங்கிலிருந்தும் வறுமையின் சோதனையின் தீங்கிலிருந்தும் பாதுகாப்புக் கோருகின்றேன்; (மகாப் பொய்யன்) மஸீஹுத் தஜ்ஜாலின் சோதனையின் தீங்கிலிருந்தும் பாதுகாப்புக் கோருகின்றேன்.

இறைவா! (உனது பாவமன்னிப்பு என்னும்) பனிக்கட்டி நீராலும் (உனது அருளென்னும்) ஆலங்கட்டி நீராலும் என்னிலிருந்து என் பாவங்களைக் கழுவி விடுவாயாக! நீ வெண்மையான ஆடையை அழுக்கிலிருந்து தூய்மைப்படுத்துவதைப் போன்று என் உள்ளத்தைத் தவறுகளிலிருந்து தூய்மைப்படுத்துவாயாக! கிழக்கிற்கும் மேற்கிற்கும் இடையே நீ ஏற்படுத்திய இடைவெளியைப் போன்று எனக்கும் என் தவறுகளுக்குமிடையே நீ இடைவெளியை ஏற்படுத்துவாயாக! இறைவா! சோம்பேறித் தனத்திலிருந்தும் தள்ளாமையிலிருந்தும் பாவத்திலிருந்தும் கடனிலிருந்தும் நான் உன்னிடம் பாதுகாப்புக் கோருகின்றேன்)).

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)

அத்தியாயம்: 48, பாடம்: 13, ஹதீஸ் எண்: 4855

حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا لَيْثٌ، ح وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رُمْحٍ، أَخْبَرَنَا اللَّيْثُ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ، عَنْ أَبِي الْخَيْرِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، عَنْ أَبِي بَكْرٍ :‏

أَنَّهُ قَالَ لِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم عَلِّمْنِي دُعَاءً أَدْعُو بِهِ فِي صَلاَتِي قَالَ ‏ “‏ قُلِ اللَّهُمَّ إِنِّي ظَلَمْتُ نَفْسِي ظُلْمًا كَبِيرًا – وَقَالَ قُتَيْبَةُ كَثِيرًا – وَلاَ يَغْفِرُ الذُّنُوبَ إِلاَّ أَنْتَ فَاغْفِرْ لِي مَغْفِرَةً مِنْ عِنْدِكَ وَارْحَمْنِي إِنَّكَ أَنْتَ الْغَفُورُ الرَّحِيمُ ‏”‏


وَحَدَّثَنِيهِ أَبُو الطَّاهِرِ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ، أَخْبَرَنِي رَجُلٌ، سَمَّاهُ وَعَمْرُو بْنُ الْحَارِثِ عَنْ يَزِيدَ بْنَ أَبِي حَبِيبٍ، عَنْ أَبِي الْخَيْرِ، أَنَّهُ سَمِعَ عَبْدَ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ، يَقُولُ إِنَّ أَبَا بَكْرٍ الصِّدِّيقَ قَالَ لِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم عَلِّمْنِي يَا رَسُولَ اللَّهِ دُعَاءً أَدْعُو بِهِ فِي صَلاَتِي وَفِي بَيْتِي ‏.‏ ثُمَّ ذَكَرَ بِمِثْلِ حَدِيثِ اللَّيْثِ غَيْرَ أَنَّهُ قَالَ ‏ “‏ ظُلْمًا كَثِيرًا ‏”‏

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், “தொழுகையில் (அத்தஹிய்யாத் இருப்பில்) நான் பிரார்த்திப்பதற்கு ஒரு பிரார்த்தனையை எனக்குக் கற்றுத்தாருங்கள்” என்று கேட்டேன். அப்போது “அல்லாஹும்ம இன்னீ ழலம்த்து நஃப்ஸீ ழுல்மன் கபீரன் / கஸீரன் வலா யஃக்ஃபிருத் துனூப இல்லா அன்த்த. ஃபஃக்ஃபிர்லீ மஃக்ஃபிரத்தம் மின் இன்திக்க வர்ஹம்னீ இன்னக்க அன்த்தல் ஃகஃபூருர் ரஹீம்” என்று கூறுங்கள் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கற்றுத் தந்தார்கள்.

(பொருள்: இறைவா! எனக்கு நானே பெருமளவில் / அதிகமாக அநீதி இழைத்துக்கொண்டேன். உன்னைத் தவிர வேறெவரும் பாவங்களை மன்னிக்க முடியாது. எனவே, உன்னிடமிருந்து எனக்கு மன்னிப்பு வழங்குவாயாக! மேலும், எனக்குக் கருணை புரிவாயாக! நிச்சயமாக நீ பெரிதும் மன்னிப்பவனும் அதிகக் கருணையுடையவனும் ஆவாய்).

அறிவிப்பாளர் : அபூபக்ருஸ் ஸித்தீக் (ரலி)


குறிப்பு :

அப்துல்லாஹ் பின் அம்ரிப்னுல் ஆஸ் (ரலி) வழி அறிவிப்பில், “நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், அல்லாஹ்வின் தூதரே! நான் எனது தொழுகையிலும் எனது இல்லத்திலும் பிரார்த்திக்க ஒரு பிரார்த்தனையைக் கற்றுத்தாருங்கள் என்று கேட்டேன் …” என ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்றவை மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன. அதில், ‘அதிகமாக (கஸீரன்) அநீதி இழைத்துக்கொண்டேன்’ என்றே இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 48, பாடம்: 13, ஹதீஸ் எண்: 4854

حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، أَخْبَرَنَا النَّضْرُ بْنُ شُمَيْلٍ، حَدَّثَنَا عُثْمَانُ، – وَهُوَ ابْنُ غِيَاثٍ – حَدَّثَنَا أَبُو عُثْمَانَ، عَنْ أَبِي مُوسَى الأَشْعَرِيِّ قَالَ :‏

قَالَ لِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏”‏ أَلاَ أَدُلُّكَ عَلَى كَلِمَةٍ مِنْ كُنُوزِ الْجَنَّةِ – أَوْ قَالَ – عَلَى كَنْزٍ مِنْ كُنُوزِ الْجَنَّةِ ‏”‏ ‏.‏ فَقُلْتُ بَلَى ‏.‏ فَقَالَ ‏”‏ لاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِاللَّهِ ‏”‏

என்னிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “சொர்க்கத்தின் கருவூலச் சொல் ஒன்றை (அ) சொர்க்கத்தின் கருவூலங்களில் ஒரு கருவூலத்தை உங்களுக்கு அறிவித்துத் தரட்டுமா?” என்று கேட்டார்கள். நான் “ஆம் (அறிவியுங்கள்)” என்று சொன்னேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ் (என்பதாகும்)” என்று சொன்னார்கள்.

அறிவிப்பாளர் : அபூமூஸா அல் அஷ்அரீ (ரலி)