அத்தியாயம்: 1, பாடம்: 71, ஹதீஸ் எண்: 223

و حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ حَاتِمٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ أَخِي ابْنِ شِهَابٍ ‏ ‏عَنْ ‏ ‏عَمِّهِ ‏ ‏قَالَ أَخْبَرَنِي ‏ ‏نَافِعٌ ‏ ‏مَوْلَى ‏ ‏أَبِي قَتَادَةَ الْأَنْصَارِيِّ ‏ ‏أَنَّهُ سَمِعَ ‏ ‏أَبَا هُرَيْرَةَ ‏ ‏يَقُولُ ‏:‏

قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏كَيْفَ أَنْتُمْ إِذَا نَزَلَ ‏ ‏ابْنُ مَرْيَمَ ‏ ‏فِيكُمْ وَأَمَّكُمْ ‏

“மர்யமின் மைந்தர் (ஈஸா) உங்களிடையே இறங்கி வந்து, உங்களுக்குத் தலைவரானால் உங்களுக்கு எப்படி இருக்கும்?” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) வினவினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

அத்தியாயம்: 1, பாடம்: 71, ஹதீஸ் எண்: 222

حَدَّثَنِي ‏ ‏حَرْمَلَةُ بْنُ يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏يُونُسُ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏قَالَ أَخْبَرَنِي ‏ ‏نَافِعٌ ‏ ‏مَوْلَى ‏ ‏أَبِي قَتَادَةَ الْأَنْصَارِيِّ ‏ ‏أَنَّ ‏ ‏أَبَا هُرَيْرَةَ ‏ ‏قَالَ :‏ ‏

قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏كَيْفَ أَنْتُمْ إِذَا نَزَلَ ‏ ‏ابْنُ مَرْيَمَ ‏ ‏فِيكُمْ وَإِمَامُكُمْ مِنْكُمْ ‏

“உங்களைச் சேர்ந்த ஒருவர் உங்களுக்கு(த் தலைமை ஏற்று) இமாமாக இருக்க, மர்யமின் மைந்தர் (ஈஸா) உங்களிடையே இறங்குவாரேயானால் அப்போது உங்களுக்கு எப்படியிருக்கும்?” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) வினவினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா(ரலி)

அத்தியாயம்: 1, பாடம்: 71, ஹதீஸ் எண்: 221

حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏لَيْثٌ ‏ ‏عَنْ ‏ ‏سَعِيدِ بْنِ أَبِي سَعِيدٍ ‏ ‏عَنْ ‏ ‏عَطَاءِ بْنِ مِينَاءَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏أَنَّهُ قَالَ :‏

قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَاللَّهِ ‏ ‏لَيَنْزِلَنَّ ‏ ‏ابْنُ مَرْيَمَ ‏ ‏حَكَمًا عَادِلًا فَلَيَكْسِرَنَّ الصَّلِيبَ وَلَيَقْتُلَنَّ الْخِنْزِيرَ ‏ ‏وَلَيَضَعَنَّ ‏ ‏الْجِزْيَةَ ‏ ‏وَلَتُتْرَكَنَّ ‏ ‏الْقِلَاصُ ‏ ‏فَلَا ‏ ‏يُسْعَى عَلَيْهَا وَلَتَذْهَبَنَّ الشَّحْنَاءُ وَالتَّبَاغُضُ وَالتَّحَاسُدُ وَلَيَدْعُوَنَّ إِلَى الْمَالِ فَلَا يَقْبَلُهُ أَحَدٌ ‏

“அல்லாஹ்வின் மீதாணையாக! மர்யமின் மைந்தர் நேர்மையாகத் தீர்ப்பளிக்கும் நீதிபதியாக (உலக அழிவுக்குமுன்) இறங்கவிருக்கின்றார். அவர் சிலுவையை உடைப்பார்; பன்றியைக் கொல்வார்; ஜிஸ்யா (எனும் காப்பு) வரியை வாங்க மறுப்பார்; அப்போது (விலையுயர்ந்த) ஒட்டகங்கள் (கண்டுகொள்ளப்படாமல்) விடப்படும். அவற்றை யாரும் பொருட்படுத்த மாட்டார்கள். (மக்களிடையே) பகைமையும் வெறுப்பும் பொறாமையும் அகன்று விடும். செல்வங்களைப் பெற்றுக் கொள்ளுமாறு மக்கள் அழைக்கப்படுவார்கள். ஆனால், ஏற்றுக் கொள்ள எவரும் முன்வர மாட்டார்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா(ரலி)

அத்தியாயம்: 1, பாடம்: 71, ஹதீஸ் எண்: 220

حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏لَيْثٌ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ رُمْحٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏اللَّيْثُ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ الْمُسَيَّبِ ‏ ‏أَنَّهُ سَمِعَ ‏ ‏أَبَا هُرَيْرَةَ ‏ ‏يَقُولُ ‏:‏

قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَالَّذِي نَفْسِي بِيَدِهِ ‏ ‏لَيُوشِكَنَّ أَنْ يَنْزِلَ فِيكُمْ ‏ ‏ابْنُ مَرْيَمَ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏حَكَمًا ‏ ‏مُقْسِطًا ‏ ‏فَيَكْسِرَ الصَّلِيبَ وَيَقْتُلَ الْخِنْزِيرَ وَيَضَعَ ‏ ‏الْجِزْيَةَ ‏ ‏وَيَفِيضُ ‏ ‏الْمَالُ حَتَّى لَا يَقْبَلَهُ أَحَدٌ ‏


و حَدَّثَنَاه ‏ ‏عَبْدُ الْأَعْلَى بْنُ حَمَّادٍ ‏ ‏وَأَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَزُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏قَالُوا حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنِيهِ ‏ ‏حَرْمَلَةُ بْنُ يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏قَالَ حَدَّثَنِي ‏ ‏يُونُسُ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏حَسَنٌ الْحُلْوَانِيُّ ‏ ‏وَعَبْدُ بْنُ حُمَيْدٍ ‏ ‏عَنْ ‏ ‏يَعْقُوبَ بْنِ إِبْرَاهِيمَ بْنِ سَعْدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏عَنْ ‏ ‏صَالِحٍ ‏ ‏كُلُّهُمْ ‏ ‏عَنْ ‏ ‏الزُّهْرِيِّ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏وَفِي رِوَايَةِ ‏ ‏ابْنِ عُيَيْنَةَ ‏ ‏إِمَامًا ‏ ‏مُقْسِطًا ‏ ‏وَحَكَمًا عَدْلًا ‏ ‏وَفِي رِوَايَةِ ‏ ‏يُونُسَ ‏ ‏حَكَمًا عَادِلًا وَلَمْ يَذْكُرْ إِمَامًا ‏ ‏مُقْسِطًا ‏ ‏وَفِي حَدِيثِ ‏ ‏صَالِحٍ ‏ ‏حَكَمًا ‏ ‏مُقْسِطًا ‏ ‏كَمَا قَالَ ‏ ‏اللَّيْثُ ‏ ‏وَفِي حَدِيثِهِ مِنْ الزِّيَادَةِ وَحَتَّى تَكُونَ السَّجْدَةُ الْوَاحِدَةُ خَيْرًا مِنْ الدُّنْيَا وَمَا فِيهَا ‏ ‏ثُمَّ ‏ ‏يَقُولُا ‏ ‏أَبُو هُرَيْرَةَ ‏ ‏اقْرَءُوا إِنْ شِئْتُمْ ‏
‏وَإِنْ مِنْ ‏ ‏أَهْلِ الْكِتَابِ ‏ ‏إِلَّا لَيُؤْمِنَنَّ بِهِ قَبْلَ مَوْتِهِ ‏ ‏الْآيَةَ‏

“என் உயிரைக் கைவசம் வைத்திருப்பவன் மீதாணை! விரைவில் (உலக அழிவுக்கு முன்) மர்யமின் மகன் (ஈஸா) (அலை) உங்களிடையே நேர்மையாகத் தீர்ப்பளிக்கும் நீதிபதியாக இறங்கவிருக்கின்றார். அவர் சிலுவையை உடைப்பார்; பன்றியைக் கொல்வார்; ஜிஸ்யா (எனும் காப்பு) வரியை வாங்க மறுப்பார்; அப்போது, (கொடுத்தாலும்) பெற்றுக் கொள்ள எவரும் முன்வராத அளவுக்குச் செல்வம் (பெருகி) வழிந்தோடும்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)


குறிப்பு:

இபுனு உயைனா (ரஹ்) வழி அறிவிப்பில், “நடுநிலை வழுவா ஆட்சித் தலைவராகவும் நேர்மையாகத் தீர்ப்பளிக்கும் நீதிபதியாகவும் (திகழ்வார்)” என்று ஈஸா (அலை) பற்றிய குறிப்போடு காணப்படுகின்றது.

யூனுஸ் (ரஹ்) வழி அறிவிப்பில், “நடுநிலை வழுவா ஆட்சித் தலைவராக” என்ற சொற்கள் இல்லாமல் “நேர்மையாகத் தீர்ப்பளிக்கும் நீதிபதியாக” என்பது மட்டுமே இடம் பெற்றுள்ளது.

ஸாலிஹ் (ரஹ்) வழி அறிவிப்பில், “அந்தக் காலகட்டத்தில் செய்யப்படும் ஒரேயொரு ஸஜ்தாவானது இந்த உலகத்தையும் அதிலுள்ளவற்றையும்விடச் சிறந்ததாக இருக்கும்” என்றும் “வேதம் வழங்கப்பட்ட எவரும் தாம் இறப்பதற்கு முன் அவர் (ஈஸா) மீது ஈமான் கொள்ளாமல் இருப்பதில்லை … எனும் (4:159ஆவது) இறைவசனத்தை நீங்கள் விரும்பினால் ஓதிக்கொள்ளுங்கள்!” என்று அபூஹுரைரா (ரலி) கூறியதாகவும் இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 1, பாடம்: 70, ஹதீஸ் எண்: 219

حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏هُشَيْمٌ ‏ ‏عَنْ ‏ ‏صَالِحِ بْنِ صَالِحٍ الْهَمْدَانِيِّ ‏ ‏عَنْ ‏ ‏الشَّعْبِيِّ ‏ ‏قَالَ ‏ ‏رَأَيْتُ رَجُلًا مِنْ أَهْلِ ‏ ‏خُرَاسَانَ ‏ ‏سَأَلَ ‏ ‏الشَّعْبِيَّ ‏ ‏فَقَالَ يَا ‏ ‏أَبَا عَمْرٍو ‏ ‏إِنَّ مَنْ قِبَلَنَا مِنْ أَهْلِ ‏ ‏خُرَاسَانَ ‏ ‏يَقُولُونَ فِي الرَّجُلِ إِذَا أَعْتَقَ أَمَتَهُ ثُمَّ تَزَوَّجَهَا فَهُوَ كَالرَّاكِبِ ‏ ‏بَدَنَتَهُ ‏ ‏فَقَالَ ‏ ‏الشَّعْبِيُّ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏أَبُو بُرْدَةَ بْنُ أَبِي مُوسَى ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ :‏ ‏

أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏ثَلَاثَةٌ يُؤْتَوْنَ أَجْرَهُمْ مَرَّتَيْنِ رَجُلٌ مِنْ ‏ ‏أَهْلِ الْكِتَابِ ‏ ‏آمَنَ بِنَبِيِّهِ وَأَدْرَكَ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَآمَنَ بِهِ وَاتَّبَعَهُ وَصَدَّقَهُ فَلَهُ أَجْرَانِ وَعَبْدٌ مَمْلُوكٌ أَدَّى حَقَّ اللَّهِ تَعَالَى وَحَقَّ سَيِّدِهِ فَلَهُ أَجْرَانِ وَرَجُلٌ كَانَتْ لَهُ أَمَةٌ فَغَذَّاهَا فَأَحْسَنَ غِذَاءَهَا ثُمَّ أَدَّبَهَا فَأَحْسَنَ أَدَبَهَا ثُمَّ أَعْتَقَهَا وَتَزَوَّجَهَا فَلَهُ أَجْرَانِ ‏


ثُمَّ ‏ ‏قَالَ ‏ ‏الشَّعْبِيُّ ‏ ‏لِلْخُرَاسَانِيِّ ‏ ‏خُذْ هَذَا الْحَدِيثَ بِغَيْرِ شَيْءٍ فَقَدْ كَانَ الرَّجُلُ يَرْحَلُ فِيمَا دُونَ هَذَا إِلَى ‏ ‏الْمَدِينَةِ ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدَةُ بْنُ سُلَيْمَانَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏ابْنُ أَبِي عُمَرَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏كُلُّهُمْ ‏ ‏عَنْ ‏ ‏صَالِحِ بْنِ صَالِحٍ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏نَحْوَهُ ‏

“மூன்று வகையினர் (அல்லாஹ்விடமிருந்து) இரட்டிப்பு நன்மைகள் வழங்கப் படுவார்கள்:

வேதக்கார(யூத, கிருஸ்துவ)ர்களில் ஒருவராக இருந்து கொண்டு, தம்முடைய இறைத்தூதரையும் நம்பி, எனது காலத்தை அடைந்தபோது என்னையும் நம்பி, பின்பற்றி, மெய்ப்படுத்தியவருக்கு இரட்டிப்பு நன்மைகள் உள்ளன.

ஒரு தலைவருக்கு அடிமையாக இருந்து கொண்டு, அல்லாஹ்வுக்குச் செய்ய வேண்டிய கடமைகளையும் தன் தலைவருக்குச் செய்ய வேண்டிய கடமைகளையும் நிறைவேற்றியவருக்கும் இரட்டிப்பு நன்மைகள் உள்ளன.

தம் அதிகாரத்தில் இருந்த அடிமைப் பெண்ணுக்கு நிறைவாக உணவளித்து, அவளுக்கு நற்குணங்களைச் சிறப்பாகக் கற்றுக் கொடுத்து, பிறகு அவளை அடிமைத் தளையிலிருந்து விடுதலை செய்து, தாமே மணந்தும் கொண்டாரெனில் அவருக்கும் இரட்டிப்பு நன்மைகள் உள்ளன” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூமூஸா (ரலி)


குறிப்பு:

குராசான் நாட்டைச் சேர்ந்த ஒருவர் ஆமிர் அஷ்ஷஅபீ (ரஹ்) அவர்களிடம், “அபூஅம்ரே! ‘தம்முடைய அடிமைப் பெண்ணை விடுதலை செய்து அவளைத் தாமே மணந்து கொள்ளும் ஒருவர் தமது சொந்த ஒட்டகத்திலேயே பயணிக்கும் ஒரு (சாதாரணப்) பயணியைப் போன்றவர். (அவருக்கு அதற்காகத் தனியான நன்மை ஏதுமில்லை)’ என எங்கள் குராசான் பகுதியைச் சேர்ந்த சிலர் கூறுகின்றனரே?” என்று கேட்டார். அதற்கு பதிலளிக்கும் முகமாக ஷஅபீ (ரஹ்), “அபூபுர்தா பின் அபீமூஸா (ரஹ்) தம் தந்தை அபூமூஸா (ரலி) கூறியதாக எனக்கு அறிவித்தார்கள் …” எனத் தொடங்கி மேற்காணும் ஹதீஸை அறிவித்து விட்டு, “(செலவு) ஏதுமின்றி (உங்களுக்கு நான் அறிவித்த) இந்த ஹதீஸைப் பெற்று(ப் பாதுகாத்து)க் கொள்ளுங்கள். ஏனெனில், இதைவிடச் சிறிய விஷயங்களை அறிந்து கொள்வதற்காகச் சிலர் (வெகுதொலைவிலிருந்து நிறையச் செலவழித்துக் கொண்டு) மதீனாவரை பயணம் செய்ததுண்டு” என்றார்கள்.

அத்தியாயம்: 1, பாடம்: 70, ஹதீஸ் எண்: 218

حَدَّثَنِي ‏ ‏يُونُسُ بْنُ عَبْدِ الْأَعْلَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏قَالَ وَأَخْبَرَنِي ‏ ‏عَمْرٌو ‏ ‏أَنَّ ‏ ‏أَبَا يُونُسَ ‏ ‏حَدَّثَهُ عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ :‏ ‏

عَنْ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَنَّهُ قَالَ وَالَّذِي نَفْسُ ‏ ‏مُحَمَّدٍ ‏ ‏بِيَدِهِ ‏ ‏لَا يَسْمَعُ بِي أَحَدٌ مِنْ هَذِهِ الْأُمَّةِ يَهُودِيٌّ وَلَا نَصْرَانِيٌّ ثُمَّ يَمُوتُ وَلَمْ يُؤْمِنْ بِالَّذِي أُرْسِلْتُ بِهِ إِلَّا كَانَ مِنْ أَصْحَابِ النَّار

“முஹம்மதின் உயிரைக் கைவசம் வைத்திருப்பவன் மீதாணை! இந்த(இறுதி)ச் சமுதாயத்திலுள்ள யூதரோ கிறிஸ்துவரோ யாரேனும் ஒருவர் என்(மார்க்கத்தி)னைப் பற்றிக் கேள்விப்பட்ட பிறகும், நான் கொண்டு வந்த(மார்க்கத்)தை நம்பிக்கை கொள்ளாமல் இறந்து விட்டால், அவர் நரகவாசிகளில் ஒருவராகவே இருப்பார்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

அத்தியாயம்: 1, பாடம்: 70, ஹதீஸ் எண்: 217

َدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏لَيْثٌ ‏ ‏عَنْ ‏ ‏سَعِيدِ بْنِ أَبِي سَعِيدٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏:‏

أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏مَا مِنْ الْأَنْبِيَاءِ مِنْ نَبِيٍّ إِلَّا قَدْ أُعْطِيَ مِنْ الْآيَاتِ مَا مِثْلُهُ آمَنَ عَلَيْهِ الْبَشَرُ وَإِنَّمَا كَانَ الَّذِي أُوتِيتُ وَحْيًا أَوْحَى اللَّهُ إِلَيَّ فَأَرْجُو أَنْ أَكُونَ أَكْثَرَهُمْ تَابِعًا يَوْمَ الْقِيَامَة

“அற்புதங்கள் வழங்கப்படாத நபிமார்கள் இல்லை. அவ்வற்புதங்களைக் கண்ணுற்ற மனிதர்கள் (நபிமார்கள் கூறியவற்றை) நம்பினர். அல்லாஹ் எனக்கு அருளிய வேத அறிவிப்பான வஹீயைத்தான் எனக்கான அற்புதமாக வழங்கப்பட்டிருக்கின்றேன். ஆகவே, இறைத்தூதர்களுள் அதிகமானவர்களால் பின்பற்றப்பட்டவனாக மறுமை நாளில் நான் இருக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றேன்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

அத்தியாயம்: 1, பாடம்: 69, ஹதீஸ் எண்: 216

و حَدَّثَنِي ‏ ‏حَرْمَلَةُ بْنُ يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏يُونُسُ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ ‏ ‏وَسَعِيدِ بْنِ الْمُسَيَّبِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ :‏ ‏

أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏نَحْنُ أَحَقُّ بِالشَّكِّ مِنْ ‏ ‏إِبْرَاهِيمَ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ [‏ ‏إِذْ قَالَ ‏رَبِّ أَرِنِي كَيْفَ تُحْيِي الْمَوْتَى قَالَ ‏ ‏أَوَ لَمْ تُؤْمِنْ قَالَ بَلَى وَلَكِنْ لِيَطْمَئِنَّ قَلْبِي]

‏قَالَ وَيَرْحَمُ اللَّهُ ‏ ‏لُوطًا ‏ ‏لَقَدْ كَانَ يَأْوِي إِلَى رُكْنٍ شَدِيدٍ وَلَوْ لَبِثْتُ فِي السِّجْنِ طُولَ لَبْثِ ‏ ‏يُوسُفَ ‏ ‏لَأَجَبْتُ الدَّاعِيَ ‏


و حَدَّثَنِي ‏ ‏بِهِ إِنْ شَاءَ اللَّهُ ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ أَسْمَاءَ الضُّبَعِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏جُوَيْرِيَةُ ‏ ‏عَنْ ‏ ‏مَالِكٍ ‏ ‏عَنْ ‏ ‏الزُّهْرِيِّ ‏ ‏أَنَّ ‏ ‏سَعِيدَ بْنَ الْمُسَيَّبِ ‏ ‏وَأَبَا عُبَيْدٍ ‏ ‏أَخْبَرَاهُ عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏عَنْ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بِمِثْلِ حَدِيثِ ‏ ‏يُونُسَ ‏ ‏عَنْ ‏ ‏الزُّهْرِيِّ ‏ ‏وَفِي حَدِيثِ ‏ ‏مَالِكٍ [‏وَلَكِنْ لِيَطْمَئِنَّ قَلْبِي]

‏قَالَ ثُمَّ قَرَأَ هَذِهِ الْآيَةَ حَتَّى ‏ ‏جَازَهَا ‏ ‏حَدَّثَنَاه ‏ ‏عَبْدُ بْنُ حُمَيْدٍ ‏ ‏قَالَ حَدَّثَنِي ‏ ‏يَعْقُوبُ يَعْنِي ابْنَ إِبْرَاهِيمَ بْنِ سَعْدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو أُوَيْسٍ ‏ ‏عَنْ ‏ ‏الزُّهْرِيِّ ‏ ‏كَرِوَايَةِ ‏ ‏مَالِكٍ ‏ ‏بِإِسْنَادِهِ وَقَالَ ثُمَّ قَرَأَ هَذِهِ الْآيَةَ حَتَّى ‏ ‏أَنْجَزَهَا

“இபுறாஹீம் (அலை) அவர்களைவிட (இறந்தவை உயிரூட்டப் படுவதில்) ஐயம் கொள்வதற்கு நாம் அதிகத் தகுதியுடையவராவோம். ‘என் இறைவா! இறந்தவர்களை நீ எவ்வாறு உயிர்ப்பிக்கின்றாய் என்பதை எனக்குக் காட்டேன்!’ என அவர் வேண்டியபோது ‘நீர் நம்பவில்லையா?’ என இறைவன் கேட்டான். ‘அஃதன்று; (நம்புகின்றேன்) ஆனால் என் உள்ளம் நிறைவடையும் பொருட்டே (இவ்வாறு கேட்கிறேன்)’ என்று கூறினார் (2:260)”.

“லூத் (அலை) அவர்களுக்கு அல்லாஹ் அருள் புரிவானாக! அவர் முழுமையாய்த் தஞ்சமடைந்தது வல்லமை மிக்கவனிடம்”.

“யூஸுஃப் (அலை) அவர்களைப்போல் நீண்ட காலம் சிறையில் நான் தங்கியிருக்க நேரிட்டு (அவர்களை விடுதலை செய்ய வந்ததைப் போன்று) என்னை அழைக்க ஓர் அழைப்பாளர் வந்து இருந்தால், அந்த அழைப்பாளரின் அழைப்பை அப்போதே ஏற்றுக் கொண்டிருப்பேன்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)


குறிப்பு:

ஸூஹ்ரீ (ரஹ்) வழி வந்த இரு அறிவிப்புகளில், “நபி (ஸல்) அந்த (2:260ஆவது) இறைவசனத்தை முழுமையாக ஓதிக்காட்டினார்கள்” என்று பதிவாகியுள்ளது.

அத்தியாயம்: 1, பாடம்: 68, ஹதீஸ் எண்: 215

حَدَّثَنِي ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ أَخِي ابْنِ شِهَابٍ ‏ ‏عَنْ ‏ ‏عَمِّهِ ‏ ‏قَالَ أَخْبَرَنِي ‏ ‏عَامِرُ بْنُ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏سَعْدٍ :‏ ‏

أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَعْطَى ‏ ‏رَهْطًا ‏ ‏وَسَعْدٌ ‏ ‏جَالِسٌ فِيهِمْ قَالَ ‏ ‏سَعْدٌ ‏ ‏فَتَرَكَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مِنْهُمْ مَنْ لَمْ يُعْطِهِ وَهُوَ أَعْجَبُهُمْ إِلَيَّ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ مَا لَكَ عَنْ فُلَانٍ فَوَاللَّهِ إِنِّي لَأَرَاهُ مُؤْمِنًا فَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَوْ مُسْلِمًا قَالَ فَسَكَتُّ قَلِيلًا ثُمَّ غَلَبَنِي مَا أَعْلَمُ مِنْهُ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ مَا لَكَ عَنْ فُلَانٍ فَوَاللَّهِ إِنِّي لَأَرَاهُ مُؤْمِنًا فَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَوْ مُسْلِمًا قَالَ فَسَكَتُّ قَلِيلًا ثُمَّ غَلَبَنِي مَا عَلِمْتُ مِنْهُ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ مَا لَكَ عَنْ فُلَانٍ فَوَاللَّهِ إِنِّي لَأَرَاهُ مُؤْمِنًا فَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَوْ مُسْلِمًا ‏ ‏إِنِّي لَأُعْطِي الرَّجُلَ وَغَيْرُهُ أَحَبُّ إِلَيَّ مِنْهُ خَشْيَةَ أَنْ ‏ ‏يُكَبَّ ‏ ‏فِي النَّارِ عَلَى وَجْهِهِ ‏


حَدَّثَنَا ‏ ‏الْحَسَنُ بْنُ عَلِيٍّ الْحُلْوَانِيُّ ‏ ‏وَعَبْدُ بْنُ حُمَيْدٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏يَعْقُوبُ وَهُوَ ابْنُ إِبْرَاهِيمَ بْنِ سَعْدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏عَنْ ‏ ‏صَالِحٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏قَالَ حَدَّثَنِي ‏ ‏عَامِرُ بْنُ سَعْدٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏سَعْدٍ ‏ ‏أَنَّهُ قَالَ ‏ ‏أَعْطَى رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏رَهْطًا ‏ ‏وَأَنَا جَالِسٌ فِيهِمْ بِمِثْلِ حَدِيثِ ‏ ‏ابْنِ أَخِي ابْنِ شِهَابٍ ‏ ‏عَنْ عَمِّهِ وَزَادَ فَقُمْتُ إِلَى رَسُولِ اللَّهِ فَسَارَرْتُهُ فَقُلْتُ مَا لَكَ عَنْ فُلَانٍ ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏الْحَسَنُ الْحُلْوَانِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَعْقُوبُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏عَنْ ‏ ‏صَالِحٍ ‏ ‏عَنْ ‏ ‏إِسْمَعِيلَ بْنِ مُحَمَّدٍ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏مُحَمَّدَ بْنَ سَعْدٍ ‏ ‏يُحَدِّثُ هَذَا ‏ ‏فَقَالَ فِي حَدِيثِهِ فَضَرَبَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بِيَدِهِ بَيْنَ عُنُقِي وَكَتِفِي ثُمَّ قَالَ أَقِتَالًا أَيْ ‏ ‏سَعْدُ ‏ ‏إِنِّي لَأُعْطِي الرَّجُل

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ஒரு குழுவினருக்கு (தர்மப் பொருட்களை) வழங்கிக் கொண்டிருந்தார்கள். அவர்களிடையே நானும் அமர்ந்திருந்தேன். அப்போது, அக்குழுவினரில் நான் பேரன்பு வைத்திருந்த ஒருவருக்கு ஏதும் கொடுக்காமல் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) விட்டுவிட்டார்கள். ஆகவே நான், “அல்லாஹ்வின் தூதரே! அவர்மீது உங்களுக்கு என்ன (அதிருப்தி)?. அல்லாஹ்வின் மீதாணையாக! அவர் ஒரு முஃமின் என நான் கருதுகின்றேன்” என்று கூறினேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “அவரை முஸ்லிம் என்று சொல்லுங்கள்!” என்றார்கள். சற்று அமைதி காத்தேன். அவரைப் பற்றி நான் அறிந்திருந்தவை என்னைச் சற்று நேரத்திற்குமேல் சும்மா இருக்க விடவில்லை. எனவே, “அல்லாஹ்வின் தூதரே! அவர்மீது உங்களுக்கு என்ன (அதிருப்தி)?. அல்லாஹ்வின் மீதாணையாக! அவர் ஒரு முஃமின் என நான் கருதுகின்றேன்” என்று (மீண்டும்) கூறினேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (மறுபடியும்), “அவரை முஸ்லிம் என்று சொல்லுங்கள்!” என்றார்கள். சற்றே அமைதி காத்தேன். அவரைப் பற்றி நான் அறிந்திருந்தவை என்னைச் சற்று நேரத்திற்குமேல் சும்மா இருக்க விடவில்லையாதலால் (மீண்டும்), “அல்லாஹ்வின் தூதரே! அவர்மீது உங்களுக்கு என்ன (அதிருப்தி)?. அல்லாஹ்வின் மீதாணையாக! அவர் ஒரு முஃமின் என நான் கருதுகின்றேன்” என்றேன்.

“அவரை முஸ்லிம் என்று சொல்லுங்கள்! நான் அதிகம் விரும்புகின்ற ஒருவரை விடுத்து வேறொருவருக்குக் (காரணத்தோடுதான்) கொடுக்கின்றேன். ஏனெனில், (வறுமையினால் குற்றமிழைத்து) அவர் நரகத்தில் முகம் குப்புற வீழ்த்தப்படுவாரோ எனும் அச்சத்தினால்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : ஸஅத் பின் அபீவக்காஸ் (ரலி)


குறிப்பு:

இபுனு ஷிஹாப் (ரஹ்) வழி அறிவிப்பில், “அந்தப் பங்கீட்டின்போது அக்குழுவினரோடு நானும் அமர்ந்திருந்தேன். ஒருவருக்கு எதுவும் வழங்காததால் நான் எழுந்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அருகில் சென்று, அவர்மீது உங்களுக்கு என்ன (அதிருப்தி) என்று இரகசியமாகக் கேட்டேன்” என்று ஸஅத் பின் அபீவக்காஸ் (ரலி) கூறிய கூடுதல் செய்தியுடன் பதிவாகியுள்ளது.

இஸ்மாயீல் பின் முஹம்மது (ரஹ்) வழி அறிவிப்பில், மும்முறை சலிக்காமல் சமாதானம் கூறிய பிறகும் ஸஅத் (ரலி) தன் கருத்தை மீண்டும் வலியுறுத்தியபோது, நபி (ஸல்) ஸஅத் (ரலி) அவர்களது அடிப்பிடரியில் ஒரு தட்டு தட்டி, “சண்டைக்கு வருகின்றீர்களா ஸஅதே! நான் அதிகம் விரும்புகின்ற ஒருவரை விடுத்து வேறொருவருக்குக் கொடுக்கிறேனென்றால் …” என்று கூறியதாக இடம் பெற்றுள்ளது.

அத்தியாயம்: 1, பாடம்: 68, ஹதீஸ் எண்: 214

حَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عَامِرِ بْنِ سَعْدٍ، عَنْ أَبِيهِ، قَالَ :‏
قَسَمَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم قَسْمًا فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ أَعْطِ فُلاَنًا فَإِنَّهُ مُؤْمِنٌ ‏.‏ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏”‏ أَوْ مُسْلِمٌ ‏”‏ أَقُولُهَا ثَلاَثًا ‏.‏ وَيُرَدِّدُهَا عَلَىَّ ثَلاَثًا ‏”‏ أَوْ مُسْلِمٌ ‏”‏ ثُمَّ قَالَ ‏”‏ إِنِّي لأُعْطِي الرَّجُلَ وَغَيْرُهُ أَحَبُّ إِلَىَّ مِنْهُ مَخَافَةَ أَنْ يَكُبَّهُ اللَّهُ فِي النَّارِ ‏”‏ ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) பங்கிட்டுக் கொண்டிருந்த ஒரு பங்கீட்டின்போது, “அல்லாஹ்வின் தூதரே! அவருக்குக் கொடுங்கள். அவர் ஒரு முஃமின்” என்று (ஒருவரைச் சுட்டிச்) சொன்னேன். “அவரை முஸ்லிம் என்று சொல்லுங்கள்” என்று நபி (ஸல்) (திருத்தம்) கூறினார்கள். நான் கூறியதையே மும்முறை கூறினேன். நபி (ஸல்) அவர்களும் திருத்தியதைப் போன்றே மும்முறை திருத்தினார்கள்.

பின்னர், “நான் அதிகம் விரும்புகின்ற ஒருவரை விடுத்து வேறொருவருக்குக் (காரணத்தோடுதான்) கொடுக்கிறேன். ஏனெனில், (வறுமையினால் குற்றமிழைத்து, அதனால்) அவரை அல்லாஹ் நரகத்தில் குப்புறத் தள்ளி விடுவானோ எனும் அச்சத்தினால்” என்றார்கள்.

அறிவிப்பாளர் : ஸஅத் பின் அபீவக்காஸ் (ரலி)