அத்தியாயம்: 52, பாடம்:9, ஹதீஸ் எண்: 4991

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، وَأَبُو أُسَامَةَ عَنِ الأَعْمَشِ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنْ أَبِي عَبْدِ الرَّحْمَنِ السُّلَمِيِّ، عَنْ أَبِي مُوسَى قَالَ :‏

قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏”‏ لاَ أَحَدَ أَصْبَرُ عَلَى أَذًى يَسْمَعُهُ مِنَ اللَّهِ عَزَّ وَجَلَّ إِنَّهُ يُشْرَكُ بِهِ وَيُجْعَلُ لَهُ الْوَلَدُ ثُمَّ هُوَ يُعَافِيهِمْ وَيَرْزُقُهُمْ ‏”‏


حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ، وَأَبُو سَعِيدٍ الأَشَجُّ قَالاَ حَدَّثَنَا وَكِيعٌ، حَدَّثَنَا الأَعْمَشُ، حَدَّثَنَا سَعِيدُ بْنُ جُبَيْرٍ، عَنْ أَبِي عَبْدِ الرَّحْمَنِ السُّلَمِيِّ، عَنْ أَبِي مُوسَى، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم ‏.‏ بِمِثْلِهِ إِلاَّ قَوْلَهُ ‏”‏ وَيُجْعَلُ لَهُ الْوَلَدُ ‏”‏ ‏.‏ فَإِنَّهُ لَمْ يَذْكُرْهُ ‏

“தன் கட்டளைக்கு மாறு செய்தாலும் (உடனே தண்டிக்காமல்) மிகவும் பொறுமை காப்பவன் வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை. (மனிதர்களால்) அவனுக்கு இணை கற்பிக்கப்படுகின்றது; அவனுக்குக் குழந்தை இருப்பதாகவும் கற்பிக்கப்படுகின்றது. அதன் பிறகும் அவர்களுக்கு உடல் நலத்தையும் வாழ்வாதாரத்தையும் அவன் வழங்கிக்கொண்டிருக்கின்றான்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூமூஸா அல்அஷ்அரீ (ரலி)


குறிப்பு :

வகீஉ (ரஹ்) வழி அறிவிப்பில்  “அவனுக்குக் குழந்தை இருப்பதாகவும் கற்பிக்கப்படுகின்றது” எனும் குறிப்பு இடம்பெறவில்லை.

அத்தியாயம்: 52, பாடம்: 9, ஹதீஸ் எண்: 4992

وَحَدَّثَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنِ الأَعْمَشِ، حَدَّثَنَا سَعِيدُ بْنُ جُبَيْرٍ عَنْ أَبِي عَبْدِ الرَّحْمَنِ السُّلَمِيِّ، قَالَ قَالَ عَبْدُ اللَّهِ بْنُ قَيْسٍ قَالَ :‏

رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ “‏ مَا أَحَدٌ أَصْبَرَ عَلَى أَذًى يَسْمَعُهُ مِنَ اللَّهِ تَعَالَى إِنَّهُمْ يَجْعَلُونَ لَهُ نِدًّا وَيَجْعَلُونَ لَهُ وَلَدًا وَهُوَ مَعَ ذَلِكَ يَرْزُقُهُمْ وَيُعَافِيهِمْ وَيُعْطِيهِمْ ‏”‏ ‏

“தன் கட்டளைக்கு மாறு செய்தாலும் (உடனே தண்டிக்காமல்) மிகவும் பொறுமை காப்பதற்கு உயர்ந்தோன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை. மனிதர்கள் (சிலர்) அவனுக்கு இணை உண்டென்றும் அவனுக்குக் குழந்தை உண்டென்றும் அவதூறு கூறுகின்றனர். அவ்வாறிருந்தும், அவர்களுக்கு வாழ்வாதாரத்தையும் உடல்நலத்தையும் (வேறு பல கொடைகளையும்) அவன் வழங்கிக் கொண்டிருக்கின்றான்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூமூஸா (அப்துல்லாஹ் பின் கைஸ்) அல்அஷ்அரீ (ரலி)

அத்தியாயம்: 52, பாடம்: 8, ஹதீஸ் எண்: 4990

حَدَّثَنَا مُوسَى بْنُ قُرَيْشٍ التَّمِيمِيُّ، حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ بَكْرِ بْنِ مُضَرَ، حَدَّثَنِي أَبِي، حَدَّثَنَا جَعْفَرُ بْنُ رَبِيعَةَ، عَنْ عِرَاكِ بْنِ مَالِكٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ بْنِ مَسْعُودٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ :‏

إِنَّ الْقَمَرَ انْشَقَّ عَلَى زَمَانِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் நிலவு பிளந்தது.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி)


குறிப்பு :

இப்னு அப்பாஸ் (ரலி) ஹி.மு 3ஆம் ஆண்டு மக்காவில் பிறந்தார்கள். நிலவுப் பிளவு நிகழ்ந்தபோது அன்னார் இரண்டு வயதுக் குழந்தையாக இருந்தார். இவரும் மூத்தோர்கள் சொல்லக் கேட்டு இதை அறிவிக்கின்றார் என்பதே யதார்த்தத்தில் சரியாக இருக்கும்.

அத்தியாயம்: 52, பாடம்: 8, ஹதீஸ் எண்: 4989

وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، وَأَبُو دَاوُدَ ح وَحَدَّثَنَا ابْنُ بَشَّارٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، وَمُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، وَأَبُو دَاوُدَ كُلُّهُمْ عَنْ شُعْبَةَ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ قَالَ :‏

انْشَقَّ الْقَمَرُ فِرْقَتَيْنِ 


وَفِي حَدِيثِ أَبِي دَاوُدَ انْشَقَّ الْقَمَرُ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم

நிலவு இரண்டு துண்டுகளாகப் பிளந்தது.

அறிவிப்பாளர் :  அனஸ் பின் மாலிக் (ரலி)


குறிப்புகள் :

நிலவுப் பிளவு நிகழ்ந்தபோது அனஸ் (ரலி) மதீனாவில் வாழ்ந்த ஐந்து வயதுச் சிறுவர். நபி (ஸல்) அவர்களின் புலப் பெயர்வுக்குப் பின்னர், மக்காவிலிருந்து புலம் பெயர்ந்துவந்த மூத்தோர்கள் மூலம் அறியப்பெற்று இதை அனஸ் (ரலி) அறிவிக்கின்றார் என்பதே யதார்த்தத்தில் சரியாக இருக்கும்.

அபூதாவூத் அத்தயாலிஸீ (ரஹ்) வழி அறிவிப்பில், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் நிலவு பிளந்தது” என்று இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 52, பாடம்: 8, ஹதீஸ் எண்: 4988

حَدَّثَنِي زُهَيْرُ بْنُ حَرْبٍ، وَعَبْدُ بْنُ حُمَيْدٍ، قَالاَ حَدَّثَنَا يُونُسُ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا شَيْبَانُ، حَدَّثَنَا قَتَادَةُ، عَنْ أَنَسٍ :‏

أَنَّ أَهْلَ مَكَّةَ سَأَلُوا رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم أَنْ يُرِيَهُمْ آيَةً فَأَرَاهُمُ انْشِقَاقَ الْقَمَرِ مَرَّتَيْنِ ‏


وَحَدَّثَنِيهِ مُحَمَّدُ بْنُ رَافِعٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ، بِمَعْنَى حَدِيثِ شَيْبَانَ ‏

மக்காவாசிகள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (இறைவனின் தூதர் என்பதற்குச் சான்றாக) ஓர் அற்புதச் சான்றைக் காட்டும்படி கேட்டார்கள். ஆகவே, சந்திரன் இரண்டு துண்டுகளாகப் பிளப்பதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) காட்டினார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் பின் மாலிக் (ரலி)

அத்தியாயம்: 52, பாடம்: 8, ஹதீஸ் எண்: 4987

حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ الْعَنْبَرِيُّ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا شُعْبَةُ، عَنِ الأَعْمَشِ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ أَبِي مَعْمَرٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ قَالَ :‏

انْشَقَّ الْقَمَرُ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فِلْقَتَيْنِ فَسَتَرَ الْجَبَلُ فِلْقَةً وَكَانَتْ فِلْقَةٌ فَوْقَ الْجَبَلِ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ “‏ اللَّهُمَّ اشْهَدْ ‏”‏ ‏


حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا شُعْبَةُ، عَنِ الأَعْمَشِ، عَنْ مُجَاهِدٍ، عَنِ ابْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم مِثْلَ ذَلِكَ ‏‏

وَحَدَّثَنِيهِ بِشْرُ بْنُ خَالِدٍ، أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، ح وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا ابْنُ أَبِي عَدِيٍّ، كِلاَهُمَا عَنْ شُعْبَةَ بِإِسْنَادِ ابْنِ مُعَاذٍ عَنْ شُعْبَةَ، نَحْوَ حَدِيثِهِ غَيْرَ أَنَّ فِي، حَدِيثِ ابْنِ أَبِي عَدِيٍّ فَقَالَ ‏ “‏ اشْهَدُوا اشْهَدُوا ‏”‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் சந்திரன் இரண்டு துண்டுகளாகப் பிளந்தது. (ஹிரா) மலை, சந்திரனின் ஒரு துண்டை மறைத்தது. மற்றொரு துண்டு, மலைக்கு மேலே இருந்தது.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “இறைவா! நீயே (இதற்கு) சாட்சியாக இரு!” என்று சொன்னார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)


குறிப்பு :

இப்னு உமர் (ரலி) வழியாக இப்னு அதீ (ரஹ்) அறிவிப்பதில், “நீங்கள் (அனைவரும்) சாட்சிகளாக இருங்கள்; நீங்கள் (அனைவரும்) சாட்சிகளாக இருங்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (இரண்டு முறை) கூறியதாக இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 52, பாடம்: 8, ஹதீஸ் எண்: 4986

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَأَبُو كُرَيْبٍ وَإِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ جَمِيعًا عَنْ أَبِي مُعَاوِيَةَ ح وَحَدَّثَنَا عُمَرُ بْنُ حَفْصِ بْنِ غِيَاثٍ، حَدَّثَنَا أَبِي كِلاَهُمَا عَنِ الأَعْمَشِ، ح وَحَدَّثَنَا مِنْجَابُ بْنُ الْحَارِثِ التَّمِيمِيُّ، – وَاللَّفْظُ لَهُ – أَخْبَرَنَا ابْنُ مُسْهِرٍ، عَنِ الأَعْمَشِ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ أَبِي مَعْمَرٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ قَالَ :‏

بَيْنَمَا نَحْنُ مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم بِمِنًى إِذَا انْفَلَقَ الْقَمَرُ فِلْقَتَيْنِ فَكَانَتْ فِلْقَةٌ وَرَاءَ الْجَبَلِ وَفِلْقَةٌ دُونَهُ فَقَالَ لَنَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ “‏ اشْهَدُوا ‏”‏ ‏

நாங்கள் (மக்காவிலுள்ள) மினா எனுமிடத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தோம். அப்போது சந்திரன் இரண்டு துண்டுகளாகப் பிளந்தது. (பிளவுண்ட சந்திரனின்) ஒரு துண்டு (ஹிரா) மலைக்கு அப்பா(ல் மேற்பகுதியி)லும் மற்றொரு துண்டு மலைக்குக் கீழேயும் சென்றது.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) எங்களிடம், “நீங்கள் (அனைவரும்) சாட்சிகளாக இருங்கள்” என்று சொன்னார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)

அத்தியாயம்: 52, பாடம்: 8, ஹதீஸ் எண்: 4985

حَدَّثَنَا عَمْرٌو النَّاقِدُ، وَزُهَيْرُ بْنُ حَرْبٍ، قَالاَ حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنِ ابْنِ أَبِي، نَجِيحٍ عَنْ مُجَاهِدٍ، عَنْ أَبِي مَعْمَرٍ، عَنْ عَبْدِ اللَّهِ قَالَ :‏

انْشَقَّ الْقَمَرُ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم بِشِقَّتَيْنِ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ “‏ اشْهَدُوا ‏”‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது (மக்கா வாழ்) காலத்தில் சந்திரன் இரண்டு துண்டுகளாகப் பிளந்தது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “நீங்கள் (அனைவரும்) சாட்சிகளாக இருங்கள்” என்று சொன்னார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)

அத்தியாயம்: 52, பாடம்: 7, ஹதீஸ் எண்: 4984

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، وَمُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالاَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، ح وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، – وَاللَّفْظُ لَهُ – حَدَّثَنَا غُنْدَرٌ، عَنْ شُعْبَةَ، عَنْ قَتَادَةَ، عَنْ عَزْرَةَ، عَنِ الْحَسَنِ الْعُرَنِيِّ، عَنْ يَحْيَى بْنِ الْجَزَّارِ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى، عَنْ أُبَىِّ بْنِ كَعْبٍ فِي قَوْلِهِ عَزَّ وَجَلَّ :‏

‏{‏ وَلَنُذِيقَنَّهُمْ مِنَ الْعَذَابِ الأَدْنَى دُونَ الْعَذَابِ الأَكْبَرِ‏}‏ قَالَ مَصَائِبُ الدُّنْيَا وَالرُّومُ وَالْبَطْشَةُ أَوِ الدُّخَانُ ‏.‏ شُعْبَةُ الشَّاكُّ فِي الْبَطْشَةِ أَوِ الدُّخَانِ

“மேலும், அவர்கள் (பாவங்களிலிருந்து) மீண்டுவிடும் பொருட்டு, பெரிய வேதனையை (மறுமையில்) அடைவதற்கு முன்னதாகவே (இம்மையில்) சிறியதொரு வேதனையை அவர்கள் அனுபவிக்கும்படிச் செய்வோம்” எனும் (32:21) இறைவசனத்திலுள்ள சிறியதொரு வேதனை என்பது, இவ்வுலகில் நிகழ்ந்த சோதனைகள், ரோமர்கள் (தோற்கடிக்கப்பட்டு மீண்டும் அவர்கள் வெற்றி பெற்றது), இறைவனின் கடுமையான பிடி, அல்லது புகை ஆகியவையாகும்.

அறிவிப்பாளர் : உபை பின் கஅப் (ரலி)


குறிப்பு :

“இறைவனின் கடுமையான பிடி, அல்லது புகை” என்பதை ஐயப்பாட்டுடன் அறிவிப்பவர் ஷுஅபா (ரஹ்) ஆவார்.

அத்தியாயம்: 52, பாடம்: 7, ஹதீஸ் எண்: 4983

حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي الضُّحَى، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَبْدِ اللَّهِ قَالَ :‏

خَمْسٌ قَدْ مَضَيْنَ الدُّخَانُ وَاللِّزَامُ وَالرُّومُ وَالْبَطْشَةُ وَالْقَمَرُ


حَدَّثَنَا أَبُو سَعِيدٍ الأَشَجُّ، حَدَّثَنَا وَكِيعٌ، حَدَّثَنَا الأَعْمَشُ، بِهَذَا الإِسْنَادِ مِثْلَهُ ‏

(மறுமை நாளின்) அடையாளங்களுள் ஐந்து (வந்து) சென்றுவிட்டன. ஒன்று, புகை. இரண்டாவது, இறைவனின் தண்டனை. மூன்றாவது, ரோமர்கள் (தோல்வியடைந்து, மீண்டும் அவர்கள் வெற்றிபெற்றது). நான்காவது, இறைவனின் கடுமையான பிடி. ஐந்தாவது, நிலவின் பிளவு.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)