அத்தியாயம்: 5, பாடம்: 03, ஹதீஸ் எண்: 818

حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو الْأَحْوَصِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي إِسْحَقَ ‏ ‏عَنْ ‏ ‏الْبَرَاءِ بْنِ عَازِبٍ ‏ ‏قَالَ :‏

صَلَّيْتُ مَعَ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِلَى ‏ ‏بَيْتِ الْمَقْدِسِ ‏ ‏سِتَّةَ عَشَرَ شَهْرًا حَتَّى نَزَلَتْ الْآيَةُ الَّتِي فِي ‏ ‏الْبَقَرَةِ ‏” ‏وَحَيْثُ مَا كُنْتُمْ فَوَلُّوا وُجُوهَكُمْ ‏ ‏شَطْرَهُ “‏

‏فَنَزَلَتْ بَعْدَمَا صَلَّى النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَانْطَلَقَ ‏ ‏رَجُلٌ ‏ ‏مِنْ الْقَوْمِ فَمَرَّ بِنَاسٍ مِنْ ‏ ‏الْأَنْصَارِ ‏ ‏وَهُمْ يُصَلُّونَ فَحَدَّثَهُمْ ‏ ‏فَوَلَّوْا ‏ ‏وُجُوهَهُمْ ‏ ‏قِبَلَ ‏ ‏الْبَيْتِ ‏

“நீங்கள் எங்கிருந்தாலும் (தொழுகையின்போது) உங்கள் முகங்களை  அந்த(க் கஅபா)ப் பக்கமே திருப்பிக்கொள்ளுங்கள்” எனும் அல்பகரா அத்தியாயத்திலுள்ள (2:144ஆவது) வசனம் அருளப்பெறும்வரை, நபி (ஸல்) அவர்களுடன் நான் பைத்துல் மக்திஸை நோக்கிப் பதினாறு மாதங்கள் தொழுதிருக்கின்றேன். நபி (ஸல்) (ஒரு) தொழுகையை முடித்த பின்னர்தான் இவ்வசனம் அருளப்பெற்றது. (எங்களுடன் தொழுத) மக்களில் ஒருவர், (பைத்துல் மக்திஸை நோக்கித் தொழுது கொண்டிருந்த) அன்ஸாரிகளில் சிலரைக் கடந்து சென்று (தொழும் திசை மாற்றப்பட்ட செய்தியை) அவர்களிடம் தெரிவித்தார். உடனே அவர்கள் (தொழுகையிலிருந்தவாறே) தம் முகங்களை இறையில்லம் (கஅபாவை) நோக்கித் திருப்பிக் கொண்டனர்.

அறிவிப்பாளர் : பராஉ பின் ஆஸிப் (ரலி)

அத்தியாயம்: 5, பாடம்: 02, ஹதீஸ் எண்: 817

حَدَّثَنَا ‏ ‏عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ الْعَنْبَرِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏أَبُو التَّيَّاحِ ‏ ‏عَنْ ‏ ‏أَنَسٍ :‏

أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏كَانَ ‏ ‏يُصَلِّي فِي ‏ ‏مَرَابِضِ ‏ ‏الْغَنَمِ قَبْلَ أَنْ ‏ ‏يُبْنَى الْمَسْجِدُ ‏


حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ حَبِيبٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏خَالِدٌ يَعْنِي ابْنَ الْحَارِثِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي التَّيَّاحِ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏أَنَسًا ‏ ‏يَقُولُ كَانَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بِمِثْلِهِ ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசல் கட்டப்படுவதற்கு முன்னர் ஆட்டுத் தொழுவங்களில் தொழுதிருக்கின்றார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் பின் மாலிக் (ரலி) வழியாக அபுத்தய்யாஹ் (ரஹ்)

அத்தியாயம்: 5, பாடம்: 02, ஹதீஸ் எண்: 816

حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏وَشَيْبَانُ بْنُ فَرُّوخَ ‏ ‏كِلَاهُمَا ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ الْوَارِثِ ‏ ‏قَالَ ‏ ‏يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏عَبْدُ الْوَارِثِ بْنُ سَعِيدٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي التَّيَّاحِ الضُّبَعِيِّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَنَسُ بْنُ مَالِكٍ : ‏

أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَدِمَ ‏ ‏الْمَدِينَةَ ‏ ‏فَنَزَلَ فِي عُلْوِ ‏ ‏الْمَدِينَةِ ‏ ‏فِي حَيٍّ يُقَالُ لَهُمْ ‏ ‏بَنُو عَمْرِو بْنِ عَوْفٍ ‏ ‏فَأَقَامَ فِيهِمْ أَرْبَعَ عَشْرَةَ لَيْلَةً ثُمَّ إِنَّهُ أَرْسَلَ إِلَى مَلَإِ ‏ ‏بَنِي النَّجَّارِ ‏ ‏فَجَاءُوا مُتَقَلِّدِينَ بِسُيُوفِهِمْ قَالَ فَكَأَنِّي أَنْظُرُ إِلَى رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏عَلَى ‏ ‏رَاحِلَتِهِ ‏ ‏وَأَبُو بَكْرٍ ‏ ‏رِدْفُهُ ‏ ‏وَمَلَأُ ‏ ‏بَنِي النَّجَّارِ ‏ ‏حَوْلَهُ حَتَّى أَلْقَى ‏ ‏بِفِنَاءِ ‏ ‏أَبِي أَيُّوبَ ‏ ‏قَالَ فَكَانَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يُصَلِّي حَيْثُ أَدْرَكَتْهُ الصَّلَاةُ وَيُصَلِّي فِي ‏ ‏مَرَابِضِ ‏ ‏الْغَنَمِ ثُمَّ إِنَّهُ أَمَرَ بِالْمَسْجِدِ قَالَ فَأَرْسَلَ إِلَى مَلَإِ ‏ ‏بَنِي النَّجَّارِ ‏ ‏فَجَاءُوا فَقَالَ يَا ‏ ‏بَنِي النَّجَّارِ ‏ ‏ثَامِنُونِي ‏ ‏بِحَائِطِكُمْ ‏ ‏هَذَا قَالُوا لَا وَاللَّهِ لَا نَطْلُبُ ثَمَنَهُ إِلَّا إِلَى اللَّهِ قَالَ ‏ ‏أَنَسٌ ‏ ‏فَكَانَ فِيهِ مَا أَقُولُ كَانَ فِيهِ نَخْلٌ وَقُبُورُ الْمُشْرِكِينَ وَخِرَبٌ فَأَمَرَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بِالنَّخْلِ فَقُطِعَ وَبِقُبُورِ الْمُشْرِكِينَ فَنُبِشَتْ وَبِالْخِرَبِ فَسُوِّيَتْ قَالَ فَصَفُّوا النَّخْلَ قِبْلَةً وَجَعَلُوا ‏ ‏عِضَادَتَيْهِ ‏ ‏حِجَارَةً قَالَ فَكَانُوا ‏ ‏يَرْتَجِزُونَ ‏ ‏وَرَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مَعَهُمْ وَهُمْ يَقُولُونَ : ‏
اللَّهُمَّ إِنَّهُ لَا خَيْرَ إِلَّا خَيْرُ ‏ ‏الْآخِرَهْ ‏
‏فَانْصُرْ ‏ ‏الْأَنْصَارَ ‏ ‏وَالْمُهَاجِرَهْ ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (புலம்பெயர்ந்து) மதீனாவுக்கு வந்தபோது மதீனாவின் மேட்டுப் பாங்கான பகுதியில், பனூஅம்ரு பின் அவ்ஃப் என்றழைக்கப்பட்டு வந்த ஒரு குடும்பத்தாரிடையே பதிநான்கு நாள்கள் தங்கினார்கள். பிறகு பனூநஜ்ஜார் கூட்டத்தாருக்கு ஆளனுப்பினார்கள். பனூநஜ்ஜார் கூட்டத்தார் தம் வாட்களைக் கழுத்தில் தொங்கவிட்டபடி (நபியவர்களைக் கண்ணியப் படுத்தி) வந்து சேர்ந்தனர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தமது வாகன(ஒட்டக)த்தில் அமர்ந்துவர, அவர்களுக்குப் பின்னால் அபூபக்ரு (ரலி) அமர்ந்திருக்க, பனூநஜ்ஜார் கூட்டத்தார் புடைசூழ அல்லாஹ்வின் தூதர் வந்த அந்தக் காட்சியை இப்போதும் நான் என் மனக்கண்ணால் காண்கின்றேன். இறுதியில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது வாகனம் அபூஅய்யூப் (ரலி) அவர்களின் வீட்டு முற்றத்தில் அவர்களை இறக்கிவிட்டது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தொழுகை நேரம் வந்தடையும் இடத்திலேயே தொழுகையை நிறைவேற்றுவது வழக்கம் – அது, ஆட்டுத் தொழுவமாக இருந்தாலும். இந்நிலையில்தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) பள்ளிவாசல் கட்டும்படி உத்தரவிட்டதும் பனூநஜ்ஜார் கூட்டத்தாரை (அழைத்துவரச் சொல்லி) ஆளனுப்பியதும். அவர்கள் வந்து சேர்ந்தபோது, “பனூநஜ்ஜார் கூட்டத்தாரே! உங்களுடைய இந்தத் தோட்டத்தை எனக்கு விலைபேசி (விற்று)விடுங்கள்” என்று கேட்டார்கள். அதற்கு அக்கூட்டத்தார், “இல்லை அல்லாஹ்வின் மீதாணையாக! இதற்கான விலையை நாங்கள் அல்லாஹ்விடமே வேண்டுவோம்” என்று கூறி(அத்தோட்டத்தை அளித்த)னர்.

நான் (உங்களிடம்) கூறவிருப்பவைதாம் அத்தோட்டத்தில் இருந்தன. சில பேரீச்ச மரங்களும் இணைவைப்பாளர்களின் சமாதிகளும் இடிபாடுகளும்தாம் அதில் இருந்தன. எனவே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (பள்ளிவாசல் கட்டும்போது அங்கிருந்த) பேரீச்ச மரங்களை வெட்டும்படி உத்தரவிட, அவ்வாறே அவை வெட்டப்பட்டன. இணைவைப்பாளர்களின் சமாதிகளைத் தோண்டி(அப்புறப்படுத்தி)டுமாறு உத்தரவிட, அவ்வாறே அவை தோண்டப்பட்டன. இடிபாடுகளை (அகற்றி)ச் சமப்படுத்தும்படி உத்தரவிட, அவ்வாறே அவை சமப்படுத்தப்பட்டன.

பள்ளிவாசலின் கிப்லாத் திசையில் பேரீச்ச மரங்களை வரிசையாக (மக்கள்) நட்டனர்.

பள்ளிவாசலின் (நுழைவாயிலின்) இரு நிலைக்கால்களாகக் கல்லை (நட்டு) வைக்கும்போது,

“இறைவா! மறுமையின் நன்மையைத் தவிர வேறு நன்மை என்பதில்லை
ஆகவே, (அதற்காகப் பாடுபடும்) அன்ஸார்களுக்கும் முஹாஜிர்களுக்கும் நீ உதவி செய்வாயாக!”
என்று ’ரஜ்ஸு’ எனும் யாப்பு வகைப் பாடலை பாடிக் கொண்டிருந்தனர்:

அவர்களுடன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் (பாடியபடி பணியில் ஈடுபட்டுக் கொண்டு) இருந்தார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் பின் மாலிக் (ரலி)

அத்தியாயம்: 5, பாடம்: 01, ஹதீஸ் எண்: 815

حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ رَافِعٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الرَّزَّاقِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مَعْمَرٌ ‏ ‏عَنْ ‏ ‏هَمَّامِ بْنِ مُنَبِّهٍ ‏ ‏قَالَ هَذَا مَا حَدَّثَنَا ‏ ‏أَبُو هُرَيْرَةَ ‏ ‏عَنْ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَذَكَرَ أَحَادِيثَ مِنْهَا :‏

وَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏نُصِرْتُ بِالرُّعْبِ وَأُوتِيتُ ‏ ‏جَوَامِعَ الْكَلِمِ ‏

“நான் (எதிரிகளிடம் ஏற்படும்) அச்சத்தால் உதவியளிக்கப்பட்டுள்ளேன். செறிவான சொற்களுடன் அனுப்பப்பட்டுள்ளேன்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி) வழியாக ஹம்மாம் பின் முனப்பிஹ் (ரஹ்)


குறிப்பு :

இது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து அபூஹுரைரா (ரலி) எமக்கு அறிவித்த ஹதீஸ்களுள் ஒன்றாகும்” என்று அறிவிப்பாளர் ஹம்மாம் பின் முனப்பிஹ் (ரஹ்) குறிப்பிடுகின்றார்.

அத்தியாயம்: 5, பாடம்: 01, ஹதீஸ் எண்: 814

و حَدَّثَنِي ‏ ‏أَبُو الطَّاهِرِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏عَنْ ‏ ‏عَمْرِو بْنِ الْحَارِثِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي يُونُسَ ‏ ‏مَوْلَى ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏أَنَّهُ حَدَّثَهُ عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ :‏

عَنْ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَنَّهُ قَالَ ‏ ‏نُصِرْتُ بِالرُّعْبِ عَلَى الْعَدُوِّ وَأُوتِيتُ ‏ ‏جَوَامِعَ الْكَلِمِ ‏ ‏وَبَيْنَمَا أَنَا نَائِمٌ أُتِيتُ بِمَفَاتِيحِ خَزَائِنِ الْأَرْضِ فَوُضِعَتْ فِي يَدَيَّ ‏

“நான் எதிரிகளிடம் ஏற்படும் அச்சத்தால் உதவியளிக்கப்பட்டுள்ளேன். செறிவான சொற்களுடன் அனுப்பப்பட்டுள்ளேன். நான் (ஒரு முறை) உறங்கிக் கொண்டிருக்கும்போது பூமியின் கருவூலங்களுடைய திறவுகோல்கள் என் கரங்களில் வைக்கப்பட்டன” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

அத்தியாயம்: 1, பாடம்: 01, ஹதீஸ் எண்: 813

حَدَّثَنِي ‏ ‏أَبُو الطَّاهِرِ ‏ ‏وَحَرْمَلَةُ ‏ ‏قَالَا أَخْبَرَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏يُونُسُ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏عَنْ ‏ ‏سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏قَالَ : ‏

قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بُعِثْتُ ‏ ‏بِجَوَامِعِ الْكَلِمِ ‏ ‏وَنُصِرْتُ بِالرُّعْبِ وَبَيْنَا أَنَا نَائِمٌ أُتِيتُ بِمَفَاتِيحِ خَزَائِنِ الْأَرْضِ فَوُضِعَتْ بَيْنَ يَدَيَّ ‏


قَالَ ‏ ‏أَبُو هُرَيْرَةَ ‏ ‏فَذَهَبَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَأَنْتُمْ ‏ ‏تَنْتَثِلُونَهَا ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏حَاجِبُ بْنُ الْوَلِيدِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ حَرْبٍ ‏ ‏عَنْ ‏ ‏الزُّبَيْدِيِّ ‏ ‏عَنْ ‏ ‏الزُّهْرِيِّ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏سَعِيدُ بْنُ الْمُسَيَّبِ ‏ ‏وَأَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ ‏ ‏أَنَّ ‏ ‏أَبَا هُرَيْرَةَ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَقُولُ ‏ ‏مِثْلَ حَدِيثِ ‏ ‏يُونُسَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ رَافِعٍ ‏ ‏وَعَبْدُ بْنُ حُمَيْدٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الرَّزَّاقِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏مَعْمَرٌ ‏ ‏عَنْ ‏ ‏الزُّهْرِيِّ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ الْمُسَيَّبِ ‏ ‏وَأَبِي سَلَمَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بِمِثْلِهِ

“நான் செறிவான சொற்களுடன் அனுப்பப்பட்டுள்ளேன். (எதிரிகளிடம் ஏற்படும்) அச்சத்தால் உதவியளிக்கப் பட்டுள்ளேன். நான் (ஒரு முறை) உறங்கிக் கொண்டிருக்கையில் பூமியின் கருவூலங்களுடைய திறவுகோல்கள் என் முன்னால் வைக்கப்பட்டன” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)


குறிப்பு :

இதை அபூஹுரைரா (ரலி) அறிவித்துவிட்டு, “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) சென்றுவிட்டார்கள். நீங்கள் அந்தக் கருவூலங்களை(த் தோண்டி) எடுத்து(அனுபவித்து)க் கொண்டிருக்கின்றீர்கள்” என்று சொன்னார்கள்.

அத்தியாயம்: 5, பாடம்: 01, ஹதீஸ் எண்: 812

و حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ أَيُّوبَ ‏ ‏وَقُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏وَعَلِيُّ بْنُ حُجْرٍ ‏ ‏قَالُوا حَدَّثَنَا ‏ ‏إِسْمَعِيلُ وَهُوَ ابْنُ جَعْفَرٍ ‏ ‏عَنْ ‏ ‏الْعَلَاءِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ : ‏

أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏فُضِّلْتُ عَلَى الْأَنْبِيَاءِ بِسِتٍّ أُعْطِيتُ ‏ ‏جَوَامِعَ الْكَلِمِ ‏ ‏وَنُصِرْتُ بِالرُّعْبِ وَأُحِلَّتْ ‏ ‏لِيَ الْغَنَائِمُ وَجُعِلَتْ ‏ ‏لِيَ الْأَرْضُ طَهُورًا وَمَسْجِدًا وَأُرْسِلْتُ إِلَى الْخَلْقِ كَافَّةً وَخُتِمَ ‏ ‏بِيَ النَّبِيُّونَ ‏

“நான் மற்ற இறைத்தூதர்களைவிடவும் அறுவகையில் சிறப்பிக்கப்பட்டுள்ளேன்:

செறிவான சொற்கள் வழங்கப் பெற்றுள்ளேன்.

(எதிரிகளிடம் ஏற்படும்) அச்சத்தால் உதவியளிக்கப்பட்டுள்ளேன்.

எனக்குப் போர்ச் செல்வங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன.

எனக்கு பூமி முழுவதும் சுத்தம் (தயம்மும்) செய்வதற்கேற்தாகவும் தொழுமிடமாகவும் ஆக்கப்பட்டுள்ளது.

நான் மனித இனம் முழுவதற்கும் தூதராக அனுப்பப்பட்டுள்ளேன்.

என்னோடு நபிமார்களின் வருகை முற்றுப் பெற்றுவிட்டது” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)


குறிப்பு :

“செறிவான சொற்கள் என்பன இறைமறை வசனங்களைக் குறிக்கும்” என்றும் “அல்லாஹ், தன் தூதருக்கு வழங்கிய, சுருங்கக்கூறி நிரம்ப விளங்க வைக்கும் நாவன்மை” என்றும் இருகருத்துகள் உள்ளன.

அத்தியாயம்: 5, பாடம்: 01, ஹதீஸ் எண்: 811

حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ فُضَيْلٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي مَالِكٍ الْأَشْجَعِيِّ ‏ ‏عَنْ ‏ ‏رِبْعِيٍّ ‏ ‏عَنْ ‏ ‏حُذَيْفَةَ ‏ ‏قَالَ :‏

قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فُضِّلْنَا عَلَى النَّاسِ بِثَلَاثٍ جُعِلَتْ صُفُوفُنَا كَصُفُوفِ الْمَلَائِكَةِ وَجُعِلَتْ لَنَا الْأَرْضُ كُلُّهَا مَسْجِدًا وَجُعِلَتْ تُرْبَتُهَا لَنَا طَهُورًا إِذَا لَمْ نَجِدْ الْمَاءَ وَذَكَرَ خَصْلَةً أُخْرَى ‏


حَدَّثَنَا ‏ ‏أَبُو كُرَيْبٍ مُحَمَّدُ بْنُ الْعَلَاءِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ أَبِي زَائِدَةَ ‏ ‏عَنْ ‏ ‏سَعْدِ بْنِ طَارِقٍ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏رِبْعِيُّ بْنُ حِرَاشٍ ‏ ‏عَنْ ‏ ‏حُذَيْفَةَ ‏ ‏قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بِمِثْلِهِ ‏

“நாம் மூன்று விஷயங்களில் (நமக்கு முந்தைய சமுதாய) மக்கள் அனைவரைவிடவும் சிறப்பிக்கப்பட்டுள்ளோம்:

1. நம் (தொழுகை) வரிசைகள் வானவர்களின் வரிசைகளைப்போன்று (சீராக) ஆக்கப்பட்டுள்ளன.

2. நமக்கு பூமி முழுவதும் தொழுமிடமாக ஆக்கப்பட்டுள்ளது.

3. (உளூச் செய்ய) நமக்குத் தண்ணீர் கிடைக்காதபோது, தரை முழுவதும் சுத்தம் (தயம்மும்) செய்வதற்கேற்றதாக ஆக்கப்பட்டுள்ளது” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

“மற்றொரு சிறப்பையும் நபி (ஸல்) கூறினார்கள்”

அறிவிப்பாளர் : ஹுதைஃபா பின் அல்யமான் (ரலி)

அத்தியாயம்: 5, பாடம்: 01, ஹதீஸ் எண்: 810

حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏هُشَيْمٌ ‏ ‏عَنْ ‏ ‏سَيَّارٍ ‏ ‏عَنْ ‏ ‏يَزِيدَ الْفَقِيرِ ‏ ‏عَنْ ‏ ‏جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ الْأَنْصَارِيِّ ‏ ‏قَالَ :‏ ‏

قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أُعْطِيتُ خَمْسًا لَمْ يُعْطَهُنَّ أَحَدٌ قَبْلِي كَانَ كُلُّ نَبِيٍّ يُبْعَثُ إِلَى قَوْمِهِ خَاصَّةً وَبُعِثْتُ إِلَى كُلِّ أَحْمَرَ وَأَسْوَدَ وَأُحِلَّتْ ‏ ‏لِيَ الْغَنَائِمُ وَلَمْ تُحَلَّ لِأَحَدٍ قَبْلِي وَجُعِلَتْ ‏ ‏لِيَ الْأَرْضُ طَيِّبَةً طَهُورًا وَمَسْجِدًا فَأَيُّمَا رَجُلٍ أَدْرَكَتْهُ الصَّلَاةُ صَلَّى حَيْثُ كَانَ وَنُصِرْتُ بِالرُّعْبِ بَيْنَ يَدَيْ مَسِيرَةِ شَهْرٍ وَأُعْطِيتُ الشَّفَاعَةَ ‏


حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏هُشَيْمٌ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏سَيَّارٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَزِيدُ الْفَقِيرُ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏جَابِرُ بْنُ عَبْدِ اللَّهِ ‏ ‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ فَذَكَرَ ‏ ‏نَحْوَهُ

“எனக்கு முன்னர் வாழ்ந்த (இறைத்தூதர்கள்) எவருக்கும் வழங்கப்பெறாத ஐந்து (சிறப்புகள்) எனக்கு வழங்கப்பெற்றுள்ளன.

ஒவ்வொரு இறைத்தூதரும் தத்தம் சமுதாயத்தாருக்கு மட்டுமே (தூதராக நியமிக்கப்பட்டு) அனுப்பப்பட்டார். நான் சிவப்பர்-கறுப்பர் (என்ற பாகுபாடின்றி) அனைவருக்கும் தூதராக அனுப்பப்பட்டுள்ளேன்.

போரில் கிடைக்கப்பெறும் செல்வங்கள் எனக்கு அனுமதிக்கப்பட்டுள்ளன. எனக்கு முன்னிருந்த (இறைத்தூதர்) எவருக்கும் அவை அனுமதிக்கப்படவில்லை.

எனக்கு பூமி முழுவதும் சுத்தம் (தயம்மும்) செய்வதற்கேற்றதாகவும் தூய்மையானதாகவும் தொழுமிடமாகவும் ஆக்கப்பட்டுள்ளது. (என் சமுதாயத்தாரில்) யாரேனும் ஒருவருக்குத் தொழுகை(யின் நேரம்) வந்து விட்டால் அவர் இருக்கின்ற இடத்திலேயே தொழுது கொள்ள முடியும்.

ஒரு மாத காலப் பயணத் தொலைவில் என் எதிரிகள் இருந்தாலும் (அவர்களுடைய உள்ளங்களில் என்னைப் பற்றிய) அச்சம் ஏற்படுத்தப்படும். அதன் மூலம் நான் வெற்றியளிக்கப்பெற்றுள்ளேன்.
(மறுமையில் என் சமுதாயத்தாருக்காகப்) பரிந்துரை செய்யும் வாய்ப்பு அளிக்கப்பெற்றுள்ளேன்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)

அத்தியாயம்: 5, பாடம்: 01, ஹதீஸ் எண்: 809

حَدَّثَنِي ‏ ‏عَلِيُّ بْنُ حُجْرٍ السَّعْدِيُّ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏عَلِيُّ بْنُ مُسْهِرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏الْأَعْمَشُ ‏ ‏عَنْ ‏ ‏إِبْرَاهِيمَ بْنِ يَزِيدَ التَّيْمِيِّ ‏ ‏قَالَ ‏ ‏كُنْتُ أَقْرَأُ عَلَى ‏ ‏أَبِي ‏ ‏الْقُرْآنَ فِي ‏ ‏السُّدَّةِ ‏ ‏فَإِذَا قَرَأْتُ السَّجْدَةَ سَجَدَ فَقُلْتُ لَهُ يَا أَبَتِ أَتَسْجُدُ فِي الطَّرِيقِ ‏ ‏قَالَ :‏‏

إِنِّي سَمِعْتُ ‏ ‏أَبَا ذَرٍّ ‏ ‏يَقُولُ سَأَلْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏عَنْ أَوَّلِ مَسْجِدٍ وُضِعَ فِي الْأَرْضِ قَالَ ‏ ‏الْمَسْجِدُ الْحَرَامُ ‏ ‏قُلْتُ ثُمَّ أَيٌّ قَالَ ‏ ‏الْمَسْجِدُ الْأَقْصَى ‏ ‏قُلْتُ كَمْ بَيْنَهُمَا قَالَ أَرْبَعُونَ عَامًا ثُمَّ الْأَرْضُ لَكَ مَسْجِدٌ فَحَيْثُمَا أَدْرَكَتْكَ الصَّلَاةُ فَصَلِّ ‏

“அல்லாஹ்வின் தூதரே! பூமியில் அமைக்கப்பட்ட முதல் இறையாலயம் எது?” என்று நான் கேட்டேன். அதற்கு அவர்கள், “அல்மஸ்ஜிதுல் ஹராம்” என்று பதிலளித்தார்கள். நான், “பிறகு எது?” என்று கேட்டேன். அவர்கள், “அல்மஸ்ஜிதுல் அக்ஸா” என்று பதிலளித்தார்கள். நான், “அவ்விரண்டுக்குமிடையே எத்தனை ஆண்டுக் காலம் (இடைவெளி இருந்தது)?” என்று கேட்டேன். அவர்கள், “நாற்பதாண்டுகள்” என்று கூறிவிட்டு, “பூமி முழுவதுமே உங்களுக்குத் தொழுமிடம்தான். உங்களைத் தொழுகை (நேரம்) வந்தடையும் இடத்தில் நீங்கள் தொழுதுகொள்ளுங்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூதர் அல்கிஃபாரீ (ரலி) வழியாக இப்ராஹீம் பின் யஸீத் அத்தைமீ (ரஹ்)


குறிப்பு :

“நான் பள்ளிவாசலை ஒட்டியுள்ள இடத்தில் என் தந்தை (யஸீத் அத்தைமீ) அவர்களிடம் குர்ஆனை ஓதிக் காட்டிக்கொண்டிருந்தேன். அப்போது நான் ஸஜ்தா வசனத்தை ஓதியவுடன் என் தந்தை (அங்கேயே) ஸஜ்தாச் செய்தார்கள். நான், ‘தந்தையே (நடை)பாதையில் ஸஜ்தா செய்கின்றீர்களே?’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், அபூதர் (ரலி) அவர்களிடம் செவியுற்ற (மேற்காணும்) ஹதீஸைக் கூறினார்கள்” என்பதாக இபுறாஹீம் பின் யஸீத் அத்தைமீ (ரஹ்) குறிப்பிடுகின்றார்.