அத்தியாயம்: 1, பாடம்: 84, ஹதீஸ் எண்: 278

حَدَّثَنِي ‏ ‏عُبَيْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ ‏ ‏وَإِسْحَقُ بْنُ مَنْصُورٍ ‏ ‏كِلَاهُمَا ‏ ‏عَنْ ‏ ‏رَوْحٍ ‏ ‏قَالَ ‏ ‏عُبَيْدُ اللَّهِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏رَوْحُ بْنُ عُبَادَةَ الْقَيْسِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ جُرَيْجٍ ‏ ‏قَالَ أَخْبَرَنِي ‏ ‏أَبُو الزُّبَيْرِ ‏ ‏أَنَّهُ سَمِعَ ‏ ‏جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ ‏:‏

يُسْأَلُ عَنْ الْوُرُودِ فَقَالَ ‏ ‏نَجِيءُ نَحْنُ يَوْمَ الْقِيَامَةِ عَنْ كَذَا وَكَذَا انْظُرْ أَيْ ذَلِكَ فَوْقَ النَّاسِ قَالَ ‏ ‏فَتُدْعَى الْأُمَمُ بِأَوْثَانِهَا وَمَا كَانَتْ تَعْبُدُ الْأَوَّلُ فَالْأَوَّلُ ثُمَّ يَأْتِينَا رَبُّنَا بَعْدَ ذَلِكَ فَيَقُولُ مَنْ تَنْظُرُونَ فَيَقُولُونَ نَنْظُرُ رَبَّنَا فَيَقُولُ أَنَا رَبُّكُمْ فَيَقُولُونَ حَتَّى نَنْظُرَ إِلَيْكَ ‏ ‏فَيَتَجَلَّى لَهُمْ يَضْحَكُ قَالَ فَيَنْطَلِقُ بِهِمْ وَيَتَّبِعُونَهُ وَيُعْطَى كُلُّ إِنْسَانٍ مِنْهُمْ مُنَافِقٍ أَوْ مُؤْمِنٍ نُورًا ثُمَّ يَتَّبِعُونَهُ وَعَلَى جِسْرِ جَهَنَّمَ ‏ ‏كَلَالِيبُ ‏ ‏وَحَسَكٌ ‏ ‏تَأْخُذُ مَنْ شَاءَ اللَّهُ ثُمَّ يُطْفَأُ نُورُ الْمُنَافِقِينَ ثُمَّ يَنْجُو الْمُؤْمِنُونَ ‏ ‏فَتَنْجُو أَوَّلُ ‏ ‏زُمْرَةٍ ‏ ‏وُجُوهُهُمْ كَالْقَمَرِ لَيْلَةَ الْبَدْرِ سَبْعُونَ أَلْفًا لَا يُحَاسَبُونَ ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ ‏ ‏كَأَضْوَإِ نَجْمٍ فِي السَّمَاءِ ثُمَّ كَذَلِكَ ثُمَّ تَحِلُّ الشَّفَاعَةُ وَيَشْفَعُونَ حَتَّى يَخْرُجَ مِنْ النَّارِ مَنْ قَالَ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَكَانَ فِي قَلْبِهِ مِنْ الْخَيْرِ مَا يَزِنُ شَعِيرَةً فَيُجْعَلُونَ بِفِنَاءِ الْجَنَّةِ وَيَجْعَلُ أَهْلُ الْجَنَّةِ يَرُشُّونَ عَلَيْهِمْ الْمَاءَ حَتَّى يَنْبُتُوا نَبَاتَ الشَّيْءِ فِي السَّيْلِ وَيَذْهَبُ حُرَاقُهُ ثُمَّ يَسْأَلُ حَتَّى تُجْعَلَ لَهُ الدُّنْيَا وَعَشَرَةُ أَمْثَالِهَا مَعَهَا ‏

“மறுமை நாளில் நாம் இன்னின்னவாறு எல்லாருக்கும் உயரே வருவோம். அப்போது ஒவ்வொரு சமுதாயத்தாரும் அவரவர் வணங்கிய சிலைகளுடனும் வரிசையாக அழைக்கப்படுவர். பிறகு நம்மிடம் நம் இறைவன் வந்து, ‘நீங்கள் யாரை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றீர்கள்?’ என்று கேட்பான். அப்போது (ஓரிறை நம்பிக்கையுள்ள) மக்கள், ‘நாங்கள் எங்கள் இறைவனை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றோம்’ என்று பதிலளிப்பார்கள். அவன், ‘நான் தான் உங்கள் இறைவன்’ என்பான். மக்கள், ‘நாங்கள் (கண்களால்) உன்னைப் பார்க்காதவரை (உறுதி கொள்ள மாட்டோம்)’ என்று கூறுவார்கள். ஆகவே, இறைவன் சிரித்தபடி அவர்களிடையே காட்சியளிப்பான். அப்போது அவர்களிலுள்ள நம்பிக்கையாளர் (முஃமின்), நயவஞ்சகர் (முனாஃபிக்) ஆகிய ஒவ்வொருவருக்கும் ஓர் ஒளி வழங்கப்படும். அவர்கள் அந்த ஒளியைப் பின் தொடர்ந்து செல்வார்கள். நரகத்தின் (மேல் அமைக்கப்பட்டிருக்கும்) பாலத்தின் மீது கொக்கிகளும் முட்களும் இருக்கும். அவை அல்லாஹ் நாடிய சிலரை (அவரவர் தீமைக்கேற்ப) கவ்விப் பிடிக்கும். பிறகு நயவஞ்சகர்களுக்கு வழங்கப்பட்டிருந்த ஒளி அணைக்கப்பட்டு விடும். அதன் பிறகு நம்பிக்கையாளர்கள் மட்டும் (அந்தப் பாலத்தைக் கடந்து) தப்பிச் செல்வார்கள். தப்பிச் செல்லும் முதல்கூட்டத்தில், பௌர்ணமி இரவின் முழு நிலவைப் போன்று ஒளிரும் முகத்தவர் எழுபதாயிரம் பேர் இருப்பர். அவர்களிடம் எந்த விசாரணையும் நடத்தப்படாது. பிறகு அவர்களைத் தொடர்ந்து வரும் கூட்டத்தார் வானத்துத் தாரகைகள் போன்று ஜொலிப்பர். இவ்வாறே அடுத்தடுத்து வருபவர்களும் (அவர்களது நன்மைகளுக்கேற்ப இலங்குவர்).

பிறகு பரிந்துரை (ஷஃபாஅத்) நடைபெறும். ‘வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறில்லை’ என்று கூறிய எவரது உள்ளத்திலும் வாற்கோதுமையளவு நன்மை இருந்தாலும் அவர் நரகத்திலிருந்து வெளியேறும்வரை (பரிந்துரைக்கு அனுமதி பெற்றவர்கள்) அவருக்காகப் பரிந்துரைப்பார்கள். அவ்வாறு நரகத்திலிருந்து வெளியேற்றப்படுபவர்கள் சொர்க்கத்தின் தாழ்வாரத்தில் வைக்கப்படுவார்கள். அவர்கள் மீது சொர்க்கவாசிகள் (ஜீவ)நீரைத் தெளிப்பார்கள். வெள்ளத்தில் மிதந்து வரும் விதைப்பயிர் முளைப்பதைப் போன்று (பொலிவுடன்) அவர்கள் எழுகின்றவரையில் (ஜீவ)நீர் தெளிக்கப்பட்டு, அவர்கள் மீதிருந்த தீக்காயங்கள் மறைந்து விடும். தமக்கு உலகமும் இன்னும் அதைப் போன்று பத்து மடங்கும் (சொர்க்கத்தில்) கிடைக்கும்வரை வேண்டிக்கொண்டே இருப்பர்”.


குறிப்பு :

“மேலும், உங்களில் எவரும் அதைக் கடக்காமல் முடியாது …” என்ற 19:71 இறைவசனம் பற்றிய விளக்கம் கேட்கப் பட்டபோது ஜாபிர் (ரலி) மேற்கண்டவாறு விளக்கம் கூறியதாக இடம்பெற்று உள்ளது. (நபி (ஸல்) அவர்களைப் பற்றி இதில் குறிப்பிடப்படவில்லை).

அத்தியாயம்: 1, பாடம்: 84, ஹதீஸ் எண்: 277

حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏حَدَّثَنَا ‏ ‏الْأَعْمَشُ ‏ ‏عَنْ ‏ ‏الْمَعْرُورِ بْنِ سُوَيْدٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي ذَرٍّ ‏ ‏قَالَ ‏:‏

قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِنِّي لَأَعْلَمُ آخِرَ أَهْلِ الْجَنَّةِ دُخُولًا الْجَنَّةَ وَآخِرَ أَهْلِ النَّارِ خُرُوجًا مِنْهَا رَجُلٌ يُؤْتَى بِهِ يَوْمَ الْقِيَامَةِ فَيُقَالُ اعْرِضُوا عَلَيْهِ صِغَارَ ذُنُوبِهِ وَارْفَعُوا عَنْهُ كِبَارَهَا فَتُعْرَضُ عَلَيْهِ صِغَارُ ذُنُوبِهِ فَيُقَالُ عَمِلْتَ يَوْمَ كَذَا وَكَذَا كَذَا وَكَذَا وَعَمِلْتَ يَوْمَ كَذَا وَكَذَا كَذَا وَكَذَا فَيَقُولُ نَعَمْ لَا يَسْتَطِيعُ أَنْ يُنْكِرَ وَهُوَ مُشْفِقٌ مِنْ كِبَارِ ذُنُوبِهِ أَنْ تُعْرَضَ عَلَيْهِ فَيُقَالُ لَهُ فَإِنَّ لَكَ مَكَانَ كُلِّ سَيِّئَةٍ حَسَنَةً فَيَقُولُ رَبِّ قَدْ عَمِلْتُ أَشْيَاءَ لَا أَرَاهَا هَا هُنَا فَلَقَدْ رَأَيْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏ضَحِكَ حَتَّى بَدَتْ ‏ ‏نَوَاجِذُهُ ‏


‏و حَدَّثَنَا ‏ ‏ابْنُ نُمَيْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو مُعَاوِيَةَ ‏ ‏وَوَكِيعٌ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏وَكِيعٌ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏أَبُو كُرَيْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو مُعَاوِيَةَ ‏ ‏كِلَاهُمَا ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْمَشِ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ

“சொர்க்கவாசிகளில் இறுதியாகச் சொர்க்கத்தில் நுழைபவர் யார்?; நரகவாசிகளில் இறுதியாக நரகத்திலிருந்து வெளியேறுபவர் யார்? என்று நான் நன்கறிவேன். மறுமை நாளில் ஒருவர் கொண்டு வரப்படுவார். அப்போது, ‘இவர் புரிந்த சிறு பாவங்களை இவருக்கு எடுத்துக் காட்டுங்கள்! இவர் புரிந்த பெரும்பாவங்களை இவரை விட்டு நீக்கிவிடுங்கள்!’ என்று கூறப்படும். அவ்வாறே அவருக்கு அவர் புரிந்த சிறுபாவங்கள் எடுத்துக் காட்டப்பட்டு, ‘நீ இன்ன இன்ன நாளில் இன்ன இன்ன(பாவத்)தைச் செய்திருக்கின்றாய்; இன்ன இன்ன நாளில் இன்ன இன்ன(பாவத்)தைச் செய்திருக்கின்றாய்’ என்று கூறப்படும். அவரும் ‘ஆம்’ என்று கூறுவார்; அவரால் எதையும் மறுக்க முடியாது. தாம் செய்த பெரும் பாவங்கள் தம்மிடம் எடுத்துக் காட்டப்படுமோ என்றும் அஞ்சிக் கொண்டிருப்பார். அந்நிலையில் அவரிடம், ‘நீ செய்த ஒவ்வொரு (சிறு) தீமைக்கும் ஈடாக ஒரு நன்மை உனக்கு உண்டு’ என்று கூறப்படும். அப்போது அவர், ‘இறைவா! நான் இன்னும் பல (பெரும் பாவச்) செயல்களைப் புரிந்திருந்தேனே! அவற்றையெல்லாம் இங்கு நான் காணவில்லையே!’ என்று கேட்பார்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

இதைக் கூறும்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தம் கடைவாய்ப் பற்கள் தெரியச் சிரித்ததை நான் பார்த்தேன்.

அறிவிப்பாளர் : அபூதர் (ரலி)

அத்தியாயம்: 1, பாடம்: 84, ஹதீஸ் எண்: 276

حَدَّثَنَا ‏ ‏سَعِيدُ بْنُ عَمْرٍو الْأَشْعَثِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ ‏ ‏عَنْ ‏ ‏مُطَرِّفٍ ‏ ‏وَابْنِ أَبْجَرَ ‏ ‏عَنْ ‏ ‏الشَّعْبِيِّ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏الْمُغِيرَةَ بْنَ شُعْبَةَ ‏ ‏رِوَايَةً ‏ ‏إِنْ شَاءَ اللَّهُ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏ابْنُ أَبِي عُمَرَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُطَرِّفُ بْنُ طَرِيفٍ ‏ ‏وَعَبْدُ الْمَلِكِ بْنُ سَعِيدٍ ‏ ‏سَمِعَا ‏ ‏الشَّعْبِيَّ ‏ ‏يُخْبِرُ عَنْ ‏ ‏الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ ‏ ‏قَالَ سَمِعْتُهُ ‏ ‏عَلَى الْمِنْبَرِ يَرْفَعُهُ إِلَى رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏بِشْرُ بْنُ الْحَكَمِ ‏ ‏وَاللَّفْظُ لَهُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُطَرِّفٌ ‏ ‏وَابْنُ أَبْجَرَ ‏ ‏سَمِعَا ‏ ‏الشَّعْبِيَّ ‏ ‏يَقُولُ سَمِعْتُ ‏ ‏الْمُغِيرَةَ بْنَ شُعْبَةَ ‏ ‏يُخْبِرُ بِهِ النَّاسَ عَلَى الْمِنْبَرِ قَالَ ‏ ‏سُفْيَانُ ‏ ‏رَفَعَهُ أَحَدُهُمَا أُرَاهُ ‏ ‏ابْنَ أَبْجَرَ ‏ ‏قَالَ ‏:‏

سَأَلَ ‏ ‏مُوسَى ‏ ‏رَبَّهُ ‏ ‏مَا أَدْنَى أَهْلِ الْجَنَّةِ مَنْزِلَةً قَالَ هُوَ رَجُلٌ يَجِيءُ بَعْدَ مَا أُدْخِلَ أَهْلُ الْجَنَّةِ الْجَنَّةَ فَيُقَالُ لَهُ ادْخُلْ الْجَنَّةَ فَيَقُولُ أَيْ رَبِّ كَيْفَ وَقَدْ نَزَلَ النَّاسُ مَنَازِلَهُمْ وَأَخَذُوا ‏ ‏أَخَذَاتِهِمْ ‏ ‏فَيُقَالُ لَهُ ‏ ‏أَتَرْضَى أَنْ يَكُونَ لَكَ مِثْلُ مُلْكِ مَلِكٍ مِنْ مُلُوكِ الدُّنْيَا فَيَقُولُ رَضِيتُ رَبِّ فَيَقُولُ لَكَ ذَلِكَ وَمِثْلُهُ وَمِثْلُهُ وَمِثْلُهُ وَمِثْلُهُ فَقَالَ فِي الْخَامِسَةِ رَضِيتُ رَبِّ فَيَقُولُ هَذَا لَكَ وَعَشَرَةُ أَمْثَالِهِ وَلَكَ مَا اشْتَهَتْ نَفْسُكَ وَلَذَّتْ عَيْنُكَ فَيَقُولُ رَضِيتُ رَبِّ قَالَ رَبِّ فَأَعْلَاهُمْ مَنْزِلَةً قَالَ أُولَئِكَ الَّذِينَ ‏ ‏أَرَدْتُ ‏ ‏غَرَسْتُ كَرَامَتَهُمْ بِيَدِي وَخَتَمْتُ عَلَيْهَا فَلَمْ تَرَ عَيْنٌ وَلَمْ تَسْمَعْ أُذُنٌ وَلَمْ يَخْطُرْ عَلَى قَلْبِ بَشَرٍ قَالَ وَمِصْدَاقُهُ فِي كِتَابِ اللَّهِ عَزَّ وَجَلَّ ‏: [‏فَلَا تَعْلَمُ نَفْسٌ مَا أُخْفِيَ لَهُمْ مِنْ قُرَّةِ أَعْيُنٍ] الْآيَةَ ‏


حَدَّثَنَا ‏ ‏أَبُو كُرَيْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عُبَيْدُ اللَّهِ الْأَشْجَعِيُّ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ الْمَلِكِ بْنِ أَبْجَرَ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏الشَّعْبِيَّ ‏ ‏يَقُولُ سَمِعْتُ ‏ ‏الْمُغِيرَةَ بْنَ شُعْبَةَ ‏ ‏يَقُولُا ‏ ‏عَلَى الْمِنْبَرِ إِنَّ ‏ ‏مُوسَى ‏ ‏عَلَيْهِ السَّلَام ‏ ‏سَأَلَ اللَّهَ عَزَّ وَجَلَّ عَنْ ‏ ‏أَخَسِّ ‏ ‏أَهْلِ الْجَنَّةِ مِنْهَا حَظًّا ‏ ‏وَسَاقَ الْحَدِيثَ بِنَحْوِهِ ‏

“மூஸா (அலை) இறைவனிடம், ‘சொர்க்கவாசிகளுள் மிகக் குறைந்த பதவி உடையவர் யார்?’ என்று கேட்டார்கள். அதற்கு, ‘சொர்க்கவாசிகள் அனைவரும் சொர்க்கத்திற்குள் நுழைந்த பிறகு ஒருவர் வருவார். அவரிடம் நீ (சென்று) சொர்க்கத்திற்குள் நுழைந்துகொள்! என்று கூறப்படும். அதற்கு அவர், இறைவா! எப்படி (நான் நுழைவேன்)? மக்கள் அனைவரும் அவரவர் இருப்பிடங்களைப் பிடித்துக்கொண்டு தமக்குக் கிடைத்ததை எடுத்துக் கொண்டு விட்டார்களே? என்று கூறுவார். அவரிடம், உலக அரசர்களில் ஒருவரது ஆட்சிக்குட்பட்ட பகுதியைப் போன்று உனக்குக் கிடைத்தால் திருப்தி தானே? என்று கேட்கப்படும். அதற்கு அவர், திருப்தியடைவேன் இறைவா! என்பார். அப்போது, அதுவும் உனக்குக் கிடைக்கும்; அதைப் போன்று இன்னொரு மடங்கும் அதைப் போன்று இன்னொரு மடங்கும் அதைப் போன்று இன்னொரு மடங்கும் அதைப் போன்று இன்னொரு மடங்கும் என்று இறைவன் குறிப்பிடுவான். ஐந்தாம் மடங்கு பற்றிக் கூறும்போது அவர், திருப்தியடைந்து விட்டேன் இறைவா! என்பார். மேலும், இதுவும் உனக்குக் கிடைக்கும்; இதைப் போன்று இன்னொரு மடங்கும் உனக்குக் கிடைக்கும். உன் மனம் விரும்புகின்ற, உன் பார்வை இரசிக்கின்ற அனைத்தும் உனக்குக் கிடைக்கும் என்று இறைவன் கூறுவான். அப்போது அவர், திருப்தியடைந்தேன் இறைவா! என்று கூறுவார். அவரே சொர்க்கவாசிகளுள் மிகக் குறைந்த பதவி உடையவர்’ என்று இறைவன் கூறினான்.

பின்னர் மூஸா (அலை), ‘இறைவா! சொர்க்கத்தில் மிக உயர்ந்த பதவியுடையவர் யார்?’ என்று கேட்டார்கள். அதற்கு இறைவன், ‘அவர்களை நானே தேர்ந்தெடுத்தேன். அவர்களுக்குரிய பதவிகளையும் நானே தீர்மானித்து அவற்றின்மீது நான் முத்திரை பதித்துவிட்டேன். எனவே, (அவர்களது பதவிப் பேரின்பத்தை) எந்தக் கண்ணும் பார்த்தில்லை; எந்தக் காதும் கேட்டதில்லை; எந்த மனிதனின் உள்ளத்திலும் தோன்றியதில்லை’ என்றான்.

இதை மெய்ப்பிக்கும் வகையில் வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ்வின் வேதத்தில், ‘அவர்கள் செய்த (நற்)செயல்களுக்குரிய கூலியாக அவர்களுக்கென மறைத்து வைக்கப்பட்டுள்ள (மறுமையின்) அகநிறைவுப் பேரின்பத்தை எந்த ஓர் ஆன்மாவும் அறிந்து கொள்ள முடியாது’ (32:17) என்று இடம்பெற்றுள்ளது’ என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : முகீரா பின் ஷுஅபா (ரலி)


குறிப்புகள் :

இந்த அறிவிப்பு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறியதாக, முகீரா பின் ஷுஅபா (ரலி) சொற்பொழிவு மேடை மீது நின்றவாறு கூறியதாக இடம் பெற்றுள்ளது. அதிலும் அப்துல் மலிக் இப்னு அப்ஜர் (ரஹ்) வழி அறிவிப்பில், “இது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறியது (மர்ஃபூஉ)” என்றும் முதர்ரிஃப் பின் தரீஃப் (ரஹ்) வழி அறிவிப்பில், “முகீரா (ரலி) தாமே சொன்ன செய்தி” (மவ்கூஃப்) என்றும் இடம் பெற்றுள்ளது. உபைதுல்லாஹ் அல்-அஷ்ஜயீ (ரஹ்) வழி அறிவிப்பில், “மூஸா (அலை) அல்லாஹ்விடம் சொர்க்கவாசிகளில் மிகத் தாழ்ந்த பதவிக்குரியவரைப் பற்றிக் கேட்டார்கள்” என்று முஃகீரா (ரலி) கூறியதாக ஹதீஸ் தொடங்குகிறது.

அத்தியாயம்: 1, பாடம்: 84, ஹதீஸ் எண்: 275

حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ أَبِي بُكَيْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏زُهَيْرُ بْنُ مُحَمَّدٍ ‏ ‏عَنْ ‏ ‏سُهَيْلِ بْنِ أَبِي صَالِحٍ ‏ ‏عَنْ ‏ ‏النُّعْمَانِ بْنِ أَبِي عَيَّاشٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ:‏ ‏

أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏إِنَّ أَدْنَى أَهْلِ الْجَنَّةِ مَنْزِلَةً رَجُلٌ صَرَفَ اللَّهُ وَجْهَهُ عَنْ النَّارِ قِبَلَ الْجَنَّةِ وَمَثَّلَ لَهُ شَجَرَةً ذَاتَ ظِلٍّ فَقَالَ أَيْ رَبِّ قَدِّمْنِي إِلَى هَذِهِ الشَّجَرَةِ أَكُونُ فِي ظِلِّهَا ‏ ‏


وَسَاقَ الْحَدِيثَ بِنَحْوِ حَدِيثِ ‏ ‏ابْنِ مَسْعُودٍ ‏ ‏وَلَمْ يَذْكُرْ فَيَقُولُ يَا ابْنَ ‏ ‏آدَمَ ‏ ‏مَا ‏ ‏يَصْرِينِي مِنْكَ إِلَى آخِرِ الْحَدِيثِ وَزَادَ فِيهِ وَيُذَكِّرُهُ اللَّهُ سَلْ كَذَا وَكَذَا فَإِذَا انْقَطَعَتْ بِهِ الْأَمَانِيُّ قَالَ اللَّهُ هُوَ لَكَ وَعَشَرَةُ أَمْثَالِهِ قَالَ ‏ ‏ثُمَّ يَدْخُلُ بَيْتَهُ فَتَدْخُلُ عَلَيْهِ زَوْجَتَاهُ مِنْ الْحُورِ الْعِينِ فَتَقُولَانِ الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَحْيَاكَ لَنَا وَأَحْيَانَا لَكَ قَالَ فَيَقُولُ مَا أُعْطِيَ أَحَدٌ مِثْلَ مَا أُعْطِيتُ ‏

“(நரகவாசி) ஒருவரது முகத்தை அல்லாஹ் நரகத்திலிருந்து சொர்க்கத்தின் பக்கம் திருப்பி விடுவான். பின்னர், நிழல் தரும் மரம் ஒன்றை அவருக்குக் காட்டுவான். அப்போது அவர், ‘என் இறைவா! இந்த மரத்திற்கு என்னை முன்நடத்துவாயாக! நான் அதன் நிழலில் இருக்க வேண்டும்’ என்பார்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஸயீத் அல்-குத்ரீ (ரலி).


குறிப்பு :

மேற்காணும் அபூஸயீத் அல்-குத்ரீ (ரலி) அவர்களது அறிவிப்பில், இபுனு மஸ்ஊத் (ரலி) அவர்களது அறிவிப்பிலுள்ள, “ஆதமின் மகனே! ஏன் என்னிடம் கோருவதை நிறுத்திக் கொண்டாய்?” என்பதிலிருந்து இறுதிவரையுள்ளவை தவிர்த்து, “நீ இன்னின்னதை ஆசைப்படு! என்று அறிவுறுத்தப் படும். அவர் அவ்வாறே ஆசைப்படுவார். நீ ஆசைப்பட்டதும் உலகத்தின் பத்து மடங்கும் உனக்குக் கிடைக்கும் என்று அவரிடம் (அல்லாஹ்வால்) கூறப்படும்” என்ற சொற்றொடர்களும் இடம்பெறுகின்றன. மேற்கொண்டு, “அவர் (சொர்க்கத்திலுள்ள) தமது இல்லத்திற்குள் நுழைவார். அப்போது ஹூருல்ஈன் எனும் (கண்ணழகுக் கன்னியரான) சொர்க்கத் துணைவியர் இருவர் அவரிடம் வந்து, ‘எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே!. அவன்தான் எங்களுக்காக உங்களையும் உங்களுக்காக எங்களையும் உயிர்ப்பித்தான்’ என்று கூறுவார்கள். அதற்கவர், ‘எனக்கு வழங்கப்பட்டதைப் போன்று வேறு யாருக்கும் வழங்கப்படவில்லை’ என்று (மகிழ்ந்து) கூறுவார். இவர்தாம் சொக்கவாசிகளுள் ஆகக் குறைந்த பதவியுடைவர்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறியதாகவும் இடம் பெற்றுள்ளது.

அத்தியாயம்: 1, பாடம்: 83, ஹதீஸ் எண்: 274

حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَفَّانُ بْنُ مُسْلِمٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حَمَّادُ بْنُ سَلَمَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ثَابِتٌ ‏ ‏عَنْ ‏ ‏أَنَسٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ مَسْعُودٍ ‏:‏

أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏آخِرُ مَنْ يَدْخُلُ الْجَنَّةَ رَجُلٌ فَهْوَ يَمْشِي مَرَّةً ‏ ‏وَيَكْبُو ‏ ‏مَرَّةً وَتَسْفَعُهُ النَّارُ مَرَّةً فَإِذَا مَا جَاوَزَهَا الْتَفَتَ إِلَيْهَا فَقَالَ تَبَارَكَ الَّذِي نَجَّانِي مِنْكِ لَقَدْ أَعْطَانِي اللَّهُ شَيْئًا مَا أَعْطَاهُ أَحَدًا مِنْ الْأَوَّلِينَ وَالْآخِرِينَ فَتُرْفَعُ لَهُ شَجَرَةٌ فَيَقُولُ أَيْ رَبِّ أَدْنِنِي مِنْ هَذِهِ الشَّجَرَةِ فَلِأَسْتَظِلَّ بِظِلِّهَا وَأَشْرَبَ مِنْ مَائِهَا فَيَقُولُ اللَّهُ عَزَّ وَجَلَّ يَا ابْنَ ‏ ‏آدَمَ ‏ ‏لَعَلِّي إِنَّ أَعْطَيْتُكَهَا سَأَلْتَنِي غَيْرَهَا فَيَقُولُ لَا يَا رَبِّ وَيُعَاهِدُهُ أَنْ لَا يَسْأَلَهُ غَيْرَهَا وَرَبُّهُ يَعْذِرُهُ لِأَنَّهُ يَرَى مَا لَا صَبْرَ لَهُ عَلَيْهِ ‏ ‏فَيُدْنِيهِ ‏ ‏مِنْهَا فَيَسْتَظِلُّ بِظِلِّهَا وَيَشْرَبُ مِنْ مَائِهَا ثُمَّ تُرْفَعُ لَهُ شَجَرَةٌ هِيَ أَحْسَنُ مِنْ الْأُولَى فَيَقُولُ أَيْ رَبِّ أَدْنِنِي مِنْ هَذِهِ لِأَشْرَبَ مِنْ مَائِهَا وَأَسْتَظِلَّ بِظِلِّهَا لَا أَسْأَلُكَ غَيْرَهَا فَيَقُولُ يَا ابْنَ ‏ ‏آدَمَ ‏ ‏أَلَمْ تُعَاهِدْنِي أَنْ لَا تَسْأَلَنِي غَيْرَهَا فَيَقُولُ لَعَلِّي إِنْ أَدْنَيْتُكَ مِنْهَا تَسْأَلُنِي غَيْرَهَا فَيُعَاهِدُهُ أَنْ لَا يَسْأَلَهُ غَيْرَهَا وَرَبُّهُ يَعْذِرُهُ لِأَنَّهُ يَرَى مَا لَا صَبْرَ لَهُ عَلَيْهِ ‏ ‏فَيُدْنِيهِ مِنْهَا فَيَسْتَظِلُّ بِظِلِّهَا وَيَشْرَبُ مِنْ مَائِهَا ثُمَّ تُرْفَعُ لَهُ شَجَرَةٌ عِنْدَ بَابِ الْجَنَّةِ هِيَ أَحْسَنُ مِنْ الْأُولَيَيْنِ فَيَقُولُ أَيْ رَبِّ أَدْنِنِي مِنْ هَذِهِ لِأَسْتَظِلَّ بِظِلِّهَا وَأَشْرَبَ مِنْ مَائِهَا لَا أَسْأَلُكَ غَيْرَهَا فَيَقُولُ يَا ابْنَ ‏ ‏آدَمَ ‏ ‏أَلَمْ تُعَاهِدْنِي أَنْ لَا تَسْأَلَنِي غَيْرَهَا قَالَ بَلَى يَا رَبِّ هَذِهِ لَا أَسْأَلُكَ غَيْرَهَا وَرَبُّهُ يَعْذِرُهُ لِأَنَّهُ يَرَى مَا لَا صَبْرَ لَهُ عَلَيْهَا ‏ ‏فَيُدْنِيهِ مِنْهَا فَإِذَا أَدْنَاهُ مِنْهَا فَيَسْمَعُ أَصْوَاتَ أَهْلِ الْجَنَّةِ فَيَقُولُ أَيْ رَبِّ أَدْخِلْنِيهَا فَيَقُولُ يَا ابْنَ ‏ ‏آدَمَ ‏ ‏مَا ‏ ‏يَصْرِينِي مِنْكَ ‏ ‏أَيُرْضِيكَ أَنْ أُعْطِيَكَ الدُّنْيَا وَمِثْلَهَا مَعَهَا قَالَ يَا رَبِّ أَتَسْتَهْزِئُ مِنِّي وَأَنْتَ رَبُّ الْعَالَمِينَ ‏ ‏فَضَحِكَ ‏ ‏ابْنُ مَسْعُودٍ ‏ ‏فَقَالَ أَلَا تَسْأَلُونِي مِمَّ أَضْحَكُ فَقَالُوا مِمَّ تَضْحَكُ قَالَ هَكَذَا ضَحِكَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقَالُوا مِمَّ تَضْحَكُ يَا رَسُولَ اللَّهِ قَالَ مِنْ ضِحْكِ رَبِّ الْعَالَمِينَ حِينَ قَالَ أَتَسْتَهْزِئُ مِنِّي وَأَنْتَ رَبُّ الْعَالَمِينَ فَيَقُولُ إِنِّي لَا أَسْتَهْزِئُ مِنْكَ وَلَكِنِّي عَلَى مَا أَشَاءُ قَادِرٌ

“இறுதியாகச் சொர்க்கத்தில் நுழையக் கூடிய ஒருவர், (நரகத்திலிருந்து வெளியேறி) ஒருபோது நடந்தும் ஒருபோது தவழ்ந்தும் வருவார். ஒருபோது நரக நெருப்பு அவரது முகத்தைத் தாக்கும். இந்நிலையில் அவர் நரகத்தைத் தாண்டியதும் அதைத் திரும்பிப் பார்த்து, ‘நற்பேறுகளுக்கு உரிய(என்னிறை)வன் உன்னிடமிருந்து என்னைக் காப்பாற்றி விட்டான். (எனக்கு) முன்-பின்னோர் எவருக்கும் வழங்காத பேற்றை அல்லாஹ் எனக்கு வழங்கினான்!’ என்று கூறுவார். அப்போது அவருக்கு ஒரு மரம் காட்டப்படும். உடனே அவர், ‘என் இறைவா! அந்த மரத்திடம் என்னைக் கொண்டு சேர்ப்பாயாக! அதனிடம் நிழலைப் பெற்றுக் கொள்வேன்; அதன் (கீழ் ஓடும்) நீரைப் பருகிக் கொள்வேன்’ என்று கூறுவார். ‘ஆதமின் மகனே! அதை நான் உனக்கு வழங்கினால் அதையன்றி வேறொன்றும் என்னிடம் கேட்க மாட்டாயே?’ என்று வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் கேட்பான். அதற்கவர், ‘இல்லை; வேறெதையும் உன்னிடம் நான் கேட்க மாட்டேன் இறைவா!’ என்று வாக்குறுதி அளிப்பார். அவரது அவசரத்தைக் காணும் இறைவன், அவருக்கு வாய்ப்பளித்து, அவரை அந்த மரத்தின் அருகே கொண்டு சேர்ப்பான். அவர் அந்த மரத்தின் நிழலைப் பெறுவார்; அதன் (கீழ் ஓடும்) நீரைப் பருகிக் கொள்வார்.

பின்னர், முதலில் காட்டப்பட்ட மரத்தைவிட மிகவும் அழகான மற்றொரு மரம் அவருக்குக் காட்டப்படும். (அதைக் காணும்) அவர், ‘என் இறைவா! அதனிடம் என்னைக் கொண்டு சேர்ப்பாயாக! நான் அதன் நீரைப் பருகி அதன் நிழலை அடைந்துக் கொள்வேன்! அதையன்றி வேறெதையும் உன்னிடம் கேட்க மாட்டேன்’ என்று கூறுவார். ‘ஆதமின் மகனே! வேறெதையும் கேட்கமாட்டேன் என்று என்னிடம் நீ (முன்பு) வாக்குறுதி கொடுத்தாயே! அதனிடம் உன்னை நான் கொண்டு சேர்த்தால் அதையன்றி வேறொன்றும் என்னிடம் கேட்க மாட்டாயே?’ என்று அல்லாஹ் கேட்பான். அவர், ‘வேறெதையும் கேட்க மாட்டேன்’ என்று (மீண்டும்) வாக்குறுதி அளிப்பார். அவரது அவசரத்தைக் காணும் இறைவன், அவருக்கு (இன்னொரு) வாய்ப்பளித்து, அவரை அந்த (அழகிய) மரத்தின் அருகே கொண்டு சேர்ப்பான். அவர் அந்த மரத்தின் நிழலைப் பெறுவார்; அதன் (கீழ் ஓடும்) நீரைப் பருகிக் கொள்வார்.

பிறகு முதலிரண்டு மரங்களை விடவும் பேரழகான, சொர்க்க வாசலில் உள்ள ஒரு மரம் அவருக்குக் காட்டப்படும். (அதைக் கண்ட) அவர், ‘என் இறைவா! அதனிடம் என்னைக் கொண்டு சேர்ப்பாயாக! நான் அதன் நீரைப் பருகி அதன் நிழலை அடைந்துக் கொள்வேன்! அதையன்றி வேறெதையும் உன்னிடம் கேட்க மாட்டேன்’ என்று கூறுவார். ‘ஆதமின் மகனே! வேறெதையும் கேட்கமாட்டேன் என்று என்னிடம் நீ (முன்பு இருமுறை) வாக்குறுதி கொடுத்தாயே! என்று கேட்பான். அதற்கு அவர், ‘ஆம்; என் இறைவா! இந்தத் தடவை அதையன்றி வேறெதையும் உன்னிடம் கேட்கமாட்டேன்’ என்று கூறுவார். அவரது அவசரத்தைக் காணும் இறைவன், அவருக்கு வாய்ப்பளித்து, அவரை அந்த மரத்தின் அருகே கொண்டு சேர்ப்பான். அவர் அந்த மரத்தை நெருங்கும்போது சொர்க்கவாசிகளின் குரல்கள் அவருக்குக் கேட்கும். உடனே அவர், ‘என் இறைவா! சொர்க்கத்தின் உள்ளே என்னை அனுப்புவாயாக!’ என்று கேட்பார். அதற்கு இறைவன், ‘ஆதமின் மகனே! ஏன் என்னிடம் கோருவதை நிறுத்திக் கொண்டாய்? உலகத்தையும் அதைப் போன்ற இன்னொரு மடங்கையும் உனக்கு நான் வழங்கினால் நீ மனநிறைவு கொள்வாய் அல்லவா?’ என்று கேட்பான். அதற்கு அவர், ‘என் இறைவா! அகிலத்தின் அதிபதியே! நீ என்னைக் கேலி செய்கிறாயா?’ என்று கேட்பார்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)


குறிப்பு :

இதை அறிவித்தபோது அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) சிரித்தார்கள். பிறகு, “நான் ஏன் சிரித்தேன் என்று என்னிடம் நீங்கள் கேட்கமாட்டீர்களா?” என்று மக்களைக் கேட்டார்கள். அப்போது மக்கள், “ஏன் சிரிக்கின்றீர்கள்?” என்று கேட்டார்கள். அதற்கு அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி), “இவ்வாறுதான் (இதைக் கூறும்போது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) சிரித்தார்கள். அப்போது நபித்தோழர்கள், “ஏன் சிரித்தீர்கள்?, அல்லாஹ்வின் தூதரே?” என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “அகிலத்தின் அதிபதியாகிய நீ என்னைக் கேலி செய்கிறாயா?” என்று அந்த மனிதர் கூறும்போது அதைக் கேட்டு அல்லாஹ் சிரிப்பான். (அதனால் தான் நானும் சிரித்தேன்.) மேலும், “நான் உன்னைப் பரிகாசம் செய்யவில்லை. மாறாக, நாடியதைச் செய்கின்ற ஆற்றல் உள்ளவன் நான்” என இறைவன் கூறுவான் என்றும் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) சொன்னார்கள் என்று அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) கூறினார்கள்.

அத்தியாயம்: 1, பாடம்: 83, ஹதீஸ் எண்: 273

و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَأَبُو كُرَيْبٍ ‏ ‏وَاللَّفْظُ ‏ ‏لِأَبِي كُرَيْبٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏أَبُو مُعَاوِيَةَ ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْمَشِ ‏ ‏عَنْ ‏ ‏إِبْرَاهِيمَ ‏ ‏عَنْ ‏ ‏عَبِيدَةَ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ ‏ ‏قَالَ :‏ ‏

قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِنِّي لَأَعْرِفُ آخَرُ أَهْلِ النَّارِ خُرُوجًا مِنْ النَّارِ رَجُلٌ يَخْرُجُ مِنْهَا زَحْفًا فَيُقَالُ لَهُ انْطَلِقْ فَادْخُلْ الْجَنَّةَ قَالَ فَيَذْهَبُ فَيَدْخُلُ الْجَنَّةَ فَيَجِدُ النَّاسَ قَدْ أَخَذُوا الْمَنَازِلَ فَيُقَالُ لَهُ أَتَذْكُرُ الزَّمَانَ الَّذِي كُنْتَ فِيهِ فَيَقُولُ نَعَمْ فَيُقَالُ لَهُ تَمَنَّ فَيَتَمَنَّى فَيُقَالُ لَهُ لَكَ الَّذِي تَمَنَّيْتَ وَعَشَرَةَ أَضْعَافِ الدُّنْيَا قَالَ فَيَقُولُ أَتَسْخَرُ بِي وَأَنْتَ الْمَلِكُ قَالَ فَلَقَدْ رَأَيْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏ضَحِكَ حَتَّى بَدَتْ ‏ ‏نَوَاجِذُهُ ‏

“நரகவாசிகளில் நரகத்திலிருந்து வெளியேறும் இறுதியானவரைப் பற்றி நான் நன்கறிவேன். (இறுதியானவராக) நரகத்திலிருந்து தவழ்ந்தபடி வெளியேறுகின்ற அவரிடம், ‘நீ போய் சொர்க்கத்தில் நுழைந்து கொள்!’ என்று கூறப்படும். அவர் சொர்க்கத்தில் நுழைந்து, அங்குள்ளவர்கள் தத்தம் தகுதிப்படி பதவிகளைப் பிடித்துக் கொண்டிருப்பதைக் காண்பார். ‘நீ கடந்த காலத்தை நினைத்துப் பார்க்கிறாயா?’ என்று அவரிடம் கேட்கப்படும். அவர், ‘ஆம்’ என்பார். ‘நீ இன்னின்னதை ஆசைப்படு!’ என்று அறிவுறுத்தப்படும். அவர் அவ்வாறே ஆசைப்படுவார். ‘நீ ஆசைப்பட்டதும் உலகத்தின் பத்து மடங்கும் உனக்குக் கிடைக்கும்’ என்று அவரிடம் (அல்லாஹ்வால்) கூறப்படும். அதற்கவர், ‘அரசனாகிய நீ என்னைக் கேலி செய்கின்றாயா?’ எனக் கேட்பார்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள். (இதைக் கூறும்போது) அவர்கள் தம் கடைவாய்ப் பற்கள் தெரியச் சிரித்ததை நான் பார்த்தேன்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)

அத்தியாயம்: 1, பாடம்: 83, ஹதீஸ் எண்: 272

حَدَّثَنَا ‏ ‏عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَإِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ الْحَنْظَلِيُّ ‏ ‏كِلَاهُمَا ‏ ‏عَنْ ‏ ‏جَرِيرٍ ‏ ‏قَالَ ‏ ‏عُثْمَانُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏جَرِيرٌ ‏ ‏عَنْ ‏ ‏مَنْصُورٍ ‏ ‏عَنْ ‏ ‏إِبْرَاهِيمَ ‏ ‏عَنْ ‏ ‏عَبِيدَةَ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ ‏ ‏قَالَ :‏ ‏

قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِنِّي لَأَعْلَمُ آخِرَ أَهْلِ النَّارِ خُرُوجًا مِنْهَا وَآخِرَ أَهْلِ الْجَنَّةِ دُخُولًا الْجَنَّةَ رَجُلٌ يَخْرُجُ مِنْ النَّارِ حَبْوًا فَيَقُولُ اللَّهُ تَبَارَكَ وَتَعَالَى لَهُ اذْهَبْ فَادْخُلْ الْجَنَّةَ فَيَأْتِيهَا فَيُخَيَّلُ إِلَيْهِ أَنَّهَا مَلْأَى فَيَرْجِعُ فَيَقُولُ يَا رَبِّ وَجَدْتُهَا مَلْأَى فَيَقُولُ اللَّهُ تَبَارَكَ وَتَعَالَى لَهُ اذْهَبْ فَادْخُلْ الْجَنَّةَ قَالَ فَيَأْتِيهَا فَيُخَيَّلُ إِلَيْهِ أَنَّهَا مَلْأَى فَيَرْجِعُ فَيَقُولُ يَا رَبِّ وَجَدْتُهَا مَلْأَى فَيَقُولُ اللَّهُ لَهُ اذْهَبْ فَادْخُلْ الْجَنَّةَ فَإِنَّ لَكَ مِثْلَ الدُّنْيَا وَعَشَرَةَ أَمْثَالِهَا ‏ ‏أَوْ إِنَّ لَكَ عَشَرَةَ أَمْثَالِ الدُّنْيَا ‏ ‏قَالَ فَيَقُولُ أَتَسْخَرُ بِي ‏ ‏أَوْ أَتَضْحَكُ بِي ‏ ‏وَأَنْتَ الْمَلِكُ قَالَ لَقَدْ رَأَيْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏ضَحِكَ حَتَّى بَدَتْ ‏ ‏نَوَاجِذُهُ ‏ ‏قَالَ فَكَانَ يُقَالُ ذَاكَ أَدْنَى أَهْلِ الْجَنَّةِ مَنْزِلَةً ‏

“நரகவாசிகளில் நரகத்திலிருந்து வெளியேறும் இறுதியானவரைப் பற்றியும் சொர்க்கவாசிகளில் சொர்க்கத்தில் நுழையும் இறுதியானவரைப் பற்றியும் நான் நன்கறிவேன். (இறுதியானவராக) நரகத்திலிருந்து தவழ்ந்தபடி வெளியேறுகின்ற ஒருவரிடம் நற்பேறுகளுக்கு உரியவனும் மிக்குயர்ந்தோனுமாகிய அல்லாஹ், ‘நீ போய் சொர்க்கத்தில் நுழைந்து கொள்!’ என்பான். அவர் சொர்க்கத்திற்குச் சென்று பார்க்கும்போது அது நிரம்பியிருப்பதைப் போன்று அவருக்குத் தோன்றும். உடனே அவர் திரும்பி வந்து, ‘என் இறைவா! அது நிரம்பியிருக்கக் கண்டேன்’ என்று கூறுவார். அதற்கு நற்பேறுகளுக்கு உரியவனும் மிக்குயர்ந்தோனுமாகிய அல்லாஹ், ‘நீ சென்று சொர்க்கத்தில் நுழைந்து கொள்!’ என்று (மீண்டும்) சொல்வான். அவர் சொர்க்கத்திற்குச் சென்று பார்க்கும்போது அது நிரம்பியிருப்பதைப் போன்று அவருக்குத் தோன்றும். ஆகவே, அவர் திரும்பி வந்து, ‘என் இறைவா! அது நிரம்பியிருக்கக் கண்டேன்’ என்று கூறுவார். அதற்கு, ‘நீ சென்று சொர்க்கத்தில் நுழைந்து கொள். ஏனெனில், உலகம் மற்றும் அதைப் போன்று பத்து மடங்கு – அல்லது – உலகத்தைப் போன்று பத்து மடங்கு (இடம் சொர்க்கத்தில்) உனக்கு உண்டு’ என்று அல்லாஹ் சொல்வான். அதற்கு அவர், ‘அரசனாகிய நீ என்னைக் கேலி செய்கிறாயா? – அல்லது – என்னை(ப் பார்த்து) நகைக்கின்றாயா?’ என்று கேட்பார்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள். (இதைக் கூறும்போது) தம் கடைவாய்ப் பற்கள் தெரிய அவர்கள் சிரித்ததை நான் பார்த்தேன்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)

அத்தியாயம்: 1, பாடம்: 82, ஹதீஸ் எண்: 271

و حَدَّثَنِي ‏ ‏نَصْرُ بْنُ عَلِيٍّ الْجَهْضَمِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏بِشْرٌ يَعْنِي ابْنَ الْمُفَضَّلِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي مَسْلَمَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي نَضْرَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي سَعِيدٍ ‏ ‏قَالَ ‏:‏

قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَمَّا أَهْلُ النَّارِ الَّذِينَ هُمْ أَهْلُهَا فَإِنَّهُمْ لَا يَمُوتُونَ فِيهَا وَلَا يَحْيَوْنَ وَلَكِنْ نَاسٌ أَصَابَتْهُمْ النَّارُ بِذُنُوبِهِمْ ‏ ‏أَوْ قَالَ بِخَطَايَاهُمْ ‏ ‏فَأَمَاتَهُمْ إِمَاتَةً حَتَّى إِذَا كَانُوا فَحْمًا أُذِنَ بِالشَّفَاعَةِ فَجِيءَ بِهِمْ ‏ ‏ضَبَائِرَ ‏ ‏ضَبَائِرَ ‏ ‏فَبُثُّوا ‏ ‏عَلَى أَنْهَارِ الْجَنَّةِ ثُمَّ قِيلَ يَا أَهْلَ الْجَنَّةِ أَفِيضُوا عَلَيْهِمْ فَيَنْبُتُونَ نَبَاتَ الْحِبَّةِ تَكُونُ فِي ‏ ‏حَمِيلِ ‏ ‏السَّيْلِ فَقَالَ رَجُلٌ مِنْ الْقَوْمِ كَأَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَدْ كَانَ ‏ ‏بِالْبَادِيَةِ ‏


و حَدَّثَنَاه ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏وَابْنُ بَشَّارٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي مَسْلَمَةَ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏أَبَا نَضْرَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ ‏ ‏عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بِمِثْلِهِ إِلَى قَوْلِهِ فِي ‏ ‏حَمِيلِ ‏ ‏السَّيْلِ وَلَمْ يَذْكُرْ مَا بَعْدَهُ ‏

“நரகத்திற்குரியவர்களான நரகவாசிகள் நரகத்தில் (முற்றாக) மரணிக்கமாட்டார்கள்; வாழவுமாட்டார்கள். ஆனால், தம் பாவங்களால் அல்லது குற்றங்களால் நரக நெருப்பிற்கு ஆளானவர்களை (இறைவன் தற்காலிகமாக) இறக்கச் செய்து விடுவான். அவர்கள் (எரிந்து) கரிக் கட்டையாக மாறிவிடும்போது (அவர்களுக்காகப்) பரிந்துரை செய்ய (சொர்க்கவாசிகளுக்கு) அனுமதி வழங்கப்படும். அவர்கள் தனித் தனிக் கூட்டங்களாகக் கொண்டுவரப்பட்டு, சொர்க்க நதிகளின் படுகைகளில் பரப்பி வைக்கப்படுவர். பிறகு “சொர்க்கவாசிகளே! அவர்கள் மீது தண்ணீரை ஊற்றுங்கள்” என்று கூறப்படும் (அவ்வாறே ஊற்றப்பட்டு) வெள்ளத்தில் மிதந்து வந்த வித்து முளைத்தெழுவதைப்போல் நரகவாசிகள் (பசுமையாக) மாறி விடுவார்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறியபோது மக்களில் ஒருவர், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கிராமப்புறத்தில் இருந்திருக்கிறார்கள் போலும்” என்று கூறினார்.

அறிவிப்பாளர் : அபூஸயீத் அல்-குத்ரீ (ரலி).


குறிப்பு :

முஹம்மதிப்னுல் முஸன்னா (ரஹ்), இபுனு பஷ்ஷார் (ரஹ்) ஆகிய இருவரது வழி அறிப்பில், “வெள்ளத்தில் மிதந்து வந்த வித்து முளைத்தெழுவதைப்போல் நரகவாசிகள் (பசுமையாக) மாறி விடுவார்கள்” என்பதற்குப் பின்னுள்ளவை இடம்பெறவில்லை.

அத்தியாயம்: 1, பாடம்: 82, ஹதீஸ் எண்: 270

و حَدَّثَنِي ‏ ‏هَارُونُ بْنُ سَعِيدٍ الْأَيْلِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏قَالَ أَخْبَرَنِي ‏ ‏مَالِكُ بْنُ أَنَسٍ ‏ ‏عَنْ ‏ ‏عَمْرِو بْنِ يَحْيَى بْنِ عُمَارَةَ ‏ ‏قَالَ حَدَّثَنِي ‏ ‏أَبِي ‏ ‏عَنْ ‏ ‏أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ ‏:‏

أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏يُدْخِلُ اللَّهُ أَهْلَ الْجَنَّةِ الْجَنَّةَ يُدْخِلُ مَنْ يَشَاءُ بِرَحْمَتِهِ وَيُدْخِلُ أَهْلَ النَّارِ النَّارَ ثُمَّ يَقُولُ انْظُرُوا مَنْ وَجَدْتُمْ فِي قَلْبِهِ مِثْقَالَ حَبَّةٍ مِنْ خَرْدَلٍ مِنْ إِيمَانٍ فَأَخْرِجُوهُ فَيُخْرَجُونَ مِنْهَا حُمَمًا قَدْ ‏ ‏امْتَحَشُوا ‏ ‏فَيُلْقَوْنَ فِي نَهَرِ الْحَيَاةِ ‏ ‏أَوْ الْحَيَا ‏ ‏فَيَنْبُتُونَ فِيهِ كَمَا تَنْبُتُ الْحِبَّةُ إِلَى جَانِبِ السَّيْلِ أَلَمْ تَرَوْهَا كَيْفَ تَخْرُجُ صَفْرَاءَ مُلْتَوِيَةً ‏


و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَفَّانُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏وُهَيْبٌ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏حَجَّاجُ بْنُ الشَّاعِرِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَمْرُو بْنُ عَوْنٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏خَالِدٌ ‏ ‏كِلَاهُمَا ‏ ‏عَنْ ‏ ‏عَمْرِو بْنِ يَحْيَى ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏وَقَالَا ‏ ‏فَيُلْقَوْنَ فِي نَهَرٍ يُقَالَ لَهُ الْحَيَاةُ وَلَمْ يَشُكَّا وَفِي حَدِيثِ ‏ ‏خَالِدٍ ‏ ‏كَمَا تَنْبُتُ ‏ ‏الْغُثَاءَةُ ‏ ‏فِي جَانِبِ السَّيْلِ ‏ ‏وَفِي حَدِيثِ ‏ ‏وُهَيْبٍ ‏ ‏كَمَا تَنْبُتُ الْحِبَّةُ فِي ‏ ‏حَمِئَةٍ ‏ ‏أَوْ ‏ ‏حَمِيلَةِ ‏ ‏السَّيْلِ ‏

“சொர்க்கவாசிகளை (மறுமையில்) அல்லாஹ் சொர்க்கத்திற்கு அனுப்புவான். தான் நாடும் சிலரைத் தனது (தனிப்பெரும்) கருணையால் சொர்க்கத்திற்கு அனுப்புவான். நரகவாசிகளை நரகத்தில் நுழையவைப்பான். பிறகு, ‘உள்ளத்தில் கடுகளவு இறைநம்பிக்கை உள்ளவராகப் பார்த்து (நரகத்திலிருந்து) வெளியேற்றுங்கள்’ என்று கூறுவான். அப்போது கரிந்து கரிக்கட்டையாகி விட்ட நிலையில் நரகவாசிகள் வெளியேற்றப்படுவார்கள். பின்னர் அவர்கள் ‘நஹ்ருல் ஹயாத்’ (ஜீவ) நதியில் அல்லது ‘நஹ்ருல் ஹயா’ (மழைநீர்) நதியில் போடப்பட்டு, உழுநிலத்தில் விதைப்பயிர் முளைத்தெழுவதைப்போல் (பசுமையாக) நிறம் மாறி வெளியாவார்கள். முளைத்து வரும் வித்து, மஞ்சள் நிறத்தில் அசைந்தாடும் காட்சியை நீங்கள் கண்டிருக்கின்றீர்கள் அல்லவா?” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கேட்டார்கள்.

அறிவிப்பாளர் : அபூஸயீத் அல்-குத்ரீ (ரலி)


குறிப்புகள் :

அம்ரிப்னுக் யஹ்யா (ரஹ்) வழி அறிவிப்பில், “அவர்கள் நஹ்ருல் ஹயாத் (ஜீவ) நதியில் போடப்படுவார்கள்” என்று ஐயமின்றி இடம்பெற்றுள்ளது. காலித் (ரஹ்) வழி அறிவிப்பில், “அவர்கள் நதிக்கரையோரத்தில் உள்ள குப்பைகளிலிருந்து முளைப்பதைப்போல்” என்று குறிப்பிடப் படுகிறது. உஹைப் (ரஹ்) வழி அறிவிப்பில், “களிமண்ணிலிருந்து அல்லது சேற்று வெள்ளத்திலிருந்து மிதந்து வந்த வித்து முளைத்தெழுவதைப் போன்று” என்று (ஐயப்பாட்டுடன்) இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 1, பாடம்: 81, ஹதீஸ் எண்: 269

و حَدَّثَنِي ‏ ‏سُوَيْدُ بْنُ سَعِيدٍ ‏ ‏قَالَ حَدَّثَنِي ‏ ‏حَفْصُ بْنُ مَيْسَرَةَ ‏ ‏عَنْ ‏ ‏زَيْدِ بْنِ أَسْلَمَ ‏ ‏عَنْ ‏ ‏عَطَاءِ بْنِ يَسَارٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ :‏ ‏

‏أَنَّ نَاسًا فِي زَمَنِ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالُوا يَا رَسُولَ اللَّهِ هَلْ نَرَى رَبَّنَا يَوْمَ الْقِيَامَةِ قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏نَعَمْ قَالَ ‏ ‏هَلْ ‏ ‏تُضَارُّونَ ‏ ‏فِي رُؤْيَةِ الشَّمْسِ بِالظَّهِيرَةِ صَحْوًا لَيْسَ مَعَهَا سَحَابٌ وَهَلْ ‏ ‏تُضَارُّونَ ‏ ‏فِي رُؤْيَةِ الْقَمَرِ لَيْلَةَ الْبَدْرِ صَحْوًا لَيْسَ فِيهَا سَحَابٌ قَالُوا لَا يَا رَسُولَ اللَّهِ قَالَ مَا ‏ ‏تُضَارُّونَ ‏ ‏فِي رُؤْيَةِ اللَّهِ تَبَارَكَ وَتَعَالَى يَوْمَ الْقِيَامَةِ إِلَّا كَمَا ‏ ‏تُضَارُّونَ ‏ ‏فِي رُؤْيَةِ أَحَدِهِمَا إِذَا كَانَ يَوْمُ الْقِيَامَةِ أَذَّنَ مُؤَذِّنٌ لِيَتَّبِعْ كُلُّ أُمَّةٍ مَا كَانَتْ تَعْبُدُ فَلَا يَبْقَى أَحَدٌ كَانَ يَعْبُدُ غَيْرَ اللَّهِ سُبْحَانَهُ مِنْ الْأَصْنَامِ وَالْأَنْصَابِ إِلَّا يَتَسَاقَطُونَ فِي النَّارِ حَتَّى إِذَا لَمْ يَبْقَ إِلَّا مَنْ كَانَ يَعْبُدُ اللَّهَ مِنْ بَرٍّ وَفَاجِرٍ وَغُبَّرِ ‏ ‏أَهْلِ الْكِتَابِ ‏ ‏فَيُدْعَى ‏ ‏الْيَهُودُ ‏ ‏فَيُقَالُ لَهُمْ مَا كُنْتُمْ تَعْبُدُونَ قَالُوا كُنَّا نَعْبُدُ ‏ ‏عُزَيْرَ ‏ ‏ابْنَ اللَّهِ فَيُقَالُ كَذَبْتُمْ مَا اتَّخَذَ اللَّهُ مِنْ صَاحِبَةٍ وَلَا وَلَدٍ فَمَاذَا ‏ ‏تَبْغُونَ ‏ ‏قَالُوا عَطِشْنَا يَا رَبَّنَا فَاسْقِنَا فَيُشَارُ إِلَيْهِمْ أَلَا تَرِدُونَ فَيُحْشَرُونَ إِلَى النَّارِ كَأَنَّهَا سَرَابٌ ‏ ‏يَحْطِمُ ‏ ‏بَعْضُهَا بَعْضًا فَيَتَسَاقَطُونَ فِي النَّارِ ثُمَّ يُدْعَى ‏ ‏النَّصَارَى ‏ ‏فَيُقَالُ لَهُمْ مَا كُنْتُمْ تَعْبُدُونَ قَالُوا كُنَّا نَعْبُدُ ‏ ‏الْمَسِيحَ ‏ ‏ابْنَ اللَّهِ فَيُقَالُ لَهُمْ كَذَبْتُمْ مَا اتَّخَذَ اللَّهُ مِنْ صَاحِبَةٍ وَلَا وَلَدٍ فَيُقَالُ لَهُمْ مَاذَا تَبْغُونَ فَيَقُولُونَ عَطِشْنَا يَا رَبَّنَا فَاسْقِنَا قَالَ فَيُشَارُ إِلَيْهِمْ أَلَا تَرِدُونَ فَيُحْشَرُونَ إِلَى جَهَنَّمَ كَأَنَّهَا سَرَابٌ يَحْطِمُ بَعْضُهَا بَعْضًا فَيَتَسَاقَطُونَ فِي النَّارِ حَتَّى إِذَا لَمْ يَبْقَ إِلَّا مَنْ كَانَ يَعْبُدُ اللَّهَ تَعَالَى مِنْ ‏ ‏بَرٍّ ‏ ‏وَفَاجِرٍ أَتَاهُمْ رَبُّ الْعَالَمِينَ سُبْحَانَهُ وَتَعَالَى فِي أَدْنَى صُورَةٍ مِنْ الَّتِي رَأَوْهُ فِيهَا قَالَ فَمَا تَنْتَظِرُونَ تَتْبَعُ كُلُّ أُمَّةٍ مَا كَانَتْ تَعْبُدُ قَالُوا يَا رَبَّنَا فَارَقْنَا النَّاسَ فِي الدُّنْيَا أَفْقَرَ مَا كُنَّا إِلَيْهِمْ وَلَمْ نُصَاحِبْهُمْ فَيَقُولُ أَنَا رَبُّكُمْ فَيَقُولُونَ نَعُوذُ بِاللَّهِ مِنْكَ لَا نُشْرِكُ بِاللَّهِ شَيْئًا مَرَّتَيْنِ أَوْ ثَلَاثًا حَتَّى إِنَّ بَعْضَهُمْ لَيَكَادُ أَنْ ‏ ‏يَنْقَلِبَ ‏ ‏فَيَقُولُ هَلْ بَيْنَكُمْ وَبَيْنَهُ ‏ ‏آيَةٌ ‏ ‏فَتَعْرِفُونَهُ بِهَا فَيَقُولُونَ نَعَمْ فَيُكْشَفُ عَنْ سَاقٍ فَلَا يَبْقَى مَنْ كَانَ يَسْجُدُ لِلَّهِ مِنْ تِلْقَاءِ نَفْسِهِ إِلَّا أَذِنَ اللَّهُ لَهُ بِالسُّجُودِ وَلَا يَبْقَى مَنْ كَانَ يَسْجُدُ اتِّقَاءً وَرِيَاءً إِلَّا جَعَلَ اللَّهُ ظَهْرَهُ ‏ ‏طَبَقَةً ‏ ‏وَاحِدَةً كُلَّمَا أَرَادَ أَنْ يَسْجُدَ ‏ ‏خَرَّ ‏ ‏عَلَى ‏ ‏قَفَاهُ ‏ ‏ثُمَّ يَرْفَعُونَ رُءُوسَهُمْ وَقَدْ تَحَوَّلَ فِي صُورَتِهِ الَّتِي رَأَوْهُ فِيهَا أَوَّلَ مَرَّةٍ فَقَالَ أَنَا رَبُّكُمْ فَيَقُولُونَ أَنْتَ رَبُّنَا ثُمَّ ‏ ‏يُضْرَبُ ‏ ‏الْجِسْرُ عَلَى جَهَنَّمَ ‏ ‏وَتَحِلُّ ‏ ‏الشَّفَاعَةُ وَيَقُولُونَ اللَّهُمَّ سَلِّمْ سَلِّمْ قِيلَ يَا رَسُولَ اللَّهِ وَمَا الْجِسْرُ قَالَ ‏ ‏دَحْضٌ ‏ ‏مَزِلَّةٌ فِيهِ ‏ ‏خَطَاطِيفُ ‏ ‏وَكَلَالِيبُ ‏ ‏وَحَسَكٌ ‏ ‏تَكُونُ ‏ ‏بِنَجْدٍ ‏ ‏فِيهَا ‏ ‏شُوَيْكَةٌ يُقَالُ لَهَا ‏ ‏السَّعْدَانُ ‏ ‏فَيَمُرُّ الْمُؤْمِنُونَ كَطَرْفِ الْعَيْنِ وَكَالْبَرْقِ وَكَالرِّيحِ وَكَالطَّيْرِ ‏ ‏وَكَأَجَاوِيدِ ‏ ‏الْخَيْلِ ‏ ‏وَالرِّكَابِ ‏ ‏فَنَاجٍ مُسَلَّمٌ وَمَخْدُوشٌ مُرْسَلٌ ‏ ‏وَمَكْدُوسٌ ‏ ‏فِي نَارِ جَهَنَّمَ حَتَّى إِذَا خَلَصَ الْمُؤْمِنُونَ مِنْ النَّارِ فَوَالَّذِي نَفْسِي بِيَدِهِ مَا مِنْكُمْ مِنْ أَحَدٍ بِأَشَدَّ مُنَاشَدَةً لِلَّهِ فِي ‏ ‏اسْتِقْصَاءِ ‏ ‏الْحَقِّ مِنْ الْمُؤْمِنِينَ لِلَّهِ يَوْمَ الْقِيَامَةِ لِإِخْوَانِهِمْ الَّذِينَ فِي النَّارِ يَقُولُونَ رَبَّنَا كَانُوا يَصُومُونَ مَعَنَا وَيُصَلُّونَ وَيَحُجُّونَ فَيُقَالُ لَهُمْ أَخْرِجُوا مَنْ عَرَفْتُمْ فَتُحَرَّمُ صُوَرُهُمْ عَلَى النَّارِ فَيُخْرِجُونَ خَلْقًا كَثِيرًا قَدْ أَخَذَتْ النَّارُ إِلَى نِصْفِ سَاقَيْهِ وَإِلَى رُكْبَتَيْهِ ثُمَّ يَقُولُونَ رَبَّنَا مَا بَقِيَ فِيهَا أَحَدٌ مِمَّنْ أَمَرْتَنَا بِهِ فَيَقُولُ ارْجِعُوا فَمَنْ وَجَدْتُمْ فِي قَلْبِهِ مِثْقَالَ دِينَارٍ مِنْ خَيْرٍ فَأَخْرِجُوهُ فَيُخْرِجُونَ خَلْقًا كَثِيرًا ثُمَّ يَقُولُونَ رَبَّنَا لَمْ ‏ ‏نَذَرْ ‏ ‏فِيهَا أَحَدًا مِمَّنْ أَمَرْتَنَا ثُمَّ يَقُولُ ارْجِعُوا فَمَنْ وَجَدْتُمْ فِي قَلْبِهِ مِثْقَالَ نِصْفِ دِينَارٍ مِنْ خَيْرٍ فَأَخْرِجُوهُ فَيُخْرِجُونَ خَلْقًا كَثِيرًا ثُمَّ يَقُولُونَ رَبَّنَا لَمْ ‏ ‏نَذَرْ ‏ ‏فِيهَا مِمَّنْ أَمَرْتَنَا أَحَدًا ثُمَّ يَقُولُ ارْجِعُوا فَمَنْ وَجَدْتُمْ فِي قَلْبِهِ مِثْقَالَ ذَرَّةٍ مِنْ خَيْرٍ فَأَخْرِجُوهُ فَيُخْرِجُونَ خَلْقًا كَثِيرًا ثُمَّ يَقُولُونَ رَبَّنَا لَمْ ‏ ‏نَذَرْ ‏ ‏فِيهَا خَيْرًا وَكَانَ ‏ ‏أَبُو سَعِيدٍ الْخُدْرِيُّ ‏ ‏يَقُولُ إِنْ لَمْ تُصَدِّقُونِي بِهَذَا الْحَدِيثِ فَاقْرَءُوا إِنْ شِئْتُمْ ‏‏[إِنَّ اللَّهَ لَا يَظْلِمُ مِثْقَالَ ذَرَّةٍ وَإِنْ تَكُ حَسَنَةً يُضَاعِفْهَا وَيُؤْتِ مِنْ لَدُنْهُ أَجْرًا عَظِيمًا] ‏

‏فَيَقُولُ اللَّهُ عَزَّ وَجَلَّ شَفَعَتْ الْمَلَائِكَةُ وَشَفَعَ النَّبِيُّونَ وَشَفَعَ الْمُؤْمِنُونَ وَلَمْ يَبْقَ إِلَّا أَرْحَمُ الرَّاحِمِينَ فَيَقْبِضُ قَبْضَةً مِنْ النَّارِ فَيُخْرِجُ مِنْهَا قَوْمًا لَمْ يَعْمَلُوا خَيْرًا قَطُّ قَدْ ‏ ‏عَادُوا ‏ ‏حُمَمًا ‏ ‏فَيُلْقِيهِمْ فِي نَهَرٍ فِي أَفْوَاهِ الْجَنَّةِ يُقَالُ لَهُ نَهَرُ الْحَيَاةِ فَيَخْرُجُونَ كَمَا تَخْرُجُ الْحِبَّةُ فِي ‏ ‏حَمِيلِ ‏ ‏السَّيْلِ أَلَا تَرَوْنَهَا تَكُونُ إِلَى الْحَجَرِ أَوْ إِلَى الشَّجَرِ مَا يَكُونُ إِلَى الشَّمْسِ ‏ ‏أُصَيْفِرُ وَأُخَيْضِرُ وَمَا يَكُونُ مِنْهَا إِلَى الظِّلِّ يَكُونُ أَبْيَضَ فَقَالُوا يَا رَسُولَ اللَّهِ كَأَنَّكَ كُنْتَ ‏ ‏تَرْعَى بِالْبَادِيَةِ قَالَ فَيَخْرُجُونَ كَاللُّؤْلُؤِ فِي رِقَابِهِمْ الْخَوَاتِمُ يَعْرِفُهُمْ أَهْلُ الْجَنَّةِ هَؤُلَاءِ عُتَقَاءُ اللَّهِ الَّذِينَ أَدْخَلَهُمْ اللَّهُ الْجَنَّةَ بِغَيْرِ عَمَلٍ عَمِلُوهُ وَلَا خَيْرٍ قَدَّمُوهُ ثُمَّ يَقُولُ ادْخُلُوا الْجَنَّةَ فَمَا رَأَيْتُمُوهُ فَهُوَ لَكُمْ فَيَقُولُونَ رَبَّنَا أَعْطَيْتَنَا مَا لَمْ تُعْطِ أَحَدًا مِنْ الْعَالَمِينَ فَيَقُولُ لَكُمْ عِنْدِي أَفْضَلُ مِنْ هَذَا فَيَقُولُونَ يَا رَبَّنَا أَيُّ شَيْءٍ أَفْضَلُ مِنْ هَذَا فَيَقُولُ رِضَايَ فَلَا أَسْخَطُ عَلَيْكُمْ بَعْدَهُ أَبَدًا ‏


‏قَالَ ‏ ‏مُسْلِم ‏ ‏قَرَأْتُ عَلَى ‏ ‏عِيسَى بْنِ حَمَّادٍ زُغْبَةَ الْمِصْرِيِّ ‏ ‏هَذَا الْحَدِيثَ فِي الشَّفَاعَةِ وَقُلْتُ لَهُ أُحَدِّثُ بِهَذَا الْحَدِيثِ عَنْكَ أَنَّكَ ‏ ‏سَمِعْتَ مِنَ ‏ ‏اللَّيْثِ بْنِ سَعْدٍ ‏ ‏فَقَالَ نَعَمْ قُلْتُ ‏ ‏لِعِيسَى بْنِ حَمَّادٍ ‏ ‏أَخْبَرَكُمُ ‏ ‏اللَّيْثُ بْنُ سَعْدٍ ‏ ‏عَنْ ‏ ‏خَالِدِ بْنِ يَزِيدَ ‏ ‏عَنْ ‏ ‏سَعِيدِ بْنِ أَبِي هِلَالٍ ‏ ‏عَنْ ‏ ‏زَيْدِ بْنِ أَسْلَمَ ‏ ‏عَنْ ‏ ‏عَطَاءِ بْنِ يَسَارٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ ‏ ‏أَنَّهُ قَالَ قُلْنَا يَا رَسُولَ اللَّهِ ‏ ‏أَنَرَى رَبَّنَا قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏هَلْ ‏ ‏تُضَارُّونَ ‏ ‏فِي رُؤْيَةِ الشَّمْسِ إِذَا كَانَ يَوْمٌ صَحْوٌ قُلْنَا لَا وَسُقْتُ الْحَدِيثَ حَتَّى انْقَضَى آخِرُهُ وَهُوَ نَحْوُ حَدِيثِ ‏ ‏حَفْصِ بْنِ مَيْسَرَةَ ‏ ‏وَزَادَ بَعْدَ قَوْلِهِ بِغَيْرِ عَمَلٍ عَمِلُوهُ وَلَا قَدَمٍ قَدَّمُوهُ فَيُقَالُ لَهُمْ لَكُمْ مَا رَأَيْتُمْ وَمِثْلُهُ مَعَهُ قَالَ ‏ ‏أَبُو سَعِيدٍ ‏ ‏بَلَغَنِي أَنَّ الْجِسْرَ أَدَقُّ مِنْ الشَّعْرَةِ وَأَحَدُّ مِنْ السَّيْفِ وَلَيْسَ فِي حَدِيثِ ‏ ‏اللَّيْثِ ‏ ‏فَيَقُولُونَ رَبَّنَا أَعْطَيْتَنَا مَا لَمْ تُعْطِ أَحَدًا مِنْ الْعَالَمِينَ وَمَا بَعْدَهُ فَأَقَرَّ بِهِ ‏ ‏عِيسَى بْنُ حَمَّادٍ ‏ ‏

و حَدَّثَنَاه ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏جَعْفَرُ بْنُ عَوْنٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏هِشَامُ بْنُ سَعْدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏زَيْدُ بْنُ أَسْلَمَ ‏ ‏بِإِسْنَادِهِمَا ‏ ‏نَحْوَ حَدِيثِ ‏ ‏حَفْصِ بْنِ مَيْسَرَةَ ‏ ‏إِلَى آخِرِهِ وَقَدْ زَادَ وَنَقَصَ شَيْئًا

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் மக்கள் சிலர், “அல்லாஹ்வின் தூதரே! மறுமை நாளில் நாங்கள் எங்கள் இறைவனைக் காண்போமா?” என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “ஆம் (காண்பீர்கள்); மேகமே இல்லாத தெளிவான நண்பகல் நேரத்தில் சூரியனைப் பார்ப்பதில் நீங்கள் சிரமப்படுவீர்களா? மேகமே இல்லாத தெளிவான பௌர்ணமி இரவில் முழுநிலவைப் பார்ப்பதில் நீங்கள் சிரமப்படுவீர்களா?” என்று கேட்டார்கள். மக்கள், “(சிரமப்பட) மாட்டோம், அல்லாஹ்வின் தூதரே!” என்று கூறினர்.

“இவ்விரண்டில் ஒன்றைப் பார்க்க நீங்கள் சிரமப்படாததைப் போன்றே மறுமை நாளில், நற்பேறுகளுக்கு உரியவனும் மிக்குயந்தோனுமாகிய அல்லாஹ்வைக் காண நீங்கள் சிரமப்படமாட்டீர்கள். மறுமை நாள் ஏற்படும்போது, (அல்லாஹ்வின் அறிவிப்பை) அறிவிப்பவர், ‘ஒவ்வொரு சமுதாயத்தாரும் (உலகத்தில்) தாம் வணங்கியவற்றைப் பின்தொடர்ந்து செல்லட்டும்’ என்று அறிவிப்பார். அப்போது, அல்லாஹ்வை விடுத்து கற்பனை தெய்வங்களையும் கற்சிலைகளையும் வணங்கிக் கொண்டிருந்தவர்களுள் ஒருவர்கூட மிச்சமின்றி அனைவரும் நரக நெருப்பில் விழுவர். முடிவில் அல்லாஹ்வை மட்டும் வழிபட்டு (நன்மைகளும் புரிந்து) கொண்டிருந்த நல்லவர்களும் (அல்லாஹ்வை வழிபட்டுப் பாவங்களும் புரிந்து வந்த) பாவிகளும் வேதக்காரர்களில் கொஞ்சம் பேருமே எஞ்சியிருப்பர்.

அப்போது (வேதக்காரர்களான) யூதர்கள் அழைக்கப்படுவார்கள். அவர்களிடம், ‘நீங்கள் வழிபட்டது எது?’ என்று கேட்கப்படும். அவர்கள், ‘அல்லாஹ்வின் மகன் உஸைரை வழிபட்டுக் கொண்டிருந்தோம்’ என்று பதிலளிப்பார்கள். அப்போது அவர்களிடம், ‘பொய் சொல்கின்றீர்கள். தனக்கு எவரையும் துணைவியாகவோ மகனாகவோ அல்லாஹ் எடுத்துக் கொள்ளவில்லை’ என்று கூறப்படும். அதற்கு அவர்கள், ‘எங்கள் இறைவா! எங்களுக்குத் தாகமாக இருக்கிறது, (தண்ணீர்) புகட்டுவாயாக!’ எனக் கேட்பார்கள். உடனே, ‘நீங்கள் தண்ணீர் உள்ள (அந்த) இடத்திற்குச் சென்றாலென்ன?’ என (ஒரு திசை) சுட்டிக் காட்டப்பட்டு, (அத்திசையிலுள்ள) நரகத்தின் பக்கம் அவர்கள் கொண்டு செல்லப்படுவார்கள். அது கானல் நீர் போன்று காணப்படும். அதன் ஒரு பகுதி மற்றொரு பகுதியைச் சிதைத்துக் கொண்டிருக்கும். அப்படியே அவர்கள் அந்த நரக நெருப்பில் விழுவார்கள்.

பிறகு, கிறிஸ்தவர்கள் அழைக்கப்பட்டு, ‘நீங்கள் வழிபட்டது எது?’ என்று அவர்களிடம் கேட்கப்படும். அவர்கள், ‘நாங்கள் அல்லாஹ்வின் மகன் மஸீஹை (ஈஸாவை) வழிபட்டுக் கொண்டிருந்தோம்’ என்று கூறுவர். அப்போது அவர்களிடம், ‘பொய் சொல்கின்றீர்கள். தனக்கு எவரையும் துணைவியாகவோ மகனாகவோ அல்லாஹ் எடுத்துக் கொள்ளவில்லை’ என்று கூறப்படும். அதற்கு அவர்கள், ‘எங்கள் இறைவா! எங்களுக்குத் தாகமாக இருக்கிறது, (தண்ணீர்) புகட்டுவாயாக!’ எனக் கேட்பார்கள். உடனே, ‘நீங்கள் தண்ணீர் உள்ள (அந்த) இடத்திற்குச் சென்றாலென்ன?’ என (ஒரு திசை) சுட்டிக் காட்டப்பட்டு, (அத்திசையிலுள்ள) நரகத்தின் பக்கம் அவர்கள் கொண்டு செல்லப்படுவார்கள். அது கானல் நீர் போன்று காணப்படும். அதன் ஒரு பகுதி மற்றொரு பகுதியைச் சிதைத்துக் கொண்டிருக்கும். அப்படியே அவர்கள் அந்த நரக நெருப்பில் விழுவார்கள்.

இறுதியில் அல்லாஹ்வை வழிபட்டு(க்கொண்டு நன்மைகளும் புரிந்து)வந்த நல்லோரும் (அல்லாஹ்வை வழிபட்டுக் கொண்டு பாவங்களும் புரிந்து வந்த) தீயோரும் எஞ்சியிருப்பர். அல்லாஹ்வைப் பற்றி அவர்கள் (தம் உள்ளத்தில்) எண்ணி வைத்திருந்த தோற்றங்களில் (இல்லாமல்) மிக ஒத்தவொரு தோற்றத்தில் அனைத்துலகின் இறைவன் அவர்களிடம் வருவான். அப்போது ‘நீங்கள் எதை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றீர்கள்? ஒவ்வொரு சமுதாயத்தாரும் (உலகில்) தாம் வழிபட்டுக் கொண்டிருந்தவற்றைப் பின்தொடர்ந்து சென்று கொண்டிருக்கின்றார்களே!’ என்று அவன் கேட்பான். அவர்கள், ‘உலக வாழ்வில் நாங்கள் அந்த மக்களிடம் அதிக அளவில் தேவையுடையவர்களாக இருந்தும் அவர்களுடன் தோழமை கொள்ளாமல் பிரிந்திருந்தோம் (அவர்களுக்காக நாங்கள் காத்திருக்கவில்லை; எங்கள் இறைவனுக்காகக் காத்திருக்கிறோம்)’ என்று பதிலளிப்பார்கள்.

அப்போது இறைவன், ‘நான்தான் உங்கள் இறைவன்’ என்று கூறுவான். அதற்கு, ‘(இல்லை!) உன்னை விட்டும் அல்லாஹ்விடம் நாங்கள் பாதுகாப்புக் கோருகிறோம்; நாங்கள் அல்லாஹ்வுக்கு எதையும் இணையாக்க மாட்டோம்’ என்று இரண்டு அல்லது மூன்று தடவைகள் கூறுவார்கள். (அந்தச் சோதனையில்) அவர்களில் சிலர் (சத்தியத்திலிருந்து) பிறழ்ந்து விடும் அளவுக்குப் போய் விடுவார்கள். அப்போது, ‘அவனை இனங்கண்டு கொள்ள உங்களுக்கும் அவனுக்குமிடையே ஏதேனும் அடையாளம் உண்டா?’ என்று இறைவன் கேட்பான். அவர்கள், ‘உண்டு’ என்று கூறுவார்கள். உடனே, (திரையுடனிருக்கும் இறைவனின்) கணுக்கால் திறந்து காட்டப்படும். அப்போது (உலகத்தில்) மனப்பூர்வமாக அல்லாஹ்வுக்குச் சிரம் பணிந்துக் கொண்டிருந்தவர் (அங்கும்) சிரம் பணிய இறைவன் அனுமதிப்பான். தற்காப்புக்காகவோ பாராட்டுக்காகவோ சிரம்பணிந்து வாழ்ந்து கொண்டிருந்தவருடைய முதுகை (நெடும் பலகையைப் போன்று) ஒரே நீட்டெலும்பாக அல்லாஹ் ஆக்கி விடுவான். அவர் சிரம் பணிய முற்படும்போதெல்லாம் மல்லாந்து விழுந்து விடுவார் (அவரால் சிரம் பணிய முடியாது).

பின்னர் அனைவரும் தலையை உயர்த்துவார்கள். அப்போது அவர்கள் பார்த்த முதல் தோற்றத்தில் இறைவன் காட்சியளித்து, ‘நான்தான் உங்கள் இறைவன்’ என்று கூறுவான். அதற்கு அவர்கள், ‘நீயே எங்கள் இறைவன்’ என்று கூறுவார்கள். (பாவம் புரிந்த இறை நம்பிக்கையாளர்களுக்காகப்) பரிந்துரை செய்ய அனுமதி கிடைக்கும்; நரகத்தின் மீது பாலம் அமைக்கப்படும். அப்போது மக்கள், ‘அல்லாஹ்வே! காப்பாற்று!; காப்பாற்று!’ என்று பிரார்த்திப்பார்கள்”

என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறிக் கொண்டு வந்தபோது, “அல்லாஹ்வின் தூதரே! பாலம் என்றால் என்ன?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், “(கால்கள்) வழுக்கி விடக் கூடிய ஓர் இடமாகும். அ(ந்தப் பாலத்)தில் நஜ்துப் பகுதியில் முளைக்கும் ‘ஸஅதான்’ எனப்படும் (முட்)செடியின் முற்களைப் போன்ற கொக்கிகள் இருக்கும்” என்று பதிலளித்தார்கள். தொடர்ந்து,

“இறைநம்பிக்கையாளர்கள் கண் சிமிட்டும் நேரத்தில் மின்னலைப் போன்று, காற்றைப் போன்று, பறவையைப் போன்று, ஜாதிக் குதிரைகளைப் போன்று, ஒட்டகங்களைப் போன்று (விரைந்து அந்தப் பாலத்தைக்) கடந்து விடுவார்கள். (அதைக் கடப்பவர்களுள் கொக்கிப் பிடியின்) காயங்களின்றித் தப்பித்துக் கொள்வோரும் காயங்களுடன் தப்புவோரும் உண்டு. பின்புறத்திலிருந்து தள்ளப்பட்டு நரக நெருப்பில் விழுவோரும் உண்டு. இறுதியில் இறைநம்பிக்கையாளர்கள் (அந்தப் பாலத்தைக் கடந்து) நரக நெருப்பிலிருந்து தப்பி விடுவார்கள்.

என் உயிர் கைவசம் உள்ளவன் மீது சத்தியமாக! மறுமை நாளில் நரகத்தில் கிடக்கும் தம் சகோதரர்களின் நன்மையை வலியுறுத்தி இறைவனிடம் மிகவும் மன்றாடி வேண்டுபவர்கள் இறைநம்பிக்கையாளர்களைவிட வேறெவருமில்லை. அவர்கள் கூறுவார்கள்: ‘எங்கள் இறைவா! இவர்கள் எங்களுடன் நோன்பு நோற்றார்கள்; தொழுதார்கள்; ஹஜ் செய்தார்கள் (எனவே இவர்களை நீ நரகத்திலிருந்து விடுதலை செய்வாயாக!)’. அப்போது அவர்களிடம், ‘நீங்கள் (சென்று) உங்களுக்குத் தெரிந்தவர்களை (நரகத்திலிருந்து) வெளியேற்றுங்கள்’ என்று கூறப்படும். மேலும், (அடையாளம் காண்பதற்கு வசதியாக) அவர்களது உடலைத் தீண்டக்கூடாதென நரகத்திற்குத் தடை விதிக்கப்படும். இவர்கள் (நரகத்திற்குச் சென்று) ஏராளமான மக்களை வெளியே கொண்டு வருவார்கள். அப்போது (நரகத்தில் இருந்த) அவர்களில் சிலருடைய கணுக்கால்களில் பாதிவரையும் (இன்னும் சிலருடைய) முழங்கால்கள் வரையும் நரக நெருப்புத் தீண்டியிருக்கும். பிறகு, ‘எங்கள் இறைவா! நீ வெளியேற்றுமாறு கட்டளையிட்டவர்களுள் ஒருவர்கூட நரகத்தில் எஞ்சவில்லை (நாங்கள் வெளியேற்றிவிட்டோம்)’ என்று கூறுவார்கள்.

அப்போது இறைவன், ‘நீங்கள் திரும்பிச் சென்று, உள்ளத்தில் ஒரு தீனார் நிறை அளவு நன்மையைக் உடையவரையும் (நரகத்திலிருந்து) வெளியேற்றுங்கள்’ என்று கூறுவான். அவ்வாறே அவர்களும் (இன்னும்) ஏராளமான மக்களை வெளியேற்றிவிட்டு, ‘எங்கள் இறைவா! நீ உத்தரவிட்ட யாரையும் அதில் நாங்கள் விட்டு வைக்கவில்லை (வெளியேற்றி விட்டோம்)’ என்று கூறுவார்கள்.

‘நீங்கள் திரும்பிச் சென்று, உள்ளத்தில் அரை தீனார் நிறை அளவு நன்மையை உடையவரையும் (நரகத்திலிருந்து) வெளியேற்றுங்கள்’ என்று மீண்டும் இறைவன் கூறுவான். அவ்வாறே அவர்களும் (இன்னும்) ஏராளமான மக்களை வெளியேற்றிவிட்டு, ‘எங்கள் இறைவா! நீ உத்தரவிட்ட யாரையும் அதில் நாங்கள் விட்டு வைக்கவில்லை (வெளியேற்றி விட்டோம்)’ என்று கூறுவார்கள்.

‘நீங்கள் திரும்பிச் சென்று, உள்ளத்தில் அணுவளவு நன்மையை உடையவரையும் (நரகத்திலிருந்து) வெளியேற்றுங்கள்’ என்று பின்னரும் கூறுவான். அவ்வாறே அவர்களும் (இன்னும்) ஏராளமான மக்களை வெளியேற்றிவிட்டு, ‘எங்கள் இறைவா! நீ உத்தரவிட்ட யாரையும் அதில் நாங்கள் விட்டு வைக்கவில்லை (வெளியேற்றி விட்டோம்)’ என்று கூறுவார்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

இவ்விடத்தில், “நான் கூறும் இந்த ஹதீஸை நீங்கள் நம்பாவிடின், விரும்பினால் ‘திண்ணமாக அல்லாஹ் (எவருக்கும்) அணுவளவும் அநீதி இழைக்கமாட்டான். (எவரும்) அணுவளவு நன்மை செய்திருந்தாலும் அதை அவன் பன்மடங்காக்கி, அதற்கு மகத்தான சன்மானத்தைத் தன்னிடமிருந்து வழங்குவான்’ எனும் (4:40ஆவது) இறைவசனத்தை நீங்கள் ஓதி(அதன் மூலம் விளக்கம் பெற்று)க் கொள்ளலாம்” என்று அறிவிப்பாளர் அபூஸயீத் அல்-குத்ரீ (ரலி) கூறிய பின்னர் ஹதீஸ் தொடர்கிறது:

“வானவர்களும் நபிமார்களும் இறை நம்பிக்கையாளர்களும் பரிந்துரைத்துவிட்டார்கள். இப்போது கருணையாளர்களுக்கெல்லாம் கருணையாளன் மட்டுமே எஞ்சியிருக்கின்றான்” என்று வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் கூறிவிட்டு, அறவே எந்த நன்மையும் செய்திராத ஒரு கூட்டத்தை, நரகத்திலிருந்து ஒரு கைப்பிடி அளவில் அள்ளியெடுத்து வெளியேற்றுவான். அவர்கள் கரிக்கட்டை போன்று மாறியிருப்பார்கள். எனவே, அவர்களைச் சொர்க்கத்தில் நுழைவாயில்களில் உள்ள ‘ஜீவநதி’ என்ற பெயருள்ள ஒரு நதியில் போடுவான். உழுநிலத்தில் விதைப்பயிர் முளைத்தெழுவதைப்போல் (பசுமையாக) வெளியேறுவார்கள். நீங்கள் பாறையோரங்களில் அல்லது மரங்களுக்கு அருகில் வளரும் விதைப்பயிரைப் பார்த்திருக்கின்றீர்கள் அல்லவா? அவற்றில் வெயில் படுமிடத்தில் வளர்பவை மஞ்சளாகவும் பச்சையாகவும் இருக்கும். நிழலில் வளர்பவை (வெளிறிப்போய்) வெள்ளை நிறத்தில் இருக்கும் அல்லவா?” என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், “அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் கிராமப் புறங்களில் (கால்நடைகளை) மேய்த்துக் கொண்டிருந்தீர்கள் போலும்” என்றார்கள்.

(தொடர்ந்து) “அவர்கள் (ஜீவநதியிலிருந்து) முத்துகளைப் போன்று (ஒளிர்ந்தவர்களாக) வெளியேறுவார்கள். அவர்களது கழுத்தில் (‘நரக விடுதலை பெற்றோர்’ எனும்) முத்திரை இருக்கும். (அதை வைத்து) அவர்களைச் சொர்க்கவாசிகள் அடையாளம் கண்டுகொள்வார்கள். ‘இவர்கள் அல்லாஹ்வால் (நரகத்திலிருந்து) விடுதலை செய்யப்பட்டவர்கள்; (உலகில்) எந்த நற்செயலும் செய்யாமல், எந்த நன்மையும் செய்து சேர்த்துக் கொள்ளாமல் இருந்த இவர்களை அல்லாஹ்வே (தனது தனிப்பெரும் கருணையால்) சொர்க்கத்துக்கு அனுப்பி வைத்திருக்கிறான்’ என்று பேசிக் கொள்வார்கள்.

பிறகு (அவர்களிடம்) இறைவன், ‘சொர்க்கத்திற்குள் செல்லுங்கள்; அங்கு நீங்கள் காண்பதெல்லாம் உங்களுக்கே உரியன’ என்று கூறுவான். அதற்கு அவர்கள், ‘எங்கள் இறைவா! அகிலத்தாரில் யாருக்கும் வழங்காத(பாக்கியத்)தை எங்களுக்கு வழங்கி விட்டாய்’ என்று (நன்றியுடன்) கூறுவார்கள். அதற்கு இறைவன், ‘உங்களுக்கு இதையும்விடச் சிறந்த வேறொன்று இருக்கிறது” என்று கூறுவான். அதற்கு அவர்கள், ‘எங்கள் இறைவா! இதைவிடச் சிறந்த அந்த ஒன்று எது?’ என்று கேட்பார்கள். அதற்கு, ‘எனது திருப்தி!; இனி ஒருபோதும் உங்கள் மீது நான் கோபம் கொள்ள மாட்டேன்’ என்பான் இறைவன்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஸயீத் அல்-குத்ரீ (ரலி)


நூலாசிரியர் (முஸ்லிம்-ரஹ்) அவர்களது குறிப்பு :

ஷஃபா அத் எனும் பரிந்துரை தொடர்பான இந்த ஹதீஸை ஈஸா பின் ஹம்மாத் (ரஹ்) அவர்களிடம் வாசித்துக் காட்டி, “இந்த ஹதீஸை லைஸ் பின் ஸஅத் (ரஹ்) அவர்களிடமிருந்து நீங்கள் செவியுற்று, எனக்குச் சொன்னதாக நான் அறிவிக்கலாமா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள் “ஆம்(அறிவியுங்கள்)” என்றார்கள்.

நாங்கள், “அல்லாஹ்வின் தூதரே!, நாங்கள் (மறுமையில்) எங்கள் இறைவனைக் காண்போமா?’ என்று கேட்டபோது, “(மேகமூட்டமில்லாத) தெளிவான நண்பகல் நேரத்தில் சூரியனைப் பார்க்க நீங்கள் சிரமப்படுவீர்களா?” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கேட்டார்கள் என்று தொடங்கும் அபூஸயீத் அல்-குத்ரீ (ரலி) அவர்களது ஹதீஸ், லைஸ் பின் ஸஅத் (ரஹ்) வழி அறிவிப்பில் “(உலகில்) எந்த நற்செயலும் செய்யாமல், எந்த நன்மையும் செய்து சேர்த்துக் கொள்ளாமல் இருந்த இவர்களை அல்லாஹ்வே (தனது தனிப்பெரும் கருணையால்) சொர்க்கத்துக்கு அனுப்பி வைத்திருக்கின்றான்’ என்பதை அடுத்து, “நீங்கள் காணக்கூடிய இதுவும் இதைப் போன்று இன்னொரு மடங்கும் உங்களுக்கே உரியது என அவர்களிடம் கூறப்படும்” எனும் வாசகத்தை அதிகப்படியாக அறிவித்துள்ளார்கள். மேலும், “அந்தப் பாலம் முடியை விட மெலிதானது; வாளைவிடக் கூர்மையானது எனும் செய்தி எனக்கு எட்டியது” என்று அபூஸயீத் அல்-குத்ரீ (ரலி) கூறுவதாக அதில் இடம்பெற்றுள்ளது.

“(நரகத்திலிருந்து விடுதலை பெற்று சொர்க்கம் சென்ற) மக்கள், ‘எங்கள் இறைவா! அகிலத்தாரில் யாருக்கும் வழங்காத (பாக்கியத்)தை எங்களுக்கு நீ வழங்கி விட்டாய்’ என்று கூறுவார்கள் எனும் வாசகமும் அதற்குப் பிறகு வருபவையும் லைஸ் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் இடம்பெறவில்லை.

மேலும், “இந்த ஹதீஸைத் உங்களுக்கு லைஸ் பின் ஸஅத் (ரஹ்), காலித் பின் யஸீத் (ரஹ்) அவர்களிடமிருந்தும் காலித் (ரஹ்), ஸயீத் பின் அபீஹிலால் (ரஹ்) அவர்களிடமிருந்தும் ஸயீத் (ரஹ்), ஸைத் பின் அஸ்லம் (ரஹ்) அவர்களிடமிருந்தும் ஸைத் (ரஹ்), அதாஉ பின் யஸார்(ரஹ்) அவர்களிடமிருந்தும் அதாஉ (ரஹ்), அபூஸயீத் அல்-குத்ரீ (ரலி) அவர்களிடமிருந்தும் அபூஸயீத் (ரலி) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்தும் அறிவித்தார்கள். சரிதானா?” என்று நான் ஈஸா பின் ஹம்மாத் அவர்களிடம் கேட்டேன். நான் கூறியதை ஈஸா பின் ஹம்மாத் ஒப்புக் கொண்டார்கள்.


மேற்கண்ட ஹதீஸ், அபூபக்ரு பின் அபீஷைபா (ரஹ்) வழியாக அறிவிக்கப்படும்போது, சற்றே கூடுதல்-குறைவோடு காணப்படுகிறது.