அத்தியாயம்: 1, பாடம்: 56, ஹதீஸ் எண்: 178

حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ إِدْرِيسَ ‏ ‏وَأَبُو مُعَاوِيَةَ ‏ ‏وَوَكِيعٌ ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْمَشِ ‏ ‏عَنْ ‏ ‏إِبْرَاهِيمَ ‏ ‏عَنْ ‏ ‏عَلْقَمَةَ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ ‏ ‏قَالَ :‏ ‏

لَمَّا نَزَلَتْ [‏الَّذِينَ آمَنُوا وَلَمْ ‏ ‏يَلْبِسُوا ‏ ‏إِيمَانَهُمْ ‏ ‏بِظُلْمٍ] ‏شَقَّ ذَلِكَ عَلَى ‏ ‏أَصْحَابِ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَقَالُوا أَيُّنَا لَا يَظْلِمُ نَفْسَهُ فَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لَيْسَ هُوَ كَمَا تَظُنُّونَ إِنَّمَا هُوَ كَمَا قَالَ ‏ ‏لُقْمَانُ ‏ ‏لِابْنِهِ [‏يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ] ‏


حَدَّثَنَا ‏ ‏إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏وَعَلِيُّ بْنُ خَشْرَمٍ ‏ ‏قَالَا أَخْبَرَنَا ‏ ‏عِيسَى وَهُوَ ابْنُ يُونُسَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏مِنْجَابُ بْنُ الْحَارِثِ التَّمِيمِيُّ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ مُسْهِرٍ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏أَبُو كُرَيْبٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ إِدْرِيسَ ‏ ‏كُلُّهُمْ ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْمَشِ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏قَالَ ‏ ‏أَبُو كُرَيْبٍ ‏ ‏قَالَ ‏ ‏ابْنُ إِدْرِيسَ ‏ ‏حَدَّثَنِيهِ ‏ ‏أَوَّلًا ‏ ‏أَبِي ‏ ‏عَنْ ‏ ‏أَبَانَ بْنِ تَغْلِبَ ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْمَشِ ‏ ‏ثُمَّ ‏ ‏سَمِعْتُهُ مِنْهُ

“இறைநம்பிக்கை கொண்டு (பின்னர்) தமது இறைநம்பிக்கையுடன் அநீதியைக் கலந்து விடாதவர்களுக்கு அபயம் உண்டு …” எனும் (6:82) இறைவசனம் அருளப்பட்டபோது, அது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தோழர்களுக்கு சஞ்சலத்தை ஏற்படுத்தியது. “நம்மில் யார்தாம் தமக்குத் தாமே அநீதி இழைக்காதவர்?” என்று கேட்டுக் கொண்டார்கள். (இதை அறிந்து கொண்டு) “நீங்கள் நினைப்பது போலன்று; மாறாக, லுக்மான் அவர்கள் தம் மகனிடம், என் அன்பு மகனே! அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்காதே!. அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பதுதான் மாபெரும் அநீதியாகும் என்று சொன்ன (31:13) அநீதியாகும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) விளக்கம் அளித்தார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)

அத்தியாயம்: 1, பாடம்: 55, ஹதீஸ் எண்: 177

حَدَّثَنَا ‏ ‏إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏وَعَبْدُ بْنُ حُمَيْدٍ ‏ ‏قَالَا أَخْبَرَنَا ‏ ‏عَبْدُ الرَّزَّاقِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏مَعْمَرٌ ‏ ‏عَنْ ‏ ‏الزُّهْرِيِّ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏أَبُو مُعَاوِيَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏هِشَامُ بْنُ عُرْوَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏حَكِيمِ بْنِ حِزَامٍ ‏ ‏قَالَ: ‏

قُلْتُ يَا رَسُولَ اللَّهِ أَشْيَاءَ كُنْتُ أَفْعَلُهَا فِي الْجَاهِلِيَّةِ ‏ ‏قَالَ ‏ ‏هِشَامٌ ‏ ‏يَعْنِي ‏ ‏أَتَبَرَّرُ ‏ ‏بِهَا ‏ ‏فَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَسْلَمْتَ عَلَى مَا ‏ ‏أَسْلَفْتَ ‏ ‏لَكَ مِنْ الْخَيْرِ قُلْتُ فَوَاللَّهِ لَا أَدَعُ شَيْئًا صَنَعْتُهُ فِي الْجَاهِلِيَّةِ إِلَّا فَعَلْتُ فِي الْإِسْلَامِ مِثْلَهُ ‏


حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ نُمَيْرٍ ‏ ‏عَنْ ‏ ‏هِشَامِ بْنِ عُرْوَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏أَنَّ ‏ ‏حَكِيمَ بْنَ حِزَامٍ ‏ ‏أَعْتَقَ فِي الْجَاهِلِيَّةِ مِائَةَ رَقَبَةٍ وَحَمَلَ عَلَى مِائَةِ بَعِيرٍ ثُمَّ أَعْتَقَ فِي الْإِسْلَامِ مِائَةَ رَقَبَةٍ وَحَمَلَ عَلَى مِائَةِ بَعِيرٍ ثُمَّ أَتَى النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَذَكَرَ نَحْوَ حَدِيثِهِمْ ‏

“அல்லாஹ்வின் தூதரே! நான் அறியாமைக் காலத்தில் நன்மையை நாடி, பல நற்பணிகள் ஆற்றி வந்தேன். (அவற்றுக்கு மறுமையில் எனக்கு நற்கூலி உண்டா?)” என்று கேட்டேன். அதற்கு, “நீங்கள் முன்னர் செய்த நற்செயல்களுடன்தான் இஸ்லாத்தை ஏற்று இருக்கின்றீர்கள் (அவற்றுக்கு நற்கூலி உண்டு)” என்று பதிலளித்தார்கள். அப்போது நான் “அல்லாஹ்வின் மீதாணையாக! அறியாமைக் காலத்தில் செய்து வந்த நற்செயல் எதையும் இஸ்லாத்தி(ல் வந்த பிறகி)லும் செய்யாமல் விடமாட்டேன்” என்று கூறினேன்.

அறிவிப்பாளர்: ஹகீம் பின் ஹிஸாம் (ரலி)


குறிப்பு:

“ஹகீம் பின் ஹிஸாம் (ரலி) அறியாமைக் காலத்தில் நூறு அடிமைகளை விடுதலை செய்திருந்தார்கள்; நூறு ஒட்டங்களைத் தர்மம் செய்திருந்தார்கள். இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட பின்னரும் நூறு அடிமைகளை விடுதலை செய்தார்கள்; நூறு ஒட்டகங்களைத் தர்மம் செய்தார்கள்” என்று அறிவிப்பாளர் உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) குறிப்பிடுகின்றார்.

அத்தியாயம்: 1, பாடம்: 55, ஹதீஸ் எண்: 176

و حَدَّثَنَا ‏ ‏حَسَنٌ الْحُلْوَانِيُّ ‏ ‏وَعَبْدُ بْنُ حُمَيْدٍ ‏ ‏قَالَ ‏ ‏الْحُلْوَانِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏وَقَالَ ‏ ‏عَبْدٌ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏يَعْقُوبُ وَهُوَ ابْنُ إِبْرَاهِيمَ بْنِ سَعْدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏عَنْ ‏ ‏صَالِحٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏قَالَ أَخْبَرَنِي ‏ ‏عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ ‏ ‏أَنَّ ‏ ‏حَكِيمَ بْنَ حِزَامٍ ‏ ‏أَخْبَرَهُ: ‏

أَنَّهُ قَالَ لِرَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَيْ رَسُولَ اللَّهِ أَرَأَيْتَ أُمُورًا كُنْتُ ‏ ‏أَتَحَنَّثُ ‏ ‏بِهَا فِي الْجَاهِلِيَّةِ مِنْ صَدَقَةٍ أَوْ ‏ ‏عَتَاقَةٍ ‏ ‏أَوْ صِلَةِ رَحِمٍ أَفِيهَا أَجْرٌ فَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَسْلَمْتَ عَلَى مَا ‏ ‏أَسْلَفْتَ ‏ ‏مِنْ خَيْرٍ ‏

“அல்லாஹ்வின் தூதரே! நான் அறியாமைக் காலத்தில் தர்மம், அடிமை விடுதலை, உறவைப் பேணுதல் ஆகிய நல்லறங்களைப் புரிந்துள்ளேன். அவற்றுக்கு (மறுமையில்) நற்கூலி உண்டா?, கூறுங்கள்” என்று நான் கேட்டேன். அதற்கு, “நீங்கள் முன்னர் செய்த நற்செயல்களுடன்தான் இஸ்லாத்தை ஏற்று இருக்கின்றீர்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) எனக்கு பதிலளித்தார்கள்.

அறிவிப்பாளர் : ஹகீம் பின் ஹிஸாம் (ரலி) வழியாக உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்)

அத்தியாயம்: 1, பாடம்: 155, ஹதீஸ் எண்: 175

حَدَّثَنِي ‏ ‏حَرْمَلَةُ بْنُ يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏قَالَ أَخْبَرَنِي ‏ ‏يُونُسُ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏قَالَ أَخْبَرَنِي ‏ ‏عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ ‏ ‏أَنَّ ‏ ‏حَكِيمَ بْنَ حِزَامٍ ‏ ‏أَخْبَرَهُ: ‏

أَنَّهُ قَالَ لِرَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَرَأَيْتَ أُمُورًا كُنْتُ ‏ ‏أَتَحَنَّثُ ‏ ‏بِهَا فِي الْجَاهِلِيَّةِ هَلْ لِي فِيهَا مِنْ شَيْءٍ فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَسْلَمْتَ عَلَى مَا ‏ ‏أَسْلَفْتَ ‏ ‏مِنْ خَيْرٍ ‏ ‏وَالتَّحَنُّثُ التَّعَبُّدُ ‏

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், “(இஸ்லாத்தை ஏற்பதற்கு முன்பு) அறியாமைக் காலத்தில் நான் செய்து வந்த நல்லறங்களைப் பற்றி உங்கள் கருத்தென்ன? அவற்றுக்கு எனக்கு (நற்கூலி) ஏதும் உண்டா?” என்று கேட்டேன். அதற்கு, “நீங்கள் முன்னர் செய்த நற்செயல்களுடன்தான் இஸ்லாத்தை ஏற்று இருக்கின்றீர்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) எனக்கு பதிலளித்தார்கள்.

அறிவிப்பாளர் : ஹகீம் பின் ஹிஸாம் (ரலி) வழியாக உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்)

அத்தியாயம்: 1, பாடம்: 54, ஹதீஸ் எண்: 174

حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ حَاتِمِ بْنِ مَيْمُونٍ ‏ ‏وَإِبْرَاهِيمُ بْنُ دِينَارٍ ‏ ‏وَاللَّفْظُ ‏ ‏لِإِبْرَاهِيمَ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏حَجَّاجٌ وَهُوَ ابْنُ مُحَمَّدٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ جُرَيْجٍ ‏ ‏قَالَ أَخْبَرَنِي ‏ ‏يَعْلَى بْنُ مُسْلِمٍ ‏ ‏أَنَّهُ سَمِعَ ‏ ‏سَعِيدَ بْنَ جُبَيْرٍ ‏ ‏يُحَدِّثُ عَنْ ‏ ‏ابْنِ عَبَّاسٍ : ‏

أَنَّ نَاسًا مِنْ أَهْلِ الشِّرْكِ قَتَلُوا فَأَكْثَرُوا وَزَنَوْا فَأَكْثَرُوا ثُمَّ أَتَوْا ‏ ‏مُحَمَّدًا ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقَالُوا إِنَّ الَّذِي تَقُولُ وَتَدْعُو لَحَسَنٌ وَلَوْ تُخْبِرُنَا أَنَّ لِمَا عَمِلْنَا كَفَّارَةً فَنَزَلَ ‏[‏وَالَّذِينَ لَا يَدْعُونَ مَعَ اللَّهِ إِلَهًا آخَرَ وَلَا يَقْتُلُونَ النَّفْسَ الَّتِي حَرَّمَ اللَّهُ إِلَّا بِالْحَقِّ وَلَا يَزْنُونَ وَمَنْ يَفْعَلْ ذَلِكَ يَلْقَ ‏ ‏أَثَامًا] ‏‏وَنَزَلَ [‏ ‏يَا ‏ ‏عِبَادِيَ الَّذِينَ أَسْرَفُوا عَلَى أَنْفُسِهِمْ لَا ‏ ‏تَقْنَطُوا ‏ ‏مِنْ رَحْمَةِ اللَّهِ] ‏

அதிகமான (அநியாயக்) கொலைகளைச் செய்திருந்த, அதிகமான விபச்சாரத்தில் ஈடுபட்டிருந்த இணைவைப்பவர்களில் சிலர், முஹம்மது (ஸல்) அவர்களிடம் வந்து, “நீங்கள் கூறும் கூற்றும் அழைக்கும் வழியும் அழகானவையே (என்று புரிந்து கொண்டோம்). நாங்கள் (இதுவரை) செய்துவிட்ட (தீய) செயல்களுக்குப் பரிகாரம் கூறுங்கள்” என்று வேண்டிக் கொண்டபோது, “அன்றியும் (ரஹ்மானின் உண்மையான அடியார்களான) அவர்கள் அல்லாஹ்வைத் தவிர வேறெந்தக் கடவுளையும் (பிரார்தனைக்கு) அழைக்கமாட்டார்கள்; எந்த மனிதரையும் அநியாயமாகக் கொலை செய்யமாட்டார்கள்; விபச்சாரம் புரியமாட்டார்கள். (இறைவன் விதித்த இந்த வரம்புகளை) மீறிச் செயல்படுபவர்கள் தண்டனைக்குள்ளாவார்கள்” எனும் (25:68) வசனம் அருளப்பட்டது. மேலும், ” … வரம்பு மீறி தமக்குத் தாமே அநீதி இழைத்துக் கொண்ட என் அடியார்களே! அல்லாஹ்வின் அருளின்மீது நம்பிக்கை இழந்து விடாதீர்கள் … ” எனும் (39:53) வசனமும் அருளப்பட்டது.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ்(ரலி)

அத்தியாயம்: 1, பாடம்: 54, ஹதீஸ் எண்: 173

حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى الْعَنَزِيُّ ‏ ‏وَأَبُو مَعْنٍ الرَّقَاشِيُّ ‏ ‏وَإِسْحَقُ بْنُ مَنْصُورٍ ‏ ‏كُلُّهُمْ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي عَاصِمٍ ‏ ‏وَاللَّفْظُ ‏ ‏لِابْنِ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏الضَّحَّاكُ يَعْنِي أَبَا عَاصِمٍ ‏ ‏قَالَ أَخْبَرَنَا ‏ ‏حَيْوَةُ بْنُ شُرَيْحٍ ‏ ‏قَالَ حَدَّثَنِي ‏ ‏يَزِيدُ بْنُ أَبِي حَبِيبٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِمَاسَةَ الْمَهْرِيِّ ‏ ‏قَالَ : ‏

حَضَرْنَا ‏ ‏عَمْرَو بْنَ الْعَاصِ ‏ ‏وَهُوَ ‏ ‏فِي سِيَاقَةِ ‏ ‏الْمَوْتِ فَبَكَى طَوِيلًا وَحَوَّلَ وَجْهَهُ إِلَى الْجِدَارِ فَجَعَلَ ابْنُهُ يَقُولُ يَا أَبَتَاهُ أَمَا بَشَّرَكَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بِكَذَا أَمَا بَشَّرَكَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بِكَذَا قَالَ فَأَقْبَلَ بِوَجْهِهِ فَقَالَ إِنَّ أَفْضَلَ مَا نُعِدُّ شَهَادَةُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَأَنَّ ‏ ‏مُحَمَّدًا رَسُولُ اللَّهِ ‏ ‏إِنِّي كُنْتُ عَلَى أَطْبَاقٍ ثَلَاثٍ لَقَدْ رَأَيْتُنِي وَمَا أَحَدٌ أَشَدَّ بُغْضًا لِرَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مِنِّي وَلَا أَحَبَّ إِلَيَّ أَنْ أَكُونَ قَدْ اسْتَمْكَنْتُ مِنْهُ فَقَتَلْتُهُ فَلَوْ مُتُّ عَلَى تِلْكَ الْحَالِ لَكُنْتُ مِنْ أَهْلِ النَّارِ فَلَمَّا جَعَلَ اللَّهُ الْإِسْلَامَ فِي قَلْبِي أَتَيْتُ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقُلْتُ ابْسُطْ يَمِينَكَ فَلْأُبَايِعْكَ فَبَسَطَ يَمِينَهُ قَالَ فَقَبَضْتُ يَدِي قَالَ مَا لَكَ يَا ‏ ‏عَمْرُو ‏ ‏قَالَ قُلْتُ أَرَدْتُ أَنْ أَشْتَرِطَ قَالَ تَشْتَرِطُ بِمَاذَا قُلْتُ أَنْ يُغْفَرَ لِي قَالَ ‏ ‏أَمَا عَلِمْتَ أَنَّ الْإِسْلَامَ يَهْدِمُ مَا كَانَ قَبْلَهُ وَأَنَّ الْهِجْرَةَ تَهْدِمُ مَا كَانَ قَبْلِهَا وَأَنَّ الْحَجَّ يَهْدِمُ مَا كَانَ قَبْلَهُ وَمَا كَانَ أَحَدٌ أَحَبَّ إِلَيَّ مِنْ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَلَا أَجَلَّ فِي عَيْنِي مِنْهُ وَمَا كُنْتُ أُطِيقُ أَنْ أَمْلَأَ عَيْنَيَّ مِنْهُ إِجْلَالًا لَهُ وَلَوْ سُئِلْتُ أَنْ أَصِفَهُ مَا أَطَقْتُ لِأَنِّي لَمْ أَكُنْ أَمْلَأُ عَيْنَيَّ مِنْهُ وَلَوْ مُتُّ عَلَى تِلْكَ الْحَالِ لَرَجَوْتُ أَنْ أَكُونَ مِنْ أَهْلِ الْجَنَّةِ ثُمَّ وَلِينَا أَشْيَاءَ مَا أَدْرِي مَا حَالِي فِيهَا فَإِذَا أَنَا مُتُّ فَلَا تَصْحَبْنِي نَائِحَةٌ وَلَا نَارٌ فَإِذَا دَفَنْتُمُونِي ‏ ‏فَشُنُّوا ‏ ‏عَلَيَّ التُّرَابَ شَنًّا ثُمَّ أَقِيمُوا حَوْلَ قَبْرِي قَدْرَ مَا تُنْحَرُ ‏ ‏جَزُورٌ ‏ ‏وَيُقْسَمُ لَحْمُهَا حَتَّى أَسْتَأْنِسَ بِكُمْ وَأَنْظُرَ مَاذَا أُرَاجِعُ بِهِ رُسُلَ رَبِّي ‏

அம்ரிப்னில் ஆஸ் (ரலி) அவர்களது மரணத் தருவாயில் நாங்கள் அவரிடம் சென்றோம். நெடுநேரம் அழுத பின்னர் அவர்கள் சுவரை நோக்கித் தமது முகத்தைத் திருப்பிக் கொண்டார்கள். அப்போது, “அருமைத் தந்தையே! உங்களுக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) இன்னின்ன நற்செய்திகளைக் கூறியிருக்கிறார்களே! (ஏன் அழுகை)?” என்று அவரின் மகன் கேட்டார். அம்ரிப்னில் ஆஸ் (ரலி) தமது முகத்தை(த்தம் மகனை நோக்கி)த் திருப்பி, “நமது சேமிப்புகளுள் மிகச் சிறந்தது வணக்கத்துக்கு உரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறில்லை என்றும் முஹம்மது (ஸல்)  அல்லாஹ்வின் தூதர் ஆவார்கள் என்றும் உறுதி கூறியதுதான். நான் (என் வாழ்நாளில்) மூன்று கட்டங்களைக் கடந்து வந்திருக்கின்றேன்.

(முதலாவது கட்டத்தில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) மீது கடுமையான வெறுப்புக் கொண்டவர் என்னைவிட வேறெவரும் இருந்ததில்லை. முடியுமெனில் அவர்களைக் கொன்றுவிடுவது எனக்கு மிக்க விருப்பமானதாக இருந்தது. அந்தக் காலகட்டத்தில் மட்டும் நான் இறந்துவிட்டிருந்தால் நரகவாசிகளில் ஒருவனாக ஆகியிருப்பேன்.

(இரண்டாவது கட்டத்தில்) அல்லாஹ் என் உள்ளத்தில் இஸ்லாத்தை(ப் பற்றிய சிந்தனையை) ஏற்படுத்தியபோது நான் நபி(ஸல்) அவர்களிடம் சென்று, உங்கள் வலக்கரத்தை நீட்டுங்கள்; நான் உங்களிடம் உறுதிப் பிரமாணம் (பைஅத்) அளிக்கிறேன் என்று கூறினேன். நபி (ஸல்) தமது வலது கரத்தை நீட்டினார்கள். ஆனால், நான் என் கையை இழுத்துக் கொண்டேன். நபி (ஸல்), அம்ரே! உமக்கு என்ன ஆயிற்று? என்று கேட்டார்கள். நான் சில நிபந்தனைகளை விதிக்க விரும்புகின்றேன் என்று கூறினேன். நபி (ஸல்), எதில் நிபந்தனைகளை விதிக்கப்போகிறீர்? என்று கேட்டார்கள். எனது பாவங்கள் மன்னிக்கப்பட வேண்டும் என்று கூறினேன். அப்போது நபி (ஸல்), முந்தைய பாவங்களை இஸ்லாம் அழித்துவிடும்; (இஸ்லாத்துக்காக நாடுதுறக்கும் தியாகமான) ஹிஜ்ரத்தும் முந்தைய பாவங்களை அழித்து விடும்; (இஸ்லாமியக் கடமையான) ஹஜ்ஜும் முந்தைய பாவங்களை அழித்து விடும் என்று உமக்குத் தெரியாதா? என்று கேட்டார்கள். (பிறகு நான் இஸ்லாத்தைத் தழுவினேன்.) அவ்வேளை, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைவிட நான் விரும்பும் வேறெவரும் எனக்கு இருக்கவில்லை; எனது பார்வைக்கு அவர்களைவிட கண்ணியமானவர் வேறெவரும் இருக்கவில்லை. அப்போது அவர்கள்மீது நான் வைத்திருந்த மரியாதையினால் எனது கண்களால் அவர்களை ஏறெடுத்து முழுமையாகப் பார்க்கக்கூட என்னால் முடியவில்லை. அவர்களை வர்ணித்துக் கூறும்படி நான் கேட்டுக்கொள்ளப்பட்டால் என்னால் இயலாமலாகிவிடும். ஏனெனில், அவர்கள் மீது வைத்திருந்த மரியாதையின் காரணத்தால் நான் அவர்களை ஏறெடுத்து முழுமையாகப் பார்த்திருக்கவில்லை. அந்த நிலையில் நான் இறந்திருந்தால் சொர்க்கவாசிகளில் ஒருவனாக ஆகியிருப்பேன்.

பிறகு (மூன்றாவது கட்டத்தில்) பல்வேறு பொறுப்புகளை நாம் வகித்தோம். அவற்றில் எனது நிலை என்ன என்பது எனக்குத் தெரியாது. எனவே, நான் இறந்து விட்டால் ஒப்பாரி வைப்பவரோ நெருப்போ என்னை நெருங்கக் கூடாது. என்னை (குழிக்குள் வைத்து) நீங்கள் அடக்கம் செய்யும் போது என் மீது மண்ணைத் தள்ளுங்கள். பிறகு ஓர் ஒட்டகத்தை அறுத்து அதன் இறைச்சியைப் பங்கிடும் நேரமளவுக்கு நீங்கள் என் மண்ணறையைச் சுற்றி நில்லுங்கள். உங்களால் நான் ஆசுவாசமடைவேன்; என் இறைவனின் தூதர்க(ளான வானவர்)களிடம் நான் என்ன பதிலளிப்பது என்பதையும் கண்டு கொள்வேன்” என்று அம்ரிப்னில் ஆஸ் (ரலி) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அப்துர் ரஹ்மான் பின் ஷிமாஸா அல் மஹ்ரீ (ரலி)

அத்தியாயம்: 1, பாடம்: 53, ஹதீஸ் எண்: 172

حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏وَوَكِيعٌ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَاللَّفْظُ لَهُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏وَكِيعٌ ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْمَشِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي وَائِلٍ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ ‏ ‏قَالَ : ‏

قُلْنَا يَا رَسُولَ اللَّهِ أَنُؤَاخَذُ بِمَا عَمِلْنَا فِي الْجَاهِلِيَّةِ قَالَ ‏ ‏مَنْ أَحْسَنَ فِي الْإِسْلَامِ لَمْ يُؤَاخَذْ بِمَا عَمِلَ فِي الْجَاهِلِيَّةِ وَمَنْ أَسَاءَ فِي الْإِسْلَامِ أُخِذَ بِالْأَوَّلِ وَالْآخِرِ ‏


حَدَّثَنَا ‏ ‏مِنْجَابُ بْنُ الْحَارِثِ التَّمِيمِيُّ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏عَلِيُّ بْنُ مُسْهِرٍ ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْمَشِ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏مِثْلَهُ ‏

“அல்லாஹ்வின் தூதரே! அறியாமைக் காலத்தில் செய்த (தீய) செயல்களுக்காக நாங்கள் (மறுமையில்) தண்டிக்கப்படுவோமா?” என்று கேட்டோம். அதற்கு, “இஸ்லாத்தில் (நுழைந்து தொடர்ந்து) நற்செயல்கள் செய்து வருபவர் அறியாமைக் காலத்தில் செய்த (தீய) செயல்களுக்காகத் தண்டிக்கப்பட மாட்டார். இஸ்லாத்தில் (நுழைந்த பிறகும் ‘இறைமறுப்பு’ எனும்) தீமை செய்பவர், (இஸ்லாத்தைத் தழுவுவதற்கு) முன் செய்த தவறுகளுக்காகவும் (இஸ்லாத்தை ஏற்ற) பின் செய்த தவறுகளுக்காகவும் தண்டிக்கப்படுவார்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)

அத்தியாயம்: 1, பாடம்: 53, ஹதீஸ் எண்: 171

: حَدَّثَنَا ‌عُثْمَانُ ‌بْنُ ‌أَبِي ‌شَيْبَةَ ، ‌حَدَّثَنَا ‌جَرِيرٌ ، ‌عَنْ ‌مَنْصُورٍ ، ‌عَنْ ‌أَبِي ‌وَائِلٍ ، عَنْ عَبْدِ اللهِ قَالَ

 قَالَ أُنَاسٌ لِرَسُولِ اللهِ صلى الله عليه وسلم: يَا رَسُولَ اللهِ، أَنُؤَاخَذُ بِمَا عَمِلْنَا فِي الْجَاهِلِيَّةِ؟ قَالَ: أَمَّا مَنْ أَحْسَنَ مِنْكُمْ فِي الْإِسْلَامِ فَلَا يُؤَاخَذُ بِهَا، وَمَنْ أَسَاءَ أُخِذَ بِعَمَلِهِ فِي الْجَاهِلِيَّةِ وَالْإِسْلَامِ

“அல்லாஹ்வின் தூதரே! அறியாமைக் காலத்தில் செய்த (தீய) செயல்களுக்காக நாங்கள் தண்டிக்கப் படுவோமா?” என்று சிலர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்டார்கள். அதற்கு, “இஸ்லாத்தில் (இணைந்தபின்) நற்செயல்கள் செய்து வருபவர், அறியாமைக் காலத்தில் செய்த தவறுகளுக்காகத் தண்டிக்கப்பட மாட்டார். (ஆனால், இஸ்லாத்தில் நுழைந்த பிறகும் ‘இறைமறுப்பு’ எனும்) தீமை செய்பவர் அறியாமைக் காலத்தில் செய்த தவறுகளுக்காகவும் இஸ்லாத்தில் (நுழைந்த பிறகு) செய்த தவறுகளுக்காகவும் (மறுமையில்) தண்டிக்கப்படுவார்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)

அத்தியாயம்: 1, பாடம்: 52, ஹதீஸ் எண்: 170

حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏الْحَسَنُ بْنُ مُوسَى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حَمَّادُ بْنُ سَلَمَةَ ‏ ‏عَنْ ‏ ‏ثَابِتٍ الْبُنَانِيِّ ‏ ‏عَنْ ‏ ‏أَنَسِ بْنِ مَالِكٍ ‏ ‏أَنَّهُ قَالَ ‏:‏

‏لَمَّا نَزَلَتْ هَذِهِ الْآيَةُ ‏[يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَرْفَعُوا أَصْوَاتَكُمْ فَوْقَ صَوْتِ النَّبِيِّ]  ‏إِلَى آخِرِ الْآيَةِ جَلَسَ ‏ ‏ثَابِتُ بْنُ قَيْسٍ ‏ ‏فِي بَيْتِهِ وَقَالَ أَنَا مِنْ أَهْلِ النَّارِ وَاحْتَبَسَ عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَسَأَلَ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏سَعْدَ بْنَ مُعَاذٍ ‏ ‏فَقَالَ يَا ‏ ‏أَبَا عَمْرٍو ‏ ‏مَا شَأْنُ ‏ ‏ثَابِتٍ ‏ ‏اشْتَكَى ‏ ‏قَالَ ‏ ‏سَعْدٌ ‏ ‏إِنَّهُ لَجَارِي وَمَا عَلِمْتُ لَهُ بِشَكْوَى قَالَ فَأَتَاهُ ‏ ‏سَعْدٌ ‏ ‏فَذَكَرَ لَهُ قَوْلَ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقَالَ ‏ ‏ثَابِتٌ ‏ ‏أُنْزِلَتْ هَذِهِ الْآيَةُ وَلَقَدْ عَلِمْتُمْ أَنِّي مِنْ أَرْفَعِكُمْ صَوْتًا عَلَى رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَأَنَا مِنْ أَهْلِ النَّارِ فَذَكَرَ ذَلِكَ ‏ ‏سَعْدٌ ‏ ‏لِلنَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بَلْ هُوَ مِنْ أَهْلِ الْجَنَّةِ ‏


و حَدَّثَنَا ‏ ‏قَطَنُ بْنُ نُسَيْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏جَعْفَرُ بْنُ سُلَيْمَانَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ثَابِتٌ ‏ ‏عَنْ ‏ ‏أَنَسِ بْنِ مَالِكٍ ‏ ‏قَالَ ‏ ‏كَانَ ‏ ‏ثَابِتُ بْنُ قَيْسِ بْنِ شَمَّاسٍ ‏ ‏خَطِيبَ ‏ ‏الْأَنْصَارِ ‏ ‏فَلَمَّا نَزَلَتْ هَذِهِ الْآيَةُ بِنَحْوِ حَدِيثِ ‏ ‏حَمَّادٍ ‏ ‏وَلَيْسَ فِي حَدِيثِهِ ذِكْرُ ‏ ‏سَعْدِ بْنِ مُعَاذٍ ‏ ‏و حَدَّثَنِيهِ ‏ ‏أَحْمَدُ بْنُ سَعِيدِ بْنِ صَخْرٍ الدَّارِمِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حَبَّانُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُلَيْمَانُ بْنُ الْمُغِيرَةِ ‏ ‏عَنْ ‏ ‏ثَابِتٍ ‏ ‏عَنْ ‏ ‏أَنَسٍ ‏ ‏قَالَ ‏ ‏لَمَّا نَزَلَتْ ‏‏[لَا تَرْفَعُوا أَصْوَاتَكُمْ فَوْقَ صَوْتِ النَّبِيِّ] ‏‏وَلَمْ يَذْكُرْ ‏ ‏سَعْدَ بْنَ مُعَاذٍ ‏ ‏فِي الْحَدِيثِ ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏هُرَيْمُ بْنُ عَبْدِ الْأَعْلَى الْأَسَدِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏الْمُعْتَمِرُ بْنُ سُلَيْمَانَ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏أَبِي ‏ ‏يَذْكُرُ عَنْ ‏ ‏ثَابِتٍ ‏ ‏عَنْ ‏ ‏أَنَسٍ ‏ ‏قَالَ ‏ ‏لَمَّا نَزَلَتْ هَذِهِ الْآيَةُ وَاقْتَصَّ الْحَدِيثَ وَلَمْ يَذْكُرْ ‏ ‏سَعْدَ بْنَ مُعَاذٍ ‏ ‏وَزَادَ فَكُنَّا ‏ ‏نَرَاهُ يَمْشِي بَيْنَ أَظْهُرِنَا رَجُلٌ مِنْ أَهْلِ الْجَنَّةِ

“இறைநம்பிக்கையாளர்களே! உங்கள் குரல்களை நபியின் குரலுக்கு மேல் உயர்த்தாதீர்கள்” எனும் இந்த (49 : 2ஆவது) வசனம் அருளப்பெற்றபின் ஸாபித் பின் கைஸ் (ரலி), “நான் நரகவாசிகளில் ஒருவன்” என்று கூறிக்கொண்டு, நபி(ஸல்) அவர்களின் முன்வராமல் (வீட்டிலேயே) அடைந்து கிடந்தார்கள். எனவே, நபி (ஸல்), (ஸாபித் குறித்து) ஸஅத் பின் முஆத் (ரலி) அவர்களிடம் “அபூ அம்ரே! ஸாபித்துக்கு என்ன ஆயிற்று? அவருக்கு உடல் நலமில்லையா?” என்று கேட்டார்கள் அதற்கு ஸஅத் (ரலி, “அவர் என் பக்கத்து வீட்டுகாரர்தாம். அவருக்கு எந்த நோயுமிருப்பதாக எனக்குத் தெரியவில்லை” என்று கூறினார்கள். பிறகு ஸஅத் (ரலி), ஸாபித் (ரலி) அவர்களிடம் சென்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கேட்டதைப் பற்றிச் சொன்னார்கள்.

அப்போது ஸாபித் (ரலி), “இந்த (49 :2 ஆவது) வசனம் அருளப்பெற்றுள்ளது. உங்களில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு முன் குரலை உயர்த்திப் பேசுபவன் நான் என்பதை நீங்கள் அறிந்தே உள்ளீர்கள். ஆகவே நான் நரகவாசிகளில் ஒருவன்தான்” என்று கூறினார்கள். இதை ஸஅத் (ரலி), நபி (ஸல்) அவர்களிடம் (சென்று) சொன்னார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “இல்லை. அவர் சொர்க்கவாசிகளில் ஒருவர் ஆவார்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் பின் மாலிக் (ரலி)


குறிப்பு:

இதே ஹதீஸ் ஜஅஃபர் பின் ஸுலைமான் (ரஹ்) வழி அறிவிப்பில், “ஸாபித் பின் கைஸ் பின் ஷம்மாஸ் (ரலி) அன்ஸாரீகளின் பேச்சாளராக இருந்தார்” என்ற கூடுதல் தகவல் இடம் பெற்றுள்ளது. ஆனால், அதில் ஸஅத் பின் முஆத் (ரலி) அவர்களைப் பற்றியக் குறிப்பேதுமில்லை.

ஸுலைமான் பின் அல்-முகைரா (ரஹ்) வழி அறிவிப்பு, “உங்கள் குரல்களை நபியின் குரலைவிட உயர்த்தாதீர்கள் எனும் (49:2 ஆவது) இறைவசனம் அருளப்பெற்றபோது…” என்று தொடங்குகிறது. அந்த ஹதீஸிலும் ஸஅத் பின் முஆத்(ரலி) அவர்களைப் பற்றியப் குறிப்பில்லை.

முஃதமிர் பின் ஸுலைமான் (ரஹ்) வழி அறிவிப்பிலும் ஸஅத் பின் முஆத் (ரலி) அவர்களைப் பற்றிய குறிப்பு இடம் பெறவில்லை. ஆனால், “எங்களிடையே நடமாடிய ஒரு சொர்க்கவாசியாகவே நாங்கள் ஸாபித் (ரலி) அவர்களைக் கருதி வந்தோம்” என்று அனஸ் (ரலி) கூறினார்கள் எனக் கூடுதலாக இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 1, பாடம்: 51, ஹதீஸ் எண்: 169

حَدَّثَنِي ‏ ‏يَحْيَى بْنُ أَيُّوبَ ‏ ‏وَقُتَيْبَةُ ‏ ‏وَابْنُ حُجْرٍ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏إِسْمَعِيلَ بْنِ جَعْفَرٍ ‏ ‏قَالَ ‏ ‏ابْنُ أَيُّوبَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏إِسْمَعِيلُ ‏ ‏قَالَ أَخْبَرَنِي ‏ ‏الْعَلَاءُ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏:‏

‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏بَادِرُوا بِالْأَعْمَالِ فِتَنًا كَقِطَعِ اللَّيْلِ الْمُظْلِمِ يُصْبِحُ الرَّجُلُ مُؤْمِنًا ‏ ‏وَيُمْسِي كَافِرًا أَوْ يُمْسِي مُؤْمِنًا وَيُصْبِحُ كَافِرًا يَبِيعُ دِينَهُ ‏ ‏بِعَرَضٍ ‏ ‏مِنْ الدُّنْيَا

“காரிருள் சூழ்ந்த இரவின் பகுதிகளைப் போன்ற குழப்பங்கள் தோன்றுவதற்கு முன் விரைந்து (நற்)செயல்கள் புரிந்துகொள்ளுங்கள். (அப்போது) காலையில் இறை நம்பிக்கையாளனாக இருக்கும் மனிதன் மாலையில் இறைமறுப்பாளானாக மாறிவிடுவான்.

மாலையில் இறைநம்பிக்கையாளனாக இருக்கும் ஒருவன் காலையில் இறைமறுப்பாளனாக மாறிவிடுவான். இவ்வுலகின் அற்ப சுகங்களுக்காகத் தனது மார்க்கத்தையே அவன் விற்று விடுவான்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா(ரலி)