அத்தியாயம்: 6, பாடம்: 40, ஹதீஸ் எண்: 1338

حَدَّثَنَا ‏ ‏إِسْحَقُ بْنُ مَنْصُورٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏يَزِيدُ بْنُ عَبْدِ رَبِّهِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ ‏ ‏عَنْ ‏ ‏مُحَمَّدِ بْنِ مُهَاجِرٍ ‏ ‏عَنْ ‏ ‏الْوَلِيدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ الْجُرَشِيِّ ‏ ‏عَنْ ‏ ‏جُبَيْرِ بْنِ نُفَيْرٍ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏النَّوَّاسَ بْنَ سَمْعَانَ الْكِلَابِيَّ ‏ ‏يَقُولُ :‏‏

‏سَمِعْتُ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَقُولُ ‏ ‏يُؤْتَى بِالْقُرْآنِ يَوْمَ الْقِيَامَةِ وَأَهْلِهِ الَّذِينَ كَانُوا يَعْمَلُونَ بِهِ تَقْدُمُهُ سُورَةُ ‏ ‏الْبَقَرَةِ ‏ ‏وَآلُ ‏ ‏عِمْرَانَ ‏ ‏وَضَرَبَ لَهُمَا رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏ثَلَاثَةَ أَمْثَالٍ مَا نَسِيتُهُنَّ بَعْدُ قَالَ كَأَنَّهُمَا غَمَامَتَانِ أَوْ ‏ ‏ظُلَّتَانِ ‏ ‏سَوْدَاوَانِ بَيْنَهُمَا ‏ ‏شَرْقٌ ‏ ‏أَوْ كَأَنَّهُمَا ‏ ‏حِزْقَانِ ‏ ‏مِنْ ‏ ‏طَيْرٍ صَوَافَّ ‏ ‏تُحَاجَّانِ ‏ ‏عَنْ صَاحِبِهِمَا

“மறுமை நாளில் குர்ஆனும் அதன்படி செயலாற்றியவர்களும் அழைத்து வரப்படுவர். அப்போது அல்பகரா அத்தியாயமும் ஆலு இம்ரான் அத்தியாயமும் முன்னே வரும்” என்று நபி (ஸல்) கூறிவிட்டு, அதற்கான மூன்று உவமைகளை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள். அவற்றை நான் இதுவரை மறந்திடவில்லை. “அவ்விரு அத்தியாயங்களும் (நிழல் தரும்) மேகங்களைப் போன்று, அல்லது நடுவே ஒளியுள்ள இரு கரும் நிழல்களைப் போன்று, அல்லது அணி அணியாகப் பறக்கும் இரு பறவைக் கூட்டங்களைப் போன்று வந்து தம்முடைய தோழர்களுக்காக (இறைவனிடம்) வாதாடும்” என்று நபி (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : நவ்வாஸ் பின் ஸம்ஆன் அல் கிலாபீ (ரலி)

அத்தியாயம்: 6, பாடம்: 40, ஹதீஸ் எண்: 1337

حَدَّثَنِي ‏ ‏الْحَسَنُ بْنُ عَلِيٍّ الْحُلْوَانِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو تَوْبَةَ وَهُوَ الرَّبِيعُ بْنُ نَافِعٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُعَاوِيَةُ يَعْنِي ابْنَ سَلَّامٍ ‏ ‏عَنْ ‏ ‏زَيْدٍ ‏ ‏أَنَّهُ سَمِعَ ‏ ‏أَبَا سَلَّامٍ ‏ ‏يَقُولُ حَدَّثَنِي ‏ ‏أَبُو أُمَامَةَ الْبَاهِلِيُّ ‏ ‏قَالَ ‏:‏

‏سَمِعْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَقُولُ ‏ ‏اقْرَءُوا الْقُرْآنَ فَإِنَّهُ يَأْتِي يَوْمَ الْقِيَامَةِ شَفِيعًا لِأَصْحَابِهِ اقْرَءُوا الزَّهْرَاوَيْنِ ‏ ‏الْبَقَرَةَ ‏ ‏وَسُورَةَ ‏ ‏آلِ ‏ ‏عِمْرَانَ ‏ ‏فَإِنَّهُمَا تَأْتِيَانِ يَوْمَ الْقِيَامَةِ كَأَنَّهُمَا غَمَامَتَانِ أَوْ كَأَنَّهُمَا غَيَايَتَانِ أَوْ كَأَنَّهُمَا ‏ ‏فِرْقَانِ ‏ ‏مِنْ ‏ ‏طَيْرٍ صَوَافَّ ‏ ‏تُحَاجَّانِ ‏ ‏عَنْ أَصْحَابِهِمَا اقْرَءُوا سُورَةَ ‏ ‏الْبَقَرَةِ ‏ ‏فَإِنَّ أَخْذَهَا بَرَكَةٌ وَتَرْكَهَا حَسْرَةٌ وَلَا تَسْتَطِيعُهَا ‏ ‏الْبَطَلَةُ ‏


‏قَالَ ‏ ‏مُعَاوِيَةُ ‏ ‏بَلَغَنِي أَنَّ الْبَطَلَةَ السَّحَرَةُ ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الدَّارِمِيُّ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏يَحْيَى يَعْنِي ابْنَ حَسَّانَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُعَاوِيَةُ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏مِثْلَهُ غَيْرَ أَنَّهُ قَالَ وَكَأَنَّهُمَا فِي كِلَيْهِمَا وَلَمْ يَذْكُرْ قَوْلَ ‏ ‏مُعَاوِيَةَ ‏ ‏بَلَغَنِي

“குர்ஆனை ஓதுங்கள். ஏனெனில், குர்ஆன் ஓதிவருபவர்களுக்கு அது மறுமையில் வந்து (இறைவனிடம்) பரிந்துரை செய்யும். இரு ஒளிச்சுடர்களான ‘அல்பகரா, ஆலு இம்ரான்’ ஆகிய இரு அத்தியாயங்களையும் ஓதிவாருங்கள். ஏனெனில், அவை மறுமை நாளில் நிழல்தரும் மேகங்களைப் போன்றோ, அணி அணியாகப் பறக்கும் பறவைக் கூட்டங்களைப் போன்றோ வந்து தம் தோழர்களுக்காக (இறைவனிடம்) வாதாடும். அல்பகரா அத்தியாயத்தை ஓதிவாருங்கள். அதைப் பற்றிக்கொள்வது வளம் சேர்க்கும். அதைக் கை விடுவது இழப்பைத் தரும். இந்த அத்தியாயத்தை(த் தோழமை) கொண்டோரைச் சூனியக்காரர்கள் எதுவும் செய்யவியலாது” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஉமாமா அல்பாஹிலீ (ரலி)


குறிப்பு :

“அல் பத்தலா எனும் (அரபுச்) சொல்லுக்கு சூனியக்காரர்கள் என்று பொருள்” எனக் கேள்விப்பட்டுள்ளதாக முஆவியா பின் ஸல்லாம் (ரஹ்) குறிப்பிட்டுள்ளார்.

யஹ்யா இப்னு ஹஸ்ஸான் (ரஹ்) வழி அறிவிப்பில் “… அவை மேகங்களைப் போன்றும் பறவைக் கூட்டங்களைப் போன்றும் வந்து வாதாடும்” என்று இடம்பெற்றுள்ளது. இந்த அறிவிப்பில் முஆவியா பின் ஸல்லாம் (ரஹ்) கேள்விப்பட்டதாகக் கூறுவது இடம்பெறவில்லை.

அத்தியாயம்: 6, பாடம்: 39, ஹதீஸ் எண்: 1336

و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏الْفَضْلُ بْنُ دُكَيْنٍ ‏ ‏عَنْ ‏ ‏مُوسَى بْنِ عُلَيٍّ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏أَبِي ‏ ‏يُحَدِّثُ عَنْ ‏ ‏عُقْبَةَ بْنِ عَامِرٍ ‏ ‏قَالَ :‏‏

‏خَرَجَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَنَحْنُ فِي ‏ ‏الصُّفَّةِ ‏ ‏فَقَالَ ‏ ‏أَيُّكُمْ يُحِبُّ أَنْ ‏ ‏يَغْدُوَ ‏ ‏كُلَّ يَوْمٍ إِلَى ‏ ‏بُطْحَانَ ‏ ‏أَوْ إِلَى ‏ ‏الْعَقِيقِ ‏ ‏فَيَأْتِيَ مِنْهُ بِنَاقَتَيْنِ ‏ ‏كَوْمَاوَيْنِ ‏ ‏فِي غَيْرِ إِثْمٍ وَلَا قَطْعِ رَحِمٍ فَقُلْنَا يَا رَسُولَ اللَّهِ نُحِبُّ ذَلِكَ قَالَ أَفَلَا ‏ ‏يَغْدُو ‏ ‏أَحَدُكُمْ إِلَى الْمَسْجِدِ فَيَعْلَمُ أَوْ يَقْرَأُ آيَتَيْنِ مِنْ كِتَابِ اللَّهِ عَزَّ وَجَلَّ خَيْرٌ لَهُ مِنْ نَاقَتَيْنِ وَثَلَاثٌ خَيْرٌ لَهُ مِنْ ثَلَاثٍ وَأَرْبَعٌ خَيْرٌ لَهُ مِنْ أَرْبَعٍ وَمِنْ أَعْدَادِهِنَّ مِنْ الْإِبِلِ ‏

நாங்கள் (ஒருநாள்) திண்ணையில் அமர்ந்திருந்தபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) எங்களிடம் வந்து, “ஒவ்வொரு நாள் காலையிலும் ‘புத்ஹான்’ அல்லது ‘அகீக்’ (சந்தைக்குச்) சென்று பாவம் செய்யாமல், உறவை அறுத்துக் கொள்ளாமல் பருத்த திமில்கள் கொண்ட இரு ஒட்டகங்களுடன் திரும்பி வருவதை உங்களுள் விரும்புபவர் யார்?” என்று கேட்டார்கள். “நாங்கள் (அனைவருமே) அதை விரும்புவோம்” என்று பதிலளித்தோம். அதற்கு அவர்கள், “உங்களுள் ஒருவர் காலையில் பள்ளிவாசலுக்குப் புறப்பட்டுச் சென்று அல்லாஹ்வின் வேதத்திலிருந்து இரு வசனங்களைக் கற்றுக்கொள்வது அல்லது ஓதுவது, இரு ஒட்டகங்களைவிடச் சிறந்ததாகும். மூன்று வசனங்கள் மூன்று ஒட்டகங்களைவிடவும், நான்கு வசனங்கள் நான்கு ஒட்டகங்களைவிடவும் சிறந்ததாகும். இவ்வாறு எத்தனை வசனங்கள் ஓதுகின்றாரோ அந்த அளவு ஒட்டகங்களைவிடச் சிறந்ததாக அமையும்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : உக்பா பின் ஆமிர் (ரலி)

அத்தியாயம்: 6, பாடம்: 39, ஹதீஸ் எண்: 1335

حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَأَبُو سَعِيدٍ الْأَشَجُّ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏وَكِيعٌ ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْمَشِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي صَالِحٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏قَالَ ‏:‏

‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَيُحِبُّ أَحَدُكُمْ إِذَا رَجَعَ إِلَى أَهْلِهِ أَنْ يَجِدَ فِيهِ ثَلَاثَ ‏ ‏خَلِفَاتٍ ‏ ‏عِظَامٍ سِمَانٍ قُلْنَا نَعَمْ قَالَ فَثَلَاثُ آيَاتٍ يَقْرَأُ بِهِنَّ أَحَدُكُمْ فِي صَلَاتِهِ خَيْرٌ لَهُ مِنْ ثَلَاثِ ‏ ‏خَلِفَاتٍ ‏ ‏عِظَامٍ سِمَانٍ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “உங்களுள் ஒருவர் (வெளியிலிருந்து) தம் குடும்பத்தாரிடன் செல்லும்போது வீட்டில் மூன்று பெரிய கொழுத்த சினை ஒட்டகங்களைக் காண விரும்புவாரா?” என்று கேட்டார்கள். நாங்கள், “ஆம்” என்று பதிலளித்தோம். அப்போது அவர்கள், “உங்களில் ஒருவர் தமது தொழுகையில் (குர்ஆனின்) மூன்று வசனங்களை ஓதுவது மூன்று பெரிய கொழுத்த சினை ஒட்டகங்களைவிடச் சிறந்ததாகும்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

அத்தியாயம்: 6, பாடம்: 38, ஹதீஸ் எண்: 1334

حَدَّثَنَا ‏ ‏عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏جَرِيرٌ ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْمَشِ ‏ ‏عَنْ ‏ ‏إِبْرَاهِيمَ ‏ ‏عَنْ ‏ ‏عَلْقَمَةَ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ ‏ ‏قَالَ ‏ ‏كُنْتُ ‏ ‏بِحِمْصَ ‏ ‏فَقَالَ لِي بَعْضُ الْقَوْمِ اقْرَأْ عَلَيْنَا فَقَرَأْتُ عَلَيْهِمْ سُورَةَ ‏ ‏يُوسُفَ ‏ ‏قَالَ فَقَالَ ‏ ‏رَجُلٌ ‏ ‏مِنْ الْقَوْمِ وَاللَّهِ مَا هَكَذَا أُنْزِلَتْ ‏ ‏قَالَ ‏

‏قُلْتُ وَيْحَكَ وَاللَّهِ ‏ ‏لَقَدْ قَرَأْتُهَا عَلَى رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقَالَ لِي أَحْسَنْتَ ‏

‏فَبَيْنَمَا أَنَا أُكَلِّمُهُ إِذْ وَجَدْتُ مِنْهُ رِيحَ الْخَمْرِ قَالَ فَقُلْتُ أَتَشْرَبُ الْخَمْرَ وَتُكَذِّبُ بِالْكِتَابِ لَا ‏ ‏تَبْرَحُ ‏ ‏حَتَّى أَجْلِدَكَ قَالَ فَجَلَدْتُهُ الْحَدَّ ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏وَعَلِيُّ بْنُ خَشْرَمٍ ‏ ‏قَالَا أَخْبَرَنَا ‏ ‏عِيسَى بْنُ يُونُسَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَأَبُو كُرَيْبٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏أَبُو مُعَاوِيَةَ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْمَشِ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏وَلَيْسَ فِي حَدِيثِ ‏ ‏أَبِي مُعَاوِيَةَ ‏ ‏فَقَالَ لِي أَحْسَنْتَ

நான் (சிரியா நாட்டின்) ஹிம்ஸில் இருந்தபோது மக்களில் சிலர், “எங்களுக்கு (க் குர்ஆனை) ஓதிக் காட்டுங்கள்!” என்று வேண்டினர். நான் யூஸுஃப் (எனும் 12ஆவது) அத்தியாயத்தை ஓதிக் காட்டினேன். அப்போது ஒருவர், “அல்லாஹ்வின் மீதாணையாக! இந்த அத்தியாயம் இவ்வாறு அருளப்படவில்லை” என்று கூறினார். நான், “உமக்கு நாசம் உண்டாகட்டும்! அல்லாஹ்வின் மீதாணையாக! நான் இந்த அத்தியாயத்தை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) முன்னிலையில் ஓதினேன். அவர்களும், ‘மிகச் சரியாக ஓதினாய்’ என்று கூறினார்கள்” என்று பதிலளித்தேன். (ஆட்சேபிக்க வந்த) அந்த மனிதருடன் நான் பேசிக்கொண்டிருந்தபோது அவரது வாயிலிருந்து மதுவின் வாடை வருவதைக் கண்டேன். “மதுவையும் அருந்திக்கொண்டு அல்லாஹ்வின் வேதத்தை மறுக்கவும் முனைகிறாயா? (மது அருந்திய குற்றத்திற்காக) நீ சாட்டையடி பெறாமல் இந்த இடத்திலிருந்து நகர முடியாது” என்று கூறிவிட்டு, அவருக்குச் சாட்டையடி தண்டனையை நிறைவேற்றினேன்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) வழியாக, அல்கமா பின் கைஸ் (ரஹ்)

குறிப்பு :

அபூமுஆவியா (ரஹ்) வழி அறிவிப்பில், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) என்னிடம், ‘மிகச் சரியாக ஓதினாய்’ என்று கூறினார்கள்” எனும் சொற்றொடர் இடம்பெறவில்லை.

அத்தியாயம்: 6, பாடம்: 38, ஹதீஸ் எண்: 1333

و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَأَبُو كُرَيْبٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏أَبُو أُسَامَةَ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏مِسْعَرٌ ‏ ‏وَقَالَ ‏ ‏أَبُو كُرَيْبٍ ‏ ‏عَنْ ‏ ‏مِسْعَرٍ ‏ ‏عَنْ ‏ ‏عَمْرِو بْنِ مُرَّةَ ‏ ‏عَنْ ‏ ‏إِبْرَاهِيمَ ‏ ‏قَالَ :‏‏

‏قَالَ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لِعَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ ‏ ‏اقْرَأْ عَلَيَّ قَالَ أَقْرَأُ عَلَيْكَ وَعَلَيْكَ أُنْزِلَ قَالَ إِنِّي أُحِبُّ أَنْ أَسْمَعَهُ مِنْ غَيْرِي قَالَ فَقَرَأَ عَلَيْهِ مِنْ أَوَّلِ سُورَةِ ‏ ‏النِّسَاءِ ‏ ‏إِلَى قَوْلِهِ [‏فَكَيْفَ إِذَا جِئْنَا مِنْ كُلِّ أُمَّةٍ بِشَهِيدٍ وَجِئْنَا بِكَ عَلَى هَؤُلَاءِ شَهِيدًا] ‏فَبَكَى ‏


‏قَالَ ‏ ‏مِسْعَرٌ ‏ ‏فَحَدَّثَنِي ‏ ‏مَعْنٌ ‏ ‏عَنْ ‏ ‏جَعْفَرِ بْنِ عَمْرِو بْنِ حُرَيْثٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ مَسْعُودٍ ‏ ‏قَالَ ‏ ‏قَالَ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏شَهِيدًا عَلَيْهِمْ مَا دُمْتُ فِيهِمْ ‏ ‏أَوْ مَا كُنْتُ فِيهِمْ شَكَّ ‏ ‏مِسْعَرٌ

நபி (ஸல்) என்னிடம், “எனக்கு (குர்ஆனை) ஓதிக் காட்டுங்கள்!” என்று சொன்னார்கள். நான், “குர்ஆன் அருளப்படுவதே உங்கள் மீது. உங்களுக்கு நான் ஓதிக் காட்டுவதா?” என்று கேட்டேன்.. அதற்கு அவர்கள், “நான் பிறரிடமிருந்து அதைச் செவியுற விரும்புகிறேன்” என்று சொன்னார்கள். ஆகவே, நான் அவர்களுக்கு அந்நிசா எனும் (நான்காவது) அத்தியாயத்தை ஆரம்பம் முதல் ஓதிக் காட்டினேன். “…ஒவ்வொரு சமுதாயத்திலிருந்தும் (அவர்களுடைய நபியான) சாட்சியை நாம் (மறுமையில்) கொண்டுவரும்போதும், (நபியே!) உங்களை இவர்களுக்கெதிரான சாட்சியாகக் கொண்டுவரும்போதும் (இவர்களின் நிலை) எப்படியிருக்கும்?” (4:41) என்பதுவரை ஓதிக் காட்டினேன். அதைக் கேட்டு அவர்கள் அழுதார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) வழியாக, இப்ராஹீம் அந்நகயீ (ரஹ்)


குறிப்பு :

மிஸ்அர் (ரஹ்) வழி அறிவிப்பில், “நான் அவர்களிடையே (உயிருடன்) இருந்தபோது / இருந்தவரையில் அவர்களை நான் கண்காணித்துக் கொண்டிருந்தேன்” என்று (அப்போது) நபி (ஸல்) கூறினார்கள் என இப்னு மஸ்ஊத் (ரலி) அறிவித்ததாக இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 6, பாடம்: 38, ஹதீஸ் எண்: 1332

و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَأَبُو كُرَيْبٍ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏حَفْصٍ ‏ ‏قَالَ ‏ ‏أَبُو بَكْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حَفْصُ بْنُ غِيَاثٍ ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْمَشِ ‏ ‏عَنْ ‏ ‏إِبْرَاهِيمَ ‏ ‏عَنْ ‏ ‏عَبِيدَةَ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ ‏ ‏قَالَ ‏:‏

‏قَالَ لِي رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏اقْرَأْ عَلَيَّ الْقُرْآنَ قَالَ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ أَقْرَأُ عَلَيْكَ وَعَلَيْكَ أُنْزِلَ قَالَ إِنِّي أَشْتَهِي أَنْ أَسْمَعَهُ مِنْ غَيْرِي فَقَرَأْتُ ‏ ‏النِّسَاءَ ‏ ‏حَتَّى إِذَا بَلَغْتُ ‏فَكَيْفَ إِذَا جِئْنَا مِنْ كُلِّ أُمَّةٍ بِشَهِيدٍ وَجِئْنَا بِكَ عَلَى هَؤُلَاءِ شَهِيدًا ‏‏‏رَفَعْتُ رَأْسِي أَوْ غَمَزَنِي رَجُلٌ إِلَى جَنْبِي فَرَفَعْتُ رَأْسِي فَرَأَيْتُ دُمُوعَهُ تَسِيلُ ‏


‏حَدَّثَنَا ‏ ‏هَنَّادُ بْنُ السَّرِيِّ ‏ ‏وَمِنْجَابُ بْنُ الْحَارِثِ التَّمِيمِيُّ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏عَلِيِّ بْنِ مُسْهِرٍ ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْمَشِ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏وَزَادَ ‏ ‏هَنَّادٌ ‏ ‏فِي رِوَايَتِهِ قَالَ لِي رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَهُوَ عَلَى الْمِنْبَرِ اقْرَأْ عَلَيَّ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) என்னிடம், “எனக்குக் குர்ஆனை ஓதிக் காட்டுங்கள்” என்று சொன்னார்கள். நான், “அல்லாஹ்வின் தூதரே! குர்ஆன் அருளப்படுவதே உங்கள் மீது. உங்களுக்கு நான் ஓதிக் காட்டுவதா?” என்று கேட்டேன். அதற்கு, “நான் பிறரிடமிருந்து அதைச் செவியுற விரும்புகிறேன்” என்று சொன்னார்கள். ஆகவே, நான் அவர்களுக்கு அந்நிசா எனும் (நான்காவது) அத்தியாயத்தை ஓதிக் காட்டினேன். “… ஒவ்வொரு சமுதாயத்திலிருந்தும் (அவர்களுடைய நபியாகிய) சாட்சியை நாம் (மறுமையில்) கொண்டுவரும்போதும், (நபியே!) உங்களை இவர்களுக்கெதிரான சாட்சியாகக் கொண்டு வரும்போதும் (இவர்களின் நிலை) எப்படியிருக்கும்?” எனும் (4:41ஆவது) வசனத்தை நான் அடைந்தபோது அல்லது எனக்குப் பக்கத்திலிருந்த ஒருவர் என்னைத் தொட்டுணர்த்தியபோது நான் தலையை உயர்த்தினேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்து கொண்டிருந்ததைக் கண்டேன்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)


குறிப்பு :

ஹன்னாத் (ரஹ்) வழி அறிவிப்பில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) மிம்பர் மீதிருந்தபடி, “எனக்கு (குர்ஆனை) ஓதிக் காட்டுங்கள்” என்று என்னிடம் கூறினார்கள் என அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) கூறியதாக அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 6, பாடம்: 37, ஹதீஸ் எண்: 1331

حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏وَابْنُ بَشَّارٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏قَتَادَةَ ‏ ‏يُحَدِّثُ عَنْ ‏ ‏أَنَسٍ ‏ ‏قَالَ ‏:‏

‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لِأُبَيِّ بْنِ كَعْبٍ ‏ ‏إِنَّ اللَّهَ أَمَرَنِي أَنْ أَقْرَأَ عَلَيْكَ ‏ ‏لَمْ يَكُنْ الَّذِينَ كَفَرُوا ‏ ‏قَالَ وَسَمَّانِي لَكَ قَالَ نَعَمْ قَالَ فَبَكَى ‏


‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ حَبِيبٍ الْحَارِثِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏خَالِدٌ يَعْنِي ابْنَ الْحَارِثِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏عَنْ ‏ ‏قَتَادَةَ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏أَنَسًا ‏ ‏يَقُولُا ‏ ‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لِأُبَيٍّ ‏ ‏بِمِثْلِهِ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), உபை பின் கஅப் (ரலி) அவர்களிடம் “உங்களுக்கு ‘லம் யகுனில்லதீன கஃபரூ…’ (என்று தொடங்கும் 98ஆவது) அத்தியாயத்தை ஓதிக் காட்டுமாறு அல்லாஹ் என்னைப் பணித்துள்ளான்” என்று கூறினார்கள். “அல்லாஹ் என் பெயரை உங்களிடம் குறிப்பிட்டானா?” என்று உபை (ரலி) கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) “ஆம்” என்று பதிலளிக்க, (உணர்ச்சிப் பெருக்கால்) அப்போது உபை (ரலி) அழுதார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் பின் மாலிக் (ரலி)

அத்தியாயம்: 6, பாடம்: 37, ஹதீஸ் எண்: 1330

‏حَدَّثَنَا ‏ ‏هَدَّابُ بْنُ خَالِدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏هَمَّامٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏قَتَادَةُ ‏ ‏عَنْ ‏ ‏أَنَسِ بْنِ مَالِكٍ :‏‏

‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏لِأُبَيٍّ ‏ ‏إِنَّ اللَّهَ أَمَرَنِي أَنْ أَقْرَأَ عَلَيْكَ قَالَ ‏ ‏آللَّهُ سَمَّانِي لَكَ قَالَ اللَّهُ سَمَّاكَ لِي قَالَ فَجَعَلَ ‏ ‏أُبَيٌّ ‏ ‏يَبْكِي

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), உபை பின் கஅப் (ரலி) அவர்களிடம் “உங்களுக்கு (குர்ஆன் அத்தியாயத்தை) ஓதிக் காட்டுமாறு அல்லாஹ் என்னைப் பணித்துள்ளான்” என்று சொன்னார்கள். உபை (ரலி), “என் பெயரை அல்லாஹ் உங்களிடம் குறிப்பிட்டானா?” என (உணர்ச்சிப் பெருக்குடன்) கேட்டார்கள். “(ஆம்) அல்லாஹ், உங்கள் பெயரை என்னிடம் குறிப்பிட்டான்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) பதிலளித்தார்கள். இதைக் கேட்டு உபை பின் கஅப் (ரலி) அழலானார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் பின் மாலிக் (ரலி)

அத்தியாயம்: 6, பாடம்: 36, ஹதீஸ் எண்: 1329

حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏وَمُحَمَّدُ بْنُ عُبَيْدٍ الْغُبَرِيُّ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏أَبِي عَوَانَةَ ‏ ‏قَالَ ‏ ‏ابْنُ عُبَيْدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو عَوَانَةَ ‏ ‏عَنْ ‏ ‏قَتَادَةَ ‏ ‏عَنْ ‏ ‏زُرَارَةَ بْنِ أَوْفَى ‏ ‏عَنْ ‏ ‏سَعْدِ بْنِ هِشَامٍ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏قَالَتْ ‏:‏

‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏الْمَاهِرُ بِالْقُرْآنِ مَعَ ‏ ‏السَّفَرَةِ ‏ ‏الْكِرَامِ الْبَرَرَةِ وَالَّذِي يَقْرَأُ الْقُرْآنَ ‏ ‏وَيَتَتَعْتَعُ ‏ ‏فِيهِ وَهُوَ عَلَيْهِ شَاقٌّ لَهُ أَجْرَانِ ‏


‏و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ أَبِي عَدِيٍّ ‏ ‏عَنْ ‏ ‏سَعِيدٍ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏وَكِيعٌ ‏ ‏عَنْ ‏ ‏هِشَامٍ الدَّسْتَوَائِيِّ ‏ ‏كِلَاهُمَا ‏ ‏عَنْ ‏ ‏قَتَادَةَ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏و قَالَ ‏ ‏فِي حَدِيثِ ‏ ‏وَكِيعٍ ‏ ‏وَالَّذِي يَقْرَأُ وَهُوَ ‏ ‏يَشْتَدُّ ‏ ‏عَلَيْهِ لَهُ أَجْرَانِ

“குர்ஆனைத் திறனுடன் சரளமாக ஓதுகின்றவர், கடமை தவறாத கண்ணியமிக்கத் தூதர்(களான வானவர்)களுடன் இருப்பார். குர்ஆனை சிரமப்பட்டுத் திக்கித் திணறி ஓதிவருகின்றவருக்கு இரு மடங்கு நன்மைகள் உண்டு” அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)


குறிப்பு :

வகீஉ (ரஹ்) வழி அறிவிப்பில், “… குர்ஆனைக் கடின முயற்சியெடுத்து ஓதிவருகின்றவருக்கு இரு மடங்கு நன்மைகள் உள்ளன” என இடம்பெற்றுள்ளது.