அத்தியாயம்: 16, பாடம்: 23, ஹதீஸ் எண்: 2611

‏و حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏عَنْ ‏ ‏يَزِيدَ بْنِ خُمَيْرٍ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏عَبْدَ الرَّحْمَنِ بْنَ جُبَيْرٍ ‏ ‏يُحَدِّثُ عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي الدَّرْدَاءِ : ‏

‏عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَنَّهُ أَتَى بِامْرَأَةٍ ‏ ‏مُجِحٍّ ‏ ‏عَلَى بَابِ ‏ ‏فُسْطَاطٍ ‏ ‏فَقَالَ لَعَلَّهُ يُرِيدُ أَنْ ‏ ‏يُلِمَّ ‏ ‏بِهَا فَقَالُوا نَعَمْ فَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لَقَدْ هَمَمْتُ أَنْ أَلْعَنَهُ لَعْنًا يَدْخُلُ مَعَهُ قَبْرَهُ كَيْفَ يُوَرِّثُهُ وَهُوَ لَا يَحِلُّ لَهُ كَيْفَ يَسْتَخْدِمُهُ وَهُوَ لَا يَحِلُّ لَهُ ‏


و حَدَّثَنَاه ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَزِيدُ بْنُ هَارُونَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ بَشَّارٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو دَاوُدَ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏شُعْبَةَ ‏ ‏فِي هَذَا الْإِسْنَادِ

மகப்பேறு காலத்தை நெருங்கி, ஒரு கூடாரத்தின் வாசலில் நின்றுகொண்டிருந்த ஒரு பெண் கைதியைக் கடந்து நபி (ஸல்) சென்றார்கள். அப்போது நபி (ஸல்), “அவ(ளைச் சிறைப்பிடித்தவ)ர் அவளுடன் உறவுகொள்ள விரும்பக் கூடும்!” என்றார்கள். அதற்கு மக்கள், “ஆம்” என்றனர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) “அவரது சவக்குழிக்குள்ளும் நுழையக் கூடிய கடுமையான சாபமாக நான் அவரைச் சபிக்க நினைத்தேன். (ஏனெனில்) அவர் தமக்கு அனுமதிக்கப்படாத ஒருவனை எவ்வாறு தம் வாரிசாக ஆக்கிக்கொள்ள முடியும்? அவர் தமக்கு அனுமதிக்கப்படாத ஒருவனை எப்படித் தம்முடைய ஊழியனாக்கிக் கொள்ள முடியும்?” என்று கேட்டார்கள்.

அறிவிப்பாளர் : அபுத்தர்தா (ரலி)

அத்தியாயம்: 16, பாடம்: 22, ஹதீஸ் எண்: 2610

‏و حَدَّثَنِي ‏ ‏أَبُو غَسَّانَ الْمِسْمَعِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُعَاذٌ يَعْنِي ابْنَ هِشَامٍ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏أَبِي ‏ ‏عَنْ ‏ ‏أَبِي الزُّبَيْرِ ‏ ‏عَنْ ‏ ‏جَابِرٍ ‏ ‏قَالَ : ‏

‏كُنَّا ‏ ‏نَعْزِلُ ‏ ‏عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَبَلَغَ ذَلِكَ نَبِيَّ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَلَمْ يَنْهَنَا

நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) காலத்தில் அஸ்லுச் செய்துகொண்டிருந்தோம். அதைப் பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குத் தகவல் எட்டியபோது, அவர்கள் எங்களுக்குத் தடை விதிக்கவில்லை.

அறிவிப்பாளர் : ஜாபிர் (ரலி)

அத்தியாயம்: 16, பாடம்: 22, ஹதீஸ் எண்: 2609

‏و حَدَّثَنِي ‏ ‏سَلَمَةُ بْنُ شَبِيبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏الْحَسَنُ بْنُ أَعْيَنَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مَعْقِلٌ ‏ ‏عَنْ ‏ ‏عَطَاءٍ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏جَابِرًا ‏ ‏يَقُولُ : ‏

‏لَقَدْ ‏ ‏كُنَّا ‏ ‏نَعْزِلُ ‏ ‏عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ

நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) காலத்தில் அஸ்லுச் செய்துகொண்டிருந்தோம்.

அறிவிப்பாளர் : ஜாபிர் (ரலி)

அத்தியாயம்: 16, பாடம்: 22, ஹதீஸ் எண்: 2608

‏حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَإِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏قَالَ ‏ ‏إِسْحَقُ ‏ ‏أَخْبَرَنَا وَقَالَ ‏ ‏أَبُو بَكْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ ‏ ‏عَنْ ‏ ‏عَمْرٍو ‏ ‏عَنْ ‏ ‏عَطَاءٍ ‏ ‏عَنْ ‏ ‏جَابِرٍ ‏ ‏قَالَ : ‏

‏كُنَّا ‏ ‏نَعْزِلُ ‏ ‏وَالْقُرْآنُ يَنْزِلُ ‏


زَادَ ‏ ‏إِسْحَقُ ‏ ‏قَالَ ‏ ‏سُفْيَانُ ‏ ‏لَوْ كَانَ شَيْئًا ‏ ‏يُنْهَى عَنْهُ لَنَهَانَا عَنْهُ الْقُرْآنُ

நாங்கள் அஸ்லுச் செய்துகொண்டிருந்த காலத்தில், குர்ஆன் அருளப்பட்டுக் கொண்டிருந்தது.

அறிவிப்பாளர் : ஜாபிர் (ரலி)


குறிப்பு :

இஸ்ஹாக் பின் இப்ராஹீம் (ரஹ்) வழி அறிவிப்பில், “அது தடை செய்யப்பட வேண்டிய ஒன்றாக இருந்தால் அவ்வாறு செய்யக் கூடாதெனக் குர்ஆனே நமக்குத் தடை விதித்திருக்கும்” என ஸுஃப்யான் பின் உயைனா (ரஹ்) கூறினார்கள் எனக் கூடுதலாக இடம் பெற்றுள்ளது.

அத்தியாயம்: 16, பாடம்: 22, ஹதீஸ் எண்: 2607

‏حَدَّثَنَا ‏ ‏سَعِيدُ بْنُ عَمْرٍو الْأَشْعَثِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ ‏ ‏عَنْ ‏ ‏سَعِيدِ بْنِ حَسَّانَ ‏ ‏عَنْ ‏ ‏عُرْوَةَ بْنِ عِيَاضٍ ‏ ‏عَنْ ‏ ‏جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ ‏ ‏قَالَ : ‏

‏سَأَلَ رَجُلٌ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقَالَ إِنَّ عِنْدِي ‏ ‏جَارِيَةً ‏ ‏لِي وَأَنَا ‏ ‏أَعْزِلُ ‏ ‏عَنْهَا فَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِنَّ ذَلِكَ لَنْ يَمْنَعَ شَيْئًا أَرَادَهُ اللَّهُ قَالَ فَجَاءَ الرَّجُلُ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ إِنَّ ‏ ‏الْجَارِيَةَ ‏ ‏الَّتِي كُنْتُ ذَكَرْتُهَا لَكَ حَمَلَتْ فَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَنَا عَبْدُ اللَّهِ وَرَسُولُهُ ‏


و حَدَّثَنَا ‏ ‏حَجَّاجُ بْنُ الشَّاعِرِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو أَحْمَدَ الزُّبَيْرِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سَعِيدُ بْنُ حَسَّانَ ‏ ‏قَاصُّ أَهْلِ ‏ ‏مَكَّةَ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏عُرْوَةُ بْنُ عِيَاضِ بْنِ عَدِيِّ بْنِ الْخِيَارِ النَّوْفَلِيُّ ‏ ‏عَنْ ‏ ‏جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ ‏ ‏قَالَ ‏ ‏جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بِمَعْنَى حَدِيثِ ‏ ‏سُفْيَانَ

ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம், “என்னிடம் ஓர் அடிமைப் பெண் இருக்கிறாள். நான் அவளிடம் (செல்லும்போது) அஸ்லுச் செய்துகொள்கிறேன்” என்று கூறினார். அதற்கு நபி (ஸல்), “அ(வ்வாறு அஸ்லுச் செய்வ)து அல்லாஹ் நாடியுள்ள எதையும் தடுத்து விடப்போவதில்லை” என்றார்கள். அவர் (சில நாட்களுக்குப் பின்) வந்து, “அல்லாஹ்வின் தூதரே! நான் உங்களிடம் குறிப்பிட்ட அந்த அடிமைப் பெண் கருவுற்றுவிட்டாள்” என்றார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “நான் அல்லாஹ்வின் அடிமையும் அவனுடைய தூதரும் ஆவேன்” என்றார்கள்.

அறிவிப்பாளர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)


குறிப்பு :

ஸயீத் பின் ஹஸ்ஸான் (ரஹ்) வழி அறிவிப்பு, “ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து …” என்று ஆரம்பமாகிறது.

அத்தியாயம்: 16, பாடம்: 22, ஹதீஸ் எண்: 2606

‏حَدَّثَنَا ‏ ‏أَحْمَدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ يُونُسَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏زُهَيْرٌ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏أَبُو الزُّبَيْرِ ‏ ‏عَنْ ‏ ‏جَابِرٍ : ‏

‏أَنَّ رَجُلًا أَتَى رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقَالَ إِنَّ لِي ‏ ‏جَارِيَةً ‏ ‏هِيَ خَادِمُنَا وَسَانِيَتُنَا وَأَنَا ‏ ‏أَطُوفُ ‏ ‏عَلَيْهَا وَأَنَا أَكْرَهُ أَنْ تَحْمِلَ فَقَالَ ‏ ‏اعْزِلْ ‏ ‏عَنْهَا إِنْ شِئْتَ فَإِنَّهُ ‏ ‏سَيَأْتِيهَا مَا قُدِّرَ لَهَا فَلَبِثَ الرَّجُلُ ثُمَّ أَتَاهُ فَقَالَ إِنَّ ‏ ‏الْجَارِيَةَ ‏ ‏قَدْ حَبِلَتْ فَقَالَ قَدْ أَخْبَرْتُكَ أَنَّهُ ‏ ‏سَيَأْتِيهَا مَا قُدِّرَ لَهَا

ஒருவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, “எங்களுக்குப் பணிவிடை செய்பவளாகவும் தண்ணீர் சுமப்பவளாகவும் என்னிடம் ஓர் அடிமைப் பெண் இருக்கின்றாள். அவளிடம் நான் சென்றுவருகிறேன். (அதே சமயம்) அவள் கருவுற்றுவிடுவதை நான் விரும்பவில்லை” என்று கூறினார். அதற்கு நபி (ஸல்), “நீ விரும்பினால் அஸ்லுச் செய்துகொள். ஆயினும், அவளுக்கு விதிக்கப்பட்டு இருப்பது அவளிடம் நிச்சயம் வந்துசேரும்” என்றார்கள். அவர் சில நாட்கள் கழிந்த பின் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, “அந்த அடிமைப் பெண் கருவுற்றுவிட்டாள்” என்று கூறினார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “அவளுக்கு விதிக்கப்பட்டது நிச்சயம் அவளிடம் வந்துசேரும் என உன்னிடம் நான் ஏற்கெனவே தெரிவித்தேன்!” என்றார்கள்.

அறிவிப்பாளர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)

அத்தியாயம்: 16, பாடம்: 22, ஹதீஸ் எண்: 2605

 ‏حَدَّثَنِي ‏ ‏هَارُونُ بْنُ سَعِيدٍ الْأَيْلِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏مُعَاوِيَةُ يَعْنِي ابْنَ صَالِحٍ ‏ ‏عَنْ ‏ ‏عَلِيِّ بْنِ أَبِي طَلْحَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي الْوَدَّاكِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ ‏ ‏سَمِعَهُ يَقُولُ : ‏

‏سُئِلَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏عَنْ ‏ ‏الْعَزْلِ ‏ ‏فَقَالَ ‏ ‏مَا مِنْ كُلِّ ‏ ‏الْمَاءِ ‏ ‏يَكُونُ الْوَلَدُ وَإِذَا أَرَادَ اللَّهُ خَلْقَ شَيْءٍ لَمْ يَمْنَعْهُ شَيْءٌ ‏


حَدَّثَنِي ‏ ‏أَحْمَدُ بْنُ الْمُنْذِرِ الْبَصْرِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏زَيْدُ بْنُ حُبَابٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُعَاوِيَةُ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏عَلِيُّ بْنُ أَبِي طَلْحَةَ الْهَاشِمِيُّ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي الْوَدَّاكِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ ‏ ‏عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بِمِثْلِهِ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அஸ்லுச் செய்வதைப் பற்றிக் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், “குழந்தை உருவாவது (ஒற்றை உயிரணுவில் இருந்துதான்;) மொத்த விந்திலிருந்து அல்ல. அல்லாஹ் ஒன்றைப் படைக்க நாடிவிட்டால் அவனை எதுவும் தடுக்க முடியாது” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)

அத்தியாயம்: 16, பாடம்: 22, ஹதீஸ் எண்: 2604

‏حَدَّثَنَا ‏ ‏عُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ الْقَوَارِيرِيُّ ‏ ‏وَأَحْمَدُ بْنُ عَبْدَةَ ‏ ‏قَالَ ‏ ‏ابْنُ عَبْدَةَ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏و قَالَ ‏ ‏عُبَيْدُ اللَّهِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ أَبِي نَجِيحٍ ‏ ‏عَنْ ‏ ‏مُجَاهِدٍ ‏ ‏عَنْ ‏ ‏قَزْعَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ ‏ ‏قَالَ : ‏

‏ذُكِرَ ‏ ‏الْعَزْلُ ‏ ‏عِنْدَ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقَالَ ‏ ‏وَلِمَ يَفْعَلُ ذَلِكَ أَحَدُكُمْ ‏ ‏وَلَمْ يَقُلْ فَلَا يَفْعَلْ ذَلِكَ أَحَدُكُمْ ‏ ‏فَإِنَّهُ لَيْسَتْ نَفْسٌ مَخْلُوقَةٌ إِلَّا اللَّهُ خَالِقُهَا

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் “அஸ்லு குறித்துப் பேசப்பட்டது. அப்போது அவர்கள், “அதை உங்களில் ஒருவர் ஏன் செய்கின்றார்?” என்று கேட்டார்கள். (ஆனால்) “உங்களில் எவரும் அவ்வாறு செய்ய வேண்டாம்” என்று குறிப்பிடவில்லை. (மாறாக,) “படைக்கப்பட உள்ள எந்த உயிரையும் அல்லாஹ் படைத்தே தீருவான்” என்று சொன்னார்கள்.

அறிவிப்பாளர் : அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)

அத்தியாயம்: 16, பாடம்: 22, ஹதீஸ் எண்: 2603

‏و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُعَاذُ بْنُ مُعَاذٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ عَوْنٍ ‏ ‏عَنْ ‏ ‏مُحَمَّدٍ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ الرَّحْمَنِ بْنِ بِشْرٍ الْأَنْصَارِيِّ ‏ ‏قَالَ ‏ ‏فَرَدَّ الْحَدِيثَ حَتَّى ‏ ‏رَدَّهُ إِلَى ‏ ‏أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ ‏ ‏قَالَ : ‏

‏ذُكِرَ ‏ ‏الْعَزْلُ ‏ ‏عِنْدَ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقَالَ ‏ ‏وَمَا ‏ ‏ذَاكُمْ قَالُوا الرَّجُلُ تَكُونُ لَهُ الْمَرْأَةُ تُرْضِعُ ‏ ‏فَيُصِيبُ مِنْهَا ‏ ‏وَيَكْرَهُ أَنْ تَحْمِلَ مِنْهُ وَالرَّجُلُ تَكُونُ لَهُ الْأَمَةُ ‏ ‏فَيُصِيبُ مِنْهَا ‏ ‏وَيَكْرَهُ أَنْ تَحْمِلَ مِنْهُ قَالَ فَلَا عَلَيْكُمْ أَنْ لَا تَفْعَلُوا ‏ ‏ذَاكُمْ فَإِنَّمَا هُوَ الْقَدَرُ ‏


قَالَ ‏ ‏ابْنُ عَوْنٍ ‏ ‏فَحَدَّثْتُ بِهِ ‏ ‏الْحَسَنَ ‏ ‏فَقَالَ وَاللَّهِ لَكَأَنَّ هَذَا زَجْرٌ ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏حَجَّاجُ بْنُ الشَّاعِرِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُلَيْمَانُ بْنُ حَرْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حَمَّادُ بْنُ زَيْدٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عَوْنٍ ‏ ‏قَالَ ‏ ‏حَدَّثْتُ ‏ ‏مُحَمَّدًا ‏ ‏عَنْ ‏ ‏إِبْرَاهِيمَ ‏ ‏بِحَدِيثِ ‏ ‏عَبْدِ الرَّحْمَنِ بْنِ بِشْرٍ ‏ ‏يَعْنِي حَدِيثَ ‏ ‏الْعَزْلِ ‏ ‏فَقَالَ ‏ ‏إِيَّايَ حَدَّثَهُ ‏ ‏عَبْدُ الرَّحْمَنِ بْنُ بِشْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الْأَعْلَى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏هِشَامٌ ‏ ‏عَنْ ‏ ‏مُحَمَّدٍ ‏ ‏عَنْ ‏ ‏مَعْبَدِ بْنِ سِيرِينَ ‏ ‏قَالَ ‏ ‏قُلْنَا ‏ ‏لِأَبِي سَعِيدٍ ‏ ‏هَلْ سَمِعْتَ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَذْكُرُ فِي ‏ ‏الْعَزْلِ ‏ ‏شَيْئًا قَالَ نَعَمْ وَسَاقَ الْحَدِيثَ ‏ ‏بِمَعْنَى حَدِيثِ ‏ ‏ابْنِ عَوْنٍ ‏ ‏إِلَى قَوْلِهِ الْقَدَرُ

நபி (ஸல்) செவிபட ‘அஸ்லு’ பற்றிப் பேசப்பட்டது. அப்போது அவர்கள் (குறுக்கிட்டு), “அது என்ன?” என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், “பாலூட்டும் தம் மனைவியுடன் உடலுறவு கொள்ள விரும்பும் ஒருவர், அதனால் அவள் (மீண்டும்) கருவுற்றுவிடுவதை விரும்பாமல் இருக்கலாம். (அவ்வாறே) தம் அடிமைப் பெண்ணோடு உறவு கொள்ள விரும்பும் ஒருவர், அதனால் அவள் கருவுறுவதை விரும்பாமல் இருக்கலாம். (அப்போது ‘அஸ்லு’ச் செய்துகொள்வார்)” என்று விடையளித்தனர். நபி (ஸல்) அவர்கள், “அவ்வாறு செய்யாவிட்டால் உங்கள்மீது பழியேதுமில்லை. அதுவெல்லாம் விதியாகும்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)


குறிப்புகள் :

இந்த ஹதீஸை நான் ஹஸன் பின் அபில் ஹஸன் யஸார் (ரஹ்) அவர்களிடம் அறிவித்தபோது அவர்கள், “ஆனால் … அல்லாஹ்வின் மீதாணையாக! இது (அஸ்லுச் செய்வதைக்) கண்டிப்பது போல உள்ளது” என்று கூறினார்கள் என்று இதன் அறிவிப்பாளர்களுள் ஒருவரான அப்துல்லாஹ் பின் அவ்னு (ரஹ்) கூறுகிறார்.

மஅபத் பின் ஸீரீன் (ரஹ்) அறிவிப்பில், “நாங்கள் அபூஸயீத் அல்குத்ரீ (ரலி) அவர்களிடம் அஸ்லு பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறிய ஹதீஸ் எதையேனும் நீங்கள் செவியுற்றுள்ளீர்களா?’ என்று கேட்டோம். அதற்கு அவர்கள் மேற்காணும் (2603) ஹதீஸில் உள்ளதைப் போன்று “ … அதுவெல்லாம் விதியாகும்” என்பதுவரை அறிவித்தார்கள்” என இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 16, பாடம்: 22, ஹதீஸ் எண்: 2602

‏و حَدَّثَنِي ‏ ‏أَبُو الرَّبِيعِ الزَّهْرَانِيُّ ‏ ‏وَأَبُو كَامِلٍ الْجَحْدَرِيُّ ‏ ‏وَاللَّفْظُ ‏ ‏لِأَبِي كَامِلٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏حَمَّادٌ وَهُوَ ابْنُ زَيْدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَيُّوبُ ‏ ‏عَنْ ‏ ‏مُحَمَّدٍ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ الرَّحْمَنِ بْنِ بِشْرِ بْنِ مَسْعُودٍ ‏ ‏رَدَّهُ إِلَى ‏ ‏أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ ‏ ‏قَالَ : ‏

‏سُئِلَ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏عَنْ ‏ ‏الْعَزْلِ ‏ ‏فَقَالَ ‏ ‏لَا عَلَيْكُمْ أَنْ لَا تَفْعَلُوا ‏ ‏ذَاكُمْ فَإِنَّمَا هُوَ الْقَدَرُ ‏


قَالَ ‏ ‏مُحَمَّدٌ ‏ ‏وَقَوْلُهُ لَا عَلَيْكُمْ أَقْرَبُ إِلَى النَّهْيِ

நபி (ஸல்) அவர்களிடம் அஸ்லு குறித்து வினவப்பட்டது. அதற்கு அவர்கள், “அதைச் செய்யாவிட்டால் உங்கள்மீது பழியேதுமில்லை; அதுவெல்லாம் விதியாகும்” என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பாளர் : அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)


குறிப்பு :

“உங்கள்மீது பழியேதுமில்லை” என்பது, ‘வேண்டாம்‘ எனச் சொல்வதற்கு நெருக்கமானதாகும் என்று முஹம்மது பின் ஸீரீன் (ரஹ்) கூறினார்கள்.