அத்தியாயம்: 36, பாடம்: 6, ஹதீஸ் எண்: 3703

وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَسُرَيْجُ بْنُ يُونُسَ، – وَاللَّفْظُ لأَبِي بَكْرٍ – قَالاَ حَدَّثَنَا مَرْوَانُ بْنُ مُعَاوِيَةَ، عَنْ مَنْصُورِ بْنِ حَيَّانَ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، قَالَ :‏ ‏

أَشْهَدُ عَلَى ابْنِ عُمَرَ وَابْنِ عَبَّاسٍ أَنَّهُمَا شَهِدَا أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم نَهَى عَنِ الدُّبَّاءِ وَالْحَنْتَمِ وَالْمُزَفَّتِ وَالنَّقِيرِ

“அல்லாஹ்வின் தூதர் (ஸல்) சுரைக்குடுவை, மண்சாடி, தார் பூசப்பட்ட பாத்திரம் மற்றும் பேரீச்சை மரத்தின் அடிப் பாகத்தைக் குடைந்து தயாரிக்கப் பட்ட பாத்திரம் ஆகியவற்றை(க் குடிபானங்களுக்கு)ப் பயன் படுத்த வேண்டாமெனத் தடை செய்தார்கள் என நான் சாட்சியம் அளிக்கிறேன்” என்று இப்னு உமர் (ரலி) அவர்களும் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களும் கூறியதற்கு நான் சாட்சி கூறுகின்றேன்.

அறிவிப்பாளர்கள் : இப்னு உமர், இப்னு அப்பாஸ் (அன்ஹுமா) வழியாக ஸயீத் பின் ஜுபைர் (ரஹ்)

அத்தியாயம்: 36, பாடம்: 6, ஹதீஸ் எண்: 3702

وَحَدَّثَنَا نَصْرُ بْنُ عَلِيٍّ الْجَهْضَمِيُّ، حَدَّثَنِي أَبِي، حَدَّثَنَا الْمُثَنَّى، – يَعْنِي ابْنَ سَعِيدٍ  – عَنْ أَبِي الْمُتَوَكِّلِ، عَنْ أَبِي سَعِيدٍ :‏ ‏

قَالَ نَهَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَنِ الشُّرْبِ فِي الْحَنْتَمَةِ وَالدُّبَّاءِ وَالنَّقِيرِ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) மண்சாடி, சுரைக்குடுவை மற்றும் பேரீச்சை மரத்தின் அடிப் பாகத்தைக் குடைந்து தயாரிக்கப்பட்ட பாத்திரம் ஆகியவற்றில் (பானங்களை) அருந்த வேண்டாமெனத் தடை செய்தார்கள்.

அறிவிப்பாளர் : அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)

அத்தியாயம்: 36, பாடம்: 6, ஹதீஸ் எண்: 3701

حَدَّثَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ، حَدَّثَنَا ابْنُ عُلَيَّةَ، أَخْبَرَنَا سَعِيدُ بْنُ أَبِي عَرُوبَةَ، عَنْ قَتَادَةَ، عَنْ أَبِي نَضْرَةَ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ :‏

أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم نَهَى عَنِ الدُّبَّاءِ وَالْحَنْتَمِ وَالنَّقِيرِ وَالْمُزَفَّتِ


وَحَدَّثَنَاهُ مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا مُعَاذُ بْنُ هِشَامٍ، حَدَّثَنِي أَبِي، عَنْ قَتَادَةَ، بِهَذَا الإِسْنَادِ أَنَّ نَبِيَّ اللَّهِ صلى الله عليه وسلم نَهَى أَنْ يُنْتَبَذَ ‏.‏ فَذَكَرَ مِثْلَهُ ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) சுரைக்குடுவை, மண்சாடி, பேரீச்சை மரத்தின் அடிப் பாகத்தைக் குடைந்து தயாரிக்கப்பட்ட பாத்திரம் மற்றும் தார் பூசப்பட்ட பாத்திரம் ஆகியவற்றை(க் குடிபானங்களுக்கு)ப் பயன்படுத்த வேண்டாமெனத் தடை செய்தார்கள்.

அறிவிப்பாளர் : அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)


குறிப்பு:

ஹிஷாம் (ரஹ்) வழி அறிவிப்பில், “நபி (ஸல்), (மேற்கண்ட பாத்திரங்களில் பானங்களை) ஊற்றிவைக்க வேண்டாமெனத் தடை செய்தார்கள்” என்று இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 36, பாடம்: 6, ஹதீஸ் எண்: 3700

حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، أَخْبَرَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، عَنِ التَّيْمِيِّ، ح وَحَدَّثَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ حَدَّثَنَا ابْنُ عُلَيَّةَ، أَخْبَرَنَا سُلَيْمَانُ التَّيْمِيُّ، عَنْ أَبِي نَضْرَةَ، عَنْ أَبِي سَعِيدٍ :‏

أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم نَهَى عَنِ الْجَرِّ أَنْ يُنْبَذَ فِيهِ ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), சுட்ட களிமண் பாத்திரத்தில் பானங்களை ஊற்றிவைக்க வேண்டாம் எனத் தடை செய்தார்கள்.

அறிவிப்பாளர் : அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)

அத்தியாயம்: 36, பாடம்: 6, ஹதீஸ் எண்: 3699

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، عَنْ شُعْبَةَ، عَنْ يَحْيَى الْبَهْرَانِيِّ، قَالَ سَمِعْتُ ابْنَ عَبَّاسٍ، ح  وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ يَحْيَى بْنِ أَبِي، عُمَرَ عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ :‏

نَهَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَنِ الدُّبَّاءِ وَالنَّقِيرِ وَالْمُزَفَّتِ ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) சுரைக்குடுவை, பேரீச்சை மரத்தின் அடிப் பாகத்தைக் குடைந்து தயாரிக்கப்பட்ட பாத்திரம் மற்றும் தார் பூசப்பட்ட பாத்திரம் ஆகியவற்றை(க் குடிபானங்களுக்கு)ப் பயன்படுத்த வேண்டாம் எனத் தடை விதித்தார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி)

அத்தியாயம்: 36, பாடம்: 6, ஹதீஸ் எண்: 3698

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ فُضَيْلٍ، عَنْ حَبِيبِ بْنِ أَبِي عَمْرَةَ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ :‏

نَهَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَنِ الدُّبَّاءِ وَالْحَنْتَمِ وَالْمُزَفَّتِ وَالنَّقِيرِ وَأَنْ يُخْلَطَ الْبَلَحُ بِالزَّهْوِ ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) சுரைக்குடுவை, மண் சாடி, தார் பூசப்பட்ட பாத்திரம் மற்றும் பேரீச்சை மரத்தின் அடிப் பாகத்தைக் குடைந்து தயாரிக்கப்பட்ட பாத்திரம் ஆகியவற்றை(க் குடிபானங்களுக்கு)ப் பயன்படுத்த வேண்டாம் என்றும் பழுக்காத பச்சை நிறமுள்ள பேரீச்சம் பழங்களை, நன்கு கனியாத நிறம் மாறிய பேரீச்சங்காய்களுடன் ஒன்றாகச் சேர்த்து ஊறவைக்க வேண்டாம் என்றும் தடை செய்தார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி)

அத்தியாயம்: 36, பாடம்: 6, ஹதீஸ் எண்: 3697

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُسْهِرٍ، عَنِ الشَّيْبَانِيِّ، عَنْ حَبِيبٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاس قَالَ :‏

نَهَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَنِ الدُّبَّاءِ وَالْحَنْتَمِ وَالْمُزَفَّتِ وَالنَّقِيرِ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) சுரைக்குடுவை, மண்சாடி, தார் பூசப்பட்ட பாத்திரம், பேரீச்சை மரத்தின் அடிப் பாகத்தைக் குடைந்து தயார் செய்யப்பட்ட பாத்திரம் ஆகியவற்றை(க் குடிபானங்களுக்கு)ப் பயன்படுத்த வேண்டாமெனத் தடை செய்தார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி)

அத்தியாயம்: 36, பாடம்: 6, ஹதீஸ் எண்: 3696

حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، أَخْبَرَنَا عَبَّادُ بْنُ عَبَّادٍ، عَنْ أَبِي جَمْرَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، ح وَحَدَّثَنَا خَلَفُ بْنُ هِشَامٍ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ أَبِي جَمْرَةَ، قَالَ سَمِعْتُ ابْنَ عَبَّاسٍ، يَقُولُ :‏

قَدِمَ وَفْدُ عَبْدِ الْقَيْسِ عَلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏ “‏ أَنْهَاكُمْ عَنِ الدُّبَّاءِ وَالْحَنْتَمِ وَالنَّقِيرِ وَالْمُقَيَّرِ ‏”‏ ‏.‏ وَفِي حَدِيثِ حَمَّادٍ جَعَلَ – مَكَانَ الْمُقَيَّرِ – الْمُزَفَّتِ ‏

நபி (ஸல்) அவர்களிடம் அப்துல் கைஸ் தூதுக் குழுவினர் வந்தபோது, “சுரைக்குடுவை, மண் சாடி, பேரீச்சை மரத்தின் அடிப் பாகத்தைக் குடைந்து தயாரிக்கப்பட்ட பாத்திரம், தார் பூசப்பட்ட (முகய்யர்) பாத்திரம் ஆகியவற்றை(க் குடிபானங்களுக்கு)ப் பயன்படுத்த வேண்டாமென உங்களுக்குத் தடை செய்கின்றேன்” என்று நபியவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி)


குறிப்பு :

ஹம்மாத் பின் ஸைத் (ரஹ்) வழி அறிவிப்பில், தார் பூசப்பட்ட பாத்திரம் என்பதைக் குறிக்க ‘முகய்யர்’ என்பதற்குப் பதிலாக ‘முஸஃப்பத்’ எனும் வேறொரு சொல் இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 36, பாடம்: 6, ஹதீஸ் எண்: 3695

وَحَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا ابْنُ عُلَيَّةَ، حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ سُوَيْدٍ، عَنْ مُعَاذَةَ، عَنْ عَائِشَةَ قَالَتْ :‏

نَهَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَنِ الدُّبَّاءِ وَالْحَنْتَمِ وَالنَّقِيرِ وَالْمُزَفَّتِ ‏


وَحَدَّثَنَاهُ إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، أَخْبَرَنَا عَبْدُ الْوَهَّابِ الثَّقَفِيُّ، حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ سُوَيْدٍ بِهَذَا الإِسْنَادِ إِلاَّ أَنَّهُ جَعَلَ مَكَانَ الْمُزَفَّتِ الْمُقَيَّرِ ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) சுரைக்குடுவை, மண்சாடி, பேரீச்சை மரத்தின் அடிப் பாகத்தைக் குடைந்து தயாரிக்கப்பட்ட பாத்திரம், தார் பூசப்பட்ட (முஸஃப்பத்) பாத்திரம் ஆகியவற்றை(க் குடிபானங்களுக்கு)ப் பயன்படுத்த வேண்டாமெனத் தடை செய்தார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)


குறிப்பு :

அப்துல் வஹ்ஹாப் அஸ்ஸகஃபீ வழி அறிவிப்பில் தார் பூசப்பட்டப்பட்ட பாத்திரம் என்பதைக் குறிக்க, ‘முஸஃப்பத்’ என்பதற்குப் பதிலாக ‘முகய்யர்’ என வேறொரு சொல் இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 36, பாடம்: 6, ஹதீஸ் எண்: 3694

حَدَّثَنَا شَيْبَانُ بْنُ فَرُّوخَ، حَدَّثَنَا الْقَاسِمُ، – يَعْنِي ابْنَ الْفَضْلِ – حَدَّثَنَا ثُمَامَةُ بْنُ حَزْنٍ الْقُشَيْرِيُّ قَالَ :‏

لَقِيتُ عَائِشَةَ فَسَأَلْتُهَا عَنِ النَّبِيذِ، فَحَدَّثَتْنِي أَنَّ وَفْدَ عَبْدِ الْقَيْسِ قَدِمُوا عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَسَأَلُوا النَّبِيَّ صلى الله عليه وسلم عَنِ النَّبِيذِ فَنَهَاهُمْ أَنْ يَنْتَبِذُوا فِي الدُّبَّاءِ وَالنَّقِيرِ وَالْمُزَفَّتِ وَالْحَنْتَمِ

நான் ஆயிஷா (ரலி) அவர்களைச் சந்தித்துப் பழச்சாறுகள் பற்றிக் கேட்டேன். அப்போது அவர்கள், “நபி (ஸல்) அவர்களிடம் அப்துல் கைஸ் தூதுக் குழுவினர் வந்து பழச்சாறுகள் பற்றிக் கேட்டனர். சுரைக்குடுவை, பேரீச்சை மரத்தின் அடிப் பாகத்தைக் குடைந்து தயாரிக்கப்பட்ட பாத்திரம், தார் பூசப்பட்ட பாத்திரம், மண் சாடி ஆகியவற்றில் பானங்களை ஊற்றிவைக்க வேண்டாமென நபி (ஸல்) தடை விதித்தார்கள் என்று பதிலளித்தார்கள்” என்றார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி) வழியாக ஸுமாமா பின் ஹஸ்னு அல் குஷைரீ (ரஹ்)