அத்தியாயம்: 32, பாடம்: 10, ஹதீஸ் எண்: 3283

حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، وَمُحَمَّدُ بْنُ رُمْحٍ، قَالاَ أَخْبَرَنَا اللَّيْثُ، ح وَحَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ حَدَّثَنَا لَيْثٌ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ :‏

أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم حَرَّقَ نَخْلَ بَنِي النَّضِيرِ وَقَطَعَ وَهِيَ الْبُوَيْرَةُ


زَادَ قُتَيْبَةُ وَابْنُ رُمْحٍ فِي حَدِيثِهِمَا فَأَنْزَلَ اللَّهُ عَزَّ وَجَلَّ ‏{مَا قَطَعْتُمْ مِنْ لِينَةٍ أَوْ تَرَكْتُمُوهَا قَائِمَةً عَلَى أُصُولِهَا فَبِإِذْنِ اللَّهِ وَلِيُخْزِيَ الْفَاسِقِينَ‏}‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (பயங்கரவாதிகளான) பனூ நளீர் குலத்தாரின் பேரீச்ச மரங்களை (போர்க் கால நடவடிக்கையாக) எரித்தார்கள்; இன்னும் (சிலவற்றை) வெட்டிவிட்டார்கள். அது ‘புவைரா’ எனும் இடமாகும்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)


குறிப்பு :

இப்னு குதைபா (ரஹ்) மற்றும் இப்னு ரும்ஹு (ரஹ்) ஆகியோரது அறிவிப்பில், “எனவேதான், வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் ‘நீங்கள் (அவர்களுடைய) பேரீச்ச மரங்களை வெட்டியதோ, அவற்றின் தூரோடு நிற்கும்படி அவற்றை விட்டுவிட்டதோ எல்லாமே அல்லாஹ்வின் அனுமதியுடனேயே நடந்தன. தீயோரை அவன் இழிவுபடுத்தவே (இவ்வாறு அனுமதித்தான்)’ (59:5) எனும் வசனத்தை அருளினான்” என்று கூடுதலாக இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 32, பாடம்: 9, ஹதீஸ் எண்: 3282

وَحَدَّثَنِي مُحَمَّدُ بْنُ رَافِعٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ، أَخْبَرَنِي عَمْرُو بْنُ دِينَارٍ أَنَّ ابْنَ شِهَابٍ، أَخْبَرَهُ عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، عَنِ الصَّعْبِ بْنِ جَثَّامَةَ :‏

أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قِيلَ لَهُ لَوْ أَنَّ خَيْلاً أَغَارَتْ مِنَ اللَّيْلِ فَأَصَابَتْ مِنْ أَبْنَاءِ الْمُشْرِكِينَ قَالَ ‏ “‏ هُمْ مِنْ آبَائِهِمْ ‏”‏

நபி (ஸல்) அவர்களிடம், “குதிரைப் படையினர் இரவு நேரத்தில் திடீர்த் தாக்குதல் நடத்தும் போது (எதிரிகளான) இணைவைப்பாளர்களின் குழந்தைகளும் பாதிக்கப்பட்டுவிடுகிறார்களே?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், “அக்குழந்தைகளும் அவர்களின் தந்தையரைச் சேர்ந்தவர்களே” என்று விடையளித்தார்கள்.

அறிவிப்பாளர் : ஸஅப் பின் ஜஸ்ஸாமா (ரலி)

அத்தியாயம்: 32, பாடம்: 9, ஹதீஸ் எண்: 3281

حَدَّثَنَا عَبْدُ بْنُ حُمَيْدٍ، أَخْبَرَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ عَنِ ابْنِ عَبَّاسٍ :‏

عَنِ الصَّعْبِ بْنِ جَثَّامَةَ، قَالَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنَّا نُصِيبُ فِي الْبَيَاتِ مِنْ ذَرَارِيِّ الْمُشْرِكِينَ قَالَ ‏ “‏ هُمْ مِنْهُمْ ‏”‏

“அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் (எதிரிகளான) இணைவைப்பாளர்களின் பெண்களையும் குழந்தைகளையும் இரவு நேரத்தில் தாக்க வேண்டிய நிலை (சிலபோது) ஏற்பட்டுவிடுகிறதே?” என்று நான் கேட்டேன். அதற்கு அவர்கள், “அவர்களும் எதிரிகளைச் சேர்ந்தவர்கள்தாம்” என்று விடையளித்தார்கள்.

அறிவிப்பாளர் : ஸஅப் பின் ஜஸ்ஸாமா (ரலி)

அத்தியாயம்: 32, பாடம்: 9, ஹதீஸ் எண்: 3280

وَحَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، وَسَعِيدُ بْنُ مَنْصُورٍ، وَعَمْرٌو النَّاقِدُ، جَمِيعًا عَنِ ابْنِ عُيَيْنَةَ، قَالَ يَحْيَى أَخْبَرَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ :‏

عَنِ الصَّعْبِ بْنِ جَثَّامَةَ قَالَ سُئِلَ النَّبِيُّ صلى الله عليه وسلم عَنِ الذَّرَارِيِّ مِنَ الْمُشْرِكِينَ يُبَيَّتُونَ فَيُصِيبُونَ مِنْ نِسَائِهِمْ وَذَرَارِيِّهِمْ ‏.‏ فَقَالَ ‏ “‏ هُمْ مِنْهُمْ ‏“‏

நபி (ஸல்) அவர்களிடம் “இணைவைப்போ(ரான எதிரி நாட்டின)ரின் பெண்களும் குழந்தைகளும் (போரில் சிக்கிச்) சேதமடையும் (வாய்ப்பு உண்டு என்னும்) பட்சத்தில் அவர்கள்மீது இரவு நேரத்தில் தாக்குதல் நடத்தலாமா?” என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) “அவர்களும் (எதிரிகளான) அவர்களைச் சேர்ந்தவர்களே” என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பாளர் : ஸஅப் பின் ஜஸ்ஸாமா (ரலி)

அத்தியாயம்: 32, பாடம்: 8, ஹதீஸ் எண்: 3279

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بِشْرٍ، وَأَبُو أُسَامَةَ قَالاَ حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ قَالَ :‏

وُجِدَتِ امْرَأَةٌ مَقْتُولَةً فِي بَعْضِ تِلْكَ الْمَغَازِي فَنَهَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَنْ قَتْلِ النِّسَاءِ وَالصِّبْيَانِ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கலந்துகொண்ட அறப்போர் ஒன்றில் பெண்ணொருத்தி கொல்லப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டாள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) பெண்களையும் குழந்தைகளையும் (போரில்) கொல்வதற்குத் தடை விதித்தார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)

அத்தியாயம்: 32, பாடம்: 8, ஹதீஸ் எண்: 3278

حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، وَمُحَمَّدُ بْنُ رُمْحٍ، قَالاَ أَخْبَرَنَا اللَّيْثُ، ح وَحَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ حَدَّثَنَا لَيْثٌ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ :‏

أَنَّ امْرَأَةً وُجِدَتْ، فِي بَعْضِ مَغَازِي رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم مَقْتُولَةً فَأَنْكَرَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم قَتْلَ النِّسَاءِ وَالصِّبْيَانِ‏‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கலந்துகொண்ட ஓர் அறப்போரில், பெண்ணொருத்தி கொல்லப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டாள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) பெண்களையும் குழந்தைகளையும் (போரில்) கொல்வதைக் கண்டித்தார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)

அத்தியாயம்: 32, பாடம்: 7, ஹதீஸ் எண்: 3277

وَحَدَّثَنِي حَجَّاجُ بْنُ الشَّاعِرِ، حَدَّثَنَا عَبْدُ الصَّمَدِ، حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسٍ :‏

أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ يَقُولُ يَوْمَ أُحُدٍ ‏ “‏ اللَّهُمَّ إِنَّكَ إِنْ تَشَأْ لاَ تُعْبَدْ فِي الأَرْضِ ‏”‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) உஹுதுப் போர் நாளில், “இறைவா! நீ (இந்த முஸ்லிம் படையை அழிக்க) நாடினால் உலகில் நீ மட்டுமே வழிபாட்டுக்கு உரியவனாகத் திகழ மாட்டாய்” என்று பிரார்த்தித்துக்கொண்டிருந்தார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் பின் மாலிக் (ரலி)

அத்தியாயம்: 32, பாடம்: 7, ஹதீஸ் எண்: 3276

حَدَّثَنَا سَعِيدُ بْنُ مَنْصُورٍ، حَدَّثَنَا خَالِدُ بْنُ عَبْدِ اللَّهِ، عَنْ إِسْمَاعِيلَ بْنِ أَبِي خَالِدٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي أَوْفَى قَالَ :‏

دَعَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَلَى الأَحْزَابِ فَقَالَ ‏ “‏ اللَّهُمَّ مُنْزِلَ الْكِتَابِ سَرِيعَ الْحِسَابِ اهْزِمِ الأَحْزَابَ اللَّهُمَّ اهْزِمْهُمْ وَزَلْزِلْهُمْ ‏”‏


وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا وَكِيعُ بْنُ الْجَرَّاحِ، عَنْ إِسْمَاعِيلَ بْنِ أَبِي خَالِدٍ قَالَ سَمِعْتُ ابْنَ أَبِي أَوْفَى، يَقُولُ دَعَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏.‏ بِمِثْلِ حَدِيثِ خَالِدٍ غَيْرَ أَنَّهُ قَالَ ‏”‏ هَازِمَ الأَحْزَابِ ‏”‏ ‏.‏ وَلَمْ يَذْكُرْ قَوْلَهُ ‏”‏ اللَّهُمَّ ‏”‏

وَحَدَّثَنَاهُ إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، وَابْنُ أَبِي عُمَرَ، جَمِيعًا عَنِ ابْنِ عُيَيْنَةَ، عَنْ إِسْمَاعِيلَ، بِهَذَا الإِسْنَادِ وَزَادَ ابْنُ أَبِي عُمَرَ فِي رِوَايَتِهِ ‏ “‏ مُجْرِيَ السَّحَابِ ‏”‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (அகழ்ப் போரின்போது) கூட்டுப் படையினருக்கெதிராகப் பிரார்த்தித்தார்கள். அப்போது, “இறைவா! வேதத்தை அருள்பவனே! விரைவாகக் கணக்கெடுப்பவனே! இக்கூட்டுப் படையினரைத் தோற்கடிப்பாயாக. இறைவா! இவர்களைத் தோல்வியுறச் செய்து, நடுங்கச் செய்வாயாக!” என்று பிரார்த்தித்தார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் அபீஅவ்ஃபா (ரலி)


குறிப்பு :

வகீஉ பின் ஜர்ராஹ் (ரஹ்) வழி அறிவிப்பு, “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (மேற்கண்ட ஹதீஸில் உள்ளபடி) பிரார்த்தித்தார்கள் …” என்றே ஆரம்பமாகிறது  “இக்கூட்டுப் படையினரைத் தோற்கடிப் பாயாக!“  எனும் இடத்தில், “கூட்டுப் படையினரைத் தோற்கடிப்பவனே!” என்று இடம் பெற்றுள்ளது. இறுதியில், “இறைவா!” எனும் சொல் இதில் இடம்பெறவில்லை.

இப்னு உயைனா (ரஹ்) வழி அறிவிப்பில், “மேகத்தை நகர்த்துபவனே!” என்று கூடுதலாக இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 32, பாடம்: 6, ஹதீஸ் எண்: 3275

وَحَدَّثَنِي مُحَمَّدُ بْنُ رَافِعٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ، أَخْبَرَنِي مُوسَى بْنُ عُقْبَةَ عَنْ أَبِي النَّضْرِ، عَنْ كِتَابِ، رَجُلٍ مِنْ أَسْلَمَ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم يُقَالُ لَهُ عَبْدُ اللَّهِ بْنُ أَبِي أَوْفَى :‏

فَكَتَبَ إِلَى عُمَرَ بْنِ عُبَيْدِ اللَّهِ حِينَ سَارَ إِلَى الْحَرُورِيَّةِ يُخْبِرُهُ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ فِي بَعْضِ أَيَّامِهِ الَّتِي لَقِيَ فِيهَا الْعَدُوَّ يَنْتَظِرُ حَتَّى إِذَا مَالَتِ الشَّمْسُ قَامَ فِيهِمْ فَقَالَ ‏”‏ يَا أَيُّهَا النَّاسُ لاَ تَتَمَنَّوْا لِقَاءَ الْعَدُوِّ وَاسْأَلُوا اللَّهَ الْعَافِيَةَ فَإِذَا لَقِيتُمُوهُمْ فَاصْبِرُوا وَاعْلَمُوا أَنَّ الْجَنَّةَ تَحْتَ ظِلاَلِ السُّيُوفِ ‏”‏ ‏ ثُمَّ قَامَ النَّبِيُّ صلى الله عليه وسلم وَقَالَ ‏”‏ اللَّهُمَّ مُنْزِلَ الْكِتَابِ وَمُجْرِيَ السَّحَابِ وَهَازِمَ الأَحْزَابِ اهْزِمْهُمْ وَانْصُرْنَا عَلَيْهِمْ ‏”‏ ‏

உமர் பின் உபைதில்லாஹ் (ரஹ்), ஹரூரி(காரிஜி)ய்யாக்களை எதிர்த்துப் போருக்குச் சென்றபோது, அவர்களுக்கு அஸ்லம் குலத்தைச் சேர்ந்த நபித்தோழரான அப்துல்லாஹ் பின் அபீஅவ்ஃபா (ரலி) கடிதம் எழுதினார்கள். அதில் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) எதிரிகளைச் சந்தித்த ஒரு நாளில், (நண்பகல் நேரம்வரை) காத்திருந்தார்கள். சூரியன் (உச்சியிலிருந்து) சாய்ந்ததும் மக்களிடையே எழுந்து நின்று, “மக்களே! எதிரிகளை(ப் போர்க் களத்தில்) சந்திக்க ஆசை கொள்ளாதீர்கள். அல்லாஹ்விடம் (போர் அழிவுகளிலிருந்து) பாதுகாப்புக் கோருங்கள். அவ்வாறு எதிரிகளைச் சந்திக்க நேர்ந்துவிட்டால், (போரில் ஏற்படும் துன்பங்களைக் கண்டு துவண்டுவிடாமல்) பொறுமையாக இருங்கள். அறிந்துகொள்ளுங்கள்: (அநீதிக்கெதிராக உயர்த்தப்படும்) வாட்களின் நிழலிலில்தான் சொர்க்கம் உள்ளது” என்று கூறினார்கள்.

பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) நின்ற வண்ணம், “இறைவா! வேதத்தை அருள்பவனே! மேகத்தை நகர்த்துபவனே! கூட்டுப் படையினரைத் தோற்கடித்தவனே! இவர்களையும் தோற்கடிப்பாயாக! இவர்களுக்கெதிராக எங்களுக்கு உதவி செய்வாயாக!” என்று பிரார்த்தித்தார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் அபீஅவ்ஃபா (ரலி) வழியாக அபுந்நள்ரு ஸாலிம் பின் உமய்யா (ரஹ்)

அத்தியாயம்: 32, பாடம்: 6, ஹதீஸ் எண்: 3274

حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَلِيٍّ الْحُلْوَانِيُّ، وَعَبْدُ بْنُ حُمَيْدٍ، قَالاَ حَدَّثَنَا أَبُو عَامِرٍ الْعَقَدِيُّ، عَنِ الْمُغِيرَةِ، – وَهُوَ ابْنُ عَبْدِ الرَّحْمَنِ الْحِزَامِيُّ – عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ :‏

أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ ‏ “‏ لاَ تَمَنَّوْا لِقَاءَ الْعَدُوِّ فَإِذَا لَقِيتُمُوهُمْ فَاصْبِرُوا‏”‏

“எதிரிகளை (போர்க் களத்தில்) சந்திக்க ஆசைப்படாதீர்கள். அவர்களை நீங்கள் (களத்தில்) சந்திக்க நேர்ந்தால், (நிலை குலைந்துவிடாமல்) நிதானமாகப் போரிடுங்கள்” என்று நபி (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)