அத்தியாயம்: 21, பாடம்: 21, ஹதீஸ் எண்: 2893

‏و حَدَّثَنَا ‏ ‏ابْنُ أَبِي عُمَرَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ ‏ ‏عَنْ ‏ ‏عَمْرٍو ‏ ‏وَابْنُ طَاوُسٍ ‏ ‏عَنْ ‏ ‏طَاوُسٍ: ‏
أَنَّهُ كَانَ يُخَابِرُ قَالَ ‏ ‏عَمْرٌو ‏ ‏فَقُلْتُ لَهُ يَا ‏ ‏أَبَا عَبْدِ الرَّحْمَنِ ‏ ‏لَوْ تَرَكْتَ هَذِهِ ‏ ‏الْمُخَابَرَةَ ‏ ‏فَإِنَّهُمْ يَزْعُمُونَ أَنَّ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏نَهَى عَنْ ‏ ‏الْمُخَابَرَةِ ‏ ‏فَقَالَ أَيْ ‏ ‏عَمْرُو ‏ ‏أَخْبَرَنِي أَعْلَمُهُمْ بِذَلِكَ ‏ ‏يَعْنِي ‏ ‏ابْنَ عَبَّاسٍ ‏ ‏أَنَّ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لَمْ يَنْهَ عَنْهَا إِنَّمَا قَالَ ‏ ‏يَمْنَحُ أَحَدُكُمْ أَخَاهُ خَيْرٌ لَهُ مِنْ أَنْ يَأْخُذَ عَلَيْهَا خَرْجًا مَعْلُومًا ‏


حَدَّثَنَا ‏ ‏ابْنُ أَبِي عُمَرَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏الثَّقَفِيُّ ‏ ‏عَنْ ‏ ‏أَيُّوبَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَإِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏وَكِيعٍ ‏ ‏عَنْ ‏ ‏سُفْيَانَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ رُمْحٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏اللَّيْثُ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ جُرَيْجٍ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏عَلِيُّ بْنُ حُجْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏الْفَضْلُ بْنُ مُوسَى ‏ ‏عَنْ ‏ ‏شَرِيكٍ ‏ ‏عَنْ ‏ ‏شُعْبَةَ ‏ ‏كُلُّهُمْ ‏ ‏عَنْ ‏ ‏عَمْرِو بْنِ دِينَارٍ ‏ ‏عَنْ ‏ ‏طَاوُسٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عَبَّاسٍ ‏ ‏عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏نَحْوَ حَدِيثِهِمْ

தாவூஸ் பின் கைஸான் (ரஹ்), விளைச்சலில் ஒரு பகுதியைத் தமக்குத் தந்துவிட வேண்டும் எனும் நிபந்தனையின் பேரில் நிலத்தைக் குத்தகைக்கு (முகாபரா) விட்டுக்கொண்டிருந்தார்கள். நான் தாவூஸ் (ரஹ்) அவர்களிடம், “அபூஅப்திர் ரஹ்மான்! இந்தக் குத்தகைத் தொழிலை நீங்கள் விட்டுவிட்டால் நன்றாயிருக்கும். ஏனெனில், நபி (ஸல்) குத்தகையைத் தடை செய்தார்கள் என மக்கள் எண்ணுகிறார்கள்” என்று சொன்னேன்.

இதைக் கேட்ட தாவூஸ் (ரஹ்) கூறினார்கள்: அம்ரே! மக்களில் இதைப் பற்றி நன்கறிந்தவர் (இப்னு அப்பாஸ்) என்னிடம், “நபி (ஸல்) அதைத் தடை செய்யவில்லை. உங்களில் ஒருவர் தமது நிலத்தைக் குத்தகைக்கு விட்டு, அதிலிருந்து குறிப்பிட்ட தொகையைப் பெறுவதைவிட, தம் சகோதரருக்கு அதை இரவலாகத் தருவதே சிறந்ததாகும் என்றுதான் கூறினார்கள்” என்றார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக அம்ரிப்னு தீனார் (ரஹ்)

அத்தியாயம்: 21, பாடம்: 21, ஹதீஸ் எண்: 2892

‏‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏حَمَّادُ بْنُ زَيْدٍ ‏ ‏عَنْ ‏ ‏عَمْرٍو ‏ ‏أَنَّ ‏ ‏مُجَاهِدًا ‏ ‏قَالَ ‏ ‏لِطَاوُسٍ ‏ ‏انْطَلِقْ بِنَا إِلَى ‏ ‏ابْنِ رَافِعِ بْنِ خَدِيجٍ ‏ ‏فَاسْمَعْ مِنْهُ الْحَدِيثَ عَنْ أَبِيهِ: ‏
عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ فَانْتَهَرَهُ قَالَ إِنِّي وَاللَّهِ لَوْ أَعْلَمُ أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏نَهَى عَنْهُ مَا فَعَلْتُهُ وَلَكِنْ حَدَّثَنِي مَنْ هُوَ أَعْلَمُ بِهِ مِنْهُمْ ‏ ‏يَعْنِي ‏ ‏ابْنَ عَبَّاسٍ ‏ ‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏لَأَنْ يَمْنَحَ الرَّجُلُ أَخَاهُ أَرْضَهُ خَيْرٌ لَهُ مِنْ أَنْ يَأْخُذَ عَلَيْهَا خَرْجًا مَعْلُومًا

நான் தாவூஸ் பின் கைஸான் (ரஹ்) அவர்களிடம், “என்னை ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) அவர்களின் மகனிடம் அழைத்துச் செல்லுங்கள். அவரிடம் அவருடைய தந்தை ராஃபிஉ (ரலி), நபி (ஸல்) அவர்களிடமிருந்து (விளைநிலக் குத்தகை கூடாது என) அறிவித்த ஹதீஸைப் பற்றி நீங்கள் (அல்லது நான்) கேட்கவேண்டும்” என்றேன். இதைக் கேட்ட தாவூஸ் (ரஹ்) என்னைக் கடிந்துகொண்டார்கள்.

மேலும், கூறினார்கள்: “அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அ(வ்வாறு விளைநிலத்தைக் குத்தகைக்கு விடுவ)தை(ப்பொதுவாக)த் தடை செய்தார்கள் என நான் அறிந்திருந்தால், அதை நான் செய்திருக்க மாட்டேன். இது இவ்வாறிருக்க, இதைப் பற்றி மக்களில் நன்கு அறிந்தவர் (இப்னு அப்பாஸ்) என்னிடம், அல்லாஹ்வின் தூதர் (ஸல்), ‘ஒருவர் தமது விளைநிலத்தைக் குத்தகைக்கு விட்டு, அதிலிருந்து குறிப்பிட்ட குத்தகைத் தொகையை வாங்கிக்கொள்வதைவிட, தம் சகோதரருக்கு இரவலாக(விளைவித்துக் கொள்ளுமாறு அதை)க் கொடுத்துவிடுவது சிறந்ததாகும்’ என்று கூறினார்கள்” என்றார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக முஜாஹித் (ரஹ்)

அத்தியாயம்: 21, பாடம்: 20, ஹதீஸ் எண்: 2891

‏حَدَّثَنَا ‏ ‏إِسْحَقُ بْنُ مَنْصُورٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏يَحْيَى بْنُ حَمَّادٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏أَبُو عَوَانَةَ ‏ ‏عَنْ ‏ ‏سُلَيْمَانَ الشَّيْبَانِيِّ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ السَّائِبِ ‏ ‏قَالَ ‏ ‏دَخَلْنَا عَلَى ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ مَعْقِلٍ ‏ ‏فَسَأَلْنَاهُ عَنْ ‏ ‏الْمُزَارَعَةِ ‏ ‏فَقَالَ زَعَمَ ‏ ‏ثَابِتٌ: ‏
‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏نَهَى عَنْ ‏ ‏الْمُزَارَعَةِ ‏ ‏وَأَمَرَ بِالْمُؤَاجَرَةِ وَقَالَ لَا بَأْسَ بِهَا

நாங்கள் அப்துல்லாஹ் பின் மஅகில் (ரஹ்) அவர்களிடம் சென்று விளைநிலத்தைக் குத்தகைக்கு விடுவது (முஸாரஆ) பற்றிக் கேட்டோம். அதற்கு, “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) நிலத்தைக் குத்தகைக்கு விடுவதைத் தடை செய்தார்கள். பணத்திற்குப் பதிலாக நிலத்தை வாடகைக்கு விடுமாறு (முஆஜரா) உத்தரவிட்டார்கள். மேலும் அதனால் குற்றமில்லை என்றும் கூறினார்கள்” என்று ஸாபித் பின் அள்ளஹ்ஹாக் (ரலி) உறுதிப்படுத்தினார்கள் என்பதாக அப்துல்லாஹ் பின் ம அகில் (ரஹ்) பதிலளித்தார்கள்..

அறிவிப்பாளர் : ஸாபித் பின் அள்ளஹ்ஹாக் (ரலி) வழியாக அப்துல்லாஹ் பின் அஸ்ஸாயிப் (ரஹ்)

அத்தியாயம்: 21, பாடம்: 20, ஹதீஸ் எண்: 2890

‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏عَبْدُ الْوَاحِدِ بْنُ زِيَادٍ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَلِيُّ بْنُ مُسْهِرٍ ‏ ‏كِلَاهُمَا ‏ ‏عَنْ ‏ ‏الشَّيْبَانِيِّ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ السَّائِبِ ‏ ‏قَالَ سَأَلْتُ ‏ ‏عَبْدَ اللَّهِ بْنَ مَعْقِلٍ ‏ ‏عَنْ ‏ ‏الْمُزَارَعَةِ ‏ ‏فَقَالَ أَخْبَرَنِي ‏ ‏ثَابِتُ بْنُ الضَّحَّاكِ: ‏
أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏نَهَى عَنْ ‏ ‏الْمُزَارَعَةِ


وَفِي رِوَايَةِ ‏ ‏ابْنِ أَبِي شَيْبَةَ ‏ ‏نَهَى عَنْهَا وَقَالَ سَأَلْتُ ‏ ‏ابْنَ مَعْقِلٍ ‏ ‏وَلَمْ يُسَمِّ ‏ ‏عَبْدَ اللَّهِ

நான் அப்துல்லாஹ் பின் மஅகில் (ரஹ்) அவர்களிடம் நிலத்தைக் குத்தகைக்கு விடுவது (முஸாரஆ) பற்றிக் கேட்டேன். அதற்கு, “என்னிடம் ஸாபித் பின் அள்ளஹ்ஹாக் (ரலி), அல்லாஹ்வின் தூதர் (ஸல்) நிலத்தைக் குத்தகைக்கு விடுவதை (முஸாரஆ) தடை செய்தார்கள் எனத் தெரிவித்தார்கள்” என விடையளித்தார்கள்.

அறிவிப்பாளர் : ஸாபித் பின் அள்ளஹ்ஹாக் (ரலி) வழியாக அப்துல்லாஹ் பின் அஸ்ஸாயிப் (ரஹ்)


குறிப்புகள் :

விளைச்சலில் ஒரு பகுதிக்குயை முன் நிபந்தனையாகக் கேட்டு, விளைநிலத்தைக் குத்தகைக்கு விடுவது ‘முஸாரஆ’ எனப்படும்.

தொகை குறிப்பிட்டு, பணத்திற்கு நிலத்தை வாடகைக்கு விடுவது ‘முஆஜரா’ எனப்படும்

அபூபக்ரு பின் அபீஷைபா (ரஹ்) வழி அறிவிப்பில் “… அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அதற்குத் தடை விதித்தார்கள்”  என்று இடம்பெற்றுள்ளது. மேலும், “ … நான் இப்னு மஅகில் (ரஹ்) அவர்களிடம் கேட்டேன்” என்று அவரது இயற்பெயரான ‘அப்துல்லாஹ்’ இடம்பெறாமல் அவரின் தந்தையின் பெயரால் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்தியாயம்: 21, பாடம்: 19, ஹதீஸ் எண்: 2889

‏حَدَّثَنَا ‏ ‏عَمْرٌو النَّاقِدُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ ‏ ‏عَنْ ‏ ‏يَحْيَى بْنِ سَعِيدٍ ‏ ‏عَنْ ‏ ‏حَنْظَلَةَ الزُّرَقِيِّ ‏ ‏أَنَّهُ سَمِعَ ‏ ‏رَافِعَ بْنَ خَدِيجٍ ‏ ‏يَقُولُ: ‏
كُنَّا أَكْثَرَ ‏ ‏الْأَنْصَارِ ‏ ‏حَقْلًا قَالَ ‏ ‏كُنَّا ‏ ‏نُكْرِي ‏ ‏الْأَرْضَ عَلَى أَنَّ لَنَا هَذِهِ وَلَهُمْ هَذِهِ فَرُبَّمَا أَخْرَجَتْ هَذِهِ وَلَمْ تُخْرِجْ هَذِهِ فَنَهَانَا عَنْ ذَلِكَ وَأَمَّا ‏ ‏الْوَرِقُ ‏ ‏فَلَمْ يَنْهَنَا ‏


حَدَّثَنَا ‏ ‏أَبُو الرَّبِيعِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حَمَّادٌ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏ابْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَزِيدُ بْنُ هَارُونَ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏يَحْيَى بْنِ سَعِيدٍ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏نَحْوَهُ

அன்ஸாரிகளிலேயே நாங்கள்தாம் விளைநிலம் அதிகம் உடையவர்களாக இருந்தோம். நாங்கள் விளைநிலத்தில் இ(ந்தப் பகுதியில் விளைவ)து எங்களுக்குரியது; அ(ந்தப் பகுதியில் விளைவ)து அவர்களுக்குரியது என நிபந்தனையிட்டு நிலத்தைக் குத்தகைக்கு விட்டுவந்தோம். சில வேளைகளில் இந்தப் பகுதி (நல்ல) விளைச்சலைத் தரும்; அந்தப் பகுதி விளைச்சலைத் தராது. இவ்விதம் நிபந்தனையிட்டு குத்தகைக்கு விடவேண்டாம் என்று நபி (ஸல்) எங்களைத் தடுத்தார்கள். வெள்ளிக்(காசுகளுக்)கு நிலத்தைக் குத்தகைக்கு விடுவதை அவர்கள் தடை செய்யவில்லை.

அறிவிப்பாளர் : ராஃபிஉ பின் கதீஜ் (ரலி)

அத்தியாயம்: 21, பாடம்: 19, ஹதீஸ் எண்: 2888

‏حَدَّثَنَا ‏ ‏إِسْحَقُ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏عِيسَى بْنُ يُونُسَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏الْأَوْزَاعِيُّ ‏ ‏عَنْ ‏ ‏رَبِيعَةَ بْنِ أَبِي عَبْدِ الرَّحْمَنِ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏حَنْظَلَةُ بْنُ قَيْسٍ الْأَنْصَارِيُّ ‏ ‏قَالَ: ‏
سَأَلْتُ ‏ ‏رَافِعَ بْنَ خَدِيجٍ ‏ ‏عَنْ ‏ ‏كِرَاءِ ‏ ‏الْأَرْضِ بِالذَّهَبِ وَالْوَرِقِ فَقَالَ ‏ ‏لَا بَأْسَ بِهِ إِنَّمَا كَانَ النَّاسُ يُؤَاجِرُونَ عَلَى عَهْدِ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏عَلَى ‏ ‏الْمَاذِيَانَاتِ ‏ ‏وَأَقْبَالِ ‏ ‏الْجَدَاوِلِ ‏ ‏وَأَشْيَاءَ مِنْ الزَّرْعِ فَيَهْلِكُ هَذَا وَيَسْلَمُ هَذَا وَيَسْلَمُ هَذَا وَيَهْلِكُ هَذَا فَلَمْ يَكُنْ لِلنَّاسِ كِرَاءٌ إِلَّا هَذَا فَلِذَلِكَ زُجِرَ عَنْهُ فَأَمَّا شَيْءٌ مَعْلُومٌ مَضْمُونٌ فَلَا بَأْسَ بِهِ

நான் ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) அவர்களிடம் தங்கம் மற்றும் வெள்ளிக்(காசுகளுக்)கு விளைநிலத்தைக் குத்தகைக்கு விடுவது குறித்துக் கேட்டேன். அதற்கு அவர்கள், “குற்றமில்லை; நபி (ஸல்) காலத்தில் நீரோடை ஓரத்தில் விளைபவற்றை, அல்லது வாய்க்கால் முனையில் விளைபவற்றை, அல்லது விளைச்சலில் (குறிப்பிட்ட) சிலவற்றை எங்களுக்குக் கொடுத்துவிட வேண்டும் எனும் நிபந்தனையின் பேரிலேயே மக்கள் விளைநிலத்தைக் குத்தகைக்கு விட்டுவந்தனர். அதில் இவர் பாதிப்படைவார்; அவர் தப்பித்துக்கொள்வார்; அல்லது இவர் தப்பித்துக்கொள்வார்; அவர் பாதிப்படைவார். இந்தக் குத்தகை முறையைத் தவிர வேறெதுவும் அவர்களிடம் இருக்கவில்லை.

ஆதலால்தான், அது கண்டிக்கப்பட்டது. அறியப்பட்ட ஒரு பொருள் பிணையாக்கப்படுமானால் அ(தற்காக விளைநிலத்தைக் குத்தகைக்கு விடுவ)தில் குற்றமில்லை.

அறிவிப்பாளர் : ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) வழியாக ஹன்ழலா பின் கைஸ் அல் அன்ஸாரீ (ரஹ்)

அத்தியாயம்: 21, பாடம்: 19, ஹதீஸ் எண்: 2887

‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏قَالَ قَرَأْتُ عَلَى ‏ ‏مَالِكٍ ‏ ‏عَنْ ‏ ‏رَبِيعَةَ بْنِ أَبِي عَبْدِ الرَّحْمَنِ ‏ ‏عَنْ ‏ ‏حَنْظَلَةَ بْنِ قَيْسٍ ‏ ‏أَنَّهُ سَأَلَ ‏ ‏رَافِعَ بْنَ خَدِيجٍ ‏ ‏عَنْ ‏ ‏كِرَاءِ ‏ ‏الْأَرْضِ ‏ ‏فَقَالَ: ‏
نَهَى رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏عَنْ ‏ ‏كِرَاءِ ‏ ‏الْأَرْضِ ‏
‏قَالَ ‏ ‏فَقُلْتُ ‏ ‏أَبِالذَّهَبِ وَالْوَرِقِ فَقَالَ أَمَّا بِالذَّهَبِ وَالْوَرِقِ فَلَا بَأْسَ بِهِ

நான் ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) அவர்களிடம் விளைநிலத்தைக் குத்தகைக்கு விடுவது பற்றிக் கேட்டேன். அவர்கள், “விளைநிலத்தைக் குத்தகைக்கு விடுவதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தடை செய்தார்கள்” என்று பதிலளித்தார்கள். உடனே நான், “தங்கம் மற்றும் வெள்ளிக்(காசுகளுக்)கு நிலத்தைக் குத்தகைக்கு விடலாமா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “தங்கம் மற்றும் வெள்ளிக்(காசுகளுக்)கு நிலத்தைக் குத்தகைக்கு விடுவதில் குற்றமில்லை” என்றார்கள்.

அறிவிப்பாளர் : ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) வழியாக ஹன்ழலா பின் கைஸ் (ரஹ்)

அத்தியாயம்: 21, பாடம்: 18, ஹதீஸ் எண்: 2886

‏حَدَّثَنِي ‏ ‏إِسْحَقُ بْنُ مَنْصُورٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏أَبُو مُسْهِرٍ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏يَحْيَى بْنُ حَمْزَةَ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏أَبُو عَمْرٍو الْأَوْزَاعِيُّ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي النَّجَاشِيِّ ‏ ‏مَوْلَى ‏ ‏رَافِعِ بْنِ خَدِيجٍ ‏ ‏عَنْ ‏ ‏رَافِعٍ ‏ ‏أَنَّ ‏ ‏ظُهَيْرَ بْنَ رَافِعٍ وَهُوَ عَمُّهُ ‏ ‏قَالَ: ‏
أَتَانِي ‏ ‏ظُهَيْرٌ ‏ ‏فَقَالَ لَقَدْ نَهَى رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏عَنْ أَمْرٍ كَانَ بِنَا رَافِقًا فَقُلْتُ وَمَا ذَاكَ مَا قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَهُوَ حَقٌّ قَالَ سَأَلَنِي كَيْفَ تَصْنَعُونَ بِمَحَاقِلِكُمْ فَقُلْتُ نُؤَاجِرُهَا يَا رَسُولَ اللَّهِ عَلَى الرَّبِيعِ أَوْ الْأَوْسُقِ مِنْ التَّمْرِ أَوْ الشَّعِيرِ قَالَ ‏ ‏فَلَا تَفْعَلُوا ازْرَعُوهَا أَوْ أَزْرِعُوهَا أَوْ أَمْسِكُوهَا ‏


حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ حَاتِمٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ ‏ ‏عَنْ ‏ ‏عِكْرِمَةَ بْنِ عَمَّارٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي النَّجَاشِيِّ ‏ ‏عَنْ ‏ ‏رَافِعٍ ‏ ‏عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بِهَذَا وَلَمْ يَذْكُرْ عَنْ عَمِّهِ ‏ ‏ظُهَيْرٍ

ழுஹைர் பின் ராஃபிஉ (ரலி) (என் தந்தையின் சகோதரர் ஆவார். அவர்) என்னிடம் வந்து, “எங்களுக்கு உறுதுணையாக இருந்த ஒன்றைச் செய்யக் கூடாது என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) எங்களுக்குத் தடை விதித்துள்ளார்கள்” என்று கூறினார். நான், “அது என்ன? அல்லாஹ்வின் தூதர் (ஸல்) சொன்னால் அது சத்தியமானதே” என்று கூறினேன்.

அதற்கு அவர் சென்னார்: என்னிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “நீங்கள் உங்கள் விளை நிலங்களை என்ன செய்கின்றீர்கள்?” என்று கேட்டார்கள். “வாய்க்காலை ஒட்டிய பகுதியில் விளைபவற்றை எங்களுக்குக் கொடுத்துவிட வேண்டும்; அல்லது பேரீச்சம் பழத்திலிருந்தோ கோதுமையிலிருந்தோ குறிப்பிட்ட அளவை எங்களுக்குக் கொடுத்துவிட வேண்டும் எனும் நிபந்தனையின் பேரில் அவற்றைக் குத்தகைக்கு விடுகின்றோம்” என்று நான் பதிலளித்தேன்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “அவ்வாறு செய்யாதீர்கள். நீங்களே விளைவியுங்கள்; அல்லது பிறரிடம் (கைமாறு பெறாமல்) விளைவிக்கக் கொடுத்துவிடுங்கள்; அல்லது விளைவிக்காமல் அப்படியே விட்டுவிடுங்கள்” என்று சொன்னார்கள்.

அறிவிப்பாளர் : ராஃபிஉ பின் கதீஜ் (ரலி)


குறிப்பு :

இக்ரிமா பின் அம்மார் (ரஹ்) வழி அறிவிப்பில், “ராஃபிஉ பின் கதீஜ் (ரலி), நேரடியாக நபி (ஸல்) அவர்களிடமிருந்து அறிவித்தாக இடம்பெற்றுள்ளது; அவர் தம் தந்தையின் சகோதரர் ழுஹைர் (ரலி) கூறினார்கள் எனும் குறிப்பு இடம்பெறவில்லை.

அத்தியாயம்: 21, பாடம்: 18, ஹதீஸ் எண்: 2885

‏و حَدَّثَنِي ‏ ‏عَلِيُّ بْنُ حُجْرٍ السَّعْدِيُّ ‏ ‏وَيَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏إِسْمَعِيلُ وَهُوَ ابْنُ عُلَيَّةَ ‏ ‏عَنْ ‏ ‏أَيُّوبَ ‏ ‏عَنْ ‏ ‏يَعْلَى بْنِ حَكِيمٍ ‏ ‏عَنْ ‏ ‏سُلَيْمَانَ بْنِ يَسَارٍ ‏ ‏عَنْ ‏ ‏رَافِعِ بْنِ خَدِيجٍ ‏ ‏قَالَ: ‏
كُنَّا ‏ ‏نُحَاقِلُ ‏ ‏الْأَرْضَ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَنُكْرِيهَا ‏ ‏بِالثُّلُثِ وَالرُّبُعِ وَالطَّعَامِ الْمُسَمَّى فَجَاءَنَا ذَاتَ يَوْمٍ رَجُلٌ مَنْ عُمُومَتِي فَقَالَ نَهَانَا رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏عَنْ أَمْرٍ كَانَ لَنَا نَافِعًا وَطَوَاعِيَةُ اللَّهِ وَرَسُولِهِ أَنْفَعُ لَنَا نَهَانَا أَنْ نُحَاقِلَ بِالْأَرْضِ ‏ ‏فَنُكْرِيَهَا عَلَى الثُّلُثِ وَالرُّبُعِ وَالطَّعَامِ الْمُسَمَّى وَأَمَرَ رَبَّ الْأَرْضِ أَنْ يَزْرَعَهَا ‏ ‏أَوْ يُزْرِعَهَا ‏ ‏وَكَرِهَ ‏ ‏كِرَاءَهَا ‏ ‏وَمَا سِوَى ذَلِكَ ‏


و حَدَّثَنَاه ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏حَمَّادُ بْنُ زَيْدٍ ‏ ‏عَنْ ‏ ‏أَيُّوبَ ‏ ‏قَالَ كَتَبَ إِلَيَّ ‏ ‏يَعْلَى بْنُ حَكِيمٍ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏سُلَيْمَانَ بْنَ يَسَارٍ ‏ ‏يُحَدِّثُ عَنْ ‏ ‏رَافِعِ بْنِ خَدِيجٍ ‏ ‏قَالَ ‏ ‏كُنَّا ‏ ‏نُحَاقِلُ ‏ ‏بِالْأَرْضِ ‏ ‏فَنُكْرِيهَا ‏ ‏عَلَى الثُّلُثِ وَالرُّبُعِ ثُمَّ ذَكَرَ ‏ ‏بِمِثْلِ حَدِيثِ ‏ ‏ابْنِ عُلَيَّةَ ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ حَبِيبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏خَالِدُ بْنُ الْحَارِثِ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏عَمْرُو بْنُ عَلِيٍّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الْأَعْلَى ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏عَبْدَةُ ‏ ‏كُلُّهُمْ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ أَبِي عَرُوبَةَ ‏ ‏عَنْ ‏ ‏يَعْلَى بْنِ حَكِيمٍ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏مِثْلَهُ ‏ ‏و حَدَّثَنِيهِ ‏ ‏أَبُو الطَّاهِرِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏جَرِيرُ بْنُ حَازِمٍ ‏ ‏عَنْ ‏ ‏يَعْلَى بْنِ حَكِيمٍ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏عَنْ ‏ ‏رَافِعِ بْنِ خَدِيجٍ ‏ ‏عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَلَمْ يَقُلْ عَنْ بَعْضِ عُمُومَتِهِ

நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) காலத்தில் (விளைச்சலில்) மூன்றில் ஒரு பாகத்தை, அல்லது நான்கில் ஒரு பாகத்தை, அல்லது குறிப்பிட்ட தானியங்களை எங்களுக்குக் கொடுத்துவிட வேண்டும் எனும் நிபந்தனையின் பேரில் விளைநிலத்தைக் குத்தகைக்கு விட்டுக்கொண்டிருந்தோம்.

இந்நிலையில் ஒரு நாள் என் தந்தையின் சகோதரர்களில் ஒருவர் எங்களிடம் வந்து, “நமக்குப் பயனளித்துக்கொண்டிருந்த ஒரு காரியத்தை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) நமக்குத் தடை விதித்துவிட்டார்கள். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கட்டுப்படுவதே அதைவிட மிகவும் நமக்குப் பயனளிக்கக்கூடியதாகும். நிலத்தைக் குத்தகைக்கு விட்டு, (விளைச்சலில்) மூன்றில் ஒரு பாகத்தையோ, நான்கில் ஒரு பாகத்தையோ, குறிப்பிட்ட தானியங்களையோ பெற்றுக்கொள்ள தடை விதித்துள்ளார்கள். நிலத்தின் உரிமையாளர் அதைத் தாமே விளைவிக்க வேண்டும்; அல்லது (யாருக்கேனும்) விளைவிக்கக் கொடுத்துவிட வேண்டும் எனக் கட்டளையிட்டார்கள்; நிலத்தைக் குத்தகைக்கு விடுவதையும் அது அல்லாத முறையில் பயனடைவதையும் வெறுத்தார்கள்” என்றார்.

அறிவிப்பாளர் : ராஃபிஉ பின் கதீஜ் (ரலி)


குறிப்புகள் :

அய்யூப் (ரஹ்) வழி அறிவிப்பில், “தானிய விளைச்சலில் மூன்றில் அல்லது நான்கில் ஒரு பாகத்தை எங்களுக்குத் தந்துவிட வேண்டும் எனும் நிபந்தனையின் பேரில் விளைநிலத்தைக் குத்தகைக்கு விட்டுக் கொண்டிருந்தோம் …” என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.

ஜரீர் (ரஹ்) வழி அறிவிப்பில், “ நபி (ஸல்) கூறினார்கள் …“ என ராஃபிஉ (ரலி) தெரிவித்ததாகவே இடம்பெற்றுள்ளதேயன்றி, தம் தந்தையின் சகோதரர்கள் சிலரிடமிருந்து அறிவித்ததாக இடம்பெறவில்லை.

அத்தியாயம்: 21, பாடம்: 17, ஹதீஸ் எண்: 2861

‏و حَدَّثَنِي ‏ ‏أَبُو كَامِلٍ الْجَحْدَرِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حَمَّادٌ يَعْنِي ابْنَ زَيْدٍ ‏ ‏عَنْ ‏ ‏مَطَرٍ الْوَرَّاقِ ‏ ‏عَنْ ‏ ‏عَطَاءٍ ‏ ‏عَنْ ‏ ‏جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ: ‏
أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏نَهَى عَنْ كِرَاءِ الْأَرْضِ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) நிலத்தைக் குத்தகைக்கு விடுவதைத் தடை செய்தார்கள்.

அறிவிப்பாளர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)


குறிப்பு :

நில உரிமையாளர், தம்முடைய நிலத்தில் உழைக்கும் விவசாயி இடம், விளைச்சல் எப்படி இருந்தாலும் குறிப்பிட்ட அளவு தானியத்தைத் தமக்குக் குத்தகைத் தொகைக்காகத் தந்தாக வேண்டும் என்ற முன் நிபந்தனையுடன் நிலத்தைக் குத்தகைக்கு விடும் பழக்கம் அரபியர்களிடம் இருந்து வந்தது. அவ்வகைக் குத்தகை இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டது.