அத்தியாயம்: 18, பாடம்: 3, ஹதீஸ் எண்: 2693

‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ بِشْرٍ الْحَرِيرِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُعَاوِيَةُ يَعْنِي ابْنَ سَلَّامٍ ‏ ‏عَنْ ‏ ‏يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ ‏ ‏أَنَّ ‏ ‏يَعْلَى بْنَ حَكِيمٍ ‏ ‏أَخْبَرَهُ أَنَّ ‏ ‏سَعِيدَ بْنَ جُبَيْرٍ ‏ ‏أَخْبَرَهُ أَنَّهُ سَمِعَ ‏ ‏ابْنَ عَبَّاسٍ ‏ ‏قَالَ :‏

‏إِذَا حَرَّمَ الرَّجُلُ عَلَيْهِ امْرَأَتَهُ فَهِيَ يَمِينٌ يُكَفِّرُهَا وَقَالَ : ‏ ‏لَقَدْ كَانَ لَكُمْ فِي رَسُولِ اللَّهِ أُسْوَةٌ حَسَنَةٌ

இப்னு அப்பாஸ் (ரலி), “ஒருவர் தம் மனைவியை நோக்கி ‘நீ எனக்குத் தடை செய்யப்பட்டவள்’ எனக் கூறி(த் தமக்கு ஹலாலை ஹராமானதாக ஆக்கி)னால், அது பரிகாரம் செய்ய வேண்டிய சத்தியமாகும்” என்று கூறிவிட்டு, “உங்களுக்கு அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி இருக்கிறது” என்றும் கூறினார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக ஸயீத் பின் ஜுபைர் (ரஹ்)

அத்தியாயம்: 18, பாடம்: 3, ஹதீஸ் எண்: 2692

‏و حَدَّثَنَا ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏إِسْمَعِيلُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏عَنْ ‏ ‏هِشَامٍ يَعْنِي الدَّسْتَوَائِيَّ ‏ ‏قَالَ كَتَبَ إِلَيَّ ‏ ‏يَحْيَى بْنُ أَبِي كَثِيرٍ ‏ ‏يُحَدِّثُ عَنْ ‏ ‏يَعْلَى بْنِ حَكِيمٍ ‏ ‏عَنْ ‏ ‏سَعِيدِ بْنِ جُبَيْرٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عَبَّاسٍ : ‏

‏أَنَّهُ كَانَ يَقُولُ ‏ ‏فِي الْحَرَامِ يَمِينٌ يُكَفِّرُهَا وَقَالَ ‏ ‏ابْنُ عَبَّاسٍ : ‏لَقَدْ كَانَ لَكُمْ فِي رَسُولِ اللَّهِ أُسْوَةٌ حَسَنَةٌ

(ஒருவர் தம் ஹலாலான மனைவியை நோக்கி ‘நீ எனக்கு ஹராமானவள்‘  எனக் கூறி) ஹலாலை, ஹராமாக்கிக் கொள்வதானது பரிகாரம் செய்ய வேண்டிய சத்தியம் ஆகும்” என்று இப்னு அப்பாஸ் (ரலி) கூறிவிட்டு, “உங்களுக்கு அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி இருக்கிறது” எனும் (33:21ஆவது) இறைவசனத்தை ஓதினார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக ஸயீத் பின் ஜுபைர் (ரஹ்)

அத்தியாயம்: 18, பாடம்: 2, ஹதீஸ் எண்: 2691

‏و حَدَّثَنَا ‏ ‏إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏سُلَيْمَانُ بْنُ حَرْبٍ ‏ ‏عَنْ ‏ ‏حَمَّادِ بْنِ زَيْدٍ ‏ ‏عَنْ ‏ ‏أَيُّوبَ السَّخْتِيَانِيِّ ‏ ‏عَنْ ‏ ‏إِبْرَاهِيمَ بْنِ مَيْسَرَةَ ‏ ‏عَنْ ‏ ‏طَاوُسٍ : ‏

‏أَنَّ ‏ ‏أَبَا الصَّهْبَاءِ ‏ ‏قَالَ ‏ ‏لِابْنِ عَبَّاسٍ ‏ ‏هَاتِ مِنْ ‏ ‏هَنَاتِكَ ‏ ‏أَلَمْ يَكُنْ الطَّلَاقُ الثَّلَاثُ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَأَبِي بَكْرٍ ‏ ‏وَاحِدَةً فَقَالَ قَدْ كَانَ ذَلِكَ فَلَمَّا كَانَ فِي عَهْدِ ‏ ‏عُمَرَ ‏ ‏تَتَايَعَ النَّاسُ فِي الطَّلَاقِ ‏ ‏فَأَجَازَهُ ‏ ‏عَلَيْهِمْ

அபுஸ்ஸஹ்பா (ரஹ்), இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம், “உங்களிடமுள்ள அரிய தகவல்களைக் கூறுங்கள்; (ஒரே நேரத்தில் சொல்லப்படும்) மூன்று தலாக்குகள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) காலத்திலும் அபூபக்ரு (ரலி) காலத்திலும் ஒரு தலாக்காக இருக்கவில்லையா?” என்று கேட்டார்கள். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி), “ஆம்; அவ்வாறுதான் இருந்தது. பின்னர் உமர் (ரலி) காலத்தில் மக்கள் தலாக்கை மலிவாக்கி அவசரக் கோலத்தில் செய்ய ஆரம்பித்தபோது,  உமர் (ரலி) (ஒரே நேரத்தில் சொல்லப்படும்) மூன்று தலாக்குகளை அவர்களுக்கு அனுமதித்தார்கள்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி வழியாக தாவூஸ் பின் கைஸான் (ரஹ்)

அத்தியாயம்: 18, பாடம்: 2, ஹதீஸ் எண்: 2690

‏حَدَّثَنَا ‏ ‏إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏رَوْحُ بْنُ عُبَادَةَ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ جُرَيْجٍ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏ابْنُ رَافِعٍ ‏ ‏وَاللَّفْظُ لَهُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الرَّزَّاقِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ جُرَيْجٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏ابْنُ طَاوُسٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ : ‏

‏أَنَّ ‏ ‏أَبَا الصَّهْبَاءِ ‏ ‏قَالَ ‏ ‏لِابْنِ عَبَّاسٍ ‏ ‏أَتَعْلَمُ أَنَّمَا ‏ ‏كَانَتْ الثَّلَاثُ تُجْعَلُ وَاحِدَةً عَلَى عَهْدِ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَأَبِي بَكْرٍ ‏ ‏وَثَلَاثًا مِنْ إِمَارَةِ ‏ ‏عُمَرَ ‏ ‏فَقَالَ ‏ ‏ابْنُ عَبَّاسٍ ‏ ‏نَعَمْ

அபுஸ்ஸஹ்பா (ரஹ்), இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம், “நபி (ஸல்) மற்றும் அபூபக்ரு (ரலி) ஆகியோரது காலத்திலும் உமர் (ரலி) அவர்களது ஆட்சியில் (முதல்) மூன்று வருடங்களிலும் (ஒரே நேரத்தில் சொல்லப்படும்) மூன்று தலாக்குகள், ஒரு தலாக்காகவே கருதப்பட்டுவந்ததை நீங்கள் அறிவீர்களா?” என்று கேட்டார்கள். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) “ஆம்” என்றார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி வழியாக தாவூஸ் பின் கைஸான் (ரஹ்)

அத்தியாயம்: 18, பாடம்: 2, ஹதீஸ் எண்: 2689

‏حَدَّثَنَا ‏ ‏إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏وَمُحَمَّدُ بْنُ رَافِعٍ ‏ ‏وَاللَّفْظُ ‏ ‏لِابْنِ رَافِعٍ ‏ ‏قَالَ ‏ ‏إِسْحَقُ ‏ ‏أَخْبَرَنَا وَقَالَ ‏ ‏ابْنُ رَافِعٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الرَّزَّاقِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏مَعْمَرٌ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ طَاوُسٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عَبَّاسٍ ‏ ‏قَالَ : ‏

‏كَانَ الطَّلَاقُ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَأَبِي بَكْرٍ ‏ ‏وَسَنَتَيْنِ مِنْ خِلَافَةِ ‏ ‏عُمَرَ ‏ ‏طَلَاقُ الثَّلَاثِ وَاحِدَةً فَقَالَ ‏ ‏عُمَرُ بْنُ الْخَطَّابِ ‏ ‏إِنَّ النَّاسَ قَدْ اسْتَعْجَلُوا فِي أَمْرٍ قَدْ كَانَتْ لَهُمْ فِيهِ ‏ ‏أَنَاةٌ ‏ ‏فَلَوْ ‏ ‏أَمْضَيْنَاهُ ‏ ‏عَلَيْهِمْ ‏ ‏فَأَمْضَاهُ ‏ ‏عَلَيْهِمْ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) மற்றும் அபூபக்ரு (ரலி) அவர்களது ஆட்சிக் காலத்திலும், உமர் (ரலி) அவர்களது ஆட்சியின் (முதல்) இரண்டு ஆண்டுகளிலும் (ஒரே நேரத்தில் சொல்லப்படும்) மூன்று தலாக்குகள் என்பது ஒரு தலாக்காகவே (நடைமுறையில்) இருந்தது. பின்னர் உமர் பின் அல்கத்தாப் (ரலி), “தங்களுக்குச் சாதகமாக இருக்கும் ஒரு விஷயத்தில் மக்கள் (இப்போது) அவசரம் காட்டுகிறார்கள். எனவே, (ஒரே நேரத்தில் மக்களால் சொல்லப்படும்) மூன்று தலாக்குகளை (மீட்டுக்கொள்ள இயலாதவாறு) அவர்களுக்குப் பாதகமானதாக நாம் செயல்படுத்துவோம்” என்று கூறி, அவ்வாறே அதைச் செயல்படுத்தினார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி


குறிப்பு :

ஒரே நேரத்தில் சொல்லப்படும் மூன்று தலாக்குகள், ஒரு தலாக்காகவே கணிக்கப்படும்.

அத்தியாயம்: 17, பாடம்: 19, ஹதீஸ் எண்: 2674

‏و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ رَافِعٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الرَّزَّاقِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏مَعْمَرٌ ‏ ‏عَنْ ‏ ‏هَمَّامِ بْنِ مُنَبِّهٍ ‏ ‏قَالَ هَذَا مَا حَدَّثَنَا ‏ ‏أَبُو هُرَيْرَةَ ‏ ‏عَنْ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَذَكَرَ أَحَادِيثَ مِنْهَا : ‏

‏وَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لَوْلَا ‏ ‏بَنُو إِسْرَائِيلَ ‏ ‏لَمْ يَخْبُثْ الطَّعَامُ وَلَمْ ‏ ‏يَخْنَزْ ‏ ‏اللَّحْمُ وَلَوْلَا ‏ ‏حَوَّاءُ ‏ ‏لَمْ تَخُنْ أُنْثَى زَوْجَهَا الدَّهْرَ

“இஸ்ரவேலர்கள் இருந்திராவிட்டால் உணவு கெட்டுப்போயிருக்காது; இறைச்சி துர்நாற்றமடித்திருக்காது. ஹவ்வா(விடம் தடை மீறும் சுயநலம்) இருந்திராவிட்டால் எந்தப் பெண்ணும் ஒருபோதும் தன் கணவனை ஏமாற்றி இருக்கமாட்டாள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)


குறிப்பு :

“அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து அபூஹுரைரா (ரலி) எமக்கு அறிவித்த ஹதீஸ்களுள் மேற்காணும் ஹதீஸும் ஒன்றாகும்” என்று இதன் அறிவிப்பாளர்களுள் ஒருவரான ஹம்மாம் பின் முனப்பிஹ் (ரஹ்) கூறினார்.

அத்தியாயம்: 17, பாடம்: 19, ஹதீஸ் எண்: 2673

‏حَدَّثَنَا ‏ ‏هَارُونُ بْنُ مَعْرُوفٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏عَمْرُو بْنُ الْحَارِثِ ‏ ‏أَنَّ ‏ ‏أَبَا يُونُسَ ‏ ‏مَوْلَى ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏حَدَّثَهُ عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ : ‏

‏عَنْ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏لَوْلَا ‏ ‏حَوَّاءُ ‏ ‏لَمْ تَخُنْ أُنْثَى زَوْجَهَا الدَّهْرَ

“ஹவ்வா(விடம் தடை மீறும் சுயநலம்) இருந்திராவிட்டால், எந்தப் பெண்ணும் தன் கணவனை ஒருபோதும் ஏமாற்றி இருக்கமாட்டாள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

அத்தியாயம்: 18, பாடம்: 1, ஹதீஸ் எண்: 2676

‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏وَقُتَيْبَةُ ‏ ‏وَابْنُ رُمْحٍ ‏ ‏وَاللَّفْظُ ‏ ‏لِيَحْيَى ‏ ‏قَالَ ‏ ‏قُتَيْبَةُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏لَيْثٌ ‏ ‏وَقَالَ الْآخَرَانِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏اللَّيْثُ بْنُ سَعْدٍ ‏ ‏عَنْ ‏ ‏نَافِعٍ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ : ‏

‏أَنَّهُ طَلَّقَ امْرَأَةً لَهُ وَهِيَ حَائِضٌ تَطْلِيقَةً وَاحِدَةً ‏ ‏فَأَمَرَهُ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَنْ يُرَاجِعَهَا ثُمَّ ‏ ‏يُمْسِكَهَا ‏ ‏حَتَّى تَطْهُرَ ثُمَّ تَحِيضَ عِنْدَهُ حَيْضَةً أُخْرَى ثُمَّ يُمْهِلَهَا حَتَّى تَطْهُرَ مِنْ حَيْضَتِهَا فَإِنْ أَرَادَ أَنْ يُطَلِّقَهَا فَلْيُطَلِّقْهَا حِينَ تَطْهُرُ مِنْ قَبْلِ أَنْ يُجَامِعَهَا فَتِلْكَ الْعِدَّةُ الَّتِي أَمَرَ اللَّهُ أَنْ يُطَلَّقَ لَهَا النِّسَاءُ ‏


وَزَادَ ‏ ‏ابْنُ رُمْحٍ ‏ ‏فِي رِوَايَتِهِ وَكَانَ ‏ ‏عَبْدُ اللَّهِ ‏ ‏إِذَا سُئِلَ عَنْ ذَلِكَ قَالَ لِأَحَدِهِمْ أَمَّا أَنْتَ طَلَّقْتَ امْرَأَتَكَ مَرَّةً أَوْ مَرَّتَيْنِ فَإِنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَمَرَنِي بِهَذَا وَإِنْ كُنْتَ طَلَّقْتَهَا ثَلَاثًا فَقَدْ حَرُمَتْ عَلَيْكَ حَتَّى تَنْكِحَ زَوْجًا غَيْرَكَ وَعَصَيْتَ اللَّهَ فِيمَا أَمَرَكَ مِنْ طَلَاقِ امْرَأَتِكَ ‏ ‏قَالَ ‏ ‏مُسْلِم ‏ ‏جَوَّدَ ‏ ‏اللَّيْثُ ‏ ‏فِي قَوْلِهِ تَطْلِيقَةً وَاحِدَةً

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி), தம் மனைவி மாதவிடாயிலிருந்தபோது அவரை ஒரு தலாக் சொல்லிவிட்டார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “அவர் தம் மனைவியைத் திரும்ப அழைத்துக்கொள்ள வேண்டும். பிறகு மாதவிடாயிலிருந்து தூய்மையாகும்வரை மனைவியை அவரிடமே வைத்துக்கொள்ள வேண்டும். பிறகு இரண்டாவது முறை மாதவிடாய் ஏற்பட்டு, அதன் பிறகு அந்த மாதவிடாயிலிருந்தும் அவள் தூய்மையடையும்வரை காத்திருக்க வேண்டும். பின்னர் அவளைத் தலாக் சொல்ல விரும்பினால் அவளுடன் உடலுறவு கொள்வதற்கு முன் அவள் தூய்மையானவளாய் இருக்கும்போது தலாக் சொல்லிக்கொள்ளட்டும்! இதுவே, பெண்களை மணவிலக்குச் செய்ய அல்லாஹ் உத்தரவிட்டுள்ள காலமாகும்” என்று அப்துல்லாஹ் பின் உமர் அவர்களுக்குக் கட்டளையிட்டார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) வழியாக  நாஃபிஉ (ரஹ்)


குறிப்பு :

முஹம்மது பின் ரும்ஹு (ரஹ்) வழி அறிவிப்பில், “அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடம் இது தொடர்பாகக் கேட்கப்பட்டபோது “நீ உன் மனைவியை ஒரு முறை அல்லது இரு முறை தலாக் சொல்லிக்கொள்! (அப்போதுதான் அவளை நீ திரும்ப அழைத்துக்கொள்ளலாம்) இவ்வாறு(நிகழ்ந்தபோது)தான், (திரும்ப அழைத்துக்கொள்ளுமாறு) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) எனக்கு உத்தரவிட்டார்கள். நீ உன் மனைவியை மூன்று தலாக் சொல்லியிருந்தால், அவள் வேறொரு கணவனை மணக்காத வரையில் அவள் உனக்குத் தடை செய்யப்பட்டவளாக ஆகிவிடுவாள். மேலும், உன் மனைவியை மணவிலக்குச் செய்யும்போது, அல்லாஹ் உனக்கு இட்ட உத்தரவிற்கு நீ மாறு செய்தவனாகவும் ஆகிவிடுவாய்” என்று இப்னு உமர் (ரலி), ஒருவரிடம் கூறினார்கள் என அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 18, பாடம்: 1, ஹதீஸ் எண்: 2688

‏و حَدَّثَنِي ‏ ‏هَارُونُ بْنُ عَبْدِ اللَّهِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حَجَّاجُ بْنُ مُحَمَّدٍ ‏ ‏قَالَ قَالَ ‏ ‏ابْنُ جُرَيْجٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏أَبُو الزُّبَيْرِ :

‏أَنَّهُ سَمِعَ ‏ ‏عَبْدَ الرَّحْمَنِ بْنَ أَيْمَنَ ‏ ‏مَوْلَى ‏ ‏عَزَّةَ ‏ ‏يَسْأَلُ ‏ ‏ابْنَ عُمَرَ ‏ ‏وَأَبُو الزُّبَيْرِ ‏ ‏يَسْمَعُ ذَلِكَ كَيْفَ ‏ ‏تَرَى فِي رَجُلٍ طَلَّقَ امْرَأَتَهُ حَائِضًا فَقَالَ طَلَّقَ ‏ ‏ابْنُ عُمَرَ ‏ ‏امْرَأَتَهُ وَهِيَ حَائِضٌ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَسَأَلَ ‏ ‏عُمَرُ ‏ ‏رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقَالَ إِنَّ ‏ ‏عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ ‏ ‏طَلَّقَ امْرَأَتَهُ وَهِيَ حَائِضٌ فَقَالَ لَهُ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لِيُرَاجِعْهَا فَرَدَّهَا وَقَالَ إِذَا طَهُرَتْ فَلْيُطَلِّقْ أَوْ لِيُمْسِكْ قَالَ ‏ ‏ابْنُ عُمَرَ ‏ ‏وَقَرَأَ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَا أَيُّهَا النَّبِيُّ إِذَا طَلَّقْتُمْ النِّسَاءَ فَطَلِّقُوهُنَّ فِي ‏ ‏قُبُلِ ‏ ‏عِدَّتِهِنَّ ‏


و حَدَّثَنِي ‏ ‏هَارُونُ بْنُ عَبْدِ اللَّهِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو عَاصِمٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ جُرَيْجٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي الزُّبَيْرِ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عُمَرَ ‏ ‏نَحْوَ هَذِهِ الْقِصَّةِ ‏ ‏و حَدَّثَنِيهِ ‏ ‏مُحَمَّدُ بْنُ رَافِعٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الرَّزَّاقِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ جُرَيْجٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏أَبُو الزُّبَيْرِ ‏ ‏أَنَّهُ سَمِعَ ‏ ‏عَبْدَ الرَّحْمَنِ بْنَ أَيْمَنَ ‏ ‏مَوْلَى ‏ ‏عُرْوَةَ ‏ ‏يَسْأَلُ ‏ ‏ابْنَ عُمَرَ ‏ ‏وَأَبُو الزُّبَيْرِ ‏ ‏يَسْمَعُ بِمِثْلِ حَدِيثِ ‏ ‏حَجَّاجٍ ‏ ‏وَفِيهِ بَعْضُ الزِّيَادَةِ ‏ ‏قَالَ ‏ ‏مُسْلِم ‏ ‏أَخْطَأَ حَيْثُ قَالَ ‏ ‏عُرْوَةَ ‏ ‏إِنَّمَا هُوَ مَوْلَى ‏ ‏عَزَّةَ

‘அஸ்ஸா’ என்பாரின் முன்னாள் அடிமையாயிருந்த அப்துர் ரஹ்மான் பின் அய்மன் (ரஹ்), அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடம், “ஒருவர் தம் மனைவியை, அவள் மாதவிடாயிலிருந்தபோது மணவிலக்குச் செய்துவிட்டார். இது குறித்து நீங்கள் என்ன கருதுகின்றீர்கள்?” என்று கேட்டார். அப்போது (அங்கிருந்த)  நான் அதைச் செவியுற்றுக்கொண்டு இருந்தேன். அதற்கு அப்துல்லாஹ் பின் உமர் (ரலி), “நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் என் மனைவியை, அவள் மாதவிடாயிலிருந்தபோது மணவிலக்குச் செய்துவிட்டேன். ஆகவே, (என் தந்தை) உமர் (ரலி), அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம்,  ‘அப்துல்லாஹ் பின் உமர், மாதவிடாயிலிருந்த தம் மனைவியை மணவிலக்குச் செய்துவிட்டார்’  என்று கூறி, அது குறித்து(த் தீர்ப்பு)க் கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்), ‘உங்கள் மகன் தம் மனைவியைத் திரும்ப அழைத்துக்கொள்ளட்டும்!‘ என்று சொன்னார்கள். அவ்வாறே நான் அவளைத் திரும்ப அழைத்துக்கொண்டேன். மேலும், நபி (ஸல்),  ‘மனைவி மாதவிடாயிலிருந்து தூய்மையடைந்ததும் அவர் மணவிலக்குச் செய்து கொள்ளட்டும்; அல்லது தம்மிடமே (மனைவியாக) வைத்துக்கொள்ளட்டும்!’ என்றார்கள்”

மேலும், அப்துல்லாஹ் பின் உமர் (ரலி), “நபியே! பெண்களை நீங்கள் மணவிலக்குச் செய்தால், அவர்கள் ‘இத்தா’வைக் கடைப்பிடிப்பதற்கேற்ப அதன் ஆரம்பப் பகுதியில் மணவிலக்குச் செய்யுங்கள்  என்ற (65:1) வசனத்தை நபி (ஸல்) ஓதிக் காட்டினார்கள்” என்றும் கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) வழியாக அபுஸ் ஸுபைர் முஹம்மது பின் முஸ்லிம் (ரஹ்)


குறிப்புகள் :

முஹம்மது பின் ராஃபிஉ (ரஹ்) வழி அறிவிப்பில், “உர்வா என்பாரின் முன்னாள் அடிமையாயிருந்த அப்துர் ரஹ்மான் பின் அய்மன் (ரஹ்), அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடம் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்று கேட்டார்கள். அப்போது நான் அதைச் செவியுற்றுக்கொண்டிருந்தேன் என்று அபுஸ்ஸுபைர் (ரஹ்) கூறினார்கள் …” என ஹதீஸ் ஆரம்பமாகிறது.

“உர்வா என்பாரின் முன்னாள் அடிமையாயிருந்த … என்று அப்துர் ரஸ்ஸாக் (ரஹ்) அறிவித்திருப்பது பிழையாகும். அப்துர் ரஹ்மான் பின் அய்மன் (ரஹ்), என்பவர் ‘அஸ்ஸா’ என்பாரின் முன்னாள் அடிமை ஆவார்” என்று இமாம் முஸ்லிம் (ரஹ்) உறுதியுடன் கூறுகின்றார்கள்.

அத்தியாயம்: 18, பாடம்: 1, ஹதீஸ் எண்: 2687

‏و حَدَّثَنَا ‏ ‏إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏عَبْدُ الرَّزَّاقِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ جُرَيْجٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏ابْنُ طَاوُسٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ : ‏

‏أَنَّهُ سَمِعَ ‏ ‏ابْنَ عُمَرَ ‏ ‏يُسْأَلُ عَنْ رَجُلٍ طَلَّقَ امْرَأَتَهُ حَائِضًا فَقَالَ أَتَعْرِفُ ‏ ‏عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ ‏ ‏قَالَ نَعَمْ قَالَ فَإِنَّهُ طَلَّقَ امْرَأَتَهُ حَائِضًا فَذَهَبَ ‏ ‏عُمَرُ ‏ ‏إِلَى النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَأَخْبَرَهُ الْخَبَرَ ‏ ‏فَأَمَرَهُ أَنْ يُرَاجِعَهَا


قَالَ لَمْ أَسْمَعْهُ يَزِيدُ عَلَى ذَلِكَ لِأَبِيهِ

“ஒருவர் தம் மனைவியை, அவள் மாதவிடாயிலிருந்தபோது மணவிலக்குச் செய்துவிட்டால் (சட்டம் என்ன)?” என்று அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், “அப்துல்லாஹ் பின் உமர் என்பவர் யார் என்று உமக்குத் தெரியுமா?” என்று கேட்டார்கள். நான் “ஆம்” என்றேன். அதற்கு அவர்கள், “அவர், அவருடைய மனைவியை, அவள் மாதவிடாயிலிருந்தபோது மணவிலக்குச் செய்துவிட்டார். ஆகவே, (அவருடைய தந்தை) உமர் (ரலி), நபி (ஸல்) அவர்களிடம் சென்று இச்செய்தியைத் தெரிவித்தார்கள். அப்போது நபி (ஸல்), “உங்கள் மகன் தம் மனைவியைத் திரும்ப அழைத்துக்கொள்ளட்டும்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) வழியாக தாவூஸ் பின் கைஸான் (ரஹ்)


குறிப்புகள் :

இந்த ஹதீஸில் இப்னு உமர் (ரலி), தம்மைப் பற்றி ‘அவர்‘ என்று படர்க்கையாகக் குறிப்பிடுகின்றார்.

இதன் அறிவிப்பாளர்களுள் ஒருவரான அப்துல்லாஹ் பின் தாவூஸ் (ரஹ்) கூறுவதாவது:

(இந்த ஹதீஸை, இந்த அளவு மட்டுமே என் தந்தை தாவூஸ் (ரஹ்) அவர்களிடமிருந்து நான் செவியுற்றேன்) அவர்கள் இதை விடக் கூடுதலாக வேறொன்றும் கூறியதை நான் செவியுற்றதில்லை.