அத்தியாயம்: 18, பாடம்: 1, ஹதீஸ் எண்: 2686

‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏وَابْنُ بَشَّارٍ ‏ ‏قَالَ ‏ ‏ابْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏عَنْ ‏ ‏أَنَسِ بْنِ سِيرِينَ ‏ ‏أَنَّهُ سَمِعَ ‏ ‏ابْنَ عُمَرَ ‏ ‏قَالَ : ‏

‏طَلَّقْتُ امْرَأَتِي وَهِيَ حَائِضٌ فَأَتَى ‏ ‏عُمَرُ ‏ ‏النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَأَخْبَرَهُ فَقَالَ ‏ ‏مُرْهُ فَلْيُرَاجِعْهَا ثُمَّ إِذَا طَهُرَتْ فَلْيُطَلِّقْهَا ‏


‏قُلْتُ ‏ ‏لِابْنِ عُمَرَ ‏ ‏أَفَاحْتَسَبْتَ ‏ ‏بِتِلْكَ التَّطْلِيقَةِ قَالَ ‏ ‏فَمَهْ ‏ ‏و حَدَّثَنِيهِ ‏ ‏يَحْيَى بْنُ حَبِيبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏خَالِدُ بْنُ الْحَارِثِ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنِيهِ ‏ ‏عَبْدُ الرَّحْمَنِ بْنُ بِشْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏بَهْزٌ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏غَيْرَ أَنَّ فِي حَدِيثِهِمَا لِيَرْجِعْهَا وَفِي حَدِيثِهِمَا قَالَ قُلْتُ لَهُ أَتَحْتَسِبُ بِهَا قَالَ ‏ ‏فَمَهْ

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) கூறினார்கள்: மாதவிடாயிலிருந்த என் மனைவியை நான் மணவிலக்குச் செய்துவிட்டேன். ஆகவே, (என் தந்தை) உமர் (ரலி) நபி (ஸல்) அவர்களிடம் சென்று இதைத் தெரிவித்தார்கள். அப்போது நபி (ஸல்), “அவர் தம் மனைவியைத் திரும்ப அழைத்துக்கொள்ளட்டும்! பிறகு (மாத விடாயிலிருந்து) அவள் தூய்மையடைந்ததும் மணவிலக்குச் செய்யட்டும்! என்பதை உங்கள் மகனுக்குக் கட்டளையிடுங்கள்” என்று (என் தந்தையிடம்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) வழியாக அனஸ் பின் ஸீரீன் (ரஹ்)


குறிப்புகள் :

நான் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடம், “(மாதவிடாயின்போது சொல்லப்பட்ட அந்தத் தலாக்கை) மணவிலக்காக நீங்கள் கருதினீர்களா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “வேறென்ன?” என்று கேட்டார்கள் என்று அறிவிப்பாளர் அனஸ் பின் ஸீரீன் (ரஹ்) கூறுகின்றார்.

காலித் பின் அல் ஹாரிஸ் (ரஹ்) வழி அறிவிப்பில், “நான் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடம், (மாதவிடாயின்போது நீங்கள் சொன்ன தலாக்கை) மணவிலக்காகக் கருதுகின்றீர்களா? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், (தலாக்காகக் கருதாமல்) வேறென்ன? எனக் கேட்டார்கள்” என்று (சிறு மாற்றத்துடன்) இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 18, பாடம்: 1, ஹதீஸ் எண்: 2685

‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏خَالِدُ بْنُ عَبْدِ اللَّهِ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ الْمَلِكِ ‏ ‏عَنْ ‏ ‏أَنَسِ بْنِ سِيرِينَ ‏ ‏قَالَ : ‏

‏سَأَلْتُ ‏ ‏ابْنَ عُمَرَ ‏ ‏عَنْ امْرَأَتِهِ الَّتِي طَلَّقَ فَقَالَ طَلَّقْتُهَا وَهِيَ حَائِضٌ فَذُكِرَ ذَلِكَ ‏ ‏لِعُمَرَ ‏ ‏فَذَكَرَهُ لِلنَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقَالَ ‏ ‏مُرْهُ فَلْيُرَاجِعْهَا فَإِذَا طَهُرَتْ فَلْيُطَلِّقْهَا لِطُهْرِهَا قَالَ فَرَاجَعْتُهَا ثُمَّ طَلَّقْتُهَا لِطُهْرِهَا ‏


قُلْتُ ‏ ‏فَاعْتَدَدْتَ بِتِلْكَ التَّطْلِيقَةِ الَّتِي طَلَّقْتَ وَهِيَ حَائِضٌ قَالَ مَا ‏ ‏لِيَ لَا أَعْتَدُّ بِهَا وَإِنْ كُنْتُ عَجَزْتُ وَاسْتَحْمَقْتُ

நான் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடம், அவர்களால் மணவிலக்குச் செய்யப்பட்ட அவர்களுடைய மனைவியைப் பற்றிக் கேட்டேன். அப்போது அப்துல்லாஹ் பின் உமர் (ரலி), “நான் என் மனைவியை, அவள் மாதவிடாயிலிருந்தபோது மணவிலக்குச் செய்துவிட்டேன். இது பற்றி (என் தந்தை) உமர் (ரலி) அவர்களிடம் தெரிவிக்கப்பட்டபோது, அவர்கள் அதை நபி (ஸல்) அவர்களிடம் தெரிவித்தார்கள். அப்போது நபி (ஸல்) (என் தந்தையிடம்), “அவர் தம் மனைவியைத் திரும்ப அழைத்துக்கொள்ளட்டும்! அவள் (மாதவிடாயிலிருந்து) தூய்மையடைந்ததும் அவள் தூய்மையாக இருக்கும்போது அவளை மணவிலக்குச் செய்துகொள்ளட்டும்! என்பதை நீங்கள் உங்கள் மகனுக்குக் கட்டளையிடுங்கள்” என்று கூறினார்கள். ஆகவே, நான் என் மனைவியைத் திரும்ப அழைத்துக் கொண்டேன். பிறகு அவள் தூய்மையுடனிருந்தபோது அவளை நான் மணவிலக்குச் செய்தேன்” என்று கூறினார்கள்.

நான் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடம், “மாதவிடாயிலிருந்தபோது (உங்கள் மனைவிக்கு) நீங்கள் சொன்ன தலாக்கை மணவிலக்காகக் கருதினீர்களா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “நான் (எனது கடமையை நிறைவேற்ற) இயலாமலும் அதைப் பற்றி முழுமையாக அறிந்துகொள்ளாமலும் இருந்தாலும்கூட, அதை நான் மணவிலக்காகக் கருதாமல் இருக்க முடியாதே!” என்று கேட்டார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) வழியாக அனஸ் பின் ஸீரீன் (ரஹ்)

அத்தியாயம்: 18, பாடம்: 1, ஹதீஸ் எண்: 2684

‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏وَابْنُ بَشَّارٍ ‏ ‏قَالَ ‏ ‏ابْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏عَنْ ‏ ‏قَتَادَةَ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏يُونُسَ بْنَ جُبَيْرٍ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏ابْنَ عُمَرَ ‏ ‏يَقُولُ : ‏

‏طَلَّقْتُ امْرَأَتِي وَهِيَ حَائِضٌ فَأَتَى ‏ ‏عُمَرُ ‏ ‏النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَذَكَرَ ذَلِكَ لَهُ فَقَالَ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لِيُرَاجِعْهَا فَإِذَا طَهُرَتْ فَإِنْ شَاءَ فَلْيُطَلِّقْهَا ‏


قَالَ ‏ ‏فَقُلْتُ ‏ ‏لِابْنِ عُمَرَ ‏ ‏أَفَاحْتَسَبْتَ بِهَا ‏ ‏قَالَ ‏ ‏مَا يَمْنَعُهُ أَرَأَيْتَ إِنْ ‏ ‏عَجَزَ وَاسْتَحْمَقَ

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) கூறினார்கள்: நான் என் மனைவியை, அவள் மாதவிடாயிலிருந்தபோது மணவிலக்குச் செய்துவிட்டேன். ஆகவே, (என் தந்தை) உமர் (ரலி), நபி (ஸல்) அவர்களிடம் அது குறித்துத் தெரிவித்தார்கள். அப்போது நபி (ஸல்), “தம் மனைவியை (உங்கள் மகன்) திரும்ப அழைத்துக்கொள்ளட்டும்! அவள் (மாதவிடாயிலிருந்து) தூய்மையடைந்ததும் விரும்பினால் அவர் மணவிலக்குச் செய்துகொள்ளட்டும்! (என்று உத்தரவிடுங்கள்)” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி) வழியாக யூனுஸ் பின் ஜுபைர் (ரஹ்)


குறிப்பு :

நான் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடம், “(மாதவிடாய் காலத்தில் சொல்லப்பட்ட) அந்த மணவிலக்கை நீங்கள் மணவிலக்காகக் கருதினீர்களா?” என்று கேட்டேன். அதற்கு “ஒருவன் (தனது கடமையை நிறைவேற்ற) இயலாதவனாகவும், அதைப் பற்றிய முழுமையான அறிவில்லாதவனாகவும் இருந்துவிட்டால் அ(து, மணவிலக்காக ஆகிவிடுவதை)த் தடுக்கக்கூடிய ஏதும் உண்டு எனக் கருதுகின்றாயா?” என்று கேட்டார்கள்.

அத்தியாயம்: 18, பாடம்: 1, ஹதீஸ் எண்: 2683

‏و حَدَّثَنِي ‏ ‏يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ الدَّوْرَقِيُّ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عُلَيَّةَ ‏ ‏عَنْ ‏ ‏يُونُسَ ‏ ‏عَنْ ‏ ‏مُحَمَّدِ بْنِ سِيرِينَ ‏ ‏عَنْ ‏ ‏يُونُسَ بْنِ جُبَيْرٍ ‏ ‏قَالَ قُلْتُ ‏ ‏لِابْنِ عُمَرَ : ‏

‏رَجُلٌ طَلَّقَ ‏ ‏امْرَأَتَهُ ‏ ‏وَهِيَ حَائِضٌ فَقَالَ أَتَعْرِفُ ‏ ‏عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ ‏ ‏فَإِنَّهُ طَلَّقَ امْرَأَتَهُ وَهِيَ حَائِضٌ فَأَتَى ‏ ‏عُمَرُ ‏ ‏النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَسَأَلَهُ ‏ ‏فَأَمَرَهُ أَنْ يَرْجِعَهَا ثُمَّ تَسْتَقْبِلَ عِدَّتَهَا ‏


قَالَ ‏ ‏فَقُلْتُ لَهُ ‏ ‏إِذَا طَلَّقَ الرَّجُلُ امْرَأَتَهُ وَهِيَ حَائِضٌ أَتَعْتَدُّ بِتِلْكَ التَّطْلِيقَةِ فَقَالَ ‏ ‏فَمَهْ ‏ ‏أَوَ إِنْ ‏ ‏عَجَزَ وَاسْتَحْمَقَ

நான் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடம், “ஒருவர் மாதவிடாயிலிருக்கும் தம் மனைவியை மணவிலக்குச் செய்துவிட்டால் (சட்டம் என்ன)?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “அப்துல்லாஹ் பின் உமரை உங்களுக்குத் தெரியுமா? மாதவிடாயிலிருந்த அவருடைய மனைவியை அவர் மணவிலக்குச் செய்துவிட்டார். ஆகவே, (அவருடைய தந்தை) உமர் (ரலி) நபி (ஸல்) அவர்களிடம் சென்று இது குறித்துக் கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்),  ‘உங்கள் மகன் தம் மனைவியைத் திரும்ப அழைத்துக்கொள்ள வேண்டும்; பின்னர் அவள் தனது இத்தாவை எதிர்பார்த்திருக்க வேண்டும் (பிறகு விரும்பினால் மணவிலக்குச் செய்துகொள்ளட்டும்!) என உத்தரவிடுங்கள்’ என்று கூறினார்கள்” என விளக்கினார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி) வழியாக யூனுஸ் பின் ஜுபைர் (ரஹ்)


குறிப்புகள் :

இந்த ஹதீஸில் இப்னு உமர் (ரலி), தம்மைப் பற்றி ‘அவர்‘ என்று படர்க்கையாகக் குறிப்பிடுகின்றார்.

நான் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடம், “ஒருவர் மாதவிடாயிலிருந்த தம் மனைவியைத் தலாக் சொல்லிவிட்டால், அதை மணவிலக்காக நீங்கள் கருதுவீர்களா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “வேறென்ன? ஒருவன் (தனது கடமையை நிறைவேற்ற) இயலாதவனாகவும், அதைப் பற்றிய முழுமையான அறிவில்லாதவனாகவும் இருந்துவிட்டால் மணவிலக்கு நிகழாமல் போய்விடுமா?” என்று கேட்டார்கள் என யூனுஸ் பின் ஜுபைர் (ரஹ்) கூறுகின்றார்.

அத்தியாயம்: 18, பாடம்: 1, ஹதீஸ் எண்: 2682

‏و حَدَّثَنِي ‏ ‏عَلِيُّ بْنُ حُجْرٍ السَّعْدِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏إِسْمَعِيلُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏عَنْ ‏ ‏أَيُّوبَ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ سِيرِينَ ‏ ‏قَالَ ‏ ‏مَكَثْتُ عِشْرِينَ سَنَةً يُحَدِّثُنِي مَنْ لَا أَتَّهِمُ : ‏

‏أَنَّ ‏ ‏ابْنَ عُمَرَ ‏ ‏طَلَّقَ امْرَأَتَهُ ثَلَاثًا وَهِيَ حَائِضٌ فَأُمِرَ أَنْ يُرَاجِعَهَا فَجَعَلْتُ لَا أَتَّهِمُهُمْ وَلَا أَعْرِفُ الْحَدِيثَ حَتَّى لَقِيتُ ‏ ‏أَبَا غَلَّابٍ يُونُسَ بْنَ جُبَيْرٍ الْبَاهِلِيَّ ‏ ‏وَكَانَ ‏ ‏ذَا ثَبَتٍ ‏ ‏فَحَدَّثَنِي أَنَّهُ سَأَلَ ‏ ‏ابْنَ عُمَرَ ‏ ‏فَحَدَّثَهُ ‏ ‏أَنَّهُ طَلَّقَ امْرَأَتَهُ تَطْلِيقَةً وَهِيَ حَائِضٌ ‏ ‏فَأُمِرَ أَنْ يَرْجِعَهَا ‏


قَالَ ‏ ‏قُلْتُ أَفَحُسِبَتْ عَلَيْهِ قَالَ ‏ ‏فَمَهْ ‏ ‏أَوَ إِنْ ‏ ‏عَجَزَ وَاسْتَحْمَقَ ‏ ‏و حَدَّثَنَاه ‏ ‏أَبُو الرَّبِيعِ ‏ ‏وَقُتَيْبَةُ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏حَمَّادٌ ‏ ‏عَنْ ‏ ‏أَيُّوبَ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏نَحْوَهُ غَيْرَ أَنَّهُ قَالَ فَسَأَلَ ‏ ‏عُمَرُ ‏ ‏النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَأَمَرَهُ ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الْوَارِثِ بْنُ عَبْدِ الصَّمَدِ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏أَبِي ‏ ‏عَنْ ‏ ‏جَدِّي ‏ ‏عَنْ ‏ ‏أَيُّوبَ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ وَقَالَ فِي الْحَدِيثِ ‏ ‏فَسَأَلَ ‏ ‏عُمَرُ ‏ ‏النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏عَنْ ذَلِكَ فَأَمَرَهُ أَنْ يُرَاجِعَهَا حَتَّى يُطَلِّقَهَا طَاهِرًا مِنْ غَيْرِ جِمَاعٍ وَقَالَ يُطَلِّقُهَا فِي ‏ ‏قُبُلِ ‏ ‏عِدَّتِهَا

நான் நம்பத் தகுந்த சிலர் என்னிடம், “அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) தம் மனைவியை, அவர் மாதவிடாயிலிருந்தபோது மூன்று தலாக் சொல்லிவிட்டார்; பின்னர் திரும்ப அழைத்துக்கொள்ளுமாறு பணிக்கப்பட்டார்” என இருபது வருடங்களாக அறிவித்துவந்தனர். நான் அவர்களைச் சந்தேகிக்க முடியாமலும், அந்த ஹதீஸை(ப் பற்றிய உண்மை நிலையை) அறியாதவனாகவும் இருந்துவந்தேன்.

இந்நிலையில், அபூஃகல்லாப் யூனுஸ் பின் ஜுபைர் அல்பாஹிலீ (ரஹ்) அவர்களை நான் சந்தித்(தபோது இந்த ஹதீஸின் உண்மைத் தன்மையைப் பற்றிக் கேட்டுவைத்)தேன். யூனுஸ் பின் ஜுபைர் (ரஹ்) நம்பத் தகுந்தவராய் இருந்தார்கள். அதற்கு, “நான் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடம் (அதைப் பற்றிக்) கேட்டேன். அப்போது அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) என்னிடம் ‘நான் என் மனைவியை, அவள் மாதவிடாயிலிருந்தபோது ஒரு தலாக் சொல்லிவிட்டேன். அப்போது அவளைத் திரும்ப அழைத்துக்கொள்ளுமாறு எனக்குக் கட்டளையிடப்பட்டது’  என்று என்னிடம் கூறினார்கள். நான் அவர்களிடம், ‘எனில், அது மணவிலக்காகக் கருதப்பட்டதா?’  என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘வேறென்ன? ஒருவன் (தனது கடமையை நிறைவேற்ற) இயலாதவனாகவும், அதைப் பற்றிய முழுமையான அறிவில்லாதவனாகவும் இருந்துவிட்டால் மணவிலக்கு நிகழாமல் போய்விடுமா?’ என்று கேட்டார்கள்” என யூனுஸ் பின் ஜுபைர் (ரஹ்) என்னிடம் விளக்கினார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி) வழியாக யூனுஸ் பின் ஜுபைர் (ரஹ்) & ஸீரீன் (ரஹ்)


குறிப்புகள் :

ஹம்மாது (ரஹ்) வழி அறிவிப்பில், “… ஆகவே, உமர் (ரலி) நபி (ஸல்) அவர்களிடம் அதைப் பற்றிக் கேட்டார்கள். அப்போது அவர்களிடம் ‘உங்கள் மகனுக்குக் கட்டளையிடுங்கள் … (அவர் தம் மனைவியைத் திரும்ப அழைத்துக்கொள்ளட்டும்!’)  என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்” என இடம்பெற்றுள்ளது.

அய்யூப் (ரஹ்) வழி வேறோர் அறிவிப்பில், “… ஆகவே உமர் (ரலி) அதைப் பற்றி நபி (ஸல்) அவர்களிடம் வினவினார்கள். அப்போது, ‘அவர் தம் மனைவியைத் திரும்ப அழைத்துக் கொள்ளட்டும்! பிறகு உடலுறவு நடைபெறாத தூய்மையான நிலையில் அவளை மணவிலக்குச் செய்யட்டும்!; இத்தாவை எதிர்கொள்வதற்கு ஏற்ற நாட்களில் அவளை அவர் மணவிலக்குச் செய்யுமாறு உங்கள் மகனுக்குக் கட்டளை இடுங்கள்’ என்று நபி (ஸல்) உத்தரவிட்டார்கள்” என இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 18, பாடம்: 1, ஹதீஸ் எண்: 2681

‏و حَدَّثَنِي ‏ ‏أَحْمَدُ بْنُ عُثْمَانَ بْنِ حَكِيمٍ الْأَوْدِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏خَالِدُ بْنُ مَخْلَدٍ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏سُلَيْمَانُ وَهُوَ ابْنُ بِلَالٍ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ دِينَارٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عُمَرَ : ‏

‏أَنَّهُ طَلَّقَ امْرَأَتَهُ وَهِيَ حَائِضٌ فَسَأَلَ ‏ ‏عُمَرُ ‏ ‏عَنْ ذَلِكَ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقَالَ ‏ ‏مُرْهُ فَلْيُرَاجِعْهَا حَتَّى تَطْهُرَ ثُمَّ تَحِيضَ حَيْضَةً أُخْرَى ثُمَّ تَطْهُرَ ثُمَّ يُطَلِّقُ بَعْدُ أَوْ يُمْسِكُ

நான் என் மனைவியை, அவள் மாதவிடாயிலிருந்தபோது தலாக் சொல்லிவிட்டேன். ஆகவே, (என் தந்தை) உமர் (ரலி) இதைப் பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்டார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “அவர், தம் மனைவியைத் திரும்ப அழைத்துக் கொள்ளட்டும்! அவள் மாதவிடாயிலிருந்து தூய்மையடைந்து, பிறகு இரண்டாவது மாத விடாய் ஏற்பட்டு, அதிலிருந்தும் தூய்மையடையட்டும்! பின்னர் அவர் (விரும்பினால்) தலாக் சொல்லிக்கொள்ளட்டும். அல்லது தம்மிடம் (மனைவியாக) வைத்துக்கொள்ளட்டும்! என்று உங்கள் மகனுக்குக் கட்டளையிடுங்கள்” என்று (என் தந்தையிடம்) சொன்னார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)

அத்தியாயம்: 18, பாடம்: 1, ஹதீஸ் எண்: 2680

‏و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَزُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏وَابْنُ نُمَيْرٍ ‏ ‏وَاللَّفْظُ ‏ ‏لِأَبِي بَكْرٍ ‏ ‏قَالُوا حَدَّثَنَا ‏ ‏وَكِيعٌ ‏ ‏عَنْ ‏ ‏سُفْيَانَ ‏ ‏عَنْ ‏ ‏مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ ‏ ‏مَوْلَى آلِ ‏ ‏طَلْحَةَ ‏ ‏عَنْ ‏ ‏سَالِمٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عُمَرَ : ‏

‏أَنَّهُ طَلَّقَ امْرَأَتَهُ وَهِيَ حَائِضٌ فَذَكَرَ ذَلِكَ ‏ ‏عُمَرُ ‏ ‏لِلنَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقَالَ ‏ ‏مُرْهُ فَلْيُرَاجِعْهَا ثُمَّ لِيُطَلِّقْهَا طَاهِرًا أَوْ حَامِلًا

நான் என் மனைவியை, அவள் மாதவிடாயிலிருந்தபோது தலாக் சொல்லிவிட்டேன். ஆகவே, (என் தந்தை) உமர் (ரலி) இதைப் பற்றி நபி (ஸல்) அவர்களிடம் தெரிவித்தார்கள். அப்போது நபி (ஸல்) (என் தந்தையிடம்), “அவர் தம் மனைவியைத் திரும்ப அழைத்துக்கொள்ளட்டும்! பின்னர் அவள் மாதவிடாயிலிருந்து தூய்மை அடைந்திருக்கும்போது, அல்லது (இத்தாவைக் கணக்கிடுவதற்கு வசதியாக) அவள் கர்ப்பமுற்றிருக்கும்போது அவளைத் தலாக் சொல்லிக்கொள்ளட்டும்! என்று உங்கள் மகனுக்குக் கட்டளையிடுங்கள்” எனக் கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)

அத்தியாயம்: 18, பாடம்: 1, ஹதீஸ் எண்: 2679

‏حَدَّثَنِي ‏ ‏عَبْدُ بْنُ حُمَيْدٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدٌ وَهُوَ ابْنُ أَخِي الزُّهْرِيِّ ‏ ‏عَنْ ‏ ‏عَمِّهِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏سَالِمُ بْنُ عَبْدِ اللَّهِ ‏ ‏أَنَّ ‏ ‏عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ ‏ ‏قَالَ : ‏

‏طَلَّقْتُ امْرَأَتِي وَهِيَ حَائِضٌ فَذَكَرَ ذَلِكَ ‏ ‏عُمَرُ ‏ ‏لِلنَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَتَغَيَّظَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏ثُمَّ قَالَ ‏ ‏مُرْهُ فَلْيُرَاجِعْهَا حَتَّى تَحِيضَ حَيْضَةً أُخْرَى مُسْتَقْبَلَةً سِوَى حَيْضَتِهَا الَّتِي طَلَّقَهَا فِيهَا فَإِنْ بَدَا لَهُ أَنْ يُطَلِّقَهَا فَلْيُطَلِّقْهَا طَاهِرًا مِنْ حَيْضَتِهَا قَبْلَ أَنْ ‏ ‏يَمَسَّهَا ‏ ‏فَذَلِكَ الطَّلَاقُ لِلْعِدَّةِ كَمَا أَمَرَ اللَّهُ


وَكَانَ ‏ ‏عَبْدُ اللَّهِ ‏ ‏طَلَّقَهَا تَطْلِيقَةً وَاحِدَةً فَحُسِبَتْ مِنْ طَلَاقِهَا وَرَاجَعَهَا ‏ ‏عَبْدُ اللَّهِ ‏ ‏كَمَا أَمَرَهُ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏

‏و حَدَّثَنِيهِ ‏ ‏إِسْحَقُ بْنُ مَنْصُورٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏يَزِيدُ بْنُ عَبْدِ رَبِّهِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ حَرْبٍ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏الزُّبَيْدِيُّ ‏ ‏عَنْ ‏ ‏الزُّهْرِيِّ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ غَيْرَ أَنَّهُ قَالَ قَالَ ‏ ‏ابْنُ عُمَرَ ‏ ‏فَرَاجَعْتُهَا وَحَسَبْتُ لَهَا التَّطْلِيقَةَ الَّتِي طَلَّقْتُهَا

நான் என் மனைவியை, அவள் மாதவிடாயிலிருந்தபோது தலாக் சொல்லிவிட்டேன். ஆகவே, (என் தந்தை) உமர் (ரலி) இதைப் பற்றி நபி (ஸல்) அவர்களிடம் தெரிவித்தார்கள். இதைக் கேட்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கோபப்பட்டார்கள். பிறகு (என் தந்தையிடம்,) “அவர் தம் மனைவியைத் திரும்ப அழைத்துக் கொள்ளட்டும்! அவளை அவர் மணவிலக்குச் செய்த மாதவிடாய் நாட்களை விடுத்து, அதற்கடுத்த மாதவிடாய்வரை (காத்திருக்கட்டும்). பிறகு அவளை மணவிலக்குச் செய்ய வேண்டுமென அவருக்குத் தோன்றினால், அவள் அந்த மாதவிடாயிலிருந்து தூய்மையடைந்ததும் அவளுடன் உடலுறவு கொள்வதற்கு முன் அவளைத் தலாக் சொல்லிக்கொள்ளட்டும்! என்று நீங்கள் உங்கள் மகனுக்குக் கட்டளையிடுங்கள். இதுவே அல்லாஹ் கட்டளையிட்டுள்ளபடி இத்தாவுக்குரிய தலாக் ஆகும்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : . அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)


குறிப்புகள் :

“(என் தந்தை) அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) தம் மனைவியை (அவர் மாதவிடாயிலிருந்தபோது) ஒரு தலாக் சொல்லி இருந்தார்கள். அது ஒரு தலாக்காகவே கருதப்பட்டது. பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் கட்டளைக்கேற்ப, தம் மனைவியைத் திரும்ப அழைத்துக்கொண்டார்கள்” என்று இப்னு உமர் (ரலி) அவர்களின் மகனும் இதன் அறிவிப்பாளர்களுள் ஒருவருமான ஸாலிம் (ரஹ்) கூறுகின்றார்.

அஸ்ஸுபைதி வழி அறிவிப்பில், “… எனவே, நான் என் மனைவியை திரும்ப அழைத்துக்கொண்டேன். நான் அவளுக்குச் சொன்ன தலாக்கை, (ஒரு) தலாக்காகவே கணித்திருந்தேன்” என்று அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) கூறினார்கள் என இடம் பெற்றுள்ளது.

அத்தியாயம்: 18, பாடம்: 1, ஹதீஸ் எண்: 2678

‏و حَدَّثَنِي ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏إِسْمَعِيلُ ‏ ‏عَنْ ‏ ‏أَيُّوبَ ‏ ‏عَنْ ‏ ‏نَافِعٍ : ‏

‏أَنَّ ‏ ‏ابْنَ عُمَرَ ‏ ‏طَلَّقَ امْرَأَتَهُ وَهِيَ حَائِضٌ فَسَأَلَ ‏ ‏عُمَرُ ‏ ‏النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَأَمَرَهُ أَنْ يَرْجِعَهَا ثُمَّ يُمْهِلَهَا حَتَّى تَحِيضَ حَيْضَةً أُخْرَى ثُمَّ يُمْهِلَهَا حَتَّى تَطْهُرَ ثُمَّ يُطَلِّقَهَا قَبْلَ أَنْ ‏ ‏يَمَسَّهَا ‏ ‏فَتِلْكَ الْعِدَّةُ الَّتِي أَمَرَ اللَّهُ أَنْ يُطَلَّقَ لَهَا النِّسَاءُ ‏


قَالَ ‏ ‏فَكَانَ ‏ ‏ابْنُ عُمَرَ ‏ ‏إِذَا سُئِلَ عَنْ الرَّجُلِ يُطَلِّقُ امْرَأَتَهُ وَهِيَ حَائِضٌ يَقُولُ أَمَّا أَنْتَ طَلَّقْتَهَا وَاحِدَةً أَوْ اثْنَتَيْنِ إِنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَمَرَهُ أَنْ يَرْجِعَهَا ثُمَّ يُمْهِلَهَا حَتَّى تَحِيضَ حَيْضَةً أُخْرَى ثُمَّ يُمْهِلَهَا حَتَّى تَطْهُرَ ثُمَّ يُطَلِّقَهَا قَبْلَ أَنْ يَمَسَّهَا وَأَمَّا أَنْتَ طَلَّقْتَهَا ثَلَاثًا فَقَدْ عَصَيْتَ رَبَّكَ فِيمَا أَمَرَكَ بِهِ مِنْ طَلَاقِ امْرَأَتِكَ ‏ ‏وَبَانَتْ مِنْكَ

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) தம் மனைவியை,  மாதவிடாயிலிருந்த சமயத்தில் தலாக் சொல்லிவிட்டார்கள். ஆகவே, (அவர்களின் தந்தை) உமர் பின் அல்கத்தாப் (ரலி) (இதைப் பற்றி) நபி (ஸல்) அவர்களிடம் வினவினார்கள். அப்போது நபி (ஸல்), “அவர் தம் மனைவியைத் திரும்ப அழைத்துக்கொள்ள வேண்டும். பிறகு இரண்டாவது முறை மாதவிடாய் ஏற்பட்டு, பின்னர் அந்த மாதவிடாயிலிருந்தும் அவள் தூய்மையடையும் வரை காத்திருக்க வேண்டும். பிறகு அவளுடன் உடலுறவு கொள்வதற்கு முன்னர் தலாக் சொல்லிக்கொள்ளட்டும்! இதுவே, பெண்களை மணவிலக்குச் செய்ய அல்லாஹ் உத்தரவிட்டுள்ள காலமாகும்” என்று அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களுக்குக் கட்டளையிட்டார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி) வழியாக நாஃபிஉ (ரஹ்)


குறிப்பு :

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடம், மாதவிடாயின்போது மனைவியை ஒருவர் தலாக் சொல்வதைப் பற்றி வினவப்பட்டால், “நீ ஒரு முறை, அல்லது இரு முறை அவளைத் தலாக் சொல்லியிருந்தால், உன் மனைவியைத் திரும்ப அழைத்துக்கொண்டு, பிறகு இரண்டாவது முறை அவளுக்கு மாதவிடாய் ஏற்பட்டு, பிறகு அந்த மாதவிடாயிலிருந்தும் அவள் தூய்மையடையும்வரை நீ காத்திருக்க வேண்டும். பிறகு அவளுடன் தாம்பத்திய உறவு கொள்வதற்கு முன்னர் தலாக் சொல்ல வேண்டும். இவ்வாறே எனக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கட்டளையிட்டார்கள். ஆனால், நீ அவளை மூன்று தலாக் சொல்லியிருந்தால், நீ உன் மனைவியை மணவிலக்குச் செய்யும் விஷயத்தில் அல்லாஹ் பிறப்பித்த கட்டளைக்கு மாறு செய்துவிட்டாய். எனவே, அவள் உன்னிடமிருந்து பிரிந்துவிட்டாள் (முழுமையான தலாக் நிகழ்ந்துவிட்டது)” என்று பதிலளிப்பார்கள்.

அத்தியாயம்: 18, பாடம்: 1, ஹதீஸ் எண்: 2677

‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عُبَيْدُ اللَّهِ ‏ ‏عَنْ ‏ ‏نَافِعٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عُمَرَ ‏ ‏قَالَ : ‏

‏طَلَّقْتُ امْرَأَتِي عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَهِيَ حَائِضٌ فَذَكَرَ ذَلِكَ ‏ ‏عُمَرُ ‏ ‏لِرَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقَالَ ‏ ‏مُرْهُ فَلْيُرَاجِعْهَا ثُمَّ لِيَدَعْهَا حَتَّى تَطْهُرَ ثُمَّ تَحِيضَ حَيْضَةً أُخْرَى فَإِذَا طَهُرَتْ فَلْيُطَلِّقْهَا قَبْلَ أَنْ يُجَامِعَهَا أَوْ ‏ ‏يُمْسِكْهَا ‏ ‏فَإِنَّهَا الْعِدَّةُ الَّتِي أَمَرَ اللَّهُ أَنْ يُطَلَّقَ لَهَا النِّسَاءُ ‏


قَالَ ‏ ‏عُبَيْدُ اللَّهِ ‏ ‏قُلْتُ ‏ ‏لِنَافِعٍ ‏ ‏مَا صَنَعَتْ التَّطْلِيقَةُ قَالَ وَاحِدَةٌ اعْتَدَّ بِهَا ‏ ‏و حَدَّثَنَاه ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَابْنُ الْمُثَنَّى ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ إِدْرِيسَ ‏ ‏عَنْ ‏ ‏عُبَيْدِ اللَّهِ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏نَحْوَهُ وَلَمْ يَذْكُرْ قَوْلَ ‏ ‏عُبَيْدِ اللَّهِ ‏ ‏لِنَافِعٍ ‏ ‏قَالَ ‏ ‏ابْنُ الْمُثَنَّى ‏ ‏فِي رِوَايَتِهِ فَلْيَرْجِعْهَا ‏ ‏و قَالَ ‏ ‏أَبُو بَكْرٍ ‏ ‏فَلْيُرَاجِعْهَا

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) காலத்தில் என் மனைவியை மணவிலக்குச் செய்துவிட்டேன். அப்போது அவள் மாதவிடாய் காலத்தில் இருந்தாள். ஆகவே, (என் தந்தை) உமர் பின் அல்கத்தாப் (ரலி) இதைப் பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தெரிவித்தார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) “அவர் தம் மனைவியைத் திரும்ப அழைத்துக் கொள்ளட்டும்! பிறகு அவள் மாதவிடாயிலிருந்து தூய்மையடைந்து, அடுத்து மறுபடியும் அவளுக்கு மாதவிடாய் ஏற்படும்வரை அவளை(த் தம்மிடமே) விட்டு வைக்கட்டும். பிறகு அவள் மறு மாதவிடாயிலிருந்தும் தூய்மையடைந்த பின் அவளுடன் உடலுறவு கொள்வதற்கு முன் அவளை மணவிலக்குச் செய்யட்டும். அல்லது அவளைத் தம்மிடமே (தம் மனைவியாக) வைத்திருக்கட்டும். (மாதவிடாயிலிருந்து தூய்மையடையும்) இந்தக் காலகட்டமே மனைவியரை மணவிலக்குச் செய்ய அல்லாஹ் உத்தரவிட்டுள்ள காலகட்டமாகும் என்று உங்கள் மகனுக்குக் கட்டளையிடுங்கள் ” என்று (என் தந்தையிடம்) சொன்னார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)


குறிப்புகள் :

:நான் (இந்த ஹதீஸை எனக்கு அறிவித்த) நாஃபிஉ (ரஹ்) அவர்களிடம், “(மாதவிடாயின்போது சொன்ன) அந்த ஒரு தலாக் என்னவாகும்?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “அதை ஒரு தலாக்காகக் கணித்துக்கொள்ள வேண்டும்” என்றார்கள் என இதன் அறிவிப்பாளர்களுள் ஒருவரான உபைதுல்லாஹ் பின் உமர் பின் ஹஃப்ஸு (ரஹ்) கூறுகின்றார்.

அப்துல்லாஹ் பின் இத்ரீஸ் வழி அறிவிப்பில் உபைதுல்லாஹ் பின் உமர் (ரஹ்,) நாஃபிஉ (ரஹ்) அவர்களிடம் கேட்ட வினாவைப் பற்றிய குறிப்பு இடம்பெறவில்லை.