அத்தியாயம்: 5, பாடம்: 20, ஹதீஸ் எண்: 889

‏و حَدَّثَنَا ‏ ‏عُثْمَانُ ‏ ‏وَأَبُو بَكْرِ ‏ ‏ابْنَا ‏ ‏أَبِي شَيْبَةَ ‏ ‏وَإِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏جَرِيرٍ ‏ ‏قَالَ ‏ ‏عُثْمَانُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏جَرِيرٌ ‏ ‏عَنْ ‏ ‏مَنْصُورٍ ‏ ‏عَنْ ‏ ‏إِبْرَاهِيمَ ‏ ‏عَنْ ‏ ‏عَلْقَمَةَ ‏ ‏قَالَ قَالَ ‏ ‏عَبْدُ اللَّهِ

‏صَلَّى رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏إِبْرَاهِيمُ ‏ ‏زَادَ أَوْ نَقَصَ ‏ ‏فَلَمَّا سَلَّمَ قِيلَ لَهُ يَا رَسُولَ اللَّهِ أَحَدَثَ فِي الصَّلَاةِ شَيْءٌ قَالَ وَمَا ذَاكَ قَالُوا صَلَّيْتَ كَذَا وَكَذَا قَالَ فَثَنَى رِجْلَيْهِ وَاسْتَقْبَلَ الْقِبْلَةَ فَسَجَدَ سَجْدَتَيْنِ ثُمَّ سَلَّمَ ثُمَّ أَقْبَلَ عَلَيْنَا بِوَجْهِهِ فَقَالَ ‏ ‏إِنَّهُ لَوْ حَدَثَ فِي الصَّلَاةِ شَيْءٌ أَنْبَأْتُكُمْ بِهِ وَلَكِنْ إِنَّمَا أَنَا بَشَرٌ ‏ ‏أَنْسَى كَمَا تَنْسَوْنَ فَإِذَا نَسِيتُ فَذَكِّرُونِي وَإِذَا شَكَّ أَحَدُكُمْ فِي صَلَاتِهِ ‏ ‏فَلْيَتَحَرَّ ‏ ‏الصَّوَابَ فَلْيُتِمَّ عَلَيْهِ ثُمَّ لِيَسْجُدْ سَجْدَتَيْنِ ‏

‏حَدَّثَنَاه ‏ ‏أَبُو كُرَيْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ بِشْرٍ ‏ ‏قَالَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ حَاتِمٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏وَكِيعٌ ‏ ‏كِلَاهُمَا ‏ ‏عَنْ ‏ ‏مِسْعَرٍ ‏ ‏عَنْ ‏ ‏مَنْصُورٍ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏وَفِي رِوَايَةِ ‏ ‏ابْنِ بِشْرٍ ‏ ‏فَلْيَنْظُرْ ‏ ‏أَحْرَى ‏ ‏ذَلِكَ لِلصَّوَابِ ‏ ‏وَفِي رِوَايَةِ ‏ ‏وَكِيعٍ ‏ ‏فَلْيَتَحَرَّ ‏ ‏الصَّوَابَ ‏ ‏و حَدَّثَنَاه ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الدَّارِمِيُّ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏يَحْيَى بْنُ حَسَّانَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏وُهَيْبُ بْنُ خَالِدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مَنْصُورٌ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏و قَالَ ‏ ‏مَنْصُورٌ ‏ ‏فَلْيَنْظُرْ ‏ ‏أَحْرَى ‏ ‏ذَلِكَ لِلصَّوَابِ ‏ ‏حَدَّثَنَاه ‏ ‏إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏عُبَيْدُ بْنُ سَعِيدٍ الْأُمَوِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ ‏ ‏عَنْ ‏ ‏مَنْصُورٍ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ وَقَالَ ‏ ‏فَلْيَتَحَرَّ ‏ ‏الصَّوَابَ ‏ ‏حَدَّثَنَاه ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏عَنْ ‏ ‏مَنْصُورٍ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ وَقَالَ ‏ ‏فَلْيَتَحَرَّ ‏ ‏أَقْرَبَ ذَلِكَ إِلَى الصَّوَابِ ‏ ‏حَدَّثَنَاه ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏فُضَيْلُ بْنُ عِيَاضٍ ‏ ‏عَنْ ‏ ‏مَنْصُورٍ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ وَقَالَ ‏ ‏فَلْيَتَحَرَّ ‏ ‏الَّذِي يَرَى أَنَّهُ الصَّوَابُ ‏ ‏حَدَّثَنَاه ‏ ‏ابْنُ أَبِي عُمَرَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الْعَزِيزِ بْنُ عَبْدِ الصَّمَدِ ‏ ‏عَنْ ‏ ‏مَنْصُورٍ ‏ ‏بِإِسْنَادِ هَؤُلَاءِ وَقَالَ ‏ ‏فَلْيَتَحَرَّ ‏ ‏الصَّوَابَ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (ஒருநாள் லுஹ்ரு/அஸ்ருத் தொழுகையை வழக்கத்திற்கு மாறாகக்) கூட்டியோ அல்லது குறைத்தோ தொழுவித்தார்கள். அவர்கள் ஸலாம் கொடு(த்துத் தொழுகையை முடித்)தபோது அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதரே! தொழுகையில் (புதிய மாற்றம்) ஏதும் ஏற்பட்டுவிட்டதா?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “என்ன விஷயம்?” என்று கேட்டார்கள். மக்கள், “நீங்கள் இன்னின்னவாறு தொழுவித்தீர்கள். (அதனால்தான் கேட்கிறோம்)” என்று கூறினர். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (தொழுகை இருப்பில் அமர்வதைப் போன்று) தம் கால்களை மடக்கி, கிப்லாவை முன்னோக்கி இரு ஸஜ்தாக்கள் செய்தார்கள். பிறகு ஸலாம் கொடுத்தார்கள். பின்னர் எங்களை நோக்கித் திரும்பி, “ஒரு விஷயம் தொழுகையில் (எனக்கு) ஏதேனும் புதிய அறிவிப்பு வருமானால் கட்டாயம் அதை நான் உங்களுக்குத் தெரிவித்து விடுவேன். ஆயினும் நானும் மனிதன்தான் (சில நேரங்களில்) நீங்கள் மறந்துவிடுவதைப்போன்று நானும் மறந்துவிடுகிறேன். அவ்வாறு நான் எதையேனும் மறந்துவிட்டால் எனக்கு (அதை) நினைவுபடுத்துங்கள். உங்களில் ஒருவர் தொழுகையில் (எதையேனும் கூடுதலாகவோ குறைவாகவோ செய்துவிட்டதாக) ஐயமுற்றால் நன்றாகச் சிந்தித்து முடிவு செய்து, அதற்கேற்ப தொழுகையை நிறைவு செய்யட்டும். பிறகு இரு ஸஜ்தாக்கள் செய்து கொள்ளட்டும்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)

குறிப்பு :

இப்னு பிஷ்ரு (ரஹ்) வழி அறிவிப்பில், “… அவற்றில் சரியானதை முடிவு செய்ய, அவர் நன்கு சிந்தித்துப் பார்க்கட்டும் …” என்று இடம்பெற்றுள்ளது. வகீஉ (ரஹ்) வழி அறிவிப்பில், “… சிந்தித்து முடிவு செய்யட்டும் …” என்று இடம் பெற்றுள்ளது. மன்ஸூர் (ரஹ்) வழி அறிவிப்பில் “… அவற்றில் சரியானதை முடிவு செய்ய அவர் நன்கு சிந்திக்கட்டும் …” என்று இடம்பெற்றுள்ளது. ஷுஃபா (ரஹ்) வழி அறிவிப்பில், “… அவற்றில் சரியானதற்கு மிக நெருக்கமானதைச் சிந்தித்து முடிவு செய்யட்டும் …” என்று இடம் பெற்றுள்ளது. ஃபுளைலிப்னு இஆள் (ரஹ்) வழி அறிவிப்பில், “… இதுதான் சரி எனக் கருதப்படுவதை யோசித்து முடிவு செய்யட்டும் …” என்று இடம் பெற்றுள்ளது. அப்துல் அஸீஸ் பின் அப்துஸ்ஸமது (ரஹ்) வழி அறிவிப்பில், “… சரியானதை யோசித்து முடிவு செய்யட்டும் …” என்று இடம் பெற்றுள்ளது.

அத்தியாயம்: 5, பாடம்: 20, ஹதீஸ் எண்: 888

‏و حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ أَحْمَدَ بْنِ أَبِي خَلَفٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُوسَى بْنُ دَاوُدَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُلَيْمَانُ بْنُ بِلَالٍ ‏ ‏عَنْ ‏ ‏زَيْدِ بْنِ أَسْلَمَ ‏ ‏عَنْ ‏ ‏عَطَاءِ بْنِ يَسَارٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ ‏ ‏قَالَ

‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِذَا شَكَّ أَحَدُكُمْ فِي صَلَاتِهِ فَلَمْ يَدْرِ كَمْ صَلَّى ثَلَاثًا أَمْ أَرْبَعًا فَلْيَطْرَحْ الشَّكَّ وَلْيَبْنِ عَلَى مَا اسْتَيْقَنَ ثُمَّ يَسْجُدُ سَجْدَتَيْنِ قَبْلَ أَنْ يُسَلِّمَ فَإِنْ كَانَ صَلَّى خَمْسًا شَفَعْنَ لَهُ صَلَاتَهُ وَإِنْ كَانَ صَلَّى إِتْمَامًا لِأَرْبَعٍ كَانَتَا ‏ ‏تَرْغِيمًا ‏ ‏لِلشَّيْطَانِ ‏

‏حَدَّثَنِي ‏ ‏أَحْمَدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ وَهْبٍ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏عَمِّي ‏ ‏عَبْدُ اللَّهِ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏دَاوُدُ بْنُ قَيْسٍ ‏ ‏عَنْ ‏ ‏زَيْدِ بْنِ أَسْلَمَ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏وَفِي مَعْنَاهُ ‏ ‏قَالَ ‏ ‏يَسْجُدُ سَجْدَتَيْنِ قَبْلَ السَّلَامِ كَمَا قَالَ ‏ ‏سُلَيْمَانُ بْنُ بِلَالٍ

“உங்களில் ஒருவருக்கு அவர் தொழுத ரக்அத்கள் மூன்றா நான்கா எனும் ஐயம் ஏற்பட்டால் ஐயத்துக்குரிய(அதிக எண்ணிக்கையான)தைக் கைவிட்டு, உறுதியான(குறைந்த எண்ணிக்கைய)தன் அடிப்படையில் (மீதியுள்ள ஒரு ரக்அத்தைத்) தொழுதுவிட்டு, ஸலாம் கொடுப்பதற்குமுன் இரு ஸஜ்தாக்கள் செய்து கொள்ளட்டும். அவர் ஐந்து ரக்அத்கள் தொழுதுவிட்டிருந்தால் (மறதிக்காகச் செய்த அவ்விரு ஸஜ்தாக்களால்) அவை (அவரது தொழுகையை) அவருக்கு இரட்டைப்படை ஆக்கிவிடும். அவர் நான்கு ரக்அத்கள் நிறைவாகத் தொழுதுவிட்டிருந்தால் அவ்விரு ஸஜ்தாக்களும் (தொழுகையில் குழப்பம் ஏற்படுத்திய) ஷைத்தானை முறியடித்ததாக அமைந்து விடும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)

குறிப்பு :

வேறொரு அறிவிப்பான தாவூது பின் கைஸ் (ரஹ்) வழி அறிவிப்பிலும் “ஸலாம் கொடுப்பதற்குமுன் இரு ஸஜ்தாக்கள் செய்துகொள்ளட்டும்” எனும் ஸுலைமான் பின் பிலால் (ரஹ்) கூற்றே இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 5, பாடம்: 20, ஹதீஸ் எண்: 887

‏و حَدَّثَنَا ‏ ‏أَبُو الرَّبِيعِ الزَّهْرَانِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حَمَّادٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ سَعِيدٍ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ الرَّحْمَنِ الْأَعْرَجِ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ مَالِكٍ ابْنِ بُحَيْنَةَ الْأَزْدِيِّ ‏

‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَامَ فِي ‏ ‏الشَّفْعِ ‏ ‏الَّذِي يُرِيدُ أَنْ يَجْلِسَ فِي صَلَاتِهِ فَمَضَى فِي صَلَاتِهِ فَلَمَّا كَانَ فِي آخِرِ الصَّلَاةِ سَجَدَ قَبْلَ أَنْ يُسَلِّمَ ثُمَّ سَلَّمَ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தமது தொழுகையில் இரண்டு ரக்அத்களை முடித்தபின் அமர வேண்டியவர்கள் (ஒருநாள்) அமராமல் (மூன்றாவது ரக்அத்துக்காக) எழுந்து தொடர்ந்து தொழுதார்கள். தொழுகை முடியும் தறுவாயில் ஸலாம் கொடுப்பதற்குமுன் (முதலாவது அத்தஹியாத் இருப்பில் அமராததற்குப் பரிகாரமாக இரு) ஸஜ்தாக்கள் செய்தார்கள். பிறகு ஸலாம் கொடுத்தார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மாலிக் இபுனு புஹைனா அல்-அஸ்தீ (ரலி)

அத்தியாயம்: 5, பாடம்: 20, ஹதீஸ் எண்: 886

‏و حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏لَيْثٌ ‏ ‏قَالَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏ابْنُ رُمْحٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏اللَّيْثُ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْرَجِ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ ابْنِ بُحَيْنَةَ الْأَسْدِيِّ ‏ ‏حَلِيفِ ‏ ‏بَنِي عَبْدِ الْمُطَّلِبِ

‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَامَ فِي صَلَاةِ الظُّهْرِ وَعَلَيْهِ جُلُوسٌ فَلَمَّا أَتَمَّ صَلَاتَهُ سَجَدَ سَجْدَتَيْنِ يُكَبِّرُ فِي كُلِّ سَجْدَةٍ وَهُوَ جَالِسٌ قَبْلَ أَنْ يُسَلِّمَ وَسَجَدَهُمَا النَّاسُ مَعَهُ مَكَانَ مَا نَسِيَ مِنْ الْجُلُوسِ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (ஒரு) லுஹ்ருத் தொழுகையின் (முதல் அத்தஹிய்யாத் இருப்பில்) உட்கார வேண்டியதிருக்க (உட்காராமல் மூன்றாவது ரக்அத்துக்காக) எழுந்துவிட்டார்கள். பிறகு தொழுகையை முடிக்கும் தறுவாயில் (இறுதி) அமர்வில் ஸலாம் கொடுப்பதற்குமுன் இரு ஸஜ்தாக்கள் செய்தார்கள். ஒவ்வொரு ஸஜ்தாவின் போதும் தக்பீர் கூறினார்கள். மக்களும் அவர்களோடு இரு ஸஜ்தாக்கள் செய்தனர். (முதலாவது அத்தஹியாத்) இருப்பை மறந்ததற்குப் பகரமாகத்தான் அவ்வாறு செய்தார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் புஹைனா அல்-அஸ்தீ (ரலி)

குறிப்பு :

அறிவிப்பாளர் அப்துல்லாஹ், பனூ அப்தில் முத்தலிப் குலத்தாரின் நட்புக் குலமான அல்-அஸ்தீ குலத்தவராவார்.

அத்தியாயம்: 5, பாடம்: 20, ஹதீஸ் எண்: 885

‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏قَالَ قَرَأْتُ عَلَى ‏ ‏مَالِكٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ الرَّحْمَنِ الْأَعْرَجِ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ ابْنِ بُحَيْنَةَ ‏ ‏قَالَ ‏

‏صَلَّى لَنَا رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏رَكْعَتَيْنِ مِنْ بَعْضِ الصَّلَوَاتِ ثُمَّ قَامَ فَلَمْ يَجْلِسْ فَقَامَ النَّاسُ مَعَهُ فَلَمَّا قَضَى صَلَاتَهُ وَنَظَرْنَا تَسْلِيمَهُ كَبَّرَ فَسَجَدَ سَجْدَتَيْنِ وَهُوَ جَالِسٌ قَبْلَ التَّسْلِيمِ ثُمَّ سَلَّمَ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ஒரு (நான்கு ரக்அத்கள் கொண்ட) தொழுகையில் இரண்டு ரக்அத்கள் தொழுதுவித்து முடித்தபின் (முதலாம் அத்தஹிய்யாத் இருப்பில்) அமராமல் (மூன்றாவது ரக்அத்துக்காக) எழுந்துவிட்டார்கள். எனவே, அவர்களோடு மக்களும் எழுந்துவிட்டனர். தொழுகை முடியும் தறுவாயில் நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஸலாம் கொடுப்பதை எதிர்பாத்துக் காத்திருந்தபோது, அந்த அமர்வில் ஸலாம் கொடுப்பதற்குமுன் தக்பீர் கூறி (மறதிக்குப் பரிகாரமாக) இரு ஸஜ்தாக்கள் செய்துவிட்டுப் பிறகு ஸலாம் கொடுத்தார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் புஹைனா (ரலி)

அத்தியாயம்: 5, பாடம்: 20, ஹதீஸ் எண்: 884

‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُعَاذُ بْنُ هِشَامٍ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏أَبِي ‏ ‏عَنْ ‏ ‏يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ ‏ ‏أَنَّ ‏ ‏أَبَا هُرَيْرَةَ ‏ ‏حَدَّثَهُمْ ‏

‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏إِذَا نُودِيَ بِالْأَذَانِ ‏ ‏أَدْبَرَ ‏ ‏الشَّيْطَانُ لَهُ ضُرَاطٌ حَتَّى لَا يَسْمَعَ الْأَذَانَ فَإِذَا قُضِيَ الْأَذَانُ أَقْبَلَ فَإِذَا ‏ ‏ثُوِّبَ ‏ ‏بِهَا أَدْبَرَ فَإِذَا قُضِيَ ‏ ‏التَّثْوِيبُ ‏ ‏أَقْبَلَ ‏ ‏يَخْطُرُ ‏ ‏بَيْنَ الْمَرْءِ وَنَفْسِهِ يَقُولُ اذْكُرْ كَذَا اذْكُرْ كَذَا لِمَا لَمْ يَكُنْ يَذْكُرُ حَتَّى يَظَلَّ الرَّجُلُ إِنْ يَدْرِي كَمْ صَلَّى فَإِذَا لَمْ يَدْرِ أَحَدُكُمْ كَمْ صَلَّى فَلْيَسْجُدْ سَجْدَتَيْنِ وَهُوَ جَالِسٌ ‏

‏حَدَّثَنِي ‏ ‏حَرْمَلَةُ بْنُ يَحْيَى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏عَمْرٌو ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ رَبِّهِ بْنِ سَعِيدٍ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ الرَّحْمَنِ الْأَعْرَجِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏إِنَّ الشَّيْطَانَ إِذَا ‏ ‏ثُوِّبَ ‏ ‏بِالصَّلَاةِ وَلَّى وَلَهُ ضُرَاطٌ فَذَكَرَ نَحْوَهُ وَزَادَ ‏ ‏فَهَنَّاهُ وَمَنَّاهُ وَذَكَّرَهُ مِنْ حَاجَاتِهِ مَا لَمْ يَكُنْ يَذْكُرُ

“தொழுகைக்கான அழைப்புக் கொடுக்கப்பட்டால், அது தனக்குக் கேட்காமலிருப்பதற்காக ஷைத்தான் வாயு வெளியேறியவனாகத் திரும்பி ஓடுகிறான். தொழுகை அழைப்பு முடிந்துவிட்டால் அவன் திரும்பிவருகிறான். தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டால் மீண்டும் ஓடிவிடுகிறான். இகாமத் சொல்லி முடியும்போது திரும்பிவந்து (தொழுகையில் ஈடுபட்டுள்ள) மனிதரின் உள்ளத்தில் ஊடுருவி ‘இன்ன இன்னதையெல்லாம் நினைத்துப்பார்’ என்று கூறுகிறான். அவர் நினைத்துப் பார்த்திராதவற்றையெல்லாம் நினைவூட்டுகிறான் (அதன் விளைவாக) அவர் எத்தனை ரக்அத்கள் தொழுதார் என்பதை அறியாதவராகிவிடுகிறார். உங்களில் ஒருவருக்கு, தாம் எத்தனை ரக்அத்கள் தொழுதோம் என்பது தெரியாவிட்டால் அவர் (தொழுகையின் இறுதி) அமர்வில் (மறதிக்குப் பரிகாரமாக) இரு ஸஜ்தாக்கள் செய்து கொள்ளட்டும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

குறிப்பு :

அப்துர் ரஹ்மான் அல் அஃரஜ் (ரஹ்) வழி அறிவிப்பில், “தொழுகைக்காக இகாமத் சொல்லப்படும்போது ஷைத்தான் வாயு வெளியேறியவனாக ஓடுகிறான் …” என்றும் “… அவன் திரும்பிவந்து தொழுகையில் ஈடுபட்டுள்ளவருக்குப் பல்வேறு எண்ணங்களையும் ஆசைகளையும் ஊட்டுகிறான்; அவர் நினைத்துப் பார்த்திராத பல தேவைகளையும் அவருக்கு அவன் நினைவு படுத்துகிறான் …” என்றும் அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 5, பாடம்: 20, ஹதீஸ் எண்: 883

‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏قَالَ قَرَأْتُ عَلَى ‏ ‏مَالِكٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏

‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏إِنَّ أَحَدَكُمْ إِذَا قَامَ ‏ ‏يُصَلِّي جَاءَهُ الشَّيْطَانُ ‏ ‏فَلَبَسَ عَلَيْهِ ‏ ‏حَتَّى لَا يَدْرِيَ كَمْ صَلَّى فَإِذَا وَجَدَ ذَلِكَ أَحَدُكُمْ فَلْيَسْجُدْ سَجْدَتَيْنِ وَهُوَ جَالِسٌ

‏حَدَّثَنِي ‏ ‏عَمْرٌو النَّاقِدُ ‏ ‏وَزُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ وَهُوَ ابْنُ عُيَيْنَةَ ‏ ‏قَالَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏وَمُحَمَّدُ بْنُ رُمْحٍ ‏ ‏عَنْ ‏ ‏اللَّيْثِ بْنِ سَعْدٍ ‏ ‏كِلَاهُمَا ‏ ‏عَنْ ‏ ‏الزُّهْرِيِّ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏نَحْوَهُ

“உங்களில் ஒருவர் தொழுகையில் நின்றால் அவரிடம் ஷைத்தான் வந்து அவர் எத்தனை ரக்அத்கள் தொழுதார் என்பதையே அறியாத அளவுக்குக் குழப்பத்தை ஏற்படுத்தி விடுகிறான். எனவே, உங்களில் ஒருவருக்கு இந்நிலை ஏற்பட்டால் (தொழுகையின் இறுதி) அமர்வில் அவர் இரு ஸஜ்தாக்கள் செய்துகொள்ளட்டும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)