அத்தியாயம்: 11, பாடம்: 27, ஹதீஸ் எண்: 1603

و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏وَعُقْبَةُ بْنُ مُكْرَمٍ الْعَمِّيُّ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏ابْنُ أَبِي عَدِيٍّ ‏ ‏عَنْ ‏ ‏حُسَيْنٍ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ بُرَيْدَةَ ‏ ‏قَالَ : ‏

‏قَالَ ‏ ‏سَمُرَةُ بْنُ جُنْدُبٍ ‏ ‏لَقَدْ كُنْتُ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏غُلَامًا فَكُنْتُ أَحْفَظُ عَنْهُ فَمَا يَمْنَعُنِي مِنْ الْقَوْلِ إِلَّا أَنَّ هَا هُنَا رِجَالًا هُمْ ‏ ‏أَسَنُّ ‏ ‏مِنِّي وَقَدْ ‏ ‏صَلَّيْتُ وَرَاءَ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏عَلَى ‏ ‏امْرَأَةٍ ‏ ‏مَاتَتْ فِي نِفَاسِهَا فَقَامَ عَلَيْهَا رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فِي الصَّلَاةِ وَسَطَهَا ‏


‏وَفِي رِوَايَةِ ‏ ‏ابْنِ الْمُثَنَّى ‏ ‏قَالَ حَدَّثَنِي ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ بُرَيْدَةَ ‏ ‏قَالَ فَقَامَ عَلَيْهَا لِلصَّلَاةِ وَسَطَهَا

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) காலத்தில் நான் சிறுவனாக இருந்தேன். நபி (ஸல்) அவர்களிடமிருந்து (பல தகவல்களை) மனனமிட்டுவந்தேன். அவற்றைச் சொல்லவிடாமல் என்னைத் தடுத்தது, இங்கு என்னைவிட வயதில் பெரியவர்கள் இருந்தனர் என்பதே. நான் (ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குப் பின்னால் நின்று ஒரு பெண்ணிற்காக ஜனாஸாத் தொழுகை தொழுதிருக்கிறேன். அப்பெண் பிரசவ இரத்தப்போக்கில் மரணித்திருந்தார். அத்தொழுகையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்), அந்த மையித்தின் நடுப் பகுதிக்கு நேராக நின்று தொழுவித்தார்கள்.

அறிவிப்பாளர் : ஸமுரா பின் ஜுன்துப் (ரலி)


குறிப்பு :

முஹம்மது பின் அல்முஸன்னா (ரஹ்), அப்துல்லாஹ் பின் புரைதா (ரஹ்) அவர்களிடமிருந்து அறிவிக்கும் அறிவிப்பில் “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அப்பெண்ணிற்காகத் தொழுவித்தபோது, மையித்தின் நடுப் பகுதிக்கு நேராக நின்றார்கள்” என்று ஸமுரா (ரலி) கூறியதாக இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 11, பாடம்: 27, ஹதீஸ் எண்: 1602

و حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى التَّمِيمِيُّ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏عَبْدُ الْوَارِثِ بْنُ سَعِيدٍ ‏ ‏عَنْ ‏ ‏حُسَيْنِ بْنِ ذَكْوَانَ ‏ ‏قَالَ حَدَّثَنِي ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ بُرَيْدَةَ ‏ ‏عَنْ ‏ ‏سَمُرَةَ بْنِ جُنْدُبٍ ‏ ‏قَالَ :‏

‏صَلَّيْتُ خَلْفَ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَصَلَّى عَلَى ‏ ‏أُمِّ كَعْبٍ ‏ ‏مَاتَتْ وَهِيَ نُفَسَاءُ فَقَامَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لِلصَّلَاةِ عَلَيْهَا وَسَطَهَا ‏


‏و حَدَّثَنَاه ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ الْمُبَارَكِ ‏ ‏وَيَزِيدُ بْنُ هَارُونَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏عَلِيُّ بْنُ حُجْرٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ الْمُبَارَكِ ‏ ‏وَالْفَضْلُ بْنُ مُوسَى ‏ ‏كُلُّهُمْ ‏ ‏عَنْ ‏ ‏حُسَيْنٍ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏وَلَمْ يَذْكُرُوا ‏ ‏أُمَّ كَعْبٍ

உம்மு கஅப் (ரலி) எனும் பெண்மணி பிரசவ இரத்தப்போக்கு ஏற்பட்டிருந்த நிலையில் இறந்துவிட்டார். அவருக்காக நபி (ஸல்) ஜனாஸாத் தொழுகை தொழுவித்தார்கள். அப்போது அவர்களைப் பின்பற்றி நானும் தொழுதேன். அத்தொழுகையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) மையித்தின் நடுப் பகுதிக்கு நேராக நின்று தொழுவித்தார்கள்.

அறிவிப்பாளர் : ஸமுரா பின் ஜுன்துப் (ரலி)


குறிப்பு :

ஹுஸைன் பின் தக்வான் (ரஹ்) வழி வரும் பிற அறிவிப்புகளில் நபித் தோழியின் பெயரான உம்மு கஅப் என்பது இடம்பெறவில்லை.

அத்தியாயம்: 11, பாடம்: 26, ஹதீஸ் எண்: 1601

و حَدَّثَنَا ‏ ‏نَصْرُ بْنُ عَلِيٍّ الْجَهْضَمِيُّ ‏ ‏وَإِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏كِلَاهُمَا ‏ ‏عَنْ ‏ ‏عِيسَى بْنِ يُونُسَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي حَمْزَةَ الْحِمْصِيِّ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏أَبُو الطَّاهِرِ ‏ ‏وَهَارُونُ بْنُ سَعِيدٍ الْأَيْلِيُّ ‏ ‏وَاللَّفْظُ ‏ ‏لِأَبِي الطَّاهِرِ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏عَمْرُو بْنُ الْحَارِثِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي حَمْزَةَ بْنِ سُلَيْمٍ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ الرَّحْمَنِ بْنِ جُبَيْرِ بْنِ نُفَيْرٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏عَوْفِ بْنِ مَالِكٍ الْأَشْجَعِيِّ ‏ ‏قَالَ :‏

‏سَمِعْتُ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَصَلَّى عَلَى جَنَازَةٍ يَقُولُ ‏ ‏اللَّهُمَّ اغْفِرْ لَهُ وَارْحَمْهُ وَاعْفُ عَنْهُ وَعَافِهِ وَأَكْرِمْ ‏ ‏نُزُلَهُ ‏ ‏وَوَسِّعْ ‏ ‏مُدْخَلَهُ ‏ ‏وَاغْسِلْهُ بِمَاءٍ وَثَلْجٍ وَبَرَدٍ وَنَقِّهِ مِنْ الْخَطَايَا كَمَا يُنَقَّى الثَّوْبُ الْأَبْيَضُ مِنْ ‏ ‏الدَّنَسِ ‏ ‏وَأَبْدِلْهُ دَارًا خَيْرًا مِنْ دَارِهِ وَأَهْلًا خَيْرًا مِنْ أَهْلِهِ وَزَوْجًا خَيْرًا مِنْ زَوْجِهِ وَقِهِ فِتْنَةَ الْقَبْرِ وَعَذَابَ النَّارِ ‏


قَالَ ‏ ‏عَوْفٌ ‏ ‏فَتَمَنَّيْتُ أَنْ لَوْ كُنْتُ أَنَا الْمَيِّتَ لِدُعَاءِ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏عَلَى ذَلِكَ الْمَيِّتِ

நபி (ஸல்), ஒரு ஜனாஸாத் தொழுகையில் “அல்லாஹும் மஃக்ஃபிர் லஹு, வர்ஹம்ஹு, வஃபு அன்ஹு, வ ஆஃபிஹி, வ அக்ரிம் நுஸுலஹு, வ வஸ்ஸிஃ முத்கலஹு, வஃக்சில்ஹு பி மாயின் வ ஸல்ஜின் வ பரதின், வ நக்கிஹி மினல் கத்தாயா கமா யுனக்கஸ் ஸவ்புல் அப்யளு மினத் தனஸி, வ அப்தில்ஹு தாரன் கைரம் மின் தாரிஹி, வ அஹ்லன் கைரம் மின் அஹ்லிஹி, வ ஸவ்ஜன் கைரம் மின் ஸவ்ஜிஹி, வகிஹி ஃபித்னத்தல் கப்றி வ அதாபந் நார்” என்று ஓதுவதை நான் செவியுற்றேன்.

(பொருள்: இறைவா! இவருக்கு மன்னிப்பு அளிப்பாயாக; இரக்கம் காட்டுவாயாக; இவருடைய பாவங்களைப் பொருட்படுத்தாமல் தள்ளுபடி செய்வாயாக! இவர் புகுமிடத்தைக் கண்ணியப்படுதுவாயாக! இவர் நுழைந்து தங்குமிடத்தை விசாலமாக்குவாயாக; இவருடைய குற்றங் குறைகளிலிருந்து இவரை (உன் மன்னிப்பு எனும்) நீராலும் (கருணை எனும்) பனிக்கட்டியாலும் (அருள் எனும்) ஆலங்கட்டியாலும் (கழுவி), அழுக்கிலிருந்து வெண்மையான ஆடை தூய்மைப் படுத்தப்படுவதைப் போன்று தூய்மையாக்குவாயாக; மேலும், இவ்வுலக இல்லத்தைவிடச் சிறந்த இல்லத்தை (மறுமையில்) இவருக்கு வழங்குவாயாக; இவ்வுலகக் குடும்பத்தைவிடச் சிறந்த குடும்பத்தை (மறுமையில்) வழங்குவாயாக; இவ்வுலகத் துணையைவிடச் சிறந்த துணையை (மறுமையில்) இவருக்கு வழங்குவாயாக; மண்ணறையின் கொடுங் குழப்பத்திலிருந்தும் நரக நெருப்பின் வேதனையிலிருந்தும் இவரைக் காத்தருள்வாயாக!).

அந்தப் பிரேதத்திற்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) பிரார்த்தித்ததைப் பார்த்துவிட்டு, அது நானாக இருந்திருந்தால் நன்றாகயிருந்திருக்குமே என்று நான் ஆசைப்பட்டேன்.

அறிவிப்பாளர் : அவ்ஃபு பின் மாலிக் (ரலி)

அத்தியாயம்: 11, பாடம்: 26, ஹதீஸ் எண்: 1600

و حَدَّثَنِي ‏ ‏هَارُونُ بْنُ سَعِيدٍ الْأَيْلِيُّ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏مُعَاوِيَةُ بْنُ صَالِحٍ ‏ ‏عَنْ ‏ ‏حَبِيبِ بْنِ عُبَيْدٍ ‏ ‏عَنْ ‏ ‏جُبَيْرِ بْنِ نُفَيْرٍ ‏ ‏سَمِعَهُ يَقُولُ سَمِعْتُ ‏ ‏عَوْفَ بْنَ مَالِكٍ ‏ ‏يَقُولُ :‏ ‏

‏صَلَّى رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏عَلَى جَنَازَةٍ فَحَفِظْتُ مِنْ دُعَائِهِ وَهُوَ يَقُولُ ‏ ‏اللَّهُمَّ اغْفِرْ لَهُ وَارْحَمْهُ وَعَافِهِ وَاعْفُ عَنْهُ وَأَكْرِمْ ‏ ‏نُزُلَهُ ‏ ‏وَوَسِّعْ ‏ ‏مُدْخَلَهُ ‏ ‏وَاغْسِلْهُ بِالْمَاءِ وَالثَّلْجِ وَالْبَرَدِ وَنَقِّهِ مِنْ الْخَطَايَا كَمَا نَقَّيْتَ الثَّوْبَ الْأَبْيَضَ مِنْ ‏ ‏الدَّنَسِ ‏ ‏وَأَبْدِلْهُ دَارًا خَيْرًا مِنْ دَارِهِ وَأَهْلًا خَيْرًا مِنْ أَهْلِهِ وَزَوْجًا خَيْرًا مِنْ زَوْجِهِ وَأَدْخِلْهُ الْجَنَّةَ وَأَعِذْهُ مِنْ عَذَابِ الْقَبْرِ ‏ ‏أَوْ مِنْ عَذَابِ النَّارِ ‏ ‏قَالَ حَتَّى تَمَنَّيْتُ أَنْ أَكُونَ أَنَا ذَلِكَ الْمَيِّتَ ‏


‏قَالَ ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏عَبْدُ الرَّحْمَنِ بْنُ جُبَيْرٍ ‏ ‏حَدَّثَهُ عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏عَوْفِ بْنِ مَالِكٍ ‏ ‏عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بِنَحْوِ هَذَا الْحَدِيثِ أَيْضًا ‏ ‏و حَدَّثَنَاه ‏ ‏إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُعَاوِيَةُ بْنُ صَالِحٍ ‏ ‏بِالْإِسْنَادَيْنِ جَمِيعًا ‏ ‏نَحْوَ حَدِيثِ ‏ ‏ابْنِ وَهْبٍ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ஒரு மையித்திற்காகத் தொழுகை நடத்தினார்கள். அப்போது அவர்கள் ஓதிய பிரார்த்தனையை நான் மனனமிட்டுள்ளேன். அவர்கள், “அல்லா ஹும் மஃக்பிர் லஹு, வர்ஹம்ஹு, வ ஆஃபிஹி, வஉஃபு அன்ஹு, வ அக்ரிம் நுஸுலஹு, வ வஸ்ஸிஃ முத்கலஹு, வஃக்ஸில்ஹு பில்மாயி வஸ்ஸல்ஜி வல்பரத், வ நக்கிஹி மினல் கத்தாயா கமா நக்கைத்தஸ் ஸவ்பல் அப்யள மினத் தனஸி, வ அப்தில்ஹு தாரன் கைரம் மின் தாரிஹி, வ அஹ்லன் கைரம் மின் அஹ்லிஹி, வ ஸவ்ஜன் கைரம் மின் ஸவ்ஜிஹி, வ அத்கில்ஹுல் ஜன்னத்த, வ அஇத்ஹு மின் அதாபில் கப்ரி / மின் அதாபிந் நார்” என்று பிரார்த்தித்தார்கள்.

(பொருள்: இறைவா! இவருக்கு மன்னிப்பு அளிப்பாயாக; கருணை புரிவாயாக; (மறுமையின் சோதனைகளிலிருந்து) இவரைக் காப்பாயாக; பாவங்களை மாய்ப்பாயாக; இவருக்கு நல்கப்படும் விருந்தை நல்லதாக்குவாயாக! இவர் புகுமிடத்தை (கப்றை) விசாலமாக்குவாயாக; இவருடைய குற்றங் குறைகளிலிருந்து இவரை (உன் மன்னிப்பு எனும்) நீராலும் (கருணை எனும்) பனிக் கட்டியாலும் (அருள் எனும்) ஆலங்கட்டியாலும் (கழுவி), அழுக்கிலிருந்து வெண்மையான ஆடையை நீ தூய்மைப்படுத்துவதைப் போன்று தூய்மைப்படுத்துவாயாக; மேலும், இவ்வுலக இல்லத்தைவிடச் சிறந்த இல்லத்தை (மறுமையில்) அவருக்கு வழங்குவாயாக; இவ்வுலகக் குடும்பத்தைவிடச் சிறந்த குடும்பத்தை (மறுமையில்) வழங்குவாயாக; இவ்வுலகத் துணையைவிடச் சிறந்த துணையை (மறுமையில்) இவருக்கு வழங்குவாயாக; இவரைச் சொர்க்கத்தில் பிரவேசிக்கச் செய்வாயாக; இவரை மண்ணறையின் வேதனையிலிருந்து காத்தருள்வாயாக / நரகத்தின் வேதனையிலிருந்து காத்தருள்வாயாக!).

அறிவிப்பாளர் : அவ்ஃபு பின் மாலிக் (ரலி)


குறிப்பு :

அல்லாஹ்வின் தூதருடைய பிரார்த்தனையின் உருக்கத்தைப் பற்றிக் கூறும்போது, “அந்த மையித் நானாக இருக்கக் கூடாதா? என்று நான் ஆசைப்பட்டேன்“ என்று அறிவிப்பாளர் அவ்ஃபு (ரலி) கூறுகின்றார்.

அத்தியாயம்: 11, பாடம்: 25, ஹதீஸ் எண்: 1599

و حَدَّثَنِي ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏عَنْ ‏ ‏مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏مَسْعُودَ بْنَ الْحَكَمِ ‏ ‏يُحَدِّثُ عَنْ ‏ ‏عَلِيٍّ ‏ ‏قَالَ :‏‏

‏رَأَيْنَا رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَامَ فَقُمْنَا وَقَعَدَ فَقَعَدْنَا ‏ ‏يَعْنِي فِي الْجَنَازَةِ ‏


‏و حَدَّثَنَاه ‏ ‏مُحَمَّدُ بْنُ أَبِي بَكْرٍ الْمُقَدَّمِيُّ ‏ ‏وَعُبَيْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏يَحْيَى وَهُوَ الْقَطَّانُ ‏ ‏عَنْ ‏ ‏شُعْبَةَ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ

“அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (ஆரம்பக் காலத்தில்) ஜனாஸாவைக் கண்டு எழுந்து நின்றதைப் பார்த்தபோது நாங்களும் நின்றோம்; (பிற்காலத்தில்) அவர்கள் (எழாமல்) உட்கார்ந்துவிட்டபோது நாங்களும் உட்கார்ந்துவிட்டோம்” என்று அலீ (ரலி) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : மஸ்ஊத் பின் அல்ஹகம் (ரலி)

அத்தியாயம்: 11, பாடம்: 25, ஹதீஸ் எண்: 1598

و حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏وَإِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏وَابْنُ أَبِي عُمَرَ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏الثَّقَفِيِّ ‏ ‏قَالَ ‏ ‏ابْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الْوَهَّابِ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏يَحْيَى بْنَ سَعِيدٍ ‏ ‏قَالَ أَخْبَرَنِي ‏ ‏وَاقِدُ بْنُ عَمْرِو بْنِ سَعْدِ بْنِ مُعَاذٍ الْأَنْصَارِيُّ ‏ ‏أَنَّ ‏ ‏نَافِعَ بْنَ جُبَيْرٍ ‏ ‏أَخْبَرَهُ أَنَّ ‏ ‏مَسْعُودَ بْنَ الْحَكَمِ الْأَنْصَارِيَّ ‏ ‏أَخْبَرَهُ أَنَّهُ سَمِعَ ‏ ‏عَلِيَّ بْنَ أَبِي طَالِبٍ ‏ ‏يَقُولُ ‏ ‏فِي شَأْنِ الْجَنَائِزِ :‏‏

‏إِنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَامَ ثُمَّ قَعَدَ وَإِنَّمَا حَدَّثَ بِذَلِكَ لِأَنَّ ‏ ‏نَافِعَ بْنَ جُبَيْرٍ ‏ ‏رَأَى ‏ ‏وَاقِدَ بْنَ عَمْرٍو ‏ ‏قَامَ حَتَّى وُضِعَتْ الْجَنَازَةُ ‏


‏و حَدَّثَنَا ‏ ‏أَبُو كُرَيْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ أَبِي زَائِدَةَ ‏ ‏عَنْ ‏ ‏يَحْيَى بْنِ سَعِيدٍ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ

“அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (ஆரம்பக் காலத்தில்) ஜனாஸாவுக்காக எழுந்து நின்றார்கள்; பிற்காலத்தில் உட்கார்ந்துவிட்டார்கள்” என்று ஜனாஸாவுக்காக எழுந்து நிற்பது தொடர்பாக அலீ பின் அபீதாலிப் (ரலி) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : மஸ்ஊத் பின் அல்ஹகம் அல்அன்ஸாரி (ரலி)


குறிப்பு :

“வாகித் பின் அம்ரு (ரஹ்) ஜனாஸா வைக்கப்படும்வரை நின்றுகொண்டிருப்பதைக் கண்டபோதுதான் நாஃபிஉ பின் ஜுபைர் (ரஹ்) இந்த ஹதீஸை அறிவித்தார்” என்று அறிவிப்பாளர்களுள் ஒருவரான யஹ்யா பின ஸயீத் (ரஹ்) கூறுகின்றார்.

அத்தியாயம்: 11, பாடம்: 25, ஹதீஸ் எண்: 1597

و حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏لَيْثٌ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ رُمْحِ بْنِ الْمُهَاجِرِ ‏ ‏وَاللَّفْظُ لَهُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏اللَّيْثُ ‏ ‏عَنْ ‏ ‏يَحْيَى بْنِ سَعِيدٍ ‏ ‏عَنْ ‏ ‏وَاقِدِ بْنِ عَمْرِو بْنِ سَعْدِ بْنِ مُعَاذٍ ‏ ‏أَنَّهُ قَالَ ‏:‏

‏رَآنِي ‏ ‏نَافِعُ بْنُ جُبَيْرٍ ‏ ‏وَنَحْنُ فِي جَنَازَةٍ قَائِمًا وَقَدْ جَلَسَ يَنْتَظِرُ أَنْ ‏ ‏تُوضَعَ ‏ ‏الْجَنَازَةُ فَقَالَ لِي مَا يُقِيمُكَ فَقُلْتُ أَنْتَظِرُ أَنْ تُوضَعَ الْجَنَازَةُ لِمَا يُحَدِّثُ ‏ ‏أَبُو سَعِيدٍ الْخُدْرِيُّ ‏ ‏فَقَالَ ‏ ‏نَافِعٌ ‏ ‏فَإِنَّ ‏ ‏مَسْعُودَ بْنَ الْحَكَمِ ‏ ‏حَدَّثَنِي عَنْ ‏ ‏عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ ‏ ‏أَنَّهُ قَالَ ‏ ‏قَامَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏ثُمَّ قَعَدَ

நாங்கள் ஒரு நல்லடக்க நிகழ்ச்சியில் இருந்தபோது நாஃபிஉ பின் ஜுபைர் (ரஹ்), ஜனாஸா கீழே வைக்கப்படுவதை எதிர்பார்த்து உட்கார்ந்துகொண்டிருந்தார். நான் நின்றுகொண்டே இருந்ததைக் கண்டு, “ஏன் நிற்கின்றீர்கள்?” என்று என்னிடம் கேட்டார். நான், “ஜனாஸா வைக்கப்படுவதை எதிர்பார்த்து நின்றுகொண்டிருப்பதற்கு அபூஸயீத் அல்குத்ரீ (ரலி) அறிவிக்கும் ஒரு ஹதீஸே காரணம்” என்றேன்.

அதற்கு அவர், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (பிரேதத்தைக் கண்டால் ஆரம்பக் காலத்தில்) எழுந்து நின்றார்கள். பிற்காலத்தில் உட்கார்ந்து விட்டார்கள்” என அலீ பின் அபீதாலிப் (ரலி) கூறியதாக மஸ்ஊத் பின் அல்ஹகம் (ரலி) தமக்கு அறிவித்ததை எடுத்துச் சொன்னார்.

அறிவிப்பாளர் : மஸ்ஊத் பின் அல்ஹகம் (ரலி) வழியாக வாகித் பின் அம்ரு பின் ஸஅத் பின் முஆத் (ரஹ்)

அத்தியாயம்: 11, பாடம்: 24, ஹதீஸ் எண்: 1596

حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏غُنْدَرٌ ‏ ‏عَنْ ‏ ‏شُعْبَةَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏وَابْنُ بَشَّارٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏عَنْ ‏ ‏عَمْرِو بْنِ مُرَّةَ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ أَبِي لَيْلَى :‏‏

‏أَنَّ ‏ ‏قَيْسَ بْنَ سَعْدٍ ‏ ‏وَسَهْلَ بْنَ حُنَيْفٍ ‏ ‏كَانَا ‏ ‏بِالْقَادِسِيَّةِ ‏ ‏فَمَرَّتْ بِهِمَا جَنَازَةٌ فَقَامَا فَقِيلَ لَهُمَا إِنَّهَا مِنْ أَهْلِ الْأَرْضِ فَقَالَا إِنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مَرَّتْ بِهِ جَنَازَةٌ فَقَامَ فَقِيلَ إِنَّهُ يَهُودِيٌّ فَقَالَ ‏ ‏أَلَيْسَتْ نَفْسًا ‏


‏و حَدَّثَنِيهِ ‏ ‏الْقَاسِمُ بْنُ زَكَرِيَّاءَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عُبَيْدُ اللَّهِ بْنُ مُوسَى ‏ ‏عَنْ ‏ ‏شَيْبَانَ ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْمَشِ ‏ ‏عَنْ ‏ ‏عَمْرِو بْنِ مُرَّةَ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ وَفِيهِ فَقَالَا ‏ ‏كُنَّا مَعَ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَمَرَّتْ عَلَيْنَا جَنَازَةٌ

கைஸ் பின் ஸஅத் (ரலி), ஸஹ்லு பின் ஹுனைஃப் (ரலி) ஆகியோர் (இராக் நாட்டிலுள்ள) ‘காதிஸிய்யா’ எனும் இடத்தில் இருந்தபோது, ஒரு பிரேத(ஊர்வல)ம் அவர்களைக் கடந்து சென்றது. உடனே அவர்கள் இருவரும் எழுந்து நின்றனர். அப்போது அவர்களிடம், “இது இந்த நாட்டு (முஸ்லிமல்லாத) பிரஜையின் பிரேதமாயிற்றே?” என்று கூறப்பட்டது. அதற்கு அவ்விருவரும், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைக் கடந்து ஒரு பிரேதம் கொண்டு செல்லப்பட்டபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) எழுந்து நின்றார்கள். அப்போது அவர்களிடம், ’அது யூதரின் பிரேதம்’ எனக் கூறப்பட்டது. அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ‘அது ஓர் ஆத்மாவல்லவா?’ என்று (திருப்பிக்) கேட்டார்கள்” என்றனர்.

அறிவிப்பாளர்கள் : கைஸ் பின் ஸஅத் (ரலி), ஸஹ்லு பின் ஹுனைஃப் (ரலி) வழியாக, அப்துர் ரஹ்மான் பின் அபீலைலா (ரஹ்)


குறிப்பு :

அல் அஃமஷ் (ரஹ்) வழி அறிவிப்பில், “நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தோம். அப்போது ஒரு பிரேத (ஊர்வல)ம் எங்களைக் கடந்து சென்றது” என்று கைஸ் பின் ஸஅத் (ரலி), ஸஹ்லு பின் ஹுனைஃப் (ரலி) ஆகிய இருவரும் கூறியதாக ஹதீஸ் தொடர்கிறது.

அத்தியாயம்: 11, பாடம்: 24, ஹதீஸ் எண்: 1595

و حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ رَافِعٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الرَّزَّاقِ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ جُرَيْجٍ ‏ ‏قَالَ أَخْبَرَنِي ‏ ‏أَبُو الزُّبَيْرِ ‏ ‏أَيْضًا ‏ ‏أَنَّهُ سَمِعَ ‏ ‏جَابِرًا ‏ ‏يَقُولُ :‏ ‏

‏قَامَ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَأَصْحَابُهُ لِجَنَازَةِ يَهُودِيٍّ حَتَّى ‏ ‏تَوَارَتْ

ஒரு யூதரின் பிரேதத்திற்காக நபி (ஸல்) அவர்களும் அவர்களுடைய தோழர்களும் எழுந்து, அது (பார்வையைவிட்டு) மறையும்வரை நின்றனர்.

அறிவிப்பாளர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)

அத்தியாயம்: 11, பாடம்: 24, ஹதீஸ் எண்: 1594

و حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ رَافِعٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الرَّزَّاقِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ جُرَيْجٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏أَبُو الزُّبَيْرِ ‏ ‏أَنَّهُ سَمِعَ ‏ ‏جَابِرًا ‏ ‏يَقُولُ :‏‏

‏قَامَ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لِجَنَازَةٍ مَرَّتْ بِهِ حَتَّى ‏ ‏تَوَارَ

நபி (ஸல்), ஒரு பிரேதம் தம்மைக் கடந்து சென்றபோது எழுந்து, அது (தமது பார்வையை விட்டு) மறையும்வரை நின்றார்கள்.

அறிவிப்பாளர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)