அத்தியாயம்: 7, பாடம்: 9, ஹதீஸ் எண்: 1423

و حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏وَإِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏قَالَا أَخْبَرَنَا ‏ ‏وَكِيعٌ ‏ ‏عَنْ ‏ ‏يَعْلَى بْنِ الْحَارِثِ الْمُحَارِبِيِّ ‏ ‏عَنْ ‏ ‏إِيَاسِ بْنِ سَلَمَةَ بْنِ الْأَكْوَعِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏قَالَ :‏

‏كُنَّا ‏ ‏نُجَمِّعُ ‏ ‏مَعَ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِذَا ‏ ‏زَالَتْ ‏ ‏الشَّمْسُ ثُمَّ نَرْجِعُ نَتَتَبَّعُ ‏ ‏الْفَيْءَ

நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் சூரியன் உச்சியிலிருந்து சாயும் (நண்பகல்) நேரத்தில் ஜும்ஆவைத் தொழுவோம். பிறகு (ஒதுங்கி நடக்க) நிழல் தேடியவாறே (வீட்டுக்குத்) திரும்புவோம்.

அறிவிப்பாளர் : ஸலமா பின் அல்அக்வஉ (ரலி)

அத்தியாயம்: 7, பாடம்: 9, ஹதீஸ் எண்: 1422

و حَدَّثَنَا ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ بْنِ قَعْنَبٍ ‏ ‏وَيَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏وَعَلِيُّ بْنُ حُجْرٍ ‏ ‏قَالَ ‏ ‏يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏و قَالَ ‏ ‏الْآخَرَانِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الْعَزِيزِ بْنُ أَبِي حَازِمٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏سَهْلٍ ‏ ‏قَالَ :‏

‏مَا كُنَّا ‏ ‏نَقِيلُ ‏ ‏وَلَا ‏ ‏نَتَغَدَّى إِلَّا بَعْدَ الْجُمُعَةِ ‏


‏زَادَ ‏ ‏ابْنُ حُجْرٍ ‏ ‏فِي عَهْدِ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ

நாங்கள் ஜும்ஆத் தொழாமல் பகலுணவோ மதிய ஓய்வோ கொள்ளமாட்டோம்.

அறிவிப்பாளர் : ஸஹ்லு பின் ஸஅத் (ரலி)


குறிப்பு :

அலீ பின் ஹுஜ்ரு (ரஹ்) வழி அறிவிப்பின் தொடக்கத்தில், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) காலத்தில்” என்று அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 7, பாடம்: 09, ஹதீஸ் எண்: 1421

و حَدَّثَنِي ‏ ‏الْقَاسِمُ بْنُ زَكَرِيَّاءَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏خَالِدُ بْنُ مَخْلَدٍ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الدَّارِمِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ حَسَّانَ ‏ ‏قَالَا ‏ ‏جَمِيعًا ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُلَيْمَانُ بْنُ بِلَالٍ ‏ ‏عَنْ ‏ ‏جَعْفَرٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏أَنَّهُ سَأَلَ ‏ ‏جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ : ‏

‏مَتَى كَانَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يُصَلِّي الْجُمُعَةَ قَالَ كَانَ ‏ ‏يُصَلِّي ثُمَّ نَذْهَبُ إِلَى جِمَالِنَا فَنُرِيحُهَا ‏


‏زَادَ ‏ ‏عَبْدُ اللَّهِ ‏ ‏فِي حَدِيثِهِ حِينَ ‏ ‏تَزُولُ ‏ ‏الشَّمْسُ ‏ ‏يَعْنِي ‏ ‏النَّوَاضِحَ

நான் ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களிடம் “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) எந்த நேரத்தில் ஜும்ஆத் தொழுவார்கள்?” என்று கேட்டேன். அதற்கு, “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (ஜும்ஆ) தொழுவித்த பிறகு நாங்கள் எங்களுடைய ஒட்டகங்களிடம் சென்று அவற்றுக்கு ஓய்வளிப்போம்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) வழியாக முஹம்மது பின் அலீ பின் அல்ஹுசைன் (ரஹ்)


குறிப்பு :

அப்துல்லாஹ் பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அறிவிப்பில், “சூரியன் உச்சியிலிருந்து சாயும் (நண்பகல்) நேரத்தில் (ஜும்ஆத் தொழுவார்கள்)” என்றும், ஒட்டகங்கள் என்பது “ஏற்றத்தில் நீர் இறைத்துத் தரும் ஒட்டகங்களைக் குறிக்கும்” என்றும் அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 7, பாடம்: 09, ஹதீஸ் எண்: 1420

و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَإِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏قَالَ ‏ ‏أَبُو بَكْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ آدَمَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حَسَنُ بْنُ عَيَّاشٍ ‏ ‏عَنْ ‏ ‏جَعْفَرِ بْنِ مُحَمَّدٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ ‏ ‏قَالَ :‏‏

‏كُنَّا ‏ ‏نُصَلِّي مَعَ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏ثُمَّ نَرْجِعُ فَنُرِيحُ ‏ ‏نَوَاضِحَنَا ‏ ‏قَالَ ‏ ‏حَسَنٌ ‏ ‏فَقُلْتُ ‏ ‏لِجَعْفَرٍ ‏ ‏فِي أَيِّ سَاعَةٍ تِلْكَ قَالَ ‏ ‏زَوَالَ ‏ ‏الشَّمْسِ

நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (ஜும்ஆத்) தொழுவோம்; பிறகு திரும்பிச் சென்று (ஏற்றத்தில்) நீர் இறைத்துத் தரும் எங்கள் ஒட்டகங்களுக்கு ஓய்வளிப்போம்.

அறிவிப்பாளர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)


குறிப்பு :

ஜஅஃபர் பின் முஹம்மது (ரஹ்) அவர்களிடம் “அது எந்த நேரம்?” என்று நான் வினவினேன். அதற்கு, “சூரியன் உச்சியிலிருந்து சாயும் (நண்பகல்) நேரம்” என்று விடையளித்தார்கள் என்பதாக (இதன் அறிவிப்பாளர்களுள் ஒருவரான) ஹஸன் பின் அய்யாஷ் (ரஹ்) குறிப்பிட்டுள்ளார்.

அத்தியாயம்: 7, பாடம்: 08, ஹதீஸ் எண்: 1419

و حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏وَأَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَأَبُو كُرَيْبٍ ‏ ‏قَالَ ‏ ‏يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏وَقَالَ الْآخَرَانِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو مُعَاوِيَةَ ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْمَشِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي صَالِحٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏قَالَ :‏‏

‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مَنْ تَوَضَّأَ فَأَحْسَنَ الْوُضُوءَ ثُمَّ أَتَى الْجُمُعَةَ فَاسْتَمَعَ وَأَنْصَتَ غُفِرَ لَهُ مَا بَيْنَهُ وَبَيْنَ الْجُمُعَةِ وَزِيَادَةُ ثَلَاثَةِ أَيَّامٍ وَمَنْ مَسَّ الْحَصَى فَقَدْ لَغَا

“யார் உளூவைச் செம்மையாகச் செய்து ஜும்ஆவுக்கு வந்து (இமாமின் உரையை) செவிதாழ்த்தி மௌனமாகக் கேட்கிறாரோ அவருக்கு அந்த ஜும்ஆவிலிருந்து அடுத்த ஜும்ஆவரைக்கும் கூடுதலாக மூன்று நாட்களுக்கும் ஏற்படுகின்ற (சிறு) பாவங்கள் (யாவும்) மன்னிக்கப்படுகின்றன. யார் (இமாம் உரை நிகழ்த்தும்போது) சிறு கற்களைத் தொட்டு(விளை யாடி)க்கொண்டிருக்கிறாரோ அவர் வீணான செயலில் ஈடுபட்டுவிட்டார்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

அத்தியாயம்: 7, பாடம்: 08, ஹதீஸ் எண்: 1418

حَدَّثَنَا ‏ ‏أُمَيَّةُ بْنُ بِسْطَامٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَزِيدُ يَعْنِي ابْنَ زُرَيْعٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏رَوْحٌ ‏ ‏عَنْ ‏ ‏سُهَيْلٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ :‏‏

‏عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏مَنْ اغْتَسَلَ ثُمَّ أَتَى الْجُمُعَةَ فَصَلَّى مَا قُدِّرَ لَهُ ثُمَّ أَنْصَتَ حَتَّى يَفْرُغَ مِنْ خُطْبَتِهِ ثُمَّ ‏ ‏يُصَلِّي مَعَهُ غُفِرَ لَهُ مَا بَيْنَهُ وَبَيْنَ الْجُمُعَةِ الْأُخْرَى ‏ ‏وَفَضْلُ ‏ ‏ثَلَاثَةِ أَيَّامٍ

“ஒருவர் (வெள்ளிக்கிழமையில்) குளித்துவிட்டு ஜும்ஆத் தொழுகைக்குச் சென்று, (தனியாக) அவரால் இயன்ற அளவு தொழுது, பிறகு இமாம் தமது சொற்பொழிவை முடிக்கும்வரை வாய்மூடி மௌனமாக உரையைக் கேட்டுவிட்டு, அவருடன் சேர்ந்து தொழுகையை நிறைவேற்றுபவருக்கு அந்த ஜும்ஆவிலிருந்து அடுத்த ஜும்ஆ வரையும் கூடுதலாக மூன்று நாட்கள்வரையும் ஏற்படுகின்ற (சிறு) பாவங்கள் (அனைத்தும்) மன்னிக்கப்படுகின்றன” என்று நபி (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

அத்தியாயம்: 7, பாடம்: 07, ஹதீஸ் எண்: 1417

و حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَعْقُوبُ يَعْنِي ابْنَ عَبْدِ الرَّحْمَنِ ‏ ‏عَنْ ‏ ‏سُهَيْلٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏:‏

‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏عَلَى كُلِّ بَابٍ مِنْ أَبْوَابِ الْمَسْجِدِ مَلَكٌ يَكْتُبُ الْأَوَّلَ فَالْأَوَّلَ مَثَّلَ ‏ ‏الْجَزُورَ ‏ ‏ثُمَّ نَزَّلَهُمْ حَتَّى صَغَّرَ إِلَى مَثَلِ الْبَيْضَةِ فَإِذَا جَلَسَ الْإِمَامُ طُوِيَتْ الصُّحُفُ وَحَضَرُوا الذِّكْرَ

“(ஜும்ஆப்) பள்ளிவாசலின் ஒவ்வொரு நுழைவாயிலிலும் ஒரு வானவர் நின்றுகொண்டு, முதன்முதலாக நுழைபவரையும் அடுத்து முதலில் நுழைபவரையும் எழுதிப் பதிவு செய்கிறார்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்). கூறினார்கள். பிறகு, ஜும்ஆவுக்கு (முன் – பின்) வருபவர்களின் நிலையை, இறைச்சி ஒட்டகத்தைக் குர்பானி கொடுத்தவர் போன்றவராவார் என்பதிலிருந்து முட்டையை தர்மம் செய்தவர் போன்றவராவார் என்பதுவரை படிப்படியாகக் குறைத்து ஒப்பிட்டுக் கூறிய பின்னர், “இமாம் (மிம்பர்மீது) அமர்ந்துவிட்டால் பதிவேடுகள் சுருட்டப்பட்டுவிடுகின்றன; வானவர்கள் (இமாமின்) உரையில் பங்கேற்கின்றனர்” என்றும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

அத்தியாயம்: 7, பாடம்: 07, ஹதீஸ் எண்: 1416

و حَدَّثَنِي ‏ ‏أَبُو الطَّاهِرِ ‏ ‏وَحَرْمَلَةُ ‏ ‏وَعَمْرُو بْنُ سَوَّادٍ الْعَامِرِيُّ ‏ ‏قَالَ ‏ ‏أَبُو الطَّاهِرِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏و قَالَ ‏ ‏الْآخَرَانِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏يُونُسُ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏أَبُو عَبْدِ اللَّهِ الْأَغَرُّ ‏ ‏أَنَّهُ سَمِعَ ‏ ‏أَبَا هُرَيْرَةَ ‏ ‏يَقُولُ ‏:‏

‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِذَا كَانَ يَوْمُ الْجُمُعَةِ كَانَ عَلَى كُلِّ بَابٍ مِنْ أَبْوَابِ الْمَسْجِدِ مَلَائِكَةٌ يَكْتُبُونَ الْأَوَّلَ فَالْأَوَّلَ فَإِذَا جَلَسَ الْإِمَامُ طَوَوْا الصُّحُفَ وَجَاءُوا يَسْتَمِعُونَ الذِّكْرَ وَمَثَلُ ‏ ‏الْمُهَجِّرِ ‏ ‏كَمَثَلِ الَّذِي يُهْدِي الْبَدَنَةَ ثُمَّ كَالَّذِي يُهْدِي بَقَرَةً ثُمَّ كَالَّذِي يُهْدِي الْكَبْشَ ثُمَّ كَالَّذِي يُهْدِي الدَّجَاجَةَ ثُمَّ كَالَّذِي يُهْدِي الْبَيْضَةَ ‏


‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏وَعَمْرٌو النَّاقِدُ ‏ ‏عَنْ ‏ ‏سُفْيَانَ ‏ ‏عَنْ ‏ ‏الزُّهْرِيِّ ‏ ‏عَنْ ‏ ‏سَعِيدٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بِمِثْلِهِ

“வெள்ளிக்கிழமை வந்துவிட்டால் வானவர்கள் (ஜும்ஆப்) பள்ளிவாசலின் ஒவ்வொரு நுழைவாயிலிலும் நின்று கொண்டு, முதன்முதலாக உள்ளே நுழைபவரையும் அடுத்தடுத்து உள்ளே நுழைபவரையும் எழுதிப் பதிவு செய்துகொண்டிருப்பார்கள். இமாம் (மிம்பர்மீது) அமர்ந்துவிட்டால், வானவர்கள் அந்த(ப்பதிவு) ஏடுகளைச் சுருட்டி வைத்துவிட்டு வந்து (இமாமின்) உரையைச் செவியுறுகின்றனர். (ஜும்ஆவுக்காக) முன்னதாக வருபவரது உவமையானது, ஓர் ஒட்டகத்தைக் குர்பானி கொடுத்தவரது நிலைக்கு ஒப்பானதாகும். அதற்கடுத்து வருபவர் ஒரு மாட்டைக் குர்பானி கொடுத்தவர் போன்றவராவார். அதற்கடுத்து வருபவர் ஓர் ஆட்டைக் குர்பானி கொடுத்தவர் போன்றவராவார். அதற்கடுத்து வருபவர் ஒரு கோழியையும், அதற்கடுத்து வருபவர் ஒரு முட்டையையும் தர்மம் செய்தவர் போன்றவர்களாவர்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்:

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

அத்தியாயம்: 7, பாடம்: 06, ஹதீஸ் எண்: 1415

و حَدَّثَنَا ‏ ‏أَبُو كُرَيْبٍ ‏ ‏وَوَاصِلُ بْنُ عَبْدِ الْأَعْلَى ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏ابْنُ فُضَيْلٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي مَالِكٍ الْأَشْجَعِيِّ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي حَازِمٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏وَعَنْ ‏ ‏رِبْعِيِّ بْنِ حِرَاشٍ ‏ ‏عَنْ ‏ ‏حُذَيْفَةَ ‏ ‏قَالَا ‏:‏

‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَضَلَّ اللَّهُ عَنْ الْجُمُعَةِ مَنْ كَانَ قَبْلَنَا فَكَانَ ‏ ‏لِلْيَهُودِ ‏ ‏يَوْمُ السَّبْتِ وَكَانَ ‏ ‏لِلنَّصَارَى ‏ ‏يَوْمُ الْأَحَدِ فَجَاءَ اللَّهُ بِنَا فَهَدَانَا اللَّهُ لِيَوْمِ الْجُمُعَةِ فَجَعَلَ الْجُمُعَةَ وَالسَّبْتَ وَالْأَحَدَ وَكَذَلِكَ هُمْ تَبَعٌ لَنَا يَوْمَ الْقِيَامَةِ نَحْنُ الْآخِرُونَ مِنْ أَهْلِ الدُّنْيَا وَالْأَوَّلُونَ يَوْمَ الْقِيَامَةِ ‏ ‏الْمَقْضِيُّ ‏ ‏لَهُمْ قَبْلَ الْخَلَائِقِ ‏


‏وَفِي رِوَايَةِ ‏ ‏وَاصِلٍ ‏ ‏الْمَقْضِيُّ بَيْنَهُمْ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو كُرَيْبٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ أَبِي زَائِدَةَ ‏ ‏عَنْ ‏ ‏سَعْدِ بْنِ طَارِقٍ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏رِبْعِيُّ بْنُ حِرَاشٍ ‏ ‏عَنْ ‏ ‏حُذَيْفَةَ ‏ ‏قَالَ ‏ ‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏هُدِينَا إِلَى الْجُمُعَةِ وَأَضَلَّ اللَّهُ عَنْهَا مَنْ كَانَ قَبْلَنَا ‏ ‏فَذَكَرَ بِمَعْنَى حَدِيثِ ‏ ‏ابْنِ فُضَيْلٍ

“அல்லாஹ், நமக்கு முந்தைய (யூத-கிறித்தவ) சமுதாயத்தாரை (சிறப்பு வழிபாட்டு நாளான) வெள்ளிக்கிழமையிலிருந்து வழிபிறழ விட்டுவிட்டான். எனவே, யூதர்களுக்குச் சனிக்கிழமையும் கிறித்தவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமையும் (சிறப்பு வழிபாட்டு நாட்களாக) அமைந்தன. பிறகு அல்லாஹ் நம்மைச் சிறப்பித்து, நமக்கென வெள்ளிக்கிழமையை அருளினான். வெள்ளி, சனி, ஞாயிறு என (நாள்களின் வரிசை) அமைந்திருப்பதைப் போன்றே மறுமை நாளிலும் அவர்கள் நமக்குப் பின்வருபவர்களாகவே இருப்பார்கள். உலக மக்களில் நாம் (காலத்தால்) பிந்தியவர்களாக இருக்கின்றோம்; மறுமை நாளில் (தகுதியால்) முந்தியவர்களாகவும் படைப்பினங்களில் அனைவருக்கும் முன்னர் தீர்ப்பு அளிக்கப்படுபவர்களாகவும் இருப்போம்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர்கள் : அபூஹுரைரா (ரலி) & ஹுதைஃபா (ரலி)


குறிப்பு :

ஸஅதிப்னு தாரிக் (ரஹ்) வழி அறிவிப்பு, “நமக்கு வெள்ளிக்கிழமை (சிறப்பு வழிபாட்டு நாளாக) அருளப்பெற்றது. நமக்கு முன்னிருந்தவர்களை அதிலிருந்து அல்லாஹ் வழி பிறழ விட்டுவிட்டான்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறியதாகத் தொடங்குகிறது.

அத்தியாயம்: 7, பாடம்: 06, ஹதீஸ் எண்: 1414

و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ رَافِعٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الرَّزَّاقِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏مَعْمَرٌ ‏ ‏عَنْ ‏ ‏هَمَّامِ بْنِ مُنَبِّهٍ ‏ ‏أَخِي ‏ ‏وَهْبِ بْنِ مُنَبِّهٍ ‏ ‏قَالَ هَذَا مَا حَدَّثَنَا ‏ ‏أَبُو هُرَيْرَةَ ‏:‏

‏عَنْ ‏ ‏مُحَمَّدٍ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏نَحْنُ الْآخِرُونَ السَّابِقُونَ يَوْمَ الْقِيَامَةِ ‏ ‏بَيْدَ ‏ ‏أَنَّهُمْ أُوتُوا الْكِتَابَ مِنْ قَبْلِنَا وَأُوتِينَاهُ مِنْ بَعْدِهِمْ وَهَذَا يَوْمُهُمْ الَّذِي فُرِضَ عَلَيْهِمْ فَاخْتَلَفُوا فِيهِ فَهَدَانَا اللَّهُ لَهُ فَهُمْ لَنَا فِيهِ تَبَعٌ ‏ ‏فَالْيَهُودُ ‏ ‏غَدًا ‏ ‏وَالنَّصَارَى ‏ ‏بَعْدَ غَدٍ

“நாம் (காலத்தால்) பிந்தியவர்கள். என்றாலும், மறுமை நாளில் (தகுதியால்) முந்தியவர்களாக இருப்போம். பிறர், நமக்கு முன்பே வேதம் வழங்கப்பெற்றனர். அவர்களுக்குப் பின்பே நமக்கு வேதம் வழங்கப்பெற்றது. இந்த (ஜும்ஆ) நாள்தான் அவர்களுக்கும் (சிறப்பு வழிபாட்டு நாளாகக்) கடமையாக்கப்பட்டிருந்தது. ஆனால், அவர்கள் கருத்து வேறுபாடு கொண்டனர். அல்லாஹ் (ஜும்ஆ நாளை) நமக்கென அருளினான். (சிறப்பு வழிபாட்டு நாளில்) அவர்கள் நம்மைப் பின் தொடர்பவர்களே ஆவர். யூதர்களுக்கு நாளை(சனிக்கிழமை)யும் கிறித்தவர்களுக்கு மறுநாளும் (ஞாயிற்றுக்கிழமை) ஆகும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி) வழியாக ஹம்மாம் பின் முனப்பிஹ் (ரஹ்)


குறிப்பு :

”இது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து அபூஹுரைரா (ரலி) எமக்கு அறிவித்த ஹதீஸ்களுள் ஒன்றாகும்” என்று அறிவிப்பாளர் ஹம்மாம் பின் முனப்பிஹ் (ரஹ்) குறிப்பிடுகின்றார்.