அத்தியாயம்: 6, பாடம்: 38, ஹதீஸ் எண்: 1333

و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَأَبُو كُرَيْبٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏أَبُو أُسَامَةَ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏مِسْعَرٌ ‏ ‏وَقَالَ ‏ ‏أَبُو كُرَيْبٍ ‏ ‏عَنْ ‏ ‏مِسْعَرٍ ‏ ‏عَنْ ‏ ‏عَمْرِو بْنِ مُرَّةَ ‏ ‏عَنْ ‏ ‏إِبْرَاهِيمَ ‏ ‏قَالَ :‏‏

‏قَالَ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لِعَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ ‏ ‏اقْرَأْ عَلَيَّ قَالَ أَقْرَأُ عَلَيْكَ وَعَلَيْكَ أُنْزِلَ قَالَ إِنِّي أُحِبُّ أَنْ أَسْمَعَهُ مِنْ غَيْرِي قَالَ فَقَرَأَ عَلَيْهِ مِنْ أَوَّلِ سُورَةِ ‏ ‏النِّسَاءِ ‏ ‏إِلَى قَوْلِهِ [‏فَكَيْفَ إِذَا جِئْنَا مِنْ كُلِّ أُمَّةٍ بِشَهِيدٍ وَجِئْنَا بِكَ عَلَى هَؤُلَاءِ شَهِيدًا] ‏فَبَكَى ‏


‏قَالَ ‏ ‏مِسْعَرٌ ‏ ‏فَحَدَّثَنِي ‏ ‏مَعْنٌ ‏ ‏عَنْ ‏ ‏جَعْفَرِ بْنِ عَمْرِو بْنِ حُرَيْثٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ مَسْعُودٍ ‏ ‏قَالَ ‏ ‏قَالَ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏شَهِيدًا عَلَيْهِمْ مَا دُمْتُ فِيهِمْ ‏ ‏أَوْ مَا كُنْتُ فِيهِمْ شَكَّ ‏ ‏مِسْعَرٌ

நபி (ஸல்) என்னிடம், “எனக்கு (குர்ஆனை) ஓதிக் காட்டுங்கள்!” என்று சொன்னார்கள். நான், “குர்ஆன் அருளப்படுவதே உங்கள் மீது. உங்களுக்கு நான் ஓதிக் காட்டுவதா?” என்று கேட்டேன்.. அதற்கு அவர்கள், “நான் பிறரிடமிருந்து அதைச் செவியுற விரும்புகிறேன்” என்று சொன்னார்கள். ஆகவே, நான் அவர்களுக்கு அந்நிசா எனும் (நான்காவது) அத்தியாயத்தை ஆரம்பம் முதல் ஓதிக் காட்டினேன். “…ஒவ்வொரு சமுதாயத்திலிருந்தும் (அவர்களுடைய நபியான) சாட்சியை நாம் (மறுமையில்) கொண்டுவரும்போதும், (நபியே!) உங்களை இவர்களுக்கெதிரான சாட்சியாகக் கொண்டுவரும்போதும் (இவர்களின் நிலை) எப்படியிருக்கும்?” (4:41) என்பதுவரை ஓதிக் காட்டினேன். அதைக் கேட்டு அவர்கள் அழுதார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) வழியாக, இப்ராஹீம் அந்நகயீ (ரஹ்)


குறிப்பு :

மிஸ்அர் (ரஹ்) வழி அறிவிப்பில், “நான் அவர்களிடையே (உயிருடன்) இருந்தபோது / இருந்தவரையில் அவர்களை நான் கண்காணித்துக் கொண்டிருந்தேன்” என்று (அப்போது) நபி (ஸல்) கூறினார்கள் என இப்னு மஸ்ஊத் (ரலி) அறிவித்ததாக இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 6, பாடம்: 38, ஹதீஸ் எண்: 1332

و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَأَبُو كُرَيْبٍ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏حَفْصٍ ‏ ‏قَالَ ‏ ‏أَبُو بَكْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حَفْصُ بْنُ غِيَاثٍ ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْمَشِ ‏ ‏عَنْ ‏ ‏إِبْرَاهِيمَ ‏ ‏عَنْ ‏ ‏عَبِيدَةَ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ ‏ ‏قَالَ ‏:‏

‏قَالَ لِي رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏اقْرَأْ عَلَيَّ الْقُرْآنَ قَالَ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ أَقْرَأُ عَلَيْكَ وَعَلَيْكَ أُنْزِلَ قَالَ إِنِّي أَشْتَهِي أَنْ أَسْمَعَهُ مِنْ غَيْرِي فَقَرَأْتُ ‏ ‏النِّسَاءَ ‏ ‏حَتَّى إِذَا بَلَغْتُ ‏فَكَيْفَ إِذَا جِئْنَا مِنْ كُلِّ أُمَّةٍ بِشَهِيدٍ وَجِئْنَا بِكَ عَلَى هَؤُلَاءِ شَهِيدًا ‏‏‏رَفَعْتُ رَأْسِي أَوْ غَمَزَنِي رَجُلٌ إِلَى جَنْبِي فَرَفَعْتُ رَأْسِي فَرَأَيْتُ دُمُوعَهُ تَسِيلُ ‏


‏حَدَّثَنَا ‏ ‏هَنَّادُ بْنُ السَّرِيِّ ‏ ‏وَمِنْجَابُ بْنُ الْحَارِثِ التَّمِيمِيُّ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏عَلِيِّ بْنِ مُسْهِرٍ ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْمَشِ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏وَزَادَ ‏ ‏هَنَّادٌ ‏ ‏فِي رِوَايَتِهِ قَالَ لِي رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَهُوَ عَلَى الْمِنْبَرِ اقْرَأْ عَلَيَّ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) என்னிடம், “எனக்குக் குர்ஆனை ஓதிக் காட்டுங்கள்” என்று சொன்னார்கள். நான், “அல்லாஹ்வின் தூதரே! குர்ஆன் அருளப்படுவதே உங்கள் மீது. உங்களுக்கு நான் ஓதிக் காட்டுவதா?” என்று கேட்டேன். அதற்கு, “நான் பிறரிடமிருந்து அதைச் செவியுற விரும்புகிறேன்” என்று சொன்னார்கள். ஆகவே, நான் அவர்களுக்கு அந்நிசா எனும் (நான்காவது) அத்தியாயத்தை ஓதிக் காட்டினேன். “… ஒவ்வொரு சமுதாயத்திலிருந்தும் (அவர்களுடைய நபியாகிய) சாட்சியை நாம் (மறுமையில்) கொண்டுவரும்போதும், (நபியே!) உங்களை இவர்களுக்கெதிரான சாட்சியாகக் கொண்டு வரும்போதும் (இவர்களின் நிலை) எப்படியிருக்கும்?” எனும் (4:41ஆவது) வசனத்தை நான் அடைந்தபோது அல்லது எனக்குப் பக்கத்திலிருந்த ஒருவர் என்னைத் தொட்டுணர்த்தியபோது நான் தலையை உயர்த்தினேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்து கொண்டிருந்ததைக் கண்டேன்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)


குறிப்பு :

ஹன்னாத் (ரஹ்) வழி அறிவிப்பில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) மிம்பர் மீதிருந்தபடி, “எனக்கு (குர்ஆனை) ஓதிக் காட்டுங்கள்” என்று என்னிடம் கூறினார்கள் என அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) கூறியதாக அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 6, பாடம்: 37, ஹதீஸ் எண்: 1331

حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏وَابْنُ بَشَّارٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏قَتَادَةَ ‏ ‏يُحَدِّثُ عَنْ ‏ ‏أَنَسٍ ‏ ‏قَالَ ‏:‏

‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لِأُبَيِّ بْنِ كَعْبٍ ‏ ‏إِنَّ اللَّهَ أَمَرَنِي أَنْ أَقْرَأَ عَلَيْكَ ‏ ‏لَمْ يَكُنْ الَّذِينَ كَفَرُوا ‏ ‏قَالَ وَسَمَّانِي لَكَ قَالَ نَعَمْ قَالَ فَبَكَى ‏


‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ حَبِيبٍ الْحَارِثِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏خَالِدٌ يَعْنِي ابْنَ الْحَارِثِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏عَنْ ‏ ‏قَتَادَةَ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏أَنَسًا ‏ ‏يَقُولُا ‏ ‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لِأُبَيٍّ ‏ ‏بِمِثْلِهِ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), உபை பின் கஅப் (ரலி) அவர்களிடம் “உங்களுக்கு ‘லம் யகுனில்லதீன கஃபரூ…’ (என்று தொடங்கும் 98ஆவது) அத்தியாயத்தை ஓதிக் காட்டுமாறு அல்லாஹ் என்னைப் பணித்துள்ளான்” என்று கூறினார்கள். “அல்லாஹ் என் பெயரை உங்களிடம் குறிப்பிட்டானா?” என்று உபை (ரலி) கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) “ஆம்” என்று பதிலளிக்க, (உணர்ச்சிப் பெருக்கால்) அப்போது உபை (ரலி) அழுதார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் பின் மாலிக் (ரலி)

அத்தியாயம்: 6, பாடம்: 37, ஹதீஸ் எண்: 1330

‏حَدَّثَنَا ‏ ‏هَدَّابُ بْنُ خَالِدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏هَمَّامٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏قَتَادَةُ ‏ ‏عَنْ ‏ ‏أَنَسِ بْنِ مَالِكٍ :‏‏

‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏لِأُبَيٍّ ‏ ‏إِنَّ اللَّهَ أَمَرَنِي أَنْ أَقْرَأَ عَلَيْكَ قَالَ ‏ ‏آللَّهُ سَمَّانِي لَكَ قَالَ اللَّهُ سَمَّاكَ لِي قَالَ فَجَعَلَ ‏ ‏أُبَيٌّ ‏ ‏يَبْكِي

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), உபை பின் கஅப் (ரலி) அவர்களிடம் “உங்களுக்கு (குர்ஆன் அத்தியாயத்தை) ஓதிக் காட்டுமாறு அல்லாஹ் என்னைப் பணித்துள்ளான்” என்று சொன்னார்கள். உபை (ரலி), “என் பெயரை அல்லாஹ் உங்களிடம் குறிப்பிட்டானா?” என (உணர்ச்சிப் பெருக்குடன்) கேட்டார்கள். “(ஆம்) அல்லாஹ், உங்கள் பெயரை என்னிடம் குறிப்பிட்டான்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) பதிலளித்தார்கள். இதைக் கேட்டு உபை பின் கஅப் (ரலி) அழலானார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் பின் மாலிக் (ரலி)

அத்தியாயம்: 6, பாடம்: 36, ஹதீஸ் எண்: 1329

حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏وَمُحَمَّدُ بْنُ عُبَيْدٍ الْغُبَرِيُّ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏أَبِي عَوَانَةَ ‏ ‏قَالَ ‏ ‏ابْنُ عُبَيْدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو عَوَانَةَ ‏ ‏عَنْ ‏ ‏قَتَادَةَ ‏ ‏عَنْ ‏ ‏زُرَارَةَ بْنِ أَوْفَى ‏ ‏عَنْ ‏ ‏سَعْدِ بْنِ هِشَامٍ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏قَالَتْ ‏:‏

‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏الْمَاهِرُ بِالْقُرْآنِ مَعَ ‏ ‏السَّفَرَةِ ‏ ‏الْكِرَامِ الْبَرَرَةِ وَالَّذِي يَقْرَأُ الْقُرْآنَ ‏ ‏وَيَتَتَعْتَعُ ‏ ‏فِيهِ وَهُوَ عَلَيْهِ شَاقٌّ لَهُ أَجْرَانِ ‏


‏و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ أَبِي عَدِيٍّ ‏ ‏عَنْ ‏ ‏سَعِيدٍ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏وَكِيعٌ ‏ ‏عَنْ ‏ ‏هِشَامٍ الدَّسْتَوَائِيِّ ‏ ‏كِلَاهُمَا ‏ ‏عَنْ ‏ ‏قَتَادَةَ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏و قَالَ ‏ ‏فِي حَدِيثِ ‏ ‏وَكِيعٍ ‏ ‏وَالَّذِي يَقْرَأُ وَهُوَ ‏ ‏يَشْتَدُّ ‏ ‏عَلَيْهِ لَهُ أَجْرَانِ

“குர்ஆனைத் திறனுடன் சரளமாக ஓதுகின்றவர், கடமை தவறாத கண்ணியமிக்கத் தூதர்(களான வானவர்)களுடன் இருப்பார். குர்ஆனை சிரமப்பட்டுத் திக்கித் திணறி ஓதிவருகின்றவருக்கு இரு மடங்கு நன்மைகள் உண்டு” அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)


குறிப்பு :

வகீஉ (ரஹ்) வழி அறிவிப்பில், “… குர்ஆனைக் கடின முயற்சியெடுத்து ஓதிவருகின்றவருக்கு இரு மடங்கு நன்மைகள் உள்ளன” என இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 6, பாடம்: 35, ஹதீஸ் எண்: 1328

‏حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏وَأَبُو كَامِلٍ الْجَحْدَرِيُّ ‏ ‏كِلَاهُمَا ‏ ‏عَنْ ‏ ‏أَبِي عَوَانَةَ ‏ ‏قَالَ ‏ ‏قُتَيْبَةُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو عَوَانَةَ ‏ ‏عَنْ ‏ ‏قَتَادَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَنَسٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي مُوسَى الْأَشْعَرِيِّ ‏ ‏قَالَ ‏:‏

‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مَثَلُ الْمُؤْمِنِ الَّذِي يَقْرَأُ الْقُرْآنَ مَثَلُ ‏ ‏الْأُتْرُجَّةِ ‏ ‏رِيحُهَا طَيِّبٌ وَطَعْمُهَا طَيِّبٌ وَمَثَلُ الْمُؤْمِنِ الَّذِي لَا يَقْرَأُ الْقُرْآنَ مَثَلُ التَّمْرَةِ لَا رِيحَ لَهَا وَطَعْمُهَا حُلْوٌ وَمَثَلُ الْمُنَافِقِ الَّذِي يَقْرَأُ الْقُرْآنَ مَثَلُ الرَّيْحَانَةِ رِيحُهَا طَيِّبٌ وَطَعْمُهَا مُرٌّ وَمَثَلُ الْمُنَافِقِ الَّذِي لَا يَقْرَأُ الْقُرْآنَ كَمَثَلِ الْحَنْظَلَةِ لَيْسَ لَهَا رِيحٌ وَطَعْمُهَا مُرٌّ ‏


‏و حَدَّثَنَا ‏ ‏هَدَّابُ بْنُ خَالِدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏هَمَّامٌ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ سَعِيدٍ ‏ ‏عَنْ ‏ ‏شُعْبَةَ ‏ ‏كِلَاهُمَا ‏ ‏عَنْ ‏ ‏قَتَادَةَ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏مِثْلَهُ ‏ ‏غَيْرَ أَنَّ فِي حَدِيثِ ‏ ‏هَمَّامٍ ‏ ‏بَدَلَ الْمُنَافِقِ الْفَاجِرِ

“குர்ஆனை(ப் பார்த்தும், மனனமிட்டும்) ஓதுகின்ற இறைநம்பிக்கையாளரின் உவமை, நாரத்தைப் பழத்தை ஒத்ததாகும். அதன் மணமும் நன்று; சுவையும் நன்று. குர்ஆன் ஓதாமல் (பிற நற்செயல்கள் செய்து கொண்டு) இருக்கும் இறைநம்பிக்கையாளரின் உவமை பேரீச்சம் பழத்துக்கு ஒப்பாகும். அதற்கு நறுமணம் கிடையாது. (ஆனால்) அதன் சுவை நன்று. குர்ஆனை ஓதிவரும் நயவஞ்சகனுக்கு உவமை துளசிச் செடியை ஒத்திருக்கின்றது. அதன் மணம் நன்று; சுவை கசப்பு. குர்ஆனை ஓதாத நயவஞ்சகனுக்கு உவமை குமட்டிக் காயை ஒத்திருக்கிறது. அதற்கு மணமும் கிடையாது; சுவையும் கசப்பு” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூமூஸா அல்அஷ்அரீ (ரலி)


குறிப்பு :

ஹம்மாம் (ரஹ்) வழி அறிவிப்பில் ‘நயவஞ்சகன்’ என்பதற்கு பதிலாக ‘தீயவன்’ எனும் சொல் இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 6, பாடம்: 34, ஹதீஸ் எண்: 1327

و حَدَّثَنِي ‏ ‏حَسَنُ بْنُ عَلِيٍّ الْحُلْوَانِيُّ ‏ ‏وَحَجَّاجُ بْنُ الشَّاعِرِ ‏ ‏وَتَقَارَبَا فِي اللَّفْظِ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَزِيدُ بْنُ الْهَادِ ‏ ‏أَنَّ ‏ ‏عَبْدَ اللَّهِ بْنَ خَبَّابٍ ‏ ‏حَدَّثَهُ أَنَّ ‏ ‏أَبَا سَعِيدٍ الْخُدْرِيَّ ‏ ‏حَدَّثَهُ ‏:‏

‏أَنَّ ‏ ‏أُسَيْدَ بْنَ حُضَيْرٍ ‏ ‏بَيْنَمَا هُوَ لَيْلَةً يَقْرَأُ فِي مِرْبَدِهِ إِذْ جَالَتْ فَرَسُهُ فَقَرَأَ ثُمَّ جَالَتْ أُخْرَى فَقَرَأَ ثُمَّ جَالَتْ أَيْضًا قَالَ ‏ ‏أُسَيْدٌ ‏ ‏فَخَشِيتُ أَنْ تَطَأَ يَحْيَى فَقُمْتُ إِلَيْهَا فَإِذَا مِثْلُ ‏ ‏الظُّلَّةِ ‏ ‏فَوْقَ رَأْسِي فِيهَا أَمْثَالُ ‏ ‏السُّرُجِ ‏ ‏عَرَجَتْ فِي الْجَوِّ حَتَّى مَا أَرَاهَا قَالَ ‏ ‏فَغَدَوْتُ ‏ ‏عَلَى رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ بَيْنَمَا أَنَا الْبَارِحَةَ مِنْ جَوْفِ اللَّيْلِ أَقْرَأُ فِي ‏ ‏مِرْبَدِي ‏ ‏إِذْ ‏ ‏جَالَتْ ‏ ‏فَرَسِي فَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏اقْرَأْ ‏ ‏ابْنَ حُضَيْرٍ ‏ ‏قَالَ فَقَرَأْتُ ثُمَّ ‏ ‏جَالَتْ ‏ ‏أَيْضًا فَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏اقْرَأْ ‏ ‏ابْنَ حُضَيْرٍ ‏ ‏قَالَ فَقَرَأْتُ ثُمَّ ‏ ‏جَالَتْ ‏ ‏أَيْضًا فَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏اقْرَأْ ‏ ‏ابْنَ حُضَيْرٍ ‏ ‏قَالَ فَانْصَرَفْتُ وَكَانَ يَحْيَى قَرِيبًا مِنْهَا خَشِيتُ أَنْ تَطَأَهُ فَرَأَيْتُ مِثْلَ الظُّلَّةِ فِيهَا أَمْثَالُ ‏ ‏السُّرُجِ ‏ ‏عَرَجَتْ فِي الْجَوِّ حَتَّى مَا أَرَاهَا فَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏تِلْكَ الْمَلَائِكَةُ كَانَتْ تَسْتَمِعُ لَكَ وَلَوْ قَرَأْتَ لَأَصْبَحَتْ يَرَاهَا النَّاسُ مَا تَسْتَتِرُ مِنْهُمْ

நான் ஓர் இரவில் எனது பேரீச்சங்(கனிகளை உலரவைக்கும்) களத்தில் குர்ஆன் ஓதிக் கொண்டிருந்தேன். அப்போது எனது குதிரை கடுமையாக மிரண்டது. நான் மீண்டும் தொடர்ந்து ஓதினேன். மீண்டும் குதிரை மிரண்டது. தொடர்ந்து நான் ஓதிக்கொண்டேயிருந்தேன். மீண்டும் அது மிரண்டது. (அங்கு படுத்திருந்த என் மகன்) யஹ்யாவை அந்தக் குதிரை மிதித்துவிடுமோ என்று நான் அஞ்சி, அதை நோக்கி எழுந்து சென்றேன். அங்கு மேகம் போன்ற ஒன்றை என் தலைக்கு மேலே கண்டேன். அதில் (மின்னும்) ஒளிவிளக்குகள் போன்றவை இருந்தன. நான் பார்த்தவுடன் அது வானில் உயர்ந்து (என் கண்ணைவிட்டு மறைந்து)விட்டது; பிறகு நான் அதைக் காண முடியவில்லை.

காலையில் நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று, “அல்லாஹ்வின் தூதரே! நான் நேற்றிரவு பாதி இரவில் எனது பேரீச்சங்களத்தில் குர்ஆன் ஓதிக்கொண்டிருக்கும்போது என் குதிரை கடுமையாக மிரண்டது” என்று (நடந்ததைச்) சொன்னேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “இப்னு ஹுளைரே, நீர் தொடர்ந்து ஓதியிருக்கலாமே?” என்று கேட்டார்கள். நான், “தொடர்ந்து ஓதினேன். மீண்டும் எனது குதிரை மிரண்டது” என்று நான் சொன்னேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “இப்னு ஹுளைரே, நீர் தொடர்ந்து ஓதியிருக்கலாமே?” என்று கேட்டார்கள். நான், “தொடர்ந்து ஓதினேன். மீண்டும் எனது குதிரை மிரண்டது” என்று சொன்னேன். “இப்னு ஹுளைரே, நீர் தொடர்ந்து ஓதியிருக்கலாமே!” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (மீண்டும்) கூறியபோது, “(என் மகன்) யஹ்யாவைக் குதிரை மிதித்துவிடுமோ என்று அஞ்சினேன். அவன் அதன் அருகில் (படுத்துறங்கிக்கொண்டு) இருந்தான். எனவே, நான் சென்றேன். நான் (எனது தலையை உயர்த்தி வானைப் பார்த்தபோது) அங்கு மேகம் போன்ற ஒன்றைக் கண்டேன். அதில் (மின்னும்) ஒளிவிளக்குகள் போன்றவை இருந்தன. நான் பார்த்தவுடன் அது வானில் உயர்ந்து (என் கண்ணைவிட்டு மறைந்து)விட்டது; பிறகு நான் அதைக் காணவில்லை” என்று கூறினேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “அது, உன் குரலைக் கேட்டு நெருங்கி வந்த வானவர்கள் அடையாளம். நீர் தொடர்ந்து ஓதியிருந்தால் காலையில் மக்களும் அதைப் பார்த்திருப்பார்கள். மக்களைவிட்டும் அது மறைந்திருக்காது” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : உஸைத் பின் ஹுளைர் (ரலி)

அத்தியாயம்: 6, பாடம்: 34, ஹதீஸ் எண்: 1326

و حَدَّثَنَا ‏ ‏ابْنُ الْمُثَنَّى ‏ ‏وَابْنُ بَشَّارٍ ‏ ‏وَاللَّفْظُ ‏ ‏لِابْنِ الْمُثَنَّى ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي إِسْحَقَ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏الْبَرَاءَ ‏ ‏يَقُولُ ‏:‏

‏قَرَأَ رَجُلٌ ‏ ‏الْكَهْفَ ‏ ‏وَفِي الدَّارِ دَابَّةٌ فَجَعَلَتْ تَنْفِرُ فَنَظَرَ فَإِذَا ضَبَابَةٌ أَوْ سَحَابَةٌ قَدْ غَشِيَتْهُ قَالَ فَذَكَرَ ذَلِكَ لِلنَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقَالَ ‏ ‏اقْرَأْ فُلَانُ فَإِنَّهَا السَّكِينَةُ تَنَزَّلَتْ عِنْدَ الْقُرْآنِ ‏ ‏أَوْ تَنَزَّلَتْ لِلْقُرْآنِ ‏


‏و حَدَّثَنَا ‏ ‏ابْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ ‏ ‏وَأَبُو دَاوُدَ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي إِسْحَقَ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏الْبَرَاءَ ‏ ‏يَقُولُا ‏ ‏فَذَكَرَا نَحْوَهُ غَيْرَ أَنَّهُمَا قَالَا تَنْقُزُ

ஒருவர் தமது வீட்டில் வாகனப் பிராணி ஒன்று இருக்கும்போது ‘அல்கஹ்ஃப்’ எனும் (18ஆவது) அத்தியாயத்தை ஓதியவேளை அந்தப் பிராணி மிரண்டது. அவர் (திரும்பிப்) பார்த்தார். அப்போது மேகத்திரள் ஒன்று வந்து அவரை மூடிக்கொண்டது.

இதை அவர் நபி (ஸல்) அவர்களிடம் சொன்னபோது நபி (ஸல்), “இன்னாரே, நீர் தொடர்ந்து ஓதிக்கொண்டேயிரு(ந்திருக்க வேண்டு)ம். அந்த மேகம் குர்ஆனின் வசனங்களுக்காக அல்லது அந்த வசனங்களை ஓதியதற்காக (இறைவனிடமிருந்து உம்மீது) இறங்கிய அமைதி(யின் அடையாளம்) ஆகும்” என்று சொன்னார்கள்.

அறிவிப்பாளர் : அல் பராஉ (ரலி)


குறிப்பு :

அப்துர் ரஹ்மான் பின் மஹ்தீ (ரஹ்), அபூதாவூது (ரஹ்) ஆகிய இருவரது வழி அறிவிப்பில் “… மிரண்டது” என்றில்லாமல் “குதித்தது” என்றுள்ளது.

அத்தியாயம்: 6, பாடம்: 34, ஹதீஸ் எண்: 1325

و حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏أَبُو خَيْثَمَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي إِسْحَقَ ‏ ‏عَنْ ‏ ‏الْبَرَاءِ ‏ ‏قَالَ ‏:‏

‏كَانَ ‏ ‏رَجُلٌ ‏ ‏يَقْرَأُ سُورَةَ ‏ ‏الْكَهْفِ ‏ ‏وَعِنْدَهُ فَرَسٌ مَرْبُوطٌ بِشَطَنَيْنِ فَتَغَشَّتْهُ سَحَابَةٌ فَجَعَلَتْ تَدُورُ وَتَدْنُو وَجَعَلَ فَرَسُهُ يَنْفِرُ مِنْهَا فَلَمَّا أَصْبَحَ أَتَى النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَذَكَرَ ذَلِكَ لَهُ فَقَالَ ‏ ‏تِلْكَ السَّكِينَةُ تَنَزَّلَتْ لِلْقُرْآنِ

ஒருவர் ‘அல்கஹ்ஃப்’ எனும் (18ஆவது) அத்தியாயத்தை(த் தமது இல்லத்தில்) ஓதிக் கொண்டிருந்தார். அங்கு நீண்ட இரு கயிறுகளால் கட்டப் பட்டிருந்த ஒரு குதிரையை ஒரு மேகத்திரள் சூழ்ந்துகொண்டு வட்டமிட்டபடி நெருங்கத் தொடங்கியது. அதனால் அக்குதிரை மிரண்டது. விடிந்தவுடன் அவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து நடந்ததைத் தெரிவித்தார். அப்போது நபி (ஸல்) “அம்மேகம், குர்ஆன் ஓதிய காரணத்தால் இறங்கிய அமைதியாகும்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அல் பராஉ பின் ஆஸிப் (ரலி)

அத்தியாயம்: 6, பாடம்: 33, ஹதீஸ் எண்: 1324

‏و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏وَمُحَمَّدُ بْنُ بَشَّارٍ ‏ ‏قَالَ ‏ ‏ابْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏عَنْ ‏ ‏مُعَاوِيَةَ بْنِ قُرَّةَ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏عَبْدَ اللَّهِ بْنَ مُغَفَّلٍ ‏ ‏قَالَ :‏‏

‏رَأَيْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَوْمَ فَتْحِ ‏ ‏مَكَّةَ ‏ ‏عَلَى نَاقَتِهِ يَقْرَأُ سُورَةَ ‏ ‏الْفَتْحِ ‏


‏قَالَ ‏ ‏فَقَرَأَ ‏ ‏ابْنُ مُغَفَّلٍ ‏ ‏وَرَجَّعَ ‏ ‏فَقَالَ ‏ ‏مُعَاوِيَةُ ‏ ‏لَوْلَا النَّاسُ لَأَخَذْتُ لَكُمْ بِذَلِكَ الَّذِي ذَكَرَهُ ‏ ‏ابْنُ مُغَفَّلٍ ‏ ‏عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏و حَدَّثَنَاه ‏ ‏يَحْيَى بْنُ حَبِيبٍ الْحَارِثِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏خَالِدُ بْنُ الْحَارِثِ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏نَحْوَهُ ‏ ‏وَفِي حَدِيثِ ‏ ‏خَالِدِ بْنِ الْحَارِثِ ‏ ‏قَالَ عَلَى رَاحِلَةٍ يَسِيرُ وَهُوَ يَقْرَأُ سُورَةَ ‏ ‏الْفَتْحِ

“அல்லாஹ்வின் தூதர் (ஸல்) மக்கா வெற்றி தினத்தில் தமது ஒட்டகத்தின் மீதமர்ந்தபடி அல்ஃபத்ஹு (எனும் 48ஆவது) அத்தியாயத்தை ஓசை நயத்துடன் ஓதிக் கொண்டிருந்ததை நான் கண்டேன்” என்று அப்துல்லாஹ் பின் முஃகஃப்பல் (ரலி) கூறிவிட்டு, ஓசை நயத்துடன் ஓதிக் காட்டினார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் முஃகஃப்பல் அல் முஸனீ (ரலி) வழியாக முஆவியா பின் குர்ரா (ரஹ்)


குறிப்பு :

“மக்கள் (திரண்டுவிடுவர் என்பது) பற்றிய அச்சமில்லையெனில் நபி (ஸல்) அவர்களிடமிருந்து அப்துல்லாஹ் பின் முஃகஃப்பல் (ரலி) ஓதிக் காட்டியதைப் போன்றே உங்களுக்கு நானும் ஓதிக் காட்டியிருப்பேன்” என்று முஆவியா பின் குர்ரா (ரஹ்) கூறியுள்ளார்.

இந்த ஹதீஸ், காலித் பின் அல்ஹாரிஸ் (ரஹ்) வழி அறிவிப்பில், “… நபி (ஸல்) வாகனத்தின் மீது பயணம் செய்தபடி அல்ஃபத்ஹூ அத்தியாயத்தை ஒதிக்கொண்டிருந்தார்கள்” என்று இடம் பெற்றுள்ளது.