அத்தியாயம்: 6, பாடம்: 08, ஹதீஸ் எண்: 1163

حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو عَوَانَةَ ‏ ‏عَنْ‏ ‏سَعْدِ بْنِ إِبْرَاهِيمَ ‏ ‏عَنْ ‏ ‏حَفْصِ بْنِ عَاصِمٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ بُحَيْنَةَ ‏ ‏قَالَ ‏:‏

أُقِيمَتْ صَلَاةُ الصُّبْحِ فَرَأَى رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏رَجُلًا ‏ ‏يُصَلِّي وَالْمُؤَذِّنُ يُقِيمُ فَقَالَ ‏ ‏أَتُصَلِّي الصُّبْحَ أَرْبَعًا

ஸுப்ஹுத் தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டபோது ஒருவர் (ஸுப்ஹுடைய சுன்னத்) தொழுவதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கண்டார்கள். முஅத்தின் இகாமத் சொல்லிக்கொண்டிருந்தார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “ஸுப்ஹை நான்கு ரக்அத்களாகத் தொழப்போகிறீரா?” என்று அவரிடம் கேட்டார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு புஹைனா (ரலி)


குறிப்பு :

இந்த அறிவிப்பில் இப்னு புஹைனா (ரலி) என குறிப்பிடப்படுபவர், அப்துல்லாஹ் பின் மாலிக் (ரலி) ஆவார்.

அத்தியாயம்: 6, பாடம்: 08, ஹதீஸ் எண்: 1162

حَدَّثَنَا ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ الْقَعْنَبِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏‏إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏حَفْصِ بْنِ عَاصِمٍ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ مَالِكٍ ابْنِ بُحَيْنَةَ ‏:‏

أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مَرَّ بِرَجُلٍ ‏ ‏يُصَلِّي وَقَدْ أُقِيمَتْ صَلَاةُ الصُّبْحِ فَكَلَّمَهُ بِشَيْءٍ لَا نَدْرِي مَا هُوَ فَلَمَّا انْصَرَفْنَا ‏ ‏أَحَطْنَا ‏ ‏نَقُولُ مَاذَا قَالَ لَكَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ قَالَ لِي ‏ ‏يُوشِكُ أَنْ يُصَلِّيَ أَحَدُكُمْ الصُّبْحَ أَرْبَعًا


قَالَ ‏ ‏الْقَعْنَبِيُّ عَبْدُ اللَّهِ بْنُ مَالِكٍ ابْنُ بُحَيْنَةَ ‏ ‏عَنْ أَبِيهِ قَالَ ‏ ‏أَبُو الْحُسَيْنِ مُسْلِمٌ ‏ ‏وَقَوْلُهُ عَنْ أَبِيهِ فِي هَذَا الْحَدِيثِ خَطَأٌ

ஸுப்ஹுத் தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்ட பின் (ஸுப்ஹுடைய சுன்னத்) தொழுது கொண்டிருந்த ஒருவரைக் கடந்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) சென்றார்கள். அவரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ஏதோ சொன்னார்கள். என்ன சொன்னார்கள் என்று எங்களுக்குத் தெரியவில்லை. தொழுது முடித்ததும் நாங்கள் அவரைச் சூழ்ந்துகொண்டு, “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) உம்மிடம் என்ன சொன்னார்கள்?” என்று கேட்டோம். அதற்கவர், “உங்களில் ஒருவர் ஸுப்ஹுத் தொழுகையை நான்கு ரக்அத்களாக்கிவிடப் பார்க்கின்றார் என்று கூறினார்கள்” என்றார்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மாலிக் (ரலி)


குறிப்பு :

“இந்த ஹதீஸை, தம் தந்தை மாலிக் வழியாக அப்துல்லாஹ் அறிவிக்கின்றார்” என்று அல்கஃனபீ (ரஹ்) கூறுகின்றார்.

“இந்த ஹதீஸை அப்துல்லாஹ், தம் தந்தை மாலிக் வழியாக அறிவிக்கிறார் என்பது தவறான தகவலாகும்” என்று இமாம் முஸ்லிம் (ரஹ்) குறிப்பிடுகின்றார்.

அத்தியாயம்: 6, பாடம்: 08, ஹதீஸ் எண்: 1161

و حَدَّثَنِي ‏ ‏يَحْيَى بْنُ حَبِيبٍ الْحَارِثِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏رَوْحٌ ‏‏حَدَّثَنَا ‏ ‏زَكَرِيَّاءُ بْنُ إِسْحَقَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَمْرُو بْنُ دِينَارٍ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏عَطَاءَ بْنَ يَسَارٍ ‏ ‏يَقُولُ عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏:‏

عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَنَّهُ قَالَ ‏ ‏إِذَا أُقِيمَتْ الصَّلَاةُ فَلَا صَلَاةَ إِلَّا الْمَكْتُوبَةُ


و حَدَّثَنَاه ‏ ‏عَبْدُ بْنُ حُمَيْدٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏عَبْدُ الرَّزَّاقِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏زَكَرِيَّاءُ بْنُ إِسْحَقَ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏مِثْلَهُ ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏حَسَنٌ الْحُلْوَانِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَزِيدُ بْنُ هَارُونَ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏حَمَّادُ بْنُ زَيْدٍ ‏ ‏عَنْ ‏ ‏أَيُّوبَ ‏ ‏عَنْ ‏ ‏عَمْرِو بْنِ دِينَارٍ ‏ ‏عَنْ ‏ ‏عَطَاءِ بْنِ يَسَارٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بِمِثْلِهِ ‏ ‏قَالَ ‏ ‏حَمَّادٌ ‏ ‏ثُمَّ لَقِيتُ ‏ ‏عَمْرًا ‏ ‏فَحَدَّثَنِي بِهِ وَلَمْ يَرْفَعْ

“தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டால் கடமையான (அந்தத்) தொழுகையைத் தவிர வேறு தொழுகையில்லை” என்று நபி (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)


குறிப்பு :

நான் அம்ரு பின் தீனார் (ரஹ்) அவர்களைச் சந்தித்தபோது, இந்த ஹதீஸை அவர்கள் எனக்கு அறிவித்தார்கள். ஆனால், “இவ்வாறு நபி (ஸல்) கூறினார்கள்” எனச் சொல்லவில்லை என்று ஹம்மாத் பின் ஸைத் (ரஹ்) குறிப்பிடுகின்றார்.

அத்தியாயம்: 6, பாடம்: 08, ஹதீஸ் எண்: 1160

و حَدَّثَنَا ‏ ‏أَحْمَدُ بْنُ حَنْبَلٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏عَنْ ‏ ‏وَرْقَاءَ ‏ ‏عَنْ ‏ ‏عَمْرِو بْنِ دِينَارٍ ‏ ‏عَنْ ‏ ‏عَطَاءِ بْنِ يَسَارٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ :‏‏

عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏إِذَا أُقِيمَتْ الصَّلَاةُ فَلَا صَلَاةَ إِلَّا الْمَكْتُوبَةُ ‏


و حَدَّثَنِيهِ ‏ ‏مُحَمَّدُ بْنُ حَاتِمٍ ‏ ‏وَابْنُ رَافِعٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏شَبَابَةُ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏وَرْقَاءُ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ

“தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டால் கடமையான (அந்தத்) தொழுகையைத் தவிர வேறு தொழுகையில்லை” என்று நபி (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

அத்தியாயம்: 6, பாடம்: 07, ஹதீஸ் எண்: 1159

و حَدَّثَنَا ‏ ‏أَبُو كُرَيْبٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ أَبِي زَائِدَةَ ‏ ‏عَنْ‏ ‏مِسْعَرٍ ‏ ‏عَنْ ‏ ‏ثَابِتِ بْنِ عُبَيْدٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ الْبَرَاءِ ‏ ‏عَنْ ‏ ‏الْبَرَاءِ ‏ ‏قَالَ :‏

‏كُنَّا إِذَا صَلَّيْنَا خَلْفَ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَحْبَبْنَا أَنْ نَكُونَ عَنْ يَمِينِهِ يُقْبِلُ عَلَيْنَا بِوَجْهِهِ قَالَ فَسَمِعْتُهُ يَقُولُ ‏ ‏رَبِّ قِنِي عَذَابَكَ يَوْمَ تَبْعَثُ ‏ ‏أَوْ تَجْمَعُ ‏ ‏عِبَادَكَ ‏


و حَدَّثَنَاه ‏ ‏أَبُو كُرَيْبٍ ‏ ‏وَزُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏وَكِيعٌ ‏ ‏عَنْ ‏ ‏مِسْعَرٍ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏وَلَمْ يَذْكُرْ يُقْبِلُ عَلَيْنَا بِوَجْهِهِ

நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குப் பின்னால் தொழும்போது அவர்களுக்கு வலப்பக்க வரிசையில் இருப்பதையே விரும்புவோம். அவர்கள் (தொழுது முடித்ததும்) எங்களை நோக்கித் திரும்புவார்கள். அப்போது அவர்கள், “ரப்பீ கினீ அதாபக யவ்ம தப்அஸு / தஜ்மஉ இபாதக்க (இறைவா! உன் அடியார்களை உயிர் கொடுத்து எழுப்பும் / ஒன்றுதிரட்டும் நாளில் உன் வேதனையிலிருந்து என்னைக் காப்பாயாக!)” என்று பிரார்த்திப்பதை நான் கேட்டுள்ளேன்.

அறிவிப்பாளர் : பராஉ பின் ஆஸிப் (ரலி)


குறிப்பு :

வகீஉ (ரஹ்) வழி அறிவிப்பில், “எங்களை நோக்கித் திரும்புவார்கள்” என்பது இடம்பெறவில்லை.

அத்தியாயம்: 6, பாடம்: 06, ஹதீஸ் எண்: 1158

حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَزُهَيْرُ بْنُ حَرْبٍ ‏‏قَالَا حَدَّثَنَا ‏ ‏وَكِيعٌ ‏ ‏عَنْ ‏ ‏سُفْيَانَ ‏ ‏عَنْ ‏ ‏السُّدِّيِّ ‏ ‏عَنْ ‏ ‏أَنَسٍ ‏:‏

أَنَّ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏كَانَ ‏ ‏يَنْصَرِفُ عَنْ يَمِينِهِ

நபி (ஸல்) (தொழுது முடித்த பின்) தமது வலப்பக்கம் திரும்புவார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் (ரலி)

அத்தியாயம்: 6, பாடம்: 06, ஹதீஸ் எண்: 1157

و حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو عَوَانَةَ ‏‏عَنْ ‏ ‏السُّدِّيِّ ‏ ‏قَالَ ‏:‏

سَأَلْتُ ‏ ‏أَنَسًا ‏ ‏كَيْفَ أَنْصَرِفُ إِذَا صَلَّيْتُ عَنْ يَمِينِي أَوْ عَنْ يَسَارِي قَالَ أَمَّا أَنَا فَأَكْثَرُ مَا رَأَيْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَنْصَرِفُ عَنْ يَمِينِهِ

நான் அனஸ் (ரலி) அவர்களிடம், “தொழுது முடித்ததும் நான் எப்பக்கம் திரும்ப வேண்டும்? என் வலப்பக்கத்திலா? இடப்பக்கத்திலா?” என்று கேட்டேன். அதற்கு அனஸ் (ரலி) அவர்கள், “என்னைப் பொருத்த வரை நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (தொழுது முடித்தபின்) தமது வலப்பக்கம் திரும்புவதையே அதிகமாகக் கண்டேன்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் (ரலி) வழியாக அஸ்ஸுத்தீ (ரஹ்)

அத்தியாயம்: 6, பாடம்: 06, ஹதீஸ் எண்: 1156

حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو مُعَاوِيَةَ ‏ ‏وَوَكِيعٌ ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْمَشِ ‏ ‏عَنْ ‏ ‏عُمَارَةَ ‏ ‏عَنْ ‏ ‏الْأَسْوَدِ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ ‏ ‏قَالَ :‏‏

لَا يَجْعَلَنَّ أَحَدُكُمْ لِلشَّيْطَانِ مِنْ نَفْسِهِ جُزْءًا لَا يَرَى إِلَّا أَنَّ حَقًّا عَلَيْهِ أَنْ لَا يَنْصَرِفَ إِلَّا عَنْ يَمِينِهِ أَكْثَرُ مَا رَأَيْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَنْصَرِفُ عَنْ شِمَالِهِ ‏


حَدَّثَنَا ‏ ‏إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏جَرِيرٌ ‏ ‏وَعِيسَى بْنُ يُونُسَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَاه ‏ ‏عَلِيُّ بْنُ خَشْرَمٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏عِيسَى ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْمَشِ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏مِثْلَهُ

வலப்பக்கம் திரும்பி (தொழுது முடித்தபின்) அமர்வது கடமை என்று எண்ணிக்கொண்டு, உங்களில் எவரும் ஷைத்தானுக்குத் தம்மிடம் இடமளித்துவிட வேண்டாம். அல்லாஹ் வின் தூதர் (ஸல்) (தொழுது முடித்தபின் திரும்பி அமரும்போது) பெரும்பாலும் தமது இடப்பக்கம் திரும்புவதையே நான் பார்த்திருக்கின்றேன்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)

அத்தியாயம்: 6, பாடம்: 05, ஹதீஸ் எண்: 1155

‏و حَدَّثَنَا ‏ ‏ابْنُ أَبِي عُمَرَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏وَكِيعٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عِمْرَانُ بْنُ حُدَيْرٍ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ شَقِيقٍ الْعُقَيْلِيِّ ‏ ‏قَالَ ‏:‏

قَالَ رَجُلٌ ‏ ‏لِابْنِ عَبَّاسٍ ‏ ‏الصَّلَاةَ فَسَكَتَ ثُمَّ قَالَ الصَّلَاةَ فَسَكَتَ ثُمَّ قَالَ الصَّلَاةَ فَسَكَتَ ثُمَّ قَالَ لَا أُمَّ لَكَ ‏ ‏أَتُعَلِّمُنَا بِالصَّلَاةِ وَكُنَّا نَجْمَعُ بَيْنَ الصَّلَاتَيْنِ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ

ஒருவர் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம், “தொழுகை(க்கு நேரமாகிவிட்டது)” என்று கூறினார். இப்னு அப்பாஸ் (ரலி) அமைதியாக இருந்தார்கள். பிறகு மீண்டும் அவர் “தொழுகை(க்கு நேரமாகி விட்டது)” என்று கூறினார். இப்னு அப்பாஸ் (ரலி) அமைதியாக இருந்தார்கள். பிறகு மீண்டும் அவர் “தொழுகை(க்கு நேரமாகி விட்டது)” என்று கூறினார். அப்போதும் இப்னு அப்பாஸ் (ரலி) அமைதியாக இருந்தார்கள்.

பிறகு, “தாயில்லாமல் போவானே! எங்களுக்கே தொழுகைகளைக் கற்றுத் தருகிறாயா? நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் இரண்டு தொழுகைகளை ஒரே நேரத்தில் இணைத்துத் தொழுபவர்களாக இருந்தோம்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக அப்துல்லாஹ் பின் ஷகீக் (ரஹ்)

அத்தியாயம்: 6, பாடம்: 05, ஹதீஸ் எண்: 1154

و حَدَّثَنِي ‏ ‏أَبُو الرَّبِيعِ الزَّهْرَانِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حَمَّادٌ ‏ ‏عَنْ ‏ ‏الزُّبَيْرِ بْنِ الْخِرِّيتِ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ شَقِيقٍ ‏ ‏قَالَ :‏

‏ ‏خَطَبَنَا ‏ ‏ابْنُ عَبَّاسٍ ‏ ‏يَوْمًا بَعْدَ الْعَصْرِ حَتَّى غَرَبَتْ الشَّمْسُ وَبَدَتْ النُّجُومُ وَجَعَلَ النَّاسُ يَقُولُونَ الصَّلَاةَ الصَّلَاةَ قَالَ فَجَاءَهُ رَجُلٌ مِنْ ‏ ‏بَنِي تَمِيمٍ ‏ ‏لَا ‏ ‏يَفْتُرُ ‏ ‏وَلَا ‏ ‏يَنْثَنِي ‏ ‏الصَّلَاةَ الصَّلَاةَ ‏فَقَالَ ‏ ‏ابْنُ عَبَّاسٍ ‏ ‏أَتُعَلِّمُنِي بِالسُّنَّةِ لَا أُمَّ لَكَ ثُمَّ قَالَ رَأَيْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏جَمَعَ بَيْنَ الظُّهْرِ وَالْعَصْرِ وَالْمَغْرِبِ وَالْعِشَاءِ ‏


قَالَ ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ شَقِيقٍ ‏ ‏فَحَاكَ فِي صَدْرِي مِنْ ذَلِكَ شَيْءٌ فَأَتَيْتُ ‏ ‏أَبَا هُرَيْرَةَ ‏ ‏فَسَأَلْتُهُ فَصَدَّقَ مَقَالَتَهُ

ஒரு நாள் இப்னு அப்பாஸ் (ரலி) அஸ்ரு தொழுகைக்குப் பிறகு, சூரியன் மறைந்து நட்சத்திரங்கள் தோன்றும்வரை எங்களிடையே (நீண்ட) உரையாற்றினார்கள். மக்கள், “தொழுகை, தொழுகை” என்று கூறலாயினர். அப்போது பனூதமீம் குலத்தைச் சேர்ந்த ஒருவர் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் வந்து (நின்ற இடத்தைவிட்டும்) நகராமல் இடையறாமல், “தொழுகை தொழுக” என்று தொடர்ந்து சொல்லிக்கொண்டிருந்தார். அப்போது இப்னு அப்பாஸ் (ரலி), “நீ எனக்கு நபிவழியைக் கற்றுத் தருகிறாயா? தாயில்லாமல் போவாய்!” என்று (கடிந்து) கூறினார்கள். பிறகு, “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) லுஹ்ரையும் அஸ்ரையும் இணைத்து ஒரேநேரத்திலும் மஃக்ரிபையும் இஷாவையும் இணைத்து ஒரேநேரத்திலும் தொழுததை நான் பார்த்திருக்கின்றேன்” என்று குறிப்பிட்டார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக அப்துல்லாஹ் பின் ஷகீக் (ரஹ்)


குறிப்பு :

இப்னு அப்பாஸ் (ரலி) அவ்வாறு கூறியதைக் கேட்டு என் மனத்தில் நெருடல் ஏற்பட்டது. உடனே நான் அபூஹுரைரா (ரலி) அவர்களிடம் சென்று அதைப் பற்றிக் கேட்டேன். அப்போது அபூஹுரைரா (ரலி) இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் கூற்றை உறுதிப்படுத்தினார்கள் என்று அப்துல்லாஹ் பின் ஷகீக் குறிப்பிடுகின்றார்.